வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

வியாழன், 18 ஆகஸ்ட், 2011

சோதனைச்சாலையில் ஆன்மீக அனுபவங்களை பெற முடியுமா?

தியானத்தின் மூலம் மட்டும் தான் ஆன்மீக அனுபவத்தை பெற முடியுமா? வேறு வழிகள் கிடையாதா என்றால்  வேறு வழியும் உண்டு என்பதே பதில்.

உண்மையை சொல்லவேண்டுமானால் தியானத்தால் எதை எதையெல்லாம் சாதிக்க முடியுமோ அதை எல்லாம் வேறு வழிகளிலும் அடையலாம்.
என்னுடைய

மதுவிற்கும் தியானத்திற்கும் சம்பந்தம் உண்டா?


என்ற பதிவில் மதுவின் மூலம் அடையும் சில அனுபவங்களை தியானத்தின் மூலம் பெறலாம் என்று கூறியிருந்தேன்.அதுபோலவே பல ஆன்மீக அனுபவங்களையும்  தியானம் மூலம் மட்டும் அல்லாமல் சோதனை சாலையிலும்  பெறலாம் . ஆனால் அதற்கான இன்றைய அறிவியலின் வளச்சி போதாது.

மது அருந்தினால் எப்படி தீமை உண்டாகிறதோ அவ்வாறே சோதனை சாலை மூலம் அடையும் ஆன்மீக அனுபவங்களும் முதலில் தீமையையே உண்டாக்கும். அது முழுமையான அனுபவமாகவும் இருக்க முடியாது.  அறிவியலால் முழுமையான ஆன்மீகத்தை தர முடியாதா என்றால். தரமுடியலாம் ஆனால் அதற்க்கு இன்னும் எத்தனை ஆண்டுகள் நூற்றாண்டுகள் ஆகும் என்பது தெரியவில்லை.

எப்பொழுது அறிவியல் அகத்தவத்தினால் அடையமுடியும் அனுபவங்களை முழுமையாக சோதனைச்சாலையில் அடையவைக்கின்றதோ அதுவே அறிவியலின் உச்சம்.

அந்த உச்ச கட்ட அறிவியலால் ஞானத்தையும், பிறவாமையையும், மரணமில்லா பேரின்ப பெருவாழ்வையும் தர முடியும் என்று நினைக்கின்றேன். உண்மையில் அறிவியல் இதை நோக்கியே பயணிப்பதாக கருதுகின்றேன்.


நேற்று  வெறும்   அகம்  (ஆன்மீகம்). நாளை  அகமும்  புறமும் (ஆன்மீகமும் அறிவியலும்)  இணையலாம் ....இணையும்.

4 கருத்துகள்:

 1. அருமை சகோ,
  இன்று ஆன்மீகம் அறிவியல் எல்லையற்ற தேடல்கள் மட்டுமே.இரண்டிலும் ஒரு கேள்விக்கு விடை பல கேள்விகளுக்கு வித்தாகிறது.உங்கள் கூற்றுப் படி வெவேறு தளத்தில் பயணிக்கும் இரண்டும் ஒரு புள்ளியில் சந்தித்தாலும் வியப்பில்லை.
  நல்ல சிந்தனை.

  பதிலளிநீக்கு
 2. அந்த உச்ச கட்ட அறிவியலால் ஞானத்தையும், பிறவாமையையும், மரணமில்லா பேரின்ப பெருவாழ்வையும் தர முடியும் என்று நினைக்கின்றேன். உண்மையில் அறிவியல் இதை நோக்கியே பயணிப்பதாக கருதுகின்றேன்./
  உண்மைதான்..
  நல்ல சிந்தனை ...
  அருமையான, அளவான, அழகான பதிவு....
  பதிவுக்கு அன்புடன் பாராட்டுக்கள்..

  பதிலளிநீக்கு
 3. //அருமை சகோ,
  இன்று ஆன்மீகம் அறிவியல் எல்லையற்ற தேடல்கள் மட்டுமே.இரண்டிலும் ஒரு கேள்விக்கு விடை பல கேள்விகளுக்கு வித்தாகிறது.உங்கள் கூற்றுப் படி வெவேறு தளத்தில் பயணிக்கும் இரண்டும் ஒரு புள்ளியில் சந்தித்தாலும் வியப்பில்லை.
  நல்ல சிந்தனை.//

  சரியாக சொன்னீர்கள் சகோ. இந்த சந்திப்பு எப்படி இருக்கும் எனில் ஆன்மீகம் எனும் கடலில் அறிவியல் எனும் நதி கலப்பதாக இருக்கும். தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி சகோ

  பதிலளிநீக்கு
 4. //

  vidivelli said...

  அந்த உச்ச கட்ட அறிவியலால் ஞானத்தையும், பிறவாமையையும், மரணமில்லா பேரின்ப பெருவாழ்வையும் தர முடியும் என்று நினைக்கின்றேன். உண்மையில் அறிவியல் இதை நோக்கியே பயணிப்பதாக கருதுகின்றேன்./
  உண்மைதான்..
  நல்ல சிந்தனை ...
  அருமையான, அளவான, அழகான பதிவு....
  பதிவுக்கு அன்புடன் பாராட்டுக்கள்..//

  தங்களுடைய அன்பான பாராட்டுக்கும் வருகைக்கும் நன்றி தோழி

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...