சவுதியில் வசிக்கும் ஒரு சில வாகாபிய இசுலாமிய பதிவர்கள் இந்து மதத்தில் தீண்டாமை உண்டு அதனால் இசுலாமிற்கு மாற வேண்டும், தீண்டாமையை ஒழிக்க இசுலாம் தான் அருமருந்து என்று பிரச்சாரம் செய்வதை படித்திருப்பீர்கள்.
சவுதியில் இருக்கும் தீண்டாமை பற்றி இவர்கள் இதுவரை வாய் திறந்திருப்பர்களா? ஏன் இசுலாமினால் அந்த தீண்டாமையை ஒழிக்க முடியவில்லை?. தீண்டாமைக்கு காரணமே வாகாபிய இசுலாம்தானே பின்பு எப்படி இசுலாம் தீண்டாமையை ஒழிக்கும்?.
இசுலாமில் ஷியா, சுன்னி என்று இரு பிரிவுகள் (பல பிரிவுகள் இசுலாமில் உள்ளது என்பது வேறு விடயம்) உள்ளன. சவுதியில் பெரும்பான்மையானோர் சுன்னி பிரிவை சேர்ந்தவர்கள். சுன்னி பிரிவை சேர்ந்தவர்கள் கையில் தான் ஆட்சி அதிகாரம் உள்ளது.வாகாபிய இசுலாமை சவூதி அரசு ஊக்குவிக்கிறது. வாகபிய இசுலாம் என்பது சுன்னி பிரிவின் அங்கம் . இந்த வாகபிய இசுலாமை வளர்க்கும் சுன்னி பிரிவினர்/ அரசாங்கம் பத்து சதவீதம் முதல் பதினைந்து சதவீதம் உள்ள ஷியா சிறுபான்மையினருக்கு எந்த வித உரிமையும் தருவதில்லை.
அது பொருளாதார ரீதியாக ஆகட்டும், அரசியல் ரீதியாக ஆகட்டும், அரசாங்க வேலையாக ஆகட்டும் ஷியா பிரிவு மக்களை இவர்கள் கிட்டயே நெருங்க விடுவதில்லை.
அதுமட்டுமல்ல மத ரீதியாகவும் ஷியா பிரிவு மக்களுக்கு இவர்கள் தொந்தரவு செய்கிறார்கள்.
ஷியா பிரிவு மக்கள் மசூதி கட்ட கூட இவர்கள் அனுமதிப்பதில்லை. அதே நேரத்தில் ஷியா பிரிவு மக்கள் வசிக்கும் இடங்களில் அரசு சுன்னி மசூதி கட்டுகிறது.
இந்த ஷியா பிரிவு மக்கள் வசிக்கும் பகுதியில் தான் சவுதியின் பெரும்பான்மையான எண்ணெய் வளம் உள்ளது. இவர்களுக்கு எண்ணெய் முக்கியம் ஆனால் இந்த ஷியா பிரிவு மக்கள் முக்கியம் அல்ல.
முகமது நபி அவர்கள் பிறந்த நாட்டிலேயே இசுலாமியர்க்கு ஏன் இந்த அவல நிலை என்றால் நீங்கள் தான் சிந்தித்து பார்க்க வேண்டும். ஷியா சுன்னி இரண்டுமே இசுலாமின் பிரிவுகள் தான். மொத்தத்தில் இருவரும் கும்பிடுவது என்னவோ அல்லாவைத்தான் பிறகு ஏன் ஷியா பிரிவினர் மீது இந்த தீண்டாமை?
வாகாபிய இசுலாமியர்கள் இப்பொழுது தமிழகத்திலும் தங்கள் கொள்கைகளை பரப்ப ஆரம்பித்திருக்கிறார்கள் .
இவர்கள் தர்க்காவிற்கு செல்வதையும்,சுபி ஞானிகள் வழிகளையும் குறை கூறுகின்றனர். ஏன் என்று கேட்டால் அவர்கள் இணை வைக்கிறார்கள் எனவே அல்லா அவர்களுக்கு நரகம் தான் தருவார் என்பர். இது தூய இசுலாம் அல்ல,நாங்கள் இசுலாமை சீர்திருத்தம் செய்கிறோம் என்று புலம்புவர்.
வாகபிய இசுலாமிய பதிவர்களை நான் கேட்கிறேன் (ஒரு இசுலாமியர் வேறுமாதிரி கேட்டதுதான்) வாகபிய இசுலாம் பதினெட்டாம் நூற்றாண்டில் தான் வந்தது அதற்க்கு முன்பு இருந்த அனைத்து இசுலாமியர்களுக்கும் நீங்கள் சொல்வதை பார்த்தல் நரகம் தான் அல்லா அளிப்பாரா? சுவனம் கிடைக்கும் என்று எண்ணி கிட்டத்தட்ட பன்னிரண்டு நூற்றாண்டுகள் வாழ்ந்த இசுலாமியர்கள் கதி அவ்வளவுதானா?
ஏன் இனில்
சூஃபி பிரிவாக இருந்தாலும் சரி சுன்னி பிரிவாக இருந்தாலும் சரி இரண்டு பிரிவினருமே இணை வைத்துத்தான் வழிபட்டனர். புரியும்படி சொல்லவேணும் என்றால் தர்க்காவிற்கு செல்வதை இருவருமே கடைபிடித்தவர்கள் தான்.
வகாபிய பதிவர்கள் நல்லவர் என்று போற்றும் ஒளரங்கசீப்பும் சுன்னி பிரிவை சேர்ந்தவர் தான். ஆனால் அவரும் தர்க்காவிற்கு சென்றவர் தான். தர்க்காவிற்கு பண உதவி செய்தவர்தான். எனவே அவருக்கும் சுவனத்தில் இடம் இல்லையோ? (பின்னே பிறர் அல்லாவுக்கு இணை வைக்க உதவி இருக்கிறார் அல்லவா?) பாவம் நமது சகோக்கள். ஒருவேளை இவர்களுக்குத்தான் சுவனத்தில் முதல் இடம் கிடைக்கப்போகின்றதோ என்னவோ.
தனிமனிதர்கள் தவறு செய்தால் அரசாங்கத்திடம் செல்லலாம் இசுலாமிய அரசாங்கமே தவறு செய்தால் ஷியா மக்கள் எங்கு போவார்கள் என்ன செய்வார்கள்?
நமது தமிழ் முஸ்லிம்களும் சுன்னி பிரிவை சேர்ந்தவர்கள் தான் ஆனால் என்ன சுபி ஞானிகளின் தாக்கம் இவர்கள் மத்தியில் அதிகம் உண்டு. இதுதான் அவர்கள் நல்ல தன்மைக்கு காரணம். அதுமட்டுமல்ல இந்திய/இந்து கலாச்சாரத்தில் இருக்கும் மத சகிப்புத்தன்மை அவர்கள் மனதிலும் உள்ளது.
தமிழர்களுக்கு ஏன் இந்தியாவிற்கே பெருமை தேடி தந்த நமது ரகுமான்
சூஃபி ஞானிகளின் பாதையில் செல்பவர். சேர்ந்தவர். (அவர் ஒருமுறை சொன்னார் என் முன்னே வெறுப்பு அன்பு என்று இரு வழிகள் இருந்தன நான் அன்பு வழியைத் தேர்ந்தெடுத்தேன் என்று) அப்படிப்பட்ட நல்ல இசுலாமியர்கள் மனதில் வாகபிய இசுலாமை(அதாவது வெறுப்பை) பரப்புவதை இப்பொழுது சவுதியில் இருக்கும் நமது சகோதரர்கள் செய்து கொண்டிருக்கின்றார்கள்.(சில பலருக்கு ஏற்க்கனவே பரப்பி விட்டார்கள் என்பது வேதனையான செய்தி) இதற்கு எதிராக பிற சகோதரர்கள் ஏதும் செய்வதாக தெரியவில்லை. ஏதோ இசுலாம் வளர்ந்தால் போதும் என்று நினைக்கின்றார்களா அல்லது வாகபிய இசுலாமியர்களை கண்டு பயப்படுகிறார்களா என்று தெரியவில்லை.
சூஃபி இசுலாமின் ஆன்மீக மார்க்கம் என்று சொல்லலாம். மதங்களை சாடிய ஓஷோ தன்னை
சூஃபியாகத்தான் பார்த்தார்.
சூஃபி ஞானிகள் மதத்திற்கு அப்பாற் பட்டவர்கள் என்பது அவரின் கருத்து. பல இசுலாமியர்களும் சில பல இந்துக்களும் செல்லும் நாகூர் தர்க்கா, அஜ்மீர் தர்க்கா போன்றவை
சூஃபி ஞானிகளின் சமாதிதான். இந்த தர்க்காக்களை இடிக்க வேண்டும் என்பது வாகபியத்தின் ஒரு கொள்கை. வாகபிய இசுலாம் என்பது அடிப்படை வாதம். இது மனிதத்திற்கும் அவர்களின் உணர்வுகளுக்கும் முக்கியத்துவம் தருவதில்லை. ஆன்மீகம் என்பது அதில் இல்லை.
இந்துக்கள் எல்லா மதங்களும் இறைவனை அடையும் வழிகள் என்று ஏற்றுக்கொண்டுள்ளனர். ஆனால் கிருத்துவமும் இசுலாமியமும் இது ஒன்றே இறைவனை அடையும் வழி என்று வம்பு செய்கிறது. வாகாபியமோ இது ஒன்றே அல்லாவை அடையும் வழி என்று இன்றைய இசுலாமிலும் பல குறைகளை சொல்லி பிடிவாதம் பிடிக்கின்றது அனைவரையும் மதமாற்றம் செய்ய துடிக்கின்றது.
இந்து மதத்தில் இந்தியாவில் அது அப்படி இருந்தது இது எப்படி இருந்தது என்று எழுதி மதமாற்றம் செய்ய முயலுபவர்கள் இங்கே ஏற்ப்பட்டுள்ள மாற்றத்தை கண்டுகொள்வதே இல்லை. இங்கே அந்த உரிமையை தந்தது தன்னை இந்து நாடு என்று கூறிக்கொள்ளாத இந்தியா. தன்னை இசுலாமிய நாடு என்று கூறிக்கொள்ளும் சவூதி இசுலாமியர்கலையே இரண்டாம் தர குடிமகன்களாக நடுத்துகின்றது. இதுதான் நம் தாய் திருநாடான மதசார்பற்ற இந்தியாவிற்கும் மதசார்புள்ள சவுதிக்கும் உள்ள வித்தியாசம்.
சவுதியில் ஷியா மக்களுக்கு ஏற்ப்பட்டுள்ள அரசியல் தீண்டாமை,தமிழகத்தில் தர்க்கா வழிபாடு மற்றும் சூஃபி வழிமுறைகளின் மீது ஆரம்பித்துள்ள எதிர்ப்பு ஆகியவை நாளை உலகம் முழுக்க பரவும் அபாயம் உண்டு. இதற்கு நமது வாகபிய இசுலாம் சகோதரர்கள் என்ன சொல்லப்போகிறார்கள் என்ன செய்யப்போகிறார்கள்? தவறான கேள்வியோ?அவர்களுக்கும் மனசாட்சி இருக்கும் என்பதால் தான் கேட்கிறேன் ஏன் எனில் அவர்களும் தமிழர்கள் தானே. ஷியா,சூஃபி பிரிவு மக்கள் தான் தங்களது சுதந்திரத்தை காக்க முயல வேண்டும்.பல இந்துக்கள் இந்துக்களாக இருக்கும் வரை இந்தியாவில் ஷியா,சூஃபி பிரிவு மக்க்ளுக்கானாலும் சரி எந்த மததிற்க்கானாலும் சரி மதத்தை தாண்டி மனித நேய அடிப்படையில் ஆதரவாக நிற்பர் என்பதை அனைவரும் அறிவர். ஆனால் அது அவர்கள் இந்துக்களாக இருக்கும்வரைதான்.
என்னதான் இந்தியாவில் இந்துக்கள் பெரும்பான்மை என்றாலும் எந்த
மதத்தினர்களானாலும் சரி அவர்களுக்கு சகல உரிமைகளும் உண்டு. இந்துக்களை விட ஒரு படி மேல் என்று கூட சொல்லலாம். (ஒரு சிலரால் ஓரிரு அசம்பாவிதங்கள் நடந்ததை மறுப்பதற்கில்லை) பிற மதத்தினருக்கு எந்த பிரச்சனை என்றாலும் முதலில் குரல் கொடுப்பவன் ஒரு இந்துவாக இருப்பான். மோடியின் மீது வழக்கு தொடர்ந்தது ஒரு இந்துப் பெண். இதற்கு காரணம் பலரும் தங்களை இந்துவாக நினைப்பதில்லை மாறாக மனிதர்களாகத்தான் பார்க்கின்றனர். ஆனால் சில பல இசுலாமியர்கள் தங்களை மனிதன் என்று கூறிக்கொள்வதை விட முஸ்லிம் என்று கூறிக்கொள்வதில் தான் பெருமைப்படுகின்றனர். இசுலாமிலும் தங்களை மனிதர்களாக பார்ப்பவர் இல்லை என்று சொல்லவில்லை மாறாக அவர்களின் குரல் சரியாக கேட்கவில்லை என்றே சொல்கிறேன்.
இந்தியாவில் இந்து மதத்தில் ஜாதி ஒரு பெரிய பிரச்சனைதான் மறுப்பதற்கில்லை. ஆயினும் பல இந்து இந்திய தலைவர்கள் ஜாதியை எதிர்த்தனர். இன்று தீண்டாமையின் வீச்சு பன்மடங்கு குறைந்துள்ளது.அரசியல் ரீதியாக எந்த ஒரு தீண்டாமையும் பாராட்டப்படுவதில்லை. பல தனி மனிதர்களும் ஜாதி பார்க்காமல் தான் இன்று பழுகுகின்றனர். இந்து மதம் இவ்வாறு தன்னை சீர் திருத்திக் கொள்கிறது அதற்கு வழி வகுக்கின்றது. ஆனால் இசுலாமில் சீர்திருத்தம் என்பது 1400 ஆண்டுகள் பின்னோக்கி செல்வதாகத்தான் உள்ளதே தவிர காலத்திற்கு ஏற்றார் போல் அல்ல. அரசியல் ரீதியாகவே சவூதி இசுலாமில் இன்று தீண்டாமை தலை விரித்தாடுகின்றது .
அமெரிக்காவில் மசூதிகள் நிறைய வந்துள்ளன அதனால் இசுலாம் வளர்கிறது என்று பெருமை பட்டுக்கொள்ளும் பதிவர்கள் சொந்த நாட்டிலேயே ஷியா பிரிவு மக்களுக்கு சவூதி இசுலாமிய அரசு மசூதி கட்டிக்கொள்ள அனுமதி தருவதில்லையே இதுதான் இசுலாமின் சிறப்பா? வளர்ச்சியா? அமெரிக்காவில் மசூதிகள் கட்டிக்கொள்ள அனுமதி அளித்த அமெரிக்க அரசின் பெருமையும் கிருத்துவர்களின் பெருமையும் அல்லவா இதில் தெரிகிறது. இங்கே இசுலாமின் பெருமை தெரியவில்லை வாகபிய இசுலாமியர்களின் சிறுமையும் குறுகிய மனப்பான்மையும் தான் தெரிகிறது. எங்கே போனது இசுலாமின் மத சகிப்புத்தன்மை?
உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்.’ (அல்-குர்ஆன் 109:6) இறைவனின் வார்த்தைகளாக நம்பும் இவற்றை நீங்கள் ஏன் கடைபிடிப்பதில்லை ? இது பொய்யா அல்லது நீங்கள் பொய்யர்களா?
இப்பதிவின் நோக்கம் இசுலாமியர்களை (நமது வாகபிய சகோக்கள் உட்பட) புண்படுத்துவது அல்ல மாறாக சிந்திக்க வைக்க வேண்டும் என்பதே. இப்பதிவில் தவறு இருப்பின் சுட்டி காட்டுங்கள் திருத்திக்கொள்கிறேன்.
என்றும் அன்புடனும் உண்மையுடனும்
இராச.புரட்சிமணி
இதை எழுத உதவிய கட்டுரைகள்:
http://dargahsharif.com/KGN_DARGAH%20SHARIF.htm
பிற்சேர்க்கை: இசுலாமிய சவுதியில் தீண்டாமை இல்லையா? என்று முதலில் இப்பதிவிற்கு தலைபிடப்பட்டது. சகோ அ. ஹாஜாமைதீன் விருப்பப்படி (அரசியல்) தலைப்பில் சேர்க்கப்பட்டுள்ளது.
பிற்சேர்க்கை: இசுலாமிய சவுதியில் தீண்டாமை இல்லையா? என்று முதலில் இப்பதிவிற்கு தலைபிடப்பட்டது. சகோ அ. ஹாஜாமைதீன் விருப்பப்படி (அரசியல்) தலைப்பில் சேர்க்கப்பட்டுள்ளது.
அருமையான பதிவு ஆனால் பதில் சொல்ல ஒருவரும் வரமாட்டார்கள் என்று நினைக்கிறேன் ..
