வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

புதன், 6 ஜூலை, 2011

மதுவிற்கும் தியானத்திற்கும் சம்பந்தம் உண்டா?

மது அருந்தியவர்கள் எங்கோ பறப்பதுபோல் உள்ளது என்று கூறுவதை  கேள்வி பட்டிருப்பீர்கள். அதுபோல் தியானம் செய்பவர்களும் உணர்ந்திருப்பார்கள். மதுவினால் அடையும் இந்த அளவான உற்சாகத்தை தான் ராஜ போதை என்பர்.

உண்மையில் தியானம் மூலம் அடையும் உற்சாக அமைதி  நிலையை ஓரளவிற்கு மதுவினாலும் அடையலாம்.  மதுவிற்கும் தியானத்திற்கும் என்ன வித்தியாசம் என்றால் அளவோடு இருக்கும் வரை தான் மது ஓரளவிற்கு உற்சாக அமைதி நிலையை தரும் அளவுக்கு மிஞ்சினால் அது தன்னிலை மறக்க செய்து கெடுத்து விடும்.

மேலும் மதுவானது உடலில் தீங்கையே வரவழைக்கும் ஆனால் தியானமோ நன்மையை வாரி வழங்கும்.

மது நரம்பு தளர்ச்சியை  வரவைக்கும், ஆண்மை குறைவை ஏற்படுத்தும், மூளையை  மழுங்கச்செய்யும் ஆனால் தியானமோ உடலையும் உள்ளத்தையும் மகிழ்ச்சியாக  வைத்திருக்க உதவும். அறிவை விசாலமாக்கும்.  ஆண்மையை அதிகப்படுத்தும் தியானங்களும் உண்டு.

ஆதலால் உடலை சீரழிக்கும் மதுவை கொஞ்சம் கொஞ்சமாக விட்டுவிட்டு(அல்லது அளவோடு வைத்துக்கொண்டு) தியானம் செய்யுங்கள். தியானத்திற்கு நீங்கள் அதிகம் செலவு செய்ய தேவை இல்லை, சைடிஷ் தேவை இல்லை. நினைத்த நேரத்திற்க்கெல்லாம் இன்பம் அனுபவிக்கலாம்.
 ஆதலால் தியானம் செய்வீர் திறம்பட வாழ்வீர். வாழ்க வளமுடன் நலமுடன்.

28 கருத்துகள்:

  1. மதுவிற்கும் தியானத்திற்கும் என்ன வித்தியாசம்//

    பூரி கட்டை அடி விழும்

    பதிலளிநீக்கு
  2. //

    Niroo said...

    மதுவிற்கும் தியானத்திற்கும் என்ன வித்தியாசம்//

    பூரி கட்டை அடி விழும்//
    உண்மைக்காக அடி வாங்குவதில் தப்பே இல்லை :)

    பதிலளிநீக்கு
  3. //
    Niroo said...

    மதுவிற்கும் தியானத்திற்கும் என்ன வித்தியாசம்//

    பூரி கட்டை அடி விழும்//
    உண்மைக்காக அடி வாங்குவதில் தப்பே இல்லை //

    :)உங்க வீட்லையும் தண்ணி அடிச்சா அடி விழுமா???? சொள்ளவேல்லை

    பதிலளிநீக்கு
  4. ////

    Niroo said...

    //
    Niroo said...

    மதுவிற்கும் தியானத்திற்கும் என்ன வித்தியாசம்//

    பூரி கட்டை அடி விழும்//
    உண்மைக்காக அடி வாங்குவதில் தப்பே இல்லை //

    :)உங்க வீட்லையும் தண்ணி அடிச்சா அடி விழுமா???? சொள்ளவேல்லை////
    பப்ளிக் பப்ளிக் :) தண்ணி அடிப்பதை விட்டுவிட்டு அனைவரும் தியானம் செய்ய வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் தான் இதை எழுதினேன்.(மைன்ட் வாய்ஸ்: மெசேஜ் சரியா ரீச் ஆகலையோ )

    பதிலளிநீக்கு
  5. மெசேஜ் சரியா ரீச் ஆகலையோ//

    எதுக்கும் டவூட்டு வீடுக்கு வெளிய வந்து ட்ரை பண்ணி பாருங்க டவர் கிடைக்கும் !!!

