உலகில், நாட்டில் நடப்பவை அச்சத்தையும் வருத்தத்தையும் தருகின்றது. ஒருபுறம் உலகெங்கும் இசுலாமின் பெயரால் குண்டு வெடிப்புகள், போர்கள். மறுபுறம் இந்தியாவில் இந்துமதத்தின், நாட்டுப்பற்றின் பெயரால் வெறுப்புகளை வன்முறைகளை தூண்டும்படியான பேச்சுகள், செயல்பாடுகள்.
மதாவதம் தவறு என்று இங்கே பலர் உணர்ந்துள்ளனர். அதேபோல தேசியவாதம் என்பதும் தவறு என்பதே என்னுடைய கருத்து. மதம் மற்றும் தேசியத்தின் உண்மையான நோக்கம் ஒற்றுமையாக வாழ்வதுதான். இவைகளால் ஒற்றுமைக்கு கேடு வரும்பொழுது ஒன்று அவற்றை சீர்திருத்த வேண்டும் அல்லது தூக்கி எறியவேண்டும்.
கழுத்தில் கத்தி வைத்தாலும் பாரத் மாதா கி ஜே சொல்லமாட்டேன் என்பதும், சட்டம் இல்லையென்றால் பாரத் மாதா கி ஜே சொல்லாதவர்களின் தலையை வெட்டுவேன் என்பதும், பாரத் மாதா கி ஜே சொல்லாதவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை என்பதும் வெறுப்பையும், ஒற்றுமையின்மையையும் உருவாக்கும் பேச்சுக்களே. இவர்கள் உணர்ச்சிவசப்பட்டு பேசியிருந்தால் அதற்காக வருந்தி மன்னிப்புக் கோரி இருக்கலாம். அவ்வாறு செய்யாத பட்சத்தில் இவர்கள் தண்டண்டைக்குரியவர்களே.
தானாகவே வீடியோ தயாரித்து தேசத்திற்கு எதிராக, காஷ்மீர் பிரிவினைக்கு ஆதரவாக குரல் எழுப்பியதாக குற்றம் சாட்டி தேச துரோக சட்டத்தில் கைது செய்வதும் காலம் காலமாக இந்தியாவிடமிருந்து காஷ்மீரை பிரிக்க என்னும் சக்திகளோடு கூட்டணி அமைத்து ஆட்சி அமைப்பதும் அருவருக்கத்தக்க தேசியவாதம் அல்லாமல் வேறு என்ன?
ஒவ்வொரு தனிமனிதனுக்குள்ளும் மனிதம் இருக்கவேண்டும், ஒவ்வொரு தலைவனுக்குள்ளும் மனிதம் இருக்கவேண்டும், ஒவ்வொரு அரசாங்கமும் மனிதமோடு இருக்க வேண்டும். மனிதம் இல்லையென்றால் அங்கே அழிவுதான் இருக்கும்.
மனிதத்தை கட்டி காப்பது நம் ஒவ்வொருவரின் கடமை. இதை நாம் செய்யாவிடில் நாளைய தலைமுறையின் எதிர்காலம் கேள்விக்குறியே. மதவாதத்திற்கும்,தேசியவாதத்திற்கும் மற்றும் எந்த ஒரு பிரிவினை வாதத்திற்கும் உங்கள் நெஞ்சில் இடம் தராதீர்கள். இவற்றிற்கு எதிராக குரல் எழுப்புங்கள். சிந்தித்து செயல்படுங்கள்.
என்றும் மனிதமுடன்
இராச.புரட்சிமணி