பதிலளிநீக்குசிந்திக்கிறார்களோ என்னவோ.....வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :)
நீக்குaamine
பதிலளிநீக்குOm, Amen, Ameen :)
நீக்கு//இசுலாமியர்களின் சிறுமையும் குறுகிய மனப்பான்மையும் தான் தெரிகிறது. எங்கே போனது இசுலாமின் மத சகிப்புத்தன்மை?//
பதிலளிநீக்குதவறு செய்கிறவர்கள் உண்மையாக இசுலாத்தை பின்பற்றுபவர்கள் கிடையாது. அவர்கள் சுன்னத் செய்து கொள்வதுடன் இசுலாமிய கடமை முடிந்துவிட்டதாக கருதுபவர்கள். இவர்கள் தூய இசுலாத்திற்கு மாற உஜாலாவில் துவைத்தெடுத்த தவ்ஹீத் வழிக்கு மாறவேண்டும் என்பார் நம்ப சுபி.
சுபிஅண்ணனை...(எனக்கு ஐயா ) சுபி ஞானியாக மாற்றிடுவோம் கவலைய விடுங்க....உண்மையில் நமது
நீக்குசகோக்களின் உழைப்பு என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது....இவரும், சகோ ஆசிக்கும் சுபி ஆன்மீகத்தை ஏற்றால் இசுலாமில் ஆன்மீகப் புரட்சியை கொண்டு வரலாம் . அல்லா அவர்களுக்கு நேர்வழி கட்டட்டும்.
தங்கள் வருகைக்கும் வருகைக்கும் கருத்தும் மிக்க நன்றி :)
நல்லதொரு பதிவு சகோ.. ஏமனில் இஸ்லாமிய சாதியம் இருப்பதை அல் ஜசீராக் காட்டியது !!! அதே போல பக்ரைனில் பெரும்பான்மை மக்கள் சியாக்கள், ஆளும் வர்க்கமோ சுன்னிக்கள், சியாக்களுக்கு அரசு வேலை, ராணுவ வேலை எனப் பல இடங்களில் புக முடியாத நிலை.. அங்கு நடக்கும் போராட்டங்கள் உலக ஊடகங்களால் இருட்டடிப்பு செய்யப்படுகின்றன ... !!! கிட்டத்தட்ட தென்னாப்பிரிக்காவின் அபார்தைட் இனவெறி போன்ற இதுவும் இருக்கின்றது ... !!! என்ன செய்ய கேக்கிறவன் கேணையா இருந்தால், கே...
பதிலளிநீக்குசகோ உண்மையை மூடி மறைக்கலாம் என்று நினைத்திருப்பார்களோ அலல்து ஒருவேளை அவர்களுக்கு இவை பற்றியெல்லாம் தெரியாதோ? சவுதிலதான் இப்படின்னு நினைச்சேன் என்ன செய்ய......
நீக்குதங்களது கருத்துக்கும் மேலதிக தகவலுக்கும் மிக்க நன்றி :)
//உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்//
பதிலளிநீக்குகுரைஷி மக்கள் (அல்லாவை நம்பாதவர்கள்) முகமதுவிடம் வந்து நீங்கள் எங்களின் சிலைகளை ஒரு வருடம் வணங்குங்கள் , பதிலுக்கு நாங்கள் ஒரு வருடம் அல்லாவை வணங்குகிறோம் என்று கூறினர். அதற்கு நம்ம முகமது சொன்னது தான் இந்த வசனம்!!!!!
கீழே உள்ளது ”Tafsir Ibn Kathir” ல் இருந்து
this Surah is the Surah of disavowal from the deeds of the idolators. It commands a complete disavowal of that. Allah's statement,
﴿قُلْ يأَيُّهَا الْكَـفِرُونَ ﴾
(Say: "O disbelievers!'') includes every disbeliever on the face of the earth, however, this statement is particularly directed towards the disbelievers of the Quraysh. It has been said that in their ignorance they invited the Messenger of Allah to worship their idols for a year and they would (in turn) worship his God for a year. Therefore, Allah revealed this Surah and in it
He commanded His Messenger to disavow himself from their religion completely.
இதற்க்கு பின்னாடி இப்படி ஒரு கதை இருக்கா?....வருகைக்கும் மேலதிக தகவலுக்கும் மிக்க நன்றி :)
நீக்குஅருமை. மெக்கா குறித்தான விவரணபடத்தில் ஹஜ் யாத்திரையின் போது எவ்வாறு கறுப்பின முசுலிம்கள் ஒதுக்கப்படுகிறார்கள் என நேசனல் ஜியோ' சானலில் பதிவு செய்திருக்கிறார்கள். மேலும் நபியும் அவரது கூட்டதாரும் செவப்பு தோலை வேண்டி விரும்பியுள்ளது குறித்தான கட்டுரையும் படித்திருக்கிறேனே. இன ஒதுக்கல் ஏதோ ஒரு வடிவில் எல்லா இனத்தாரிடையும் இருந்து கொண்டுதான் இருக்கு. அதற்கு அரேபியரும் விலக்கல்ல!
பதிலளிநீக்குஇது என ஒதுக்கல் அல்ல மார்க்க ஒதுக்கல்....தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :)
நீக்குபுரட்சி மணி,
பதிலளிநீக்குஇதனை நான் பல முறை விரிவான ஆதாரத்துடன் சுபி.சுவாமிகள் பதிவில் சொல்லியாச்சு, அவர் ஒரே கீறல் விழுந்த ரெக்கார்டு பதில் அவர்கள் எல்லாம் தூய இஸ்லாமியர்கள் இல்லை என்பது தான்.
அப்படினா வகாபிய இஸ்லாமியர்கள் மட்டும் தான் தூய இஸ்லாம் என்றால் அவர்கள் எண்ணிக்கை ரொம்ப குறைவு, அப்போ இஸ்லாம் உலகில் பெரிய மதம் கிடையாதுன்னு சொன்னால் சதம் காட்டாமல் அடுத்த கதைக்கு போய்டுவார் :-))
வகாபிய இஸ்லாம் என்பது ஆர்.எஸ்.எஸ் போல, அவர்கள் சொல்வது தான் இந்து மதம் என்றால்,இங்கே யார் ஏற்றுக்கொள்வார்கள்.
வகாபியம் பார்ப்பனியம் போல, பார்ப்பணர்கள் உயர்ந்தவர்கள் என சொல்வது போல வகாபியமும் சொல்லிக்கொள்கிறது.
சவுதி அரேபியாவை சுற்றி உள்ள நாடுகளில் எப்போதும் அமைதியின்மை நிலவ இதுவே காரணம்.
உண்மையான பழமையான அரேபியர்கள் ஏமன் ,ஜோர்டான், ஓமன்,சிரியா என இன்ன பிற தேசத்தவர்களே, ஆனால் அரேபிய நாட்டின் பெயரிலே இருப்பதால் நாங்கள் தான் பியூர் அரேபியர் என சவுதி சொல்லிக்கொண்டு மற்றவர்களை ,மாறிய அரேபியர்கள் என சொல்வதாலும் ,அவர்களை அரேபிய மொழியை பேச சொல்வதாலுமே பிரச்சினை.
எல்லாரும் இந்தி பேசணும் அப்போ தான் இந்தியர்கள்னு சொல்வது போன்ற நிலைமை அங்கு.
முழு வரலாறும் இங்கு யாருக்கும் தெரியாது என சில வகாபிக்கள் கதையளப்பதும் ,அதற்கு சிலர் ஒத்து ஊதிக்கொண்டு அவர்கள் சொல்வதே உண்மை என்பது போலவும் ஒரு மாயை உருவாக்குகிறார்கள்.
வவ்வால் (கோச்சிக்க மாட்டீங்க இல்ல :) ) ஒரு குட்டி பதிவே கொடுத்திட்டீங்க.
நீக்கு//சுபி.சுவாமிகள் // அவருக்கு வேற பேர வைங்க எல்லாரும் அவர சுபி ஞானின்னு நினைச்சிக்க போறாங்க.
அவருடைய நிலை எனக்கு நன்றாக புரிகிறது. ஒரு பொருளை விற்பனை பன்றவன்கிட்ட நீங்க அந்த பொருள பத்தி என்னதான் குறை சொன்னாலும் அத ஏத்துக்க மாட்டங்க....ஏன்னா அது தொழில் தர்மம். அல்லா அவர் போன்றவர்களுக்கு நேர்வழி காட்டட்டும்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :)
வணக்கம் சகோ,
பதிலளிநீக்குநல்ல பதிவு அருமையான் விமர்சனம் .ஆனால் சில த்வறான புரிதல்களை சுட்டுகிறேன்.
நம் சகோக்கள் சுட்டவில்லை என்பதால் நான் செய்கிறேன்.
1/நம் தமிழக இசுலாமியர்கள் நல்லவர்களாக இருக்க என்ன காரணம் தெரியுமா அவர்கள் ஷியா பிரிவைச் சேர்ந்தவர்கள். /
ஷியா இஸ்லாம் என்பது முகமது(சல்) அவர்களின் மருமகன் அலி(ரலி)அவர்களை வாரிசாக, அப்படியே வம்சரீதியாக நபித்துவம் தொடர்வதாக் ஏற்கின்றவர்கள்.முகமதுவின் மரணத்திற்கு பிறகு அரசல் புரசலாக ஆரம்பித்த மோதல், அலியின்(ரலி) கொலையோடு முழுவதும் பிரிந்தது. ஷியாக்களும் அதே குரானைப் பின் பற்றினாலும் வேறு ஹதிது(நபிமொழி) தொகுப்புகளை பின்பற்றுகின்றனர்.
ஷியாக்கள் பற்றி இது போதும்.
[http://en.wikipedia.org/wiki/Shia_Isலம்]/
ஆனால் சூஃபிக்கள் சுன்னி இஸ்லாமில் முக்கிய பிரிவினர்.தர்கா வழிபாடு முதன்மை உஅடையது, தர்காவில் அடக்கியதக சொல்லப்படும் மகான்கள் அனைவருமே முகம்துவின் மகள் பாத்திமா,அலி தம்பதியினரின் வழித் தோன்றலாக கூறிக் கொள்பவர்கள்.நம் தமிழ் முஸ்லிம் சகோக்கள் பெர்ம்பானமையோர் சூஃபிக்களே!!
ஆகவே சூஃபிக்களும் ,ஷியாக்களும் வெவ்வேறு!.
2.//தமிழர்களுக்கு ஏன் இந்தியாவிற்கே பெருமை தேடி தந்த நமது ரகுமான் ஷியா பிரிவை சேர்ந்தவர்/Thus the Shias look to Ali, Muhammad's son-in-law, whom they consider divinely appointed, as the rightful successor to Muhammad, and the first imam. The Shia extend this belief to Muhammad's family, the Ahl al-Bayt ("the People of the House"), and certain individuals among his descendants, known as imams, who have special spiritual and political authority over the communஇட்ய்/
[http://en.wikipedia.org/wiki/Sufism]
[http://www.theroot.com/views/root-explainer-what-difference-between-sunni-shi-ite-and-sufi-muslims]
மன்னிக்கவும் ஏ ஆர் ரகுமான் சூஃபி
மற்றபடி வஹாபி இஸ்லாம் காஃபிர்களை மட்ட்டுமல்ல இஸ்லாமின் இதர பிரிவுகளையும் ஒடுக்குவது உண்மை.ஆகவேதான் சிரியாவில் ஆட்சியில் உள்ள ஷியா அல்லாவி மூமின்கள்,சுன்னிகளை எதிர்க்கின்றனர்.இதை அழுட்தமாக சொல்லிய பதிவுக்கு வாழ்த்துக்கள்!!!
நாமும் வகாபிகளை விமர்சிப்பது அவர்களின் ஷாரியா சட்ட நடைமுறைகள் மட்டுமே. அது வகாபி அல்லாரை ஒடுக்குகிறது.
நன்றி!!!
சகோ தவறுகளை சுட்டி காட்டியமைக்கு மிக்க நன்றி. இப்பொழுது தவறுகளை சரி செய்துள்ளேன். தவறு இருந்தால் மீண்டும் சுட்டி காட்டுங்கள்.
நீக்கு,இது பற்றி பல நாட்களுக்கு முன்பு படித்ததுதான். அலி ஷியா தொடர்பு நான் அறிந்ததுதான் . சுபி பற்றி குறிப்பிடும்பொழுதும் சில இடங்களில் அலியை பற்றி குறிப்பிட்டிருந்தார்கள் எனவே தான் நான் சுபி ஷியாவிளிருந்து வந்திருக்கும் என்று தவறாக புரிந்து கொண்டேன் .
நமது தமிழ் முஸ்லிம்களும் சுன்னி பிரிவை சேர்ந்தவர்கள் தான் என்ன சுபி ஞானிகளின் தாக்கம் இவர்கள் மத்தியில் அதிகம் உண்டு என்று பின்வரும் சுட்டி கூறுகின்றது ...
http://sharfuddeen.blogspot.in/2009/07/tamil-muslim.html
http://en.wikipedia.org/wiki/Tamil_Muslim
தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் தவறுகளை சுட்டி காட்டியமைக்கும் மிக்க நன்றி சகோ :)
தமிழ் நாட்டில் இந்த வஹாபிகளின் அட்டகாசம் எதுவரை போய் விட்டது என்றால் ,தர்கா வழிபாடு செய்பவர்களின் வீடுகளில் பெண் கட்டமாட்டர்கள், அவர்கள் வீட்டில் சாப்பிடமாட்டார்கள். ஒவ்வொரு ஊரிலும் ஊர் பொது ஜாமத்துக்கு எதிராக நடந்து கொள்வார்கள். இவர்களுக்கு என்று தனி பள்ளிவாசல்.இவர்கள் தாங்க முடியவில்லை.
பதிலளிநீக்குஅப்படியா? என்ன கொடுமை இது? தமிழகத்தில் இசுலாமியர்கள் மத்தியில் சமத்துவம் பொங்கி வழிகின்றது போன்றுதானே நமது பதிவர்கள் கூறுகிறார்கள். தமிழகத்திலும் இசுலாமியர்கள் மத்தியில் தீண்டாமையா? என்ன கொடுமை இது?
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :)
ஒரு பின்னூட்டம் தேத்தறுதுக்குள் இத்தனை பின்னூட்டங்களா:)
பதிலளிநீக்குஉங்கள் சிறந்த கருத்துக்களை அடைப்பானிட்டுள்ளேன்.
//நம் தமிழக இசுலாமியர்கள் நல்லவர்களாக இருக்க என்ன காரணம் தெரியுமா அவர்கள் சூஃபி பிரிவைச் சேர்ந்தவர்கள். அதுமட்டுமல்ல இந்திய/இந்து கலாச்சாரத்தில் இருக்கும் மத சகிப்புத்தன்மை அவர்கள் மனதிலும் உள்ளது. //
இஸ்லாமிய தத்துவப்பாடல்கள் பாடிய நாகூர் ஹனிபாவின் பாடலும் குரலும் சூஃபி க்கு சொந்தமானது..நாகூர் தர்காவுக்கு ஒரு முறை சென்றிருந்தேன்.மயிலிறகும்,ஊதுபத்தி மணமும் மக்கள் இனவேறுபாடுகளின்றியே இருந்த காலம் இப்பொழுது வகாபித்தனத்தால் மாற்றுப்பாதையில்.ஒரு எகிப்திய வகாபி சொன்னான் வெள்ளைக்காரன் பைத்தியக்காரர்கள்.இறந்த பிரமிடு சமாதிக்கு படை படையா வந்து போகிறார்கள் என்று.நாகூர் சமாதி மீதான வகாபிய பார்வையும் அதே போல்தான்.
//இதுதான் நம் தாய் திருநாடான மதசார்பற்ற இந்தியாவிற்கும் மதசார்புள்ள சவுதிக்கும் உள்ள வித்தியாசம்.//
நமது பதிவுலக இஸ்லாமிய சகோதரர்கள் செய்யும் மாற்று மதபரப்புரையை இந்தியாவில் செய்ய முடியும்.சவுதியில் இயலுமா என்பதை வகாபி சிந்தனைகளுக்கே விட்டு விடுவோம்.
//என்னதான் இந்தியாவில் இந்துக்கள் பெரும்பான்மை என்றாலும் எந்த மதத்தினருக்கும் சரி அவர்களுக்கு சகல உரிமைகளும் உண்டு. இந்துக்களை விட ஒரு படி மேல் என்று கூட சொல்லலாம்.//
காஷ்மீரையும்,இஸ்லாமிய தனி சட்டங்களையும் பற்றி வாய் திறக்க மாட்டார்களே! இஸ்லாமியனாக இருக்கும் ஒரே காரணத்தால் தீவிரவாதியென முத்திரை குத்தி விடுகிறார்கள் என்ற சுயபரிதாப குரலே எழும்புகிறது.
