வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

திங்கள், 18 ஜூலை, 2011

ஆன்மீகத்திற்கு திருமணம் தடையா?

எனக்கு தெரிந்து சிறந்த ஆன்மீகவாதிகளாக கருதப்படும் யாரும் திருமண பந்தத்தில்  இருந்துகொண்டு ஆன்மீக முன்னேற்றம் அடைந்ததாக தெரியவில்லை.

இங்கே நான் ஆன்மீகம் என்பது அகத்தவம் அல்லது அகத்தாய்வு செய்து தான் யார் என்ற இரகசியத்தை உணர்ந்து யோகத்தின் மூலம்   இறையடி சேர்தலாகும்.

அதேபோல் திருமணம் புரியாமல் அகத்தவம் செய்தவர்கள் அனைவரும் இறையடி சேர்ந்தார்கள் என்றும் சொல்வதற்கில்லை.

புத்தர் திருமண வாழ்வை உதறி தள்ளியவர்.
ஏசுநாதர் திருமணம்  செய்து கொண்டு வாழ்ந்ததாக  தெரியவில்லை.
வள்ளலார், ராகவேந்திரர் இவர்கள் திருமண பந்தத்தில் நீடிக்கவில்லை.

இப்படி ஏராளமான உதாரணங்கள் சொல்லலாம்.
நான் இவர்கள் மட்டும் தான் உண்மையான ஆன்மீகவாதிகள்  என்று சொல்லவில்லை. இதை ஒரு உதாரணத்திற்காக மட்டுமே குறிப்பிட்டுள்ளேன்.
இவர்கள் நமக்கு ஆன்மீக வாதிகளாக அறிமுகப்படுத்தப்படுள்ளனர் அல்லது சந்தைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று சொல்லலாம். சந்தைப்படுத்தபடாத எண்ணற்ற ஆன்மீகவாதிகள் இவர்களை விட சிறந்த சிந்தனைகளை வாழ்வியலை கொண்டவர்களாக கூட இருந்திருக்கலாம்.

சில சித்தர்கள் சிற்றின்பத்தில் ஈடுபட்டிருந்தாலும் அவர்களும் நிலையான திருமண வாழ்வை கொண்டிருக்கவில்லை.

சில ரிஷிகள் திருமண பந்தத்தில் இருந்துள்ளனர் என்று சில செய்திகள் கிடைத்தாலும் அவர்களுக்குள்ளான உறவுமுறை எப்படி  இருந்தது, அவர்கள் யோகத்தின் மூலம் இறையடி சேர்ந்தார்களா என்று (எனக்கு) தெரியவில்லை.

திருமணம் ஏன்  அகத்தவம் புரிய  தடையாக உள்ளது?

அகத்தவம் எனக்கு தெரிந்து கடுமையான (ஒரு விதத்தில் இனிமையான) பாதை. எப்படி ஒருவன் காதலிக்கும் பொழுது அந்த பெண்ணின் நினைப்பாகவே பித்துப் பிடித்தவன் போல் இருக்கின்றானோ அதைப்போலவே அகத்தவம் புரிபவனும் இறை சிந்தனை  மட்டுமே கொண்டவனாக இருப்பான். 

ஒரு பெண், குடும்பம்  தரும் இன்பத்தை விட இறைசிந்தனை அல்லது அந்த பயணம் அவனுக்கு மட்டற்ற மகிழ்ச்சி அளிப்பதால் அவன் மற்றவற்றை துச்சமாக மதிக்க ஆரம்பித்து விடுவான்.

திருமணத்தின்  மூலம் பற்று ஏற்ப்படுகிறது. மனைவி மீது பற்று, குழந்தைகள் மீது பற்று பிறகு பேரகுழந்தைகள் மீது பற்று.

