வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012

அஜ்மால் கசாப் தூக்கு தண்டனையை ஏன் ரத்து செய்ய வேண்டும்?பல குற்றவாளிகளின் தூக்கு தண்டனையை ரத்து செய்யும் பொழுது மூன்று தமிழர்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய குரல் கொடுக்கும் பொழுது  ஏன் அஜ்மல் கசாப் தூக்கு  தண்டனையை  ரத்து  செய்யக்கூடாது? நாமெல்லாம் மனிதர்கள் தானே? காட்டு மிராண்டிகள் இல்லையே? 

உணர்ச்சிவசப்படாதீங்க   தோழர்களே, மேற்கூறியது நான் கூறியது அல்ல. இந்த தொனியில் ஒரு மனிதாபமுல்லவர்  பதிவிட்டுள்ளார். 

தூக்கு தண்டனை குற்றத்தை பொறுத்து அமையவேண்டும் என்ற கொள்கை கொண்டிருந்தவன்தான் நான். பேரறிவாளன் உட்பட மூன்று தமிழர்கள் தூக்கு தண்டனைக்கு எதிராக குரல் எழுந்த பொழுது.
மனதளவில் மிகவும் பாதிப்படைந்தேன். சரியான முடிவிற்கு என்னால் வரவில்லை.
அவர்கள் குற்றம் புரிந்திருக்கவில்லை குற்றத்திற்கு தன்னை அறியாமல் உடந்தையாக இருந்தார்கள் என்று சிலர் வாதிடும்பொழுதுதான்  இந்த உண்மையை நீதிமன்றத்தில்  உறுதிசெய்து அவர்களது தூக்கு தண்டனையை யாராவது தடுக்க வேண்டும் என்று  மனதளவில் ஒரு முடிவிற்கு வந்தேன். 

மீண்டும் சொல்கிறேன் அவர்கள் தங்களை அறியாமல் கொலைக்கு உடந்தையாக இருந்திருந்தால் அவர்களுக்கு கண்டிப்பாக தூக்கு தண்டனை வழங்கக்கூடாது. 

அஜ்மல் கசாப் விடயம் முற்றிலும் வேறானது.  அவன் தான் செய்வது என்ன என்பதை தெரிந்தே பல இந்தியர்களை கொன்று குவித்தான். அவன் கொலை செய்தான் என்பதற்கு தகுந்த ஆதாரங்கள் உண்டு. அதை அவனும் ஒப்புக்கொண்டான். அவன் இந்தியாவின் மீது போர் புரிந்ததாகத்தான் தீர்ப்பு கூறுகிறது. மேலும் இது அவர்களைப்பொறுத்த வரை புனிதப்போர். 

அவர்கள் வரும்பொழுதே தெரியும் அவர்கள் இங்கே இறப்பார்கள் என்று. அவர்கள் தற்கொலைப் படைகள்தான். இந்தப் புனித்தப்போரில் இறந்தால் சுவனத்தில் பல பெண்களுடன் உல்லாசமாக இருக்கலாம் என்றே அவர்கள் வந்திருப்பார்கள். அவன் புனிதப்போருக்கு செல்வதாக தன் தாயிடம் கூறி ஆசி கேட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளன. 

எனவே அஜ்மல் கசாபின் தூக்கு தண்டனையை நிறுத்தி வைப்பது எனபது அவனது உல்லாச வாழ்க்கைக்கு இந்தியா தடையாக இருக்கும் என்பதாகவே  நான் கருதுகிறேன். 

சட்டம் அனைவருக்கும் சமம் என்றாலும் நடைமுறையில் உண்மையில் அப்படி இல்லை.

