வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

Thursday, April 19, 2012

இந்து மதம் என்றால் என்ன? யார் இந்து?இருப்பதிலேயே மிகவும் சுலபமானதும் சிக்கலானதும் இதற்க்கான பதில்தான். இந்து மதம் என்றால் என்ன அதற்க்கான இலக்கணத்தை வகுப்போமா?

நான் படித்த வரை சிந்து நதிக்கு அப்பால் இருந்தவர்கள் இப்பால் இருந்தவர்களை :) , சிந்து நதியோரம் வசித்தவர்களை ,  அன்றைய அகண்ட பாரதத்தை சேர்ந்தவர்களை இந்து என்று அழைத்தனர். அதாவது ஆரம்பத்தில்  இந்து என்பது மதம் சார்ந்த பெயர் அல்ல. இந்து என்று ஒரு மதமும் அன்று இல்லை. அது நிலப்பரப்பையும் இங்குள்ள  மக்களையும்  குறிக்கும் சொல்லாகத்தான் இருந்து வந்துள்ளது. இது ஒரு வாதம். அனைவருக்கும் தெரிந்த மற்றும் பெரும்பாலானோர் ஒப்புக்கொண்ட வாதம். 

சமஸ்கிருத சொல்லான சிந்து பெர்சியாவில்  இந்து என்று உருமாற்றம் கொண்டது என்பது சிலரின் கருத்து.  அன்றைய அராபியர்கள் அல்-ஹிந்த் என்றே அன்றைய அகண்ட பாரதத்தின்  பகுதியினையும், இங்குள்ள மக்களையும் குறிப்பிட்டுள்ளனர். அராபிய அல்-ஹிந்த் ஐரோப்பிய மொழியில் இந்து என்று உருமாறியது என்பது சிலரின் கருத்து.(மூலம்)
இந்த கருத்துக்களின் அடிப்படையில் தான் மேற்கூறிய  வாதம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. 

இந்த வாதத்தின்படி அன்றைய அகண்ட பாரதத்தில் வாழ்ந்த அனைவரும் இந்துக்கள்.
இந்தியாவில் எந்த மதத்தை சார்ந்தவனாக இருந்தாலும் அவன் வெளி நாட்டவரால் இந்து என்றே அறியப்படான்.

இங்கே இருந்த அனைத்து மதங்களையும் அவன் இந்து மதம் என்று அழைத்துள்ளான். இந்த நிலபரப்பை சார்ந்த அனைவரின் மதங்களும் இந்து மதம் என்று பெயர் பெற்றது  இப்படித்தான்.

சமண புத்த மதங்கள் உருவாக பல காரணங்கள் இருந்தாலும்  வேதங்களும், பிராமணர்களும் ஒரு காரணம். வேதம் வேதம் என்று அதையே கட்டி கொண்டு மனிதத்திற்கு  முக்கியத்துவம் தராமல் இருந்ததால் ஆன்மீகத்திற்கு, மனிதத்திற்கு, உயிர்களுக்கு  முக்கியத்துவம் தரும் சமணமும், புத்தமும் பிறந்தது. 

இன்றைய இசுலாமிய, கிருத்தவ மதவாதிகளும் அன்றைய  பிராமண மதவாதிகள்  போல மனிதத்திற்கு முக்கியத்துவம் தராமல் தங்களுடைய மத புத்தகத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் தருகின்றனர்.

அன்றைய இந்துக்களை மூன்று வகையாக பிரிக்கலாம் (பிரிக்கிறேன்  :) )

1.  வேதங்களுக்கு, உபநிடதங்களுக்கு, மனுவிற்கு  மட்டுமே முக்கியத்துவம் கொடுத்தவர்கள் பிராமணர்கள்.
2. வேதங்களுக்கு எதிராக கிளம்பியவர்கள் சமண, புத்த மதத்தினர் 
3. வேதங்களுக்கு முக்கியத்துவம் தராதவர்களும் , அதற்கு எதிராக கிளம்பாதவர்களும் இவர்களுக்கு  இடையே வாழ்ந்து வந்துள்ளனர்.  இவர்கள் பிராமணர் அல்லாத இதர வர்ணங்களையும், புத்த சமண மதத்தை சாராதவர்களும் ஆவர்.

இந்து என்ற சொல்லானது முதலில் இவர்கள் மூவரையும் குறிக்க பயன்பட்டது.

பிறகு வேதத்திற்கு எதிராக இருந்தவர்களை சமணம்,புத்தம் என்று தனியாக  குறிப்பிட ஆரம்பித்தனர். அதனால் மீதம் இருந்த இரண்டு  பிரிவினரும் தொடர்ந்து இந்துக்கள் என்றே அழைக்கப்பட்டனர் ...அழைக்கப்படுகின்றனர்.