மனைவி  என்று வந்தவுடனே சில கடமைகளும் கூடவே வந்துவிடுகிறது. அவளுக்கென்று நேரம் ஒதுக்க வேண்டும். பிறகு அவளுக்கென்று  சம்பாதிக்க வேண்டும். இந்த இரண்டு கடமைகள் செய்வதற்கே ஒருவனின் நேரம் போதுமாக இருக்கும் என்று நினைக்கின்றேன். பிறகு எங்கே  அகத்தவம் புரிவது?

அந்த பெண்ணை விட்டு விட்டு இவன் மட்டும் அகத்தவம் புரிகிறேன் என்று எந்நேரமும் கண்ணை மூடிக்கொண்டு இருந்தால் அந்த பெண்ணின் நிலை?

சரி மனைவியையும் அகத்தாய்வு  புரிய வைத்தால் என்ன என்று தோன்றலாம். ஆனால் அப்படிப்பட்ட மனைவி கிடைப்பதற்கு  வரம் வாங்கி வந்திருந்தாள் மட்டுமே சாத்தியம் என்று தோன்றுகிறது.

அப்படியும் ஒருவனுக்கு அகத்தவம் செய்வதற்கு ஏற்றார் போல மனைவி அமைந்து விட்டால் அவன் கொடுத்து வைத்தவன் தான். இருப்பினும் அவர்கள் பிள்ளை பெற்றுக்கொண்டு அகத்தாய்வை  தொடர முடியுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியே.

 சரி பிள்ளையே பெறாமல் இருந்தால் என்ன என்று தோன்றினாலும் அவர்கள் சமுதாயத்தின் ஏளனமான பேச்சுக்கும், பார்வைக்கும் ஆளாக நேரிடும். இதனாலோ என்னவோ அன்று திருமணம் செய்து கொண்ட ரிஷிகள் கூட காட்டிலே தான் வாழ்ந்துள்ளனர். அவர்கள் சமூகத்தோடு வாழ்ந்ததாக தெரியவில்லை.

இதை அனைத்தும் சமாளிக்கும் திறன் கொண்ட தம்பதிகளால் மட்டுமே அகத்தவத்தின்  மூலம் இறையடி சேர முடியும்.

ஆக ஆன்மீக பயணத்திற்கு திருமண வாழ்வு தடையா என்றால் பொதுவாக பார்க்கும் பொழுது தடை என்று தான் தோன்றுகிறது. அரிதினும் அரிதாக சில தம்பதிகளுக்கு மட்டும் திருமணம் தடையாகாமல் வரமாகலாம்.
தடையை வரமாக்கி அனைவரும் வாழ்க வளமுடன் நலமுடன்.

12 கருத்துகள்:

  1. நீங்கள் சொல்லும் கருத்தோடு ஒத்து போகிறேன்...


    முன் ஜென்மத்தில் ஆன்ம சாதனையை தொடர்ந்தவர்கள் .....சிறு வயதில் ஞானோதயம் பெறுகின்றனர்
    உதாரணம் : ரமண மகரிஷி, விவேகானந்தர் ,ஓஷோ
    இவர்கள் ஒரு வகை...

    பெரும்பாலான யோகிகள் இந்த பிறவியிலேயே சுய மாக முயற்சி செய்து ஞானம் பெறுகிறார்கள்.....
    உதாரணம் :ராம கிருஷ்ணர் ,வள்ளலார்

    இவர்கள் இரு வகையினரும் குடும்ப வாழ்வை விரும்புவதில்லை....

    சில குறிப்பிட்ட சமுதாய நோக்கங்களுக்காக பிறவி எடுப்பவர்கள்.....ஞானம் பெற்ற பின் திருமணம் அல்லது பெண்களுடன் வாழ்க்கை நடத்துவார்கள்.....இவர்கள் தான் அவதாரங்கள்

    உதாரணம்:கிருஷ்ணா(பரமாத்மா),சில சித்தர்கள்....

