தேர்தல் ஆணையம் எப்படி இப்படி ஒரு முட்டாள் தனமான முடிவெடுத்தது என்பது பெரும் வியப்பை தருகிறது.
தேர்தலோ ஏப்ரல் 13 ம் தேதியே முடிவடைந்து விட்டது. ஆனால் தேர்தல் ஆணையம் தபால் ஓட்டுக்கு மட்டும் மே 12 ம் தேதி வரை கெடு வழங்கியுள்ளது.
தேர்தல் வேலையில் வெளி தொகுதிகளில் பணியாற்றிய அரசு ஊழியர்களுக்கு தபால் மூலமாக ஒட்டு போட தேர்தல் ஆணையம் வழி வகை செய்வது வழக்கம். இம்முறை மே 12 ம் தேதி வரை ஒட்டு போட அவர்களுக்கு நாட்கள் ஒதுக்கியுள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்தது ஆயிரம் முதல் இரண்டாயிரம் அஞ்சல் ஓட்டுக்கள் இருக்க வாய்ப்புகள் உண்டு.
என்னுடைய முதல் கேள்வி...ஏன் இவர்களுக்கு ஒரு மாதம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தை வேட்பாளர்கள் தவறாக பயன்படுத்திக் கொண்டால் என்ன செய்வது என்பது பற்றி தேர்தல் ஆணையம் சிந்தித்ததா?
இந்த ஒரு மாத இடைவெளியில் வேட்பாளர்கள் அரசு ஊழியர்களை "தனியாக" கவனிப்பதாக செய்தி வெளியாகி உள்ளதே இதை பற்றி தேர்தல் ஆணையத்திற்கு தெரியுமா?
இவர்களின் ஓட்டுக்கு சிலர் ஏஜென்ட் போல ஓட்டுக்கு பேரத்தில் இறங்கியுள்ளனரே இது தேர்தல் ஆணையத்திற்கு தெரியுமா?
என்ன தெரிந்து என்ன பயன்
வாக்களிக்க அரசு ஊழியர்களுக்கு ஒரு மாதம் அவகாசம் கொடுத்தது தேர்தல் ஆணையத்தின் அறிவீனமே.
முந்தைய பதிவிற்கான சுட்டி.
ஒவ்வொரு நாணயத்திற்கும் இரு பக்கங்கள் உண்டல்லவா ?
பதிலளிநீக்குஒவ்வொரு காரியத்திலும் Merits and De Merits
இருக்கத் தான் செய்கிறது ..
தங்களுடையது நல்ல கருத்து .. அடுத்த முறை இந்த தவறை தேர்தல் ஆணையம் திருத்திக் கொள்ளும் என நம்புவோம்.
//சிவ.சி.மா. ஜானகிராமன் said...
பதிலளிநீக்குஒவ்வொரு நாணயத்திற்கும் இரு பக்கங்கள் உண்டல்லவா ?
ஒவ்வொரு காரியத்திலும் Merits and De Merits
இருக்கத் தான் செய்கிறது ..
தங்களுடையது நல்ல கருத்து .. அடுத்த முறை இந்த தவறை தேர்தல் ஆணையம் திருத்திக் கொள்ளும் என நம்புவோம்//
நீங்கள் சொல்வது சரிதான் நண்பரே, இருப்பினும் சில தவறுகள் தவிர்க்கப்பட வேண்டியவை....அதில் இதுவும் ஒன்று. அதாவது தவறு செய்ய வாய்ப்பு அளித்தால்.
தவறு செய்ய வாய்ப்பு அளித்தல் தவிர்க்கப்பட வேண்டும்.
பதிலளிநீக்கு''இராஜராஜேஸ்வரி said...
பதிலளிநீக்குதவறு செய்ய வாய்ப்பு அளித்தல் தவிர்க்கப்பட வேண்டும்.//
இனியாவது தவிர்க்கப்படும் என்று நம்புவோம்