வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

ஞாயிறு, 12 ஜூன், 2011

சுவிஸ்ல இன்னுமா பணம் இருக்கும்?

எனக்கு ஒரு சந்தேகம். இதுக்கு பதில் தெரிந்தால் யாராவது சொல்லுங்கள். கிட்டத்தட்ட ஒரு நான்கு ஐந்து ஆண்டுகளாகவே சுவிஸ்ல இருக்கிற பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வரணும், அதை நாட்டுடமையாக்கணும்  அப்படின்னு சொல்லிக்கிட்டு இருக்காங்க. எனக்கு என்ன சந்தேகம்னா இன்னுமா அந்த பணம் சுவிஸ்ல இருக்கும்?.

இத்தன வருடத்தில அதை வேறு வங்கிக்கு மாற்றி இருக்க முடியாதா? (சுவிஸ் மாதிரி  வேறு சில வங்கிகளும் இருப்பதாக தகவல்).

அல்லது வேறு நாட்டில் வசிக்கும் அவர்களுடைய உறவினர்களுக்கு மாற்றி இருக்க முடியாதா? (நிறைய  பண்க்காரர்களோட உறவினர்கள் வெளிநாட்டிலே செட்டில் ஆகி இருக்காங்க).

அல்லது இவர்களே வெளி நாடு சென்று அதை ஜாலியாக செலவு செய்திருக்கலாம் அல்லது அங்கேயே ஏதாவது சொத்துகித்து வாங்கி இருக்கலாம் ...அட தப்பு பண்றவங்களுக்கு இதைவிட இன்னும் என்னன்னமோ ஐடியா வரும்.
 நம்ம அரசாங்கம் ஒரு முடிவு எடுக்குமுன்னே சுவிஸ் பணம் கரைஞ்சிடும்னு நினைக்கிறேன். இப்ப சொல்லுங்கள் அந்த பணம் இன்னும் சுவிஸ்ல அப்படியே  இருக்கும்னு  நினைக்கிறீங்க?

8 கருத்துகள்:

  1. ஆம் இன்னும் அப்பணங்கள் சுவிஸ்சில் தான் இருக்கும்

    ஏனெனில்

    1. "இத்தன வருடத்தில அதை வேறு வங்கிக்கு மாற்றி இருக்க முடியாதா?" - இப்படிப்பட்ட கருப்பு பணங்களை வைப்பதில் சுவிஸ் நம்பர் ஒன். இந்தியாவை போல் பல நாட்டின் பணங்கள் அங்கு உள்ளன (ஆனால் நம் பணம் தான் அதிகம்). எனவே இத்தகைய நம்பகமான இடத்தை மாற்றமாட்டர்கள்

    2. "அல்லது வேறு நாட்டில் வசிக்கும் அவர்களுடைய உறவினர்களுக்கு மாற்றி இருக்க முடியாதா?" - மாட்டார்கள். ஏனெனில் பணக்காரர்கள் இதனை மிகவும் ரகசியமாய் செர்துவைக்கிரார்கள். சிலர் மனைவி, வாரிசுகளிடம் கூட சொல்வதில் என்பதே வேடிக்கை (சில பணக்காரர்கள் இறந்த பின்பு இவ்வாறு ரகசியமாய் இருக்கும் பணங்கள் யாராலும் கேட்கபடாமல் இருக்க, அவை அந்த வங்கியின் கஜானாவை நிரப்புவதே உண்மையான கொடுமை)

    3. "இவர்களே வெளி நாடு சென்று அதை ஜாலியாக செலவு செய்திருக்கலாம் அல்லது அங்கேயே ஏதாவது சொத்துகித்து வாங்கி இருக்கலாம்" - நமது பணக்கார்கள் அங்கு வைத்திருக்கும் சொத்து செலவு செய்து அழிக்கவோ அல்லது சொத்துக்கள் வாங்கி கரைக்கவோ முடியாத அளவிலான மிக பெரும் தொகைகள் என்பதே அடுத்த அதிர்ச்சி

