வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

சனி, 14 மே, 2011

ஓ...இதுதான் அமைதிப் புரட்சியா?


பெரும்பாலான கருத்து கணிப்புக்களை பொய்யாக்கி அ.தி.மு. க. தனிப்பெரும்பான்மையுடன்  ஆட்சி அமைக்கபோகின்றது.
இது யாரும் எதிர் பார்க்காத வெற்றி. இத்தேர்தலில் யாருக்கும் எந்த ஒரு அலையும் வீசவில்லை என்று ஊடகங்கள் கூறியிருந்தது. ஆனால் தேர்தல் முடிவுகளோ சுனாமி வந்ததுபோல் அல்லவா உள்ளது.

கலர் டிவி, வீடு, பணம் கிடைத்தும்  மற்றும் மேலும் இலவசங்கள் தி.மு.க ஆட்சிக்கு வந்தால் கிடைக்கும் என்று தெரிந்தும் மக்கள் அ.தி.மு.கவுக்கு வாக்களித்துள்ளனர். 

இதற்கு  என்ன காரணம்?
அலைக்கற்றை ஊழல்....அ.தி.மு.க + தே.மு. தி.க கூட்டணி.
கருணாநிதி  குடும்பத்தின் ஆதிக்க ஆட்சி... மின் வெட்டு , ஈழத் துரோகம் இத்யாதி இத்யாதி.

கடந்த தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி 77 இடங்களை கைப்பற்றியது...ஆனால் இந்த தேர்தலில் தோல்வி அடைந்த தி.மு.க  கூட்டணி வெறும் 31 இடங்களிலேயே வெற்றி பெற்றுள்ளது. 

இது கடந்த அ.தி. மு.க ஆட்சி தற்போதைய தி.மு. க ஆட்சியைவிட சிறப்பாக நடந்துள்ளதாகவே காட்டுகின்றது. 
மேலும் கடந்த தேர்தலில் தே.மு.தி.க தனித்து போட்டியிட்டு ஓட்டுக்களை பிரித்தது. இல்லையென்றால் அ.தி.மு. கவே    வெற்றி பெற்றிருக்கும் என்று தோன்றுகின்றது.

இதில் கவனிக்கப் பட கூடிய செய்தி என்னவெனில் ஐந்து ஆண்டுகள் முதல்வரான கருணாநிதி ஒரு முறை கூட தான் செய்த ஆட்சியால் அடுத்த முறை ஆட்சிக்கு வர முடியவில்லை. 

இதை விட பேரிடியாக தி.மு.க இம்முறை பிரதான எதிர்க்கட்சியாகும் வாய்ப்பையும் இழந்துள்ளது.

மக்களுக்கு எவ்வளவு தான் இலவசங்கள் கிடைத்தாலும் அதற்கும் மிஞ்சிய நல்லாட்சியை அவர்கள் எதிர் பார்க்கின்றனர் என்பதையே தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. 

மக்கள் இலவசங்களால் தி.மு.க. வுக்கு  வாக்களிப்பார்கள் என்று தி.மு.க வினர் ஆர்ப்பரித்தனர் , இதே செய்திகளை ஊடங்களிலும் பரப்பினர்.மேலும் பணமும் பட்டுவாடா செய்தனர்.  ஆனால் மக்களோ அனைத்தையும் பெற்றுக்கொண்டு அமைதியாக அதி.மு.க கூட்டணிக்கு வாக்களித்து விட்டனர். 
ஓ...இதுதான் அமைதிப் புரட்சியா?

4 கருத்துகள்:

  1. சகோ.R.Puratchimani,
    சரியாக சொன்னீர்கள்...
    ///மக்களுக்கு எவ்வளவு தான் இலவசங்கள் கிடைத்தாலும் அதற்கும் மிஞ்சிய நல்லாட்சியை அவர்கள் எதிர் பார்க்கின்றனர் என்பதையே தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.///---அஃதே...!அஃதே...!

    @'க.' & 'ஜெ.'... 'பதிலடி'யால் வாக்காள பொதுமக்கள் அதிர்ச்சி..!

    பதிலளிநீக்கு
  2. //சகோ.R.Puratchimani,
    சரியாக சொன்னீர்கள்...
    ///மக்களுக்கு எவ்வளவு தான் இலவசங்கள் கிடைத்தாலும் அதற்கும் மிஞ்சிய நல்லாட்சியை அவர்கள் எதிர் பார்க்கின்றனர் என்பதையே தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.///---அஃதே...!அஃதே...!//
    உங்கள் எண்ணங்களும் என் எண்ணங்களும் பொருந்தியதை எடுத்து காட்டியமைக்கு நன்றி சகோ

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் தோழரே..

    இது

    அமைதிப் புரட்சி மட்டுமல்ல..
    ஆவேசப் புரட்சி..
    அடிவயிற்றுப் புரட்சி..
    அக்கிரமங்களுக்கு எதிரான புரட்சி..
    அடக்குமுறைக்கு எதிரான புரட்சி..

    இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்..
    எப்படியோ ...

    இனியாவது விடிகிறதா பார்க்கலாம்..
    விடியனும்.. விடியும்..

    பதிலளிநீக்கு
  4. //சிவ.சி.மா. ஜானகிராமன் said...
    வணக்கம் தோழரே..

    இது

    அமைதிப் புரட்சி மட்டுமல்ல..
    ஆவேசப் புரட்சி..
    அடிவயிற்றுப் புரட்சி..
    அக்கிரமங்களுக்கு எதிரான புரட்சி..
    அடக்குமுறைக்கு எதிரான புரட்சி..

    இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்..
    எப்படியோ ...

    இனியாவது விடிகிறதா பார்க்கலாம்..
    விடியனும்.. விடியும்..//

    தோழரே நிச்சயம் விடியும்....ஆனால் மறுபடியும் இருளும்...அதுதானே இயற்கை.(சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னேன்)

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...