    தற்கால உதாரணம்:
    நித்தியானந்தா-ரஞ்சிதா தம்பதியினர்.....,
    தனி காட்டு ராஜா போன்ற சில அவதார புருசர்கள் :))

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் புரட்சியாளரே,

    அன்புடன் வணக்கம்....

    தங்கள் கருத்தோடு நான் பெரிதும் வேறுபடுகிறேன்.

    இந்துமதத்தின் அடிப்படைத் தத்துவத்தையே தாங்கள் தவறு என்பது போல் இந்த ஆக்கம் அமைந்திருக்கிறது.

    வான்புகழ் வள்ளுவன் கூட
    இல்லறம் என்று அறத்தோடு சேர்த்தது திருமண வாழ்வைத் தான்..

    துறவு என்று தான் சொன்னானே தவிர துறவறம் என்று சொல்லவில்லை என்பதை நினைவு கூர்க..

    நமது அருளாளர்களில் பெரும்பான்மையர்
    இல்லற வாழ்விலேயே இருந்திருக்கின்றனர்.

    நாயன்மார்களும், ஆழ்வார்களும் இல்லற வாழ்வில் ஈடுபட்டுக் கொண்டே இறைத் தொண்டாற்றி,

    கணவன் மனைவியராக இணைந்தே முத்தி பெற்ற
    வரலாறுகள் ஏராளம் ஏராளம் நம் நாட்டில் உண்டு.

    ஒன்றை பெற்றுவிடாத வரையில் அதன் மீதான ஏக்கமும் எதிர்பார்ப்பும் ஒரு மனிதனுக்கு இருந்துகொண்டே தான் இருக்கும்..


    எனவே..
    ஆன்மீக வாழ்விற்கு இல்லறவாழ்வு ( திருமணம் )
    ஒரு பெரும் துணையே தவிர,

    தடையல்ல..

    நன்றி ...

    http://sivaayasivaa.blogspot.com

    சிவயசிவ

    பதிலளிநீக்கு
  3. //

    தனி காட்டு ராஜா said...

    நீங்கள் சொல்லும் கருத்தோடு ஒத்து போகிறேன்...


    முன் ஜென்மத்தில் ஆன்ம சாதனையை தொடர்ந்தவர்கள் .....சிறு வயதில் ஞானோதயம் பெறுகின்றனர்
    உதாரணம் : ரமண மகரிஷி, விவேகானந்தர் ,ஓஷோ
    இவர்கள் ஒரு வகை...

    பெரும்பாலான யோகிகள் இந்த பிறவியிலேயே சுய மாக முயற்சி செய்து ஞானம் பெறுகிறார்கள்.....
    உதாரணம் :ராம கிருஷ்ணர் ,வள்ளலார்

    இவர்கள் இரு வகையினரும் குடும்ப வாழ்வை விரும்புவதில்லை....

    சில குறிப்பிட்ட சமுதாய நோக்கங்களுக்காக பிறவி எடுப்பவர்கள்.....ஞானம் பெற்ற பின் திருமணம் அல்லது பெண்களுடன் வாழ்க்கை நடத்துவார்கள்.....இவர்கள் தான் அவதாரங்கள்

    உதாரணம்:கிருஷ்ணா(பரமாத்மா),சில சித்தர்கள்....

    தற்கால உதாரணம்:
    நித்தியானந்தா-ரஞ்சிதா தம்பதியினர்.....,
    தனி காட்டு ராஜா போன்ற சில அவதார புருசர்கள் :))//

    தங்களுடைய அருமையான கருத்து பகிர்வுக்கு மிக்க நன்றி ராஜா.
    உண்மையில் எனக்கு அவதார புருஷர்களை பற்றி அவ்வளவாக தெரியாது உங்களையும் சேர்த்து தான் சொல்கிறேன். :)
    உங்களையும் உங்க ஜோடியோட டிவியில சீக்கிரம் பாக்கலாம்னு சொல்றீங்களா? :) சும்மா :)

    பதிலளிநீக்கு
  4. //@சிவ.சி.மா. ஜானகிராமன் said...