//இசுலாமிலும் தங்களை மனிதர்களாக பார்ப்பவர் இல்லை என்று சொல்லவில்லை மாறாக அவர்களின் குரல் சரியாக கேட்கவில்லை என்றே சொல்கிறேன்.//
இஸ்லாமியர்கலில் மொழி வளம்,தமிழ் குரல் வளம்,எழுத்து,கவிதை,திரைப்படம்,சமூகம்,பொருளாதாரம்,மருத்துவம்,அரசியல் என களை கட்டுபவர்கள் நிறைய இருக்கிறார்கள்.ஆனால் இவர்களையெல்லாம் புறம் தள்ளி விட்டு ஜமாத்துக்கள் எச்சில் ஒழுக மதவாதப் பிரச்சாரங்களும்,ஊரை விட்டு தள்ளி வைக்கும் நாட்டாமைத்தனமும்,தீவிரவாத சிந்தனைத் தூண்டலும் செய்வதால் மொத்த சமூகத்துக்கான தவறான முத்திரை வந்து விடுகிறது.இவற்றிற்கு எதிராக இஸ்லாமிய சமூகத்துக்குள் வலுத்த குரல் எழாத வரை தீவிரவாத முத்திரையும்,உலகளாவிய இஸ்லாமிய வெறுப்பு சிந்தனைகளும் மாறப்போவதில்லை.
//அமெரிக்காவில் மசூதிகள் கட்டிக்கொள்ள அனுமதி அளித்த அமெரிக்க அரசின் பெருமையும் கிருத்துவர்களின் பெருமையும் அல்லவா இதில் தெரிகிறது. இங்கே இசுலாமின் பெருமை தெரியவில்லை வாகபிய இசுலாமியர்களின் சிறுமையும் குறுகிய மனப்பான்மையும் தான் தெரிகிறது. எங்கே போனது இசுலாமின் மத சகிப்புத்தன்மை?//
மதம் சமூகம்,அரசியல்,பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டது.இப்போதைய நாடுகள் கடந்த போராட்டங்களாக எழுந்த குரல்கள் அரேபிய எண்ணை வள நாடுகளில் ஒலிக்கவேயில்லையென்பது குறிப்பிடத்தக்கது.
// ஒரு பின்னூட்டம் தேத்தறுதுக்குள் இத்தனை பின்னூட்டங்களா:)//
நீக்குநீங்க கொஞ்சம் லேட்டு இருந்தாலும் லட்டேஸ்டு...:)
ஒரு பெரிய பதிவாகவே உங்கள் கருத்தை சொல்லிவிட்டீர்கள். உங்கள் கருத்துக்களை நான் வழிமொழிகிறேன்.
//.நாகூர் சமாதி மீதான வகாபிய பார்வையும் அதே போல்தான்.//
மெக்கா காபா சமாதி இல்லைனாலும் அது இசுலாம் கொள்கைக்கு முரண் போல் தான் எனக்கு தெரிகிறது. இது ஏன் வாகாபிகளுக்கு தெரிவதில்லை? எதிர் காலத்தில் காபா காணாமல் போகுமா?
காபாவை நோக்கி தொழுவதும் எனக்கு மூடத்தனமாகவே தோன்றுகிறது. நல்லவேளை நான் வாகபி இல்லை.
//நமது பதிவுலக இஸ்லாமிய சகோதரர்கள் செய்யும் மாற்று மதபரப்புரையை இந்தியாவில் செய்ய முடியும்.சவுதியில் இயலுமா என்பதை வகாபி சிந்தனைகளுக்கே விட்டு விடுவோம்.//
வாகபிய சிந்தனைக்கு இது எப்படி ஏறும்...வாகபியம் என்றாலே வெறும் வாகாபிய இசுலாம் தானே. அங்கே பிற இசுலாமிய பிரிவுக்கே இடமில்லை இதுல வேற மதம் வேறா ?...காமெடி பண்ணாதீங்க சார் :) ...ஒருவேள மயிலிறகால் வருடுவது போலவோ இது....அப்பா சரி
// இஸ்லாமியனாக இருக்கும் ஒரே காரணத்தால் தீவிரவாதியென முத்திரை குத்தி விடுகிறார்கள் என்ற சுயபரிதாப குரலே எழும்புகிறது.//
அந்த முத்திரை பலரது மனதை புண்படுத்தும் என்பது உண்மை, அதே தொடர்ந்தால் ஒரு சில தீவிரவாதிகளை கூட உருவாக்கலாம். ஊடகங்களும் பொது மக்களும் ஏன் அந்த சமூகத்தை சார்ந்தவர்களும் கூட இதை கொஞ்சம் கவனத்துடன் கையாள வேண்டும். குற்றவாளிகளை மட்டுமே குறை சொல்லவேண்டுமே தவிர அவன் சமூகத்தை அல்ல (இது அனைத்து சமுதாயத்திற்கும் பொருந்தும்) என்பதை அனைவரும் உணரவேண்டும்.
//இப்போதைய நாடுகள் கடந்த போராட்டங்களாக எழுந்த குரல்கள் அரேபிய எண்ணை வள நாடுகளில் ஒலிக்கவேயில்லையென்பது குறிப்பிடத்தக்கது.//
எண்ணெய் பணம் காதை அடைக்கிறதோ என்னவோ :)
தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி :)
//வகாபிய இஸ்லாம் என்பது ஆர்.எஸ்.எஸ் போல//
பதிலளிநீக்குவவ்வால்!சரியான ஒப்பீடு சொன்னீர்கள்.
அவரு தல கீழ தொங்கினாலும் எல்லாத்தையும் கரெக்ட்ட பார்க்கிறாரு...:)
நீக்குபுரட்சிமணி,
நீக்குதலைகீழாக நின்றா மூளை நன்றாக வேலை செய்யுமாம், இதனை நான் சொல்லவில்லை சிரசாசனம் என்ற யோகா சொல்லுது :-))
ஹி..ஹி..கரெக்ட்டா பார்க்கிறேன் என்பதை புரிந்து கொண்டதற்கு நன்றி!
வவ்வால்
நீக்குநான் சர்வாங்காசனம் செய்துள்ளேன் இது அதுக்கு சமம்தான்(ஆனா மூளை எப்படி வேல செய்யுதுன்னு தெரியல :) ....சிரசாசனம் கொஞ்சம் சிரமம்......
ஆனா நீங்க எப்பவுமே சிரசாசனத்துல தான் இருப்பீங்க போல :)
அருமையான பதிவு நண்பா.இஸ்லாமில் உள்ள தீண்டாமை கொடுமையை சிறப்பாக சொல்லியுள்ளீர்கள்.
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா :)
நீக்குமுஸ்லிம்களின் அல்லா உருவமற்றவர்;அதனால் உருவ வழிபாடு கூடாது;
பதிலளிநீக்குஅல்லாவைத் தவிர யாரையும் எதையும் தொழமாட்டோம்;
சரி,
கல்லையும் மரத்தையும் கடவுகளாகத் தொழும் இந்துக்களை முட்டாள்கள் என்று வசைபாடும் முஸ்லிம்கள்,காபா என்று சொல்லப்படும் வெறும் கல்லை கோடிக்கணக்கான முஸ்லிம்கள் சுற்றிச் சுற்றி வந்து தொழுகை நடத்துகிறார்களே ஏன்?
உருவமற்ற கடவுளுக்கு எதற்க்கு கட்டிடம்?அதை இடித்துத் தள்ளவேண்டியதுதானே?
முகமது நபி என்ன சொன்னாரோ அதை மட்டும் தான் இவர்கள் செய்வார்கள்.
நீக்குஅவர் அந்த காபாவை ஏற்றுக்கொள்ள காரணம் அங்கிருந்த வேற்று மத மக்கள் இவரை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே.மேலும் அது ஆப்ரஹாம் கட்டிய கோயில் என்றும் சொல்வார்கள். உங்கள் உறவினர்கள் ஒழுங்காக இல்லையென்றால் நான் காபாவில் வழியை ஏற்ப்படுத்திவிடுவேன் என்று
கூறியமாதிரி ஒரு ஹதீசு படித்த ஞாபகம்.முதலில் ஜெருசெலாமை நோக்கி தொழுகை செய்ய சொன்னதும் யூதர்களின் ஆதரவை பெறத்தான்.
புதிய சிந்தனைக்கு வாகாபிய இசுலாமில் இடம் இல்லை என்றே நினைக்கின்றேன்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா :)
சுவனப்பிரியர் எங்கே, இங்கெல்லாம் வரமாட்டாரா?
பதிலளிநீக்குஎன்னுடைய இப்பதிவுகளைப் பாருங்கள்:
http://dondu.blogspot.in/2012/09/blog-post.html
http://dondu.blogspot.in/2012/02/blog-post_13.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஐயா ஒருவேளை அவர் தமழக செல்வங்களை காத்த மாவீரன் மாலிக் கபூர் என்று பதிவெழுதி கொண்டிருக்கலாம்....
நீக்குதங்கள் முதல் சுட்டியை படித்தேன் தீண்டாமை பல இடங்களிலும் இருப்பதை அறிந்தேன்
இரண்டாவது பதிவு முன்பே படித்துள்ளேன் என்று நினைக்கின்றேன்...
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி :)
வணக்கம் பெரும்பாலான் இஸ்லாமியர் அல்லதவ்ர்கள்க்கு வரும் சந்தேகம் உருவமில்ல கடவுளை கும்பிடுவதாக் சொல்பவர்கள் ஏன் காபா நோக்கி தொழுகிறார்கள் என்பதுதான்.
பதிலளிநீக்குகாபாவை நோகித் தொழுதல் என்பது முதலில் ஜெருசலேம் நோக்கி தொழுவதாக் இருந்து பிறகு காபா நொக்கி மாற்றப் பட்டதாக் கூறப்படுகிறது.
கிப்லா=தொழும் திசை
//குரான் 2:144. (நபியே!) நாம் உம் முகம் அடிக்கடி வானத்தை நோக்கக் காண்கிறோம்; எனவே நீர் விரும்பும் கிப்லாவின் பக்கம் உம்மைத் திடமாக திருப்பி விடுகிறோம்; ஆகவே நீர் இப்பொழுது (மக்காவின்) மஸ்ஜிதுல் ஹராம் பக்கம் உம் முகத்தைத் திருப்பிக் கொள்ளும். (முஸ்லிம்களே!) இன்னும் நீங்கள் எங்கிருந்தாலும் (தொழுகையின் போது) உங்கள் முகங்களை அந்த (கிப்லாவின்) பக்கமே திருப்பிக் கொள்ளுங்கள்; நிச்சயமாக எவர்கள் வேதம் கொடுக்கப்பட்டிருக்கின்றார்களோ அவர்கள், இது அவர்களுடைய இறைவனிடமிருந்து வந்த உண்மை என்பதை நிச்சயமாக அறிவார்கள்; அல்லாஹ் அவர்கள் செய்வது பற்றிப் பராமுகமாக இல்லை.//
எனினும் காபாவில் வழிபாடு ,சுற்றி வலம் வருதல், “ஸஃபா”, “மர்வா என்னும் மலைகள் இஅடையே ஓடுதல் போன்றவை இஸ்லாமுக்கு முந்தையவை
//2:158. நிச்சயமாக “ஸஃபா”, “மர்வா” (என்னும் மலைகள்) அல்லாஹ்வின் அடையாளங்களில் நின்றும் உள்ளன; எனவே எவர் (கஃபா என்னும்) அவ்வீட்டை ஹஜ் அல்லது உம்ரா செய்வார்களோ அவர்கள் அவ்விரு மலைகளையும் சுற்றி வருதல் குற்றமல்ல; இன்னும் எவனொருவன் உபரியாக நற்கருமங்கள் செய்கிறானோ, (அவனுக்கு) நிச்சயமாக அல்லாஹ் நன்றியறிதல் காண்பிப்பவனாகவும், (அவனுடைய நற்செயல்களை) நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான்.//
இபோது இஸ்லாம் மீதான ஆய்வாளர்களின் கருத்துகளின் படி
1.இஸ்லாமுக்கு முந்தைய அரபிக்களின் மதத்திற்கும்,இஸ்லாமுக்கும் இடையே அதிக வித்தியாசம் இல்லை.
2.இஸ்லாமின் தோற்றம் பற்றிய வரலாறாக சொல்லப்படும் இஸ்லாமிய விள்க்கங்களுக்கு சான்றுகள் இல்லை..
3. மெக்கா முக்கிய நகரம் ஆகவோ, காபாவோ 500 பொ.ஆ முன் அறியப்படவில்லை.
History of Mecca and Kabba - Historical evidence and timeline does not match Koran
http://www.youtube.com/watch?v=ggR0Gz4JaEQ
4.குரானின்,மொழி,மொழியாக்கம்,மூலப்பிரதிகள் மீதும் பல மாறுபட்ட கருத்தை ஆய்வாளர்கள் வெளியிடிகின்றார்கள்.
http://en.wikipedia.org/wiki/The_Syro-Aramaic_Reading_of_the_Koran
வரும் காலங்களில் இஸ்லாம் பற்றி பல வரலாற்று ஆய்வுகள் வெளிவரும்.அது வஹாபி பெருமித மதவாதத்தை ஒழித்து விடும் என நான் உறுதியாக நம்புகிறேன். பிறகு ஆன்மீகத் தேடலான சூஃபியியம் மட்டுமே நிலைக்கும்!!
நன்றி
//இஸ்லாமுக்கு முந்தைய அரபிக்களின் மதத்திற்கும்,இஸ்லாமுக்கும் இடையே அதிக வித்தியாசம் இல்லை.//
நீக்குஉண்மை சகோ...uruvamatra அல்லா,இணைவைப்பை தவிர எல்லாம் பழசுபோலத்தான் தெரிகிறது....என்ன பல புதிய சட்டங்களை நபி கொண்டுவந்துள்ளார்.
தொழுகை ஜெருசலேம் நோக்கி என்பது யூதர்களை திருப்திபடுத்ததான், அவர்களுடன் பிரச்சனை என்றவுடன் தான் அது மெக்காவிற்கு மாறியது...
உங்களை நான் இசுலாமின் மார்க்க அறிஞராக பார்க்கிறேன்
தொடர்ந்து பல புதிய செய்திகளை தரும் உங்களுக்கு மிக்க நன்றி சகோ :)
//uruvamatra அல்லா,இணைவைப்பை தவிர எல்லாம் பழசுபோலத்தான் தெரிகிறது..//
நீக்குசிறு திருத்தம் ....
இணைவைக்க கூடாது என்று எனக்கு தெரிந்து முதலில் கூறியிருப்பவர் கிருஷ்ணன். உருவமற்ற இறைவன் என்று வேதங்களில் உண்டு. கீதையில் உள்ள ஒரு சில விடயங்கள் மனு, மற்றும் உபநிடதங்களில் உள்ளவைகளை குரானிலும் ஹதீசுகளிலும் காணலாம். எனவே இங்கிருந்து அவைகள் சுடப்பட்டிருக்கலாம்.
உங்களை சூழ்ந்துள்ள அறியாமை இருள் விலக இறைவனை பிராத்திக்கின்றேன்.
பதிலளிநீக்குநாகூர் கனிவாள்,
நீக்கு//இருள் விலக இறைவனை பிராத்திக்கின்றேன்.//
ஆமாம் ரொம்ப பவர் கட் ,ஒரே இருட்டு, 24 மணி நேரமும் கரண்ட் வர்ராப்போல இறைவனை பிரார்த்தியுங்கள் :-))
------
//மார்க்கத்தில் உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் யாராவது உங்களுக்கு தெரிந்த மார்க்க அறிஞரை தொடர்பு கொள்ளவும். அதை விட்டு மார்க்கத்தின் மீது அவதூறு பரப்புவது எந்தவகையில் சரியானது.//
மற்ற மதத்தினை பற்றி நீங்கள் அவதூறாக எழுதாமல் இதே போல அம்மத அறிஞர்களிடம் சந்தேகம் கேட்கலாமே, ஏன் அவதூறாக , அலகு குத்துறாங்க, சிலையை வணங்குறாங்கன்னு பதிவு எழுதனும்?
பொங்கல் தமிழர் பண்டிகையே இல்லைனு கூட பதிவ எழுதுறாங்க, சந்தேகம்னா தமிழறிஞர்களிடம் தானே கேட்டு இருக்கணும் ?
உபதேசம் சொல்லும் முன் நீங்கள் அதற்கு தகுதியானவரா என சுயபரிசோதனை செய்துகொள்ளவும்.
உங்களுக்கு இறை ஒளி கிடைக்க நானும் வேண்டிக்கொள்கிறேன்
நீக்குதங்களுடைய கருத்துக்கு மிக்க மிக்க நன்றி வவ்வால் தல :)
நீக்குமார்க்கத்தில் உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் யாராவது உங்களுக்கு தெரிந்த மார்க்க அறிஞரை தொடர்பு கொள்ளவும். அதை விட்டு மார்க்கத்தின் மீது அவதூறு பரப்புவது எந்தவகையில் சரியானது.
பதிலளிநீக்குஇப்பதிவு உங்கள் மனதை புண்படுத்தியிருந்தால் என மன்னிப்பை ஏற்றுக்கொள்ளுங்கள்.
நீக்குஎன்னைப்பொருத்த வரை உண்மையைத்தான் எழுதியுள்ளேன்.
