வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

வெள்ளி, 9 மார்ச், 2012

இது கிருத்துவர்கள் சதியா? இசுலாமியர்கள் சதியா?இந்துக்கள் சதியா? அல்லது வேறு சதியா?


எனக்கு ஒன்னும் புரியல..என்னுடையா தளத்தை யாரோ சுட்டு விட்டார்கள். இது கிருத்துவர்கள் சதியா? அல்லது இசுலாமியர்கள் சதியா? அல்லது வேறு சதியா? என எனக்கு தெரியவில்லை.

கிருத்துவம் மற்றும் இசுலாம் ஆகியவற்றை விமர்சித்து  சில பதிவுகள் தான் இட்டுள்ளேன் அதற்கே இவ்வளவு பெரிய சதியா?

நான் கிருத்துவம், இசுலாம், இந்து மத ஒற்றுமைகளை பற்றி எழுதியவற்றை இவர்கள் படிக்கவில்லையா?

அல்லது அதற்கு தண்டனையாகத்தான் என் தளப்பெயரை திருடிவ்ட்டார்களோ?

ஆமாங்க முதலில் .com போட்டு தளத்தை திறந்தாள், என்னுடைய தளத்தை காணவில்லை. அது கிருத்துவ தளத்திற்கு செல்கிறது.  இங்கே போய்  பாருங்க 

ரொம்ப சிரமமா போச்சு....
பிறகு ஏதேதோ செய்து பார்க்க .in போட்டு  பார்க்க என்னுடைய தளம் வருகிறது.

இது யார் செய்த சதி..எதற்கு செய்த சதி என்று ஒன்றும்  புரியவில்லை. உங்களுக்கு தெரிந்தால் யாராவது சொல்லுங்கள் நண்பர்களே.
போலிகளை கண்டு ஏமாறாதீர்கள் .in இட்டு என்னுடைய தளத்தை திறக்க முயலுங்கள்.
நன்றி

பிற்சேர்க்கை: இப்பொழுது சில நேரங்களில்  .in கூட வேறு தளத்திற்கு இட்டு செல்கிறது :( 

9 கருத்துகள்:

 1. நண்பரே, இந்த சதியை kafir கள் செய்திருக்க மாட்டார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ம்ம்ம்ம் பொறுத்திருந்து பார்ப்போம் நண்பரே :)

   நீக்கு
 2. நன்பரே இது கூகுள் செய்த விஷயம். அவ்ளோதான்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பரே வாங்க,
   கூகுள் .com ஐ .in ஆக மாற்றியது எனபதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் என் தளத்தின் பெயரில் எப்படி ஒரு ஆங்கில தளம்? புரியலையே நண்பரே

   நீக்கு
 3. தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் ஆனால் தர்மமே வெல்லும்.

  பதிலளிநீக்கு
 4. ஒரு வாசகம்னாலும் திருவாசகமா சொல்லிட்டிங்க :) தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :)

  பதிலளிநீக்கு
 5. மரணத்திற்குப் பின் உடலுக்குள்.... இயக்கமே இல்லை எனும் நிலைமையில்...!

  செத்தபின் சொர்க்கமாம்! செப்பு சுடுகாடே! - பூமியில்
  செத்து சென்றுஎவன் சொர்கத்தை கண்டவன்? - பூமிக்கு,
  செத்துஎவன் மீண்டும் உயிர்ப்பெற்று மீண்டவன்! - சொர்க்கத்தை,
  செத்துகண்டவன், கண்டுமீண்டவன், உண்டென்றால் நம்பலாம்!

  பூமிஉன் தலைக்குள்ளா புகுந்தது செப்பு!
  பூமியும்உனக்கு பொய்என்றே ஆயிற்றோ? - இப்
  பூமியும்உன் வாழ்க்கையும் நரகமே என்றால்,
  ஆவி(இயக்கம்) நின்றபின், சொர்க்கம் காண்பாயும் என்றால், நீயே...

  மலையுச்சிக்குச் சென்று தலைகீழாய்க் குதிக்கலாம்!
  தலைகீழாய்க் குதித்துச் சொர்க்கத்தைக் காணலாம்!
  கிணற்றுள் மிதக்கலாம்! கயிற்றில் தொங்கலாம்!
  அரளிக் கொட்டைகளை ஆசையாய் உண்ணலாம்!

  உன்போன்றோர் மாண்டால் மிச்சம்எஃ(து) என்றால் - மக்கள்
  உண்மை உணர்வார்! சொர்கமோ, நரகமோஇல்லைத் தெளிவார்!
  எம்தலையெழுத்(து) என்பது பொய்என்றும், ஆகிடும்;
  இம்மண்தான் (பூமிதான்) எமக்குஎன்றும் எதுவும் என்றாகிடும்

  இக்காயம் தேவைக்கு யாவும் வழங்கிடும்;
  விலைகள் குறைந்திடும்; பற்றாக் குறைதீரும்
  பசிமக்கள் அறியாமல் பார்எங்கும்,
  எல்லோரும் நல்லவர் என்றுஒன்றும் பொற்காலம்,
  சொல்லாமல் வந்திங்கே எல்லாம், சுகமாய் மாறவும்செய்யுமே!

