வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

வியாழன், 21 ஜூலை, 2011

ஆண் பெண் நாகரீகம் எங்கே போகும்?

முப்பது வயதிற்கு கீழ் உள்ளவர்களும் இளகிய மனம் உள்ள ஆண்களும் பெண்களும் இதை படிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.

முதலில் ஆணும் பெண்ணும் பார்த்துக்கொள்வதால்  என்ன தவறு என்றனர்.

பிறகு ஆணும் பெண்ணும் ஒன்றாக படிப்பதால்  என்ன தவறு என்றனர்

பிறகு ஆணும் பெண்ணும் பேசிக்கொள்வதால் என்ன தவறு என்றனர்

பிறகு ஆணும் பெண்ணும் நட்பாக இருந்தால் என்ன தவறு என்றனர்

பிறகு ஆணும் பெண்ணும் ஒன்றாக வெளியில் சென்று வந்தால் என்ன தவறு என்றனர்

பிறகு ஆணும் பெண்ணும்  தொட்டுக்கொண்டு பேசுவதால் என்ன தவறு என்றனர்

பிறகு ஆணும் பெண்ணும்  உரசிக்கொண்டு பேசுவதால் என்ன தவறு என்றனர்

பிறகு  ஆணும் பெண்ணும் காதலித்தால் என்ன தவறு என்கின்றனர்

பிறகு ஆணும் பெண்ணும் திருமணத்திற்கு முன்   உடல் உறவு கொண்டால் என்ன தவறு என்பர்(என்கின்றனர்)

பிறகு ஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும் உடல் உறவு கொள்வதால் என்ன  தவறு  என்பர் (என்கின்றனர்)

பிறகு ஆணும் பெண்ணும் திருமணத்திற்கு பின் வேறு ஒருவருடன்  உடல் உறவு கொண்டால் என்ன தவறு என்பர்

பிறகு ஆணும் பெண்ணும்  யார் யாருடன்   உடல் உறவு கொண்டால் என்ன தவறு என்பர்

பிறகு ஆணும் பெண்ணும் எது எதனுடன் உடல் உறவு கொண்டால் என்ன தவறு என்பர்

இப்படித்தான் போகப்போகிறது ஆண் பெண் நாகரீக கலாச்சாரம்.

18 கருத்துகள்:

 1. போகப் போகிறது இல்லை நண்பரே..
  போய்விட்டது..

  இன்னும் வெளிச்சத்திற்கு வரவில்லை..
  இத்தகைய செய்திகள் உண்மை..

  தங்களுடைய சமுதாயச் சிந்தனைக்கு வாழ்த்துக்கள்.

  நன்றி..

  பதிலளிநீக்கு
 2. முப்பது வயதிற்கு கீழ் உள்ளவர்களும் இளகிய மனம் உள்ள ஆண்களும் பெண்களும் கீழ் கண்ட பின்னுடத்தை படிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்....
  பின்னுட்டம் கொஞ்சம் சூடா இருக்கும்.....ஹி..ஹி


  மணி அவர்களே (என்னை பொறுத்தவரை அல்லது உண்மையில்) கல்யாண கலாசாரம் என்பது முடி மாதிரி... எப்படி வேண்டுமானாலும் மாற்றி கொள்ளலாம்....

  ஒரு நூறு வருசத்துக்கு முந்தி பாருங்க....எல்லோரும் குடுமி வைத்து வைத்து கொண்டு இருந்தார்கள்...
  அதுவே இப்போது குடுமி வைத்து கொள்வது கேலி யாக பார்க்க படுகிறது...

  இதுவே நூறு வருசத்துக்கு முந்தி இப்போதைய ஹேர் ஸ்டைல் வைத்து இருந்தால் கேலியாக பார்த்து இருப்பார்கள்....

  100 வருசத்துக்கு முந்தி பத்து பதினைந்து குழந்தை பெற்று கொள்வது எல்லாம் சர்வ சாதாரணம்.....
  அதுவே இப்போது சாத்தியமா?

  பழைய வெளக்கென்னைகள் கலாசாரம் என்ற பெயரில் பெண்களை குழந்தை பெற்று கொள்ளும் இயந்திரமாக பயன் படுத்தினார்கள்....
  அது மட்டும் அல்லாமல்....அன்றைய வாழ்கையில் கூட்டு குடும்பமாக வேறு வாழ்ந்தார்கள்.....
  கூட்டு குடும்பத்தில் வாழும் போது சுகந்திர மாக உடலுறவு கூட கொள்ள முடியாது....
  இந்த வெக்கம் கெட்ட தனக்கு பேரு தான் கலாச்சாரமா :))

  இரண்டு பேர் ஆண் பெண் சுகந்திரத்தில் குறுக்கிட நாம் யார் ??

