வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

திங்கள், 1 ஆகஸ்ட், 2011

இந்து, இஸ்லாம் இரண்டுக்கும் உள்ள மிகப்பெரிய ஒற்றுமை என்ன தெரியுமா?

இஸ்லாமுக்கும் இந்து மதம் என்று அழைக்கபடுகின்ற மதத்திற்கும் இப்படி ஒரு  மிகப்பெரிய  ஒற்றுமை இருக்கும் என்று யாரும் கனவிலும் நினைத்து பார்த்திருக்க முடியாது என்று நினைக்கின்றேன்.

இது  எத்தனை பேருக்கு தெரியும் என்பதும்  எனக்கு  தெரியாது. இந்த ஒற்றுமை எதை காட்டுகிறது என்றால்,உலகில் தற்போதுள்ள  அனைத்து மதங்களுக்கும் மூலம் பண்டைய இந்தியாவாகத் தான் இருக்கும் என்ற என் என்னத்தை உறுதி செய்வது போலவே உள்ளது.  இந்திய தத்துவங்களின் தாக்கத்திலிருந்து எந்த ஒரு மதமும் தப்பியதாக எனக்கு  தெரியவில்லை.

சரி இசுலாமுக்கும் இந்திய மதத்திற்கும் அப்படி என்ன ஒற்றுமை இருக்கின்றது?

என்னைப்பொருத்த வரை இசுலாமின் ஆணி வேறே இந்து மதம் தான்.
இசுலாமியர்கள் ஐந்து வேலை தொழுகை செய்வார்கள் என்பது பலருக்கும் தெரியும் என நினைக்கின்றேன். இந்த ஐந்து வேலை தொழுகை எனபது இந்து மத கோயில்களில் செய்யப்படும் ஆறு கால பூஜையை ஒட்டியே அமைந்துள்ளது.

அதாவது இந்து கோயில்களில் ஒரு நாளைக்கு ஆறு வேளை பூஜை செய்வார்கள். இப்படி செய்ய காரணம்  ஆறுவேளையும்(அல்லது நாள் முழுவதும் ) இறைவனை நினைக்க வேண்டும் அவன் மேல் பக்தி செலுத்த வேண்டும் என்பதற்காக இருக்கலாம். இதைப்போலத்தான் இசுலாமியர்களும் ஐந்து வேளை தொழுகை செய்கின்றனர்.

இந்த ஐந்து வேளை தொழுகைக்கும் ஆணி வேர் இந்திய கோயில்களில் செய்யப்படும் ஆறுகால பூ செய் ,(பூசை,பூஜை) ஆகத்தான் இருக்கும் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை.  இது ஏதேச்சையாக அமைந்ததா அல்லது இந்து மதத்தின் தாக்கம் தான் இதுவா என்பதெல்லாம் எல்லாம் வல்ல ஏக இறைவனுக்கே வெளிச்சம்.

நீங்கள் இப்பொழுது கேட்கலாம் ஏன் இசுலாமியர்கள்  ஐந்து  வேளை மட்டும் தொழுகை செய்கிறார்கள் ஏன் அவர்கள் ஆறாவது வேளை தொழுகை செய்வதில்லை என்று.

ஆறு வேளை தொழுகை செய்வது முக்கியம் என்று நபிக்கும் நன்றாக தெரிந்தே இருக்கின்றது. நபி அவர்களும் அவர்களது குடும்பத்தை சார்ந்தவர்கள் மட்டும் தினமும் ஆறு வேளை தொழுகை செய்வார்கள். இருப்பினும் அவர் ஏன் அதை அனைத்து இசுலாமிய  மக்களுக்கும் பொதுவாக வைக்க வில்லை  எனபது தெரியவில்லை.

இந்து மதத்திலும் ஆறு கால பூ செய், இசுலாமியத்திலும் ஆறு கால தொழுகை இது பக்தி மார்க்கத்துக்கு மட்டுமா என்று கூட தோன்றலாம். உண்மையில் இது ஆன்மீக, யோக  மார்க்கத்துக்கும் பொருந்தும்.

வடலூர் வள்ளலார் அவர்களும்  ஒருவன் ஆறுவேளை தியானம் செய்யவேண்டும் என்றே குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆறுவேளை என்பது ஒருவேளை சீக்கிரம் ஆன்ம முன்னேற்றத்தை அளிக்கவள்ளதாக இருக்கலாம்.

இப்படி இந்து, இசுலாமிய மதங்கள் மிக ஒற்றுமையான கொள்கைகளை கொண்டுள்ள பொழுது (சில )இசுலாமிய இந்து மக்கள் தங்களுக்குள்  வெறுப்புடன் இருப்பது அறிவீனம் இல்லையா?

இறைவன் ஒருவனே என்று கூறிக்கொண்டு அவன் என் மதத்தை சார்ந்தவன் என்பது எவ்வளவு  மோசமான செயல்?.
இறைவன்  அனைத்து  உயிர்களுக்கும் பொதுவானவன். அவன் என்னுடைய  மதத்தை தழுவினால் மட்டும் தான் நன்மை செய்வான் எனபது சரியா? 

ஒன்றே குலம் ஒருவனே தேவன்
என்றுணர்ந்த பின்னும்

என் குலமே உயர்ந்தது என்பது எப்படி சரியாகும்?
 
சிந்தியுங்கள் மக்களே..... சிறப்பாக வாழுங்கள்48 கருத்துகள்:

 1. ஒரே தேவன் என்பதையும் மற்றவை அனத்தும் அந்த ஏக இறைவனின் படைப்புகளே தன் சுய விருப்பத்துக்கு மனிதனுக்கு எதையும் வழங்கும் சக்தி அவைகளுக்கு இல்லை என்பதையும் நம்பியவனே முஸ்லிம்

  ஏக இறைவனோடு இன்னும் என்னற்ற தேவர்களையும் அவற்களை வனங்கினால்
  அவர்களும் தன் சுய விருப்பப்படி நமக்கு நன்மை செய்யும் என்று நம்புபவர் இந்து இது தான் வித்தியாசம்

  ஆனால் உன்மையில் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதே தமிழனின் வேதம் நீன்ட நெடுங்காலம்(ஆயிரக்கனக்கான வருடங்கள்) தமிழில் இறைவேதம் எதுவும் இரங்கியதாக தெறியவில்லை
  அதனால் ஆரியர்களின் வேத அடிப்படைக்கு தமிழன் தன்னை மாற்றிக்கொன்டதாகவே நான் நினைக்கிறேன்(தாங்கள் அறியாதது அல்ல என்றும் கருதுகிறேன்)

  பதிலளிநீக்கு
 2. உங்களுக்கே . உங்களுக்கே. உங்களுக்கே.

  தொழுகை

  ஒவ்வொரு தொழுகைக்கும் சுத்தி (ஒழு) செய்யும் பொழுதும் உட‌ற்சுகாதார‌ம் எவ்வாறு பேணி க‌டைப் பிடிக்கப்ப‌டுகின்ற‌து என்ப‌தை சிந்தித்தீர்க‌ளா?

  கைகள், பற்கள், வாய் , நாசித்துவாரங்கள், கண்கள், முகம், தலை, பிடரி, கால்கள் சுத்தம்.

  ஐங்கால தொழுகைகளின் நேர அட்டவணையை நோக்கினால்.

  அந்தந்த இடத்திற்குண்டான சூரியனின் உதயநிலை உச்சி நிலை, அஸ்தமன நிலையைக் கொண்ட தொழுகை நேரங்கள்.

  இதன் மூலம் அகில உலகத்திலும் 24 மணி நேரமும் சதா ஒரு விநாடி விடாது தொழுகைகள் நடந்து கொண்டே இருக்கிறது.

  ஆச்சரியமான விந்தை புலப்படவில்லையா?

  தொழுகை சுத்தம், கடமை, கட்டுப்பாடு, கண்ணியம், சகோதரத்துவம், ஒற்றுமை , உடல் நலம், இறைதொடர்பு, சமுதாய தொடர்பு, வேற்றுமை பாராட்டாமை மேலும் பல சிறப்புகளை தன்னகத்தில் கொண்டது.

  ஐவேளை தொழுகையின் மூல‌ம் உலக கடமைகளை புறந்தள்ளிவிடாமலும் உலகாத‌ய‌ சூழ்நிலைக‌ளிலேயே மூழ்கி கிட‌ந்திடாம‌லும் இறைவ‌னிட‌ம் தொட‌ர்பை ச‌ற்றும் தொய்வில்லாம‌ல் பற்றி பிடித்துக் கொண்டு இணைந்திருப்ப‌த‌ற்கு துணை புரியும் அமைப்பை கண்டீர்களா ?

  உலகின் அத்தனை முஸ்லீகளும் எந்த மூலை முக்கிலிருந்தாலும் மையப்புள்ளியாக ஒரே இலக்கான மக்காவிலிருக்கும் ஆதி இறை பள்ளி நோக்கியே தொழுகை.

  இதன் சூட்சுமம் அளவிலடங்காதது.

  உலக முஸ்லீகள் அனைவரையும் தொழுகையின் மூலம் நாடு, இனம், மொழி, நிற பேதமின்றி மறைபொருளாய் பிணைத்து ஒன்றினைக்கிறது என்றால் மிகையாகாது என்ற உண்மை உணர்ந்தீரா?

  தொழுகைகளில் சிறிதேநேரமே ஆனாலும் தொழுகிறவர் ஆத்மார்த்த ஆன்மீக ரீதியாக ஒருவர் அடையும் பெரும்பலன்களுடன்,

  நெற்றி, மூக்குமுனை, உள்ளங்கைகள், முழங்கால் முட்டுக்கள்,கால் பெருவிரல்கள் ஆகியவைகள் பூமியில் படிய‌ சஜ்தா செய்யும்பொழுது நம் உடலுக்கு பூமியின் மூலமாக பல நன்மைகளையும் அடைகிறோம் என்றால் வியப்பாக உள்ளதா?

  உடல் ரீதியாக எல்லா உடற்ப்பயிற்ச்சிகளுக்கும் மேலான உள்ளத்துக்கும் உடலின் சகலத்துக்கும் பயன் தரும் உடற்பயிற்ச்சியை அவர் அறியாமலே செய்து பலன் பெற்று விடுகிறார்.

  பிரசித்தி பெற்ற யோகாசனஆசிரியர் எழுதியுள்ள நூலில் அனைத்து யோகாசனங்களிலேயே இதுதான் சிறப்பானது என்று ஒரு ஆசனத்தை பரிந்துரைத்து

  "இந்த ஆசனத்தை முஸ்லீம்கள் இலகுவாக செய்திடுவார்கள். ஏனென்றால் அவர்கள் தொழுகைகளில் இது அமைந்திருக்கிறது ' என கூறுகிறார்.

  இதை நான் பதினான்கு வயதில் 1953ல் படித்தது. ஆசனத்தின் பெயரை மறந்துவிட்டேன்.

  தொழுகைகளில் அமைந்த அந்த யோகாசனம் "பிஸ்மீ கால் மடிப்புடன் முழந்தாளிட்டு அத்தஹிய்யாத் தொடங்கி சலாம் கொடுத்து துவாவுடன் தொழுகையை முடிக்கும் வரையிலான இருப்பு நிலை தான்."

  இதையெல்லாம் படித்துவிட்டு தொழுகை வெறுமனே ஒரு உடற்பயிற்ச்சி தான் என்று கூறும் முய‌ற்ச்சி அல்ல இது.

  தொழுகையினால் கண்காணா, உணர முடியா, அடையாள படுத்தமுடியா, எண்ணிக்கையிலடங்கா பலன்கள் நமக்குள்ளன. அதில் ஒரு துளிதான் இந்த உடற்பயிற்ச்சி விஷயம்.

  நமது தொழுகையினால் இறைவனுக்கோ இறைதூதருக்கோ அல்லது வேறு யாருக்குமோ எந்த பலனுமில்லை.

  தொழும்போது இறைவ‌னிட‌ம் பேசுகிறீர்க‌ள். திருக்குரான் ஓதும்பொழுது இறைவ‌ன் உங்க‌ளிட‌ம் பேசுகிறான்.


  தொழுகையினால் பலன்கள் அனைத்தும் உங்களுக்கே. உங்களுக்கே. உங்களுக்கே.


  வாஞ்சையுடன் வாஞ்சூர்.
  வாஞ்சையுடன் வாஞ்சூர்.

  பதிலளிநீக்கு
 3. //இதை நான் பதினான்கு வயதில் 1953ல் படித்தது. ஆசனத்தின் பெயரை மறந்துவிட்டேன்.//

  வஜ்ராசனம்..வஜ்ரம் னா உறுதி ...உடலையும் மனதையும் உறுதிப்படுதுவது :)

  பதிலளிநீக்கு
 4. @yoghi
  // ஒரே தேவன் என்பதையும் மற்றவை அனத்தும் அந்த ஏக இறைவனின் படைப்புகளே தன் சுய விருப்பத்துக்கு மனிதனுக்கு எதையும் வழங்கும் சக்தி அவைகளுக்கு இல்லை என்பதையும் நம்பியவனே முஸ்லிம்//

  இறைவனின் படைப்பில் அனைத்தும் அனைத்திற்கும் சக்தியை வழங்க முடியும். அவ்வாறு தான் இயற்கை அமைந்துள்ளது...செயல்படுகிறது. கொஞ்சம் யோசித்து பார்த்தல் உண்மை தங்களுக்கு விளங்கும். இவையாவும் இறைவனால் தான் நடக்கின்றது என்றாலும் நான் அதை ஏற்றுக்கொள்வேன்.

