வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

சனி, 5 நவம்பர், 2011

தமிழ் தமிழன் என்றால் ஏன் பலருக்கு எரிகிறது?


மிகவும் கசப்பான உண்மையை நான் இங்கே  சொல்லப்போகிறேன். இது பலருக்கும் தெரிந்திருக்கலாம். 

தமிழ் தமிழன் என்று சொன்னாலே தமிழ் நாட்டில் உள்ள சிலருக்கு அல்லது பலருக்கு ஏன் எரிகிறது என்ற சந்தேகம் நீண்ட நாட்களாகவே உள்ளது. இதற்கான காரணமாக நான் கருதுவதை இங்கே  எழுதுகிறேன். இது எந்த அளவுக்கு சரி அல்லது தவறு என்பதை உங்கள் முடிவிற்கே விட்டுவிடுகிறேன்.

௧. தமிழ்நாட்டில் வசிக்கும்  சிலபலர்   தன்னை தமிழன் என்றே  நினைப்பது இல்லை. 
(தமிழன்  என்றால்   என்ன அதை எப்படி வரையறை செய்வது? இனிமேல் தான் வரையறுக்கப்படவேண்டும் என நினைக்கின்றேன்.) 
 தமிழ் பேசும் அனைவரும் தமிழர்களா?  இதற்கு பதில் இல்லை என்று தமிழ் பேசும் பலரே  கூறுவார்கள். காரணம் அவர்களின் தாய் மொழி வேறு ஒன்றாக இருக்கும். அப்படி தாய் மொழி தமிழாகவே சிலருக்கு இருந்தாலும் அவர்கள் மூதாதையர்களின் மொழி வேறு ஒன்றாக இருக்கும். 

தமிழ்நாட்டில் வசிக்கும் தெலுங்கு வழி வந்தவர்களும், மலையாள வழி வந்தவர்களும், கன்னட வழி வந்தவர்களும் தங்களை தமிழன் என்று சொல்லிக் கொள்வதில்லை.மேலும் தமிழ் மொழியை பற்றி பெருமைகள் பேசினால் இவர்களுக்கு எரிகிறது.தங்கள் மொழியை பற்றி பேசவில்லையே என்ற தாழ்வு மனப்பான்மைதான் இதற்கு காரணம். பாதுகாப்பின்மையாக கூட கருதலாம்.  இதற்கு விதிவிலக்காக  சிலபலர் உண்டு. (இவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் தமிழன் தமிழை  உயர்த்தி பேசுகிறானே தவிர மற்ற மொழிகளை தாழ்த்தி பேசவில்லை.) 

௨. கிருத்துவர்களும், இசுலாமியர்களும் தங்களை மதத்தின் பிரதிநிதியாக பார்க்கிறார்களே தவிர மொழியின் பிரதிநிதிகளாக பார்ப்பதில்லை. மதத்திற்கு  தரும் முக்கியத்துவத்தை தமிழுக்கு தருவதில்லை. இதற்கும் விதி விளக்குகள் உண்டு. (மதத்தை விட மொழிதான் பழமையானதும் போற்றத்தக்கதும் எனபதை இவர்கள் உணர வேண்டும். எப்பொழுது நினைத்தாலும் மதம் மாறலாம். ஆனால் மொழி மாற முடியாது.)

௩.பெரியார் தீண்டாமையை ஒழிக்கும் தன் பாதையில்  சில பல பிராமணர்களை நீங்கள் ஆரியர்கள் சமஸ்கிருதம்  தான் உங்கள் மொழி என்று  தமிழுக்கு எதிரியாக்கிவிட்டார்.  இதற்கு விதிவிலக்காக  சிலபலர் உண்டு.

௪ தமிழ் தமிழன் என்று தமிழர்களை தன் சுய நலத்திற்காகவும் குடும்ப நலத்திற்காகவும் சிலர் பயன் படுதிக்கொண்டதால் இன்று உண்மையாக தமிழ் தமிழன் என்பவனையும் சில பல  உண்மையான தமிழர்கள் சந்தேகத்துடன் பார்க்கின்றனர்.