இப்பதிவில் என்ன அவதூறு இருக்கின்றது என்று நீங்கள்குறிப்பிட்டு கூறினால் அதை திருத்திக்கொள்கிறேன்.
அவதூறு இருக்கின்றது என்று கண்டுபிடிப்பதன் மூலம் நீங்களும் எனக்கு மார்க்க அறிஞராகவே தெரிகிறீர்கள்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :)
நீக்குஇஸ்லாமியர்கள் அனைவரும் ஒரே குர்ஆனை ஏற்றுக் கொண்டிருக்கும் அதே வேளையில், அவர்களிடையே பல பிரிவுகளையும் – பல வித்தியாசமான கொள்கைகளையும் கொண்டிருப்பது ஏன்?
பதில்:
1. இஸ்ஸாமியர்கள் ஒன்று பட வேண்டும்:
இஸ்லாமியர்கள் தங்களுக்கிடையே பல பிரிவுகளாக பிரிந்து கிடக்கின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை. இதில் வருத்தப்படக் கூடிய செய்தி என்னவெனில் பிரிவு என்பது இஸ்லாத்தில் சொல்லப்படாத ஒன்று. இஸ்லாமியர்கள் தங்களுக்கிடையே பிரிவுகளின்றி ஒற்றுமையுடன் வாழவேண்டும் என்பதுதான் இஸ்லாம் கற்றுத் தரும் பாடம்.
‘நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்: நீ;ங்கள் பிரிந்தும் விடாதீர்கள்’ என்று அருள்மறை குர்ஆனின் மூன்றாவது அத்தியாயம் ஸுரத்துல் ஆல இம்ரானின் 103 வது வசனம் கூறுகிறது.
மேற்கண்ட குர்ஆனின் வசனத்தில் சொல்லப்படும் அல்லாஹ்வின் கயிறு எது தெரியுமா?. அருள்மறை குர்ஆன்தான். அருள்மறை குர்ஆன் என்னும் அல்லாஹ்வின் கயிற்றை இஸ்லாமியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பற்றிப் பிடிக்க வேண்டும். இந்த வசனத்தில் இரண்டு கருத்துக்கள் தொணிக்கின்றன. அருள் மறை குர்ஆன் என்னும் அல்லாஹ்வின் கயிற்றை இஸ்லாமியர்கள் அனைவரும் பற்றிப்பிடிப்பதுடன் – இஸ்லாமியர்கள் தங்களுக்கிடையே பிரிந்துத் போகக் கூடாது என்கிற இரண்டு கருத்துக்களை மேற்படி வசனம் வலியுறுத்துகிறது.
‘அல்லாஹ்வுக்கு கீழ் படியுங்கள். இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும் கீழ்படியுங்கள்.’ என்று அருள்மறை குர்ஆனின் நான்காவது அத்தியாயம் ஸுரத்துல் நிஷாவின் 59வது வசனம் கூறுகின்றது. மேற்படி வசனங்களிலிருந்து இஸ்லாமியர்கள் பெறும் தெளிவு என்னவெனில் – அருள்மறை குர்ஆனையும் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வழிமுறையும் பின்பற்ற வேண்டும் என்பதேயாகும்.
2. இஸ்லாமிய மார்க்கம் பிரிவினைகள் உண்டாக்குவதை தடை செய்துள்ளது:
‘நிச்சயமாக எவர்கள் தங்களளுடைய மார்க்கத்தை (தம் விருப்பப்படி பலவாறாகப்) பிரித்து, பல பிரிவினராக பிரிந்து விட்டனரோ அவர்களுடன்(நபியே!) உமக்கு எவ்வித சம்பந்தமுமில்லை. அவர்களுடைய விஷயமெல்லாம் அல்லாஹ்விடமே உள்ளது. அவர்கள் செய்து கொண்டிருந்தவைகள் பற்றி முடிவில் அவனே அவர்களுக்கு அறிவிப்பான்.’ என அருள்மறை குர்ஆனின் ஆறாவது அத்தியாயம் ஸுரத்துல் அன்ஆம் – ன் 159வது வசனம் கூறுகிறது. மேற்படி இறை வசனத்திலிருந்து நமக்கு தெரிவிக்கப்படும் செ;யதி என்னவெனில் எவர் இஸ்லாமிய மார்க்கத்தை பல பிரிவுகளாக பிரித்து பல வகுப்பினராக பிரிந்து விட்டனரோ – அவர்களைவிட்டு உண்மையான இஸ்லாமியர்கள் விலகிவிட வேண்டும் என்பதுதான்.
ஆனால், ஒரு இஸ்லாமியனைப் பார்த்து, ‘நீ யார்?. என்று கேள்வி எழுப்பப்பட்டால் அவரிடமிருந்து வரக்கூடிய பொதுவான பதில் ‘நான் ஒரு ஸுன்னி’ என்பதாகவோ அல்லது ‘நான் ஒரு ஷியா’ என்பதாகவோத்தான் இருக்கிறது. இன்னும் சிலர் தங்களை, ‘ஷாஃபிஈ’ என்றும், ‘ஹனஃபிஈ’ என்றும் ‘ஹம்பலி’ என்றும் ‘மாலிக்கி’ என்றும் அழைத்துக் கொள்கின்றனர். இன்னும் சிலர் ‘நான் ஒரு தேவ்பந்திஈ’ என்றும் ‘நான் ஒரு பெரல்விஈ’ என்றும் தங்களை அழைத்துக் கொள்கின்றனர்.
3. அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஒரு உண்மையான இஸ்லாமியராக இருந்தார்கள்:
நீக்குஇஸ்லாமியர்கள் அனைவரும் ஒரே குர்ஆனை ஏற்றுக் கொண்டிருக்கும் அதே வேளையில், அவர்களிடையே பல பிரிவுகளையும் – பல வித்தியாசமான கொள்கைகளையும் கொண்டிருப்பது ஏன்?
பதில்:
1. இஸ்ஸாமியர்கள் ஒன்று பட வேண்டும்:
இஸ்லாமியர்கள் தங்களுக்கிடையே பல பிரிவுகளாக பிரிந்து கிடக்கின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை. இதில் வருத்தப்படக் கூடிய செய்தி என்னவெனில் பிரிவு என்பது இஸ்லாத்தில் சொல்லப்படாத ஒன்று. இஸ்லாமியர்கள் தங்களுக்கிடையே பிரிவுகளின்றி ஒற்றுமையுடன் வாழவேண்டும் என்பதுதான் இஸ்லாம் கற்றுத் தரும் பாடம்.
‘நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்: நீ;ங்கள் பிரிந்தும் விடாதீர்கள்’ என்று அருள்மறை குர்ஆனின் மூன்றாவது அத்தியாயம் ஸுரத்துல் ஆல இம்ரானின் 103 வது வசனம் கூறுகிறது.
மேற்கண்ட குர்ஆனின் வசனத்தில் சொல்லப்படும் அல்லாஹ்வின் கயிறு எது தெரியுமா?. அருள்மறை குர்ஆன்தான். அருள்மறை குர்ஆன் என்னும் அல்லாஹ்வின் கயிற்றை இஸ்லாமியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பற்றிப் பிடிக்க வேண்டும். இந்த வசனத்தில் இரண்டு கருத்துக்கள் தொணிக்கின்றன. அருள் மறை குர்ஆன் என்னும் அல்லாஹ்வின் கயிற்றை இஸ்லாமியர்கள் அனைவரும் பற்றிப்பிடிப்பதுடன் – இஸ்லாமியர்கள் தங்களுக்கிடையே பிரிந்துத் போகக் கூடாது என்கிற இரண்டு கருத்துக்களை மேற்படி வசனம் வலியுறுத்துகிறது.
‘அல்லாஹ்வுக்கு கீழ் படியுங்கள். இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும் கீழ்படியுங்கள்.’ என்று அருள்மறை குர்ஆனின் நான்காவது அத்தியாயம் ஸுரத்துல் நிஷாவின் 59வது வசனம் கூறுகின்றது. மேற்படி வசனங்களிலிருந்து இஸ்லாமியர்கள் பெறும் தெளிவு என்னவெனில் – அருள்மறை குர்ஆனையும் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வழிமுறையும் பின்பற்ற வேண்டும் என்பதேயாகும்.
2. இஸ்லாமிய மார்க்கம் பிரிவினைகள் உண்டாக்குவதை தடை செய்துள்ளது:
‘நிச்சயமாக எவர்கள் தங்களளுடைய மார்க்கத்தை (தம் விருப்பப்படி பலவாறாகப்) பிரித்து, பல பிரிவினராக பிரிந்து விட்டனரோ அவர்களுடன்(நபியே!) உமக்கு எவ்வித சம்பந்தமுமில்லை. அவர்களுடைய விஷயமெல்லாம் அல்லாஹ்விடமே உள்ளது. அவர்கள் செய்து கொண்டிருந்தவைகள் பற்றி முடிவில் அவனே அவர்களுக்கு அறிவிப்பான்.’ என அருள்மறை குர்ஆனின் ஆறாவது அத்தியாயம் ஸுரத்துல் அன்ஆம் – ன் 159வது வசனம் கூறுகிறது. மேற்படி இறை வசனத்திலிருந்து நமக்கு தெரிவிக்கப்படும் செ;யதி என்னவெனில் எவர் இஸ்லாமிய மார்க்கத்தை பல பிரிவுகளாக பிரித்து பல வகுப்பினராக பிரிந்து விட்டனரோ – அவர்களைவிட்டு உண்மையான இஸ்லாமியர்கள் விலகிவிட வேண்டும் என்பதுதான்.
ஆனால், ஒரு இஸ்லாமியனைப் பார்த்து, ‘நீ யார்?. என்று கேள்வி எழுப்பப்பட்டால் அவரிடமிருந்து வரக்கூடிய பொதுவான பதில் ‘நான் ஒரு ஸுன்னி’ என்பதாகவோ அல்லது ‘நான் ஒரு ஷியா’ என்பதாகவோத்தான் இருக்கிறது. இன்னும் சிலர் தங்களை, ‘ஷாஃபிஈ’ என்றும், ‘ஹனஃபிஈ’ என்றும் ‘ஹம்பலி’ என்றும் ‘மாலிக்கி’ என்றும் அழைத்துக் கொள்கின்றனர். இன்னும் சிலர் ‘நான் ஒரு தேவ்பந்திஈ’ என்றும் ‘நான் ஒரு பெரல்விஈ’ என்றும் தங்களை அழைத்துக் கொள்கின்றனர்.
நீக்கு3. அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஒரு உண்மையான இஸ்லாமியராக இருந்தார்கள்:
மேற்கண்டவாறு தங்களை அழைத்துக் கொள்ளும் இஸ்லாமியர்களைப் பார்த்து அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் எந்த பிரிவைச் சார்ந்தவர்கள் – அதாவது அவர்கள் ‘ஷாஃபியா’ அல்லது ‘ஹனஃபியா’ அல்லது ‘ஹம்பலியா’ அல்லது ‘மாலிக்கியா?’ என்று கேட்டுப் பாருங்கள். இல்லை. அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள், அவர்களுக்கு முன்புள்ள அல்லாஹ்வின் தூதர்களைப் போன்று ஒரு உண்மையான முஸ்லிம் என்பது மட்டுமே அவர்களது பதிலாக இருக்கும்.
அருள்மறை குர்ஆனின் மூன்றாவது அத்தியாயம் ஸுரத்துல் ஆல – இம்ரானின் 54வது வசனம் நபி ஈஸா (அலை) அவர்கள் ஓர் இஸ்லாமியர் என்பதை சுட்டிக் காட்டுகின்றது. மேலும் அருள்மறை குர்ஆனின் மூன்றாவது அத்தியாயம் ஸுரத்துல் ஆல – இம்ரானின் 67வது வசனம் நபி இப்றாஹிம் (அலை) அவர்கள் ஓர் யூதரோ அல்லது கிறிஸ்துவரோ அல்ல. அவர் அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்ட ஓர் இஸ்லாமியர் என்பதை சுட்டிக் காட்டுகின்றது.
4. உங்களை நீ;ங்கள் முஸ்லிம்கள் என்று அடையாளம் காட்டுங்கள் என அருள்மறை குர்ஆன் வலியுறுத்துகிறது:
எவராவது இஸ்லாமியர்களை நீங்கள் யார் என்று கேட்டால் – இஸ்லாமியர்கள் தாங்கள் இஸ்லாமிய மார்க்கத்தைச் சார்ந்தவர் என்று சொல்ல வேண்டுமேத் தவிர தாங்கள் ஓர் ஷாஃபிஈ என்றோ அல்லது தாங்கள் ஓர் ஹனஃபி என்றோ சொல்லக் கூடாது.
அருள்மறை குர்ஆனின் நாற்பத்து ஒன்றாவது அத்தியாயம் ஸுரத்துல் ஹாமீம் ஸஜ்தாவின் 33வது வசனம் கீழ்க்கண்டவாறு கூறுகின்றது.
‘எவர் அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைத்து, ஸாலிஹான (நல்ல) அமல்களைச் செய்து, ‘நிச்சயமாக நான் (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்ட) முஸ்லிம்களில் நின்றும் உள்ளவன் என்று கூறுகின்றாரோ, அவரை விட சொல்லால் அழகியவர் யார்?.(இருக்கின்றார்)‘.
வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் – நான் ஒரு முஸ்லிம் – என்று சொல்லுங்கள் என்பதாகும்.
அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாத மன்னர்களுக்கும், ஆட்சியாளர்களுக்கும் தபால் மூலமாக இஸ்லாத்திற்கு வருமாறு அழைப்பு விடுப்பார்கள். அவ்வாறு அழைப்பு விடுக்கும் போதெல்லாம் அருள்மறை குர்ஆனின் மூன்றாவது அத்தியாயம் 64 வது வசனத்தின் கடைசி வரிகளாக அமைந்திருக்கும் ‘நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்’ என்கிற வசனத்தை குறிப்பிட்டு தபால்களை அனுப்பி வைப்பார்கள்.
5. இஸ்லாத்தின் மிகச் சிறந்த மார்க்க அறிஞர்களுக்கு கண்டிப்பாக மதிப்பளிக்க வேண்டும்.
மரியாதைக்குரிய மார்க்க அறிஞர்களான இமாம் ஷாஃபி (ரஹ்), இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்), இமாம் ஹம்பல் (ரஹ்), இமாம் மாலிக் (ரஹ்) ஆகியோர் உட்பட இஸ்லாத்தின் மிகச் சிறந்த மார்க்க அறிஞர்கள் அனைவருக்கும் நாம் கண்டிப்பாக மதிப்பளிக்க வேண்டும். இஸ்லாத்தைப் பற்றி அவர்கள் ஆய்வு செய்து இஸ்லாத்திற்கு தந்த பல நல்ல செய்திகளுக்காக அல்லாஹ் அவர்களுக்கு மறுமையில் நற்கூலியை வழங்கட்டும். இஸ்லாமியர்கள் இமாம் ஷாஃபி (ரஹ்) அவர்கள் ஆய்வு செய்து வெளியிட்ட கருத்துக்களையோ அல்லது இமாம் ஹனஃபி (ரஹ்) அவர்கள் ஆய்வு செய்து வெளியிட்ட கருத்துக்களையோ – வெளியிடப்பட்ட கருத்துக்கள் குர்ஆன் – ஹதீஸுக்கு மாற்றமில்லாத பட்சத்தில் – எடுத்து செயல் படுத்துவதை எவரும் ஆட்சேபிக்க முடியாது. ஆனால் ‘நீ யார்?’ என்று இஸ்லாமியரை நோக்கி கேட்கப்படும் கேள்விக்கு ‘நான் ஒரு முஸ்லிம்’ என்பதுதான் பதிலாக இருக்க வேண்டும்.
1. ஒரு சிலர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அறிவித்த ‘எனது சமுதாயம் 73 பிரிவினராக பிரிவர்’ (மேற்படி செய்தி அபூதாவூத் என்னும் ஹதீஸ்(செய்தி) புத்தகத்தின் 4579வது செய்தியாக பதிவு செய்யப்பட்டுள்ளது) என்கிற செய்தியை தங்களது பிரிவினை வாதத்திற்கு ஆதாரமாகக் காட்டி வாதிடுவர்.
மேற்படி செய்தியை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் – இஸ்லாமிய சமுதாயம் 73 பிரிவாக பிரியும் என்று முன்னறிவிப்பு செய்தார்களேத் தவிர, அவர்கள் அறிவித்த நோக்கம் இஸ்லாமிய சமுதாயம் தங்களுக்குள்ளேயே பல பிரிவுகளாக பிரிய வேண்டும் என்பதற்காக அல்ல. அருள்மறை குர்ஆன் இஸ்லாமியர்கள் பல பிரிவுகளாக பிரிந்து விடக்கூடாது என்று இஸ்லாமியர்களுக்கு கட்டளை இடுகின்றது. அருள்மறை குர்ஆன் கட்டளையின்படி – அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வழிமுறைப்படி யார் இஸ்லாத்தில் பிரிவினைகளை ஏற்றுக் கொள்ளவில்லையோ – அவர்கள்தான் உண்மையான இஸ்லாமிய வழியில் நடப்பவர்கள்.