  //ஏக இறைவனோடு இன்னும் என்னற்ற தேவர்களையும் அவற்களை வனங்கினால்
  அவர்களும் தன் சுய விருப்பப்படி நமக்கு நன்மை செய்யும் என்று நம்புபவர் இந்து இது தான் வித்தியாசம்/
  நான் மேல் கூறிய கருத்துக்கள் இதுக்கும் பொருந்தும்.
  ஒற்றுமையை மட்டும் பாருங்கள் யோகி வித்தியாசம் விலகிவிடும். :)

  தங்களுடைய கருத்துக்கு மிக்க நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒரே சாப்பாட்டை சாப்பிடும் சிறுவர்கள் வாலிப வயதை அடைகிறார்கள் ஆனால் வாலிபர்களோ கிழவனாகிறார்கள். ஆகையால் படைப்புக்கு சக்தியில்லை, படைத்தவன் சக்தி தருகிறான். ஒரே மருந்து சிலருக்கு குணம் அளிக்கிறது சிலருக்கு இல்லை

   நீக்கு
 5. //"இந்த ஆசனத்தை முஸ்லீம்கள் இலகுவாக செய்திடுவார்கள். ஏனென்றால் அவர்கள் தொழுகைகளில் இது அமைந்திருக்கிறது ' என கூறுகிறார்.

  இதை நான் பதினான்கு வயதில் 1953ல் படித்தது. ஆசனத்தின் பெயரை மறந்துவிட்டேன்.

  தொழுகைகளில் அமைந்த அந்த யோகாசனம் "பிஸ்மீ கால் மடிப்புடன் முழந்தாளிட்டு அத்தஹிய்யாத் தொடங்கி சலாம் கொடுத்து துவாவுடன் தொழுகையை முடிக்கும் வரையிலான இருப்பு நிலை தான்."//


  வணக்கம் ஐயா,
  நீங்கள் கூறும் ஆசனத்திற்கு பெயர் "வஜ்ராசனம்". இந்த ஒரு ஆசனத்தினால் இவ்வளவு நன்மை கிடக்கின்றது என்றால் யோசித்து பாருங்கள் மற்ற ஆசனங்களையும் செய்து வந்தால் எவ்வளவு நன்மை கிடைக்கும் என்று. மற்ற ஆசனங்களை அது இந்துக்களுடையது என்று சொல்லி முஸ்லீம்கள் செய்யக்கூடாது என்பது எவ்வளவு பெரிய தவறு எனபதை தங்களை போன்ற பெரியோர்கள் எடுத்து சொல்ல கூடாதா?
  தங்களுடைய கருத்துக்கு மிக்க நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
 6. //"என் ராஜபாட்டை"- ராஜா said...

  Super articals//

  Thanks for your comment raja

  பதிலளிநீக்கு
 7. //

  கிருஷ்ணா said...

  //இதை நான் பதினான்கு வயதில் 1953ல் படித்தது. ஆசனத்தின் பெயரை மறந்துவிட்டேன்.//

  வஜ்ராசனம்..வஜ்ரம் னா உறுதி ...உடலையும் மனதையும் உறுதிப்படுதுவது :)//
  நீங்கள் ஏற்க்கனவே சொல்லிவிடீர்களா...ஆனால் இது முன்பு பிரசுரம் ஆகவில்லையே...இருப்பினும் தங்கள் விளக்கத்திற்கு நன்றி

  பதிலளிநீக்கு
 8. //

  அரசன் said...

  வாழ்த்துக்கள் நண்பரே//

  தங்களுடைய வாழ்த்துக்களுக்கும் வருகைக்கும் மிக்க நன்றி நண்பரே

  பதிலளிநீக்கு
 9. //நீங்கள் ஏற்க்கனவே சொல்லிவிடீர்களா...ஆனால் இது முன்பு பிரசுரம் ஆகவில்லையே...இருப்பினும் தங்கள் விளக்கத்திற்கு நன்றி //

  அந்த (பகவத் கீதை ) கிருஷ்ணா ஏற்கனேவே சொன்னது தான் ...நாம் ஆன்மிகத்தில் திரும்ப திரும்ப சொல்லி கொண்டு உள்ளோம்...புதிதாக ஒன்றும் இல்லை.... :)

  நேற்று நமிதா இன்று ஹன்சிகா ....நாளை யாரோ....எல்லாவற்றிலும் மூலம்(base -நு சொல்ல வந்தேன்) ஒன்று தான்.... மத வாதிகளுக்கு புரிந்தால் சரி .... புரியாவிட்டாலும் சரி சரி தான் :)

  பதிலளிநீக்கு
 10. ////

  கிருஷ்ணா said...

  //நீங்கள் ஏற்க்கனவே சொல்லிவிடீர்களா...ஆனால் இது முன்பு பிரசுரம் ஆகவில்லையே...இருப்பினும் தங்கள் விளக்கத்திற்கு நன்றி //

  அந்த (பகவத் கீதை ) கிருஷ்ணா ஏற்கனேவே சொன்னது தான் ...நாம் ஆன்மிகத்தில் திரும்ப திரும்ப சொல்லி கொண்டு உள்ளோம்...புதிதாக ஒன்றும் இல்லை.... :)

  நேற்று நமிதா இன்று ஹன்சிகா ....நாளை யாரோ....எல்லாவற்றிலும் மூலம்(base -நு சொல்ல வந்தேன்) ஒன்று தான்.... மத வாதிகளுக்கு புரிந்தால் சரி .... புரியாவிட்டாலும் சரி சரி தான் :)////


  நீங்கள் சொல்வதும் சரிதான் அனபரே. இருப்பினும் கிருஷ்ணர் சொன்னதிலும் எனக்கு சில முரண்பாடுகள் உண்டு.
  கிருஷ்ணர்னு பெற மாத்தினதும் நமீதா டு அன்சிகா வா? :) நல்ல முன்னேற்றம் :) ஒரு பற்றை விட்டுவிட்டீர்கள் என்று சொன்னேன் :))

  பதிலளிநீக்கு
 11. //கிருஷ்ணர்னு பெற மாத்தினதும் நமீதா டு அன்சிகா வா? :) நல்ல முன்னேற்றம் :) ஒரு பற்றை விட்டுவிட்டீர்கள் என்று சொன்னேன் :)) //

  தனி காட்டு ராஜா ங்கர ப்ளாக்-யையே delete பண்ணிட்டமுள்ள :)

  //நமீதா டு அன்சிகா வா?//

  பழையன கழிதலும் புதியன புகுதலும் :)

  பதிலளிநீக்கு
 12. @கிருஷ்ணா
  //பழையன கழிதலும் புதியன புகுதலும் :)//
  பழைய நிலைக்கு திரும்புவதுதானே ஆன்மீகம்..? பின்பு ஏன் புதிதின் மேல் இந்த மோகம் ? :))

  பதிலளிநீக்கு
 13. //பழைய நிலைக்கு திரும்புவதுதானே ஆன்மீகம்..? பின்பு ஏன் புதிதின் மேல் இந்த மோகம் ? :)) //

  பழையன புதியன(நமீதா,அன்சிகா ) மோகம் ஒழித்து ஆதி நிலைக்கு திரும்புவது தான் ஆன்மிகம் ....ஹா ஹா :)

  பதிலளிநீக்கு
 14. @கிருஷ்ணா
  //பழையன புதியன(நமீதா,அன்சிகா ) மோகம் ஒழித்து ஆதி நிலைக்கு திரும்புவது தான் ஆன்மிகம் ....ஹா ஹா :)///
  :) ம்ம்ம்ம் .......நடத்துங்கள் :)

  பதிலளிநீக்கு
 15. நல்ல பதிவு..
  அன்புடன் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 16. //

  vidivelli said...

  நல்ல பதிவு..
  அன்புடன் வாழ்த்துக்கள்.///

  தங்களுடைய அன்பான வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 17. 5 வேளை பொதுமக்களுக்கும், 6 வேளை குடும்பத்தாருடனும் தொழுதார்களா? ஏன் இல்லாததையும் பொல்லாததையும் கூறுகிறீர் தன் குடும்பத்தினருக்கு மட்டும் ஏனையோர் தவிர ஒரு வேளை தொழுகை பிரத்தியோகமாக நபியவர்கள் தொழச்சொன்னார் என
  ஆதாரபூர்வமான ஹதீதில் ஆதாரம் காட்டினால் நான் ஹிந்து மதத்தை ஏற்றுக்கொள்ளத்தயார். நான் ஹதீத் கிரந்தங்களை கற்றுத்தேர்ந்தவன்
  அல்ல ஆனால் எனக்கு நிச்சயமாக தெரியும் இப்படி இருக்காதென்று.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க சகோ Riyazy :)

   //ஆதாரபூர்வமான ஹதீதில் ஆதாரம் காட்டினால்//
   எது ஆதாரப்பூர்வமான ஹதீஸ் எது ஆதாரபூர்வமற்ற ஹதீஸ் என்பது பற்றி எனக்கு தெரியாது.

   //நான் ஹதீத் கிரந்தங்களை கற்றுத்தேர்ந்தவன்
   அல்ல //
   இசுலாமியர்களால் இவர் ஹதீத் கிரந்தங்களை கற்றுத்தேர்ந்தவர் என்று நம்பப்படும் ஒருவர் கூறியது தான் நபி அவர்கள் ஆறு வேலை தொழுகை செய்தார் என்பது.

   //நான் ஹிந்து மதத்தை ஏற்றுக்கொள்ளத்தயார்//
   இந்து மதத்தை ஏற்ப்பது என்பது உங்கள் உரிமை. நீங்கள் ஏற்க்க வேண்டும் என்பதற்காக நான் இதை எழுதவில்லை. இருப்பினும் நீங்கள் சவால் விடுவதால் கேட்கிறேன்.
   நபி அவர்கள் ஆறு வேலை தொழுகை செய்தார் என்பதற்கான ஆதாரத்தை தந்தாள் (சிறு திருத்தம் குடும்பம் அல்ல நபி அவர்கள் மட்டுமே ஆறு வேலை தொழுகை செய்தார் -ஹதீத் கிரந்தங்களை கற்றுத்தேர்ந்தவர் கூறியது ) எங்கு எப்பொழுது மதம் மாறுவீர்கள் என்று சொல்ல முடியுமா?

   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :)

   நீக்கு
  2. ஹதீத் கலைகளை நான் கற்றுத்தேறாவிட்டாலும் இஸ்லாத்தின் காரணிகள் காரணங்களுடன் முரண்படாது என்பதை இதுவரை எனது அனுபவ அறிவில் கண்டுணர்ந்தே வந்துள்ளேன் தாங்களின் சுயசிந்தனையில் தோன்றுவதை பதிவேற்றம் செய்கிறீர்கள்/ எவனோ ஒரு வீணாய்போனவன் முஸ்லிம் என்ற பெயரில் வந்து சொல்லி இருந்தால் தாங்கள் மாற்று மதத்தவராய் இருந்தாலும் இஸ்லாத்தின் மூலாதாரம் குர்ஆனும், ஹதீதும் அவைகள் இரண்டும் பக்கங்களாக எண்வாரியாக அழகிய முறையில் தொகுக்கப்பட்டுள்ளன அவை இரண்டில் ஏதாவது ஒன்றிலாவது இருக்கிறதா என்று கேட்டுவிட்டு பதிவிடுங்கள் நபி அவர்கள் மட்டும் 6 வேளை தொழுதார்கள் என்பதை அவை இரண்டில் ஏதாவது ஒன்றில் எந்த பக்கத்தில் எத்தனையாவது சுட்டெண்னில் உள்ளது என்று உங்களுக்கு சொன்னார் என்பது தான் இங்கே அடிப்படையில் முக்கியம் மீளக்கேட்டுப்பதியுங்கள் ஆராய்ந்து பார்த்து பின் முடிவு செய்யலாம்.

   நீக்கு
 18. இப்படி இந்து, இசுலாமிய மதங்கள் மிக ஒற்றுமையான கொள்கைகளை கொண்டுள்ள பொழுது (சில )இசுலாமிய இந்து மக்கள் தங்களுக்குள் வெறுப்புடன் இருப்பது அறிவீனம் இல்லையா?