௫. கடந்த பல வருடங்களாக பலரும்  ஆங்கில வழியில் கல்வி கற்று வருவதால் அவர்களுக்கு தமிழ் மொழியின் மீது பற்றில்லாமல் போய்விட்டது.  சிலர் தமிழில் அப்படி என்ன இருக்கிறது, நாம் ஆங்கிலத்தில் படித்து இன்று நன்றாகத்தானே இருக்கிறோம், பின்பு ஏன் இவர்கள் இன்னும் தமிழ் தமிழன் என்று கூப்பாடு போடுகிறார்கள் என்று நினைக்கிறார்கள்.  இதற்கு விதிவிலக்காக  சிலபலர் உண்டு.

இந்த சில காரனங்களால் தான் இன்று தமிழ் தமிழன் என்றால் பலருக்கும் எரிகிறது. 

நான் அனைவரும் ஜாதி மதம் போல் மொழி என்ற வட்டத்தில் அனைவரும் தங்களை அடைத்து கொள்ள வேண்டும் என்று கூறவில்லை. மாறாக மொழிக்கு முக்கியத்துவம்  கொடுங்கள் என்று தான் கூறுகிறேன். (ஜாதி மதம் என்ற வட்டமே தேவையற்றது என்றே நான் நினைக்கின்றேன்) 

ஆனால் மொழியை அவ்வாறு ஒதுக்க முடியாது ஒதுக்கவும்  கூடாது.
மனிதன் கண்டுபிடிப்பில் நான் மிகவும் உயர்ந்ததாகவும் சிறந்ததாகவும் கருதுவது மொழியைத்தான். மொழியின் பெயரால் சண்டை இடுங்கள் என்று நான் கூறவில்லை. அனைத்து மொழியையும் அன்போடு பாருங்கள் என்றுதான் கூறுகிறேன். அனைத்து மொழிகளையும் ஏற்றத்தாழ்வின்றி பார்க்க வேண்டும் 

தாஜ்மஹாலை முகமதியர்களின் சின்னமாக பார்க்காமல் எப்படி காதலின் சின்னமாக கொண்டாடுகிறோமோ அவ்வாறே தமிழின்  தொன்மையை நாம் பார்க்க வேண்டும். (இதற்கு சமஸ்கிருதம் விதிவிலக்கல்ல).

அதே நேரத்தில் அவர் அவர்களது தாய்மொழியை காப்பது தாய் தந்தையை காப்பது போல் அவர் அவர்களின் கடமை என்று உணர்ந்தால். மொழியின் பெயரால்  சண்டையும் வராது, அச்சமும் வராது, எரிச்சலும் வராது. 

33 கருத்துகள்:

 1. தங்களின் கருத்து ஏற்ப்புடையதாகவே தோன்றுகிறது...

  பதிலளிநீக்கு
 2. //"என் ராஜபாட்டை"- ராஜா said...
  Super articals . . Really great//
  Thank you for your appreciation raja.

  பதிலளிநீக்கு
 3. //ராஜா MVS said...
  தங்களின் கருத்து ஏற்ப்புடையதாகவே தோன்றுகிறது.//

  தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி ராஜா

  பதிலளிநீக்கு
 4. மிக சரி!
  தமது தாய்மொழி எது என்று தெரியாதவர்களும்.
  வேற்று தாய்மொழியை உடையவர்களை திருமணம் அல்லது காதலிப்பவர்களும்...

  பதிலளிநீக்கு
 5. .தங்கள் மொழியை பற்றி பேசவில்லையே என்ற தாழ்வு மனப்பான்மைதான் இதற்கு காரணம். பாதுகாப்பின்மையாக கூட கருதலாம்.//
  அவர்கள் மொழியைப் பற்றிப் பேச என்ன இருக்கிறது அவை அனைத்தும் சமற்கிருதத்தின் அடிமை மொழிகள் காலை நக்கும் மொழிகள் சமற்கிருதம் இல்லை என்றால் அவை செத்துவிடும் ? ஒரு வட்டார வழக்கை மொழி என்று சாதிக்கும் அயோக்கியத்தனம்

  பதிலளிநீக்கு
 6. பாஸ் !
  //தமிழ் தமிழன் என்று தமிழர்களை தன் சுய நலத்திற்காகவும் குடும்ப நலத்திற்காகவும் சிலர் பயன் படுதிக்கொண்டதால்//

  இதான் அசலான பாய்ண்டுன்னு நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 7. எனக்கு வீட்டில் பேசும் மொழி வேறுதான். ஆனால் தமிழன் என்று சொல்லிக்கொள்ளவே விரும்புகிறேன்.