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அறிவித்தார்கள் – என்னுடைய உம்மத்தினர் 73 கூட்டத்தினராக பிரிவர். அதில் ஓரேயொரு கூட்டத்தைத் தவிர மற்ற அனைத்து பிரிவினரும் நரகத்துக்குச் செல்வார்கள். மேற்படி அறிவிப்பை கேட்ட அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அன்புத் தோழர்கள் கேட்டனர் சொர்க்கத்துக்கு செல்லும் அந்த கூட்டம் எது?. என்று. அதற்கு அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்: அந்த கூட்டம் நானும் எனது அன்புத் தோழர்களும் உள்ளடங்கிய கூட்டம் என்று. (மேற்படி செய்தி திர்மிதி என்ற செய்திப் புத்தகத்தின் 171வது செய்தியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. )
நீக்கு‘அல்லாஹ்வுக்கு கட்டுப்படுங்கள். அல்லாஹ்வின் தூதருக்கும் கட்டுப்படுங்கள்‘ என்று அருள்மறை குர்ஆன் பல இடங்களில் சுட்டிக் காட்டுகிறது. ஒரு உண்மையான முஸ்லிம் அருள்மறை குர்ஆனையும ; – அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வழிமுறையையும்தான் பின்பற்ற வேண்டும். அருள்மறை குர்ஆனுக்கும், அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வழிமுறைக்கும் மாற்றமில்லாத பட்சத்தில் எந்த மார்க்க அறிஞர்களின் கருத்துக்களையும் ஒரு உண்மையான முஸ்லிம் ஏற்றுக் கொள்ளலாம். ஒரு மார்க்க அறிஞரின் கருத்து – அருள்மறை குர்ஆனுக்கும், அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வழிமுறைக்கும் முரண்படுமாயின் அந்த கருத்துக்கு ஒரு உண்மையான முஸ்லிம் மதிப்பளிக்க வேண்டிய அவசியமில்லை. மேற்படி மார்க்க அறிஞர் எவ்வளவு கற்றுத் தேர்ந்தவராக இருந்தாலும் சரியே.
இஸ்லாமியர்கள் அனைவரும் அருள்மறை குர்ஆனை – கற்றறிந்து – அண்ணல் நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த வழிமுறையை சரிவர பின்பற்றுவோம் எனில் இறை நாட்டத்தில் நமக்கிடையே இருக்கும் இந்த பிரிவினை என்ற வேறுபாடு நம்மிடமிருந்து மறையும். நமக்குள்ளே பிரிவினையற்ற சிறந்த ஒற்றுமையும் உருவாகும்.
மூல நூல்: டாக்டர். ஜாகிர் நாயக் அவர்களுடன் அனைத்து மதத்தவர்களும்
ஆங்கில மூலம்: டாக்டர் ஜாகிர் நாயக்
தமிழாக்கம்: அபூ இஸாரா
@Gulamkader H
நீக்குதாங்கள் இதை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி
டோண்டு சார்!
பதிலளிநீக்கு//சுவனப்பிரியர் எங்கே, இங்கெல்லாம் வரமாட்டாரா?//
இஸ்லாத்தின் அடிப்படையே என்னவென்று தெரியாமல் பதிவிட்டிருக்கும் ஒருவரிடம் எதை விவாதிக்கச் சொல்கிறீர்கள். பின்னூட்டத்தில் விளக்க இடம் போதாது. இதை விளக்கி ஒரு தனி பதிவே வரும்.
ஷியா, சூஃபி, வஹாபி என்றால் என்ன என்றே இன்னும் இவருக்கு தெரியவில்லை. ரஹ்மானை ஷியா முஸ்லிம் என்கிறார். சிரித்துக் கொண்டேன்.
ரகுமானை முதலில் ஷியா பிரிவை சேர்ந்தவர் என்று கூறியது உண்மைதான். ஆனால் அது தவறு என்று சகோ சார்வாகன் சுட்டி காட்டியதும் நேற்றே திருத்திவிட்டேன். நீங்கள் இன்னும் அதே ஞாபகத்தில் இருந்தால் நான் பொறுப்பல்ல.
நீக்கு// இஸ்லாத்தின் அடிப்படையே என்னவென்று தெரியாமல் பதிவிட்டிருக்கும் ஒருவரிடம் எதை விவாதிக்கச் சொல்கிறீர்கள். பின்னூட்டத்தில் விளக்க இடம் போதாது. இதை விளக்கி ஒரு தனி பதிவே வரும்.//
பதிவின் கருப்பொருளை உள் வாங்கமால் ஏதாவது நொட்டை சொல்லவேண்டும் என்று நீங்கள் கூறுவது தான் இது. பதிவின் நோக்கம் யார் ஷியா யார் சுன்னி என்று கூறுவது அல்ல.
//எங்களுக்கு முழுமையாக தெரியாமல் இருக்கலாம். ஆனால் சியாக்களை சுன்னிகள் கொல்வது, சுன்னிகளை சியாக்கள கொல்வது உலகம் முழுவதும் நடைபெறுகிறது என்பதை முழுமையாக தெளிவாக தெரியும்//
ethicalist உங்களுக்கு தெளிவான விடையளித்துள்ளார். ஷியா pirivinar மீது செலுத்தும் அரசியல்,மத தீண்டாமை பற்றி மௌனம் ஏன்? தீண்டாமையை நீங்கள் ஆதரிக்கிறீர்கள் என்றுதானே பொருள்?
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :)
வணக்கம் சுவன பிரியன் சாமியார், உமக்கு மார்க்க வெறி வந்து உமது கண்ணை மறைத்து விட்டது போலும். இந்த கட்டுரையாளர் எங்கே ரஹ்மான் வஹாபி என்று குறிப்பிட்டுள்ளார்.
பதிலளிநீக்கு"தமிழர்களுக்கு ஏன் இந்தியாவிற்கே பெருமை தேடி தந்த நமது ரகுமான் சூஃபி ஞானிகளின் பாதையில் செல்பவர். சேர்ந்தவர்." என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. உமக்கு மட்டும் தனியாக ரஹ்மான் வஹாபி என்று தெரிந்ததா. சுய நினைவுடன் பதிவை படிக்கவும்.
மற்றும் திரு,டோண்டு, நீர் சுவன பிரியனை தேடி திரிய வேண்டாம். இரண்டு பேரும் மத வெறியர்களே. நீங்கள் இரண்டு பேரும் ஒரே கரையில் நிற்கின்றீர்கள். பிறகு ஏன் அவரை தேடுவான். (ஒரே கரை ஆனால் நிறம் வேறு , பச்சை, காவி )
"ஷியா, சூஃபி, வஹாபி என்றால் என்ன என்றே இன்னும் இவருக்கு தெரியவில்லை."
பதிலளிநீக்குஎங்களுக்கு முழுமையாக தெரியாமல் இருக்கலாம். ஆனால் சியாக்களை சுன்னிகள் கொல்வது, சுன்னிகளை சியாக்கள கொல்வது உலகம் முழுவதும் நடைபெறுகிறது என்பதை முழுமையாக தெளிவாக தெரியும். சூபிகளை நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை உலகம் அறிந்ததே.
ரஹ்மான் தர்கா வழிபாடு செய்வதால் அவர் முழுமையான முஸ்லிம் அல்ல என்பதனை தங்கள் திருவாய் மலர்ந்ததை நாம் நினைவூட்டுகிறோம். தர்க்கா வழிபாடு சூபி பிரிவினரால் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.
மற்றும் ரஹ்மான் தன்னை இஸ்லாமியன் என்று செல்வதில்லை சூபி மதத்தவன் என்றே சொல்கிறார். (சூபி இஸ்லாமின் பிரிவு என்று எங்களுக்கும் தெரியும். ஆனால் அவர் ஏன் அப்படி சொன்னார் என்று நீங்கள் தான் அவரை கேட்கவேண்டும்) சுட்டி வேண்டு மெனில் தரலாம்.
Ethicalist E ,
நீக்குஅவருக்கு நல்ல பதில் தந்து என் வேலையை குறைத்துள்ளீர்கள்.
இசுலாம் பற்றி கணக்கு காட்ட வேண்டும் என்றால் அவருக்கு ரகுமான் வேண்டும்.....வாகபிய ஞாபகம் வந்தால்
அவருக்கு ரகுமான் வேண்டாம். என்னைப்பொறுத்தவரை ரகுமானும் சரி, சுபி ஞானிகளும் சரி இந்துக்களே.....(மதம் பார்க்காத எல்லோரும் மாமனிதர்களே அவர்களை ஒரு மதத்திற்கு சொந்தம் கொண்டாட கூடாது) ...
ஏன் என்றால் அல்லாவிற்கு இணை வைப்பதால் அவர்களை இவர்கள் ஏற்க்க மாட்டார்கள். இந்து மதத்தில் மட்டுமே,
யார் வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் , எப்படி வேண்டுமானாலும் வணங்கலாம்,இல்லை வணங்காமலும் இருக்கலாம் ....நரகத்தை பற்றி பயப்படாமல்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :)
//வணக்கம் சுவன பிரியன் சாமியார், உமக்கு மார்க்க வெறி வந்து உமது கண்ணை மறைத்து விட்டது போலும். இந்த கட்டுரையாளர் எங்கே ரஹ்மான் வஹாபி என்று குறிப்பிட்டுள்ளார். //
பதிலளிநீக்கு//சுய நினைவுடன் பதிவை படிக்கவும்.//
இது அடுத்த காமெடி. எதிகாலிஸ்டுக்கு ஆத்திரம் வந்தால் அறிவு வேலை செய்யாது போலிருக்கிறது. என் பதிலை நிதானமாக படித்து விட்டு பின்னூட்டமிடவும். :-)))))))))))))))))))))))
ரகுமானை ஷியா என்று நான் தவறாக கூறியதாக நீங்கள கூற, அதை அவர் நீங்கள் வாகாபி என்று கூறியதாக தவறாக கூறியுள்ளார்.அது சிறு தவறுதான்.(அவர் திருத்திய பதிவையும், நீங்கள் திருத்தாத பதிவையும் படித்துள்ளீர்கள்)
நீக்குஆனால் நீங்கள் என்ன செய்கிறீர்கள் தீண்டாமை பற்றி கூறாமல் தப்பித்துக்கொள்ள பிறரின் சிறு தவறை பெரிதாக்குகிறீர்கள்.
தவறு செய்வது மனித இயல்பு....மார்க்கம் தவறு செய்தாலும் அதை திருத்திக் கொள்ளவேண்டும். திருத்தாவிடில் மார்க்கமே தவறு என்று பலரால் கூறப்படும். சிந்தித்தீர்கள் என்று சிறப்பு உங்களுக்கே.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :)
சகோ புரட்சிமணி
பதிலளிநீக்கு"தீண்டாமை" என்ற பதத்திற்குரிய சரியான அர்த்தம் என்ன என்பதை சற்று விளக்குவீர்களா??
என்றும் அன்புடன்
அ. ஹாஜாமைதீன்.
தம்பி புரட்சிமணி,
பதிலளிநீக்குபாய்மார பத்தி சொல்லிருக்கிங்க. ஒன்னும் வெளங்கல நமக்கு. (உங்களுக்கே வெளங்காம தான் போட்டதா சு.பி அடியார் கூட சொல்லிருக்கார்.) ஆனா உங்க மாதிரி அக்மார்க்கு நாஸ்டிகர்கள் பதிவுல எல்லாம் வவ்வாலு, இக்பால் செல்வம், சார்வாகன், எட்டிகலிசட்டு மாதிரி ஜூடான நாச்டிகர்களே மாறி மாறி கொமென்ட் போட்டுக்குரிங்களே. இன்னா காரணம்? உங்கள எல்லாம் பெரிய பெரிய நாஸ்டிகல்ஸ் அக்செப்ட் பண்ணிக்க மாட்டேண்டுராளா? இன்னா பிராப்ளம்? அது எனக்கு தெரிஞ்சாவனும் ஆமா. நான் சொன்னவாளோட பதிவுகள பார்த்தாலும் இதே இழவு தான். இன்னா ரீஜன் அதுக்கு. எதுக்கு ஒங்கள மத்த நாச்டிகர்ஸ் ஒதுக்குராய்ங்க?
*******************************************************************
நீக்குஅஸ்ஸலாமு அலைக்கும்.
புரட்சிமணி அவர்களே, நண்பர்களே.
புரட்சிமணி அவர்கள் வெளியிட்ட கட்டுரை முழுவதும்
தவறான செய்திகள் அடங்கியது. பகுத்தறிவிற்கு
சம்பந்தம் இல்லாதது.
முஹம்மது நபியின் தூய வாழ்க்கையையும், அவர்
இறைவனின் தூதர்தான் என்பதையும், வாகாபிய
கொள்கைதான் சரி என்பதையும் நீங்கள் வாய்திறக்க
முடியாத வாதங்களை கொண்டு நிரூபிக்க எங்களால்
முடியும்.
சவுதியில் தீண்டாமை இருந்தால் உங்களுக்கு ஒரு கோடி
ரூபாய் பரிசளிக்கவும் நாங்கள் தாயாராக இருக்கிறோம்.
எங்களுடன் நேருக்கு நேர் விவாதம் நடத்த தயாரா?
நீங்கள் இரட்டை முகம் கொண்டவர் என்பதை நிரூபிக்கிறோம்.
குறிப்பு -
இந்த வலைப்பூவை நாங்கள் பார்ப்பது கிடையாது.
மேற்கொண்டு மேற்கொண்டு இந்த வலைப்பூவின் வழியாக
உங்கள் வாதங்களுக்கவும் பதிலளிக்க இயலாது.
பொதுமக்கள் பார்க்கும் வகையில், நேருக்கு நேர் விவாதத்திற்கு வரவிரும்பினால் தொடர்பு கொள்ளவும்.
விவாதம் முடிந்த பிறகு அந்த வீடியோவை முடிந்தால் உங்கள்
வலைப்பூவில் வெளியிடுங்கள்.
என் தனிப்பட்ட ஈமெயில் Tntj.farook@gmail.com
எங்கள் இயக்க இணையதளம் www.onlinepj.com
இதற்கு பிறகு பதில் வராததனால், நாங்கள் ஓடிவிட்டதாக
பிரச்சாரம் செய்தால், வாசகர்கள் விழிப்படையவும்.
இவர் தவிர ஏராளமானவர்களின் விமர்சனத்திற்கு சரியான
பதில் தரும் எங்கள் இணைதளத்திற்கு வருகை தரவும்.
//தம்பி புரட்சிமணி,
நீக்குபாய்மார பத்தி சொல்லிருக்கிங்க. ஒன்னும் வெளங்கல நமக்கு. (உங்களுக்கே வெளங்காம தான் போட்டதா சு.பி அடியார் கூட சொல்லிருக்கார்.)//
அண்ணே அவரு ஒரு வியாபாரி...சரி நீங்க எப்படி?
//ஆனா உங்க மாதிரி அக்மார்க்கு நாஸ்டிகர்கள் பதிவுல //
அண்ணே நான் பக்கா ஆத்திகன்
//எதுக்கு ஒங்கள மத்த நாச்டிகர்ஸ் ஒதுக்குராய்ங்க?//
உண்மையை ஏற்றுக்கொள்வதில் அவர்களுக்கு பிரச்சனை இல்லை அதான். மதவாதிகளுக்கு உண்மை தெரிந்திருந்தாலும் ஒத்துக்க மாட்டாங்க ஏனா மதம் இருக்கும் வரை தான் அவர்கள் வண்டி ஓடும்.
தங்கள் வருகைக்கு நன்றி :)
@Mg Farook
நீக்குவிவாதம் எங்கு நடக்கின்றதோ அங்கேதான் விவாதம் செய்ய வேண்டும்.இவ்வலைத்தளத்திலேயே விவாதம் செய்யலாம். ஆனால் இவர்கள் நேரடி விவாதத்திற்கு அழைக்கின்றனர்.
நண்பர்களே இவர்களுடன் விவாதத்திற்கு செல்லலாமா?
நன்றி
சகோ, இராச.புரட்சிமணி அவர்களுக்கு,
பதிலளிநீக்குதீண்டாமை என்ற பதத்திற்கு விக்கியிலிருந்து திரு.சார்வாகன் தந்த குறிப்பையே, லாவகமாக வழிமொழிந்தீர்கள், விக்கியின் குறிப்பிற்கும் ஷியாக்களைப்பற்றி தாங்கள் எழுதியுள்ளதற்கும் ஏதாவது சம்பந்தம் உள்ளதா என்பதை தங்களது பதிவை மீண்டும் ஒரு முறை படித்து முடிவு செய்யுங்கள்.
//தீண்டாமை ஒரு சமூகக் குழுவினரை ஏனைய சமூகக் குழுவினரோடு சம உரிமையோடு தொடர்புகளைப் பேணுவதைத் தடுக்கும் ஒரு சமூக முறைமையாகும்.
