வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

ஞாயிறு, 15 மே, 2011

ஜெ பதவியேற்கும் நேரம் நல்ல நேரமா? அரசின் செயல்பாடு எப்படி இருக்கும்?


ஜெ அவர்கள் பதினாறாம் தேதி பன்னிரண்டு மணிக்கு பதவி ஏற்கிறார் . இது நல்ல நேரமா? அரசின் செயல்பாடு எப்படி இருக்கும்?

ஜெ அவர்கள் சிம்ம லக்னத்தில் பதவி ஏற்கிறார், இந்த அரசும் அன்றே பதவி ஏற்பதாக கொள்ள வேண்டும். 
சிம்ம லக்கினம் அரசாங்கம்  அதிகாரத்திற்கு பெயர் போனது. அந்த விதத்தில் இது அருமையான லக்னம்.
எந்த ஒரு நிகழ்வாக இருந்தாலும் லக்னம் வலுப்பெற வேண்டும். அந்த விதத்தில் குரு பகவானின் ஐந்தாம் பார்வை லக்னத்திற்கு கிடைப்பது அருமையிலும் அருமை.
அடுத்ததாக லக்னாதிபதி பத்தில் இருக்கின்றார். பத்து என்பது தொழில், பணிகளை குறிக்கும். இங்கே லக்னாதிபதி இருப்பதால் அரசாங்க பணிகள் சிறப்பாக நடைபெறும் என்று சொல்லலாம். கண்ணும் கருத்துமாக வேலைகள் நடக்கும் என்றும் சொல்லலாம்.

ஆறாம் அதிபதி சனி  இரண்டாம்  வீட்டில்  இருப்பதால் கஜானா   காலி. கடன் வாங்கியே அரசாங்கத்தை  நடத்த வேண்டிய நிலை ஏற்படலாம். தேர்தல் வாக்குறுதிகளை  நிறைவேற்றுவதில் சற்று சிரமம் ஏற்படலாம். வெளித்தொடர்புகளால்  கடைசி நேரத்தில் நன்மை கிடைக்கலாம். வார்த்தைகளால்  பலரை  வருத்தெடுக்கலாம்.

செல்வுக்காரன் சந்திரன் மூன்றாம் வீட்டில், அரசின் தைரியம்  ஏற்ற இறக்கமுடன் காணப்படும். சுப கோள்களின் பார்வை ஒன்பதாம் வீட்டில் இருந்து கிடைப்பதால் சற்று ஆறுதல் தான். 

குருவும் நான்காம் அதிபதி சுக்கிரனும் அவர்களுக்குள் கேந்திரத்தில் இருப்பதால் வலிமையான தைரியம் பொருந்தியா அரசாக இருக்கும். கூடவே அவர்களுக்கு தேவையானதை தந்திரத்தனமாக அடைய வைக்கலாம். இது மக்களுக்கு நல்லதா அல்லது அரசாங்கத்துக்கு மட்டுமே நல்லாதா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

சரி மக்கள் எப்படி இருப்பாங்கனு கேட்பது தெரியுது. 
ஐந்தில் ராகு இருப்பது கொஞ்சம் சரியில்லை என்று சொன்னாலும் , அவர் லாப வீட்டில்  இருக்கும்  கேதுவின் நட்சத்திரத்தில் இருப்பதால் நன்மையே . மேலும் அதிபதியான  குரு பாக்கிய வீட்டில் இருப்பதால் சகல பாக்கியங்களும் வந்து சேரும் .( அப்புறம் எவ்வளவு இலவசம் வரப்போகுது மிக்சி, மின் ஆட்டுக்கல், மின் விசிறி, மடிக்கணினி இத்யாதி இத்யாதி.) 
குருவின் பார்வை ஐந்தாம் வீட்டில் படுவதால் மக்களுக்கு கூடுதல் நன்மையே.  
எந்த ஜாதி எந்த மதத்துக்கு நன்மை தீமைனு சொல்ல முடியுமான்னு நீங்க கேட்பது தெரியுது.

ஐந்து மற்றும் பதினொன்றில் ராகு கேது இருப்பதால் இஸ்லாம் மற்றும் கிருஸ்த்துவ மதத்தினருக்கு லாபம் நிறைய கிடைக்கலாம்.   தலித் இனத்தவருக்கு நிறைய குடும்ப உபயோக பொருட்கள் கிடைக்கும் .(இரண்டில் சனி அதான்.)

மற்ற  இனத்தவருக்கு கல்வி, புதிய வேலைவாய்ப்பு, தொழில் தொடங்க ஊக்கம் இவற்றின் மூலம் நன்மை கிடைக்கும். ஆன்மீகவாதிகளுக்கும்  இது சற்று அனுகூல அரசாகவே அமையும்.

அப்படி இப்படி சில சமாச்சாரங்கள் இருந்தாலும் இவ்வாட்சி நல்லாட்சியாக இருக்கும் என்பது என்னுடைய கணிப்பு.  அப்புறம் எல்லாம் இறைவன் செயல். 


7 கருத்துகள்:

  1. அப்பா புரட்சியாளரே,

    இந்த ஆட்சி நல்ல ஆட்சியா இருக்கனும்னுங்கறது தாம்ப்பா எல்லோருடைய ஆசையும்...

    நல்லதே நினைப்போம்.. நல்லதே நடக்கும்.

    தோழரே எனக்கு உங்க இமெயில் ஐடி வேண்டுமே ?

    பதிலளிநீக்கு
  2. //சிவ.சி.மா. ஜானகிராமன் said...

    அப்பா புரட்சியாளரே,

    இந்த ஆட்சி நல்ல ஆட்சியா இருக்கனும்னுங்கறது தாம்ப்பா எல்லோருடைய ஆசையும்...

    நல்லதே நினைப்போம்.. நல்லதே நடக்கும்.

    தோழரே எனக்கு உங்க இமெயில் ஐடி வேண்டுமே ?//
    நல்லதே நடக்கட்டும்...எனது மின்னஞ்சல் rpuratchimani@gmail.com

    பதிலளிநீக்கு
  3. நண்புரே தங்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்... தெரிந்துக் கொள்ள வலைச்சரம் வாங்க...

    "பச்சைக்கிளி பாண்டியம்மா V/s பதிவர்கள்...."

    http://blogintamil.blogspot.com/2011/05/vs.html

    பதிலளிநீக்கு
  4. நண்புரே தங்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்... தெரிந்துக் கொள்ள வலைச்சரம் வாங்க...

    "பச்சைக்கிளி பாண்டியம்மா V/s பதிவர்கள்...."

    http://blogintamil.blogspot.com/2011/05/vs.html

    பதிலளிநீக்கு
  5. தங்களுடைய அழைப்பிற்கும் அறிமுகத்திற்கும் மிக்க நன்றி சௌந்தர்

    பதிலளிநீக்கு
  6. என்ன புரட்ச்சித்தலைவரெ நீன்ட இடைவெளி விட்டுட்டிங்க‌
    அடுத்த பதிவ சீக்கிரம் போடுங்க‌

    பதிலளிநீக்கு
  7. //yoghi said...

    என்ன புரட்ச்சித்தலைவரெ நீன்ட இடைவெளி விட்டுட்டிங்க‌
    அடுத்த பதிவ சீக்கிரம் போடுங்க‌
    //


    யோகி போட்டுவிட்டேன்....நீண்ட இடைவெளிக்கு மன்னிக்கவும் இனி சிறு இடைவெளி மட்டுமே இருக்கும் .....நன்றி.

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...