வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

புதன், 30 நவம்பர், 2011

பிரபஞ்சம் தோன்றியது எப்படி?

பிரபஞ்சத்தில் முதலில் தோன்றியது வானம் அல்லது ஆகாயம் என்று ஒரு  பதிவில் பார்த்தோம். இந்த பதிவில் அதற்கு அடுத்து பிரபஞ்சத்தில் என்ன நிகழ்ந்தது என்று பார்ப்போம்.

நான் பல மத சமபந்தமான நூல்களை மேய்ந்த பொழுது அனைத்து நூல்களும் பிரபஞ்சத்தில் இரண்டாவது தோன்றியது நிலம் அல்லது பூமி என்றே கூறுகின்றது.  ஆனால் அறிவியலின் படியும் ஆன்மீக உள்ளுணர்வின் படியும் இதில் எனக்கு உடன்பாடில்லை. 

பிரபஞ்சத்தில் இரண்டாவது காற்றுதான் உருவாகியிருக்க வேண்டும்.(அந்த காற்று ஹைட்ரஜனாக இருக்கலாம்)  அந்த காற்றானது காலப்போக்கில் வெப்பமடைந்து சில இடங்களில்  நெருப்பு பிழம்பாக மாறியது. காலப்போக்கில் இந்த நெருப்பு பிழம்பே வெடித்து சிதறி இருக்கலாம். பிறகு சில காலம் கழித்து நீர்/மழை உண்டாகிறது(H2O- ஹைட்ரஜனும் ஆக்சிஜனும் சேர்ந்தது தான் நீர்). 

இந்த மழையானது நெருப்பு பிழம்பின் மீது படும்போழுது அது குளிர்ந்து நிலம் உருவானது. (அதாவது  பூமி போன்றவை). இப்படி உருவான பிரபஞ்சமானது விரிந்து கொண்டே செல்கிறது. பிறகு சில காலத்திற்கு பிறகு அது சுருங்குகிறது.  அனைத்தும் அணுவை விட மிகச்சிறிய புள்ளியாக சுருங்கிறது. அழுத்தம் காரணமாக அது வெடித்து சிதறுகிறது. அந்த  வெடிப்புதான் பெரு  வெடிப்பு எனும் "big bang".

மீண்டும்  பிரபஞ்சம்  விரிவடைகிறது  பல  காலத்திற்கு  பிறகு  மீண்டும்  சுருங்குகிறது  மீண்டும்  பெரு  வெடிப்பு . இவ்வாறு  இது  ஒரு  தொடர்  நிகழ்வாகவே  நடந்து  வருகிறது . என்பது ஒருவகையான பிரபஞ்ச தோற்றத்தை பற்றிய கருத்து.

இதைத்தான் கீதையில் கண்ணபிரான் நான் பிரபஞ்சத்தை  உருவாக்கி  அழித்து மீண்டும் உருவாக்குகிறேன் என்று சொல்வதாக வைத்துள்ளனர்.  


இப்பொழுது இந்த கருத்தின் படி பிரபஞ்சத்தில் முதலில் தோன்றியது ஆகாயம், இரண்டாவது காற்று, மூன்றாவது நெருப்பு, நான்காவது நீர், ஐந்தாவது நிலம்.  இதைத்தான் ஐம்புதங்கள் என்பர்.

இவை ஐந்தும் இல்லையேல் யாரும் இல்லை. இவை ஐந்துமே அனைத்திற்கும் முதலானது. அனைத்திற்கும் ஆதாரம் இதுவே. ஆதலால் தான் என்னவோ இதை தெய்வமாக வழி பட ஆரம்பித்தனர் பண்டைய மக்கள். 

இந்த பிரபஞ்சத்திற்கு, இயற்கை சக்திக்கு சிவம் என்று பெயரிட்டனர். அதுதான் இன்றைய முக்கியமான ஐந்து சிவன் ஆலயங்கள். 
அவற்றை பஞ்சபூத ஆலயங்கள் என்பர்

சிதம்பரம் எனும் திருச்சிற்றம்பலம் - ஆகாயம் 
 காலஹஸ்தி எனும் திருக்காளத்தி - காற்று
திருவண்ணாமலை- நெருப்பு 
திருவானைக்காவல் -  நீர் 
காஞ்சிபுர ம் எனும் திருக்காஞ்சிபுரம் - நிலம் 

இங்கே இந்த முதலில் உருவான எங்கும் நீக்கமற நிறைந்திருக்கின்ற  ஐந்து இயற்க்கை சக்தியை  தான் மக்கள் சிவனாக வழிபடுகிறார்கள்.

எல்லாம் சிவமயம் என்பது இவற்றைத்தானோ? 