  எதை செய்தாலும் அடிப்பபடையில் ஒரு நேர்மை விழிப்புணர்வு வேண்டும்....அதுதான் இந்திய யோக கலாச்சாரம்...
  எனக்கு இந்திய யோக கலாசாரத்தில் மட்டும் நம்பிக்கை உண்டு...

  கல்யாண விபச்சார கலாசாரம்

  ராத்திரி நேரத்து கலாச்சாரம்

  பதிலளிநீக்கு
 3. வணக்கம் நண்பரே

  உங்கள் பதிவினை இத்தளத்திலும் இணைக்கவும்...

  http://www.valaiyakam.com/

  ஓட்டுப்பட்டை இணைக்க:
  http://www.valaiyakam.com/page.php?page=about

  பதிலளிநீக்கு
 4. என்றோ போய் விட்டது....வெளிச்சத்தில் உள்ளது தெரிகிறது... இருட்டில் உள்ளது தெரியவில்லை அவ்வளவு தான்...

  பதிலளிநீக்கு
 5. வரலாறு முக்கியம் அமைச்சரே

  ஆனால் அது படிப்பினை தருவதற்கு பதிலாகத் தூண்டுகோலாக அமைவதே துரதிர்ஷ்டம்.

  பேசாம விட்டுர்றதே நல்லது.

  பதிலளிநீக்கு
 6. //

  சிவ.சி.மா. ஜானகிராமன் said...

  போகப் போகிறது இல்லை நண்பரே..
  போய்விட்டது..

  இன்னும் வெளிச்சத்திற்கு வரவில்லை..
  இத்தகைய செய்திகள் உண்மை..

  தங்களுடைய சமுதாயச் சிந்தனைக்கு வாழ்த்துக்கள்.

  நன்றி..//
  உண்மைதான் அடியாரே...இன்று சிறியதாக இருப்பது நாளை விஸ்வரூபம் எடுக்கும்
  நன்றி

  பதிலளிநீக்கு
 7. //

  தனி காட்டு ராஜா said...

  முப்பது வயதிற்கு கீழ் உள்ளவர்களும் இளகிய மனம் உள்ள ஆண்களும் பெண்களும் கீழ் கண்ட பின்னுடத்தை படிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்....
  பின்னுட்டம் கொஞ்சம் சூடா இருக்கும்.....ஹி..ஹி


  மணி அவர்களே (என்னை பொறுத்தவரை அல்லது உண்மையில்) கல்யாண கலாசாரம் என்பது முடி மாதிரி... எப்படி வேண்டுமானாலும் மாற்றி கொள்ளலாம்....

  ஒரு நூறு வருசத்துக்கு முந்தி பாருங்க....எல்லோரும் குடுமி வைத்து வைத்து கொண்டு இருந்தார்கள்...
  அதுவே இப்போது குடுமி வைத்து கொள்வது கேலி யாக பார்க்க படுகிறது...

  இதுவே நூறு வருசத்துக்கு முந்தி இப்போதைய ஹேர் ஸ்டைல் வைத்து இருந்தால் கேலியாக பார்த்து இருப்பார்கள்....

  100 வருசத்துக்கு முந்தி பத்து பதினைந்து குழந்தை பெற்று கொள்வது எல்லாம் சர்வ சாதாரணம்.....
  அதுவே இப்போது சாத்தியமா?

  பழைய வெளக்கென்னைகள் கலாசாரம் என்ற பெயரில் பெண்களை குழந்தை பெற்று கொள்ளும் இயந்திரமாக பயன் படுத்தினார்கள்....
  அது மட்டும் அல்லாமல்....அன்றைய வாழ்கையில் கூட்டு குடும்பமாக வேறு வாழ்ந்தார்கள்.....
  கூட்டு குடும்பத்தில் வாழும் போது சுகந்திர மாக உடலுறவு கூட கொள்ள முடியாது....
  இந்த வெக்கம் கெட்ட தனக்கு பேரு தான் கலாச்சாரமா :))

  இரண்டு பேர் ஆண் பெண் சுகந்திரத்தில் குறுக்கிட நாம் யார் ??

  எதை செய்தாலும் அடிப்பபடையில் ஒரு நேர்மை விழிப்புணர்வு வேண்டும்....அதுதான் இந்திய யோக கலாச்சாரம்...
  எனக்கு இந்திய யோக கலாசாரத்தில் மட்டும் நம்பிக்கை உண்டு...

