கல்லை செதுக்கி
அதற்கு சாமி என்று பெயரிட்டு
மாலை அணிவித்து வணங்கினால்
அது மூட நம்பிக்கை முட்டாள் தனம் என்பார்கள் பகுத்தறிவாளர்கள் (எ) நாத்திகவாதிகள்.
ஆனால் அவர்களோ
கல்லை செதுக்கி
அதற்கு பெரியார் என பெயரிட்டு
மாலை இட்டு வணங்கி மரியாதை செய்வர்
இவர்களின் பகுத்தறிவை என்ன சொல்ல?
குறிப்பு: பகுத்தறிவாளர்களின் மத்தியிலும் மூடத்தனம் உண்டு என்பதை சுட்டி காட்டுவதற்கே இதை எழுதியுள்ளேன். எனக்கும் பகுத்தறிவில் நம்பிக்கை உண்டு. தமிழகத்தில் பெயருக்கு பெண்ணால் ஜாதி இடம் பெறுவதில்லை. இது பெரியாரின் சாதனை தான். சிந்திக்கத் தெரிந்தவர்கள் சிந்திக்கட்டும்.
பெரியார் சாமி :)
பதிலளிநீக்குபெரியார் என்ன புரட்சி வெங்காயமா?
//
பதிலளிநீக்குதனி காட்டு ராஜா said...
பெரியார் சாமி :)
பெரியார் என்ன புரட்சி வெங்காயமா?//
இன்னும் சில நூற்றாண்டுகள் போனால் அவரை நாத்திகசாமி என்று சொன்னாலும் சொல்வார்கள் சிலர்.
இதை நான் ஏற்க்கனவே படித்துள்ளேன். நீங்கள் சொன்னதிலும் உண்மை உளது. நமது பெயருக்கு பின்னால் ஜாதி இல்லாததற்கு அவர் தான் காரணம். ஆதலாம் அவரையும் புரட்சியாளர் என்று சொல்லலாம் தவறில்லை.
நல்ல பதிவு நண்பரே!!!!!!!!,
பதிலளிநீக்குமதம்,கடவுள் மூட நம்பிக்கை மறுத்த நமது புத்தரையே கடவுளாக்களையா!!!!!.
பெரியார் என்ற மனிதன் முக்கியமில்லை.அவரின் கொள்கையில் நமக்கு சரியென்று படுவதை மட்டுமே எடுக்கலாம்.இது அவருக்கு மட்டுமல அனைத்து விஷயங்களிலுமே நம்க்கு சரியென்று படாத விஷயத்தை ஒதுக்க வேண்டும்.அவர் சொன்னால் சரியாக்த்தான் இருக்கும் என்பது பகுத்தறிவு அல்ல.
வாழ்த்துக்கள்.
//
பதிலளிநீக்குசார்வாகன் said...
நல்ல பதிவு நண்பரே!!!!!!!!,
மதம்,கடவுள் மூட நம்பிக்கை மறுத்த நமது புத்தரையே கடவுளாக்களையா!!!!!.
பெரியார் என்ற மனிதன் முக்கியமில்லை.அவரின் கொள்கையில் நமக்கு சரியென்று படுவதை மட்டுமே எடுக்கலாம்.இது அவருக்கு மட்டுமல அனைத்து விஷயங்களிலுமே நம்க்கு சரியென்று படாத விஷயத்தை ஒதுக்க வேண்டும்.அவர் சொன்னால் சரியாக்த்தான் இருக்கும் என்பது பகுத்தறிவு அல்ல.
வாழ்த்துக்கள்.//
சரியாக சொன்னீர்கள் தோழரே, கொள்கை தான் நமக்கு முக்கியம். பகுத்தறிவாளன் என்று சொல்லிக்கொண்டு பெரும்பாலோனோர் மூடர்களாகத்தான் இருக்கின்றனர்.