  இறைவன் ஒருவனே என்று கூறிக்கொண்டு அவன் என் மதத்தை சார்ந்தவன் என்பது எவ்வளவு மோசமான செயல்?.
  இறைவன் அனைத்து உயிர்களுக்கும் பொதுவானவன். அவன் என்னுடைய மதத்தை தழுவினால் மட்டும் தான் நன்மை செய்வான் எனபது சரியா>>>>>>>>>>>

  அதற்குத்தான் மறுமையில் இறைவன் முன் ஒவ்வொரு ஆத்மாவும் இவ்வுலகில் தான் செய்த ஒவ்வொரு அணுவளவு நன்மைக்கும் தீமைக்கும் பதில் சொல்லியாக வேண்டும். என்ற உண்மை

  நிரூபிக்கப்படுகிறது. எங்கள் ஒவ்வொருவரின் வாழ்விலும் நாம் பலரால் பாதிக்கப்பட்டிருப்போம் உண்மையை புரிந்தாலும் நிரூபிக்க முடியாமலோ குற்றவாளியை அறியாமலோ இருப்போம்

  இதற்கு மறுமை விசாரணையை விட வேறு என்ன தீர்வாய் இருக்க முடியும். அடுத்த ஜன்மத்தில் பிறந்து பாவம் கழித்தாலும் பாதிக்கப்பட்டவனுக்கோ பாதித்தவனுக்கோ இதன் காரணமாகத்தான் இந்நிலை என்று தெரிவதில்லையே, இன விரோதம் யார் காட்டினாலும் அது யாராக இருந்தாலும் சரியே அவர் மறுமையில் இறைவனிடம் பதில் சொல்லியாக வேண்டும்,அதேவேளை மாற்று

  மதத்தவர்களுடன் அதிகம் நெருங்கினால் தம் கொள்கையில் பாதிப்புகள் ஏற்படாலாம் என்று ஒதுங்குபவரை பிழையான கண்ணோட்டத்தில் நோக்கி பின் காலப்போக்கில் அவர்கள் மாற்று

  மதத்தினருடன் வெறுப்பாய் இருக்கிறார் என்று எண்ணுவது தவறு, அப்படி எண்ணுபவர்கள் சிலரும் இருப்பார்கள் அது அறியாமை, நாங்கள் (முஸ்லிம்கள்) உங்களை இஸ்லாத்தின் பால்

  அழைப்பதன் நோக்கம் எந்த உலகியல் தேவைக்கருதியும் அல்ல ஒட்டு மொத்த சுய சிந்தனை இஸ்லாத்துடன் பொருந்திப்போவதால்தான், பொது மேடைகளில் எல்லோரையும் கூப்பாடு

  போட்டு அழைக்கிறோம், ஒதுங்கி நின்று தேன் கூட்டுக்கு கல்லெறியும் தேவை எமக்கு இல்லை எறிந்தாலும் நாம் குற்றவாளியே, மேலும் இஸ்லாம் அரேபியாவில் தோன்றியதா ஐரோப்பாவில்

  தோன்றியதா என்று வேற்றுமை எதற்கு? சிந்தனைக்கே முக்கியத்துவம் கொடுத்து உளப்பூர்வமாக ஏற்றிருக்கிறோம், தவிர இந்தியாவை ஒரு இறைவனும் அரேபியாவை இன்னொரு

  இறைவனுமா படைத்து இருப்பான்? நபிமார்கள் உலகில் பல பாகங்களுக்கும் ஒவ்வொரு காலத்திலும் அனுப்பப்பட்டே இருக்கிறார்கள் கடைசி நபியை இறைவன் அரேபியாவில் தேர்ந்தெடுத்தான்

  அது அவன் தீர்மானம். ஒரு அரபியனை விட அஜமியோ அஜமியை விட அரபியோ உயர்ந்தவன் அல்ல யார் இறைவனுக்கு உவப்பானவராக நடந்து கொள்கிறாரோ அவரே உயர்ந்தவர். கடைசி

  நபியாக இந்தியாவில் ஒருவரை தேர்ந்தெடுத்திருந்தால் அரேபியர்கள் அதே கற்சிலைகளை வணங்கிக்கொண்டு உங்களை நோக்கி எங்கள் மதத்தில் இருந்துதான் உங்கள் மதம் தோன்றியது என்று

  சொல்லி இருக்கலாம், இவ்வாறு சிந்தித்தால் அது வெறும் மனித குரோத உணர்வே, சிந்திப்பவவர்கள் இதில் இருந்து விலகி தெளிவுடன் இருப்பார்கள், தாங்கள் கொஞ்சம் அதை இஸ்லாமிய

  விளக்கமுறையில் சிந்திசிந்திக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க Riyazy,

   //அடுத்த ஜன்மத்தில் பிறந்து பாவம் கழித்தாலும் பாதிக்கப்பட்டவனுக்கோ பாதித்தவனுக்கோ இதன் காரணமாகத்தான் இந்நிலை என்று தெரிவதில்லையே,//

   இசுலாமில் மறுஜென்மம் என்பது ஏற்றுக்கொள்ளப்ப்ட்டுள்ளதா? பலர் இல்லை என்கின்றனரே.
   உங்கள் பின்னூட்டத்திற்கு பிறகு நான் உங்களுக்கு பதில் அளிக்கிறேன்.
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :)

   நீக்கு
 19. இப்படி இந்து, இசுலாமிய மதங்கள் மிக ஒற்றுமையான கொள்கைகளை கொண்டுள்ள பொழுது (சில )இசுலாமிய இந்து மக்கள் தங்களுக்குள் வெறுப்புடன் இருப்பது அறிவீனம் இல்லையா?

  இறைவன் ஒருவனே என்று கூறிக்கொண்டு அவன் என் மதத்தை சார்ந்தவன் என்பது எவ்வளவு மோசமான செயல்?.
  இறைவன் அனைத்து உயிர்களுக்கும் பொதுவானவன். அவன் என்னுடைய மதத்தை தழுவினால் மட்டும் தான் நன்மை செய்வான் எனபது சரியா>>>>>>>>>>>

  அதற்குத்தான் மறுமையில் இறைவன் முன் ஒவ்வொரு ஆத்மாவும் இவ்வுலகில் தான் செய்த ஒவ்வொரு அணுவளவு நன்மைக்கும் தீமைக்கும் பதில் சொல்லியாக வேண்டும். என்ற உண்மை

  நிரூபிக்கப்படுகிறது. எங்கள் ஒவ்வொருவரின் வாழ்விலும் நாம் பலரால் பாதிக்கப்பட்டிருப்போம் உண்மையை புரிந்தாலும் நிரூபிக்க முடியாமலோ குற்றவாளியை அறியாமலோ இருப்போம்

  இதற்கு மறுமை விசாரணையை விட வேறு என்ன தீர்வாய் இருக்க முடியும். அடுத்த ஜன்மத்தில் பிறந்து பாவம் கழித்தாலும் பாதிக்கப்பட்டவனுக்கோ பாதித்தவனுக்கோ இதன் காரணமாகத்தான் இந்நிலை என்று தெரிவதில்லையே, இன விரோதம் யார் காட்டினாலும் அது யாராக இருந்தாலும் சரியே அவர் மறுமையில் இறைவனிடம் பதில் சொல்லியாக வேண்டும்,அதேவேளை மாற்று

  மதத்தவர்களுடன் அதிகம் நெருங்கினால் தம் கொள்கையில் பாதிப்புகள் ஏற்படாலாம் என்று ஒதுங்குபவரை பிழையான கண்ணோட்டத்தில் நோக்கி பின் காலப்போக்கில் அவர்கள் மாற்று

  மதத்தினருடன் வெறுப்பாய் இருக்கிறார் என்று எண்ணுவது தவறு, அப்படி எண்ணுபவர்கள் சிலரும் இருப்பார்கள் அது அறியாமை, நாங்கள் (முஸ்லிம்கள்) உங்களை இஸ்லாத்தின் பால்

  அழைப்பதன் நோக்கம் எந்த உலகியல் தேவைக்கருதியும் அல்ல ஒட்டு மொத்த சுய சிந்தனை இஸ்லாத்துடன் பொருந்திப்போவதால்தான், பொது மேடைகளில் எல்லோரையும் கூப்பாடு

  போட்டு அழைக்கிறோம், ஒதுங்கி நின்று தேன் கூட்டுக்கு கல்லெறியும் தேவை எமக்கு இல்லை எறிந்தாலும் நாம் குற்றவாளியே, மேலும் இஸ்லாம் அரேபியாவில் தோன்றியதா ஐரோப்பாவில்

  தோன்றியதா என்று வேற்றுமை எதற்கு? சிந்தனைக்கே முக்கியத்துவம் கொடுத்து உளப்பூர்வமாக ஏற்றிருக்கிறோம், தவிர இந்தியாவை ஒரு இறைவனும் அரேபியாவை இன்னொரு

  இறைவனுமா படைத்து இருப்பான்? நபிமார்கள் உலகில் பல பாகங்களுக்கும் ஒவ்வொரு காலத்திலும் அனுப்பப்பட்டே இருக்கிறார்கள் கடைசி நபியை இறைவன் அரேபியாவில் தேர்ந்தெடுத்தான்

  அது அவன் தீர்மானம். ஒரு அரபியனை விட அஜமியோ அஜமியை விட அரபியோ உயர்ந்தவன் அல்ல யார் இறைவனுக்கு உவப்பானவராக நடந்து கொள்கிறாரோ அவரே உயர்ந்தவர். கடைசி

  நபியாக இந்தியாவில் ஒருவரை தேர்ந்தெடுத்திருந்தால் அரேபியர்கள் அதே கற்சிலைகளை வணங்கிக்கொண்டு உங்களை நோக்கி எங்கள் மதத்தில் இருந்துதான் உங்கள் மதம் தோன்றியது என்று

  சொல்லி இருக்கலாம், இவ்வாறு சிந்தித்தால் அது வெறும் மனித குரோத உணர்வே, சிந்திப்பவவர்கள் இதில் இருந்து விலகி தெளிவுடன் இருப்பார்கள், தாங்கள் கொஞ்சம் அதை இஸ்லாமிய

  விளக்கமுறையில் சிந்திசிந்திக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
 20. இசுலாமில் மறுஜென்மம் என்பது ஏற்றுக்கொள்ளப்ப்ட்டுள்ளதா? பலர் இல்லை என்கின்றனரே.
  உங்கள் பின்னூட்டத்திற்கு பிறகு நான் உங்களுக்கு பதில் அளிக்கிறேன்.
  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :)

  திரும்பத்திரும்ப சுழல் முறையில் பல்வகை உயிரினங்களாக பிறப்பது என்று இஸ்லாமிய விளக்கங்களில் அறவே கிடையாது, ஆனால் மறுமையில் இறைவன் முன் நீதியின் தீர்ப்புக்காக உயிர்த்தெழுதல் என்பதை புனர்ஜன்மம் என மொழி பெயர்கிறார் ஜாகிர் நாயக்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க Riyazy,
   தங்கள் பதிலுக்கு நன்றி.//இன விரோதம் யார் காட்டினாலும் அது யாராக இருந்தாலும் சரியே அவர் மறுமையில் இறைவனிடம் பதில் சொல்லியாக வேண்டும்,அதேவேளை மாற்று மதத்தவர்களுடன் அதிகம் நெருங்கினால் தம் கொள்கையில் பாதிப்புகள் ஏற்படாலாம் என்று ஒதுங்குபவரை பிழையான கண்ணோட்டத்தில் நோக்கி பின் காலப்போக்கில் அவர்கள் மாற்று மதத்தினருடன் வெறுப்பாய் இருக்கிறார் என்று எண்ணுவது தவறு, ///

   குரான் பிற மதத்தினரை எதிரியாக பார்க்க சொல்கிறதே.

   5:82. நிச்சயமாக யூதர்களையும், இணைவைப்பவர்களையும் முஃமின்களுக்குக் கடும் பகைவர்களாகவே (நபியே!) நீர் காண்பீர்;

   இது பற்றி தங்கள் கருத்து?

   நீக்கு
  2. 5:82. நிச்சயமாக யூதர்களையும், இணைவைப்பவர்களையும் முஃமின்களுக்குக் கடும் பகைவர்களாகவே (நபியே!) நீர் காண்பீர்;

   இதில் நபியை அல்ல, யூதர்களையும், இணைவைப்பவர்களையும் முஃமின்களுக்குக் கடும் பகைவர்கலே என்று சொல்லப்பட்டுள்ளது

   நீக்கு
 21. ஐயா, நீங்களோ கேள்வியும் நானே பதிலும் நானே என்றதலைப்பின் ஆசிரியர் உங்கள் அனுபவத்தை வைத்து பல சமூக பிரச்சினைகளை மயிரை கட்டி மலையை இழுத்து விடலாம் என்பது போல
  விளக்கங்கள் சொல்கிறீர்கள் நல்லது கருத்துப்பரிமாற்றங்கள் புரிந்து கொள்ளவும் எவ்வாறு புரிந்து கொள்கின்றனர் என்பதை உணர்ந்து
  கொள்ளவும் பிரயோசனம் அளிக்கிறது.
  இசுலாமில் மறுஜென்மம் என்பது ஏற்றுக்கொள்ளப்ப்ட்டுள்ளதா? இதற்கு உங்கள் கருத்து என்னவென்று சொல்லுங்கள்,பதில் சொல்கிறேன்,பதில் வரவில்லை!! ஆனால் என்னுடைய பதில்களில்
  புதிய கேள்விகளை மட்டும் உருவாக்குகின்றீர்கள்?