    பதிலளிநீக்கு
  6. நல்ல பதிவு :)

    ஓஷோ சொன்னது:

    மது மட்டும் அல்ல ..கஞ்சா மற்றும் சில பல போதை பொருட்களும் பறக்கும் உணர்வை (இருப்பு உணர்வு) தருகின்றன.
    கஞ்சாவை நம் இருப்பை உணர்ந்து கொள்ள உபயோகம் செய்யலாம்.

    ஆனால் அதற்கு முன் நம் உடலை அதனை ஏற்று கொள்ளும்படியும்( ஹட யோகம் மூலம்),அதற்கு அடிமை ஆகதாவரும் தயார் செய்ய வேண்டும்.

    பெரும்பாலும் அதற்கு அடிமை ஆகி விடும் வாய்ப்பு அதிகம் என்பதால் போதை பொருளை ஆன்ம பாதையில் தவிர்க்க வேண்டும்.

    பாம்பின் விஷம் கூட மருந்தாக பயன் படுகிறது. அது போல தான் சில போதை பொருட்களும்.

    //தண்ணி அடிப்பதை விட்டுவிட்டு அனைவரும் தியானம் செய்ய வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் தான் இதை எழுதினேன் //

    தண்ணி அடிக்கற எந்த குடிமகனு(ளு)ம் இதை கடை பிடிக்க மாட்டார்கள் எனபது தான் உண்மை :)

    பதிலளிநீக்கு
  7. a very good blog and i am very much happy to view the blog. Venkat. Visit my blog www.hellovenki.blogspot.com

    பதிலளிநீக்கு
  8. அருமையான பதிவு சில திருத்தங்கள் இருந்திருப்பின்
    இன்னும் சிறப்பு...

    //(அல்லது அளவோடு வைத்துக்கொண்டு) தியானம் செய்யுங்கள். //

    அதற்கும் இதற்கும் ஏணி வைத்தாலும் எட்டாது..

    ஒன்றைப் பெறவேண்டுமாயின்
    ஒன்றை இழக்க வேண்டும் ..

    எது உங்களுக்கு முக்கியம் என்பதை தீர்மானியுங்கள்..

    நல்ல பகிர்வு...
    வாழ்த்துக்கள்...

    நன்றி..

    பதிலளிநீக்கு
  9. ////

    Niroo said...

    மெசேஜ் சரியா ரீச் ஆகலையோ//

    எதுக்கும் டவூட்டு வீடுக்கு வெளிய வந்து ட்ரை பண்ணி பாருங்க டவர் கிடைக்கும் !!!////
    நிரூ உங்களுக்கு மெசேஜ் ரீச் ஆச்சா இல்லையானு தான் யோசிச்சேன்...ஆனா ரீச் ஆய்டிசுனு எனக்கு தெரிந்துவிட்டதே :)

    பதிலளிநீக்கு
  10. ////தனி காட்டு ராஜா said...

    நல்ல பதிவு :)

    ஓஷோ சொன்னது:

    மது மட்டும் அல்ல ..கஞ்சா மற்றும் சில பல போதை பொருட்களும் பறக்கும் உணர்வை (இருப்பு உணர்வு) தருகின்றன.
    கஞ்சாவை நம் இருப்பை உணர்ந்து கொள்ள உபயோகம் செய்யலாம்.

    ஆனால் அதற்கு முன் நம் உடலை அதனை ஏற்று கொள்ளும்படியும்( ஹட யோகம் மூலம்),அதற்கு அடிமை ஆகதாவரும் தயார் செய்ய வேண்டும்.