ஜாதி ரீதியாக, மத ரீதியாக சில சலுகைகள் அளிக்கப்படுகின்றன.
மேலும் இந்தியருக்கு ஒரு சட்டம் வெளி நாட்டினருக்கு  ஒரு சட்டம் என்றே நமது சட்டம் உள்ளது.
பேரறிவாளன் உட்பட அந்த மூன்று பேர் இந்தியர்கள் தானே அப்படி இருக்க இவர்களை  அஜ்மல் கசாபினுடன்  ஒப்பிடுதல் முற்றிலும் தவறானது. ( சரி இதே தவறை ஒரு இந்தியன் செய்திருந்தால்? குற்றைத்தினை பொறுத்து அவனுக்கும் கடுமையான தண்டனை விதிக்கப்படவேண்டும். அது தூக்கா என்பதை நீதிமன்றம் முடிவு செய்யட்டும். )

மேலும் நான் ஏற்க்கனவே குறிப்பிட்டதுபோல் குற்றத்திற்கு தன்னையறியாமல்  உடந்தையாய் இருந்ததற்கும் களத்தில் இறங்கி குற்றம் புரிந்த வெளி நாட்டவனுக்கும்  வித்தியாசம்  உண்டு.

தீர்ப்பு என்ன கூறுகிறது. கசாப் போர் குற்றம் புரிந்ததாக. மனிதாபிமானம் பற்றி பேசுபவர்களிடம் நான் கேட்கிறேன் கசாபிர்க்கு  தூக்கு என்பது காட்டு மிராண்டித்தனம் என்றால் நமது நாட்டின் எல்லையைக்கடந்து நம்மை தாக்க வரும் எதிரிகளை கொல்லாமல் விட்டுவிடலாமா? அல்லது நமது வீரர்களை பலி கொடுத்தாவது அவர்களை பிடித்து ஆயுள் தண்டை வழங்க வேண்டுமா? கொலை செய்ய வரும் எதிரிகளிடம் மனிதாபிமானம் பற்றி பேசி புரிய வைக்க முடியுமா?

கொஞ்சம் சிந்தித்து பாருங்கள். கொலை என்பது வேறு போர் என்பது வேறு. 
இது நமது தேசத்தின் மீது நிகழ்த்தப்பட்ட போர்.  கொலைக்கும் போருக்குமான வித்தியாசத்தை புரிந்து கொண்டால் யாரும் கசாபிர்க்கு  வக்காலத்து வாங்க மாட்டார்கள் என நினைக்கின்றேன்.உங்கள் மனிதாபிமானத்தை நான் மெச்சுகிறேன்.அதே நேரத்தில் நீங்கள் இதையும் கருத்தில் கொள்ளுங்கள்.
மேலும் ஏதேனும் கருத்து இருந்தால் தெரியப்படுத்துங்கள் தெரிந்துகொள்வோம்.


ஜாதி, மதம், இனம், மொழி, நாடு இவற்றை கடந்து மனிதம் (முடிந்தால் உயிர்கள்)  என்ற ஒரு புள்ளியில் நாம் அனைவரும் இணையவேண்டும் என்பதே எனது (மனித நேயம் விரும்பும் அனைவரது) ஆசை. அனைத்து நாட்டையும் ஒன்றாக இணைக்கும் பொழுது போர் என்பதே இருக்காது. (குறைந்த பட்சம் விரோதம் இல்லாமல் இருக்கும் பொழுது)அப்பொழுது போர் பொருட்டு எந்த உயிர்களும் கொல்லப்படாது. அதுவரை  போர் நடக்காமல் பார்த்துக்கொள்வது ஒவ்வொரு நாட்டின் கடமை.

மனிதேயம் ஓங்கி ஒலிக்கட்டும்.....மனித நேயம் காப்பதற்கு மட்டும்.... போரை ஊக்குவிப்பதற்கு அல்ல.