  எழுத்தாளர் பிரபஞ்சன் எங்கள் ஊருக்கு வந்திருந்தபோது இந்தக்கேள்விக்கு விடைதரும் விதமாக கீழ்க்காணும் கருத்தைச் சொன்னார். அதுவே எனக்கு சரி என்று படுகிறது.
  ”தமிழர்களுக்கு தமிழ் உணர்வு தாமே அமைகிறது. அது போதாது. தமிழ் அறிவையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.”

  தமிழ் மொழி அறிவு பெருகப் பெருக அதன்மேல் மதிப்பும் மரியாதையும் உயர்கிறது. தமிழ் அறிவு கூட்டும் இராம.கி முதலான பல பதிவர்களின் ஆக்கங்கள் போற்றக்கூடியவை.

  பதிலளிநீக்கு
 8. //ஒதிகை மு.க.அழகிரிவேல் said...
  மிக சரி!
  தமது தாய்மொழி எது என்று தெரியாதவர்களும்.
  வேற்று தாய்மொழியை உடையவர்களை திருமணம் அல்லது காதலிப்பவர்களும்...//
  தங்களுடைய கருத்துக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி

  பதிலளிநீக்கு
 9. //செந்திலான் said...
  .தங்கள் மொழியை பற்றி பேசவில்லையே என்ற தாழ்வு மனப்பான்மைதான் இதற்கு காரணம். பாதுகாப்பின்மையாக கூட கருதலாம்.//
  அவர்கள் மொழியைப் பற்றிப் பேச என்ன இருக்கிறது அவை அனைத்தும் சமற்கிருதத்தின் அடிமை மொழிகள் காலை நக்கும் மொழிகள் சமற்கிருதம் இல்லை என்றால் அவை செத்துவிடும் ? ஒரு வட்டார வழக்கை மொழி என்று சாதிக்கும் அயோக்கியத்தனம்//
  அனைத்து மொழிகளையும் சமமாகவே பார்க்க வேண்டும் தோழரே. அது தான் தமிழர் பண்பாடு. தங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 10. //சித்தூர்.எஸ்.முருகேசன் said...
  பாஸ் !
  //தமிழ் தமிழன் என்று தமிழர்களை தன் சுய நலத்திற்காகவும் குடும்ப நலத்திற்காகவும் சிலர் பயன் படுதிக்கொண்டதால்//

  இதான் அசலான பாய்ண்டுன்னு நினைக்கிறேன்.//

  சரிதான் பாஸ். இன்று இதுதான் மிக முக்கிய காரணம். தங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி சார்.

  பதிலளிநீக்கு
 11. //குலவுசனப்பிரியன் said...
  எனக்கு வீட்டில் பேசும் மொழி வேறுதான். ஆனால் தமிழன் என்று சொல்லிக்கொள்ளவே விரும்புகிறேன்.

  எழுத்தாளர் பிரபஞ்சன் எங்கள் ஊருக்கு வந்திருந்தபோது இந்தக்கேள்விக்கு விடைதரும் விதமாக கீழ்க்காணும் கருத்தைச் சொன்னார். அதுவே எனக்கு சரி என்று படுகிறது.
  ”தமிழர்களுக்கு தமிழ் உணர்வு தாமே அமைகிறது. அது போதாது. தமிழ் அறிவையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.”

  தமிழ் மொழி அறிவு பெருகப் பெருக அதன்மேல் மதிப்பும் மரியாதையும் உயர்கிறது. தமிழ் அறிவு கூட்டும் இராம.கி முதலான பல பதிவர்களின் ஆக்கங்கள் போற்றக்கூடியவை.//

  உங்களின் கருத்து மகிழ்ச்சியை தருகின்றது. தமிழ் அறிவையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பது மிக மிக முக்கியம்.
  உங்களுக்கு மட்டும் அல்ல பல வெளி நாட்டு அறிஞர்களும் தமிழ் மொழியை படித்து விட்டு மிகவும் கொண்டாடினர் கொண்டாடிக்கொண்டிருக்கின்றனர்.
  தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி

  பதிலளிநீக்கு
 12. அனைத்து மொழிகளையும் சமமாக எப்படி மதிக்கமுடியும் ? தமிழ் ஒரு செம்மொழி தனித்தியங்க வல்லது அதனுடன் சமற்கிருதத்தின் அடிமை மொழிகளை எப்படி இணை வைக்க முடியும் ? அவர்கள் என்ன கத்தினாலும் தமிழின் அருகில் கூட வர முடியாது. எல்லா மொழிகளும் சமம் என்பது மொழி அறிவற்றவர்களின் வாதமாக இருக்கலாம்