    பெரும்பாலும் அதற்கு அடிமை ஆகி விடும் வாய்ப்பு அதிகம் என்பதால் போதை பொருளை ஆன்ம பாதையில் தவிர்க்க வேண்டும்.

    பாம்பின் விஷம் கூட மருந்தாக பயன் படுகிறது. அது போல தான் சில போதை பொருட்களும்.////


    ஓஷோ சொன்னாதை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி ராஜா. உண்மையில் எல்லாமே மருந்துதான் அளவுக்கு மீறும் போது தான் நச்சாகிறது. ஆனால் என்ன கொடுமைஎனில் எது அந்த சரியான அளவு என்பதை கண்டுபிடிப்பது தான். அது கொஞ்சம் சிரமம் தான்.
    ////
    //தண்ணி அடிப்பதை விட்டுவிட்டு அனைவரும் தியானம் செய்ய வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் தான் இதை எழுதினேன் //

    தண்ணி அடிக்கற எந்த குடிமகனு(ளு)ம் இதை கடை பிடிக்க மாட்டார்கள் எனபது தான் உண்மை :)////
    ராஜா எதுவும் நிரந்தரமில்லை சரிதானே :)

    பதிலளிநீக்கு
  11. /////

    Niroo said...

    மெசேஜ் சரியா ரீச் ஆகலையோ//

    எதுக்கும் டவூட்டு வீடுக்கு வெளிய வந்து ட்ரை பண்ணி பாருங்க டவர் கிடைக்கும் !!!////
    நிரூ உங்களுக்கு மெசேஜ் ரீச் ஆச்சா இல்லையானு தான் யோசிச்சேன்...ஆனா ரீச் ஆய்டிசுனு எனக்கு தெரிந்துவிட்டதே :)/////

    ஐயா ஜாலி

    "அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு"

    பதிலளிநீக்கு
  12. ////Venkat said...

    a very good blog and i am very much happy to view the blog. Venkat. Visit my blog www.hellovenki.blogspot.com
    ////
    Thanks venkat. I am also happy that you have read this post and taken time to comment about it.

    பதிலளிநீக்கு
  13. ////

    சிவ.சி.மா. ஜானகிராமன் said...

    அருமையான பதிவு சில திருத்தங்கள் இருந்திருப்பின்
    இன்னும் சிறப்பு...

    //(அல்லது அளவோடு வைத்துக்கொண்டு) தியானம் செய்யுங்கள். //

    அதற்கும் இதற்கும் ஏணி வைத்தாலும் எட்டாது..

    ஒன்றைப் பெறவேண்டுமாயின்
    ஒன்றை இழக்க வேண்டும் ..

    எது உங்களுக்கு முக்கியம் என்பதை தீர்மானியுங்கள்..

    நல்ல பகிர்வு...
    வாழ்த்துக்கள்...

    நன்றி..////
    சிவனடியாரே,
    பிழை இருப்பின் பொறுத்தருள்க. என் எண்ணம் என்னவெனில் தியானத்தின் இன்பத்தை சற்றே அவர்கள் அறிந்துவிட்டாலும் மதுவை விட்டுவிட்டு தியானம் பக்கம் வருவார்கள் என்பதுதான். அதனால தான் சும்மா அளவோடு என்று சொல்வது. உண்மையில் தொடர்ந்து தியானம் செய்பவன் அந்த பக்கம் போக மாட்டன் எனபதே என் நினைப்பு. நன்றி

    பதிலளிநீக்கு
  14. நன்றி புரட்சியாளரே,

    சோதிட கருத்தே சொல்லித்தர மாட்டேன்றீகளே ?

    பதிலளிநீக்கு
  15. /////

    Niroo said...

    /////

    Niroo said...