    4. நான்காவது முக்கிய காரணம் : நம்மால் பணத்தை சுவிஸ் வங்கிகளிடம் இருந்து வாங்க முடியாது என்பதால். (1 . நம் அரசியல் வாதிகள் பணமே அங்கு அதிகம் உள்ளது. 2 . அந்த பணத்தை நாம் மீட்டு விட்டால் சுவிஸ் வங்கி போண்டி ஆகி விடும். எனவே அவர்களும் தர மாட்டார்கள்.)

    பதிலளிநீக்கு
  2. தப்பு பண்றவங்களுக்கு இதைவிட இன்னும் என்னன்னமோ ஐடியா வரும்.

    பதிலளிநீக்கு
  3. //InCake said...

    ஆம் இன்னும் அப்பணங்கள் சுவிஸ்சில் தான் இருக்கும்

    ஏனெனில்

    1. "இத்தன வருடத்தில அதை வேறு வங்கிக்கு மாற்றி இருக்க முடியாதா?" - இப்படிப்பட்ட கருப்பு பணங்களை வைப்பதில் சுவிஸ் நம்பர் ஒன். இந்தியாவை போல் பல நாட்டின் பணங்கள் அங்கு உள்ளன (ஆனால் நம் பணம் தான் அதிகம்). எனவே இத்தகைய நம்பகமான இடத்தை மாற்றமாட்டர்கள்

    2. "அல்லது வேறு நாட்டில் வசிக்கும் அவர்களுடைய உறவினர்களுக்கு மாற்றி இருக்க முடியாதா?" - மாட்டார்கள். ஏனெனில் பணக்காரர்கள் இதனை மிகவும் ரகசியமாய் செர்துவைக்கிரார்கள். சிலர் மனைவி, வாரிசுகளிடம் கூட சொல்வதில் என்பதே வேடிக்கை (சில பணக்காரர்கள் இறந்த பின்பு இவ்வாறு ரகசியமாய் இருக்கும் பணங்கள் யாராலும் கேட்கபடாமல் இருக்க, அவை அந்த வங்கியின் கஜானாவை நிரப்புவதே உண்மையான கொடுமை)

    3. "இவர்களே வெளி நாடு சென்று அதை ஜாலியாக செலவு செய்திருக்கலாம் அல்லது அங்கேயே ஏதாவது சொத்துகித்து வாங்கி இருக்கலாம்" - நமது பணக்கார்கள் அங்கு வைத்திருக்கும் சொத்து செலவு செய்து அழிக்கவோ அல்லது சொத்துக்கள் வாங்கி கரைக்கவோ முடியாத அளவிலான மிக பெரும் தொகைகள் என்பதே அடுத்த அதிர்ச்சி

    4. நான்காவது முக்கிய காரணம் : நம்மால் பணத்தை சுவிஸ் வங்கிகளிடம் இருந்து வாங்க முடியாது என்பதால். (1 . நம் அரசியல் வாதிகள் பணமே அங்கு அதிகம் உள்ளது. 2 . அந்த பணத்தை நாம் மீட்டு விட்டால் சுவிஸ் வங்கி போண்டி ஆகி விடும். எனவே அவர்களும் தர மாட்டார்கள்.//
    தங்களுடைய பதிலுக்க மிக்க நன்றி. எனக்கு இன்னும் ஒரு சந்தேகம்....இந்த பணத்தை செலவு கூட செய்ய மாட்டார்கள் எனில் பின்பு எதற்காகத் தான் அவர்கள் பணத்தை அங்கே வைத்துள்ளார்கள். அதை எப்படி இவர்கள் அனுபவிப்பார்கள்...அங்கே பணம் செலவு செய்ய முடியாமல் பணம் வைத்திருப்பதால் இவர்கள் அடையும் பயன் தான் என்ன? ஒன்னும் புரியலங்க :)

    பதிலளிநீக்கு
  4. //இராஜராஜேஸ்வரி said...

