வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

திங்கள், 4 ஜூலை, 2011

பிரபஞ்சம் உருவானது எப்படி? கடவுளாளா? பகுதி 2

'எங்கு  தொடங்கி  எங்கு முடிக்க' என்று சிற்றின்பத்தை பற்றி ஒரு பாடல் உண்டு. அதுபோல் இந்த கட்டுரையை எங்க ஆரம்பித்து எப்படி முடிப்பது என்றே எனக்கு தெரியவில்லை.
சென்ற பதிவில் ஆன்மிகம் என்ற அகத்தாய்வு  எனபது நேற்றைய அறிவியல், இன்றைய அறிவியலுக்கும் நேற்றைய அறிவியலுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை, அறிவியல்  புறத்தை  பார்க்கின்றது , ஆன்மிகம்  என்கிற அகத்தாய்வு அகத்தை பார்க்கின்றது  என்று பார்த்தோம். சென்ற பதிவிற்கான  வழிகாட்டி.

அன்றைய அறிவியலான அகத்தாய்வில் கண்டறியப்பட்ட பிரபஞ்ச ரகசியங்களில் சில வேதங்களிலும், புராணங்களிலும் ,யோக நூல்களிலும் மற்றும் வேறு   சில நூல்களிலும் ஆங்காங்கே உள்ளதை காண முடிகின்றது.

இன்றைய அறிவியல் வளர வளர சிலர் இப்படிப்பட்ட பண்டைய நூல்களுடன் அறிவியலை சம்பந்த்தப்படுத்தி அறிவியல் வேறு விதமாக உள்ளது இந்த நூல்களில்  சொல்வது வேறு விதமாக உள்ளது என்று கேள்வி    எழுப்புகின்றனர்.

உண்மையில்  இந்த அறிவியலாளர்கள்  அபிரகாமிய மதங்களுடன்  (அதாவது  இஸ்லாம்  மற்றும் கிறிஸ்த்துவம் ) மட்டுமே    அறிவியல்  ஆய்வுகளை  ஒப்பிட்டு பார்த்து  இந்த முடிவுக்கு  வருகின்றனர். (ஆபிரகாமிய மதங்கள் தவறு என்ற கூறவில்லை அவைகளும் இந்தியாவிலிருந்தே சென்றிருக்கும் என்பதற்கான சாத்திய கூறுகள் நிறைய உள்ளன. என்ன அங்கே அகத்தாய்வு உண்மைகள் மிக சொற்ப அளவே உள்ளதாக நினைக்கின்றேன்.இந்திய புராணங்களிலும் அறிவியலுக்கு முரணான செய்திகள் சில உள்ளது என்பதை  மறுக்க இயலாது.)

ஆனால்  அவர்களுக்கு  இந்திய நூல்களில் உள்ள பிரபஞ்ச ரகசியத்தை  பற்றி தெரியவில்லை. வெகு சில அறிவியலாளர்களே பண்டைய இந்திய  நூல்களை பற்றி "கொஞ்சம்" ஆய்வு செய்து அறிவியல் உண்மைகளோடு ஒப்பிட்டு பார்த்துள்ளனர். ஒப்பிட்டு பார்த்த அவர்கள் திகைத்து போய்விட்டனர். ஏன் எனில் இன்றைய அறிவியல் சிந்தித்து கூட பார்க்க முடியாத அளவில் இந்திய நூல்களில்  கால அளவுகள் உள்ளது.

பிரபஞ்சம் உருவாகி 13.7 பில்லியன் ஆண்டுகள் ஆகின்றன என்பது இன்றைய அறிவியலாளர்களால் ஒத்துக்கொள்ளப்பட்ட ஒன்று . இந்திய புராணத்தில் இந்த 13.7 பில்லியன் ஆண்டுகள் என்பது கிட்டத்தட்ட    பிரம்மனின்   வெறும்  ஒன்றரை   நாட்கள்  தான். 

பிரம்மனின் ஒரு பகல்  பொழுது  4.32  பில்லியன் ஆண்டுகளுக்கு   சமம் (இதை  ஒரு கல்பம்  என்று சொல்வார்கள் ). இரவு  பொழுது மற்றும்  ஒரு 4.32  பில்லியன் ஆண்டுகள். ஆக   பிரம்மனின் ஒரு நாள்  என்பது 8.64 பில்லியன் ஆண்டுகளுக்கு   சமம். (இங்கே பிரம்மன்  உண்மையா பொய்யா என்ற சர்ச்சை தேவை இல்லை).

இதேபோல்  இந்தியர்கள்  311,040 பில்லியன் ஆண்டுகள்  அதாவது 311 ட்ரில்லியன்   ஆண்டுள்  பற்றி பேசியுள்ளதாக  அறிவியல் அறிஞர்கள்  ஒப்புக்கொண்டுள்ளனர். அது  மட்டுமல்ல    1/1,000,0000 நொடிகள்     பற்றியும்  பேசியுள்ளதாக கூறுகின்றனர்.

இவை  அனைத்தையும்  அவர்கள் அந்த  காலத்தில்  அகத்தாய்வு செய்தே  கணக்கிட்டுள்ளதாக   தெரிகிறது.

 புறத்தாய்வு செய்திருக்க  வாய்ப்புகள்  உள்ளது என்று சொல்லும்  அளவுக்கு  எந்த  ஒரு குறிப்புகளும்  இதுவரை  கிடைக்க  வில்லை.

தொடரும்................


8 கருத்துகள்:

 1. அது ....:)

  ***தல அஜித் ஸ்டைலில் படிக்கவும்***

  பதிலளிநீக்கு
 2. //

  தனி காட்டு ராஜா said...

  அது ....:)

  ***தல அஜித் ஸ்டைலில் படிக்கவும்***//

  எது.....? நீங்கள் கட்டுரை முழுவதிற்கும் இதை சொன்னதாக எடுத்துகொள்கிறேன். நன்றி தனி காட்டு ராஜா.

  பதிலளிநீக்கு
 3. வெரி குட்..

  தொடரட்டும் இந்த ஆய்வு ..

  வாழ்த்துக்கள்..


  http://sivaayasivaa.blogspot.com

  சிவயசிவ

  பதிலளிநீக்கு
 4. //

  சிவ.சி.மா. ஜானகிராமன் said...

  வெரி குட்..

  தொடரட்டும் இந்த ஆய்வு ..

  வாழ்த்துக்கள்..


  http://sivaayasivaa.blogspot.com

  சிவயசிவ//
  தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சிவனடியாரே

  பதிலளிநீக்கு
 5. நண்பரே நீங்கள் உயரிய பாதைக்கு சென்றுக்கொண்டிருக்குறீர்கள்... வாழ்த்துக்கள்...
  rajeshnedveera

  பதிலளிநீக்கு
 6. //

  மாய உலகம் said...

  நண்பரே நீங்கள் உயரிய பாதைக்கு சென்றுக்கொண்டிருக்குறீர்கள்... வாழ்த்துக்கள்...
  rajeshnedveera//
  உண்மையை சொல்லவேண்டுமானால் அந்த பாதையிலிருந்து இப்பொழுது சற்று விலகியே உள்ளேன். தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பா :)

  பதிலளிநீக்கு
 7. sir,
  kindly go through the site:

  http://www.kelvi.tk

  You will get more in depth knowledge on the nature of knowledge

  பதிலளிநீக்கு
 8. @SoundaryaNayaki சௌந்தர்யநாயகி

  Thanks for your comment. continue to read my blog to know my opinion which is different from the most of the scientists

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...