    மெசேஜ் சரியா ரீச் ஆகலையோ//

    எதுக்கும் டவூட்டு வீடுக்கு வெளிய வந்து ட்ரை பண்ணி பாருங்க டவர் கிடைக்கும் !!!////
    நிரூ உங்களுக்கு மெசேஜ் ரீச் ஆச்சா இல்லையானு தான் யோசிச்சேன்...ஆனா ரீச் ஆய்டிசுனு எனக்கு தெரிந்துவிட்டதே :)/////

    ஐயா ஜாலி

    "அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு"/////

    நிரூ "அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு" இந்த ஒரு வாசகமே திருவாசகம் இதை கடை பிடித்தால் ஒரு பிரச்னையும் இல்லை. :) நன்றி.

    பதிலளிநீக்கு
  16. //

    சிவ.சி.மா. ஜானகிராமன் said...

    நன்றி புரட்சியாளரே,

    சோதிட கருத்தே சொல்லித்தர மாட்டேன்றீகளே ?//
    அடியாரே, நீங்கள் புதிய கருத்தை கேட்கிறீர்களா அல்லது பழைய கேள்விகளுக்கு விடையையா?
    பழைய கேள்விகளுக்கு விடையை பதிவாக தர நினைத்தேன் என்னமோ தெரியல அத செய்யவே முடியல.
    சய்யத் கூட ராகு கேது பெயர்ச்சி பத்தி ஒரு பதிவு போட சொன்னாரு...அதுவும் முடியல. உங்கள் இருவரிடமும் இதன் மூலம் இதுவரை பதில் வழங்காததற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

    வண்ணத்தை பொறுத்த வரை யாருடைய திசை புத்தி நடக்குத்தோ அந்த வண்ணத்தை பயன்படுத்தலாம். அதில் தவறில்லை. என்ன.... திசை புத்தி மேல் கூடுதல் கவனம் செலுத்தனும். உங்களின் யோகாதிபதியின் வண்ணத்தை அதிகமாக பயன்படுத்துங்கள் குறிப்பாக அவர்களுக்குரிய நாள் மற்றும் நட்சத்திரங்களில் எந்த திசை புத்தி வந்தாலும்.
    வீடு பற்றிய கேள்விக்கான விடையும் இந்த திசை புத்தி வச்சு வொர்க் அவுட் பண்ணலாம். முயற்சி செய்யுங்க. பதிவா போட மயற்சி செய்கிறேன் . நன்றி அடியாரே.

    பதிலளிநீக்கு
  17. அருமையான பதிவு/...
    உங்கள் பதிவுகள் அனைத்தும் சிறப்பாக இருக்கு,,
    தொடர வாழ்த்துக்கள்,,,,

    உங்கள் கருத்தை எனது வலைப்பூவும் எதிர்பார்க்கிறது சகோ....
    http://sempakam.blogspot.com/

    பதிலளிநீக்கு
  18. தியானத்தை இப்படி யாரும் மதுவுடன் கம்பேர் பண்ணி சொன்னதில்லே.....
    நாலு பேருக்கு நல்லது நடக்குன்னா எதுவும் தப்பில்ல...

    பதிலளிநீக்கு
  19. //

    யோஹன்னா யாழினி said...

    நல்ல பதிவு//
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  20. //

    vidivelli said...

    அருமையான பதிவு/...
    உங்கள் பதிவுகள் அனைத்தும் சிறப்பாக இருக்கு,,
    தொடர வாழ்த்துக்கள்,,,,

    உங்கள் கருத்தை எனது வலைப்பூவும் எதிர்பார்க்கிறது சகோ....
    http://sempakam.blogspot.com///
    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.....

    பதிலளிநீக்கு
  21. //

    மாய உலகம் said...