தொடரும்......................
தமிழர்களின் நிலையையும் , இந்து மதத்திற்கு இலக்கணத்தையும் அடுத்த பதிவில் காண்போம் 

18 comments:

 1. நல்ல வரலாறு நண்பா

  தொடருங்கள் பதிவு சுவாரஷ்யம்

  ReplyDelete
  Replies
  1. தங்களுடைய கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி நண்பா :)

   Delete
  2. Nanbara thangal eduthu konda muyarchium vegamum paratta thakkathu anal neenga sonna sila karuthukkal othukolla koodiathaga illai.

   vedam enbathai oru silaraithavira yarum muludhaga padithathum illai purindhu kondathum illai.

   oru eduthukkatirku vedham enbadu (a+b)2 a + b hole square endru vaithu kondal ithai puriya vaikka itharku kanithamum therinthu irukka vendum english m therindu irukka vendum.
   athai viduthu kanitham matum therintha oruvano illai angilam mattume therintha oruvano irunthal kulappam matume minjum.
   thangal thodarbu kolla virumbinal thiruhari1981@yahoo.co.in

   Delete
  3. Nanbara thangal eduthu konda muyarchium vegamum paratta thakkathu anal neenga sonna sila karuthukkal othukolla koodiathaga illai.

   vedam enbathai oru silaraithavira yarum muludhaga padithathum illai purindhu kondathum illai.

   oru eduthukkatirku vedham enbadu (a+b)2 a + b hole square endru vaithu kondal ithai puriya vaikka itharku kanithamum therinthu irukka vendum english m therindu irukka vendum.
   athai viduthu kanitham matum therintha oruvano illai angilam mattume therintha oruvano irunthal kulappam matume minjum.
   thangal thodarbu kolla virumbinal thiruhari1981@yahoo.co.in

   Delete
  4. Hi Hariharan,
   Thanks for your comments. I too agree with what you say about understanding of Vedas. If you have any articles, links share with me. Will kepp in touch when required.
   Thanks

   Delete
 2. நல்லதொரு பதிவை ஆதாரங்களுடன் தந்திருக்கிறீர்கள் நண்பரே.
  //இன்றைய இசுலாமிய கிருத்தவ மதவாதிகளும் அன்றைய பிராமண மதவாதிகள் போல மனிதத்திற்கு முக்கியத்துவம் தராமல் தங்களுடைய மத புத்தகத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் தருகின்றனர்//
  சிறந்த இலகுவாக விளக்கம்.
  ஆனாலும் அந்த காலத்து கிருத்தவ மதவாதிகள் பிராமண மதவாதிகள் இன்றைக்கும் இருக்கும் இசுலாமிய மதவாதிகளவிற்கு மோசமாக இருந்திருப்பார்கள் என்னால் நம்ப முடியல்ல.

  ReplyDelete
  Replies
  1. வாங்க thequickfox :),
   அன்றைய பிராமணர்கள் செய்த ஒரே தவறு சடங்குகளுக்கும், சம்பிரதாயங்களுக்கும் அதீத முக்கியத்துவம் கொடுத்ததாகத்தான் இருக்கும் என நினைக்கின்றேன்.

   எல்லா மதங்களும் முதலில் மதவாதிகளை திருத்த வேண்டும். அனைத்து மதங்களும் சீர்திருத்த பட வேண்டும். மதங்கள் சீர் திருத்தபடாவிடில் மதவாதிகள் மனிதத்தை, மானுடத்தை அழித்து விடுவர்.
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :)

   Delete
 3. அருமையான தொடக்கம் சகோ!

  இப்போது இந்து மதம் என அறியப்படுவது பல மதங்களில்,நம்பிக்கைகளின் கலவை என்பதே நம் கருத்து.யாருக்கு எப்ப்டி பிடிக்கிறதோ அப்ப்டி வண்ங்கும் சுதந்திரம் உண்டு என்பது நல்ல விடயமே!.

  இதுதான் மத புத்தக்ங்கள் என்ற வரையறுப்பு இல்லை.

  மத புத்தகங்கள் என அறியப்படுபவை பல எளிதில் கற்கும் அளவிற்கு இல்லை.

  சாதி உயர்வு தாழ்வு என்பதும் இந்து மதம் சார்ந்ததா என்பதையும் வரும் பதிவுகளில் கூறுவீர்கள் என நினைக்கிறேன்.

  சாதி வேற்றுமை,ஏமாற்று ஆன்மீகவாதிகள் தவிர்தால் இந்து மதம் என்பது குறைந்த படசம் பிரச்சினை ஏற்படுத்தாத மதமாக இருக்கும்.

