வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

புதன், 15 ஜூன், 2011

முற்பிறவி என்றால் மூன்றாவது பிறவியா?

முற்பிறவி என்றால் முந்தைய பிறவி என்பது பலருக்கும் தெரியும். ஆனால் அது மூன்றாவது பிறவியையும் குறிக்கும். (என்னோட அகராதியில :) )

ஜோதிடத்தில் முக்கியமான மூன்று வீடுகள் உள்ளன. அவை ஒன்று ஐந்து  மற்றும் ஒன்பதாம் வீடுகள். இவற்றை திரிகோணம் என்பர். இவற்றை லட்சுமி வீடுகள் என்றும் சொல்வர் சிலர்.  என்னைப்பொருத்த வரை இந்த மூன்று வீடுகளும் ஒருவனுக்கு நன்றாக அமைந்தாலே அவனது வாழ்வும் சிறப்பாக அமையும்.

இந்த மூன்று வீட்டின் அதிபதிகள் தான் ஒருவனுக்கு நன்மைகளை வாரி வழங்குபவர்கள். இவர்களை யோகாதிபதி என்பர். அதாவது ஒரு லக்னத்து யார் சுபர் என்றால் அவர்கள் இந்த மூன்று வீட்டின் அதிபதிகளாகத்தன் இருப்பார். 

ஜோதிடத்தில் லக்னம் எனபது இப்பிறவியை காட்டுகின்றது. ஐந்தாம் இடம் இதற்க்கு முன்பு எடுத்த பிறவியை காட்டுகின்றது. அப்ப அந்த ஒன்பதாம் இடம்? அது ஒருவனின்  மூன்றாவது பிறவியை காட்டுகின்றது. அதாவது சென்ற பிறவிக்கு முந்தைய பிறவி. சொல்ல முடியாது அது ஒருவனின் அனைத்து பிறவிகளையும் கூட சொல்லலாம்.

முற் பிறவியில் செய்த புண்ணியம் தான் இப்பிறவியில் நமக்கு ஏற்ப்படும் இன்ப துன்பங்களுக்கு காரணம் என்று கூறுவர். ஐந்து   ஒன்பதாம் வீடுகள் கெட்டிருந்தால் நீங்கள் முற்பிறவிகளில் பாவம் செய்துள்ளீர்கள் என்று பொருள். 

இதற்க்கு முந்தைய ஜென்மத்தில் ஒருவன் செய்த பாவம் புண்ணியத்தை பொறுத்தே அவனுக்கு குழந்தை பிறக்கும் என்று ஜோதிடம் சொல்கிறது. ஆதலால் தான் குழந்தை பாக்கியத்திற்கு ஐந்தாம் இடத்தை சொல்கின்றனர்.
சென்ற பிறவிக்கு முன்பிறவியில் செய்த பாவம் புண்ணியமும் ஒருவனுக்கு குழந்தை உண்டா இல்லையா என்பதை  தீர்மானிக்கின்றது என நினைக்கின்றேன். ஆதலால் தான் ஒன்பதாம் இடத்தை பாக்கிய ஸ்தானம்    என்று சொனார்கள். அதாவது ஒருவனுக்கு கிடைக்கப் போகும் சகல சௌபாக்கியங்களும் இந்த வீட்டை பொறுத்தே அமையும்.
தந்தை, குரு, அதிஷ்டம் , பரம்பரை சொத்து இவற்றை  ஒன்பதாம் வீடு குறிக்கின்றது.

அது மட்டும் அல்ல ஐந்தாம் வீடு கெட்டிருந்தாலும் அவர்களுக்கு ஒன்பதாம் வீடு நன்றாக இருந்தால் அவர்களுக்கும் குழந்தை பிறக்கும். (அந்த வீட்டு அதிபதிகளின் நிலை ரொம்ப முக்கியம்.)

ஆதலால் தான் நம் பெரியோர்கள் முற்பிறவியில் செய்த பலனால் குழந்தை செல்வம் என்று கூறியுள்ளனர். இந்த முற்பிறவியை ஐந்தாம் வீடு மற்றும் அதற்கு முந்தைய பிறவியை ஒன்பதாம் வீடு குறிக்கின்றன.
ஆதலால் முற்பிறவி எனபது மூன்றாவது பிறவியையும் தானே குறிக்கின்றது?
உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இது முந்தைய அனைத்து பிறவியையும் குறிக்கும் வார்த்தை தான்.

