வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

புதன், 27 ஜூலை, 2011

சிவனுக்கும் இயேசுவின் சிலுவைக்கும் என்ன சம்பந்தம்?

கிருத்துவர்களை ஏன் நீங்கள் சிலுவையை வழிபடுகிறீர்கள் என்று கேட்டால். ஏசு  மக்களின் பாவத்தை கழுவுவதற்காக சிலுவையை ஏற்றுக்கொண்டார். சிலுவையில் அவர் ரத்தம் படிந்ததால் அது புனிதமாயிற்று என்று கூறுவார்கள். (ஒரு சிலர்.) இந்த காரணம் ஒரு விதத்தில் சரியென்றாலும் எனக்கு இதையும் தாண்டி இதில் ஒரு சூட்சுமம் இருப்பதாகவே உணர்கிறேன்.

கிருத்துவர்கள் ஞான ஸ்நானம் எடுக்கும் பொழுதும், பிரத்யேக வழிபாட்டிற்கு  பிறகும் நெற்றியில்  இந்த சிலுவை குறியை பாதிரியார்கள்  மக்களுக்கு இடுவார்கள். அவர் சிலுவையில் அறையப்பட்டார் சரி அதற்க்கு ஏன் நெற்றியில் அந்த சிலுவை குறியை இட வேண்டும்?

 இங்கு தான் சூட்சுமமே உள்ளது. இதை இப்பொழுது அவர்கள் ஒரு சம்பிரதாயமாக உபயோகித்தாலும் இதன் உண்மையான காரணம் சிவனுக்கு மூன்றாவது கண் எனப்படும் நெற்றிக் கண்ணை திறப்பதற்காகவே   இதை செய்கிறார்கள். நெற்றிக்கண்ணின் மூலம் தான் ஒருவன் உண்மயான ஞானத்தை, இறை தரிசனத்தை பெற முடியும்.


ஞான ஸ்நானம் என்பதே ஒருவன்  ஞான பாதைக்கு தயாராகி விட்டான் என்பதை உலகிற்கு உணர்த்த தான். இதில் வேதனை என்னவென்றால் இது ஒரு சம்பிரதாயமாகவே இருக்கிறதே தவிர அவர்களை பாதிரியார்கள் அடுத்த கட்டத்திற்கு  கொண்டு செல்வதில்லை.அதற்க்கு காரணம் அவர்களின் அறியாமை தான்.  அடுத்த கட்டம் எனபது தியானம் செய்வதாகும். இந்த தியானம் யோகம் இவற்றை இந்துக்களுடையது என்று சொல்லி பாதிரியார்கள்  செய்ய அனுமதிப்பதில்லை.

நெற்றிக்கண் திறக்கும்  பொழுதோ அல்லது எப்பொழது மூச்சானது  மூக்கு வழியாக வராமல் நின்று போகிறதோ  அப்பொழுது அந்த உச்ச கட்டடத்தில்  இந்த சிலுவையை நெற்றியில்   காண முடியும்.

 எவன் ஒருவனுக்கு மூக்குக்கு கீழே மூசச்சு வருவதில்லையோ அவனே உண்மையான தீர்க்க தரிசி என்று ஏசு கூறியிருக்கிறார். எப்பொழுது ஒருவனுக்கு மூச்சுக்காற்று  மூக்கு வழியாக  வராது எனில் அது எப்பொழது சுழுமுனை வழியாக செயல்படுகிறதோ அப்பொழுது.

ஏசு ஒரு யோகி என்று சொல்வதற்கு இந்த ஒரு சான்று மட்டுமே போதுமானது.

சிவனுக்குள்ளது  போல் நெற்றிக்கண் திறப்பதற்காகவே நெற்றியில் சிலுவை இடப்படுகிறது எனபதே என் கருத்து.

17 கருத்துகள்:

 1. //இங்கு தான் சூட்சுமமே உள்ளது.//

  அட பாருங்களே ..சூட்சமம் அங்கே எப்படி போச்சு :))

  //எப்பொழுது ஒருவனுக்கு மூச்சுக்காற்று மூக்கு வழியாக வராது எனில் அது எப்பொழது சுழுமுனை வழியாக செயல்படுகிறதோ அப்பொழுது. //

  பாயிண்ட சரியாய் புடிச்சிங்க(நான் சுழி முனையை சொன்னேன்) :)

  -இப்படிக்கு
  தங்கள் உண்மையுள்ள
  X தனி காட்டு ராஜா

  பதிலளிநீக்கு
 2. ////

  கிருஷ்ணா said...

  //இங்கு தான் சூட்சுமமே உள்ளது.//

  அட பாருங்களே ..சூட்சமம் அங்கே எப்படி போச்சு :))

  //எப்பொழுது ஒருவனுக்கு மூச்சுக்காற்று மூக்கு வழியாக வராது எனில் அது எப்பொழது சுழுமுனை வழியாக செயல்படுகிறதோ அப்பொழுது. //

  பாயிண்ட சரியாய் புடிச்சிங்க(நான் சுழி முனையை சொன்னேன்) :)

  -இப்படிக்கு
  தங்கள் உண்மையுள்ள
  X தனி காட்டு ராஜா////
  என்ன ராஜா கிருஷ்ணர் அவதாரம் எடுத்துட்டாரா..இனி ஈரோடு பொண்ணுங்களுக்கு ரெட் அலெர்ட் கொடுத்தே ஆகணும் :))
  சுழுமுனையை ஒத்துகிட்டீங்க அப்ப சிலுவையை ஒத்துகிலையா? :)

  பதிலளிநீக்கு
 3. //சுழுமுனையை ஒத்துகிட்டீங்க அப்ப சிலுவையை ஒத்துகிலையா? :) //

  கிருத்துவர்கள் ஞான ஸ்நானம் பற்றி எனக்கு எதுவும் தெரியாதுங்க மணி ...நீங்க சொன்னா சரியாக தான் இருக்கும் என்று ஓர் நம்பிக்கை எனக்கு உள்ளது :)

  //என்ன ராஜா கிருஷ்ணர் அவதாரம் எடுத்துட்டாரா..இனி ஈரோடு பொண்ணுங்களுக்கு ரெட் அலெர்ட் கொடுத்தே ஆகணும் :)) //

  ம்...சத்திய சோதனை :)

  பதிலளிநீக்கு
 4. கிறிஸ்துவம் வந்த பிறகே சைவம் வந்ததாக ஒரு கருத்து உண்டு. ஆனால் இரண்டு மதத்திற்க்கும் ஒற்றுமைகள் இருப்பதாகவே தோன்றுகிறது. உதாரணத்திற்கு கிருஸ்துவ திரித்துவம் இந்து மதத்தில் சிவன் பிரம்மா விஷ்ணு என்று மாறியதை சொல்லலாம்.

  பதிலளிநீக்கு
 5. //கிருத்துவர்கள் ஞான ஸ்நானம் பற்றி எனக்கு எதுவும் தெரியாதுங்க மணி ...நீங்க சொன்னா சரியாக தான் இருக்கும் என்று ஓர் நம்பிக்கை எனக்கு உள்ளது :)//
  யானைக்கும் அடி சறுக்கும். எப்பொருள் எனத் தொடங்கும் குறளை எப்பொழுதும் மனதில் வைக :)

  //ம்...சத்திய சோதனை :)//
  ஹா ஹா.....ஈரோட்டுக்கு தானே சொல்றீங்க :))

  பதிலளிநீக்கு
 6. //

  karlmarx said...

  கிறிஸ்துவம் வந்த பிறகே சைவம் வந்ததாக ஒரு கருத்து உண்டு. ஆனால் இரண்டு மதத்திற்க்கும் ஒற்றுமைகள் இருப்பதாகவே தோன்றுகிறது. உதாரணத்திற்கு கிருஸ்துவ திரித்துவம் இந்து மதத்தில் சிவன் பிரம்மா விஷ்ணு என்று மாறியதை சொல்லலாம்.//

  காரல் மர்க்ஸ்...எனக்கு இது புதிய செய்தி. இருப்பினும் அந்த கருத்து தவறு என்று எனக்கு தோன்றுகிறது. ஏசு தான் இந்தியாவில் வந்து கல்வி கற்றார். இரண்டு மதத்திற்கும் ஒற்றுமைகள் உண்டு அதற்க்கு காரணம் அவர் இந்தியாவிலிருந்து போனார். உங்கள் கருத்து?

  பதிலளிநீக்கு
 7. //ஹா ஹா.....ஈரோட்டுக்கு தானே சொல்றீங்க :)) //

  Be careful[ ம்...என்னை சொன்னேன் :)) ]

  பதிலளிநீக்கு
 8. ////கிருஷ்ணா said...

  //ஹா ஹா.....ஈரோட்டுக்கு தானே சொல்றீங்க :)) //

  Be careful[ ம்...என்னை சொன்னேன் :)) ]////

  :))

  பதிலளிநீக்கு
 9. நான் கிருஸ்துவத்திளிருந்து சைவம் வந்ததாக கூறவில்லை. அப்படி ஒரு கருத்து உலவுவதாகவே சொன்னேன். மேலும் அது உண்மையாக இருக்க வாய்ப்பில்லை. அதேபோல்தான் ஏசு இந்தியாவுக்கு வந்தார் என்பதும் இங்குள்ள வேத நூல்களை கற்றார் என்பதும் ஆதாரமில்லாத ஒரு அனுமானம். அதில் சிறிதும் உண்மை கிடையாது. இந்த கருத்து ஒரு முஸ்லிம் அறிஞரால் பத்தொன்பதாம் நூற்றாண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட பொய்.ஏனென்றால் அவர் தான்தான் கடைசி நபி என்றும் ஏசு இறந்து விட்டதாகவும் அவர் கல்லறை இந்தியாவில் காஷ்மீரில் இருப்பதாகவும் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தார். இஸ்லாமிய மத கோட்பாடுகளின் படி ஏசு இன்னும் இறக்கவில்லை அவர் மீண்டும் உலகத்திற்கு வருவார் என்றும் அவர் வந்து எல்லோரையும் முஸ்லிமாக மாற்றுவர் என்றும் ஒரு நம்பிக்கை உண்டு. எனவேதான் இந்த கதை உண்டானது.இதன்படி ஏசு இறந்து போய் விட்டதால் நான்தான் அந்த நபி என்று அந்த இஸ்லாமிய மத போதகர் சொல்ல ஆரம்பித்து அதை ஒரு கூட்டம் நம்பிக்கொண்டு இருக்கிறது. ஆனால் பெரும்பான்மையான இஸ்லாமியர்கள் இதை நம்புவது கிடையாது. எப்படி சைவம் கிருஸ்துவத்திளிருந்து வந்திருக்க முடியாதோ அப்படியே ஏசுவும் இந்தியாவுக்கு வந்து இந்த கதைகளை எடுத்துக்கொண்டு போயிருக்க முடியாது. நீங்கள் இதை எதோ நடந்த உண்மை போல சொல்வது தவறு. ஆதாரம் இல்லாத யூகத்தின் அடிப்படையில் விளைந்த பொய் இப்போது உங்களை பற்றிக்கொள்ள ஆரம்பித்திருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Please Read சமயங்களும் வரலாறும்

   http://vazhipokkanpayanangal.blogspot.in/2013/03/blog-post.html

   நீக்கு
 10. கார்ல்மார்க்ஸ், நான் உங்களை குறை கூறுவது போல் என்னுடைய பின்னூட்டம் இருந்திருந்தால் முதலில் மன்னிக்கவும்.
  //நான் கிருஸ்துவத்திளிருந்து சைவம் வந்ததாக கூறவில்லை. அப்படி ஒரு கருத்து உலவுவதாகவே சொன்னேன். மேலும் அது உண்மையாக இருக்க வாய்ப்பில்லை. .//
  நீங்கள் எப்படி இங்கு அது உண்மையாக இருக்க வாய்ப்பில்லை என்று கூரியுள்ளீர்களோ அப்படியேதான் நான் அவர் இங்கே கல்வி கற்று சென்றார் என்று குறிப்பிட்டுள்ளேன். நீங்கள் கூறியது போல் "வாய்ப்பு" "அனுமானம்" என்ற சொற்களை பயன்படுத்தாது என்னுடைய தவறாக இருக்கலாம்.
  //அதேபோல்தான் ஏசு இந்தியாவுக்கு வந்தார் என்பதும் இங்குள்ள வேத நூல்களை கற்றார் என்பதும் ஆதாரமில்லாத ஒரு அனுமானம். அதில் சிறிதும் உண்மை கிடையாது.//
  இந்த இடத்தில் நீங்கள் சிறிதும் உண்மை கிடையாது என்பதை எதை வைத்து கூறுகிறீர்கள்?
  இதற்க்கான காரணத்தை தங்களால் எடுத்துரைக்க முடியுமா?
  ஏசு ஒரு யோகியகத்தான் இருக்க முடியும் அல்லது இங்கே கல்வி கற்றிருக்க முடியும் என்பதை இதுவரை யாரும் சொல்லாத ஆதாரங்களை என்னால் சொல்ல முடியும். (ஏற்க்கனவே அதை என்னுடைய பதிவுகளில், சொல்லியுள்ளேன் என்பது வேறு விஷயம். )இவைகள் நீங்கள் அனுமானம் என்பதை உண்மையோ என நிரூபிக்க மேலும் ஆதாரத்தை சேர்க்கும். இதை பற்றி ஒரு பதிவு விரைவில் வரும்.

  இருப்பினும், உண்மையில் இரண்டாயிரம் வருடத்திற்கு முன்பு நடந்ததை நாம் உண்மை என்றோ பொய் என்றோ சொல்லமுடியாது எல்லாமே நம்பிக்கைதான். யார் எதை கூறினாலும் "எப்பொருள்" எனத் தொடங்கும் குறள் படி சீர் தூக்கி பார்க்க வேண்டும் எனபதே என் கொள்கை. அது கீதையானாலும் சரி, குரானாலும் சரி, பைபிள் ஆனாலும் சரி.
  அதைத்தான் நான் செய்கிறேன்.
  //இப்போது உங்களை பற்றிக்கொள்ள ஆரம்பித்திருக்கிறது. //
  எனக்கே என்னை பற்றி அவ்வளவாக தெரியாது. உங்களுக்கு தெரிந்ததை சொன்னால் நானும் தெரிந்து கொள்வேன். :)
  என்னுடைய கருத்துக்களை உங்களை குறை சொல்வதாக எண்ணவேண்டாம். இது ஒரு ஆரோக்கியமான கலந்துரையாடலாக இருக்க வேண்டும் எனபதே என் ஆசை. தொடர்ந்து கலந்தைவோம் :) நன்றி

  பதிலளிநீக்கு
 11. நான் மதங்களில் ஆராய்ச்சி செய்வபன் என்பதால் என்னால் சில தகவல்களை குறிப்பிட்டு சொல்ல முடியும்.ஏசுவை பற்றி அவர் மறைந்த காலம் முதல் கணக்கில் இல்லாத கட்டு கதைகளும் புனையப்பட்ட கருத்துக்களும் உலகில் உலவி வருகின்றன. ஏசு மனிதன், கடவுள் ,கடவுளின் மகன், ஒரு அரூபம், பயித்தியம் , மந்திரவாதி, தீர்க்கதரிசி, அப்படி ஒருவர் இல்லவே இல்லை என்றும் பல கருத்துக்கள் உள்ளன.எனவே ஏசு இந்தியாவுக்கு வந்தார் இங்கே கல்வி கற்றார் இந்தப்பக்கத்துக்கு புராணங்களை இஸ்ரேலுக்கு கொண்டு சென்றார் என்பதெல்லாம் பத்தோடு பதினொன்று.மேலும் அவர் வாழ்ந்த காலத்தில் பவுத்த துறவிகள் யாரும் இஸ்ரேல வரை செல்லவில்லை என்பது வரலாற்று உண்மை.இந்தியாவில் உள்ளவர்கள் தாடி வாய்த்த மந்திரவாதி தோற்றம் உள்ளவர்களை யோகி என்று விளிப்பது போல ஏசுவை யோகி என்று சொல்வது இந்தியர்களின் வசதிக்கு வேண்டுமானால் பொருந்தலாம் ஆனால் ஏசுவை யோகி என்ற சொல்லுக்குள் அடைத்துவிட முடியாது.இன்னும் சொல்லப்போனால் அவரை பற்றிய ஏகப்பட்ட குழப்பங்கலால்தான் இஸ்லாம் என்கிற புதிய மதம் அரேபியாவில் வேரூன்ற ஆரம்பித்தது.இன்னும்கூட திருத்துவம் என்றும் ஒருத்துவம் என்றும் மூவரில் ஒருவர் அல்லது அவரே ஒருவர் என்றும் பல குழப்பங்கள் கிருஸ்த்துவ உலகில்.இத்தனை முற்றுப்பெறாத வாதங்களுக்கு மத்தியில் ஒரு நூற்றாண்டாக திடீரென ஏசு இந்தியாவுக்கு வந்தார் என்று ஒரு உப குழப்பம் வேறு. பத்து வருடங்களாக Davinci code என்கிற புதினம் வந்ததிலிருந்து ஏசு திருமணம் செய்தவர் என்று ஒரு கூக்குரல் ஒலிக்க ஆரம்பித்துள்ளது.இன்னும் ஐம்பது வருடங்கள் போனால் இதை உண்மை என்று நம்பி சிலர் இதே இனைய தளத்தில் பதிவுகள் எழுதலாம்.

  பதிலளிநீக்கு
 12. @கார்ல்மார்க்ஸ்

  நீங்கள் மதங்களை பற்றி ஆராய்ச்சி செய்பவர் என்று அறிவதில் மகிழ்ச்சி. ஆதலால் இந்த கேள்வியை உங்களிடம் கேட்கிறேன் அவர் பன்னிரண்டு வயது முதல் முப்பது வரை எங்கிருந்தார்?. என்ன செய்தார்? என்று தாங்கள் அறிந்ததை கூற இயலுமா?.
  இந்த நேரத்தில் தான் அவர் இந்தியாவில் பயணம் செய்தார், அவருக்கு புத்த மதத்தின் தாக்கம் ஏற்ப்பட்டது என்று கூறுகிறார்கள்.

  இந்த நூற்றாண்டில் தான் இந்த சர்ச்சை வந்தது அதற்க்கு காரணம் என்னவா இருக்கும் தெரியுமா. முன்பு எப்பொழுதும் இல்லாத அளவுக்கு தகவல் பரிமாற்றம் அதிகமாக நடப்பது ஒரு காரணமாக இருக்கும். நூற்றாண்டுகளை காரணம் காட்டி நாம் அதை பொய் என்று சொல்வது முறை அல்ல. ஏன் எனில் பல்வேறு தொழில் நுட்பங்கள் இந்த நூற்றாண்டில் தான் வளர்ச்சி பெற்றுள்ளது. ஒருவேளை மனிதன் முன்பு இருந்ததைவிட புறப்பொருளில் அதிக கவனம் செலுத்தியதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

  பதிலளிநீக்கு
 13. ஏசுவை பற்றி பொதுவாக எல்லோரும் கேட்கும் கேள்வியைத்தான் நீங்களும் கேட்க்கிறீர்கள்.இது ஒரு யூகத்தின் அடிப்படையில் புதிய உண்மை ஒன்றை வெளியே கொண்டு வருவதாக எண்ணிக்கொண்டு கற்பனையை விரிவுபடுத்தும் முயற்சியே.ஏசு பனிரெண்டு வயது முதல் முப்பது வயது வரை என்ன செய்தார் என்று பைபிளில் இல்லை என்பது உண்மையே. ஏன் அதற்க்கு முன்பு வரை கூட குறிப்பிட்டு சொல்லும்படி அவரை பற்றி ஒன்றும் இல்லை.ஒரே ஒரு குறிப்பில் அவர் பல வேத பண்டிதர்களோடு ஒரு சிறுவனாக இருக்கும் போது பலத்த விவாதத்தில் ஈடுபட்டு இருப்பதை பைபிளில் படிக்கலாம்.அதன் பின்...உலகத்தின் பல தேசத்து மக்கள் அவர் தங்கள் நாட்டுக்கு வந்ததாக சொல்வதைப்பற்றி நீங்கள் கேள்விபட்டிருக்கிறீர்களா?சிவப்பிந்தியர்கள் ஒரு வெள்ளை மனிதன் தாடியுடன் பார்க்க தேவன் போல இருந்ததாக கூறுவதோடு அவர் மீண்டும் வருவதாக நம்பினார்கள்.பிரான்ஸ்,ஸ்பெயின் மெக்சிகோ போன்ற பல நாடுகளில் ஒரு மர்ம மனிதனை பற்றிய கருத்து உலவி வருகிறது.இது ஏசுவின் பனிரெண்டு முதல் முப்பது வயது வரை உள்ள காலகட்டத்தோடு தொடர்புடையதாக இருப்பதால் ஏசு இத்தனை நாடுகளுக்கும் பயணம் செய்திருப்பார் என்று கருதுவது ஆதாரமில்லாத ஒரு வாதம்.ஏசுவின் போதனைகள் அவருடைய முப்பது வயதிலிருந்து துவங்குவதால் அதன் முன் அவர் குறிப்பிட்டு சொல்லும் படி எதுவும் செய்யாமல் மற்றவர்களை போல ஒரு சாதாரண மனிதனாக இருந்திருப்பார் என்பதே நம்பக்கூடிய நடந்திருக்க கூடிய உண்மை. மற்றதெல்லாம் கற்பனை சிறகுகளில் மனித மனம் செய்யும் மாய பயணமே.

  பதிலளிநீக்கு
 14. @கார்ல்மார்க்ஸ்
  தாங்கள் கூறுவதும் சரியே. உண்மை அந்த இறைவனுக்கு மட்டுமே தெரியும்.. தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி

  பதிலளிநீக்கு
 15. ஆங்கில இணைய தளங்களில் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கைக்கும், பகவான் கிருஷ்ணனின் வாழ்க்கைக்கும் இடையே இருக்கும் ஒற்றுமைகளை மிகவும் அருமையாக தொகுத்து தந்துள்ளார்கள்.

  அனைவருமே இறைவனின் பிள்ளைகள் என்று நம்முடைய மதம் கூறிக்கொண்டிருப்பதையே கிறிஸ்துவமும் கூறுகிறது.

  பதிலளிநீக்கு
 16. ஆனால் உங்களில் பார்வை மிகவும் வித்தியாசமாக சைவத்தினையும், கிறிஸ்துவத்தினையும் ஒப்பிட்டு உள்ளது வியப்பாக இருக்கிறது. பாராட்டுகள். வேற்றுமையில் ஒற்றுமை என்பதைப் போல சமயங்களின் இணைப்புகளை வரவேற்போம்.

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...