வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

வெள்ளி, 21 செப்டம்பர், 2012

மகாபாரதத்தில் அணுகுண்டு?


மகாபாரதத்தில் அணுகுண்டு பயன் படுத்தப்பட்டிருக்கலாம்  என்று சிலர் கூறுகிறார்கள். போர்க்காட்சிகளை விவரிக்கும் சில பாடல்கள் அணுகுண்டு வெடிப்பால் உண்டாகும் விளைவை விவரிப்பது போன்று உள்ளது என்கிறார்கள் அவர்கள்.

இதுபற்றி ஆங்கிலத்தில் படிக்க 

இதுபற்றி சில வரிகள்  கூறும் தமிழ்  கட்டுரை  படிக்க 

இரண்டையும் படித்து பார்த்து நீங்களே ஒரு முடிவுக்கு வாங்க.

மாகாபாரதம் உண்மையா பொய்யா  என்று இன்னும் தெரியவில்லை. மகாபாரதம் உண்மை நிகழ்வு என்று சிலபல இந்துக்களும், இல்லை அது ஒரு கற்பனைக்கதை என்று சிலபல பகுத்தறிவாள   இந்துக்களும் கூறுகின்றனர். 


காலம் செல்ல செல்ல மாகபாரதம் நிகழ்வுகளுடன் தொடர்புடைய சான்றுகள் கிடைத்த வண்ணம் உள்ளன.  இப்படி ஒரு நிகழ்வு நடந்து இருக்கலாம். ஆனால் என்ன... கதை வடிவில் எழுதும் பொழுது கொஞ்சம் மசாலா சேர்த்து எழுதி இருக்கலாம். 

இந்திய    பெருமை   பற்றி   படிக்கும்   பொழுது தமிழனை பற்றி படிக்காமல் இருக்க முடியுமா  தொல் தமிழனை பற்றி  ஒரு கட்டுரை படிக்க   


''proud of our Sanskrit-speaking ancestors of the Vedas; proud of our Tamil-speaking ancestors whose civilization is the oldest yet known''
-swami vivekananda 

சமஸ்கிருதம்    தமிழிலிருந்து   தமிழர்களால் வழிபாட்டிற்கு  உருவாக்கப்பட்டது  (தோன்றவில்லை )  என்று சிலர் கூறுவதுண்டு (சமஸ்கிருதத்தை ஏற்க்க செய்யும் சதியா இது? ) உண்மையை  ஆராய்ந்தால்  தான் தெரியும். 

2 கருத்துகள்:

 1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்படியா சங்கதி?
   ஒரு சேர மன்னன் பாண்டவ படைகளுக்கு உணவு அளித்தான் என்று ஒரு தமிழ் நூல் கூறுவதாக படித்த ஞாபகம் .
   ஒருவேள அந்த தமிழ்நூலையும் ஆரியர்கள் எழுதி இருப்பார்களோ?

   ஆர்யன் வெள்ளை திராவிடன் கருப்பு என்றால் கிருஷ்ணனும் கருப்பு, பாஞ்சாலியும் கருப்பு அப்ப இவர்களும் திராவிடர்கள் தானே?

   இந்த திராவிட பேச்சு ஆந்திராவில இல்ல, கேரளாவில இல்ல, கர்நாட்டகாவில இல்ல ஏன்?
   இங்கே அந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் தமிழர்களை ஆளத்தானே? என்று சிலர் கேள்வி கேட்பது நியாயம்தானோ?

   இந்தியன் என்றாகிவிட்ட பிறகு ஆர்யன் திராவிடன் என்ற பிரிவினை மூடத்தனம் அல்லவா?

   தமிழனாய் இருப்போம், இந்தியானாய் இருப்போம், மனிதனாய் இருப்போம். வெறியோடு அல்ல தாமரை இலை நீர்போல.
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   நீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...