எல்லா உயிர்களுக்கும் மனம் இறங்குவதுபோல் எனது(பலரது) மனம் க்சாபிர்க்காகவும் மனம் இறங்குகிறது. ஆயிரம் தான் இருந்தாலும் அவனும் ஒரு மனிதன், ஒரு உயிர், அவனுக்கும் குடும்பம் உண்டு.அவன் இறப்பும் பலருக்கு துன்பம் தரும் என்பதை மறுப்பதற்கில்லை.  புனிதப்போரால் பல கோடி இந்தியர்கள் கொன்று  குவிக்கப்பட்டிருக்கிறார்கள். இதை தடுப்பது யார் கடமை. சிந்தித்து செயல் படுத்த வேண்டியவர்கள் சிந்திப்பார்களா...புனிதப்போரை தடை செய்வார்களா? 

என்றும் அன்புடனும் உண்மையுடனும்
இராச.புரட்சிமணி 

16 கருத்துகள்:

 1. திரு. புரட்சி மணி அவர்களே.. நீங்கள் இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்களின் மீதும் வெறுப்பு இல்லாமல் எழுதி வருகிறீர்கள் என்றால் நான் நம்ப தயாரில்லை. உங்களின் நிலை முஸ்லிம் எதிர்ப்புணர்வாக இருந்தால் நான் எதை எழுதியும் எந்த பிரயோசனமில்லை. நீங்கள் எழுதிய வார்த்தைகளிலிருந்தே உங்களை நீங்களே காட்டிக் கொடுத்திருக்கிறீர்கள். நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க உதயம் :)
   இசுலாமியர்களின் மீது எனக்கு இரக்கம் தான் உண்டு. என்னுடைய நிலை இசுலாம் எதிர்ப்புணர்வு அல்ல விழிப்புணர்வு. விழிப்புணர்வுக்கும் எதிர்ப்புனர்வுக்கும் வித்தியாசம் தெரியுமா. இசுலாமில் சில விடயங்கள் நிச்சயமாக சீர்திருத்தப்பட வேண்டியவை. இதுவே இசுலாமிற்கும் மனித குலத்திற்கும் நன்மை பயக்கும்.

   நான் தொடர்ச்சியாக இசுலாம் பற்றி எழுத காரணம் வலையுலகில் இசுலாமிய பத பிரச்சாரகர்கள் கூறும் பொய்கள் தான். (இந்த பதிவில் நான் இசுலாமை நேரடியாக தாக்கவில்லை மறைமுகமாக தவறை சுட்டி காட்டியுள்ளேன் ..வெறுப்புணர்வாக இருப்பின் இதை வேறு மாதிரி எழுதி இருக்கலாம்.)

   ஒருவேளை இது எதிர்ப்புணர்வாக தெரிந்தால் எப்படி விழிப்புணர்வு பதிவாக எழுதுவது என்று சொல்லுங்கள். நான் சத்தியமாக அதை கடைபிட்பேன்.இசுலாமை சீர்திருத்த குரல் கொடுப்பதே என் நோக்கம். . உங்களின் கருத்தை நான் ஆவலுடன் வரவேற்கிறேன்.

   நன்றி :)

   நீக்கு
 2. கொலை குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கொடுக்கலாமா கூடாதா என்றொரு விவாதம் இங்கு நடந்து கொண்டிருப்பது என்னமோ உண்மைதான். அதுக்கும் அஜ்மல் கசாப்புக்கும் என்ன சம்பந்தம் ஐயா?
  அஜ்மல் கசாப் கொலை குற்றவாளி இல்லை. அயல் நாட்டிலிருந்து ஜிகாத் செய்வத்ற்காகவே இந்தியா வந்த தீவிரவாதி.
  இவனை போட்டு தள்ளுறதுக்கும், உண்ர்ச்சி வேகத்தில் ஒருவரை கொன்று விடும் சாதாரண மனித்னுக்கு கொடுக்கும் மரண தண்டனைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
  இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்பதாலேயே சட்டப் படி கோர்ட் விசாரணை தீர்ப்புன்னு இந்த இழுப்பு இழுக்குது. இதே வேற நாடா இருந்தா அப்பவே போட்டிருப்பானுங்க