தீண்டாமை பரவலாக இந்தியா, இலங்கை, நேபாளம், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் தலித் மக்கள் நடத்தப்படும் முறைமையைக் குறிக்க பயன்படுத்தப்படுகிறது. இந்த்ய விடுதலைக்குப் பின்னர் தீண்டாமை சட்டவிரோதமாதாகும்.[1] // நன்றி விக்கிப்பீடியா
உண்மையில் "தீண்டாமை " என்ற பதத்திற்குரிய சரியான விளக்கம் சகோ.புரட்சிமணிக்கு இன்னும் விளங்கவில்லையோ...???
என்றும் அன்புடன்
அ. ஹாஜாமைதீன்
பகுதி: 2
பதிலளிநீக்குசவூதியில் ஷியாக்களின் நிலை என்ன என்பதை சரியாக விளங்காமல், "அவலை நினைத்து உரலை இடித்த கதையாக" நம்ம ஊரு ஜாதீயத்தை நினைத்து, அதன் தாக்கத்தால் தவறான தலைப்பில் பிழையான பதிவு, மேலும் பழய பதிவு என்பதால் அதிகம் விமர்சிக்க விரும்பவில்லை.
தங்களது தவறான தலைப்பிற்கு மாற்றாக...
//தன்னை இசுலாமிய நாடு என்று கூறிக்கொள்ளும் சவூதி இசுலாமியர்கலையே இரண்டாம் தர குடிமகன்களாக நடுத்துகின்றது. // என பதிவில் தாங்களே குறிப்பிட்டது போல...
இசுலாமிய சவுதியில் இரண்டாம் தர குடிமக்கள்!
என்ற தலைப்பையே இட்டிருக்கலாமே சகோ.!
என்றும் அன்புடன்
அ. ஹாஜாமைதீன்.
வாங்க சகோ வணக்கம்,
நீக்கு//இசுலாமிய சவுதியில் இரண்டாம் தர குடிமக்கள்!
என்ற தலைப்பையே இட்டிருக்கலாமே சகோ.!//
இரண்டாம் தர குடிமக்களாக மக்களை நடுத்துவதற்க்கும் தீண்டாமைக்கும் எந்த ஒரு வித்தியாசமும் எனக்கு தெரியவில்லை சகோ. மக்கள் ஒதுக்கினால் தான் தீண்டாமை என்று அல்ல அரசாங்கம் சில மக்களை ஒதுக்கினாலும் அதுவும் தீண்டாமையே.
நீங்கள் இசுலாமின் மேல் வைத்துள்ள பற்றை எண்ணி நான் உங்களை உயர்வாக எண்ணுகிறேன்.
உங்களைப்போன்றவர்கள் மதத்தின் மீது உள்ள பற்றை மனிதத்தின் மீது வைத்தால் இவ்வுலகமே அமைதியாக மாற வழிவகுக்கும் . நீங்கள் ஏன் மதத்தின் மீது உள்ள பற்றை மனிதத்தின் மீது வைக்க கூடாது?
மதமா மனிதமா நீங்களே முடிவு செய்யுங்கள் சகோ.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
என்றும் அன்புடன்
இராச.புரட்சிமணி
*******************************************************************
நீக்குஅஸ்ஸலாமு அலைக்கும்.
புரட்சிமணி அவர்களே, நண்பர்களே.
புரட்சிமணி அவர்கள் வெளியிட்ட கட்டுரை முழுவதும்
தவறான செய்திகள் அடங்கியது. பகுத்தறிவிற்கு
சம்பந்தம் இல்லாதது.
முஹம்மது நபியின் தூய வாழ்க்கையையும், அவர்
இறைவனின் தூதர்தான் என்பதையும், வாகாபிய
கொள்கைதான் சரி என்பதையும் நீங்கள் வாய்திறக்க
முடியாத வாதங்களை கொண்டு நிரூபிக்க எங்களால்
முடியும்.
சவுதியில் தீண்டாமை இருந்தால் உங்களுக்கு ஒரு கோடி
ரூபாய் பரிசளிக்கவும் நாங்கள் தாயாராக இருக்கிறோம்.
எங்களுடன் நேருக்கு நேர் விவாதம் நடத்த தயாரா?
நீங்கள் இரட்டை முகம் கொண்டவர் என்பதை நிரூபிக்கிறோம்.
குறிப்பு -
இந்த வலைப்பூவை நாங்கள் பார்ப்பது கிடையாது.
மேற்கொண்டு மேற்கொண்டு இந்த வலைப்பூவின் வழியாக
உங்கள் வாதங்களுக்கவும் பதிலளிக்க இயலாது.
பொதுமக்கள் பார்க்கும் வகையில், நேருக்கு நேர் விவாதத்திற்கு வரவிரும்பினால் தொடர்பு கொள்ளவும்.
விவாதம் முடிந்த பிறகு அந்த வீடியோவை முடிந்தால் உங்கள்
வலைப்பூவில் வெளியிடுங்கள்.
என் தனிப்பட்ட ஈமெயில் Tntj.farook@gmail.com
எங்கள் இயக்க இணையதளம் www.onlinepj.com
இதற்கு பிறகு பதில் வராததனால், நாங்கள் ஓடிவிட்டதாக
பிரச்சாரம் செய்தால், வாசகர்கள் விழிப்படையவும்.
இவர் தவிர ஏராளமானவர்களின் விமர்சனத்திற்கு சரியான
பதில் தரும் எங்கள் இணைதளத்திற்கு வருகை தரவும்.
//இரண்டாம் தர குடிமக்களாக மக்களை நடுத்துவதற்க்கும் தீண்டாமைக்கும் எந்த ஒரு வித்தியாசமும் எனக்கு தெரியவில்லை சகோ.//
நீக்குதீண்டாமைக்கும், இரண்டாம்தர குடிமக்கள் என கூறுவதற்கும் உள்ள வித்தியாசத்தை அறியாமலே தீண்டாமை பற்றிய பதிவு எழுதுவதைக் கண்டு உண்மையில் வியப்படைகின்றேன்.!!!
சுருக்கமாக கூறினால்...
தனது குடிமக்களிடையே பாரபட்சமாக நடக்கும் ஒரு
அரசினால் பாதிக்கப்படுபவர்களை குறிக்கும் சொல்தான்
இரண்டாம்தர குடிமக்கள்.
சக மனிதனை சம உரிமையின்றி விலங்கினும் கீழாக நடத்துவது தீண்டாமை.
தங்களது பார்வையில் இவை இரண்டும் சமம் என்பது
நகை முரன்.
என்றும் அன்புடன்
அ. ஹாஜாமைதீன்.
// உங்களைப்போன்றவர்கள் மதத்தின் மீது உள்ள பற்றை மனிதத்தின் மீது வைத்தால் இவ்வுலகமே அமைதியாக மாற வழிவகுக்கும்.//
நீக்குபரஸ்பரம் அறிமுகம் இல்லாத, என்னைக் குறித்து எதையுமே அறிந்திராத நிலையில்... இப்படி ஒரு அறிவுரையை, என்னை முன்னிலைப்படுத்தி கூறிய காரணத்தை தெரிந்து கொள்ளலாமா???
தங்களது வலைப்பூவில் இஸ்லாத்தைப் பற்றி தப்பும் தவறுமாக பதிவெழுத, அதை மறுத்து நான் சில பின்னூட்டங்கள் இட்டதால்... மனிதத்திற்கு எதிரானவன் என முடிவு செய்துவிட்டீர்களோ!!?
//நீங்கள் ஏன் மதத்தின் மீது உள்ள பற்றை மனிதத்தின் மீது வைக்க கூடாது?//
மிக அருமையான கேள்வி, ஆனால் நான் மனிதத்தின்
மீது பற்றில்லாமல் இருந்ததை எப்போது கண்டீர்கள் என்பதை கூறுங்கள்???
//மதமா மனிதமா நீங்களே முடிவு செய்யுங்கள் சகோ.//
மெய்யாலும் நீங்க ஜார்ஜ் புஷ் மாதிரியே பேசுறீங்க சகோ.
என்றும் அன்புடன்
அ. ஹாஜாமைதீன்.
@அ. ஹாஜாமைதீன்
பதிலளிநீக்குவாங்க சகோ,
தங்கள் விளக்கத்திற்கு நன்றி.
'சவூதி இசுலாமிய அரசாங்கம் இசுலாமிய ஷியா பிரிவு மக்களை தீண்டாமையாக நடத்தவில்லை ஆனால் இரண்டாம் தர குடிமக்களாக நடத்துகிறது என்பதை ஏற்கிறேன்' என்றுதானே நீங்கள் சொல்ல வருகிறீர்கள்?
ஏன் இசுலாமிய ஷியா பிரிவு மக்களை சவூதி அரசாங்கம் இரண்டாம் தர குடிமக்களாக நடத்துகிறது என்று கூற முடியுமா?
//சக மனிதனை சம உரிமையின்றி விலங்கினும் கீழாக நடத்துவது தீண்டாமை. //
வேலை கொடுக்க மறுத்தல்,மசூதி கட்ட அனுமதி மறுத்தல் இது எந்த விதத்தில் நியாயம் என்பதை எடுத்துரைப்பீர்களா?
மேலும் குர்ஆனில் அல்லா ஏன் மனிதர்களை மனிதர்கள் அடிமைகளாக வைத்துக்கொள்ளலாம் என்று அனுமதி வழங்கியுள்ளார் என்பதையும் எடுத்து கூறுவீர்களா?
இந்தியாவில் வேலை கொடுக்க யாரும் மறுப்பதில்லை, கோயில் கட்ட யாருக்கும் அனுமதி மறுக்கப்படவில்லை என்பதையும் நினைவில் கொள்ளுங்கள் சகோ. இந்தியாவில் நடைபெறும் நல்ல மாற்றங்களை பாருங்கள்.
மீண்டும் சொல்கிறேன் மக்கள் ஒதுக்கினால் தான் தீண்டாமை என்று அல்ல அரசாங்கம் சில மக்களை ஒதுக்கினாலும் அதுவும் தீண்டாமையே. அல்லா அடிமை வைத்துக்கொள்ளலாம் என்பதும் தீண்டாமையே. இதை உங்களால் மறுக்க முடியுமா?
####
////நீங்கள் ஏன் மதத்தின் மீது உள்ள பற்றை மனிதத்தின் மீது வைக்க கூடாது?//
மிக அருமையான கேள்வி, ஆனால் நான் மனிதத்தின்
மீது பற்றில்லாமல் இருந்ததை எப்போது கண்டீர்கள் என்பதை கூறுங்கள்???####
நீங்கள் மனிதத்தை நேசிக்கவில்லை என்று நான் கூறவில்லை. மனிதத்தை நேசியுங்கள் என்றுதான் கூறுகிறேன். (மனிதத்தை நேசித்து மதத்தையும் நேசித்து வந்தாலும் மனிதத்தை மட்டுமே நேசிக்க நம்மை நாம் தயார் செய்து கொள்ள வேண்டும்)
மதத்தை நேசிப்பதை விட மனிதத்தை நேசிப்பதே உலக அமைதிக்கு நல்லது.
மதத்தை தீவிரமாக நேசிப்பவரால் மனிதத்தை நேசிக்க முடியாது.மதம் மனிதத்தை கெடுக்கும்.
இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்னைக்கு என்ன காரணம்?மும்பை தாக்குதலுக்கு என்ன காரணம்? குஜராத் படுகொலைக்கு என்ன காரணம்?
சிந்தித்து பாருங்கள் சகோ.
சகோ உங்கள் மனதை புண்படுத்துவது என் நோக்கமல்ல உண்மையை கூறுவதே என் நோக்கமாகும். நீங்களும் தவறாக நினைப்பதை கூறுங்கள் .
மதத்தை விட்டு விட்டு மனிதத்தை பின்பற்றுவதே இவ்வுலகிற்கு நல்லது.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ
என்றும் அன்புடன்
இராச.புரட்சிமணி
சகோ இராச.புரட்சிமணி,
பதிலளிநீக்குஎனது முதல் பின்னூட்டத்தை மீண்டும் தங்களது கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்....
// அ. ஹாஜாமைதீன்September 29, 2012 1:18 AM
சகோ புரட்சிமணி
"தீண்டாமை" என்ற பதத்திற்குரிய சரியான அர்த்தம் என்ன என்பதை சற்று விளக்குவீர்களா??
என்றும் அன்புடன்
அ. ஹாஜாமைதீன்.//
எனது இந்த வினாவிற்கு, திரு.சார்வாகன், விக்கியிலிருந்து சுட்டிக் காட்டியதை தாங்களும் வழிமொழிந்தீர்கள்....
என்றும் அன்புடன்
அ. ஹாஜாமைதீன்.
"தீண்டாமை" என்ற சொல்லுக்கு என்ன அர்த்தம் என்பது சாதாரன பாமரனுக்கும் தெரிந்த விடயம், ஆனால் இணையத்தில் பதிவுகள் எழுதும் தங்களைப் போன்றவர்கள் விக்கியில் தேடியதை நினைத்து நான் விக்கித்து போனேன்.....
பதிலளிநீக்குஜாதீய ஏற்றத் தாழ்வின் அடிப்படையில் ஒரு இன மக்களை தொடக்கூட அருகதையற்றவர்கள் தீண்டத் தகாதவர்கள் என்பதாகத்தான் தமிழர்களான நாம் "தீண்டாமை'' யை குறித்து விளங்கி வைத்துள்ளோம்,
ஆனால் தங்களது கட்டுரையின் தலைப்பில் மட்டும் " இசுலாமிய சவுதியில் தீண்டாமை இல்லையா?" என பெரிதாக எழுதிவிட்டு, உள்ளே மசூதி கட்ட அனுமதி இல்லை, வேலை வாய்ப்பு இல்லை,என பிரச்சினைகளை முன் நிறுத்துகின்றீர்களே தவிர தீண்டாமைக்கு நாம் விளங்கி வைத்துள்ள அர்த்தம் தங்களது பதிவில் இல்லை.
தீண்டாமை என்பது வேறு, இரண்டாம் தர குடிமக்கள் என்பது வேறு என விபரமாக விளக்கிய பின்பும், தாங்கள் விடாப்பிடியாக மக்கள் செய்தாலும் தீண்டாமைதான், அரசாங்கம் செய்தாலும் தீண்டாமைதான் என திரும்ப, திரும்ப கூறி இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை புரிந்து கொள்ள மறுத்தீர்கள், ஆனால் பதிவில் தங்களையும் அறியாமல் நான் எடுத்து வைத்த வாதத்தை மெய்ப்பிக்கின்றீர்களே இது நியாயமா?
என்றும் அன்புடன்
அ. ஹாஜாமைதீன்.
"இசுலாமிய சவுதியில் தீண்டாமை இல்லையா?" என்ற தங்களது பதிவில்...
பதிலளிநீக்கு1. //தன்னை இசுலாமிய நாடு என்று கூறிக்கொள்ளும் சவூதி இசுலாமியர்கலையே இரண்டாம் தர குடிமகன்களாக நடுத்துகின்றது. //
2. //சவுதியில் ஷியா மக்களுக்கு ஏற்ப்பட்டுள்ள அரசியல் தீண்டாமை,//
3. //அரசியல் ரீதியாகவே சவூதி இசுலாமில் இன்று தீண்டாமை தலை விரித்தாடுகின்றது.//
பதிவின் உள்ளே அரசியல் தீண்டாமை, ஆட்டுக்குட்டி தீண்டாமை என எழுதிய உங்களுக்கு, தலைப்பில் மட்டும் ஏன் இந்த பாரபட்சம்???
" இசுலாமிய சவுதியில் இரண்டாம் தர குடிமக்கள்"
" இசுலாமிய சவுதியில் அரசியல் தீண்டாமை"
இந்த இரண்டில் ஏதாவது ஒன்றை தலைப்பாக வைத்திருக்கலாமே?
ஆக உங்களுடைய கூற்றில் நீங்களே உண்மையாளராக இல்லை என்பதையே தங்களது இந்த பதிவு வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
என்றும் அன்புடன்
அ. ஹாஜாமைதீன்.
நீக்குவாங்க எனதருமை சகோ அ. ஹாஜாமைதீன்,
காலதாமதமாக பதில் அளிப்பதற்கு மன்னிக்கவும்.
//ஜாதீய ஏற்றத் தாழ்வின் அடிப்படையில் ஒரு இன மக்களை தொடக்கூட அருகதையற்றவர்கள் தீண்டத் தகாதவர்கள் என்பதாகத்தான் தமிழர்களான நாம் "தீண்டாமை'' யை குறித்து விளங்கி வைத்துள்ளோம்,//
கண்ணாடியை கண்ணாடி என்று பொதுவாக அழைப்பது வழக்கம். ஆனால் அதில் முகம் பார்க்கும் கண்ணாடியும் உண்டு, மூக்குக் கண்ணாடியும் உண்டு, வாகனங்களில் பயன்படுத்தும் கண்ணாடியும் உண்டு.
தீண்டாமைக்கு நீங்கள் கூறும் பொருளும் உண்டு. அதை நான் கூறிய பொருளிலும் பார்க்கலாம் அதில் தப்பில்லை. இன ரீதியான,சாதி ரீதியான,மத ரீதியான, தேச ரீதியான, நிற ரீதியான ஒதுக்கல் யாவும் என்னைப்பொறுத்தவரை மக்கள் செய்தாலும் அரசு செய்தாலும் தீண்டாமையே.