    வணக்கம் புரட்சியாளரே,

    அன்புடன் வணக்கம்....//

    அன்பு வணக்கங்கள்,
    வருக சிவனடியாரே.

    //தங்கள் கருத்தோடு நான் பெரிதும் வேறுபடுகிறேன்.//

    இதற்க்கு அனைத்து உரிமையும் தங்களுக்கு உள்ளது

    //இந்துமதத்தின் அடிப்படைத் தத்துவத்தையே தாங்கள் தவறு என்பது போல் இந்த ஆக்கம் அமைந்திருக்கிறது.//
    நான் இந்து மதத்தை பற்றி இங்கு கூறவே இல்லை அடியாரே. மேலும் நீங்கள் எந்த தத்துவத்தை பற்றி கூறுகிறீர்கள் என்று தெரியவில்லை.
    //வான்புகழ் வள்ளுவன் கூட
    இல்லறம் என்று அறத்தோடு சேர்த்தது திருமண வாழ்வைத் தான்..

    துறவு என்று தான் சொன்னானே தவிர துறவறம் என்று சொல்லவில்லை என்பதை நினைவு கூர்க..//
    துறவு ....துறவறம் இரண்டிற்கும் வித்தியாசம் உண்டா அடியாரே...எனக்கு தெரியாது. முடிந்தால் சற்று விளக்குங்கள்.
    எல்லா துறவிகளும் யோகிகள் அல்ல.
    //நமது அருளாளர்களில் பெரும்பான்மையர்

    இல்லற வாழ்விலேயே இருந்திருக்கின்றனர்.

    நாயன்மார்களும், ஆழ்வார்களும் இல்லற வாழ்வில் ஈடுபட்டுக் கொண்டே இறைத் தொண்டாற்றி,//

    அருளாளர்கள் அனைவரும் அகத்தவம் புரிந்தவர்களா என்று எனக்கு தெரியாது . இறைத்தொண்டு வேறு அகத்தவம் வேறு . இறைத்தொண்டு பக்தி மார்க்கம். இந்த பதிவு யோக மார்கத்திற்கு மட்டுமே பொருந்தும்.

    //கணவன் மனைவியராக இணைந்தே முத்தி பெற்ற
    வரலாறுகள் ஏராளம் ஏராளம் நம் நாட்டில் உண்டு.//
    இறைவனாக அளிக்கும் முக்தி வேறு. ஒருவன் சுயமாக அடையும் முக்தி வேறு. இந்த பதிவு சுய முக்தியை வைத்து எழுதியது அடியாரே. நீங்கள் சுய முக்தியை தான் கூறுகிறீர்கள் எனில் உண்மையில் எனக்கு இது புதிய செய்தி அடியாரே. உதாரணங்கள் சில கூறினால் நானும் தெரிந்து கொள்வேன்.


    //ஒன்றை பெற்றுவிடாத வரையில் அதன் மீதான ஏக்கமும் எதிர்பார்ப்பும் ஒரு மனிதனுக்கு இருந்துகொண்டே தான் இருக்கும்..
    எனவே..
    ஆன்மீக வாழ்விற்கு இல்லறவாழ்வு ( திருமணம் )
    ஒரு பெரும் துணையே தவிர,

    தடையல்ல..