  சரி கேள்விக்கு வருவோம்.5:82. நிச்சயமாக யூதர்களையும், இணைவைப்பவர்களையும் முஃமின்களுக்குக் கடும் பகைவர்களாகவே (நபியே!) நீர் காண்பீர்
  யூதர்களும் நிராகரிப்போரும் அப்படித்தானே இருக்கின்றனர். குளிர்
  யுத்தம் cold war உற்று ஆழமாய் உலக நடப்புகளையும் கடந்த காலங்களையும் இணைத்துபார்த்தால் புரியும்.
  ரொம்ப எழுத அலுப்பாய் இருக்கிறது ஸாரி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க Riyazy,
   // கருத்துப்பரிமாற்றங்கள் புரிந்து கொள்ளவும் எவ்வாறு புரிந்து கொள்கின்றனர் என்பதை உணர்ந்து
   கொள்ளவும் பிரயோசனம் அளிக்கிறது.//
   நன்றி
   //இசுலாமில் மறுஜென்மம் என்பது ஏற்றுக்கொள்ளப்ப்ட்டுள்ளதா? இதற்கு உங்கள் கருத்து என்னவென்று சொல்லுங்கள்,பதில் சொல்கிறேன்,பதில் வரவில்லை!! ஆனால் என்னுடைய பதில்களில்
   புதிய கேள்விகளை மட்டும் உருவாக்குகின்றீர்கள்? //
   நல்ல கேள்வி :)
   இது நீங்கள் சொன்னது // அடுத்த ஜன்மத்தில் பிறந்து பாவம் கழித்தாலும் பாதிக்கப்பட்டவனுக்கோ பாதித்தவனுக்கோ இதன் காரணமாகத்தான் இந்நிலை என்று தெரிவதில்லையே//
   இதன் பொருள் மறுபிறப்புதானே?

   இதற்க்கு நீங்கள் கூறிய விளக்கம்.
   //திரும்பத்திரும்ப சுழல் முறையில் பல்வகை உயிரினங்களாக பிறப்பது என்று இஸ்லாமிய விளக்கங்களில் அறவே கிடையாது, ஆனால் மறுமையில் இறைவன் முன் நீதியின் தீர்ப்புக்காக உயிர்த்தெழுதல் என்பதை புனர்ஜன்மம் என மொழி பெயர்கிறார் ஜாகிர் நாயக்.//

   நீங்கள் மாற்றி பேசியுள்ளீர்கள் என்பது இப்பொழுது விளங்கும் என நினைக்கின்றேன்.

   இது நீங்கள் சொன்னது
   //இன விரோதம் யார் காட்டினாலும் அது யாராக இருந்தாலும் சரியே அவர் மறுமையில் இறைவனிடம் பதில் சொல்லியாக வேண்டும்//

   இப்பொழுது
   //சரி கேள்விக்கு வருவோம்.5:82. நிச்சயமாக யூதர்களையும், இணைவைப்பவர்களையும் முஃமின்களுக்குக் கடும் பகைவர்களாகவே (நபியே!) நீர் காண்பீர்
   யூதர்களும் நிராகரிப்போரும் அப்படித்தானே இருக்கின்றனர். குளிர்
   யுத்தம் cold war உற்று ஆழமாய் உலக நடப்புகளையும் கடந்த காலங்களையும் இணைத்துபார்த்தால் புரியும்.
   ரொம்ப எழுத அலுப்பாய் இருக்கிறது ஸாரி.//

   இப்படி மாற்றி கூறுகிறீர்கள். உங்கள் பார்வை சரியாக இல்லை என்பதை தவிர நான் வேறு என்ன சொல்லவேண்டும்.இதற்க்கு நபியும், இசுலாமியர்களும் மறுமையில் பதில் சொல்ல தேவையில்லையா?

   நான் சொல்வது ஒன்றுதான் பிற மனிதனை மதத்தை வைத்து,ஜாதியை வைத்து எதிரியாக பார்ப்பது என்பது மடமையின் உச்சம்.
   பிறரை எதிரியாக பார்க்க சொல்லி எந்த இறைத்தூதர் சொல்லி இருந்தாலும் இல்லாவிட்டாலும், இறைவன் என்று ஒருவன் இருப்பின் அவனால் நிச்சயம் அது ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
   பிறரை நட்பாக பார்க்காவிட்டாலும் எதிரியாக பார்க்காமல் இருப்பது என்பதே நல்ல குணம்.
   இதை சொல்லிக்கொடுக்காத மதத்தை சீர்திருத்த வேண்டியது நமது கடமையாகிறது.
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   நீக்கு
 22. ஐயா, நீங்கள் "குர் ஆனை முஹம்மது நபி தான் எழுதி வெளியிட்டார்" என்ற நிலையில் இருந்து பார்க்கிறீர்கள், உங்கள் நிலையில் இருந்து பார்த்தால் நீங்கள் சொல்வது சரிதான், முக்காலமும் அறிந்த இறைவன் அறிவிக்கிறான் எனக்கொண்டால் இதில் சந்தேகம் வராது.

  நிற்க இந்த வசனத்தில். யூதர்களின் நடவடிக்கைகளை கடந்த, நிகழ் வரலாறுகளில் சென்று

  ஒப்பிட்டு நோக்க வேண்டும் அதை தெரிந்து கொள்ள தேடல்களில் கொஞ்சம் உள்ளே செல்ல

  வேண்டும்.என்னைப்பொறுத்தவரை என் அனுபவத்தின் முடிவுக்கு இந்த வசனம் பொருந்துகிறது,

  வசனத்திற்கு ஏற்ப நான் உலகியலை பார்க்கவில்லை.அதேவேளை வரலாறுகளில் எல்லா

  முஸ்லிம்களும் உத்தமர்கள் என்றும் சொல்லவரவில்லை அணுவளவு நன்மை செய்தவனும்

  அதன் பலனை பெற்றுக்கொள்வான், தீமை செய்...........வான்.

  பதிலளிநீக்கு
 23. வாங்க Riyazy,
  //ஐயா, நீங்கள் "குர் ஆனை முஹம்மது நபி தான் எழுதி வெளியிட்டார்" என்ற நிலையில் இருந்து பார்க்கிறீர்கள், உங்கள் நிலையில் இருந்து பார்த்தால் நீங்கள் சொல்வது சரிதான், முக்காலமும் அறிந்த இறைவன் அறிவிக்கிறான் எனக்கொண்டால் இதில் சந்தேகம் வராது. //

  யூதர்களையும், கற்சிலைகளை வணங்குபவர்களையும் (இந்துக்கள்,கிருத்துவர்கள், புத்த மதத்தினர்,இசுலாமில் சுபியினர்) எதிரியாக பார்க்க,மேலும் அவர்களை கொல்லவும் சொல்கிறது குரான். இப்படி ஒரு இறைவன் கூற ஏதேனும் வாய்ப்புண்டா என்று சிந்திக்க மாட்டீர்களா?
  தயவு செய்து மனிதத்தை மனதில் வைத்து சிந்தித்து பாருங்கள். இதில் உள்ள தவறு உங்களுக்கு புரியும். தங்கள் கருத்திற்கு நன்றி...

  பதிலளிநீக்கு

 24. என்ன,கூர்ஆன், காபிர்களை அநியாயமாக கொல்லச்சொல்கிறதா??? ஆதாரம் காட்ட முடியுமா? தேடுவதற்கு முன்
  Does Quran say to kill the kafir (Non Muslims)? Dr Zakir naik

  சற்று யூ-டுயூபில் பார்த்து விடவும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க சகோ riyaazi,
   என்னுடைய இந்த பதிவை படித்திருப்பீர்கள் என நினைக்கின்றேன்.
   http://kelviyumnaaneypathilumnaaney.blogspot.in/2013/01/blog-post_27.html

   ஜாகிர் நாயக் கருத்து தவறானது.( அதாவது அவர் அந்த காலத்தில் அந்த சூழலில் கூறப்பட்டது அந்த வசனங்கள் என்கிறார்).ஏன் எனில்.....
   அவர் கூறும் வசனங்கள் மட்டும் அல்ல ஒட்டுமொத்த குரானுமே அந்த காலத்தில் வாழ்ந்த மக்களுக்கு மட்டுமே கூறப்பட்டது.....கிட்டத்தட்ட 25 ஆண்டுகள். எனவே ஒட்டுமொத்த குரானின் பயன்படுமே இன்றைய நிலையில் கேள்விக்குள்ளாகிறது என்பதை சிந்தித்து பாருங்கள் சகோ.
   மேலும் குரான் வசனங்கள் யூதர்களையும், கிருத்துவர்களையும்,சிலை வணங்கிகளையும் எதிரியாக பார்க்க சொல்கிறது என்பதை தாங்கள் நன்கு அறிவீர்கள் என நம்புகிறேன்.
   இவற்றை இடைசொருகல் என்று ஒத்துக்குவதே முறையாக இருக்கும் என்பது எனது புரிதல் சகோ.
   தங்கள் தொடுப்பிற்கு மிக்க நன்றி....அவருக்கான எனது பதிலை விரைவில் அத்தளத்தில் பதிவு செய்கிறேன்.

   நீக்கு
 25. குர்ஆன் அந்தக்காலத்தில் அந்த சூழ்நிலையில் தான் அருளப்பட்டது அது இந்தக்காலத்திற்கு பொருத்தம் இல்லை என்று சும்மா சொல்லகூடாது. அதையும் விட சிறப்பான ஒன்று இருந்தால் அதையும் முன்வைத்து ஒப்பிட்டே சொல்லணும், தாங்கள் மனிதத்தை நிறுத்த முயல்கிறீர்களா/ஏனையவற்றை தவிர்த்து இஸ்லாத்தை மட்டும் வாயால் ஊதி அனைத்து விடலாம் என்று கனவு காண்கிறீரா? சரி,1. யூத,கிருஸ்துவ,இஸ்லாம் என்பன தொடர்புள்ள பிரிவுகள் அவைகளின் வரலாற்று பின்னணியையும் இன்றும் இஸ்லாத்திற்கு எதிரான அவர்களின் தொடர் சூழ்ச்சிகளையும் அறியாமல்/தெரிந்தும் மறைத்து கொண்டு இந்த குர்ஆன் வசனத்தை உங்களால் புரியவே முடியாது.2. இந்தியாவைப்பொறுத்தவரை ஆண்டாண்டு காலமாக அது அந்நிய படை எடுப்புக்கு ஆளாகியே வந்துள்ளது, ஐ.நா சபை இல்லை என்றால் இன்று அது ஒரு சீனாவின் பகுதியாய் இருக்கலாம். எல்லோரையும் போல முஸ்லிம் மன்னர்களிலும் சில கொள்ளையர்கள் இருந்திருக்கலாம், பல வரலாற்றுக்குறிப்புகள்
  ஆங்கிலேயரால் மாற்றம் செய்யப்பட்டு ஹிந்து முஸ்லிம் பிரிவினை விதையிடப்பட்டு சுதந்திரம்? கொடுக்கப்பட்டதாம். இஸ்லாம் இந்தியாவில் வாளால் பரப்பப்பட்டது என்று
  பரப்புகிறார்கள் அப்படியெனில் இன்றும் அன்றாடம் ஹிந்துக்கள் ஏன் இயற்கை வழிக்கு திரும்புகின்றனர், குண்டு வெடிப்பு சம்பவங்களில் அப்பாவி முஸ்லிம்கள் அநியாயமாய் சிறையில் இருக்க இது R S S இவ்வாறு செய்து விட்டு முஸ்லிம்களை வம்புக்கு இழுத்து

  ரத்தக்களரியை உருவாக்க முயலுகின்றனர் என்ற உண்மை வெளி வந்துள்ளதே, எனவே இந்த வசனங்கள் இவ்வாறு மெய்ப்பிக்கப்படுகிறது. நீங்கள் எதிர்பார்க்கும் மனித நேயம் இஸ்லாத்தில் தாராளமாய் இருக்கிறது உங்கள் இருப்பிடத்தையும் ஏனைய பல கோணங்களையும் உற்று நோக்குங்கள். உண்மை விளங்கும். இந்த குர் ஆன் வசனமும் புரியும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க சகோ Riyazy,
   //குர்ஆன் அந்தக்காலத்தில் அந்த சூழ்நிலையில் தான் அருளப்பட்டது அது இந்தக்காலத்திற்கு பொருத்தம் இல்லை என்று சும்மா சொல்லகூடாது.//
   நான் அப்படி சொல்லவில்லை சகோ. எந்த ஒரு நூலும் எக்காலத்திற்கும் பொருந்துவதில்லை. அதுபோலத்தான் குரானும். அதில் உள்ள கருத்துக்கள் எக்காலத்திற்கும் பொருந்தும் என்று மக்கள் எடுத்துக்கொள்ளக்கூடாது என்கிறேன்.

