என் சந்தேங்கத்திற்கு விடை தெரிந்தால் தீர்த்து வைப்பீர்களா?
அன்ன ஹசாரே ஊழலுக்கு எதிரான ஒரு போராட்டத்தை முன் வைத்துள்ளார். இதற்க்கு மக்களின் ஆதரவு அமோகம். இல்லாமல் போகுமா, ஸ்பெக்ட்ரம் ஊழல், காமன்வெல்த் ஊழல் என்று இன்று. நேற்று மாடுத்தீவன ஊழல், பீரங்கி ஊழல். அட ஆயிரக்கணக்கான ஊழல்கள். இது மட்டுமா அரசாங்க அதிகாரிகள் தங்களது வேலையை செய்யவே லஞ்சம் கேட்க்கிறார்கள்.
மக்களுக்காக மக்களின் நலனுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கமும் சரி அரசாங்க அதிகாரிகளும் சரி ஊழல் செய்வதிலும் லஞ்சம் வாங்குவதிலேயும் தான் குறியாக உள்ளனர். இவர்களால் தினம் தினம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்...பாதிக்கபடுகின்றனர். ஒட்டுமொத்த இந்தியாவும் இவர்கள் மேல் கோபத்தில் உள்ளது என்பதே உண்மை. ஆதலால் தான் மக்களின் ஒரு பகுதி இன்று போராட்டத்தில் குதித்துள்ளது.
அன்ன ஹசாரே மற்றும் இந்த லோக்பால் மசோதா மூலம் ஊழலை முற்றிலும் ஒழித்து விட முடியும் என ஒரு பகுதி மக்கள் நம்புகின்றனர். ஆனால் இது சாத்தியமா என்றால் எனக்கு சந்தேகமாக உள்ளது.
லோக்பால் மசோதாவில் பல நல்ல அம்சங்கள் உள்ளது. எனக்கு அதில் ரொம்ப பிடித்தது ஊழல் செய்தவர்களுக்கு தண்டனை கொடுப்பது மட்டுமல்லாது அவர்களது சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட வேண்டும் என்பதுதான்.
எத்தனையோ சிறப்பம்சங்கள் இருப்பினும் லோக்பலின் ஒரு அம்சத்தில் எனக்கு மிகப்பெரிய குறை இருப்பதாக உணர்கிறேன். நான் எந்த அம்சத்தில் குறை இருப்பதாக கருதுகிறேனோ அதுதான் லோக்பாலின் ஆணிவேரே.
அந்த ஒரு குறையினால் லோக்பால் தேவையா? என்ற சந்தேகமே என்னுள் எழுந்துள்ளது. என் சந்தேகத்தை நீங்கள் தீர்த்து வைத்தால் நன்றாக இருக்கும். இந்த சந்தேகங்கள் சிறுபிள்ளைத்தனமானது என்று கூட உங்களுக்கு தோன்றலாம். உங்கள் விடைய சரியாக இருக்கும் பட்சத்தில் உங்கள் கருத்தினை ஏற்று நானும் இந்த போராட்டத்திற்கு என்னால் முடிந்த ஆதரவை தருவேன். (எப்பொழுதும் ஊழலுக்கு எதிராக மானசீக குரல் கொடுப்பவன் தான் நான்)
சரி..எந்த அம்சத்தில் எனக்கு சந்தேகம் உள்ளது என்றால் அது லோக்பாலின் குழுவைபற்றியது தான் அந்த சந்தேகம்.
ஊழல் குற்றச்சாட்டை விசாரிக்கப்போவது யார் என்றால் ஒரு குழு. இந்த குழுவில் இருக்க போகிறவர்களும் மனிதர்கள் தான் மகான்கள் அல்ல.
உங்களுக்கே தெரியும் நாட்டில் எத்தனை உத்தமர்கள் உள்ளனர் என்று. இந்தியா முழுவுதும் லோக்பால் மசோதாவை கொண்டுவர எத்தனை உறுப்பினர்கள் வேண்டும் சற்று சிந்தித்து பாருங்கள். எனக்கு தெரிந்து ஒரு மாநிலத்திற்கு குறிப்பாக தமிழ்நாட்டிற்கு மிக மிக குறைந்த பட்சம் முன்னூற்று ஐம்பதிற்கு மேற்ப்பட்ட உத்தம உறுப்பினர்கள் தேவை.