  பதிலளிநீக்கு
 13. //செந்திலான் said...
  அனைத்து மொழிகளையும் சமமாக எப்படி மதிக்கமுடியும் ? தமிழ் ஒரு செம்மொழி தனித்தியங்க வல்லது அதனுடன் சமற்கிருதத்தின் அடிமை மொழிகளை எப்படி இணை வைக்க முடியும் ? அவர்கள் என்ன கத்தினாலும் தமிழின் அருகில் கூட வர முடியாது. எல்லா மொழிகளும் சமம் என்பது மொழி அறிவற்றவர்களின் வாதமாக இருக்கலாம்//


  தென்னிந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளும் தமிழ் மொழியிலிருந்து பிறந்தவையே. தமிழானது அனைத்து மொழிகளுக்கும் தாய். ஏன் உலக மொழிகளுக்கெல்லாம் கூட தாயாக இருக்கலாம். அதை நோக்கி இன்று ஆய்வுகள் பல நடக்கின்றன. ஒரு தாய் எவ்வாறு
  குழந்தைகளுக்கு மத்தியில் ஏற்றத் தாழ்வு பார்க்க கூடாதோ அவ்வாறே தமிழ் மொழியை தாய் மொழியாக கொண்ட நாமும் தமிழ் மொழியின் குழந்தை மொழிகளை பாவிக்க வேண்டும். மற்ற மொழிக்காரர்களின் மீது உங்களுக்குள்ள கோபத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. உங்கள் கோபத்தை விட்டு விட்டு அல்லது கோபத்தோடே தமிழ் மொழியின் அருமையை அவர்களும் உணரும் படி, புரிந்து ஏற்றுக்கொள்ளும் படி ஏதாவது செய்யுங்கள். அதுவே நீங்கள் தமிழுக்கு செய்யும் பெரும் தொண்டாகும். நன்றி.

  பதிலளிநீக்கு
 14. Super articals . . Rசரிதான் பாஸ். இன்று இதுதான் மிக முக்கிய காரணம். தங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி சார்.eally great

  பதிலளிநீக்கு
 15. ram said...
  Super articals . . Rசரிதான் பாஸ். இன்று இதுதான் மிக முக்கிய காரணம். தங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி சார்.eally great//

  பின்னூட்டங்களை வைத்தே பின்னூட்டமா...நல்லா இருக்கு சார். தங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 16. புரட்சிமணி, சூப்பரா எழுதியிருக்கீங்க. சரியான பாயிண்டை பிடிச்சி உலுக்கியிருக்கீங்க. இதில் வேதனையான விஷயம் என்னவென்றால் தமிழர்களே தாழ்வு மனப்பான்மையால் தமிழை ஒதுக்குவதுதான். மற்றவர்களை குறை கூறி என்ன பயன்.

  பதிலளிநீக்கு
 17. //செந்திலான் said...
  அனைத்து மொழிகளையும் சமமாக எப்படி மதிக்கமுடியும் ? தமிழ் ஒரு செம்மொழி தனித்தியங்க வல்லது அதனுடன் சமற்கிருதத்தின் அடிமை மொழிகளை எப்படி இணை வைக்க முடியும் ? அவர்கள் என்ன கத்தினாலும் தமிழின் அருகில் கூட வர முடியாது. எல்லா மொழிகளும் சமம் என்பது மொழி அறிவற்றவர்களின் வாதமாக இருக்கலாம்//

  செந்திலான் சார் ஏன் இந்த கோபம். மொழி என்பது மனிதனின் உணர்வுகளை, சிந்தனைகளை வெளிப்படுத்தும் ஒரு கருவி என்றளவில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது எனது கருத்து.

  உண்மையில் எந்த மொழி உயர்வானது என்று வீணாக சண்டையிடுவதை விட அந்த மனிதனின் கருத்துகள் மனித குலத்திற்கு நன்மையளிக்குமேயானால் அனைத்து மொழி கருத்துகளும் ஏற்றுக்கொள்ளக்கூடியதே. அந்த வகையில் பழங்காலம் தொட்டு தமிழர்கள் சிறந்த பண்பட்ட மனிதர்களாக வாழ்ந்திருந்திருக்கிறார்கள் என்பதற்கு அவர்களது படைப்புகளே சாட்சி.

  பாரதிகூட எழுதியிருக்கிறார் பிறமொழியிலுள்ள சிறந்த நூல்களை எளிய தமிழில் படைக்கவேண்டும் என்று.

  எனவே மனிதனாக இருப்பவர்கள் சாதி, மதம், இனம், மொழி போன்றவற்றால் பிரிந்து பகைமை பாராட்டுவதை காட்டிலும் புரிந்துணர்வின் மூலம் மனிதம் தழைக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக இருக்க வேண்டும் என்பது எனது கருத்து.

  தங்களை உயர்வாக கருதும் மனோபாவமே தங்கள் சாதி, மதம், இனம், மொழிகளையும் உயர்வாக கருத இடம் கொடுக்கிறது. மனிதனுக்கு மனிதன் என்ன உயர்வு தாழ்வு வேண்டியிருக்கிறது? அனைவரிடமும் அந்த இறைவன் ஆன்ம வடிவில் குடிகொண்டிருக்கிறார். வள்ளளார் கூறியது போல வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்பதை போல பிறர் துன்பம் கண்டு வாடுபவனே ஆறறிவுள்ள மனிதன். மற்றவர்கள் எல்லாம் இன்னும் பக்குவப்பட வேண்டியவர்களே.

  பதிலளிநீக்கு
 18. தமிழை இன்னும் எரிக்க முடியாத ஆத்திரம்!
  அதான் அவிங்களுக்கு எரியுது!!

  பதிலளிநீக்கு
 19. மனிதன் நீங்கள் இதை மற்ற மொழிக்காரர்களிடம் பேசிவிட்டு பழகிவிட்டு வந்து சொல்லுங்கள் ஏற்றுக் கொள்கிறேன். தமிழனின் இந்த பெருந்தன்மை எனும் இளிச்சவாயத்தனம் தான் இங்க கண்டவனெல்லாம் வந்து ஆட்சி செய்து கொள்ளை அடித்து தமிழினத்தை அழிக்கும் நிலைக்குத் தள்ளியது. இங்கே வந்தேறிகளுக்கு இருக்கும் நில உரிமைகள் கூட தமிழர்களான ஆதி திராவிடர்கள், தேவேந்திர குல மக்கள் போன்றவர்களுக்கு இல்லை.இனி இதை தொடர அனுமதிக்க முடியாது.

  பதிலளிநீக்கு
 20. //MANI said...
  புரட்சிமணி, சூப்பரா எழுதியிருக்கீங்க. சரியான பாயிண்டை பிடிச்சி உலுக்கியிருக்கீங்க. இதில் வேதனையான விஷயம் என்னவென்றால் தமிழர்களே தாழ்வு மனப்பான்மையால் தமிழை ஒதுக்குவதுதான். மற்றவர்களை குறை கூறி என்ன பயன்.//
  நீங்கள் சொல்வது சரிதான் மணி. தமிழன் தாழ்வு மனப்பான்மையிலும் அடிமைத்தனத்திலும் மூழ்கி கிடக்கிறான்.

  பதிலளிநீக்கு
 21. //சீனுவாசன்.கு said...
  தமிழை இன்னும் எரிக்க முடியாத ஆத்திரம்!
  அதான் அவிங்களுக்கு எரியுது!!//

  அவர்கள் உண்மையை புரிந்து கொள்வார்கள் என நம்புவோம்

  பதிலளிநீக்கு
 22. //செந்திலான் said...
  மனிதன் நீங்கள் இதை மற்ற மொழிக்காரர்களிடம் பேசிவிட்டு பழகிவிட்டு வந்து சொல்லுங்கள் ஏற்றுக் கொள்கிறேன்.
  தமிழனின் இந்த பெருந்தன்மை எனும் இளிச்சவாயத்தனம் தான் இங்க கண்டவனெல்லாம் வந்து ஆட்சி செய்து கொள்ளை அடித்து தமிழினத்தை அழிக்கும் நிலைக்குத் தள்ளியது.//
  நீங்கள் மணி கூறியதற்காக இதை சொல்கிறீர்கள் என நினைக்கின்றேன். இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள கூடியதே. தமிழன் நினைப்பது போல் மற்ற மொழிக்காரர்கள் நினைப்பது இல்லை. அதற்காக நாம் கெட்டுவிட கூடாது அவர்களுக்கும் நம்மை போன்ற ஒரு புரிந்துணர்வை எவ்வாறு ஏற்ப்படுத்தலாம் என்று யோசிக்க வேண்டும். அதை செயல் படுத்த வேண்டும்.