    தியானத்தை இப்படி யாரும் மதுவுடன் கம்பேர் பண்ணி சொன்னதில்லே.....
    நாலு பேருக்கு நல்லது நடக்குன்னா எதுவும் தப்பில்ல...//
    இந்த சிந்தனையின் வயது இரண்டரை ஆண்டுகள்...இப்பொழுதான் எழுத்துருவம் பெற்றது.
    இந்த பின்வரும் பதிவும் உங்களுக்கு பிடிக்கலாம் என நினைக்கின்றேன்.
    தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி
    http://kelviyumnaaneypathilumnaaney.blogspot.com/2011/03/blog-post.html

    பதிலளிநீக்கு
  22. நண்பர் R.Puratchimani அவர்களுக்கு

    நான் முறையாக யோகசனமும் தியானமும் பெரியவர் (வேங்கட் ராமன் ஐயர்) அவர்களிடம் கற்றுக் கொண்டவன் என்ற முறையில். அவர் எனக்கு சொல்லி தந்தது மது அருந்திவிட்டு யோகவும் செய்யக் கூடாது தியானமும் செய்யக் கூடாது.என்பது தான்

    சோ அதனால் கொஞ்சமாக குடியுங்கள் என்று சொல்வதற்கு எந்த முகந்திரமும் இல்லை அது உங்களின் சொந்த கருத்தாக இருக்கலாம் அல்லது எப்படியாவது மது அருந்துகிறவர்களை திருத்தி விட வேண்டும் என்ற ஆர்வத்தில் வந்து விழுந்த வார்த்தைகளாக இருக்கலாம்.

    உங்களுடைய முயற்சிக்கு நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
  23. //Maheswaran.M said...

    nice msg,, keep it up...//
    Thanks for your appreciation

    பதிலளிநீக்கு
  24. //

    ...αηαη∂.... said...

    நல்ல கருத்து...//
    நன்றி தோழரே

    பதிலளிநீக்கு
  25. //

    ஹைதர் அலி said...

    நண்பர் R.Puratchimani அவர்களுக்கு

    நான் முறையாக யோகசனமும் தியானமும் பெரியவர் (வேங்கட் ராமன் ஐயர்) அவர்களிடம் கற்றுக் கொண்டவன் என்ற முறையில். அவர் எனக்கு சொல்லி தந்தது மது அருந்திவிட்டு யோகவும் செய்யக் கூடாது தியானமும் செய்யக் கூடாது.என்பது தான்

    சோ அதனால் கொஞ்சமாக குடியுங்கள் என்று சொல்வதற்கு எந்த முகந்திரமும் இல்லை அது உங்களின் சொந்த கருத்தாக இருக்கலாம் அல்லது எப்படியாவது மது அருந்துகிறவர்களை திருத்தி விட வேண்டும் என்ற ஆர்வத்தில் வந்து விழுந்த வார்த்தைகளாக இருக்கலாம்.

    உங்களுடைய முயற்சிக்கு நன்றி நண்பரே//

    வணக்கம் தோழர் ஹைதர் அலி அவர்களே,
    //மது அருந்திவிட்டு யோகவும் செய்யக் கூடாது தியானமும் செய்யக் கூடாது.//
    இது நூற்றுக்கு நூறு உண்மை.
    // சோ அதனால் கொஞ்சமாக குடியுங்கள் என்று சொல்வதற்கு எந்த முகந்திரமும் இல்லை //
    நான் மது அருந்திவிட்டு தியானம் செய்ய சொல்லவில்லை. மது அருந்துபவர்களும் தியானம் செய்யாலாம் என்று தான் சொல்கிறேன். அப்படி தியானம் செய்யும்பொழுது ஒரு நல்ல மாற்றம் ஏற்ப்பட வாய்ப்புள்ளது என்பதை தாங்கள் அறிவீர்கள் என நினைக்கின்றேன்.
    நீங்கள் சொன்னது போல் இது ஆர்வத்தில் வந்து விழும் வார்த்தை தான். தங்களுடைய கருத்துக்கு மிக்க நன்றி தோழரே.

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...