  எனினும் அரசியலில் இந்து மத்மாயினும் அல்லது எந்த மதமாயினும் கலக்க கூடாது!

  இன்னும் தொடர்ந்து நிறைய விடயம் சொல்வீர்கள் என நினைக்கிறேன்.

  நன்றி

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ சார்வாகன் :),
   நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை. இன்றைய இந்து மதத்தில் இருக்கும் சுதந்திரம் எந்த மதத்திலும் இல்லை.
   ஜாதியை பற்றி கண்டிப்பாக எழுதுகிறேன்.
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ :)

   Delete
 4. நண்பரே, நல்ல தொடராக இருக்கும் என நம்புகிறேன்,

  மதம் என்பதின் வரையறைக்குள் இந்து மதம் வருமா? என்ற கேள்வியையும் கேட்க வேண்டும். ஒரே கடவுள், தூதுவர், புனிதபுத்தகம், கேள்வியே கேட்காமல் சொன்னப்படி நடப்பது, நியாய தீர்ப்பு நாள், உலக அழிவு, சொர்க்கம் நரகம் என்ற கட்டுகோப்பான வரையறைகுள் இந்து மதத்தை அடக்க முடியாது.

  இந்து மதத்தை ஒரு விதத்தில் ஆன்மீகம் என்று சொல்லலாம். வாழ்க்கைமுறையாகவும் எடுத்துக்கொள்ளலாம். எல்லா விதமான எண்ணங்களுக்கு வழிவகைகளுக்கும் அனுமதிக்கிறது. இந்து என்ற பரந்த சொல்லுக்கு சமணமும் புத்தமும் வந்துவிடுகின்றது. தற்போது இந்து என்பதற்கு இந்த பரந்த அர்தத்தை மறைத்து அது பிராமணீயிம் என்று மாற்று மதத்தினர்தான் இந்து மதத்தினரை விட நிலை நாட்ட முனைப்பாக இருக்கின்றார்கள். ஏனென்றால் பிராமணீயத்தின் அசிங்கம் அந்த நிலையில் இருக்கின்றது.

  தொடருங்கள், விடையளியுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க நரேன் நண்பா :),
   // தற்போது இந்து என்பதற்கு இந்த பரந்த அர்தத்தை மறைத்து அது பிராமணீயிம் என்று மாற்று மதத்தினர்தான் இந்து மதத்தினரை விட நிலை நாட்ட முனைப்பாக இருக்கின்றார்கள்.//
   இதுவெலாம் மத மாற்றத்திற்காக மதவாதிகள் செய்யும் சதி வேலைகள். இதில் திராவ்டியார்கள் மற்றும் கம்யூனிஸ்ட்களின் பங்கை குறைத்து மதிப்பிட முடியாது.

   எல்லா மதத்திலும் சிந்திக்க தெரிந்தவர்கள், மனிதத்தை மதிக்க தெரிந்தவர்கள் வந்துவிட்டார்கள். இவர்களால் மதம் என்பது காலப்போக்கில் அழியும். இவர்களை மதவாதிகள் அழித்துவிடாமல் காப்பது மனிதத்தை நேசிப்பவர்களின் தலையாய கடமையாகும்.

   //ஏனென்றால் பிராமணீயத்தின் அசிங்கம் அந்த நிலையில் இருக்கின்றது.//
   அன்று இருந்த நிலையில் இன்று பிராமணியமும், பெரும்பாலான பிராமணர்களும் இல்லை என்பதே உண்மை.
   http://www.tamilhindu.com/ இந்த தளத்தில் சில கட்டுரைகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கின்றேன்.
   இத்தளத்தை பரிந்துரைப்பதால் இந்து மதத்தை நான் பரிந்துரைப்பதாக என்ன வேண்டாம். மதங்களற்ற சமுதாயத்தை நோக்கியே எனது இலக்கு.
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா :)

   Delete
  2. @நரேன், ”இந்து மதத்தை ஒரு விதத்தில் ஆன்மீகம் என்று சொல்லலாம். வாழ்க்கைமுறையாகவும் எடுத்துக்கொள்ளலாம்.”
   நண்பரே ”எடுத்துக்கொள்ளலாம்” அல்ல ஆன்மீகம் தான் இந்து மதம். அதன் குறிக்கோளே அதுதான்.