ஒருவனுக்கு மிகுந்த நன்மையை செய்யக்கூடிய திசை எது என்றால் அது ஒன்பதாம் அதிபதியின் திசை தான்.
 
குழந்தை இல்லாதவர்கள் இதை படித்து விட்டு நொந்து கொள்ள வேண்டாம். குழந்தை இல்லாததும் ஒருவிதத்தில் நன்மையே....... உங்கள் ஆன்மீக (தவ)  பயணத்திற்கு.

உண்மையை சொல்ல வேண்டும் என்றால் குழந்தை பெற்றுக்கொள்ள மருத்துவம் உங்களுக்கு கை கொடுக்கும் முயற்சி செய்யுங்கள். அல்லது ஒரு  குழந்தையை தத்தெடுத்து வளருங்கள்.

முடிந்த வரை இப்பிறவியில்  நன்மை செய்யுங்கள்....நன்மை இப்பிறவியிலும் கிடைக்கலாம்....அடுத்த பிறவியிலும் கிடைக்கலாம்.... ஏன் பிறவியே இல்லாமலும் போகலாம்.
வாழ்க வளமுடன்....நலமுடன்....

6 கருத்துகள்:

 1. வணக்கம் தோழரே,

  மிக அற்புதமான தெளிவான விளக்கங்கள்..
  தங்களது சமீப கால ஆக்கங்களிலேயே இதுதான் பிரகாசமாக இருப்பதாக எனது கணிப்பு.

  சோதிட பாடத்திற்கு மிக முக்கியமான பல குறிப்புகளை இன்றைய ஆக்கம் தந்திருக்கிறது..

  //இவர்களை யோகாதிபதி என்பர். அதாவது ஒரு லக்னத்து யார் சுபர் என்றால் அவர்கள் இந்த மூன்று வீட்டின் அதிபதிகளாகத்தன் இருப்பார். //

  //ஐந்தாம் வீடு கெட்டிருந்தாலும் அவர்களுக்கு ஒன்பதாம் வீடு நன்றாக இருந்தால் அவர்களுக்கும் குழந்தை பிறக்கும். (அந்த வீட்டு அதிபதிகளின் நிலை ரொம்ப முக்கியம்.)//

  //ஒருவனுக்கு மிகுந்த நன்மையை செய்யக்கூடிய திசை எது என்றால் அது ஒன்பதாம் அதிபதியின் திசை தான். //


  இனி ஒரு ஜாதகத்தைக் கணிக்கும் போது இதுபோன்ற குறிப்புகளையும் அப்ளை செய்து பார்க்கிறேன்..

  நன்றி..
  வாழ்த்துக்கள் ...

  பதிலளிநீக்கு
 2. @சிவ.சி.மா. ஜானகிராமன்
  தங்களுடைய பாராட்டுக்கு மிக்க நன்றி சிவனடியாரே...உங்களுடைய ஜோதிட அனுபவங்களையும் அவப்போது பகிர்ந்து கொள்ளுங்கள்...அப்பொழுதுதான் எனக்கும் இவைகள் எந்த அளவுக்கு வேலை செய்கின்றது என்பதை அறிய முடியும்...

  பதிலளிநீக்கு
 3. ஆரண்யகாண்டம்-படமா எடுக்கிறானுங்க.....மயிறானுங்க என்ற தலைப்பில் நானும் எனது கருத்தை சொல்லி உள்ளேன்.
  மேலும் விபரமறிய எனது வலைப்பக்கம் வாருங்கள் நண்பர்களே!

  பதிலளிநீக்கு
 4. //உலக சினிமா ரசிகன் said...

  ஆரண்யகாண்டம்-படமா எடுக்கிறானுங்க.....மயிறானுங்க என்ற தலைப்பில் நானும் எனது கருத்தை சொல்லி உள்ளேன்.
  மேலும் விபரமறிய எனது வலைப்பக்கம் வாருங்கள் நண்பர்களே!
  //
  நல்லதுக்கா இருந்தாலும் நல்ல வார்த்தையை மட்டும் உபயோகிக்கவும்....நன்றி

  பதிலளிநீக்கு
 5. //"என் ராஜபாட்டை"- ராஜா said...

  Very detailed post . . Super
  //
  Thanks Raja

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...