இத்தனை உத்தமர்கள் தமிழ்நாட்டில் இல்லை என்று நான் சொல்லவில்லை. ஆனால் உத்தமர்கள் மட்டும் தான் அந்த குழுவில் இடம்பெறுவார்கள் என்று அறுதியிட்டு கூற முடியுமா?
இந்த உறுப்பினர்களின் சேர்க்கையில் அரசியல்வாதிகளின் மறைமுக தலையீடு இல்லாமல் இருக்கும் என்று கூற முடியுமா?
இந்தியா முழுவதும் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களுக்கு சம்பளம் உண்டா எவ்வளவு? இதை யார் கொடுப்பார்கள்?
இலவசமாக எத்தனை நாள் அவர்கள் கடமையாற்ற முடியும்?
இந்த உறுப்பினர்களும் ஊழலில் ஈடுபட மாட்டார்கள் என்று எதை வைத்து நம்புவது?
ஏற்க்கனவே சட்டத்தை பாதுகாக்க வேண்டிய அரசாங்க அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் லஞ்சம் ஊழல் செய்கிறார்கள். இவர்களை கண்காணிக்க தண்டனை தர லோக்பால் கொண்டு வந்தால் நாளை லோக்பால் உறுப்பினர்களை யார் கண்காணிப்பது தண்டனை தரப்போவது யார்?
இருக்கின்ற சட்டங்களையே இன்னும் கடுமை படுத்த முடியாதா? ஒளிவு மறைவற்ற விசரானையை கொண்டுவர முடியாதா? புகார் தருபவர்களுக்கு தைரியத்தையும் பாதுகாப்பையும் அளிக்கும் சட்டத்தை கொண்டுவர முடியாதா?
திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் நல்ல பண்பை ஊட்டி வளர்க்க வேண்டும். எப்படியாவது சம்பாதித்தால் போதும் என்ற மனநிலைதான் இன்று பெரும்பாலான மக்களிடம் உள்ளது. நல்லவனாக இருக்க வேண்டும், உண்மையை பேச வேண்டும். என்று என்னும் மக்கள் அரிதிலும் அரிது.
மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசையால் தான் அழிவு என்று எத்தனை தடவை சொன்னாலும் கதை என்று சொல்வதிலேய குறியாய் இருந்து கொண்டு கருத்தினை கோட்டை விட்டு விட்டோம். பகுத்தறிவு பேசியவர்கள் பணத்தை சுருட்டியதுதான் மிச்சம். காவி கட்டியவனும் சளைத்தவன் இல்லை என்று இன்று சுருட்டிக்கொள்கிறான்.
ஒவ்வொரு மனிதனும் நேர்மையாக வாழவேண்டும். உண்மையை பேசவேண்டும்.
புறத்தூய்மை நீரால் அமையும் அகத்தூய்மை
வாய்மையால் காணப் படும்
என்றார் வள்ளுவர்.
அதாவது உண்மை பேசினால் தான் உள்ளம் தூயமையாகுமாம். உண்மையும் உயிர்களிடத்தில் அன்பும் என்று வருகின்றதோ அன்றுதான் அனைத்திற்கும் முடிவு பிறக்கும். அதுவரை எந்த பாலும் ஒன்றும் செய்ய முடியாது.

//ஆனால் உத்தமர்கள் மட்டும் தான் அந்த குழுவில் இடம்பெறுவார்கள் என்று அறுதியிட்டு கூற முடியுமா?//
பதிலளிநீக்கு:))
நான் உத்தமன்..... உத்தமன் ...உத்தமனுங்கோ :)
எந்த ஒரு புற சட்டமும் 100 % முழுமை பெற போவதில்லை எனபது தான் உண்மை
அதற்காக சட்டமே தேவை இல்லை என்று சொல்லி விட முடியுமா ?
மோகன் தாஸ் காந்தி தலைமையில் இந்தியா சுகந்திரம் பெற்ற அன்று வாழ்ந்த மக்கள் (நம் தாத்தா பாட்டிகள்)..இந்தியா சுகந்திரம் பெற்று விட்டது....இனிமேல் இந்தியாவுக்கு பொற்காலம் தான் என்று நினைத்து இருப்பார்கள்...