  மக்கள் ஒற்றுமைக்காக தளமிடும் நண்பர்க்கு,

  தங்களது அறிவுப்பூர்வமான முடிவுகளை ஒட்டி மேற்கொண்டும் தகவல்கள் அறியப்பட நுழைக –

  Web site names/
  Web site addresses:

  1) Wills in Kavithai Chittu
  http://willsindiaswillswords.blogspot.in

  2) Willswords Tamil Twinkles http://willsindiastamil.blogspot.com

  3) Willswords English Twinkles
  http://willswordsindiatwinkles.blogspot.in

  பதிலளிநீக்கு
 6. கோடரியின் தலைக்கனமும் விறகு ஒன்றின் மதிநுட்பமும்!

  ஒரு சமயம் கோடரி ஒன்றுக்கு தலைக்கனம் வந்துவிட்டது; அன்றாடம் அந்தக் கோடரி, விறகு வெட்டி ஒருவன் காட்டிலிருந்து விறகுகளை விற்பனைக்காக வெட்டிக்கொண்டு வரும் விறகுகளிடம், அவ்வப்போது "கருங்காலிகள் உட்பட நான் பார்க்காத கிளைகளில்லை; வெட்டிடாத மரங்களில்லை" என்று பெருமைப்பட்டுக் கொண்டிருந்தது.


  இப்படியே ஒருநாள் வழக்கம்போல் அந்தக் கோடரி விறகு வெட்டியின் தலையிலிருந்த கட்டைகளைப் பார்த்து, "நான் பார்க்காத கிளைகளில்லை; வெட்டிடாத மரங்களில்லை" என்றுப் பறைந்திட்டது (கூறிற்று).


  அப்போது விறகுக் கட்டிலிருந்த ஒரு விறகு –


  "நீ ஒரே அடியாகப் பெருமைப்பட்டுக் கொண்டிருக்காதே; இதுவரை நீ வெட்டாத மரமும் ஒன்று உண்டு" என்றது. கோடரி யோசித்துப் பார்த்து முடிவில்...


  "இருக்காது; கருங்காலிகள் உட்பட எல்லா மரங்களையுமே நான் பதம் பார்த்து விட்டேன்; இதுவரை எந்த மரமும் என்னிடமிருந்து தப்பியதில்லை; என்றுப் பறைந்திட்டது.


  உடனே மேற்படி விறகு, புராணங்களில் புளுகியுள்ளது போல் பக்தர்களை சோதிக்கும் கடவுளாக இல்லையாதலால், கோடரியை மேலும் சோதனைக்குட் படுத்தாமல் "நீ இதுவரைப் (பதம்) பார்க்காத மரமும் ஒன்று உண்டு; அது எதுவென்றால் "வாழை மரம்" என்றுப் பறைந்தது! (தெரிவித்தது).


  அதைக் கேட்டதும் பார்ககணுமே, கோடரி முகத்தை! பத்து லிட்டர்கள் பாத்திரம் வேண்டியிருந்தது; அவ்வளவு விளக்கெண்ணெய்; முதன் முதலாகப் பள்ளியறைக்குள் காலடி எடுத்துவைக்கும் புதுப்பெண் போல் நாணமுற்று விறகுக்கட்டிலிருந்து விலகி விறகுவெட்டியின் வீட்டிற்குள் சென்று வீட்டின் ஒருமூலையில் சோர்ந்து விழுந்தது.


  மேற்கண்ட சிறுகதைக்கு அடிப்படையாக அமைந்திட்டது பின் தொடரும் சங்ககாலப் பாடல்.

  வெண்பா


  கருங்காலிக் கட்டைக்கு நாணாக்கோ டாலி
  *இருங்காலித் தண்டுக்கு நாணும் - பெருங்கானில்
  காரெருமை மேய்க்கின்ற காளைக்கு நான்றோற்ற(து)
  ஈரிரவுத் துஞ்சாதென் கண்.

  - இப்பாடலைப் பறைந்திட்ட (ஓதிட்ட) நமது மூதாதையப் பாட்டிக்கு நன்றி.


  *இருங்காலி மரம் - வாழை மரம்.  Posted 16 minutes ago by WillsIndiasWillswords


  மக்கள் ஒற்றுமைக்காக தளமிடும் நண்பர்க்கு,

  தங்களது அறிவுப்பூர்வமான தீர்மானங்கள் வாழையடி வாழையாக உங்கள் காலத்திலேயே வெற்றிகளைக் குவிக்க Wills in Kavithai Chittu (A Google Web site) உளப்பூர்வமாக தனது வாழ்த்துக்களை நல்குகின்றது.