  கல்யாண விபச்சார கலாசாரம்

  ராத்திரி நேரத்து கலாச்சாரம்//
  ராஜா நீங்கள் சொல்வதும் ஒருவிதத்தில் சரிதான். உங்கள் பதிவுகளை படித்தேன். இதை பற்றி நான் ஒரு பதிவிடுகிறேன். அது என்ன அன்பு? அதை பற்றி விளக்கினால் நாங்களும் தெரிந்துகொல்வெம் இல்லையா? :)
  மொத்தத்தில உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு :)

  பதிலளிநீக்கு
 8. //வலையகம் said... வணக்கம் நண்பரே

  உங்கள் பதிவினை இத்தளத்திலும் இணைக்கவும்...

  http://www.valaiyakam.com/

  ஓட்டுப்பட்டை இணைக்க:
  http://www.valaiyakam.com/page.php?page=about//
  அடுத்த பதிவை இணைத்து விடுகிறேன் நண்பரே

  பதிலளிநீக்கு
 9. //

  மாய உலகம் said...

  என்றோ போய் விட்டது....வெளிச்சத்தில் உள்ளது தெரிகிறது... இருட்டில் உள்ளது தெரியவில்லை அவ்வளவு தான்...//
  சரியாக சொன்னீர்கள் மாயாவி (இது ஓகே தானே ? :))
  எல்லாம் சீக்கிரம் வெளிச்சத்த்ரிக்கு வரப்போகிறது

  பதிலளிநீக்கு
 10. //

  சிவ. வே. கங்காதரன் said...

  வரலாறு முக்கியம் அமைச்சரே  பேசாம விட்டுர்றதே நல்லது.//
  //ஆனால் அது படிப்பினை தருவதற்கு பதிலாகத் தூண்டுகோலாக அமைவதே துரதிர்ஷ்டம்.//
  இது ஒருவாசகம்னாலும் திருவாசகம் சார். நன்றி

  பதிலளிநீக்கு
 11. //பிறகு ஆணும் பெண்ணும் எது எதனுடன் உடல் உறவு கொண்டால் என்ன தவறு என்பர்//விபச்சார கலாசாரம்

  பதிலளிநீக்கு
 12. ////

  மாலதி said...

  //பிறகு ஆணும் பெண்ணும் எது எதனுடன் உடல் உறவு கொண்டால் என்ன தவறு என்பர்//விபச்சார கலாசாரம்////

  தோழியே, நான் இங்கே கூற வந்தது மிருகங்கள் பற்றியது.

  பதிலளிநீக்கு
 13. //அது என்ன அன்பு? அதை பற்றி விளக்கினால் நாங்களும் தெரிந்துகொல்வெம் இல்லையா? :)//

  அட அதாங்க அம்பு..அம்பு..உங்களுக்கு தெரியாதா :))

  எங்கே காதை கொஞ்சம் குடுங்க ...உங்களுக்கு மட்டும் ரகசியமா சொல்லுறேன்.... :)

  பதிலளிநீக்கு
 14. இந்திய சமுதாயம் இருபத்தி நான்கு மணி நேரமும் செக்ஸ்சிலேயே முழ்கிக் கிடக்கிறது . அவர்களுக்கு செக்சைதவிர வேறெதுவும் தெரிவது இல்லை . செக்ஸ்சின் கொந்தளிப்பு அவர்களின் உள்ளே எப்பொழுதும் கொப்பளித்துக் கொண்டே இருக்கிறது . அவர்கள் ஆயிரக்கணக்கான வருடங்களாக செக்ஸ் ஐ அடக்கிக் கொண்டு இருக்கிறார்கள் .நீங்கள் எதாவது ஒரு விஷயத்தை அடக்கும் பொது அது இன்னும் வேகமாக கொப்பளிக்கும் .இந்த நிலைமைதான் இப்போது இத்தியர்களுக்கு நடந்துக் கொண்டு இருக்கிறது .என்னிடத்தி நானுறு ௦௦ புத்தகங்கள் இருக்கின்றன .அதில் வெறும் ஒரு சிறிய புத்தகம்தான் செக்சைப்பற்றி இருக்கிறது .ஆனால் அதன் மிது தான் நல்ல பக்கங்களில் இருந்தும் கண்டனம் எழுந்துள்ளது . செக்ஸ்சின் சக்தியை எவ்வாறு ஆன்மிக சக்தியாக மாற்றுவது என்பதை பற்றிதான் புத்தகத்தில் எழுதி இருக்கிறேன். அதுவும் செக்ஸ்ற்கு எதிராகத்தான் இருக்கிறது