   //அதையும் விட சிறப்பான ஒன்று இருந்தால் அதையும் முன்வைத்து ஒப்பிட்டே சொல்லணும்,//
   குர்ஆனில் சில நல்ல கருத்துக்கள் இருக்கலாம் மறுப்பதற்கில்லை. அதற்காக குரான் மட்டுமே சிறந்த நூல் என்பதை ஏற்க்க இயலாது. ஆத்திசூடி படித்துள்ளீர்களா சகோ.

   //தாங்கள் மனிதத்தை நிறுத்த முயல்கிறீர்களா/ஏனையவற்றை தவிர்த்து இஸ்லாத்தை மட்டும் வாயால் ஊதி அனைத்து விடலாம் என்று கனவு காண்கிறீரா? //
   இசுலாமை அணைப்பது என் நோக்கமல்ல அனைத்து மக்களையும் மதங்களை தாண்டி ஒன்றிணைக்கவேண்டும் என்பதே என் நோக்கம். ஆசை. உங்களுக்கு உள்ள யூத,கிருத்துவ வெறுப்பையும் அவர்களுக்கு முஸ்லிம்கள் உள்ள வெறுப்பையும் அன்பாக மாற்றவேண்டும் என்பதே என் நோக்கம்.

   //சரி,1. யூத,கிருஸ்துவ,இஸ்லாம் என்பன தொடர்புள்ள பிரிவுகள் அவைகளின் வரலாற்று பின்னணியையும் இன்றும் இஸ்லாத்திற்கு எதிரான அவர்களின் தொடர் சூழ்ச்சிகளையும் அறியாமல்/தெரிந்தும் மறைத்து கொண்டு இந்த குர்ஆன் வசனத்தை உங்களால் புரியவே முடியாது//
   இதற்க்கு ஒரு முற்று புள்ளி வைக்கவேண்டும் அல்லவா சகோ? அதற்க்கு ஒரே வழி பழைய பகையை மறக்கவேண்டும் ,....அது மக்கள் மனதில் மனிதத்தை ஏற்ப்படுத்துவதன் மூலம்தானே சாத்தியம் சகோ?

   //குண்டு வெடிப்பு சம்பவங்களில் அப்பாவி முஸ்லிம்கள் அநியாயமாய் சிறையில் இருக்க இது R S S இவ்வாறு செய்து விட்டு முஸ்லிம்களை வம்புக்கு இழுத்து ரத்தக்களரியை உருவாக்க முயலுகின்றனர் என்ற உண்மை வெளி வந்துள்ளதே, எனவே இந்த வசனங்கள் இவ்வாறு மெய்ப்பிக்கப்படுகிறது//

   R S S அமைப்பினர் தவறு செய்திருந்தால் அவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படவேண்டும். ஆனால் அதற்க்கு இந்த வசனங்கள் மெய்ப்பிக்கப் படுகிறது என்பது அறியாமையே சகோ. ஒருவேளை நீங்கள் கசாப் மும்பை தாக்குதலில் இந்துக்களும்,யூதர்களும் கொல்லப்பட்டதற்கு காரணம் இந்த வசனங்கள் தான் காரணம் என்று ஏற்றுகொள்கிரீர்களா?
   சகோ இவ்வாறு பகைமையும்,வெறுப்பும் இருந்தால் உலகில் அமைதி நிலவ வாய்ப்பே இல்லை. இதற்க்கு எப்படி தீர்வு காணலாம் என்று கூறினால் உங்கள் வழியில் பயணிக்க நான் தயார் சகோ.

   // நீங்கள் எதிர்பார்க்கும் மனித நேயம் இஸ்லாத்தில் தாராளமாய் இருக்கிறது உங்கள் இருப்பிடத்தையும் ஏனைய பல கோணங்களையும் உற்று நோக்குங்கள். உண்மை விளங்கும். இந்த குர் ஆன் வசனமும் புரியும்.//
   குர்ஆனில் பல நல்ல கருத்துக்கள், மனித நேயம் இருக்கலாம் மறுப்பதற்கில்லை. ஆனால் மும்பை தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அல்லாவிற்க்காகவும்,சுவனத்திற்க்காகவும் தான் ஈடுபட்டுள்ளனர் என்பதை என்னுடைய பதிவில் விளக்கி உள்ளேன். இனி அவ்வாறு நிகழாமல் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும் .முஸ்லிம்கள் என்ன செய்ய வேண்டும் என்று விளக்கினால் நல்லது சகோ.
   தங்கள வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   நீக்கு
 26. //குர்ஆன் அந்தக்காலத்தில் அந்த சூழ்நிலையில் தான் அருளப்பட்டது அது இந்தக்காலத்திற்கு பொருத்தம் இல்லை என்று சும்மா சொல்லகூடாது.//நான் அப்படி சொல்லவில்லை சகோ.

  எந்த ஒரு நூலும் எக்காலத்திற்கும் பொருந்துவதில்லை. அதுபோலத்தான் குரானும். அதில் உள்ள கருத்துக்கள் எக்காலத்திற்கும் பொருந்தும் என்று மக்கள் எடுத்துக்கொள்ளக்கூடாது என்கிறேன்.//அதையும் விட சிறப்பான ஒன்று இருந்தால் அதையும் முன்வைத்து ஒப்பிட்டே சொல்லணும்,//குர்ஆனில் சில நல்ல கருத்துக்கள் இருக்கலாம் மறுப்பதற்கில்லை. அதற்காக

  குரான் மட்டுமே சிறந்த நூல் என்பதை ஏற்க்க இயலாது. ஆத்திசூடி படித்துள்ளீர்களா சகோ.


  முக்காலமும் அறிந்தவன் இறைவன், நீங்கள் குறிப்பிட்டு இருந்த குர்ஆன் வசனத்தில்

  இறைவனின் முன்னறிவிப்பிற்கு ஏலவே சம்பவங்கள் இன்றும் நடைபெறுகின்றன என்று நான் குறிப்பிட்டற்கு,மாறாக அவ்வாறில்லை யூதர்களும் கிருஸ்தவர்களும்

  நியாயவான்களாகவே வலம் வருகின்றனர் என்று ஆதாரம் சொல்லி இந்த வசனம் தவறு

  என்று முடிந்தால் நிரூபித்து இருக்க வேண்டும்,அல்லாமல் எல்லா நூலும் எல்லா காலத்திற்கும்

  பொருந்தாது என்று மொட்டையாக சொல்லக்கூடாது. ஆன்லைனில் ஆத்திசூடி கிடைக்குமா?

  படிக்க வேண்டும்.1.மனிதர்கள் பகைமை பாராட்டிக்கொள்ள மதங்கள் காரணமல்ல, அவனுள்

  இருக்கும் குரோதமே காரணம்,கொலை செய்ய கத்தி காரணம் அல்ல, கொலை செய்ய

  வேண்டும் என்ற எண்ணமே காரணம்,கொலை செய்கிறார்கள் என்பதால் கத்தியை தடை

  செய்தால் வெங்காயம் நறுக்குவது எப்படி, தூக்க முடியாத ஒரு பளு வரும் போது ஓர்

  எத்தனத்தை பாவிப்பது போல மதத்தை அடக்குமுறை செய்யவோ அல்லது ஒன்றுபட்டு எதிர்க்கவோ மதத்தின் பெயரில் கூடுகிறார்கள். மதமே இல்லை என்றாலும் வேறு ஏதாவது

  ஒன்றை முன்னிறுத்தி அதன் பெயரில் ஒன்றினைவர்.2.எதைக்கடந்தும் மனிதர்களை ஒன்றினைக்கவே முடியாது துன்பத்திலும் இன்பம் காணுவோம், என்பதுபோல இந்த போர்,வஞ்சனை குரோத வெறிகளுக்கு மத்தியில் நாளை இறைத்தீர்ப்பை மனதில் நிறுத்தி நம் அன்றாட செயல்களில் நீதித்துவமாக நடந்தால் நான் வெற்றியாளன் உலகத்தை ஒருபோதும்

  என்னால் திருத்த முடியாது, அது ஒரு பகலில் பகல் கனவு மட்டுமே, இம்மையில்/

  மறுமையில் அவரவர் செய்கைக்கு அவரவருக்கு கூலி. என்பதே திண்ணம்.அதேவேளை

  குட்டக்குட்ட குனியவும் முடியாத நிலைவேறு உள்ளது, இறைதீர்ப்பே இறுதியானது, நியாயமானது.

  ஆனால் அதற்க்கு இந்த வசனங்கள் மெய்ப்பிக்கப் படுகிறது என்பது அறியாமையே சகோ. ஒருவேளை நீங்கள் கசாப் மும்பை தாக்குதலில் இந்துக்களும்,யூதர்களும் கொல்லப்பட்டதற்கு காரணம் இந்த வசனங்கள் தான் காரணம் என்று ஏற்றுகொள்கிரீர்களா?

  இந்த வசனங்களை படித்து விட்டா R.S S யூத,கிருஸ்துவர்கள் இவ்வாறு செய்கின்றனர், பணத்திற்காக(விறுவிறுப்பில் கட்டுரை பம்பாய் தாக்குதலில் மறைமுக அமெரிக்க

  தொடர்பு) கசாபை ஏவியவர்கள் உட்பட அநியாயக்காரர்கள்,

  குர்ஆனில் பல நல்ல கருத்துக்கள், மனித நேயம் இருக்கலாம் மறுப்பதற்கில்லை. ஆனால் மும்பை தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அல்லாவிற்க்காகவும்,சுவனத்திற்க்காகவும் தான் ஈடுபட்டுள்ளனர் என்பதை என்னுடைய பதிவில் விளக்கி உள்ளேன். இனி அவ்வாறு நிகழாமல் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும் .முஸ்லிம்கள் என்ன செய்ய வேண்டும் என்று விளக்கினால் நல்லது> அணிசேரா நாட்டுக்கொள்கையில் 2 நாடும் இருந்தால் இந்திய பாகிஸ்தான் அரசு ஒற்றுமையாய் இருதிருக்கும், I S I யும் ரோவும் பொது எதிரிக்கு வக்காலத்து வாங்காமல் இருந்தால் பொது மக்கள் பஞ்சமா

  பாதகம் தெரியாத சுபீச்ச வாழ்வில் திகைத்து நிற்பர் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளைப் போல

  பதிலளிநீக்கு
 27. வாங்க சகோ Riyazy,
  //முக்காலமும் அறிந்தவன் இறைவன், நீங்கள் குறிப்பிட்டு இருந்த குர்ஆன் வசனத்தில்
  இறைவனின் முன்னறிவிப்பிற்கு ஏலவே சம்பவங்கள் இன்றும் நடைபெறுகின்றன என்று நான் குறிப்பிட்டற்கு,மாறாக அவ்வாறில்லை யூதர்களும் கிருஸ்தவர்களும் நியாயவான்களாகவே வலம் வருகின்றனர் என்று ஆதாரம் சொல்லி இந்த வசனம் தவறு என்று முடிந்தால் நிரூபித்து இருக்க வேண்டும்,அல்லாமல் எல்லா நூலும் எல்லா காலத்திற்கும் பொருந்தாது என்று மொட்டையாக சொல்லக்கூடாது//

  நான் இதுபற்றி பேசவேண்டாம் என்று இருந்தேன். குரான் இறைவசனம் என்பது உங்கள் நம்பிக்கை. அது இறைவசனம் இல்லை எனபது எனது நம்பிக்கை.
  இருப்பினும் முஸ்லிம்களின் நம்பிக்கையை /மனதை புண்படுத்த வேண்டாம் என்ற எண்ணத்தில்தான் அதை இடைச்சொருகல் என்று கூறும்படி சொல்கிறேன்(உண்மை எதுவாகினும்).

  //ஆன்லைனில் ஆத்திசூடி கிடைக்குமா? படிக்க வேண்டும்.//
  இந்த சுட்டியில் நீங்கள் படிக்கலாம்.
  http://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF
  குறிப்பு: இது மதநூல் அல்ல.

  //மனிதர்கள் பகைமை பாராட்டிக்கொள்ள மதங்கள் காரணமல்ல, அவனுள் இருக்கும் குரோதமே காரணம்,//
  நிச்சயமாக சகோ. ஆனால் நீங்களே சில சமயம் யூதர்களை எதிரி என்பதுபோல பார்க்கிறீர்கள் இது தவறுதானே சகோ.
  மும்பை தாக்குதலில் ஈடுபட்டவர்கள் பற்றி கூறி இருந்தேன் அவர்கள் சண்டையிட்டது மதத்திறக்காகத்தான் என்பதை விளக்கியுள்ளேன். இதற்க்கு காரணம் மதம் இல்லை என்று வைத்து கொண்டாலும் மதத்தில் உள்ள கருத்துக்கள் இதற்க்கு துனைபோகும்போழுது அல்லது மதத்தில் உள்ள கருத்துக்களை அவர்கள் அவ்வாறாக புரிந்துகொள்ளும்பொழுது அதை தடுக்கும் கடமை நமக்கு உண்டல்லவா சகோ?