  //இங்கே வந்தேறிகளுக்கு இருக்கும் நில உரிமைகள் கூட தமிழர்களான ஆதி திராவிடர்கள், தேவேந்திர குல மக்கள் போன்றவர்களுக்கு இல்லை.இனி இதை தொடர அனுமதிக்க முடியாது.//

  நீங்கள் இங்கே எதை பற்றி கூறுகிறீர்கள் என தெரியவில்லை நண்பரே.

  நண்பரே உங்கள் மனதில் இருக்கும் உண்மையான கோபத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. இந்த கோபத்தை நீங்கள் ஆக்கப்பூர்வமாக செயல்படுத்தி பாருங்கள்.
  நன்றி.

  பதிலளிநீக்கு
 23. தாய்மொழிப் பற்றில்லாதவனும் பெற்றோரை வயதான காலத்தில் கவனிக்காதவனும் பாவிகள்.
  வேறென்ன சொல்ல ?

  பதிலளிநீக்கு
 24. //சிவகுமாரன் said...
  தாய்மொழிப் பற்றில்லாதவனும் பெற்றோரை வயதான காலத்தில் கவனிக்காதவனும் பாவிகள்.
  வேறென்ன சொல்ல ?//

  ரொம்ப சரி நண்பரே

  பதிலளிநீக்கு
 25. Hello, Just I want to tell onething, TAMIL is always good, but you people don't know, what TAMIL exactly telling, You people has captions "TAMILEN ENTRU SOLLADA , THALAI NIMERINDHU NILLADA", you people just using this caption , but not follwing what TAMIL is saying. You people always thinking TAMIL is only for you people. But is not like that, TAMIL is for everyone, I am Malayali by Birth. I love Tamil, but I am not loving the people you is saying TAMILEN ENTRU SOLLAD, THALAI NIMERINDHU NILLADA", why because, Most of people are not following what Tamil Saying. They are using for FAME purpose. If you people are following TAMIL, TAMIL NADU will be a heaven. We will not see the TASKMARK, Bribe, etc. So I am not accepting a person, one who is Tamilen by Birth. But I accept a person, one who is not by birth of tamil, but following TAMIL languages.
  If you people feeling wrong about my thought , pls forgive me.
  Thank you

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Your thoughts are absolutely correct Mr.Radhakrishnan. I 100% agree with you. Thanks for your comments. sorry for the delay in replying to your comment.

   நீக்கு
 26. WHY MANY HATE TO IDENTIFY THEMSELVES AS TAMILIANS...MY OPINION.
  1.BECAUSE OF RELIGION - MANY RELIGION IN TAMIL NADU ...DONT WANT TAMIL TO BE PROMOTED AS FINE & BEST LANGUAGE WITH MORE THAN 5000YRS OF TRADITIONAL WRITINGS.... WHICH WILL EVENTUALLY SHOW OTHER LANGUAGES AND RELIGION IS POOR LIGHT....IT IS BETTER FOR THEM TO MAKE PEOPLE FORGET THEIR SUPERIOR WAY OF LIVING,LANGUAGE, TRADITION AND CULTURE....EASY WAY TO ACHIEVE THAT TARGET IS TO MAKE THEM FORGO THEIR LANGUAGE....SO ITS A COLLECTIVE EFFORT FROM LOT OF AGENCIES...
  2.FOR OTHERS WHO SETTLED IN TAMIL NADU ...THEY ARE AFRAID THAT THEIR LANGUAGE IS ONE OFF SHOOT OF TAMIL...SEE ANY SOUTH LANGUAGE THEY DONT HAVE MORE THAN 1000 YRS OF WRITINGS...SO THEY WANT TO FORGET THAT PART,,,,

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Your thoughts are absolutely correct and I 100 % agree with you Mr.Rajali1910. Thanks for your comments.

   நீக்கு
 27. நான் மதத்தால் கிறிஸ்ததவன் அதைவிட நான் தமிழன் என்பதுதான் எனக்கு பெருமை

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...