    நன்றி ...

    http://sivaayasivaa.blogspot.com

    சிவயசிவ//
    நீங்கள் கூறுவது சரிதான். உதாரனத்திற்க்கு நித்தியானந்தா. அதேசமயம் ஒன்றை பெற்று விட்டால் அதன் மீதான பற்று அதிகமாகி விடுகிறது. திருமணம் தொடர் பற்றுக்களையும் கடமைகளையும் உருவாக்கிவிடுகிறது
    நான் மீண்டும் ஒருமுறை கூறிகொள்கிறேன் இந்த பதிவு யோக மார்கத்துக்கு மட்டுமே பொருந்தும் பக்தி மார்க்கத்துக்கு அல்ல.
    உங்கள் துணை உங்களுக்கு துணையாய் இருக்கும் பட்சத்தில் நீங்கள் கொடுத்து வைத்தவர் என்று தான் சொல்லவேண்டும் :)
    தங்களுடைய கருத்துக்கு மிக்க நன்றி அடியாரே. :)

    பதிலளிநீக்கு
  5. //இறைவனாக அளிக்கும் முக்தி வேறு. ஒருவன் சுயமாக அடையும் முக்தி வேறு//

    மீண்டும் மன்னிக்க வேண்டுகிறேன் நண்பரே,

    ஒரு மனிதன் தானாக முத்தி பெற முடியாது..
    முடியவே முடியாது..

    எந்த சூழலிலும் இறைவன் மட்டுமே ஒரு உயிருக்கு
    முத்தி வழங்க முடியும் என்பதை அறிக..


    முத்தி என்பது 4 வகைப்படும்..

    சாலோக, சாரூப, சாமீப , சாயுச்சியம்

    என்பது அதன் வகை - இதைத் தவிர

    இறைவன் வழங்கும முத்தி
    மனிதனே பெறும் முத்தி

    என்றெல்லாம் இல்லை..


    நன்றி..


    http://sivaayasivaa.blogspot.com

    சிவயசிவ

    பதிலளிநீக்கு
  6. //உங்களையும் உங்க ஜோடியோட டிவியில சீக்கிரம் பாக்கலாம்னு சொல்றீங்களா? :) சும்மா :) //

    :))


    சிவ.சி.மா. ஜானகிராமன் said...
    //முத்தி என்பது 4 வகைப்படும்..

    சாலோக, சாரூப, சாமீப , சாயுச்சியம்//

    இதை பற்றி கொஞ்சம் விளக்குங்களேன் நண்பரே

    பதிலளிநீக்கு
  7. ஆன்மீகமும் துறவறமும் ஒரு டம்மி சார்
    ஆன்மிகம் என்று எல்லோரும் போய் விட்டால் இந்த உலகிற்கு ஏன் இத்தனை தொழில் நுட்பவளர்ச்சி
    பேசாமல் ஆதிமனிதன் ஆகவே இருந்திருக்கலாம்

    துறவறம் போனவர்கள் எல்லாம் என்னத்த கண்டார்கள்

    அவர்களால் மனித சமுதாயத்திற்கு என்ன கிடைத்தது

    பதிலளிநீக்கு
  8. //

    சிவ.சி.மா. ஜானகிராமன் said...

    //இறைவனாக அளிக்கும் முக்தி வேறு. ஒருவன் சுயமாக அடையும் முக்தி வேறு//

    மீண்டும் மன்னிக்க வேண்டுகிறேன் நண்பரே,

    ஒரு மனிதன் தானாக முத்தி பெற முடியாது..
    முடியவே முடியாது..

    எந்த சூழலிலும் இறைவன் மட்டுமே ஒரு உயிருக்கு
    முத்தி வழங்க முடியும் என்பதை அறிக..


    முத்தி என்பது 4 வகைப்படும்..

    சாலோக, சாரூப, சாமீப , சாயுச்சியம்

    என்பது அதன் வகை - இதைத் தவிர

    இறைவன் வழங்கும முத்தி
    மனிதனே பெறும் முத்தி

    என்றெல்லாம் இல்லை..