  அது சரி! இவனை உடனேயே தூக்கிலே போட்டுடுவாங்கன்னு அப்பாவியாய் நினைக்காதீங்க பாஸு
  இன்னும் பல ஆண்டுகள் கருணை மனு , ஜனாதிபதி முடிவுன்னு இழுக்கும் பாருங்க எல்லாம் ஓட்டு அரசியல் தான்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கரி காலன் :),
   நீங்கள் சொல்வது சரிதான். கருணை மனு என்று சொல்லி இழுத்தடிப்பார்கள். எந்த முடிவு எடுத்தாலும் ஒரு இந்தியன் என்ற முறையில் வரவேற்க நான் தயார்.
   நன்றி :)

   நீக்கு
 3. //ஒருவேளை இது எதிர்ப்புணர்வாக தெரிந்தால் எப்படி விழிப்புணர்வு பதிவாக எழுதுவது என்று சொல்லுங்கள். நான் சத்தியமாக அதை கடைபிட்பேன்//.

  உங்களுடைய கட்டுரையின் மையக்கருத்து என்ன?

  கசாப்பையும், "அந்த மூவரை"யும் ஒன்றாய் பார்க்காதீர்கள். அம்மூவரும் "தங்களையறியாமல் குற்றத்திற்கு உடந்தையாக இருந்திருக்கிறார்கள். ஆனால் கசாப் தான் அறிந்தே குற்றம் புரியவே வந்தவன்" இது தானே சார் சொல்ல வருகிறீர்கள்.

  இப்படி நேரிடையாக உங்கள் கருத்தை சொல்லி விட்டு போங்களேன். எதற்கு கசாப் என்ற குற்றவாளியை அவன் சார்ந்த மதத்தோடு தொடர்புபடுத்தி பார்க்கிறீர்கள் என்பது தான் என் கேள்வி? மற்ற குற்றவாளிகளையும் ஏன் அவர்கள் சார்ந்த மதத்தோடு தொடர்புபடுத்தி பார்க்கவில்லை? குற்றவாளியை அவன் குற்றத்தோடு மட்டும் சம்பந்தப்படுத்தி பார்ப்பதில் உங்களுக்கு என்ன தயக்கம்? இது தான் நான் சொல்ல வருவது. அடுத்து.. இஸ்லாமிய மதப்பிரச்சாரகர்களின் பொய் தான் உங்களை இஸ்லாம் குறித்து எழுத வைத்ததாக குறிப்பிடுகிறீர்கள். அந்த பொய்களை உடைக்க தனிப்பதிவாக இடுங்களேன். ஏனென்றால் ஒரு செய்தியை அல்லது உங்களது கருத்தை இஸ்லாமிய வெறுப்பு வார்த்தைகளோடு நீங்கள் பதிவிடும் போது இஸ்லாமிய வெறுப்புவாதி என்ற வட்டத்துக்குள் வந்து விடுகிறீர்கள். நம்பகதன்மை குறைந்து விடும்.இஸ்லாத்தை நக்கலடிக்கும் சில வரிகள் உங்கள் கட்டுரையின் மையப்பொருளை சிந்திக்க விடாது செய்யும். இஸ்லாம் குறித்த உங்கள் கட்டுரைகளில் இஸ்லாம் பற்றி பேசுங்கள். அதனால் தான் சொல்கிறேன். உங்கள் கட்டுரையை வாசித்தவன் என்ற உரிமையில் தான் இதை சொன்னேன், "அட.. போய்யா உன் வேலய பாத்துக்கிட்டு " என்று சொன்னால், நடையை கட்டி விடுகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // கசாப்பையும், "அந்த மூவரை"யும் ஒன்றாய் பார்க்காதீர்கள். அம்மூவரும் "தங்களையறியாமல் குற்றத்திற்கு உடந்தையாக இருந்திருக்கிறார்கள். ஆனால் கசாப் தான் அறிந்தே குற்றம் புரியவே வந்தவன்" இது தானே சார் சொல்ல வருகிறீர்கள்.//
   மிகச்சரி உதயம்

