என்னுடைய பொங்கல் வாழ்த்து கவிதையில் மொத்தமிழ் வாழ்க என்று எழுதியிருந்தேன். நண்பர் ஒருவர் முத்தமிழை தவறுதலாக மொத்தமிழ் என்று எழுதியுள்ளதாக கூறினார். தவறுதலாக அவ்வாறு எழுதவில்லை. தெரிந்தேதான் மொத்தமிழ் என்று எழுதினேன். முத்தமிழ் இயல், இசை, நாடகம் எனும் மூன்று தமிழைக் குறிக்கும். மொத்தமிழ் என்பது கிரந்த எழுத்துத் தமிழ் தவிர்த்து அனைத்துத் தமிழையும் குறிக்கும்.
-----------------
இயற்கை வாழ்க
இறைவன் வாழ்க
உழவு வாழ்க
உழைப்போர் வாழ்க
மனிதம் வாழ்க
மக்கள் வாழ்க
மொழிகள் வாழ்க
மொத்தமிழ் வாழ்க
மகிழ்ச்சி பொங்க
மங்களம் தங்க
இயற்கைத் திருநாள்
இத்தமிழர் திருநாளில்
இராச.புரட்சிமணியின்
இனிய நல்வாழ்த்துக்கள். 🌞⛈🎋🌾🥥🥕🌽🍇🍊🍎🍛🍲🍚😊