  //மறுமையில் அவரவர் செய்கைக்கு அவரவருக்கு கூலி. என்பதே திண்ணம்.அதேவேளை குட்டக்குட்ட குனியவும் முடியாத நிலைவேறு உள்ளது, இறைதீர்ப்பே இறுதியானது, நியாயமானது.//
  இது உங்களின் நம்பிக்கை மட்டுமே.

  //ஒருவேளை நீங்கள் கசாப் மும்பை தாக்குதலில் இந்துக்களும்,யூதர்களும் கொல்லப்பட்டதற்கு காரணம் இந்த வசனங்கள் தான் காரணம் என்று ஏற்றுகொள்கிரீர்களா?//
  மும்பை தாக்குதலில் ஈடுபட்டவர்கள் நாம் அல்லாவின் அடிமைகள்,இசுலாமை காப்பாற்றவேண்டும்,அவ்வாறு செய்தால் நமக்கு சுவனம் கிடைக்கும் என்று பேசிக்கொண்டனர் என்ற ஆதாரத்தை
  http://kelviyumnaaneypathilumnaaney.blogspot.in/2013/01/blog-post_27.html
  இந்த கட்டுரையில் தந்துள்ளேன். நீங்கள் படித்திருப்பீர்கள் என நினைக்கின்றேன்.

  //இந்த வசனங்களை படித்து விட்டா R.S S யூத,கிருஸ்துவர்கள் இவ்வாறு செய்கின்றனர்,//
  நல்ல கேள்வி சகோ .ஆனால் இவர்கள் யாருக்கும் முஸ்லிம்களை கொன்றால் சொர்க்கம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்லை. இருப்பினும் இவர்கள் தவறும் தண்டனைக்குரியதே.அதை அரசாங்கம் செய்யும் சகோ.

  //அணிசேரா நாட்டுக்கொள்கையில் 2 நாடும் இருந்தால் இந்திய பாகிஸ்தான் அரசு ஒற்றுமையாய் இருதிருக்கும், I S I யும் ரோவும் பொது எதிரிக்கு வக்காலத்து வாங்காமல் இருந்தால் பொது மக்கள் பஞ்சமா
  பாதகம் தெரியாத சுபீச்ச வாழ்வில் திகைத்து நிற்பர் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளைப் போல//

  நல்ல கருத்து சகோ. என்னைக்கேட்டால் இந்தியாவை பிரிக்காமலே இருந்திருக்கலாம் அது நமது முன்னோர்கள் செய்த பெரும்தவறு.
  இதேநேரத்தில் சகோ நாம் இன்னும் ஒன்றையும் சிந்தித்து பார்க்கவேண்டும். தாலிபான்கள் அப்பாவி ஷியா முஸ்லிம்களையும், அப்பாவி சுபி முஸ்லிம்களையும் கொல்கின்றனர். இதற்க்கு என்ன காரணம்,அதை எப்படி தடுப்பது என்று தங்களுக்கு தெரிந்தால் விளக்குங்கள்.
  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.

  பதிலளிநீக்கு
 28. மாறாக அவ்வாறில்லை யூதர்களும் கிருஸ்தவர்களும் நியாயவான்களாகவே வலம் வருகின்றனர் என்று ஆதாரம் சொல்லி இந்த வசனம் தவறு என்று முடிந்தால் நிரூபித்து இருக்க வேண்டும்,அல்லாமல் எல்லா நூலும் எல்லா காலத்திற்கும் பொருந்தாது என்று மொட்டையாக சொல்லக்கூடாது// நான் இதுபற்றி பேசவேண்டாம் என்று இருந்தேன். குரான் இறைவசனம் என்பது உங்கள் நம்பிக்கை. அது இறைவசனம் இல்லை எனபது எனது நம்பிக்கை.>>>>அப்போ பேசாதீங்க விடுங்க,

  ஆன்லைனில் ஆத்திசூடி கிடைக்குமா? படிக்க வேண்டும்- ஆ.சூடி-108. ஒன்னாரைத் தேறேல்-

  (பகைவர்களை நம்பாதே)? யூதர்கள்,கிருஸ்தவர்கள் என்றால் எல்லோரும் அல்ல, தலைமைத்துவத்தில் இருந்து கொண்டு ராஜதந்திரமாக குழப்பம் விளைவிப்பவர்களை

  குறிக்கும், ஔவையார் சொன்னதும் இவர்களை போன்றவர்களைத்தான்.

  மும்பை தாக்குதலில் ஈடுபட்டவர்கள் பற்றி கூறி இருந்தேன் அவர்கள் சண்டையிட்டது மதத்திறக்காகத்தான் என்பதை விளக்கியுள்ளேன். இதற்க்கு காரணம் மதம் இல்லை என்று வைத்து கொண்டாலும் மதத்தில் உள்ள கருத்துக்கள் இதற்க்கு துனைபோகும்போழுது அல்லது மதத்தில் உள்ள கருத்துக்களை அவர்கள் அவ்வாறாக புரிந்துகொள்ளும்பொழுது அதை தடுக்கும் கடமை நமக்கு உண்டல்லவா சகோ?

  நீங்கள் உளவுத்துறையின் செயல்பாடுகளை நியாய எண்ணத்தோடு ஊகிக்க வேண்டும்.

  அஜ்மல் கசாப் எந்த இயக்கத்தையும் சார்ந்தவன் அல்லன், ஏழ்மையையும், பணத்தாசை

  பிடித்தவர்களையும் கொண்டு உலக உளவுத்துறை செய்யும் கைங்கரியங்கள் இவை, எய்தவன் யார் என்று பாராமல் அம்பை நோகுகிறீர்கள், எயபவனை நோக்கி உங்கள்

  ஆதங்கம் இருக்கட்டும்.

  சரி, வெளிப்படையாகவே சொல்கிறேன் இஸ்லாத்தில் ஜிஹாத் அது தான் எதிரிகளின்

  கண்ணை அன்றாடம் உறுத்துகிறது அதை இல்லாமல் ஆக்கி இஸ்லாத்தை முடமாக்க

  எண்ணுவதே எல்லா எதிரிகளின் ஒத்த நோக்கம், அது இல்லாத உயிர் எனக்கேது..


  இதேநேரத்தில் சகோ நாம் இன்னும் ஒன்றையும் சிந்தித்து பார்க்கவேண்டும். தாலிபான்கள் அப்பாவி ஷியா முஸ்லிம்களையும், அப்பாவி சுபி முஸ்லிம்களையும் கொல்கின்றனர். இதற்க்கு என்ன காரணம்,அதை எப்படி தடுப்பது என்று தங்களுக்கு தெரிந்தால் விளக்குங்கள்>>.
  அது அந்நிய ஆக்கிரமிப்புக்கு எதிராக சுதந்திர போர் நடக்கும் நாடு, அதை விட்டு விட்டு

  அமைதியாய் இருக்கும் நாட்டில் ஏன் இன்னும் சிறுபான்மை தமிழர்கள் ஒடுக்கப்படுகிறார்கள்

  என்று பார்க்கலாம். முதலில் தனக்குள்ளே தாக்குதல் நடத்தி விட்டு பயங்கரவாத வேட்டை

  என்று அந்நிய நாடுகளில் தலையீடு செய்வதை நிறுத்த வேண்டும். வீட்டோ அதிகாரம்

  நீக்கப்படனும், ஐ.நா சபையில் சாதாரண ஒரு குட்டி நாட்டுக்கும் சமத்துவம் கொடுக்கப்பட வேண்டும் ...........இப்படி நிறைய மாற்றங்கள் தேவை உள, அது வல்லுனர்களால் முன்

  வைக்கப்படும், அதற்கு பலவிதத்தில் தம் வல்லமையை எவ்வழியிலேனும் நிரந்தரமாக

  தக்க வைக்கனும் என்ற ஆசையை துறந்து மேற்கத்தேயர் மனமுவந்து வந்தால்,.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க எனதருமை சகோ riyaazi,// நான் இதுபற்றி பேசவேண்டாம் என்று இருந்தேன். குரான் இறைவசனம் என்பது உங்கள் நம்பிக்கை. அது இறைவசனம் இல்லை எனபது எனது நம்பிக்கை.>>>>அப்போ பேசாதீங்க விடுங்க,//
   சகோ, இந்த இடத்தில் உண்மை என்பது ஒன்றுதான். இருவரில் ஒருவர் அறியாமையில் இருக்கின்றோம். நமது அறியாமை நீங்கும் வரை கலந்துரையாடுவதில் எந்த தவறும் இல்லை சகோ.

   //ஆ.சூடி-108. ஒன்னாரைத் தேறேல்- (பகைவர்களை நம்பாதே)? யூதர்கள்,கிருஸ்தவர்கள் என்றால் எல்லோரும் அல்ல, தலைமைத்துவத்தில் இருந்து கொண்டு ராஜதந்திரமாக குழப்பம் விளைவிப்பவர்களை குறிக்கும், ஔவையார் சொன்னதும் இவர்களை போன்றவர்களைத்தான்.//

   சகோ, நீங்கள் ஆத்திசூடி படித்துவிட்டீர்களா? பார்த்தீர்களா அதில் எவ்வளவு நல்ல கருத்துக்கள் உள்ளன?
   ஔவையார் பகைவர்களை நம்பாதே என்று ஒரு தனிமனிதனுக்கு அறிவுரை கூறுகிறார். ஒருவனுடன் பகை இருக்கும்பொழுது அவன் தவறாக நடக்கலாம் என்று அவர் கூறியுள்ளார். இது தவறல்ல. இருப்பினும் நாம் அனைவரும் பகை என்பதை கூட கடந்து செல்லவேண்டும் என்பதே எனது விருப்பம். எல்லாவற்றிற்கும் மேலாக நானோ ஔவையோ இது இறைவேதம் எக்காலத்திற்கும் பொருந்தும் என்று கூறுவதில்லை.
   குர்ஆனில் யூதர்களை எதிரியாக பாருங்கள் என்றுதான் இருக்கின்றது. நீங்கள் சொல்வதுபோல தலைமையில் உள்ளவர்களை மட்டுமே எதிரியாக பாருங்கள் என்றா இருக்கின்றது? இதை படிக்கும் ஒருவன்,குரானை இறைவேதம் என்று நம்பும் ஒருவன் எல்லா யூதர்களையும் தான் எதிரியாக பார்ப்பான். இன்று இதுதான் பல இசுலாமிய பதிவர்களின் நிலையும் கூட. முஸ்லிம்களை எதிரியாக பாருங்கள் என்று ஒருவன் கூறினால் அதை உங்களால் ஏற்க்க முடியுமா? சற்று சிந்தித்து பாருங்கள் சகோ. இசுலாமில் ஒரு ஹதீசு என்ன கூறுகிறது எனில் எனக்கு பின்புறம் ஒரு யூதன் ஒலிந்திருக்கிரான் என்று கூறும் வரை இறுதிநாள் வராது என்கிறது. யூதர்களை இறுதி நாள் வரை எதிரியாக பார்க்கவேண்டும் என்பது ஏற்ப்புடையதா சகோ?

   //எயபவனை நோக்கி உங்கள் ஆதங்கம் இருக்கட்டும்.//
   சகோ இந்த இடத்தில் இரண்டுவிதமான அணுகுமுறையை நாம் பின்பற்ற வேண்டும்.
   முதலில் இனியும் ஒரு அஜ்மல் கசாப் உருவாகாமல் இருக்க என்ன செய்யவேண்டுமோ அதை நாம் செய்ய வேண்டும்.
   இரண்டு.குரான் வசனங்கள்,இசுலாமிய நம்பிக்கைகளில் தீவிரவாதத்திற்கு பயன்படுகின்றவற்றை தவறு என்று நாம் புரியவைக்க வேண்டும்.

   //இஸ்லாத்தில் ஜிஹாத் .....................அது இல்லாத உயிர் எனக்கேது..//
   சகோ, நீங்கள் இசுலாமின் மீது அளவுக்கதிகமான பற்றை வைத்துள்ளீர்கள் ஆனால் அதற்காக உயிரை விடுதல் எனபது அறியாமையின் உச்சம் சகோ. இதேபோலத்தானே யூதர்களும்,கிருத்துவர்களும்,இந்துக்களும் அவர்கள் மதம் மீது பற்று வைத்திருப்பார்கள்? நீங்கள் எல்லா மதத்தையும் அழித்து விட்டு இசுலாமை மட்டும் அனைவரும் ஏற்க்க வேண்டும் என்பது முறையா சகோ? எல்லோரும் தங்கள் மதத்திற்காக உயிரை விட நினைத்தால் உலகமே சுடுகாடாகும் இல்லையா சகோ? சிந்தித்து பாருங்கள்.

   மதப்பற்றை விட மனிதப்பற்றே தனிமனித அமைதிக்கும், உலக அமைதிக்கும் வித்திடும்.
   உங்களின் பிற கருத்துக்களுக்கும் மிக்க நன்றி....
   நன்றாக சிந்தித்து மதத்திற்காக உயிரைவிடலாம் என்ற சிந்தனையை விட்டொழியுங்கள்.

