வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

Thursday, April 14, 2011

தேர்தல் ஆணையத்தின் அறிவீனம் என்ன?

இந்த தேர்தலில் தேர்தல் ஆணையம் சிறப்பாக செயல்பட்டதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் தேர்தல் ஆணையத்தின் அறிவீனத்தை எடுத்துரைக்க மறந்ததேனோ?

இந்திய அளவிலான ஊடகங்கள் தமிழகத்தை கேவலமாக பார்க்கின்றன , இங்கே அறிவிக்கப்பட்டுள்ள
இலவசத்திட்டங்களால்.

இன்று ஓட்டுக்கு காசு கொடுப்பதை தடுக்கும் தேர்தல் ஆணையம் ஏன் ஓட்டுக்கு வண்ணத்தொலைக்காட்சி, நிலம், இலவசமாக கொடுக்கப்படும் என்று கடந்த தேர்தலில் அறிவித்ததை தடுக்க வில்லை.
ஏழை எளிய மக்களுக்கு சிலவற்றை இலவசமாக தருவதில் தவறில்லை. ஆனால் நாங்கள் ஆட்சிக்கு வந்தால்
இவற்றை தருவோம் ஆதலால் எங்களை தேர்ந்தெடுங்கள் என்பது எவ்வளவு பெரிய குற்றம். இது
ஜனநாயகத்தை கேளிக்குத்தாக்கும் செயல் அல்லவா? ஓட்டுக்கு பணம் கொடுப்பதற்கும் இந்த மாதிரி அறிவிப்புக்கும் என்ன வித்தியாசம்?

முதலில் தேர்தல் ஆணையம் தேர்தல் நேரத்தில் இலவசத்திட்டங்களை அறிவிக்க கூடாது என்ற சட்டத்தை கொண்டு வரவேண்டும். இதை செய்யாத வரையில் தேர்தல் ஆணையம் அறிவீனமாகவே செயல்படுகிறது என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது.

ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் ஆணையம் முதலில் சிறப்பான நடவடிக்கை எடுத்தது என்றாலும் அது கடைசி இரண்டு , மூன்று நாட்களில் கோட்டை விட்டு விட்டது என்பதை யாராலும் மறுக்க முடியாது.
இருப்பினும் வரலாறுகாணாத வகையில் தேர்தல் ஆணையம் சிறப்பாக செயல் பட்டது என்பதை மறுக்க இயலாது (வாக்கு எண்ணிக்கைக்கு ஒரு மாத இடைவெளி......இது சில சந்தேகங்களை தருகிறது)

உடனடியாக தேர்தல் ஆணையம் தேர்தல் நேரத்தில் இலவசத்திட்டங்களை அறிவிக்க கூடாது என்ற சட்டத்தை கொண்டு வரவேண்டும்.


2 comments:

 1. இந்த சட்டத்தை நம் அரசாங்கம்தான் கொண்டுவர வேண்டும்... ஆனால் அவர்கள் செய்ய மாட்டார்கள்.

  ஜன் லோக்பால் மாதிரி, ஜன் எலெக்சன் சட்டத்துக்கு யாராவது டெல்லியில் உண்ணாவிரதம் ஆரம்பித்தால் ஏதாவது நடக்கலாம்..

  அதுவரை, குடுக்கிற இலவசங்களை சந்தோசமா வாங்கிக்கிட்டு இருப்போம்.

  ReplyDelete
 2. வாருங்கள் சங்கர் குருசாமி,

  //இந்த சட்டத்தை நம் அரசாங்கம்தான் கொண்டுவர வேண்டும்... ஆனால் அவர்கள் செய்ய மாட்டார்கள்.//
  நீங்கள் கூறுவது உண்மையே. இருப்பினும் தேர்தல் ஆணையம் இந்த சட்டத்தை முன் மொழிந்தால், அதில் ஏதும் பிரச்னை வரும் என்று எனக்கு தோன்றவில்லை.

  //ஜன் லோக்பால் மாதிரி, ஜன் எலெக்சன் சட்டத்துக்கு யாராவது டெல்லியில் உண்ணாவிரதம் ஆரம்பித்தால் ஏதாவது நடக்கலாம்.//
  :) சரியாக சொன்னீர்கள். தமிழ் நாட்டில் உன்னாவிர்டதம் இருந்தால் செத்தொழியட்டும் என்று விட்டு விடுவார்கள்.
  அதுவரை, குடுக்கிற இலவசங்களை சந்தோசமா வாங்கிக்கிட்டு இருப்போம்.///
  நம்ம பணத்தைத்தான் திருப்பி தருகிறார்கள். ஆதலால் தவறில்லை வாங்கிக்கொள்ளலாம். (குறிப்பு: உரியவர் மட்டும்)

  காலம் கடந்த மறு மொழிக்கு மன்னிக்கவும்.

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...