ஆனால் இன்று நடப்பது வேறு...
அதற்காக சுகந்திரமே வேண்டாம் என்று சொல்லி விட முடியுமா?
எனக்கும் ஜோ(லோ)க் பால் பெரிய வெற்றி தரும் என்று நம்ப வில்லை(இந்திய சுகந்திரத்தை போல )...ஆனால் இது இப்போதைக்கு தேவை :)
அண்ணா ஹசாரே- மக்கள் போராட்டத்தினால் ஆவதென்ன?
பதிலளிநீக்கு//Benivolent said... உங்கள் பதிவு நன்றாக இருந்தது//
பதிலளிநீக்குதங்களுடைய பாராட்டிற்கு நன்றி"
//
பதிலளிநீக்குகிருஷ்ணா said...
//ஆனால் உத்தமர்கள் மட்டும் தான் அந்த குழுவில் இடம்பெறுவார்கள் என்று அறுதியிட்டு கூற முடியுமா?//
:))
நான் உத்தமன்..... உத்தமன் ...உத்தமனுங்கோ :)
எந்த ஒரு புற சட்டமும் 100 % முழுமை பெற போவதில்லை எனபது தான் உண்மை
அதற்காக சட்டமே தேவை இல்லை என்று சொல்லி விட முடியுமா ?
மோகன் தாஸ் காந்தி தலைமையில் இந்தியா சுகந்திரம் பெற்ற அன்று வாழ்ந்த மக்கள் (நம் தாத்தா பாட்டிகள்)..இந்தியா சுகந்திரம் பெற்று விட்டது....இனிமேல் இந்தியாவுக்கு பொற்காலம் தான் என்று நினைத்து இருப்பார்கள்...
ஆனால் இன்று நடப்பது வேறு...
அதற்காக சுகந்திரமே வேண்டாம் என்று சொல்லி விட முடியுமா?
எனக்கும் ஜோ(லோ)க் பால் பெரிய வெற்றி தரும் என்று நம்ப வில்லை(இந்திய சுகந்திரத்தை போல )...ஆனால் இது இப்போதைக்கு தேவை :)//
உங்கள் கருத்து சரியானதே.
நீங்கள் விரும்புவதுபோல் லோக்பால் வரும் என்றுதான் நினைக்கின்றேன்.
//கிருஷ்ணா said...
பதிலளிநீக்குஅண்ணா ஹசாரே- மக்கள் போராட்டத்தினால் ஆவதென்ன?//
//லஞ்சம் கொடுக்க மாட்டோம் என்ற உணர்வுதான் காந்தியின் அந்நிய துணி பகிஷ்கரிப்பு போன்றது..! “நீங்க அந்நியத் துணியைப் போடுவீர்களோ மாட்டீர்களோ எனக்கு கவலை இல்லை..! ஆனால் அந்நியத் துணியை விக்கிறவன் எல்லாத்துக்கும் தண்டனை வாங்கி தர்றதுக்கு புது சட்டம் வரணும்”..இப்படியா காந்தி போராடினார். மாற்றம் ஏற்பட வேண்டியது யாரிடம் என்பது அவருக்குத் தெளிவாகவே தெரிந்திருக்கிறது..! இன்றும் அந்த மாதிரியான மாற்றம்தான் தேவைப் படுகிறது.//
தீண்டாமை விழயத்தில் கூட அவர்களுக்கு தண்டனை தரவேண்டும் என்று காந்தி கூறவில்லை மற்றவர்களுக்கு தைரியத்தை தான் தந்தார்.
பதில் சொன்னவரின் கருத்துக்களைவிட கேள்விகேட்டவரின் கருத்துக்கள் எனக்கு சிந்திக்க வைப்பதாக உள்ளது.
(எனக்கு தனிநபர் விமர்சனங்கள் வைப்பது பிடிக்காது இருப்பினும்...இந்த கேள்வியை கேட்டவர் எத்தனை முறை மன்னிப்பு கேட்டுள்ளார் அச்சத்தை வெளிப்படுத்தி உள்ளார் ......ஆனால் பதில் சொன்னவரின் மனநிலையை என்ன சொல்ல?)