  மக்கள் ஒற்றுமைக்காக தளமிடும் நண்பர்க்கு,

  தங்களது அறிவுப்பூர்வமான முடிவுகளை ஒட்டி மேற்கொண்டும் தகவல்கள் அறியப்பட நுழைக –

  Web site names/
  Web site addresses:

  4) Wills in Kavithai Chittu
  http://willsindiaswillswords.blogspot.in

  5) Willswords Tamil Twinkles http://willsindiastamil.blogspot.com

  6) Willswords English Twinkles
  http://willswordsindiatwinkles.blogspot.in

  பதிலளிநீக்கு
 7. திரிக்கப்பட்ட தமிழ் சொற்களும், மறைக்கப்பட்ட உண்மை அர்த்தங்களும்!

  எடுப்புக் கவிதை

  ஆதி மனிதர்களை ஆண்டவன்கள் என்றே,
  நீதி நெறிமுறைகள் நேர்மைநியாயம் விலகி,
  ஊதி பேதங்களை ஒற்றுமையைக் கொன்றே!
  சூது ஓதும்பிரசங்கியை சுவர்க்கம்அல்ல போற்றாதே!

  தலைமைக் கவிதை

  தெய்(என்றால்) - கொலை; தெய்வம் - கொலை செய்(த) மிருகம்;
  இறை - திரை, வரியே! இறைவன் - அரசன்;
  ஆண்டவன் - ஆண்டு செத்திட்ட வேந்தன்;
  கடவுளும், வேந்தனே; காணஇல்லை, ஆண்டவன்!

  (ஊதுதல் என்பதானது ஓதுதல் என்றானதால், ஓதி பேதங்களை என்பதற்கு மாற்றாக ஊதி பேதங்களை எனும்படிக்கு செற்களைப் எடுப்புக் கவிதையில் பயன்படுத்தப்பட்டுளளன,)

  எழுந்தருளினார் - (அங்கே) வந்தார் தோன்றி அருளினார் - பிறந்தார், (அங்கே) வருகை புரிந்தார்
  மறைந்தார் - (அங்கிருந்து) அகன்றார்
  இறைவன் - இறை - திரை, வரி, கிசுத்தி திரை வரி முதலானவற்றை தன் உடமைகளாக அடைய அதிகாரம் பெற்றவன் (அரசன்)
  கடவம் - நாடு, கேடயம், போர் படை. கடவுள் - இம்மூன்றையும் (நாடு, போர்படை, கேடயம்) தன் உடமைகளாகக் கொண்டிருக்கிறவன்.
  ஆள்கிறவன் - ஆண்டு கொண்டிருப்பவன் (ஆண்டு கொண்டிருக்கும் அரசன் அல்லது மக்கள் தலைவன்)
  ஆளவிருப்பவன் - ஆளவிருக்கும் மக்கள் தலைவன் அல்லது அரசன் (இளவரசன்)
  ஆண்டவன் - நாடாண்டு மரித்தவன்,
  ஆண்டவனின் பிள்ளைகள் - செத்துப்போன அரசனுடைய பிள்ளைகள்
  ஆண்டவன் செயல் - செத்துப்போன அரசன் அவன் உயிரோடு இருந்த காலத்தில் மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் அவன் செத்தபிறகு அவனது செயல்களைத் தொடரும் பின்விளைவுகள்
  தெய் - கொலை
  தெய்வம் - கொலை செய்யும் மிருகம், கொலையுண்ட மிருகம் அல்லது மனிதன். மற்றும் மரணம் எய்துவிட்டவர்;
  (உ-ம். ஒரு தாய் தன் மகனிடம் இறந்துபட்ட தன்கணவரைக் காட்டி சொல்கிறார், "உன் அப்பா தெய்வமாகிவிட்டார்".
  அதே போன்று, "தாத்தா சொர்கத்துக்குப் போய் விட்டார்" அர்த்தம் - தாத்தா செத்துவிட்டார்.)
  தாத்தா சொர்கத்துக்குப் போய் விட்டார் என்றால் வாழுகிற பூமி, நரகமா?

  ***

  மக்கள் ஒற்றுமைக்காக தளமிடும் நண்பர்க்கு,

  தங்களது அறிவுப்பூர்வமான முடிவுகளை ஒட்டி மேற்கொண்டும் தகவல்கள் அறியப்பட நுழைக –

  Web site names/
  Web site addresses:

  1) Wills in Kavithai Chittu
  http://willsindiaswillswords.blogspot.in

  2) Willswords Tamil Twinkles http://willsindiastamil.blogspot.com

  3) Willswords English Twinkles
  http://willswordsindiatwinkles.blogspot.in

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...