பெரும்பாலோர் தங்களது ஆங்கில தேதியை மையமாக கொண்டு பிறந்த நாள் கொண்டாடுகின்றனர்.
ஆனால் இது முற்றிலும் தவறானது. இது வெறும் நினைவாகவோ அல்லது வயதை கணக்கில் வைத்து கொள்வதற்கோ பயன்படலாம்.
ஆனால் உண்மையில் நீங்கள் இயற்கையோடு இணைந்து உங்கள் பிறந்த நாளை கொண்டாட வேண்டும் எனில் நீங்கள் பிறந்த தமிழ் மாதத்தையும் , நீங்கள் பிறந்த அன்று சந்திரன் நின்ற நட்சத்திரத்தையும் கணக்கில் கொள்ள வேண்டும்.
இவ்வாறு நீங்கள் பிறந்த நாளை கணக்கில் கொள்ளும் பொழுது, சூரியனும் சந்திரனும் நீங்கள் பிறந்த நிலையில் எவ்வாறு இருந்ததோ அதே நிலையில் இருக்கும்.
அதாவது இன்று ஒரு குழந்தை பிறக்கிறது எனில் அதன் விபரம்: ஆங்கில மாதப்படி பிப்ரவரி இருபது. தமிழ் மாதப்படி மாசி மாதம், எட்டாம் தேதி, திருவோணம் நட்சத்திரம்.
நீங்கள் இந்த குழந்தைக்கு ஆங்கில தேதிப்படி அடுத்த வருடம் பிப்ரவரி இருபதாம் தேதி பிறந்த நாள் கொண்டாடினால் அது இயற்கையோடு எந்த வித இணைப்பையும் ஏற்ப்படுத்தாது. சூரியனின் நிலை ஓரளவிற்கு பிறந்த நாளோடு ஒத்துப்போகும். ஆனால் சந்திரன் முற்றிலும் வேறு இடத்தில் இருக்கும்.
அப்பொழுது மாசி மாதம் எட்டாம் தேதி பிறந்த நாள் கொண்டாடலாமா என்றால்...அதுவும் கூடாது.
ஏன் எனில் சூரியனின் நிலை சரியாக இருந்தாலும் சந்திரன் வேறு நிலையில் இருக்கும்.
இந்த குழந்தைக்கு இயற்கையோடு இணைந்து நீங்கள் பிறந்த நாள் கொண்டாடவேண்டும் எனில் அடுத்த வருடம் மாசி மாதம் திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்த நாள் கொண்டாடவேண்டும்.
இந்த நாளில் சூரியனும் சந்திரனும் பிறந்த ஆண்டு/நாளில் எவ்வாறு இருந்ததோ அதே நிலையில் இருக்கும். இதே போல தான் ஒவ்வொரு ஆண்டும் தமிழ் மாதம் மற்றும் அந்த மாதத்தில் சந்திரன் அந்த நட்சத்திரத்திற்கு வரும் நாள் என பிறந்த நாள் கொண்டாடலாம்.
இதுவே இயற்கையோடு இணைந்து பிறந்த நாள் கொண்டாடுதலாகும்.
இயற்கையோடு இணைவது என்றால் என்ன?
பதிலளிநீக்குவாங்க ராபின், அதாவது நீங்கள் பிறந்த பொழுது உயிர்கள் வாழ முக்கியமான சூரியனும் சந்திரனும் எந்த நிலையில் இருந்தார்களோ அதே நிலையில் இருப்பார்கள். அதைத்தான் நான் இயற்கையோடு ஓரளவிற்கு இணைந்து கூறுகிறேன்.
நீக்குமற்றபடி இயற்கையோடு இணைதல் என்பது இயற்கையின் ஒரு பகுதியாக இருக்கும் நாம் இயற்கையாகவே மாறுதலை குறிக்கும்.
தங்கள் கேள்விக்கு நன்றி :)
இதை அப்படியே தஞ்சாவூர் கல்வெட்டுல எழுதி வச்சுட்டு அதுக்கு பக்கத்துலையே நின்னுக்கோங்க....நம்முடைய வருங்கால சந்ததிகள் இதை படிச்சிட்டு உங்களுக்கு மாலை போடுவாங்க :))
பதிலளிநீக்குவாங்க கிருஷ்ணா,
நீக்குஇந்த வலைப்பதிவுதான் என் கல்வெட்டு, அபப எனக்கு முதல் மாலை போட்டது நீங்கதான் போல :)
கிருஷ்ணா உன் திருவிளையாடலுக்கு எல்லையே இல்ல போல :)
நன்றி கிருஷ்ணா