  உங்களுடைய ஒவ்வொரு அணுவிலும் செக்ஸ் கலந்து உள்ளது செக்சை அடக்குவதால் நீங்கள் ஒருபோதும் ஒரு ஆன்மீக மனிதன் ஆகா முடியாது .ஆகையால் செக்சை அடக்க வேண்டாம் என்று அந்த புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ளது .இது இயற்கையின் அம்சமாகும் . செக்சை தியானம் வழியாக ஆன்மிக சக்தியாக மாற்றுங்கள் .என்பதுதான் தந்திரா வின் கொள்கையாகும் .நீங்கள் ஒருவர் மீது அன்பு கொள்ளும் போது நீங்கள் ஒருவித தியானம் செய்ய ஆரம்பித்து விடுகிறீர்கள் .எப்பொழுது செக்ஸ்சும் தியானமும் ஒன்று சேருகிறதோ அப்பொழுது கீழ் நோக்கி செல்லும் செக்ஸ் சக்தி தியானத்தின் முலம மேல் நோக்கி எழுகிறது .மெல்ல மெல்ல நீங்கள் உங்களின் உள்ளே எதோ ஒன்றை தேட அரம்பிக்கின்றிர்கள் .கடைசியில் ஞரனத்தை அடைந்து விடுகிறீர்கள்.

  ஓஷோ
  www.karurkirukkan.blogspot.com

  பதிலளிநீக்கு
 15. @தனி காட்டு ராஜா
  ஓ ராஜா ..நீங்கள் சொல்வது மன்மதன் அம்பா? இப்ப புரியுது....

  பதிலளிநீக்கு
 16. @தனி காட்டு ராஜா

  ஓஷோ பத்தி நான் கேள்வி பட்ட அளவுக்கு என்னால அவருடைய புத்தகங்களை படிக்க முடியல ... அவரு கொடுத்து வச்சது அவ்வளவுதானா :)) இல்லை நான் கொடுத்து வச்சது அவ்வளவுதானா எனபது தான் தெரியவில்லை :)
  தங்களுடைய விளக்கத்திற்கு நன்றி ராஜா....அந்த கரூர் கிறுக்கன் நீங்களா? :)

  பதிலளிநீக்கு
 17. //அந்த கரூர் கிறுக்கன் நீங்களா? :) //

  என்னை எங்க ஊருல( ஈரோடு) மட்டும் தான் கிறுக்கன் நு கூப்பிடுவாங்க... :)
  ஊர் ஊரா போய் கிறுக்கன் நு பேர் வாங்க இன்னும் நேரம் காலம் கூடி வர வில்லை :)


  ////ஓஷோ பத்தி நான் கேள்வி பட்ட அளவுக்கு என்னால அவருடைய புத்தகங்களை படிக்க முடியல ... அவரு கொடுத்து வச்சது அவ்வளவுதானா :)) இல்லை நான் கொடுத்து வச்சது அவ்வளவுதானா எனபது தான் தெரியவில்லை :)////

  முதலில் ஓஷோவை படியுங்கள்...ஓஷோ சொல்லாத விசயங்களே இல்லை....அட டா இதை எப்படி இவ்வளவு நாள் மிஸ் செய்தோம் என்று நிச்சயம் ஒரு நாள் வருத்தபடுவீர்கள்

  நான் பதிவுகள் எழுதாததற்கு காரணமே ஓஷோ தான்....
  ஓஷோ (போன்ற ஞானிகள்) சொன்னதை புரிந்து கொள்ளாத இந்த முட்டாள் கூட்டதுக்கு(சமுகம்) நாம் என்னத்தை பெரியதாக சொல்லி புரிய வைத்து விட முடியும் என்று தான் பதிவுகள் எழுதுவதில்லை :)

  பதிலளிநீக்கு
 18. @தனி காட்டு ராஜா
  //////
  //அந்த கரூர் கிறுக்கன் நீங்களா? :) //


  என்னை எங்க ஊருல( ஈரோடு) மட்டும் தான் கிறுக்கன் நு கூப்பிடுவாங்க... :)
  ஊர் ஊரா போய் கிறுக்கன் நு பேர் வாங்க இன்னும் நேரம் காலம் கூடி வர வில்லை :) //////

  சும்மா காமெடிக்கு தான் சொன்னேன் நீங்க தப்ப எடுத்துக்கலைனு நினைக்கிறேன் :)

  கண்டிப்பா ஓஷோ பத்தி படிக்க முயற்சி செய்கிறேன்...உங்கள் ஆதங்கம் அவர பத்தி படிக்கிறப்ப எனக்கு புரியும்னு நினைக்கிறேன்.... :)நன்றி ராஜா

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...