   //இப்படி நேரிடையாக உங்கள் கருத்தை சொல்லி விட்டு போங்களேன். எதற்கு கசாப் என்ற குற்றவாளியை அவன் சார்ந்த மதத்தோடு தொடர்புபடுத்தி பார்க்கிறீர்கள் என்பது தான் என் கேள்வி?//
   இசுலாமியர்கள் ஒப்புக்கொள்ள மறுக்கும் ஒரு விடயம் என்னவெனில் புனிதப்போர் "jihad". இதைப்பயன்படுத்தித் தான் அப்பாவி இசுலாமியர்களை சிலர் தற்கொலைபடை வீரர்களாக மாற்றுகின்றனர். இது உண்மையா இல்லையா இது பற்றி தங்கள் கருத்து என்ன? இதை எப்படி நல்ல இசுலாமியர்கள் தடுக்கப்போகிறார்கள்?

   http://articles.economictimes.indiatimes.com/2008-12-14/news/27732224_1_ajmal-amir-kasab-village-in-okara-district-mumbai-carnage


   //உங்கள் கட்டுரையை வாசித்தவன் என்ற உரிமையில் தான் இதை சொன்னேன், "அட.. போய்யா உன் வேலய பாத்துக்கிட்டு " என்று சொன்னால், நடையை கட்டி விடுகிறேன்.//
   உங்களக்கு அனைத்து உரிமையும் உண்டு சகோதரா :) தொடர்ந்து குறைகளை சொல்லுங்கள்..திருத்திக்கொள்கிறேன்....அதே நேரத்தில் இசுலாமில் சில விடயங்கள் சீர்திருத்தப்பட வேண்டியவை எனபதையும் நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள் என நம்புகிறன்.
   நன்றி :)

   நீக்கு
  2. கீழுள்ள லிங்க்கில் முஸ்லிம்களுக்கு எதிரான இந்துக்களின் "ஜிகாத்" பற்றி ஒரு ஆவணப்படம் Fuck Muslims என்ற வார்த்தைகளில் தான் தொடங்குகிறது. அதனால் இரு மதங்களிலும் வெறி பிடித்தவர்கள் இருக்கிறார்கள். அந்த மதவெறியை இஸ்லாமியர்கள் மீது தள்ளி விட்டுவிடுவதால் இன்னொரு மதவெறி மறைக்கப்படுகிறது. நாம் பொதுவாக எல்லாத்தையும் சமமாக எதிர்ப்போம். பாரபட்சமே வேண்டாம்.

   http://www.youtube.com/watch?v=vSUl5OUUZ4A

   நீக்கு
  3. வாங்க உதயம் :)
   என்னுடைய இணைப்பில் வீடியோ பார்ப்பது கடினம். நேரம் கிடைக்கும் பொழுது பார்கிறேன்.

   // நாம் பொதுவாக எல்லாத்தையும் சமமாக எதிர்ப்போம். பாரபட்சமே வேண்டாம். //
   நிச்சயமாக சகோ :) மதவெறிதான் மானிடத்திற்கு எதிரியே தவிர மதம் இல்லை. வெறி இல்லாத மதத்தை யாம் வரவேற்க்கிறோம். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ :)

   நீக்கு
 4. உதயம் -- அந்த மூவரின் குற்றம் மதம்சர்தது அல்ல ஆனால் கசாப்ன் குற்றம் மதம்சார்ந்து அறிந்தே செய்ய வந்தவன் அதனால் அவன் மதம் குறித்து சொல்லும் நிலை உள்ளது

  நடையை கட்ட வேண்டாம் தொடருந்து உங்கள் கருத்தை சொல்லுங்கள்......