//இப்படித்தான் மக்களியக்கங்கள் நிகழ முடியும். இப்படித்தான் காந்திய யுகத்தில் நிகழ்ந்தது. உலகமெங்கும் காந்தியப்போராட்டங்கள் இப்படித்தான் நிகழ்கின்றன. நாளையும் இப்படியே நிகழும். வேறு வழியே இல்லை.//
இது நூற்றுக்கு நூறு உண்மை.
போராட்டம் நல்லதுதான்...அதுதான் விழிப்புணர்வுக்கும் மாற்றத்திற்கும் வழி. என்னுடைய கவலை சந்தேகம் எல்லாம் இதை எப்படி நடைமுறை படுத்தப்போகிரார்கள் என்றுதான்.
பொறுத்திருந்து பார்ப்போம்.
தங்களின் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.
Page [1]
பதிலளிநீக்குஒற்றுமை வளம் உலக நலம்!
முன்னுரை:
இந்நாள் தலைமுறையினரின் எதிர்கால வாரிசுகள் துன்பமோ துயரமோ இன்றி மேன்மையுற வேண்டும் என்கின்ற அடிப்படையில் பின்வரும் கட்டுரையானது அமைகின்றது. இக்கருத்துக் கருவூலம் இந்தியா என்கின்ற தனிப்பெரும் நாடு மட்டுமன்றி முன்னேறாத பிறஉலக நாடுகளும் பயனுற வேண்டும் என்கின்ற அவா மற்றும் ஆதங்கம் பேரிலும் உருஆகின்றது! இக்கரு மழலையாவதும் நிராகரிக்கப்படுவதும் அந்தந்த நாட்டு அரசுகளின் விருப்பம் மற்றும் மக்களின் மனோபாவம் சார்ந்தது!
கட்டுரை:
2) மானுடம் வாழும் பூமிப் பரப்புக்குள் என்ன நடைமுறைகளெல்லாம் ஒழிக்கப்பட வேண்டும் என்று எண்ணுகிறீகளோ அவற்றையெல்லாம் பட்டியலிடுங்கள். அவ்வாறான பட்டியலுக்குள் அநேகமாக இலஞ்சமும் ஊழல்களும் (கையூட்டுக்கள் பெறுவதும், தருவதும்) என்பதானது முதலாவதாக இடம்பெறக் கூடும். அந்தப்படிக்கு பட்டியலுக்குள் இடம் பெற்றிடும் அனைத்தும், அடுத்துவரும் பத்தியில் தெரிவித்திட்டபடி தகவல்கள் நடைமுறையில் அமுலுக்கு வரும் நாளிலிருந்து மூன்று ஆண்டுகட்குள் யாவும் களையப்பட்டுவிடும் என்பதானது ஒட்டுமொத்த மக்களின் நலம் மற்றும் ஒற்றுமையை ஏற்படுத்துதல் என்கின்ற அடிப்படையில் முறையே ஆய்வுச் செய்கையில் உறுதிப்படும்.
3) சமீபத்திய என்னுடைய *கவிதை ஒன்றில் பின்வருமாறு தகவல் தரப்பட்டுள்ளது:
குடும்பத் தேவைக்கேற்ப நிலபுலங்கள்
சொத்து உரிமைக்கும் உச்ச வரம்புகண்டு,
கொள்ளுப் பேரர் காலம் முடியும் மட்டும்
செல்லும்வரம்பு என்று விதிகள் கொண்டு,
அனைவர்கும் கல்விவேலை வீடுபோன்று மருத்துவ
அவசியமும், வழங்க அரசுகள் உரிய சட்டம்கொணர,
-- என்று உள்ள இக்கவிதையில் தெரியவருகிறபடி சொத்துக்கு உச்சவரம்பு அரசுகளால் நிர்ணயிக்கப் படுகிறபோது அவ்வாறு நிர்ணயிக்கும் உச்சவரம்புக்கு மேல் உபரியாக அறியப்படும் தனியார் உடமைகளை (அதிகப்படியான சொத்துக்களை) அரசு தன்வசப் படுத்திக்கொள்ளுமா என்றால் பின்தொடரும் தகவல்கள்படிக்கு சுமார் ஒருவருட காலத்திற்கு அதற்கு அவசியமே ஏற்பட வில்லை.
