உலக அளவில் தற்பொழுது 435 அணு உலைகள் இயங்கிகொண்டிருக்கின்றன.மேலும் 63 அணு உலைகள் தற்பொழுது தயாராகிக் கொண்டிருக்கின்றன.
தற்பொழுது அதிகபட்சமாக
அமெரிக்காவில் 104 அணு உலைகளும்
பிரான்சில் 58
ஜப்பானில் 50
ரஷியாவில் 33
சீனாவில் 22
கொரியாவில் 21
இந்தியாவில் 20 அணு உலைகளும் இயங்கிகொண்டிருக்கின்றன.
இதுமட்டுமல்லாமல் மேலும் அதிகபட்சமாக
சீனா 28
ரஷியா 10
இந்தியா 6
அணு உலைகளையும் கட்டிகொண்டிருப்பதாக ஐரோப்பா நியூகிளியர் சொசைட்டி தெரிவிக்கின்றது.
ஒரு விபத்து அப்பொழுது வாழும் உயிர்களை மட்டும் பலி வாங்கினால், பாதித்தால் பரவாயில்லை. ஆனால் அணுஉலை விபத்துகள் காலம் காலமாக சந்ததிகளையும் பாதிக்கும் ஆதலால் அணு உலைகளை மூட வேண்டும் என்பது
ஞாநி அவர்களின் வாதம்.
எனக்கு என்ன சந்தேகம் என்றால் அணு உலைகள் இவ்வளவு பயங்கரமானது என்று தெரிந்தும் ஏன் இத்தனை நாடுகள் அதை பயன்படுத்துகின்றன.
ஜப்பான் சுனாமிக்கும், நில நடுக்கத்திற்கும் பெயர் போனது.....அவர்கள் ஏன் இத்தனை அணு உலைகளை கட்டி வம்பை விலை கொடுத்து வாங்குகின்றனர். அவர்கள் மீதி உள்ள உலைகளை மூடி விடுவார்களா?
ரஷியாவில் மிக பயங்கரமான அணு உலை விபத்து நடந்த பிறது அது ஏன் இன்னும் பத்து அணு உலைகளை கட்டி கொண்டிருக்கின்றது.?
அவர்களுக்கு மக்களின் மீது அக்கறை இல்லையா?
பதிலை காலம் தான் சொல்ல வேண்டும்.
ஞாநி அவர்களின் பதில் இதற்கு என்ன என்று தெரியவில்லை.
குறிப்பு: இந்த பதிவு அணுஉலைகளுக்கு ஆதரவாகவும் அல்ல எதிராகவும் அல்ல. ஒரு ஆரோக்யமான சிந்தனைக்கு, இது வித்திட வேண்டும் என்பதே ஏன் ஆவல்.
ஞாநி: சிறந்த சிந்தனையாளர். இவர் எழுத்துக்கள் படிப்பவரின் சிந்தனையை தூண்டும்.
நான் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவே ஒரு காலத்தில் இவர் எழுத்துக்களை தொடர்ந்து படித்தேன்.இப்பொழுது மீண்டும் படிக்க ஆரம்பித்துள்ளேன். என்னை சித்திக்க வைத்த
ஞாநி அவர்களுக்கு அடியேனின் கோடான கோடி நன்றி.
இருப்பதைந்து ஆண்டுகளாக
ஞாநி அவர்கள் அணு உலைகளுக்கு எதிராக எழுதி வருகிறார்.. தான் எழுதியதை ஒரு புத்தகமாக அவர் வெளியுட்டுள்ளார் அதற்க்கான சுட்டி .
ஞாநி அவர்களின் வாதத்தை வலு சேர்க்கும் விதத்தில் 2022 வாக்கில் அனைத்து அனு உலைகளையும் மூடப்போவதாக ஜெர்மனி அறிவித்துள்ளது. அறிவித்ததை நடைமுறைப்படுத்துவார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்
you may please read some of the articles in naanoruindian.blogspot.com about Nuclear
பதிலளிநீக்குSure heart. will read them. thanks :)
நீக்கு