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நாம் கூறுவதை அவர் சிந்தித்துப் பார்ப்பார் என நம்புவோம் சீனி
   நன்றி :)

   நீக்கு
 5. //உதயம் -- அந்த மூவரின் குற்றம் மதம்சர்தது அல்ல ஆனால் கசாப்ன் குற்றம் மதம்சார்ந்து அறிந்தே செய்ய வந்தவன் அதனால் அவன் மதம் குறித்து சொல்லும் நிலை உள்ளது //

  கசாப் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவை திடுக்கிட வைக்க ஏவி விடப்பட்ட தீவிரவாதி. அவன் சாரமாரியாக சுட்டதில் முஸ்லிம்களும் அடக்கம். அவன் இந்துவை மட்டும் பார்த்து பார்த்து சுட்டிருந்தால் தான் மதம் சார்ந்த குற்றம் எனலாம். இது பாகிஸ்தான் இந்தியாவின் மீது மறைமுகமாக தொடுத்த போராக தான் பார்க்க வேண்டுமேயொழிய மதம் சார்ந்த குற்றமாக பார்க்க கூடாது. மதம் சார்ந்து ஒரு இனப்படுகொலை இந்தியாவில் நடைந்தேறியது. அப்போது ஆடைகளை அவிழ்த்து பார்த்து, பார்த்து வெட்டினார்கள். அதையெல்லாம் மதம் சார்ந்த குற்றம் சொல்ல நமக்கில்லை தைரியம். தீவிரவாதிகளுக்கு மதம் கிடையாது.மதத்தின் அடையாளம் கொண்டு அவர்களை அடையாளப்படுத்த கூடாது என்று அத்வானியே சொன்னதை இங்கு நினைவு கூற வேண்டும். பாபு பஜ்ரங்கியையும் கசாபையும் வேறுபடுத்தி பார்க்க தொடங்கினால் நாம் நியாயவான்கள் இல்லை என்பது பொருள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // மதம் சார்ந்து ஒரு இனப்படுகொலை இந்தியாவில் நடைந்தேறியது//
   ஒன்றல்ல பல நிகழ்ந்துள்ளது.இனி இது போல் ஒன்று உலகின் எந்த மூலையிலும் நிகழ கூடாது என்பதே எமது ஆசை.

   //தீவிரவாதிகளுக்கு மதம் கிடையாது//
   உண்மை சகோ. ஆனால் மதத்தை தீவிரவாதத்திற்கு பயன்படுத்தவதை தடுக்க வேண்டும் அல்லவா?

   //பாபு பஜ்ரங்கியையும் கசாபையும் வேறுபடுத்தி பார்க்க தொடங்கினால் நாம் நியாயவான்கள் இல்லை என்பது பொருள்.//
   நீங்கள் சொல்வது சரியே சகோ. மதத்திற்காக கொலை செய்பவன் மனிதனே அல்ல.
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :)

   நீக்கு
 6. வாங்க சகோ,

  நலமா?? ரொம்ப நாட்களுக்கு பிறகு.

  மரண தண்டனை வேண்டுமா அல்லது வேண்டாமா? என்ற கேள்வி இருப்பினும் நமது சட்டத்தில் அந்த தண்டனை உள்ளது, அதன்படி தண்டனை பெற்றுவிட்டார்கள். உச்ச நீதிமன்றமும் அதை உறுதி செய்துவிட்டது. அடுத்து கருணை மனு செய்யும் முறைதான் மிச்சம். கசாப்பின் கருணை மனுவை எப்படி மத்திய அரசு எதிர்கொள்கிறது என்று ஆவலாக உள்ளது.

  நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க சகோ நரேன்,
   நான் நலம்....நீங்களும் நலம் தானே? . கொஞ்சம் வேலை அதான்...
   சகோ நம்முடைய நாடு இந்தியா, இனிய மார்க்கமான இசுலாமை பின்பற்றும் சவூதி அல்ல உடனே தூக்கிலிட.
   நான் சொல்றது சரிதானே சகோ :)

   நீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...