4) மேற்குறிப்பிட்டவாறு நிர்ணய வரம்புக்கு மேல் மிகுதியாக உள்ள சொத்துக்களை, சொத்துக்கள் மற்றும் உடமைகளின் உரிமையாளர் தன்னுடைய விருப்பப்படியும் முடிவுப்படியும் அவர்களாகவே மேற்படி நிர்ணய வரம்புக்குள் சொத்து இல்லாத சகோதர சகோதரிகள், உற்றார் உறவினர்கள், நண்பர்கள், முதியோர் இல்லங்கள், மேலும் உறவினர் இன்றி அலைகின்ற அனாதைகள் மற்றும் பிச்சை எடுத்து உயிர் வாழ்கின்றவர்கள் என்று எவருக்கும் (மனிதநேயம் அடிப்படையில்) தானமாக மற்றும் இனாமாகத் பகிர்ந்தளித்திடலாம் அல்லது வேறொருவருக்கு மொத்தமாகத் தரலாம் என்பதற்கு, தனியொரு நபருக்கும் மற்றும் அனைவருக்கும் உரிமையளிக்கப்படுகிறது. ஆனால், இது அதிகபட்சமாக ஒரு வருட காலத்திற்குள் நிகழ்ந்தாக வேண்டும்.
5) எனவே சொத்து உச்சவரம்பு நிர்ணயச் சட்டம் சம்பந்தபட்ட அரசுகளால் நிறைவேற்றப்பட்ட நாளிலிருந்து அதிகபட்சமாக ஒரு வருட காலம் முடியும் வரை தனியார் எவருடைய சொத்தையும் மற்றும் நிறுவனங்கள் உடமைகளையும் அரசு கையகப்படுத்தாது. அதனால் பொதுவுடமைச் சித்தாந்தம் இக்கருத்துக் கருவூலங்கட்கு சற்றும் பொருந்தாது என்பதும் இங்கே அறிவிப்பாக வெளியிடப்படுகிறது. பொதுவுடமை சித்தாந்தம் ஏழைப் பணக்காரன் பாகுபாடுகளைக் களைய முற்படுவது. நமது கருத்துக்கள் அனைவருக்கும் சொத்துரிமை சமஅளவில் துய்க்கப்பட முறையே அனுமதித்துச் செயற்படுவது.
Continued at Page[2]
ஒற்றுமை வளம் உலக நலம்!
பதிலளிநீக்கு[Page-2]
6) அடுத்தபடியாக சொத்து உச்சவரம்பு அளவானது எவ்வாறு நிர்ணயிக்கப்பட வேண்டும்? இந்த வினாவுக்கான பதில் பின் வருமாறு:
7) முதலாவதாக தனிஒரு குடும்பத்துக்கு மற்றும் குடும்ப உபயோகத்திற்கு அவசியமானவை எவை என்பதுப்பற்றி அறிய முற்படுவோம்.