    நன்றி..


    http://sivaayasivaa.blogspot.com

    சிவயசிவ//
    மன்னிப்பெல்லாம் எதற்கு தோழரே, உங்கள் கருத்தை நீங்கள் சொல்கிறீர்கள் அவ்வளவுதான். என் கருத்து தவறாக கூட இருக்கலாம். அப்படி தவறாக இருக்கும் பட்சத்தில் நான் அதை ஏற்றுக்கொள்வேன். எனக்கு சரி என்று படுவதை நான் சொல்கிறேன் அவ்வளவே.
    உங்கள் கருத்துக்களை படிப்பதிலிருந்து எனக்கு என்ன புலனாகிறது எனில் நீங்கள் பக்தி மார்க்கத்தில் தீவிரமாய் உள்ளீர்கள். பக்தி மார்க்கத்தில் உள்ளவர்களுக்கு இறைவன் முக்தி அளிப்பான் என்று சொல்வது சரி.
    ஆனால் யோக மார்க்கத்தில்?
    புத்தர், வள்ளலார், ராகவேந்திரர் இவர்கள் தானாக முக்தி அடைந்தார்கள் என்று சொல்வது தவறாகுமா தோழரே?
    நன்றி :)

    பதிலளிநீக்கு
  9. //

    said...

    ஆன்மீகமும் துறவறமும் ஒரு டம்மி சார்
    ஆன்மிகம் என்று எல்லோரும் போய் விட்டால் இந்த உலகிற்கு ஏன் இத்தனை தொழில் நுட்பவளர்ச்சி
    பேசாமல் ஆதிமனிதன் ஆகவே இருந்திருக்கலாம்

    //
    @சுந்தர்
    வணக்கம் சுந்தர்,
    //ஆன்மீகமும் துறவறமும் ஒரு டம்மி சார்//
    இந்த உலகில் எல்லாமே டம்மி தான்.
    //ஆன்மிகம் என்று எல்லோரும் போய் விட்டால் இந்த உலகிற்கு ஏன் இத்தனை தொழில் நுட்பவளர்ச்சி
    பேசாமல் ஆதிமனிதன் ஆகவே இருந்திருக்கலாம் //
    உண்மையில் ஆன்மிகம் என்பது உங்களை நீங்கள் அறிவதாகும். நீங்கள் சொல்லும் தொழில் நுட்ப வளர்ச்சி எல்லாம் ஒரு உண்மையான யோகிக்கு தூசு மாதிரி.
    //துறவறம் போனவர்கள் எல்லாம் என்னத்த கண்டார்கள் //
    எல்லா துறவிகளும் யோகிகள் அல்ல யோகிகள் எல்லோரும் துறவிகளும் அல்ல
    யோகிகள் தன்னை கண்டனர், பிரபஞ்ச ரகசியத்தை அறிந்தனர்.
    //அவர்களால் மனித சமுதாயத்திற்கு என்ன கிடைத்தது//
    நோயற்ற வாழ்வை தரும் யோகாசனத்தை தந்துள்ளனர் இது ஒன்றே போதுமே.
    உங்களை நீங்கள் உணர அவர்கள் வழி தந்துள்ளார்கள். ஒரு நாள் நீங்கள் அனைத்து தொழில் நுட்பவளர்ச்சிகளும் டம்மி என்று உணரலாம்.
    அப்பொழுது அடுத்தது என்ன என்று உங்களுக்கு தோன்றினால் அந்த அடுத்தது தான் யோகம் ஆன்மிகம் தியானம் தவம்.
    தங்களுடைய கருத்துக்கு நன்றி சுந்தர்.

    பதிலளிநீக்கு
  10. அப்படியானால் நீங்கள் பேசாமல் துறவறம் பொய் விடலாம் இல்லையா ?

    பதிலளிநீக்கு
  11. //

    சுந்தர் said...

    அப்படியானால் நீங்கள் பேசாமல் துறவறம் பொய் விடலாம் இல்லையா ?//

    எப்படியானால்? :))
    துறவறம் எனக்கு இப்பொழுது அவசியம் என்று தோன்றவில்லை. தோன்றும் பொழுது கண்டிப்பாக அதில் போவேன். :)

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...