தலைப்பில் ஏன் அரசியல் தீண்டாமை என வைக்கவில்லை என கேட்க்கிறீர்கள். உங்களுக்கு அந்த கேள்வியை கேட்க உரிமை உண்டு. எனக்கும் நான் விரும்பும் தலைப்பை பிறர் மனம் புண்படாதவண்ணம் வைக்க உரிமை உண்டு என்பதை ஏற்ப்பீர்கள் என நம்புகிறேன்.
இசுலாமிய சவுதியில் தீண்டாமை என்பது ஏன் உங்கள் மனதை புண்படுத்துகிறது என எனக்கு தெரியவில்லை. இருப்பினும் உங்கள் விருப்பத்திற்காக நான் தலைப்பை 'இசுலாமிய சவுதியில் அரசியல் தீண்டாமை' என மாற்றிவிடுகிறேன். அதற்க்கு நீங்கள் எனக்கு இருவிடை தந்தால் மட்டும் போதும்.
ஒன்று. இசுலாமிய சவுதியில் ஏன் அரசியல் ரீதியான தீண்டாமை? இதற்க்கு வாகபிசம்தானே காரணம். இதை நீங்கள் ஏற்க்கிரீர்களா?
இரண்டு.குரானிலும் ஹதீசுகளிலும் அல்லா அடிமைகளை வைத்துக்கொள்ளலாம் என்கிறாரே. மேலும் உங்கள் அடிமைகளில் ஒருவர் கொல்லப்பட்டால் நீங்கள் அவர்களின் அடிமைகளில் ஒருவரை கொல்லலாம் என்கிறாரே? இது ஒரு மனிதனை கேவலமாக பார்க்கும் சிந்தனை தானே.இது தீண்டாமையை விட கொடிய சிந்தனை அல்லவா? இதற்க்கு தங்கள் பதில் என்ன?
சகோ உங்கள் மனதை புண்படுத்துவது என் நோக்கமல்ல. சிந்திக்க வைக்க வேண்டும் என்பதே என் நோக்கம். உங்கள் மனது இத்தலைப்பினால் புண்பட்டிருந்தால் என்னுடைய மன்னிப்பை ஏற்றுக்கொள்ளுங்கள். மீண்டும் சொல்கிறேன் நான் தலைப்பை மாற்ற தயார். சினம் கொள்ளாமல் சிந்தித்து பதில் தாருங்கள்.
என்றும் அன்புடன்
மனிததிற்க்காக மட்டும்
இராச.புரட்சிமணி
சகோ இராச.புரட்சிமணி அவர்களுக்கு,
நீக்கு//இசுலாமிய சவுதியில் தீண்டாமை என்பது ஏன் உங்கள் மனதை புண்படுத்துகிறது என எனக்கு தெரியவில்லை.//
//சகோ உங்கள் மனதை புண்படுத்துவது என் நோக்கமல்ல.//
//உங்கள் மனது இத்தலைப்பினால் புண்பட்டிருந்தால் என்னுடைய மன்னிப்பை ஏற்றுக்கொள்ளுங்கள்.//
முதலில் ஒரு விடயத்தை தங்களுக்கு விளக்க விரும்புகிறேன்,
தங்களது தலைப்பினாலோ, அல்லது இந்தப் பதிவினாலோ, என் மனது புண்படவும் இல்லை, வேதனைப்படவும் இல்லை, நான் சினம் கொள்ளவும் இல்லை,பதிவிற்கும், தலைப்பிற்கும்,சம்பந்தமே இல்லை என நான் விவாதிப்பதால், உங்களுக்கு அப்படி தோன்றுகிறது என நினைக்கின்றேன், மற்றபடி மன்னிப்பு என்ற பெரிய வார்த்தை எல்லாம் வேண்டாம் சகோ.
//தலைப்பில் ஏன் அரசியல் தீண்டாமை என வைக்கவில்லை என கேட்க்கிறீர்கள். உங்களுக்கு அந்த கேள்வியை கேட்க உரிமை உண்டு. எனக்கும் நான் விரும்பும் தலைப்பை பிறர் மனம் புண்படாதவண்ணம் வைக்க உரிமை உண்டு என்பதை ஏற்ப்பீர்கள் என நம்புகிறேன்.//
சகோ, இந்த விடயத்தில் எனக்கு எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை, இது தங்களது வலைதளம், எதை வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானலும், எழுத பூரன உரிமையுண்டு, ஆனால் தவறை சுட்டிக்காட்டுவது தவறா சகோ?
என்றும் அன்புடன்
அ. ஹாஜாமைதீன்.
//கண்ணாடியை கண்ணாடி என்று பொதுவாக அழைப்பது வழக்கம். ஆனால் அதில் முகம் பார்க்கும் கண்ணாடியும் உண்டு, மூக்குக் கண்ணாடியும் உண்டு, வாகனங்களில் பயன்படுத்தும் கண்ணாடியும் உண்டு.//
நீக்குநல்ல உதாரணம் சரி உங்களது பாணியிலேயே.....
முகம் பார்க்கும் கண்ணாடியை, மூக்குக் கண்ணாடியாக உபயோகிக்க இயலாது, மூக்குக் கண்ணாடியை வாகனத்திற்கு பயன்படுத்த முடியாது என்பதில்,
தங்களுக்கு மாற்று கருத்து இருக்காது எனில்...
அரசியல் ரீதியாக இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுவதை சுட்டிக்காட்ட ஜாதி ரீதியாக
தாழ்ந்தவர்களுக்கு பயன்படுத்தும் "தீண்டாமை" எனும் சொல்லை மட்டும் தலைப்பில் குறிப்பிட்டது ஏன்?
ஆர்பாட்டக்காரர்கள் வாகனத்தின் மூக்குக் கண்ணாடியை உடைத்து விட்டார்கள் என்கிறீர்கள், அப்படி அல்ல வாகனத்தின் முகப்புக் கண்ணாடியை உடைத்துவிட்டார்கள் என்று கூறுவதே சரி என்கிறேன். இந்த நிலை தான் தலைப்பைக் குறித்து நம் இருவரின் வாதமும்.
நேரடியாக எவ்வளவு எடுத்து சொன்னாலும் ஏற்காத நீங்கள் இந்த உதாரணத்தையாவது ஏற்பீர்கள் என நினைக்கின்றேன்.
என்றும் அன்புடன்
அ. ஹாஜாமைதீன்.
// தீண்டாமைக்கு நீங்கள் கூறும் பொருளும் உண்டு. அதை நான் கூறிய பொருளிலும் பார்க்கலாம் அதில் தப்பில்லை.//
நீக்குஎனக்கும் வேனாம், உனக்கும் வேனாம், ஆளுக்கு பாதி என்பது போல் உள்ளது தங்களது கருத்து....
"தீண்டாமைக்கு" நான் கூறியதுதான் சரியான அர்த்தம்.
தங்களால்... நான் கூறிய பொருளிலும் "பார்க்கலாம்" என எழுத முடிந்ததே தவிர நான் கூறும் பொருளும் உண்டு என ஆணித்தரமாக வாதிட முடியவில்லையே ஏன் என யோசித்தீர்களா??
//இருப்பினும் உங்கள் விருப்பத்திற்காக நான் தலைப்பை 'இசுலாமிய சவுதியில் அரசியல் தீண்டாமை' என மாற்றிவிடுகிறேன். அதற்க்கு நீங்கள் எனக்கு இருவிடை தந்தால் மட்டும் போதும்.//
எனது விருப்பத்திற்காக மாற்ற சொல்லவில்லை, அது நியாயமும் அல்ல பதிவுக்கு ஏற்ற தலைப்பைத்தான் பரிந்துரைக்கின்றேன், பகவத்கீதையோ, குர் ஆனோ, என்ன சொல்கிறது என்பதைப் பற்றி இங்கே நாம் விவாதிக்கவில்லை.
//சிந்திக்க வைக்க வேண்டும் என்பதே என் நோக்கம்.//
தலைப்பிற்கும், பதிவிற்கும், சம்பந்தம் உண்டா என்பதைக் குறித்து முதலில் நீங்கள் தான் சிந்திக்க வேண்டும் சகோ.
என்றும் அன்புடன்
அ. ஹாஜாமைதீன்.
வாங்க சகோ அ. ஹாஜாமைதீன்,
பதிலளிநீக்கு//சகோ, இந்த விடயத்தில் எனக்கு எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை, இது தங்களது வலைதளம், எதை வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானலும், எழுத பூரன உரிமையுண்டு, ஆனால் தவறை சுட்டிக்காட்டுவது தவறா சகோ?//
நீங்கள் தவறாக நினைப்பதை சுட்டிகாட்டுவதற்க்கும், விமர்சிப்பதற்கும் உங்களுக்கும் பூரண உரிமை உண்டு சகோ.
///அ. ஹாஜாமைதீன்December 5, 2012 12:18 AM
பதிலளிநீக்குஎனது விருப்பத்திற்காக மாற்ற சொல்லவில்லை, அது நியாயமும் அல்ல பதிவுக்கு ஏற்ற தலைப்பைத்தான் பரிந்துரைக்கின்றேன், பகவத்கீதையோ, குர் ஆனோ, என்ன சொல்கிறது என்பதைப் பற்றி இங்கே நாம் விவாதிக்கவில்லை. ///
சகோ பதிவிற்கு ஏற்ற தலைப்பை பரிந்துரைப்பதாக கூறியுள்ளீர்கள். நன்றி
என்னுடைய பதிவின் நோக்கத்தை பதிவின் முதல் இரண்டு பத்திகளில் கூறியிருந்தேன். அதை மீண்டும் இங்கே தருகிறேன்.
@@
சவுதியில் வசிக்கும் ஒரு சில வாகாபிய இசுலாமிய பதிவர்கள் இந்து மதத்தில் தீண்டாமை உண்டு அதனால் இசுலாமிற்கு மாற வேண்டும், தீண்டாமையை ஒழிக்க இசுலாம் தான் அருமருந்து என்று பிரச்சாரம் செய்வதை படித்திருப்பீர்கள்.
சவுதியில் இருக்கும் தீண்டாமை பற்றி இவர்கள் இதுவரை வாய் திறந்திருப்பர்களா? ஏன் இசுலாமினால் அந்த தீண்டாமையை ஒழிக்க முடியவில்லை?. தீண்டாமைக்கு காரணமே வாகாபிய இசுலாம்தானே பின்பு எப்படி இசுலாம் தீண்டாமையை ஒழிக்கும்?.//
@@
இங்கே நான் கூற விரும்பியது என்னவெனில் "இசுலாமின் பிறப்பிடமான சவுதியிலேய இசுலாமிய மக்கள் ஒதுக்கப்படுகின்றனர். இது பற்றி நமது வாகாபிய சகோக்கள் வாய் திறப்பதில்லை. இந்தியாவில் நிலவும் தீண்டாமைக்கு இவர்கள் இசுலாமை பரிந்துரைக்கிறார்கள். ஆனால் பாருங்கள் சவுதியில் இசுலாமியர்கள் எவ்வாறு ஒதுக்கப்படுகின்றனர்.எனவே இசுலாமை ஏற்ப்பதால் ஒதுக்கல் ஒழியாது. இன்று சவுதியில் உள்ளதுபோல நாளை உலகெங்கிலும் சில பிரிவு இசுலாமியர்கள் ஒதுக்கப்படலாம் எனவே இசுலாம் தீண்டாமைக்கான அருமருந்து இல்லை" என்று கூறுவதே பதிவின் நோக்கம்.
நீங்கள் தீண்டாமை என்ற ஒரு பதத்தை வைத்து பார்க்கும்பொழுது தலைப்பு தவறாக தெரியலாம். ஆனால் அதை ஒதுக்கல் என்ற பொருளில் பார்த்தால் நான் கூறுவதன் நியாயம் புரியும் என நினைக்கின்றேன்.
ஒதுக்கல் என்ற பொருளில்தான் தீண்டாமை என்ற வாத்தையை நான் பயன்படுத்தியுள்ளேன்.
தலைப்பை "இசுலாமிய சவுதியில் மட்டும் அரசியல் தீண்டாமை இல்லையா?" என்று வைப்பது சரியாக இருக்காது. ஏன் எனில் மதச்சார்பற்ற இந்தியாவில் அரசியல் தீண்டாமை இல்லை.
வேண்டும் என்றால் "இசுலாமிய சவுதியில் மட்டும் இசுலாமினால் மக்கள் ஒதுக்கப்படவில்லையா?" என்ற தலைப்பு வைக்கலாம் என நினைக்கின்றேன். தங்கள் கருத்தையும் பதிவிற்கு ஏற்றார்போல வேறு தலைப்பு உங்களுக்கு தோன்றினால் அதையும் பதிவு செய்யுங்கள்.
தங்கள் வருகைக்கும் தொடர் கருத்துக்கும் மிக்க நன்றி
என்றும் அன்புடன்
உங்கள் அன்பு சகோதரன்
இராச.புரட்சிமணி
சகோ இராச.புரட்சிமணி அவர்களுக்கு,
நீக்கு//சகோ பதிவிற்கு ஏற்ற தலைப்பை பரிந்துரைப்பதாக கூறியுள்ளீர்கள். நன்றி
என்னுடைய பதிவின் நோக்கத்தை பதிவின் முதல் இரண்டு பத்திகளில் கூறியிருந்தேன். அதை மீண்டும் இங்கே தருகிறேன்.//
பதிவின் முதல் இரண்டு பத்திகளில் மட்டும் வரிக்கு வரி, தீண்டாமை தீண்டாமை என கூக்குரலிட்ட தங்களால், தீண்டாமை அரக்கனின் கோரமுகத்தை பதிவில் எங்கேயும் தெளிவுபடுத்த இயலவில்லையே ஏன்?
// @@
சவுதியில் வசிக்கும் ஒரு சில வாகாபிய இசுலாமிய பதிவர்கள் இந்து மதத்தில் தீண்டாமை உண்டு அதனால் இசுலாமிற்கு மாற வேண்டும், தீண்டாமையை ஒழிக்க இசுலாம் தான் அருமருந்து என்று பிரச்சாரம் செய்வதை படித்திருப்பீர்கள்.
சவுதியில் இருக்கும் தீண்டாமை பற்றி இவர்கள் இதுவரை வாய் திறந்திருப்பர்களா? ஏன் இசுலாமினால் அந்த தீண்டாமையை ஒழிக்க முடியவில்லை?. தீண்டாமைக்கு காரணமே வாகாபிய இசுலாம்தானே பின்பு எப்படி இசுலாம் தீண்டாமையை ஒழிக்கும்?.//
ஆக இஸ்லாமிய பதிவர்கள் இந்து மதத்தில் உள்ள தீண்டாமை குறித்து எழுதியதால், இஸ்லாத்திலும் உள்ளது என்பதை வெளிப்படுத்த முயற்சித்து இருக்கின்றீகள்.... நன்று.
இஸ்லாமிய பதிவர்கள் எந்த தீண்டாமையை ஒழிக்க இஸ்லாத்திற்கு மாற சொன்னார்களோ, அதே தீண்டாமை சவூதியிலும் உள்ளது என்பதைத் தானே தங்களது பதிவில் வெளிச்சம் போட்டு காட்டி இருக்க வேண்டும்? மாறாக தலைப்பிற்கு மட்டும் தீண்டாமையை தொட்டுக் கொண்ட உங்களால், பதிவுக்கு அப்படி இயலவில்லையே ஏன்?
என்றும் அன்புடன்
அ. ஹாஜாமைதீன்.
//நீங்கள் தீண்டாமை என்ற ஒரு பதத்தை வைத்து பார்க்கும்பொழுது தலைப்பு தவறாக தெரியலாம். ஆனால் அதை ஒதுக்கல் என்ற பொருளில் பார்த்தால் நான் கூறுவதன் நியாயம் புரியும் என நினைக்கின்றேன்.
நீக்குஒதுக்கல் என்ற பொருளில்தான் தீண்டாமை என்ற வாத்தையை நான் பயன்படுத்தியுள்ளேன்.//
ஸ்....ஸ்..... யப்பா.... முடியல சகோ...... மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல், கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை போன்ற பழமொழிகள் எல்லாம் என் நினைவில் வந்து போகிறது!
தீண்டாமை என்ற பதத்திற்கு என்ன அர்த்தமோ அந்த கோணத்தில் தான் பார்க்க முடியுமே தவிர, ஒரு வார்த்தைக்கு அதன் நேரடி அர்தத்தை விடுத்து நீங்கள் மனதில் நினைப்பதை எல்லாம் மற்றவர்கள் புரிந்து கொள்ள இயலாது.
தீண்டாமைக்கு சரியான விளக்கத்தை கொடுத்த பிறகும், ஒதுக்கல் என்ற பொருளில் பார்க்கலாம், பதுக்கல் என்ற பொருளில் பார்க்கலாம், அப்படி பார்த்தால் சரியாக இருக்கும், இப்படி பார்த்தால் கிளியரா இருக்கும், முகம் பார்க்கும் கண்ணாடி, மூக்குக் கண்ணாடி, என இன்னும் எத்தனை சப்பைக் கட்டுகள் கட்டுவீர்களோ யானறியேன் பராபரமே.