(1) குடும்ப உபயோகத்துக்கு சுமார் ஒரு ஏக்கர் நிலம்; அந்நிலத்தில் சுமார் அரை ஏக்கர் மிகாமல் ஒரு வசிப்பிடம் (அனைத்து வசதிகளுடன் கூடியது) (2) குடும்ப உறுப்பினர்கள் பதினெட்டு வயதைத் தாண்டிட்ட ஒவ்வொருக்கும் மனித நேயத்துடன் கல்வி ஆதாரத்தில் வேலை; (3) தேவைக்கேற்ற சம்பளம்; (4) குடும்ப உபயோகத்துக்கு இரண்டு கார்கள்; (5) உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில் பைக் மற்றும் சைக்கிள்கள் (6) ஒவ்வொரு குடும்பம்பத்தினருக்கும் மகளிர் உபயோகத்துக்கு மற்றும் பிற அவசரத் தேவைகட்கு ஒரு நூறு பவுன்களுக்கு மேற்படாமல் பிளாட்டினம் தங்கம் வெள்ளி நகைகள்; (7) கல்வி மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த படிப்புக்களில் (கல்வி துவக்கநிலை முதலாக) யார் எந்த அளவுக்கு கற்க விரும்புகின்றார்களோ படிப்புகாலம் முழுமைக்கும் படிப்புச் சார்ந்த செலவுகள் அனைத்தும்; மற்றும் ஆற்றல் ஆதாரங்களில் அனைவருக்கும் அரசு ஏற்பாட்டில் (வெளிநாடு களில் உயர்படிப்பு உட்பட) இலவசம்; (8) எல்லோர்க் கும் அவ்வப்போது அல்லது எப்போதாவது அல்லது நிரந்தரமாக ஏற்படுகின்ற உடல்நலம் குறைவு (நோய்) எத்தகையதாக இருப்பினும் பாகுப்பாடு ஏதுமற்ற மருத்துவம்; மற்றும் அக்காலங்களில் உணவு உடை அறைகள்வசதி அரசு பொருப்பில் முற்றுமாக இலவசம்; (9) குடியிருப்புப் பகுதியிலிருந்து அவரவர் பணியிடங்களுக்கு பணியாளர்கட்கும்; அவ்வாறே பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் சென்றுவர மாணவர்கட்கும் (கார்பயணம் தவிர்போருக்கு) பேருந்து மற்றும் ஊருந்து (ஆட்டோ) போகவரப் பயணம் இலவசம்; என்கின்ற திடதிட்டங்கள் மற்றும் கொள்கைகள் பேரில் ஒரு அரசானது செயற்படுமாறு அமையப் பெறுமானால்... இப்போது தெரிவியுங்கள்... மேற்கொண்டு அவசியமானதாக ஒவ்வொரு குடும்பத் துக்கும் வேறுஎன்ன வாழ்நாட்களில் இருக்கமுடியும்.
8) அந்தப்படிக்கு ஒரு குடும்பத்தினர் அடிப்படை அவசியங்க
ளான:
1) சுமார் ஒரு ஏக்கர் நிலம்; அரை ஏக்கரில் ஒரு வசிப்பிடம்
(அனைத்து வசதிகளுடனும் கூடியது)
2) குடும்ப உபயோகத்துக்கு இரண்டு கார்கள்;
3) உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில் பைக்
மற்றும் சைக்கிள்கள்
4) குடும்ப மகளிர் உபயோகத்துக்காகவும் மற்றும்
குடும்பத்தினர் அவசரத் தேவைகட்காகவும் ஒரு நூறு
பவுன்களுக்கு மேறபடாமல் பிளாட்டினம் தங்கம் வெள்ளி
நகைகள்;
-- என்று தனியாரது குடும்ப உபயோகத்துக்கு சொத்து உச்சவரம்பு நிர்ணயம் செய்யப்படலாம்.
9) மேற்குறிப்பிட்டவாறு சொத்துக்களை அனுபவிக்கும் எல்லையானது அனைவருக்கும் பொதுவாக மற்றும் சமமாக ஒரு வரம்புக்குள் அடங்கிடும்போது பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் மக்களிடையே தானாக மறையும்; போலி ஆர்ப்பாட்டங்களும் பொருளாதார வீணடிப்புக்களும் தேவையற்றது என்று மக்களே முடிவுசெய்திடும் நிலைமையும் எதிர்காலத்தில் உருவாகிடும் என்பது நிச்சயம்.
* முழுக்கவிதையும் படிக்க
(தீண்டு): கலகம் விலகி நலம் பெற... உலகம்
மேற்கொண்டும் தகவல்கள் அறியப்படுவதற்கு -
இது இந்திய எதிர்கால வாரிசுகளின் அனைவரது
முன்னேற்றத்திற்காகவும், நலனுக்காகவும்...
எழுதப்பட்டுள்ளது)
1) Open Google Title bar -
2) Type the address:
http:willsindiaswillswords.blogspot.in
and press ENTER. (or)
3) Type 'Wills in Kavithai Chittu' >
4) Select the typed title >
5) Give Right Click - Enter into Web Page
6) Type i.e., copy and paste the article title
Either -
“வகுப்புபேத ஒழிப்புக்கு (அறிக்கை)”
(or) Reservation on profession basis!
[வகுப்பு பேத ஒழிப்புக்கு, தொழில்வாரி இடஒதுக்கீடு!]
on the Search Tap.
7) Press: ENTER.