வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

செவ்வாய், 26 ஏப்ரல், 2011

தேர்தல் ஆணையத்தின் அறிவீனம் என்ன? 2


தேர்தல்  ஆணையத்தின்  இந்த  அறிவீனத்தினை ஊடகங்களோ அல்லது சம்பந்த பட்ட கட்சியோ ஏன் என்று கேட்காதது வியப்பாகவே உள்ளது.
(ஒருவேளை நான்தான் சரியாக படிக்கவில்லையா? )

இந்த தேர்தலில் போட்டியிட்ட அங்கிகரிக்கப்பட்ட கட்சிகளே சில. அப்படி இருக்கும் பொழுது அவர்களின் சின்னத்தை ஏன் தேர்தல் ஆணையம் சுயேச்சைகளுக்கு வழங்கியது என்பது வியப்பாகவே உள்ளது.

நான் சொல்வது தே.மு. தி. க. வின் முரசு சின்னத்தை பற்றி. எனக்கு தெரிந்தே இந்த சின்னம் இரண்டு தொகுதிகளில் சுயேச்சைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.  எத்தனையோ சின்னங்கள் இருக்கும் பொழுது இவர்கள் ஏன் மற்றொரு அங்கீகரிக்கப் பட்ட கட்சியின் சின்னத்தை சுயேச்சைகளுக்கு வழங்கவேண்டும்.
 
இதை சில எதிர் கட்சிக்காரர்கள் தவறாக பாயன்படுத்தியுள்ளனர்.  இதைப்பற்றி அந்த கட்சியும் தேர்தல் ஆணையத்திடம் கேள்வி எழுப்பியதாக தெரியவில்லை. 
இது தெரியாமல் சிலர்  நான் தே.மு.தி.க. வுக்கு வாக்களிக்கிறேன் என்று சுயேச்சைகளுக்கு வாக்களித்தனர். 

இது தேர்தல் ஆணையத்தின் அறிவீனம் தானே மக்களே? சொல்லுங்கள். 

6 கருத்துகள்:

  1. நீஙகல் கெது பத்தி நெரய ஆராய்ச்சி பன்ரிங்கன்னு நெனைக்கிரேன்
    இன்னைக்கி ராகு கேது பெயர்ச்சி ஆவுதுன்னு ஒரு தலத்துல போட்டிருக்கு

    அப்டியே ராகு கேது பெயர்ச்சி ஒரு ராசிபலன் மாதிரி போட்டிஙகன்னா நன்னா இருக்கும் கொஞச்ம் ட்ரை பன்னலாமே

    பதிலளிநீக்கு
  2. //
    super syed said...
    நீஙகல் கெது பத்தி நெரய ஆராய்ச்சி பன்ரிங்கன்னு நெனைக்கிரேன்
    இன்னைக்கி ராகு கேது பெயர்ச்சி ஆவுதுன்னு ஒரு தலத்துல போட்டிருக்கு

    அப்டியே ராகு கேது பெயர்ச்சி ஒரு ராசிபலன் மாதிரி போட்டிஙகன்னா நன்னா இருக்கும் கொஞச்ம் ட்ரை பன்னலாமே////

    என்ன சையத் நீங்க நம்ம வாத்தியார் இல்ல சித்தூர் முருகேசு கிட்ட சொல்ல வேண்டியத என்கிட்டே சொல்றிங்க. நீங்க எதுக்கும் அவங்க கிட்டயும் கேட்டு பாருங்க. நீங்க சொன்னதால் நான் முயற்சி செய்கிறேன். கொஞ்சம் அவகாசம் கொடுங்க.

    பதிலளிநீக்கு
  3. அவங்கலுக்கு இது ஒன்னும் பெரிய மேட்டர் இல்ல‌

    நீங்க கன்னி முயர்ச்சியா ட்ரை பன்னி பாருங்கலேன்
    கொன்சம் புதுமையா எதாவது கலந்து கட்டி அடிங்க‌

    பெரிய ஹிட் ஆனாலும் ஆயிடும்

    பதிலளிநீக்கு
  4. //super syed said...

    அவங்கலுக்கு இது ஒன்னும் பெரிய மேட்டர் இல்ல‌

    நீங்க கன்னி முயர்ச்சியா ட்ரை பன்னி பாருங்கலேன்
    கொன்சம் புதுமையா எதாவது கலந்து கட்டி அடிங்க‌

    பெரிய ஹிட் ஆனாலும் ஆயிடும்//

    முயற்சி செய்கிறேன் சையத். தங்களுடைய ஊக்குவித்தலுக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  5. சும்மா தைரியமா கலக்கூங்க கொஞசம் முன்ன பின்ன ஆயிட்டா யாரும் கின்டல் பன்னுவாங்கலொனு பாக்காதீங்க ஒரு மனிதன் ஒரு துரையில முன்னுக்கு வரனும்னா 3 ச்டேஜ் தான்டனும்

    1 ஆரம்பத்துல அவன் செயலப்பார்த்து பலபேர் கேலி கின்டல் பன்னுவாஙக‌
    அதுல பார்ட்டி பேஜார் ஆவலையா?

    2 அடுத்தபடியா அவனப்பார்த்து பொராமை படுவாஙக‌

    3 அவன வலரவுடாம பல தடைகல டார்ச்சர் தடஙகல் ஏர்ப்படுத்துவாஙக‌

    4 அவன தனக்கு ஈடா அங்கீகரிச்சுக்குவாஙக‌

    இந்த 4 ச்டேஜ் தான்டுனாதான் சம்பந்த்தப்பட்ட துரையில் பார்ட்டி மேலவரமுடியும்
    (ஏதொ எனக்கு தெரின்ச சின்ன மேட்டர்)

    (((பொதுவா நம்ம சமுதாய நிலைமைய சொல்ரென் சில பேர் இதுக்கு விதிவிலக்கும் இருக்காங்க உதாரனம் நம்ம முருகேசன் சார்)))(அவர் புதியவர்கலையும் ஊக்குவிக்கிரார்)))

    மார்ரு கருத்து இருந்தா தெரியப்படுத்தவும்

    பதிலளிநீக்கு
  6. சையத் நீங்க சொல்றது சரிதான்.. ஆனா எனக்கு ஜோதிட துறையில பெரிய ஆளா வரணும்னு ஆசை ஏதும் இல்ல. (ஏன் இந்த துறைல இருக்கணும்னு கூட ஆசை கிடையாது) ஜோதிடத்தில் புது கருத்தை (புது குழப்பத்தை) சொல்ல வேண்டும் எனபதால் தான், நான் எழுத ஆரம்பித்தேன். ஜோதிடத்தில் ஏற்க்கனவே நிறைய நூல்கள் இருக்கு. அதுல இருக்கிறத சொல்றதுக்கு நான் ஏன். (இந்த திருமண பதிவு கூட ஏதோ அவசரத்துல போட்டுவிட்டேன் )

    என்னுடைய துறையே ஆன்மீகமும் அரசியலும் தான்..அதற்க்கு முடிந்தால் தாங்கள் ஆலோசனை சொல்லுங்கள். இந்த ஆலோசனையையும் நான் அதற்க்கு பயன் படுத்த முயற்சிக்கிறேன்.

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...