17 கருத்துகள்:

 1. சொல்லும் விஷயத்தை எளிமையான நடையில் மிக தெளிவாக சொல்லும் விதம் உங்களின் சிறப்பு... நண்பரே...

  பகிர்வுக்கு நன்றி... நண்பரே...

  பதிலளிநீக்கு
 2. //சிந்திக்க உண்மைகள். said... CLICK LINK AND READ.

  ராமன் பிறந்தது தசரதனுக்கா? குதிரைக்கா? பார்ப்பன குருக்களுக்கா?//

  நீங்கள் எவற்றை எல்லாம் அவர்கள் செய்தார்கள் என்று சொல்கிறீர்களோ அதைத்தான் உங்களின் சந்ததி செய்யப் போகிறது என்ற சங்கதி உங்களுக்கு தெரியுமா?. அது விரைவில் நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யுங்கள் நண்பரே. நன்றி.

  பதிலளிநீக்கு
 3. //

  "என் ராஜபாட்டை"- ராஜா said...

  அழகா தெளிவா சொல்லிருகிங்க ...//
  அப்படியா! ரொம்ப நன்றி நண்பரே

  பதிலளிநீக்கு
 4. //

  ராஜா MVS said...

  சொல்லும் விஷயத்தை எளிமையான நடையில் மிக தெளிவாக சொல்லும் விதம் உங்களின் சிறப்பு... நண்பரே...

  பகிர்வுக்கு நன்றி... நண்பரே...//

  சிறப்பை எடுத்து கூறியமைக்கு மிக்க நன்றி நண்பரே

  பதிலளிநீக்கு
 5. //
  பிரபஞ்சம்//


  அட பிரபஞ்சம் என்பது ஈரோடு பக்கம் தூத்துக்குடி பக்கம் இருக்கறதா இல்ல இதுவரிக்கும் நான் நெனைச்சுகிட்டு இருந்தேன் .... :))

  //காலஹஸ்தி எனும் திருக்காளத்தி - காற்று
  திருவண்ணாமலை- நெருப்பு
  திருவானைக்காவல் - நீர் ///


  //எல்லாம் சிவமயம் என்பது இவற்றைத்தானோ? ////


  அதாவது சிவன் மூச்சு காற்றா உள்ள போய் கு_ காற்றாய் வெளியே வருகிறாரா ?? :)))


  அதே மாதிரி நாம குடிக்கிற தண்ணியாய் உள்ள போய் உரினாய் வெளியே வருகிறாரா :)))

  பதிலளிநீக்கு
 6. @கிருஷ்ணா உமது லீலைகளை கோபியர்களிடம் மட்டும் வைத்து கொள்ளுங்கள் :))

  பதிலளிநீக்கு
 7. நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...

  என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்... www.rishvan.com

  பதிலளிநீக்கு
 8. //Rishvan said...
  நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...

  என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்... www.rishvan.com//
  பார்த்தேன் நன்றாக உள்ளது தொடர்ந்து எழுதுங்கள். தங்கள் வருகைக்கும் அழைப்பிற்கும் மிக்க நன்றி

  பதிலளிநீக்கு
 9. //..::|| என்னைத்தேடி...ஸ்ரீ ||::.. said...
  அடுத்த பதிவுக்கு வெயிட்டிங்கு...

  இன்று என் பதிவு:: உங்கள் கணிணிச்செயல்பாட்டை விரைவாக்க வேண்டுமா???
  நேற்று என் பதிவு:: அம்பலத்தாரும் கந்தையாண்ணையும்
  பழைய பதிவு:: வேற்றுக்கிரகவாசிகள் பற்றிய முழுமையான அலசல்..//

  உங்கள் பதிவுகள் அருமை தொடர்ந்து எழுதுங்கள். தங்கள் வருகைக்கும் அழைப்பிற்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 10. நீங்கள் கிழே உள்ள லிங்க்குகளை பார்த்துவிட்டீர்களா... இல்லையென்றால் ஒருமுறை பார்த்துவிடுங்கள்.
  http://www.samudrasukhi.com/search/label/அணு அண்டம் அறிவியல்
  இந்த லிங்க்கில் பல புத்தகங்கள் உள்ளன. ஆனால் முதலில் நீங்கள் "அனுஷ்டான ஆன்மீகம்" என்ற புத்தகத்தை படியுங்கள்.
  http://pravaagam.org/ebook.php

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இல்லை ஐயா இனிமேல் தான் பார்க்க வேண்டும்.
   தங்கள் வருகைக்கும் என் அறிவை வளர்த்துக்கொள்ள சுட்டிகள் தந்தமைக்கும் மிக்க நன்றி

   நீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...