    தப்பு பண்றவங்களுக்கு இதைவிட இன்னும் என்னன்னமோ ஐடியா வரும்//

    ஆமாங்க திருடனக்குத் தான் அதை மற்றவர்கள் திருடாமல் இருக்க என்ன வழி என்று தெரியும்...

    பதிலளிநீக்கு
  5. இந்த பதிவிற்கு InCake அவர்களுடைய கருத்துக்களை அப்படியே வழிமொழிகிறேன்..

    நம்ப நாட்டோட கடனையே அடைக்கிற அளவுள்ள கருப்பு பணத்தை அவ்வளவு சீக்கிரம் இடம் மாத்திட மாட்டாங்க என்பதே எனது கருத்தும்..

    நன்றி..

    பதிலளிநீக்கு
  6. //சிவ.சி.மா. ஜானகிராமன் said...

    இந்த பதிவிற்கு InCake அவர்களுடைய கருத்துக்களை அப்படியே வழிமொழிகிறேன்..

    நம்ப நாட்டோட கடனையே அடைக்கிற அளவுள்ள கருப்பு பணத்தை அவ்வளவு சீக்கிரம் இடம் மாத்திட மாட்டாங்க என்பதே எனது கருத்தும்..

    நன்றி..
    //

    தங்களுடைய கருத்துக்கு மிக்க நன்றி சிவனடியரே.

    பதிலளிநீக்கு
  7. புரட்சிமணி கருப்பு பணம் என்ன ஐந்து, பத்தா தூக்கிட்டு ஓடிறதுக்கு. பல லட்சம் கோடிகளில் இருக்குதப்பூ. இவனுங்க தலைமுறைக்கே தின்னு அழிச்சாலும் அழியாது. அதை மாத்தறேன் பேர்வழின்னு எதாச்சும் பண்ணி மாட்டிக்க அவங்க என்ன முட்டாள்களா? அவனுங்க அனுபவிக்கறானுங்களோ இல்லையோ அது யாருக்கும் உபயோகப்படாம காலங்காலமாக பதுங்கி கிடக்கிறது. என்ன செய்ய. அரசாங்கமாவது முயற்சி செய்யறதாவது எல்லாமே நாடகம். கோடிகள்ல ஒன்று கூட தேறாது. அட அவனுங்க பேரை கூட வெளியிட மாட்டாங்க. விக்கிலீக்ஸ் மாதிரி யாராவது போட்டு கொடுத்தா தான் உலகத்துக்கே தெரியும்.

    பதிலளிநீக்கு
  8. //புரட்சிமணி கருப்பு பணம் என்ன ஐந்து, பத்தா தூக்கிட்டு ஓடிறதுக்கு. பல லட்சம் கோடிகளில் இருக்குதப்பூ. இவனுங்க தலைமுறைக்கே தின்னு அழிச்சாலும் அழியாது. அதை மாத்தறேன் பேர்வழின்னு எதாச்சும் பண்ணி மாட்டிக்க அவங்க என்ன முட்டாள்களா? அவனுங்க அனுபவிக்கறானுங்களோ இல்லையோ அது யாருக்கும் உபயோகப்படாம காலங்காலமாக பதுங்கி கிடக்கிறது. என்ன செய்ய. அரசாங்கமாவது முயற்சி செய்யறதாவது எல்லாமே நாடகம். கோடிகள்ல ஒன்று கூட தேறாது. அட அவனுங்க பேரை கூட வெளியிட மாட்டாங்க. விக்கிலீக்ஸ் மாதிரி யாராவது போட்டு கொடுத்தா தான் உலகத்துக்கே தெரியும்.//
    மணி, சரியா சொன்னிங்க விக்கிலீக்ஸ்கு ஒரு மெயில் தட்டியே ஆகணும் போல...

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...