   என்றும் மனிதத்துடன்
   உங்கள் அன்புச்சகோதரன்
   இராச. புரட்சிமணி

   நீக்கு
 29. மனித நேயம் முதலில் வளர எல்லா மனிதர்களையும் சமத்துவமாக என்ன வேண்டும்.

  எல்லா மக்களையும் சமத்துவமாக நடத்தக்கூடிய ஒரு உண்மையான, நீதியான, உறுதிமிக்க, ஒரு உலக பொது அமைப்பு உலகின் எல்லா தேச வல்லுனர்களால் இணைந்து

  உருவாக்கப்பட வேண்டும், அந்த அமைப்புக்கு மட்டுமே எந்த நாட்டின் உள்விவகாரங்களில்

  தலையிடக்கூடிய அதிகாரம் இருக்க வேண்டும்,எந்த நாட்டுக்கும் வீட்டோ அதிகாரம்

  என்று ஒன்று இருக்கக்கூடாது, அணு ஆயுதங்கள் உலகில் முற்றிலுமாக அழிக்கப்படல்

  வேண்டும். நாடு என்று மட்டும் பாராமல், அந்த நாடுகளில் வாழும் தெரிவு செய்யப்பட்ட

  சிறுபான்மையின தலைமையும் ஏற்றுக்கொள்ளப்படல் வேண்டும். 6 கோடி மக்கள் கொண்ட

  பிரித்தானியாவுக்கு வீட்டோ அதிகாரம் அதையும் விட அதிக மக்கள் கொண்ட நாடுகள்

  (உ-ம் இந்தியா) வீட்டோ அதிகாரம் இல்லை, யுரோசிமா,நாகசாகியில் குண்டு போட்ட

  யு.எஸ்சிடம் அணுகுண்டு இருக்கலாம் ஈரான் வட கொரியா விடம் இருக்கக்கூடாது,

  இராக்கில் ரசாயன ஆயுதம் கிடைத்ததா? பின் லாடனை கொன்ற பிறகும்

  ஆப்கானிஸ்தானில் என்ன வேலை, இன்னும் பக்கம் பக்கமா சொல்லலாம், எனவே மேலே கூறியவாறு ஓர் உலகளாவிய அமைப்பை உருவாக்க எடுத்துச்சொல்லுங்கள் நடைமுறைக்கு வந்தால் குர்ஆன் இக்காலத்திற்கு பொருந்தாது என ஏற்றுக்கொள்கிறோம், நீங்க திருந்துங்க அவங்க பிறகு திருந்துவார்கள் என்று

  சொல்லாதீர்கள், ஆளுமையில் உள்ளவர் திருந்தி உண்மையாய் வந்தால் தான் ஆண்டியும் திருந்துவான் இல்லையேல்,cool

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க சகோ Riyazy,
   உங்களின் கருத்துக்களில் பல நியாயங்கள் உள்ளன. நம் இருவரது சிந்தனையும் ஓரளவிற்கு ஒன்றுதான். நேரம் கிடைக்கும் பொழுது இப்பதிவை படித்து பாருங்கள். ,
   http://kelviyumnaaneypathilumnaaney.blogspot.in/2012/11/blog-post_23.html

   நான் முரன்படுபவற்றை மட்டும் சுட்டி காட்ட விரும்புகிறேன்.

   //சிறுபான்மையின தலைமையும் ஏற்றுக்கொள்ளப்படல் வேண்டும்.//
   சிறுபான்மை பெரும்பான்மை என்ற நிலையே இல்லாது செய்யவேண்டும் சகோ.

   //பின் லாடனை கொன்ற பிறகும் ஆப்கானிஸ்தானில் என்ன வேலை,//
   பின்வருவதும் தாலிபான் பற்றி உங்களின் முந்தைய பின்னூட்டமே.
   //அது அந்நிய ஆக்கிரமிப்புக்கு எதிராக சுதந்திர போர் நடக்கும் நாடு, //

   உங்களுடைய கருத்தில் தாலிபான் பற்றிய கருத்தோடு நான் மாறுபடுகிறேன்.
   அவர்கள் சுதந்திர போராட்ட வீரர்கள் என்பதை ஏற்க்க இயலாது.
   சுதந்திர போராளிகள் ஏன் பெண் கல்விக்கு எதிராக இருக்க வேண்டும்? ஏன் பெண்கள் படிக்கும் பள்ளியில் மருந்தை கலக்க வேண்டும்?
   எட்டு வயதிற்கு மேல் பெண்கள் குரானை தவிர எந்த புத்தகத்தையும் படிக்க கூடாது என்று சட்டம் போட்டவர்கள் அவர்கள். இதை நீங்கள் வரவேற்கிறீர்களா?
   வேலைக்கு சென்றதனால் ஹூசை என்ற பெண்ணை சுட்டு கொன்றவர்கள் தாலிபான்கள்.
   7793 பெண் ஆசிரியைகளின் வேலையை பறித்தவர்கள் அவர்கள்
   தாலிபான்கள் பெண்களுக்கு பல கொடுமைகள் புரிந்துள்ளனர். அவர்களை சுதந்திர போராளிகள் என்பதைவிட வேறு அறியாமை இருக்கமுடியாது சகோ.

   நேரம் கிடைக்கும் பொழுது இதையும் படித்து பாருங்கள்.
   http://en.wikipedia.org/wiki/Taliban_treatment_of_women
   நாம் முடிந்தரை தாலிபான்களை திருத்தத்தான் பார்க்கவேண்டுமே ஒழிய அவர்களுக்கு ஆதரவு என்பது ஆப்பாத்தானது சகோ.
   சிந்தித்து பாருங்கள்.
   நன்றி

   நீக்கு
 30. சந்தோஷம் நாம் இருவரும் ஒரே கருத்தில் ஒற்றுமை நிலைக்கு வந்தற்கு, சிறுபான்மை பெரும்பான்மை என்று இருக்கக்கூடாது, அதுவும் சந்தோஷம், எனவே தலிபான் விடயம் மட்டுமே இங்கு எஞ்சி இருக்கும் விவாதம்,சரி இந்தியா சுமார் 150 வருட காலம் பிரித்தானிய காலநித்துவ (அடிமை) நாடாக இருந்தது, அப்போது அவர்கள் திருத்துவ பாடசாலை அமைத்து கல்வியை மட்டும் போதிக்கவில்லை கிருத்துவத்தையும் மேல் நாட்டு கலாச்சாரத்தையும் இணைத்தே பயிற்ருவித்தனர் விளைவு இன்றும் ஆங்கிலம் அதன் மோகம் உயர்தரமாகவே மட்டிடப்படுகிறது, அஹிம்சை சுதந்திரப்போராளி காந்தி அவர்கள் போராட்ட காலத்தில் ஆங்கிலப்பொருட்ளை நிராகரித்தார் ஆனால் கல்வி முறையை நிராகரிக்க முடியவில்லை, ஏனெனில் அது ஏற்கனவே நன்கு ஊறிவிட்டது. சரி, ஆப்கானிஸ்தானை பார்த்தால் அது இன்றுசாதாரண இயல்பு நிலையில் இருக்கும் ஓர் நாடல்ல, அங்கு ஆக்கிரமிப்பு படைக்கும் உள்நாட்டு மக்களுக்கும் யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது,அந்நிய நாட்டுப்படைகளின் இருப்பை காலநிர்ணயம் செய்ய முடியாது.அங்குள்ள தலிபான் கட்டுப்பாட்டில் உள்ள சிறுவர்களுக்கு உ-ம் 5-16 வரை
  எடுத்துக்கொள்வோம் ஆங்கில கல்வியையும் அவர்களது கலாச்சாரத்தையும் கல்வியாக கற்றால் இன்னும் 15 வருடங்களில் நிறைய ஒற்றர்களையும் ஆங்கில மோகம் கொண்ட
  தலிபான் விரோதிகளும் அவர்களுக்குள் பெருகி விடுவர்,யுத்தம் செய்யாமலே இலகுவாக முழு நாட்டையும்விரோதிகளால் கைப்பற்றி விடலாம்,தற்போதைக்கு அவர்களின் சின்ன
  தவறுகளும் பெரிதாகவே காட்டப்படும், சீச்சீ இந்தப்பழம் புளிக்கும். எனவே முதலில் விடுதலை பின் பாதுகாப்பான சூழ்நிலை நாட்டில் உறுதி செய்யப்பட்டால் எந்தக்கல்வி முறைகளையும் மறுக்கவர், கற்க வசதி இன்றி அல்லலுறும் ஆபிரிக்க சிறுவர்கள் உள, சும்மா கொடுப்பார்களா? மிசனரியும் சேர்ந்தல்லவா இயங்கும்.

  இஸ்லாம் கல்வி கற்பதை ஊக்குவிக்கிறது, முஸ்லிம் நாடுகள் ஆங்கில கல்வி கற்க ஊக்குவிக்கின்றன முதலில் அந்நிய மண்ணில் இருந்து ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேறட்டும் பின்பு கல்வியைப்பற்றி யோசிக்கலாம்,ஆக்கிரமிப்பாளர்களின் கல்விமுறை முக்கியமா, நாட்டின் சுதந்திரம் முக்கியமா? அவர்களின் முடிவு.சரியானதே,

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முதலில் தாமதமாக பதில் அளிப்பதற்கு மன்னிக்கவும் சகோ.
   சகோ முதலில் நீங்கள் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும்.....தாலிபான்களின் நோக்கம் இசுலாமிய ஆட்சியை நிறுவ வேண்டும் எனபதே ....அவர்களின் நோக்கம் மக்களாட்சி என்றால் நாம் முக்கியத்துவம் தரலாம்.

   அவர்கள் மதவெறி கொண்டு அப்பாவி மக்களை கொல்வதை எப்படி சகோ ஏற்க்க முடியும்?
   நடன்மாடியாதற்காக 17 அப்பாவி முஸ்லிம்களை கொன்ற இவர்களை சுதந்திர போராட்ட வீரர்கள் என்று கூறுவதை விட வேறு அபத்தம் இருக்க முடியுமா சகோ? சற்று சிந்தித்து
   பாருங்கள்..

   //முதலில் அந்நிய மண்ணில் இருந்து ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேறட்டும் பின்பு கல்வியைப்பற்றி யோசிக்கலா//

   ஆப்கானிஸ்தானை பொருத்தவரை அந்நிய படைகள் தாலிபான்களை திருத்தாமல் வெளியேறினால் ஆப்கானிஸ்தான் மதவெறி நாடாக மாறும்...இது முதலில் அங்கு வாழும் முஸ்லிம்களுக்கே நல்லதல்ல.
   தாலிபான்களை பற்றி இசுலாமிய பற்று இல்லாமல் படித்து பாருங்கள்....உங்களுக்கு உண்மை புரியவரும்.....

   நீக்கு

 31. சகோ முதலில் நீங்கள் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும்.....தாலிபான்களின் நோக்கம் இசுலாமிய ஆட்சியை நிறுவ வேண்டும் எனபதே ....அவர்களின் நோக்கம் மக்களாட்சி என்றால் நாம் முக்கியத்துவம் தரலாம்.> மக்களாட்சி அழகான ஒரு கானல் காட்சி வேறு வழியின்றி கைநாட்டு வைக்க நீலக்கட்சி அல்லது சிகப்புக்கட்சி, வாக்கு பெற்றவனோ கோடிகளில் புரள இனாமாக வாக்கை வழங்கி விட்டு அதே கூலிக்கு மாரடிக்கும் அந்த மக்கள் கூட்டம்.இதற்கு பெயர் மக்களாட்சி? இந்த மக்கள் ஆட்சி முறைக்கு ஒரு நிரந்தர திட்டம் கிடையாது அப்பப்போதய நிகழ்கால தலைமைத்துவம் அவர்களின் நலன்களுக்கு ஏற்ப இந்த
  மக்கள் ஆட்சி முறையில் மாற்றம் செய்வர், வெள்ளையர்கள் அவ்வாரே அதை இயற்றியும் உள்ளனர் வட்டியல் பொருளாதார சுரண்டல் அதன் பிரதான தொழிலாகும். தொடர் உலக ஏகாதிபத்திய இருப்பின் பேராசையினால் கடந்த காலங்களில் உருவான சோசலிசத்தை தோல்வியடைய செய்துவிட்டு இருக்கும் சரியாத் சட்டத்தையும் அழித்து விடவே இத்தனை படையெடுப்புகள் டிரோன் குண்டு மழைக்கொலைகள் வெளிநாட்டு உள்விபகார தலையீடுகளும் நடந்து கொண்டிருக்கிறது, உண்மையான மக்கள் ஆட்சி சரியத் சட்டத்தில் தான் உள்ளது சிந்தித்தால் புரியும். 17 பேர் கொலை செய்யப்பட்டார்கள் அது பற்றி எனக்கு தகவல் கிடைக்கவில்லை ஆனால் தலிபான்களால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு பின் விடுவிக்கப்படும் மேல் நாட்டு நிருபர்கள் பலர் இஸ்லாமியர்களாக ஏன் மாறுகின்றனர். அடுத்த முறை தேடி சில வீடியோ லிங்க்கள் தருகிறேன். சரியத் சட்டத்தை நன்கு பார்க்கவும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க Riyazy,
   தாலிபான்கள் தீவிரவாதிகள் என்பதை தங்களால் ஏற்க்க முடியவில்லை அதனால் தான் 17 பேரை கொன்றதை செய்தி கிடைக்கில்லை என்கிறீர்கள் என நினைக்கின்றேன். அல்லா ஆண்டவர் தராததையும் கூகுல் ஆண்டவர் தருவார். உங்களுக்காக நானே தருகிறேன்.
   http://abcnews.go.com/International/taliban-behead-17-singing-dancing/story?id=17084797

   //மக்களாட்சி அழகான ஒரு கானல் காட்சி வேறு வழியின்றி கைநாட்டு வைக்க நீலக்கட்சி அல்லது சிகப்புக்கட்சி, வாக்கு பெற்றவனோ கோடிகளில் புரள இனாமாக வாக்கை வழங்கி விட்டு அதே கூலிக்கு மாரடிக்கும் அந்த மக்கள் கூட்டம்.இதற்கு பெயர் மக்களாட்சி?/
   ஷரியா சட்டத்தில் நீங்கள் அடிமைகள். மக்களாட்சியில் நீங்கள் மன்னர்கள் புரிந்துகொள்ளுங்கள் சகோ.
   இசுலாமில் மதம் மாறினால் மரண தண்டனை என படித்ததாக ஞாபகம். முகமதுவை,குரானை பற்றி கேள்வி கேட்டாலும் தண்டனைதான்.
   இதேபோல தண்டனைகள் இந்து மதத்தில் இருந்திருந்தால் உங்கள் முன்னோர்கள் நிலை என்னவாகியிருக்கும்? சிந்தித்து பாருங்கள் riyazi .