நீங்கள் விளங்கி எழுதுகிறீர்களா? அல்லது விளங்காவெட்டியா எழுதுகிறீர்களா? ஒன்றும் புரியல............ சகோ.
என்றும் அன்புடன்
அ. ஹாஜாமைதீன்.
தங்களது தலைப்பு சரிதான் என்பதில் இன்னும் நீங்கள் பிடிவாதமாக இருந்தால்...
நீக்குசவூதியில்......
ஷியாக்கள் நம்ம ஊர் தலித்துகளைப் போலதான் நடத்தப்படுகிறார்களா???
ஷியா சேரிகள் சவூதியில் எங்குள்ளது என அறியத் தருகிறீர்களா? எத்தனை ஷியாக்கள், சுன்னிகளின் வீட்டில் துப்புறவு பணியாளர்களாக இருக்கிறார்கள்?? எந்த சுன்னி தனது தேனீர் கடையில் ஷியாக்களுக்காக இரட்டை குவளை வைத்துள்ளான்??? எல்லா சுன்னிகளும் ஷியாக்களை தீண்டத்தகாதவர்களாகதான் நடத்துகிறார்களா???? என்பதை பற்றி எல்லாம் விலாவாரியாக விளக்கம் தாருங்கள் சகோ.
என்றும் அன்புடன்
அ. ஹாஜாமைதீன்.
வாங்க சகோ அ. ஹாஜாமைதீன்,
பதிலளிநீக்கு//
இஸ்லாமிய பதிவர்கள் எந்த தீண்டாமையை ஒழிக்க இஸ்லாத்திற்கு மாற சொன்னார்களோ, அதே தீண்டாமை சவூதியிலும் உள்ளது என்பதைத் தானே தங்களது பதிவில் வெளிச்சம் போட்டு காட்டி இருக்க வேண்டும்?//
பல்வலிக்கு மருந்து பரிந்துரைக்கும்போழுது அதன் விளைவால் தலைவலி வரும் என்றால், பல் வலி பற்றி பேசினால் நீங்கள் ஏன் தலைவலி பற்றி பேசுகிறீர்கள் என்கிறீர்கள் சகோ. வலி வலிதான் என்றால் பல்வலி வேறு தலைவலி வேறு என்கிறீர்கள். நான் என்ன செய்ய :) .
மீண்டும் சொல்கிறேன் பதிவிற்கு பொருத்தமான தலைப்பை நீங்கள் தந்தால் அதை இடுகிறேன்.
என்றும் அன்புடன்
இராச.புரட்சிமணி
சகோ இராச. புரட்சிமணி,
பதிலளிநீக்கு// பல்வலிக்கு மருந்து பரிந்துரைக்கும்போழுது அதன் விளைவால் தலைவலி வரும் என்றால், பல் வலி பற்றி பேசினால் நீங்கள் ஏன் தலைவலி பற்றி பேசுகிறீர்கள் என்கிறீர்கள் சகோ. வலி வலிதான் என்றால் பல்வலி வேறு தலைவலி வேறு என்கிறீர்கள். நான் என்ன செய்ய :) //
சகோ இந்த உதாரணங்கள் எல்லாம் தங்களது கூற்றுக்கு வலிமை சேர்க்கும் விடயம் அல்ல என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.
ஏற்கனவே கண்ணாடி உதாரணங்கள் எல்லாம் உடைந்து விட்டதால்... பல்வலி தலைவலிக்கு வந்துவிட்டீர்கள்.... நீங்கள் ஆயிரம் உதாரணங்களை அள்ளி விட்டாலும் "தீண்டாமை" என்ற சொல்லுக்கு ஒரே அர்த்தம்தான்.
குறைந்தபட்சம் ஆங்கில அகராதியை பார்த்தாவது புரிந்து கொள்வீர்கள் என கருதுகிறேன்.
untchable a. unfit to be touched, தீண்டத்தகாத; of the lowest class, தீண்டத்தகாத வகுப்பைச் சார்ந்த; incapable of being touched, தீண்ட இயலாத; unassailable, தாக்கவியலாத; n. member of the lowest caste in India, தீண்டத்தகாத வகுப்பைச் சார்ந்தவர்; untouchability,n. தீண்டாமை; untouchably,adv.
தீண்டு - தல் tīṇṭu-,
1. To touch, feel, come in contact with;
தொடுதல்.
touch v. put hand on, மேலே கை வை;தொடு; finger, விரலால் தீண்டு; come; cause to be in contact with, தொட்டுக்கொண்டிரு;தொடர்புகொள்ளச் செய்;
என்றும் அன்புடன்
அ. ஹாஜாமைதீன்.
//மீண்டும் சொல்கிறேன் பதிவிற்கு பொருத்தமான தலைப்பை நீங்கள் தந்தால் அதை இடுகிறேன்.//
பதிலளிநீக்குஎன்ன சகோ முந்தைய பின்னூட்டங்களில் இது குறித்து மிக தெளிவாக விளக்கிய பிறகும் இப்படி ஒரு கேள்வியா???
தற்போதைய தலைப்பு, தங்களது பதிவுக்கு ஏற்ற சரியான தலைப்பு அல்ல என்பதற்கு தங்களது பின்னூட்டங்களே சாட்சி, ஆகையால் நிதானமாக தலைப்பு முதல இந்த கடைசி பத்தி வரை படித்து பாருங்கள், தவறன தலைப்பிற்காக எந்தளவு பல்டி அடித்துள்ளீர்கள் என்பது புரியும்.
இதன் பிறகும் தங்களை தர்மசங்கடத்தில் ஆழ்த்த விரும்பவில்லை சகோ.
என்றும் அன்புடன்
அ. ஹாஜாமைதீன்.
வாங்கஅ. ஹாஜாமைதீன்,
நீக்கு//untchable a. unfit to be touched, தீண்டத்தகாத; of the lowest class, தீண்டத்தகாத வகுப்பைச் சார்ந்த; incapable of being touched, தீண்ட இயலாத; unassailable, தாக்கவியலாத; n. member of the lowest caste in India, தீண்டத்தகாத வகுப்பைச் சார்ந்தவர்; untouchability,n. தீண்டாமை; untouchably,adv.
தீண்டு - தல் tīṇṭu-,
1. To touch, feel, come in contact with;
தொடுதல்.
touch v. put hand on, மேலே கை வை;தொடு; finger, விரலால் தீண்டு; come; cause to be in contact with, தொட்டுக்கொண்டிரு;தொடர்புகொள்ளச் செய்; //
:) பிரச்சனை என்னவென்றால் நீங்கள் ஒரு வார்த்தையை வார்த்தையாக மட்டுமே பார்க்கிறீர்கள். நான் அதை வலியாக பார்க்கிறேன்.
//தற்போதைய தலைப்பு, தங்களது பதிவுக்கு ஏற்ற சரியான தலைப்பு அல்ல என்பதற்கு தங்களது பின்னூட்டங்களே சாட்சி//
சகோ,என்னுடைய தலைப்பு என்னுடைய பார்வையில் சரியே. நான் தலைப்பை மாற்ற சம்மதித்தற்க்கு காரணம் உங்கள் மனது புண்பட கூடாது அல்லது நீங்களும் ஏற்றுக்கொள்ளும்படி ஒரு தலைப்பை வைப்பதில் தவறில்லை என்பதால் தான். உங்களுக்கு மரியாதை கொடுக்கவேண்டும் என்ற எண்ணமே ஒழிய என் தலைப்பு தவறாக உள்ளது என்று பொருள் அல்ல.
இருவரும் ஏற்றுக்கொள்ளும்படியான தலைப்பை வைப்பதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. உங்களுக்கு சரியென தோன்றும் தலைப்பை பரிந்துரைப்பதும் விட்டுவிடுவதும் உங்கள் விருப்பம். மற்றபடி உங்களிடம் பேசியதில் எனக்கு மகிழ்ச்சி. என்ன உங்களை திருப்திபடுத்த முடியவில்லை அல்லது உங்களுக்கு புரிய வைக்க முடியவில்லை என்று சிறு வருத்தம் உள்ளது.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ :)
தாமதமான பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும்.
பதிலளிநீக்குசகோ இராச.புரட்சிமணி.
// :) பிரச்சனை என்னவென்றால் நீங்கள் ஒரு வார்த்தையை வார்த்தையாக மட்டுமே பார்க்கிறீர்கள். நான் அதை வலியாக பார்க்கிறேன்.//
தங்களது இக் கருத்திலும் நான் மாறுபடுகிறேன் சகோ,
இந்தப் பதிவின் தலைப்பில் உள்ள "தீண்டாமை" என்ற பதத்திற்கு என்ன பொருள் அல்லது அதன் அர்த்தம் என்ன என்பதைக் குறித்து தான் நாம் இங்கே
விவாதித்து வருகின்றோமே தவிர, நான் வார்த்தையாக பார்க்கின்றேனா அல்லது நீங்கள் வலியாக பார்க்கின்றீர்களா என்பதல்ல, மேலும் ஒரு வார்த்தையை வலியாக பார்ப்பதும், வேதனையாக உணர்வதும் தங்களது மனம் சார்ந்த பிரச்சினை. .
//சகோ,என்னுடைய தலைப்பு என்னுடைய பார்வையில் சரியே. நான் தலைப்பை மாற்ற சம்மதித்தற்க்கு காரணம் உங்கள் மனது புண்பட கூடாது அல்லது நீங்களும் ஏற்றுக்கொள்ளும்படி ஒரு தலைப்பை வைப்பதில் தவறில்லை என்பதால் தான். உங்களுக்கு மரியாதை கொடுக்கவேண்டும் என்ற எண்ணமே ஒழிய என் தலைப்பு தவறாக உள்ளது என்று பொருள் அல்ல.//
தலைப்பு தங்களது பார்வையில் சரியாக இருக்கலாம், ஆனால் தலைப்பிற்கும் பதிவு சொல்லும் செய்திக்கும் சம்பந்தமே இல்லை என்பதை கடந்த பின்னூட்டங்களில் மிகத் தெளிவாக விவரித்துள்ளேன், இத் தலைப்பினால் என் மனது புண்படுகிறது என நான் எங்கும் குறிப்பிடவில்லை எனக்கு மரியாதை தர முன்வந்த தங்களது பெருந்தன்மைக்கு மிக்க நன்றி சகோ.
என்றும் அன்புடன்
அ. ஹாஜாமைதீன்.
// இருவரும் ஏற்றுக்கொள்ளும்படியான தலைப்பை வைப்பதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. உங்களுக்கு சரியென தோன்றும் தலைப்பை பரிந்துரைப்பதும் விட்டுவிடுவதும் உங்கள் விருப்பம்.//
பதிலளிநீக்குஎனது விருப்பப்படி தலைப்பை தேர்ந்தெடுங்கள் என உங்களை நான் நிர்பந்திக்கவில்லை, தங்களது பதிவில் நீங்களே சுட்டிக் காட்டிய கீழ்கண்ட வரிகளையே தலைப்பாக தேர்ந்தெடுங்கள் என்று தான் கூறினேன்....
1.//சவுதியில் ஷியா மக்களுக்கு ஏற்ப்பட்டுள்ள அரசியல் தீண்டாமை,//
2.//அரசியல் ரீதியாகவே சவூதி இசுலாமில் இன்று தீண்டாமை தலை விரித்தாடுகின்றது.//
3.//தன்னை இசுலாமிய நாடு என்று கூறிக்கொள்ளும் சவூதி இசுலாமியர்கலையே இரண்டாம் தர குடிமகன்களாக நடுத்துகின்றது. //
அதாவது......
முதன் முதலில் பதிவை படித்து நான் பரிந்துரைத்த தலைப்பு கீழே......
"இசுலாமிய சவுதியில் இரண்டாம் தர குடிமக்கள்" என்ற
தலைப்பையே இட்டிருக்கலாமே சகோ.!
அ.ஹாஜாமைதீன் November 10,2012 1:52AM
" இசுலாமிய சவுதியில் இரண்டாம் தர குடிமக்கள்"
" இசுலாமிய சவுதியில் அரசியல் தீண்டாமை"
இந்த இரண்டில் ஏதாவது ஒன்றை தலைப்பாக வைத்திருக்கலாமே?
அ.ஹாஜாமைதீன் November 21, 2012 1:22AM
இதுவரை இத்தலைப்புகளை தாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லையே சகோ.
என்றும் அன்புடன்
அ. ஹாஜாமைதீன்.
// மற்றபடி உங்களிடம் பேசியதில் எனக்கு மகிழ்ச்சி. என்ன உங்களை திருப்திபடுத்த முடியவில்லை அல்லது உங்களுக்கு புரிய வைக்க முடியவில்லை என்று சிறு வருத்தம் உள்ளது.//
பதிலளிநீக்குஒரு வார்த்தைக்குறிய அர்த்தத்தை புரிந்து கொள்வதற்காக நாம் பல பின்னூட்டங்கள் வாயிலாக உரையாடியதில் சந்தோசமே, பாமரத் தமிழனும் எளிதில் புரிந்து கொள்ளும் ஒரு சொல்லை, பதிவுலகத் தமிழனுக்கு விளங்க வைக்க வேண்டும் என்ற எனது முயற்ச்சிக்கு பலன் ஏதும் இல்லை என்றாலும், பதிவையும் நமது பின்னூட்டங்களையும் படிக்கும் வாசகர்கள் புரிந்து கொள்வார்கள்.
என்றும் அன்புடன்
அ. ஹாஜாமைதீன்.
வாங்க சகோ அ. ஹாஜாமைதீன் , :)
நீக்குதற்போதைய தலைப்பு தங்களுக்கு ஏற்ப்புடையதாக இருக்கும் என நினைக்கின்றேன். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. தொடர்ந்து உங்கள் வருகையை எதிர்பார்க்கிறேன். இன்னும் ஒரு மாதத்தில் ஒரு இசுலாமிய பதிவிடலாம்.
என்றும் அன்புடன்
இராச.புரட்சிமணி
சகோ இராச.புரட்சிமணி அவர்களுக்கு,
பதிலளிநீக்கு//தற்போதைய தலைப்பு தங்களுக்கு ஏற்ப்புடையதாக இருக்கும் என நினைக்கின்றேன். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. தொடர்ந்து உங்கள் வருகையை எதிர்பார்க்கிறேன். இன்னும் ஒரு மாதத்தில் ஒரு இசுலாமிய பதிவிடலாம்.//
நிச்சயமாக இல்லை, பாதி கிணறு தாண்டியது போல.... முழுமையான தலைப்பாக இல்லை என்பதுதான் எனது கருத்து, தங்களது புதிய பதிவை ஆவலுடன் எதிர்பார்கின்றேன்.
என்றும் அன்புடன்
அ. ஹாஜாமைதீன்.
// இசுலாமிய சவுதியில் (அரசியல்) தீண்டாமை இல்லையா? //
பதிலளிநீக்குதலைப்பைப் பார்த்து சிரிப்பை அடக்க இயலவில்லை சகோ, அரசியலை அடைத்து விட்டீர்களே ஏன்? எனக்காக தலைப்பை மாற்றியது போல் "பாவ்லா" காட்டியாச்சு, அடைப்புக்குள் உள்ள அரசியலை படிக்காமல் விட்டால் தங்களது பழய தலைப்பும் ஆச்சு, ஆக ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.....
தலைப்பை கானும் போது எனது கோரிக்கையை முழு மனதுடன் ஏற்றுக் கொள்ள தங்களது மனம் ஒப்பவில்லையோ என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது, காரணம் பதிவின் சாராம்சமே அரசியல் தீண்டாமையைப் பற்றியதுதான் ஆனால் அடைப்புக்குறி இட்டதன் மூலம் மையக் கருத்தை நீர்த்துபோக வைத்து விட்டீர்கள் ஆகையால் இந்த அடைப்புக் குறிக்கு அவசியமே இல்லை சகோ.
இயலுமென்றால்.....
இசுலாமிய சவுதியில் அரசியல் தீண்டாமை இல்லையா?
என அடைப்பு எதுவுமின்றி தலைப்பை வையுங்கள்.....
தங்களால் இயலாது எனில்.....
பழய தலைப்பையே வைத்து விடுங்கள். பயனில்லாத தலைப்பிற்கு பழய தலைப்பே மேல், இதனால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை சகோ.
என்றும் அன்புடன்
அ. ஹாஜாமைதீன்.
காலதாமதமாக வருவதற்கு மன்னிக்கவும் சகோ,
நீக்குவேலைப்பளு,நேரமின்மை
// பாதி கிணறு தாண்டியது போல...//
//அடைப்புக்குள் உள்ள அரசியலை படிக்காமல் விட்டால் தங்களது பழய தலைப்பும் ஆச்சு, ஆக ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.....//
படிக்காமல் யாரும் விட மாட்டார்கள் கவலையை விடுங்கள். உங்களுக்கு ஒரு மாங்காய் எனக்கு ஒரு மாங்காய் :) ஏதோ என்னால முடிஞ்சது
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ :)