வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

புதன், 1 பிப்ரவரி, 2012

வேதம், இறைவேதம் எப்படி கிடைக்கின்றது?


எல்லா சமூகத்திலும் இது இறைவன் சொன்னது என்று சில விடயங்கள் சொல்லப்படுகிறது. இது எவ்வாறு கிடைக்கின்றது? இது இறைவனால் தரப்படுவதா? என்ற சந்தேகங்கள் பலருக்கும் உண்டு. இது எனக்கும் உண்டு.
ஒவ்வெரு கேள்விக்கு பதிலும் உங்களுக்குள் உள்ளது. அவ்வாறு சிந்திக்கும் பொழுது எனக்கு கிடைத்த பதிலே இப்பதிவு. 

காலம் காலமாக இந்தியாவில் சிவ தரிசனம், இறை தரிசனம் கிடைக்கின்றது என்று சொல்வர். இது உண்மையா என்று ஆன்மீக பாதையில்  சென்று பார்ப்பவர்களுக்கு மட்டுமே தெரியும். அவ்வாறு ஆன்மீக பாதையில்  செல்பவர்கள் உணரும் உண்மைகளே வேதங்களும், இறைவேதங்களும். 

அதே நேரத்தில் இறை தரிசனம் பெற்ற ஒருவர் சொல்வதெல்லாம் வேதமாகுமா என்றால் இல்லை என்றே எனக்கு தோன்றுகிறது. 

இயற்கையை, இறைவனை பற்றிய உண்மையை ஒருவர் எப்படி புரிந்து கொள்கிறார், எப்படி சிந்திக்கிறார், எப்படி வாழ்கிறார் என்பதை பொறுத்து  வேதங்களின் தன்மையும் மாறுபடுகிறது.

ஒருவரின் அக, புற சூழல்கலை பொறுத்து வேதங்களும், இறைவேதங்களும் வேறுபடுகின்றது என்று சொல்லலாம். 


ஒருவரின் சுய  விருப்பு  வெறுப்புகளும்  சில  நேரங்களில் அவர்களின் கருத்தில் வரலாம்.

 இதைவிட ஒருவர் ஆன்மீகத்தில் எவ்வளவு முனேற்றம் அடைந்துள்ளார்  என்பதும் அவரது சிந்தனைகளை, புரிதலை பாதிக்கும் 

ஆதலால் தான் வாள்ளுவர் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்கிறார். ஒருவர்  சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் ஆய்ந்து அறிய வேண்டும் என்கிறார்.

இவ்வுலகில் உள்ள வேதங்கள்,இறைவேதங்கள் அனைத்தும் ஆன்மீக பாதையில் சென்றவர்கள் விட்டு சென்றதாக இருக்க கூடும். அதே நேரத்தில் அவை யாவும் இறைவன் சொன்னது என்பதை விட அவர்களின் புரிதல், மற்றும் அவர்கள் சொன்னது அவ்வாறு என்று சொல்லவேண்டும் என்றே எனக்கு தோன்றுகிறது. 

இதற்க்கு உதாரணமாக சமண முனிவர்களையும், புத்த முனிவர்களையும் சொல்லலாம். ஏன் இனில் இவர்கள் யாரும் இதை இறைவன் சொன்னது என்று சொன்னதாக எனுக்கு ஞாபகம் இல்லை. இருப்பினும் அவர்களும் இறைவனை பற்றிய உண்மைகளை அறிந்தவர்களாகத்தான் தெரிகிறது. 

ஒருவேளை இது இறைவனின் அருளால் கிடைப்பதால் இதை வேதம், இறைவேதம் என்கின்றனர் என எண்ணுகிறேன். 

உண்மையை சொல்ல வேண்டுமானால் இவ்வுலகில் பிறந்த அனைவரும் இறை தரிசனம் பெற முடியும். வேதத்தை, இறை வேதத்தை, உண்மையை அவர் அவர்களும் பெற முடியும். இதுவே  இறைவனின் விருப்பமாகவும் இருக்க முடியும். 



