வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

ஞாயிறு, 9 அக்டோபர், 2011

பிரபஞ்சத்தில் முதலில் உருவானது எது?


பிரபஞ்சம் எப்படி உருவானது என்பது பற்றி பல கருத்துக்கள் நிலவுகின்றன. 
பெருவெடிப்பின் அதாவது "big bang"  மூலம் தான் பிரபஞ்சம் உருவானது என்று பெரும்பாலான அறிவியலாளர்கள் சொல்கின்றனர். இதில் பாதி உண்மையும் பாதி பொய்யும் உள்ளதாகவே நான் கருதுகிறேன்.

இன்றைய பிரபஞ்சம் பெருவெடிப்பின் மூலமாக உருவாகி இருந்தாலும் அதுவே முழு முதல் தொடக்கம் அல்ல. அது ஒரு தொடர்ச்சியான நிகழ்வே.  அதாவது பெருவெடிப்புக்கு முன்பே பிரபஞ்சம் தோன்றியிருக்க வேண்டும். 

அப்படி பெருவெடிப்புக்கு முன்பே பிரபஞ்சம் தோன்றி இருந்தால் முதலில் என்ன தோன்றியிருக்க வேண்டும் என்பதுதான் அடுத்த கேள்வி.

சென்ற பதிவில் பிரபஞ்சம் தோன்றும்பொழுது எந்த வண்ணத்தில் இருந்திருக்கும் என்று கேள்வி எழுப்பினேன். அதற்க்கான பதில் "கருப்புக்கும் நீலத்திற்கும் இடைப்பட்ட ஒரு வண்ணம்" அதை "நீலம்" என்றும் சொல்லலாம். . இப்பொழுது உங்களுக்கு தெரிய வந்திருக்கும் பிரபஞ்சத்தில் முதலில் தோன்றியது எது என்று.
ஆம் அதுதான் வானம். 

இதை நீங்கள் உங்களின் அகத்தாய்வின்  மூலம் "காண" முடியும் ஆமாம் "காண" முடியும் என்றே நான் நினைக்கின்றேன்.  இது என்னுடைய கற்பனையா அல்லது உண்மையா என்பதை நீங்கள் அகத்தாய்வின் மூலம் மட்டுமே உணர முடியும்.

அகத்தாய்வில் இருப்பவர்களில் பலர்  முதன் முதலில் கிளிபச்சை நிறத்தை  காண்பதற்கான  வாய்ப்புகளே அதிகம். 
ஆதலால் சிலருக்கு கிளிப்பச்சை நிறம் தான் பிரபஞ்சத்தில் முதலில் 
 தோன்றி இருக்குமோ என்ற எண்ணம் வரலாம். அது சரியா தவறா என்று எனக்கு தெரியவில்லை. வள்ளலாரின் கூற்றுப்படி இந்த கிளிப்பச்சை நிறம் தான் ஆன்மாவை மறைத்திருக்கும் முதல் திரை.

10 கருத்துகள்:

 1. நல்ல விளக்கம்.. அன்பரே..

  வள்ளலார் கூறிய அந்த ஏழுதிரையின் வண்ணங்களும், அதற்க்கான விளக்கத்தையும் தாங்கள் ஒரு பதிவிட்டால் உபயோகமாக அமையும்.. நண்பரே...

  காத்திருக்கிறேன்... மிக்க நன்றி...

  பதிலளிநீக்கு
 2. //வைரை சதிஷ் said...
  நல்ல தகவல்//
  தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சதீஷ்

  பதிலளிநீக்கு
 3. //ராஜா MVS said...
  நல்ல விளக்கம்.. அன்பரே..

  வள்ளலார் கூறிய அந்த ஏழுதிரையின் வண்ணங்களும், அதற்க்கான விளக்கத்தையும் தாங்கள் ஒரு பதிவிட்டால் உபயோகமாக அமையும்.. நண்பரே...

  காத்திருக்கிறேன்... மிக்க நன்றி...//

  உங்களுக்கே பல செய்திகள் தெரிந்துள்ளது. இருப்பினும் என்னை கேட்கின்றீர்கள். ஏழு திரை தெரியும் அதன் விளக்கம்? எனக்கு அவ்வளாக இது பற்றி தெரியாது. இறைவன் விருபினால் நிச்சயம் இது சம்பந்தமாக ஒரு பதிவு வரும். (ஆனா ரொம்ப எதிர்பார்க்கதிங்க :) )

  தங்கள் வருகைக்கு மிக்க நன்றி ராஜா

  பதிலளிநீக்கு
 4. கோழியா,முட்டையா,எது முதலில்?அது போலவேஐதுவும் என நினைக்கிறேன்.ஆனாலும் அறிவியலை தாண்டி எதுவும் இல்லை எனவே தோனுகிறது.உதாரணம்.சுனாமியும்,ஜப்பானும்/

  பதிலளிநீக்கு
 5. நம்ம சைட்டுக்கும் வாங்க பாஸ்!
  நல்லா பழகுவோம்!!

  பதிலளிநீக்கு
 6. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..

  http://anubhudhi.blogspot.com/

  பதிலளிநீக்கு
 7. //விமலன் said...
  கோழியா,முட்டையா,எது முதலில்?அது போலவேஐதுவும் என நினைக்கிறேன்.ஆனாலும் அறிவியலை தாண்டி எதுவும் இல்லை எனவே தோனுகிறது.உதாரணம்.சுனாமியும்,ஜப்பானும்///
  வாங்க விமலன். அனைத்தையும் கடந்தால் தான் உண்மை தெரியும். நன்றி

  பதிலளிநீக்கு
 8. ///சீனுவாசன்.கு said...
  நம்ம சைட்டுக்கும் வாங்க பாஸ்!
  நல்லா பழகுவோம்!!//

  இதோ வந்துட்டேன்

  பதிலளிநீக்கு
 9. //Sankar Gurusamy said...
  இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..

  http://anubhudhi.blogspot.com///
  தங்களுடைய வாழ்த்துக்கு மிக்க நன்றி
  சற்றே கடந்த தீபவளி வாழ்த்துக்கள

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...