தமிழக அரசே தமிழை புறக்கணித்துவிட்டு தமிழன்னைக்கு கோயில் கட்டுவதால் என்ன பயன்?
தமிழகத்தில் விற்கும் பொருட்களில் பெரும்பாலும் ஆங்கிலத்தில் பெயர் இருந்தாலும் உப்புக்கு சப்பானுக்கு தமிழிலும் பெயர் எழுதுவார்கள். ஆனால் அம்மா உப்பில் உப்புக்கு சப்பான் கூட தமிழ் இருக்கின்றதா என தெரியவில்லை.
அரசு வெளியுட்டுள்ள விளம்பரத்தில் உப்பு பொட்டலங்களில் ஆங்கிலத்தில் மட்டுமே பெயர் தெரிகிறது. ஒருவேளை மறுபுறம் தமிழ் இருக்கின்றதா என தெரியவில்லை. அப்படி தமிழில் பெயர் இருப்பின் அதை முன்னிருத்திதான் புகைப்படங்களை வெளியிடவேண்டுமே தவிர ஆங்கிலத்தை முன்னிறுத்தி அல்ல. தமிழை தமிழக அரசே புறக்கணிப்பதை எக்காலும் ஏற்க்க இயலாது. அரசு இத்தவறை உடனே சரி செய்து கொள்ளவேண்டும்.
அம்மாவின் மலிவு விலை திட்டங்கள் மக்களுக்கு பயனளித்தாலும் தனியார் நிறுவனங்களே மலிவு விலையில் தரமான பொருட்கள் தரும்படி ஊக்கமும் உறுதுணையும் அளித்தால் தொழில் வளம் பெருகும், மக்களும் பயன் பெறுவர். மலிவு விலை திட்டங்கள் மூலமும் அரசு இலாபம் ஈட்டினால் அது அருமை. இருப்பினும் அம்மா உப்பு மக்களுக்கு பயன் தருமா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.