   // இந்த மக்கள் ஆட்சி முறைக்கு ஒரு நிரந்தர திட்டம் கிடையாது அப்பப்போதய நிகழ்கால தலைமைத்துவம் அவர்களின் நலன்களுக்கு ஏற்ப இந்த மக்கள் ஆட்சி முறையில் மாற்றம் செய்வர்//

   எதற்கு நிரந்தர திட்டம்? மாற்றம் ஒன்றே மாறாதது. நீங்கள் வாகனம் ஒட்டுகிறீர்கள் சிகனல் சட்டம் யாரு கொண்டு வந்தது அல்லாவா மனிதர்களா? மனித நலனுக்காக கொண்டுவருவதுதான் மக்களாட்சி. எவனோ ஒருவன்,அரசர்கள் ஏய்த்து பிழைக்க கொண்டு வந்ததுதான் ஷரியா சட்டம். சிந்தித்து பாருங்கள்...கொஞ்சம் படித்து பாருங்கள் சகோ உங்களுக்கு உண்மை விளங்கும்.

   // தலிபான்களால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு பின் விடுவிக்கப்படும் மேல் நாட்டு நிருபர்கள் பலர் இஸ்லாமியர்களாக ஏன் மாறுகின்றனர்.//
   உங்களுக்கு அல்லா சொன்னதே தெரியவில்லை சகோ. இசுலாமை ஏற்றுக்கொள் இல்லை உயிரைவிடு என்று கூறி போரிடுவதுதான் அல்லா கற்றுக் கொடுத்த போர் முறை சகோ. இவர்கள் உயிருக்கு பயந்து இசுலாமை ஏற்றுள்ளனர் அவ்வளவே. தாலிபான்களால் விடுவிக்கப்பட்டவர்கள் ஏன் தங்கள் சொந்த மதத்தில் நீடிக்கமுடியவில்லை? நீடிக்க கூடாது..நீடித்தால் கொல்லப்படுவீர்கள் என்று அவர்கள் மிரட்டியிருப்பார்கள்...அல்லாவின் வழியில். இல்லை தாலிபான்கள் அவர்களுக்கு இசுலாம் பற்றி வகுப்பெடுத்து புரிய வைத்தார்கள் என்றால் அது உங்கள் அறியாமையே சகோ.

   சகோ மதத்தின் பெயரால் சிலர் நம்மை ஏமாற்றுகின்றனர் இதை முதலில் புரிந்துகொள்ளுங்கள். சுவனத்தில் அது கிடைக்கும் இது கிடைக்கும் என்பதெல்லாம் வெறும் பொய்.
   நாம் வாழும் வாழ்க்கையை நாம் சுவனமாக்கிகொள்ள முடியும். அது நோக்கி நடைபோடுவோம்.
   நன்றி

   நீக்கு
 32. பார்த்தேன், All 17 bodies, including those of two women, were decapitated, but it was not clear if they had been shot first. 15 அந்நிய ஆண்களும் இரண்டு பெண்களும் பாட்டுப்பாடி ஆட்டம் போடுவது தகுமோ, அமெரிக்க சீரழிந்த கலாச்சாரத்தை அவர்கள் எப்படி ஏற்றுக்கொள்வர்./

  ஷரியா சட்டத்தில் நீங்கள் அடிமைகள். மக்களாட்சியில் நீங்கள் மன்னர்கள் புரிந்துகொள்ளுங்கள்> கண்மூடித்தனமான வெறுப்பின் வரிகள் இவை,
  சரியத் சட்டம் நபித்தோழர்கள் காலத்தில் சரியாக பின்பற்றப்பட்டது, உமர் (ரலி) யின் ஆட்சியை காந்தி அவர்களே பாராட்டிக்கூரும் போது இது போன்ற ஆட்சி தான் இந்தியாவுக்கு
  அவசியம் என்றார், இன்னும் பல மேல் நாட்டு அறிஞர்கள் உட்பட, 1980 களில் அமெரிக்க கலாச்சாரத்தில் இருந்து விடுபட்டு இஸ்லாமிய ஆட்சிக்கு மாறிய போது Iran அமேரிக்காவின் பகையாளி ஆனது இன்றும் அவர்களுக்கு சொல்லொன்னா துன்பம் கொடுக்கின்றனர்.
  ஆப்கானியரையும் கேடுகெட்ட மேற்கு சீரழிவை ஏற்க வைத்தால் இலாவகமாக அமர்ந்து கொண்டு சுற்றுப்புற நாடுகளை அச்சுறுத்தலாம், திருத்த? வேண்டும் என்றால் ஆப்கானை விட எத்தனை ஆபிரிக்க நாடுகள் இன்னும் பல இடங்கள்
  உள்ளனவே, தலிபான் காதுல பூ சுற்றி இல்லை கேட்கும் நானும் தான்./

  இசுலாமில் மதம் மாறினால் மரண தண்டனை என படித்ததாக ஞாபகம். முகமதுவை,குரானை பற்றி கேள்வி கேட்டாலும் தண்டனைதான்.- மன்னிப்பே சிறந்தது ஆனால் ஒரு மன்னிப்பு அதே போன்ற குற்றங்களை மேலும் பலர் செய்து விட்டு, மன்னிப்பை எதிர்ப்பார்த்தால் அவருக்கும் மன்னிப்பு வழங்கா விட்டால் நீதி பிரழ்ந்து விடும். குற்றங்களும் அதிகரிக்கும். எனக்கும் ஞாபகம் நபிகளார் ஒருவருக்கு மரண தண்டனை வழங்கியதாக மதம் மாறியதற்கு மட்டும் அல்ல இன்னும் பல
  காட்டிக்கொடுப்புகள் இருந்ததாம், பலமான ஹதீதா/பலகீனமானதா என்றும் தேடவேண்டும்/

  இதேபோல தண்டனைகள் இந்து மதத்தில் இருந்திருந்தால் உங்கள் முன்னோர்கள் நிலை என்னவாகியிருக்கும்? சிந்தித்து பாருங்கள் riyazi முன்னோர்கள் ஆளுமையுடன் தான் இருந்திருக்கிறார்கள், 1948 பின் அந்த நோக்கம் உள்எழுந்து அண்மைய எதிர்காலத்தின்
  முஸ்லிம்களுக்கு எதிராக அப்படி ஒரு திட்டம் இருக்கிறது, எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்/

  எதற்கு நிரந்தர திட்டம்? மாற்றம் ஒன்றே மாறாதது. நீங்கள் வாகனம் ஒட்டுகிறீர்கள் சிகனல் சட்டம் யாரு கொண்டு வந்தது அல்லாவா மனிதர்களா? மனித நலனுக்காக கொண்டுவருவதுதான் மக்களாட்சி. எவனோ ஒருவன்,அரசர்கள் ஏய்த்து பிழைக்க கொண்டு வந்ததுதான் ஷரியா சட்டம். சிந்தித்து பாருங்கள்...கொஞ்சம் படித்து பாருங்கள் சகோ உங்களுக்கு உண்மை விளங்கும்.> சின்னப்புள்ளத்தனமா பதில் சொல்றீங்க சிக்னல் லைட் பற்றியா நான் சொல்ல வாரேன், ஆட்சியாளர்களின் ஊழல்,கருப்புப்பணம், ஏழைகள் அன்றாட பண்டங்களுக்கு கட்டும் வரிப்பணம் வட்டி பணக்காரர்களை மேலும்...... ஆனால் சரியத் சட்டம் வட்டியை தடை செய்து, 100/2.5 ஏழை வரிப்பணம் செலுத்தப்பட வேண்டும், ஊழல்களுக்கு கடுமையான தண்டனைகள் (நீங்கள் கேட்டவை) இது சமத்துவத்தை உண்டாக்கும். வங்கி லோன் குடுப்பது பணக்காரனுக்கு மட்டுமே, ஏழை ஏழையாகவே இருக்க வேண்டும் இன்னும் எவ்வளவோ சொல்லலாம்./

  // தலிபான்களால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு பின் விடுவிக்கப்படும் மேல் நாட்டு நிருபர்கள் பலர் இஸ்லாமியர்களாக ஏன் மாறுகின்றனர்.//
  உங்களுக்கு அல்லா சொன்னதே தெரியவில்லை சகோ. இசுலாமை ஏற்றுக்கொள் இல்லை உயிரைவிடு என்று கூறி போரிடுவதுதான் அல்லா கற்றுக் கொடுத்த போர் முறை சகோ. இவர்கள் உயிருக்கு பயந்து இசுலாமை ஏற்றுள்ளனர் அவ்வளவே. தாலிபான்களால் விடுவிக்கப்பட்டவர்கள் ஏன் தங்கள் சொந்த மதத்தில் நீடிக்கமுடியவில்லை? நீடிக்க கூடாது..நீடித்தால் கொல்லப்படுவீர்கள் என்று அவர்கள் மிரட்டியிருப்பார்கள்.>தலிபானால் விடுவிக்கப்பட்டு தன் சொந்த நாட்டுக்கு திரும்பியோரை அவர்களை எவ்வாறு

  மிரட்ட முடியும்>youtube > type >taliban released western jernolist become muslim

  பதிலளிநீக்கு
 33. சகோ மதத்தின் பெயரால் சிலர் நம்மை ஏமாற்றுகின்றனர் இதை முதலில் புரிந்துகொள்ளுங்கள். சுவனத்தில் அது கிடைக்கும் இது கிடைக்கும் என்பதெல்லாம் வெறும் பொய்.
  நாம் வாழும் வாழ்க்கையை நாம் சுவனமாக்கிகொள்ள முடியும். அது நோக்கி நடைபோடுவோம்.> ஜப்பான் அபிவிருத்தி அடைந்த நாடுகளில் முன்னணி வகிக்கிறது. நான் அங்கு 6 வருடங்கள் இருந்தேன், அவர்களோ சுய கலாச்சாரத்தை இழந்து விட்டு
  அமெரிக்க சீரழிவு கலாச்சாரத்தை நிர்பந்தத்தால் ஏற்றுக்கொண்டுள்ளனர். ஒரு ஏழை நாட்டையும் ஜப்பானையும் ஒப்பிட்டுப்பார்த்தால் நாடு,நாட்டின் சூழல் சுற்றுப்புறம் மிக அழகாக காட்சி, அளிக்கிறது தவிர மக்களோ இயந்திரத்தை விட வேகமாக இயங்க முடியுமா என்றே சிந்திக்கின்றனர், தாராளமாய் உணவு இருக்கிறது ஆனால் அமைதியாய் அமர்ந்து உண்ண நேரம் இல்லை,மனைவி பிள்ளைகளுடன் பொழுதை கழிக்க நேரம் இல்லை எல்லோரும் அல்ல அதிகமானோர், விபச்சாரிகளுக்கு பஞ்சம் இல்லை, ஜப்பானில் தான் அதிக தற்கொலை நடக்கிறது, 6 வருடங்கள் அது எனக்கு சந்தோசமாய் இருந்தது ஏனெனில்
  நான் ஏழை நாட்டவன்.இன்பமும் துன்பமும் மாறி மாறி வரும் இடம் தான் இவ்வுலகம் நிச்சயமாக ஒரு கற்பனைக்கு அப்பாற்பட்ட நிரந்தர இன்பம் கொண்ட ஒரு நிலை இருந்தே ஆக வேண்டும்.

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...