12 கருத்துகள்:

  1. இதுவே இறைவனின் விருப்பமாகவும் இருக்க முடியும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படி இருக்க வேண்டும் என்பது தான் என்னுடைய ஆசையும். :) தங்கள் வருகைக்கு நன்றி

      நீக்கு
  2. புரட்ச்சி,

    எனக்கு 1/2 அடிச்சா இறைவேதம் வரும், ஆனா எழுதி புக்கா போடலை இன்னும் :-))

    ---------

    பாலா,

    கூடங்குளம் அணு உலை இறைவன் விருப்பமாக இருக்கும்னு சும்மா இருக்கலாமே :-))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருமை :)
      இதை படித்து பாருங்க
      மதுவிற்கும் தியானத்திற்கும் சம்பந்தம் உண்டா?

      http://kelviyumnaaneypathilumnaaney.blogspot.in/2011/07/blog-post_06.html
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

      நீக்கு
  3. இருப்பதில் யாவும் இறைவேதம் இல்லை அவை குறைவேதம் தான், மதவாதிகள் தங்களுக்கு ஏற்றவாறு திரித்துக் கொள்ளவசதியாக உள்ளதே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுதான் கொடுமையே...இன்று ஒரு தூதர் வந்து வீடியோவில் பதிவு செய்தால்? சொல்ல முடியாது அதையும் திருத்தி விடுவார்கள். அதை ஒன்னும் செய்ய முடியாதென்று தான் நினைக்கின்றேன்.
      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

      நீக்கு
  4. //அதே நேரத்தில் அவை யாவும் இறைவன் சொன்னது என்பதை விட அவர்களின் புரிதல், மற்றும் அவர்கள் சொன்னது அவ்வாறு என்று சொல்லவேண்டும் என்றே எனக்கு தோன்றுகிறது.//

    //ஒருவேளை இது இறைவனின் அருளால் கிடைப்பதால் இதை வேதம், இறைவேதம் என்கின்றனர் என எண்ணுகிறேன்.//

    இரண்டு வாக்கியங்களுக்கும் உள்ள முரண்பாடுதான் வாழ்க்கையில் உள்ள முரண்பாடுகள்.

    இறைவன் சொன்னது என்பதை விட அவர்களின் புரிதல் என்பதுதான் சரி. அதே வேளையில் இறைவன் அருளால் அந்த புரிதல் வந்திருக்கும் என்பதை எப்படி நியாயப்படுத்த முடியும்? அப்படி இறைவன் அருளால் வந்திருக்கும் எனில் அது இறைவன் சொன்னதாகவே பொருள பட வாய்ப்பு உண்டு.

    இந்த உலகில் எல்லாம் மனிதர்கள் எழுதியதுதான். மனிதர்கள் சொன்னதுதான். இதில் மாற்று கருத்து ஏதுமில்லை. இறைவன் எழுதவில்லை, சொன்னது இல்லை என சொல்லும் போது தவறாக படுகிறது.

    ஹூம், ரொம்ப பாலிசா பேசி பாசாங்கு போட சொல்லும் உலகம். :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இறைவன் சொன்னது என்பதை விட அவர்களின் புரிதல் என்பதுதான் சரி. அதே வேளையில் இறைவன் அருளால் அந்த புரிதல் வந்திருக்கும் என்பதை எப்படி நியாயப்படுத்த முடியும்? அப்படி இறைவன் அருளால் வந்திருக்கும் எனில் அது இறைவன் சொன்னதாகவே பொருள பட வாய்ப்பு உண்டு. //

      அருமை....அப்பொழுது இறைவனை பற்றி பேசாத விவேகனந்தர், புத்தர், சமண முனிதான் சரியோ? இறைவன் என்பதை நான் இயற்கை மற்றும் அதன் சக்தியாகத்தான் பார்க்கிறேன். பார்ப்போம் சீக்கிரம் ஏதாவது தெளிவு பிறக்கும்.வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

      நீக்கு
    2. இதையும் மற்ற இரண்டு பாகத்தையும் படியுங்கள்.
      நன்றி


      http://kelviyumnaaneypathilumnaaney.blogspot.in/2011/04/3.html

      நீக்கு
  5. //புரட்ச்சி,

    எனக்கு 1/2 அடிச்சா இறைவேதம் வரும், ஆனா எழுதி புக்கா போடலை இன்னும் :-))//

    ஏன் இன்னும் தயக்கம்! எப்போ வெளியிடுவதாக உத்தேசம்! :-)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் சகோ,
      சொல்ல முடியாது அவர் சொல்லும் கருத்துக்கள் சிறப்பாக கூட இருக்கலாம்.
      கண்ணதாசன் மது அருந்திவிட்டுத்தான் பாட்டு எழுதியதாக சொல்வார்கள்.
      யார் எதை கூறினாலும் நற்கருத்துக்களை மட்டும் எடுத்து கொண்டு தீய கருத்துக்களை விட்டு விட வேண்டும்.
      தங்கள் வருகைக்கு மிக்க நன்றி

      நீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...