சில அரசியல் தந்திரங்களை பற்றி அம்மாவிற்கு தெரிவிக்கலாம் என்ற எண்ணத்தில் இப்பதிவை எழுதுகிறேன்.
அவர்களுக்கு தெரியாததா எனக்கு தெரியப்போகிறது? உண்மைதான். இருப்பினும் நான் மனதில் நினைப்பவைகளை பதிவு செய்யலாம் என்ற எண்ணம்தான்.
௧. விஜயகாந்தை கழட்டி விடவேண்டும்....(நான் நினைத்தேன் இதை அம்மா செய்து விட்டார்கள்)
௨.தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க கூட்டணி,தி.மு.க கூட்டணி என்று கண்டிப்பாக அமைய அனுமதிக்க கூடாது. மூன்றாவது அணி அமைவதுதான் அம்மாவிற்கு நல்லது.
௩. விஜயகாந்தும், தி.மு.கவும் கூட்டணி வைக்க கண்டிப்பாக அனுமதிக்க கூடாது.
௪. மூன்றாவது அணியாக, காங், தே.மு.தி.மு.க, ம.தி.மு.க, கம்யுனிஸ்ட், பா.ம. க,இ .ஜ .க என அமைய கண்டிப்பாக அனுமதிக்க கூடாது. மூன்றாவது அணியும், இரண்டவாது அணியும் சமபலத்துடன் இருக்க வேண்டும். அம்மா பலத்தை விட குறைவாக. முடிந்தவரை சில கட்சிகளை கூட்டணிக்குள் இழுத்துக்கொள்ள வேண்டும்.
௫. தேர்தலுக்கு முன்பு கண்டிப்பாக மின்வெட்டை முற்றிலும் ஒழிக்க வேணும்.
௬. ஊழலற்ற அரசை தர வேண்டும்.
௭. பெரும்பாலான மக்கள் மனம் கோணாமல் ஆட்சி நடத்த வேண்டும்.
இவை நடந்தால் அம்மா மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதி.......
அவசரமாக வெளியே கிளம்புவதால் சில மணித்துளிகளில் எழுதிய பதிவு இது.....உங்கள் ஆலோசனைகளையும் நீங்கள் தரலாம்.
மற்றொரு பதிவில் தி.மு.க எப்படி ஆட்சியை பிடிக்கலாம் என்பது பற்றி பார்ப்போம்.
இப்படியே போய்க் கொண்டிருந்தாலே போதும் . தி மு க ஆட்சியை பிடிக்கும்
பதிலளிநீக்குநீங்கள் சொல்வது சரிதான்...ஆனால் விஜயகாந்த், வைகோ,ராமதாசு, மற்றும் மக்கள் எல்லாம் தி.மு.கவுக்கு சிவப்பு கம்பள வரவேற்ப்பா தருவார்கள்...நிச்சயம் இல்லை :) இருப்பினும் அவர்களுக்கும் வழி இருக்கு :)
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார்லஸ் :)