   Delete
 5. //எல்லா மதத்திலும் சிந்திக்க தெரிந்தவர்கள் மனிதத்தை மதிக்க தெரிந்தவர்கள் வந்துவிட்டார்கள். இவர்களால் மதம் என்பது காலப்போக்கில் அழியும். இவர்களை மதவாதிகள் அழித்துவிடாமல் காப்பது மனிதத்தை நேசிப்பவர்களின் தலையாய கடமையாகும்.//
  அருமையான உண்மைகள் நண்பா.ஆனால் ஒரு மிக பெரிய குறை மன வருத்தம். சிந்திக்க தெரிந்தவர்கள் மனிதத்தை மதிக்க தெரிந்தவர்கள் தமிழர்களில் இஸ்லாமை பின்பற்றுபவர்களிடம் மிக குறைந்தளவில் இருப்பது மிகவும் அவமான விடயம்.மதத்தை தூக்கயெறிந்து மனிதம் கதைக்கும் பாக்கிஸ்தான்காரனையும், துனேஷியகாரனையும்(அரபு) கண்டிருக்கிறேன்.தமிழகத்தில் காண முடியல்ல.செங்கொடி போன்ற தமிழ் சகோதரங்களுக்கு தலைவணங்குகிறேன்.
  -------------------------------
  புரச்சிமணி, நரேன் நண்பர்களே நமது சகோதரன் சார்வாகன் தளத்திற்கு என்ன நடந்தது தெரிவியுங்க. நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வாங்க நண்பா :),
   இந்து மதத்தை எப்படி பலர் சீர்திருத்தினார்களோ அதுபோல் செங்கொடியும் இசுலாமியத்தை சீர்திருத்தலாம்.
   அவருக்கு ஏற்பட்ட நிலைமை வருத்தமளிக்கிறது. அவருக்கு எந்த இசுலாமியரும் ஆதரவு அளிக்கவில்லை.
   ---
   நானும் சார்வாகன் சகோ தளத்தை பார்க்க முயற்சித்தேன் என்ன நடந்தது என்று தெரியவில்லை. சீக்கிரம் அவர் வருவார் என நம்புவோம்.

   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா :)

   Delete
 6. விஞஞானம் காலத்திற்கு தக்க வளர்த்துக் கொண்டுச் செல்லப்படகிறது. அணுவைப்பிளக்கமுடியாது என்ற கருத்தை மாற்றி அணுவை பிளந்துகாட்டிய விஞ்ஞானியை உலகம் வரவேற்றது. அணுவை பிளக்க முடியாது என்ற விஞ்ஞானியை முட்டாள் என்று இழிவு படுத்தவில்லை. ஒவ்வொரு விஞ்ஞானியும் விஞ்ஞானத்தை சில படிகள் உயர்த்தி கொண்டு செலகின்றான். வேதியியலின் ,இயற்வியலின்,உயிரியலின் நபி வழிகாட்டி என்று விஞ்ஞானம் எந்த தனி நபரையும் வைத்துக் கொள்ளவில்லை. மனிதர் முக்கியம் அல்ல. கருத்துக்கள்தான் முக்கியம். நெடும் சாலையில் பயணிக்கின்றவனுக்கு திசைகாட்டும் தூண்கள் போன்றவை வேதங்கள். அவைகள் வழிகாட்டும். நாம்தான் பாதையை கடக்க வேண்டும். இறைவன் எல்லையற்றவன். எனவே இறைனை பற்றிய வேதமும் எல்லையற்ற பக்கங்களைக் கொணடதாக இருக்க வேண்டும். விதையானது காற்று,உரம் நீர் போன்றவற்றை எடுத்துக் கொண்டு ஆலமரமாக வேப்பராமாக வளரவதுபோல், அனைத்து புத்தகங்களையும்படித்து எல்லேரரும் பயனடைய வேண்டும் என்கிறார் விவேகானந்தர்.150 ஆண்டை கொண்டாடுகின்றோம்.
  சுவாமிகள் குறித்து நிறைய எழுதலாம்

  ReplyDelete
 7. தோழரே இந்துமதம் குரித்த உங்களுடைய கருத்து தவராக இருக்குமோஎன்று தோன்றுகிரது.அதன்காரனமாக தோழர் எஸ்.டி.விவேகி அவர்கள் வேதமும் இந்துமதமும் என்ற தலைப்பில் பேசிய எம்பி.3யை இங்குபதிவு செய்கிரேன் இதையும் ஒருமுறை கேட்டுவிட்டு பிறகு உங்கள் கறுத்தை கூறுங்கள்....
  http://originalhome.blogspot.com/2011/12/sdviveki.html

  ReplyDelete
 8. தோழரே இந்துமதம் குரித்த உங்களுடைய கருத்து தவராக இருக்குமோஎன்று தோன்றுகிரது.அதன்காரனமாக தோழர் எஸ்.டி.விவேகி அவர்கள் வேதமும் இந்துமதமும் என்ற தலைப்பில் பேசிய எம்பி.3யை இங்குபதிவு செய்கிரேன் இதையும் ஒருமுறை கேட்டுவிட்டு பிறகு உங்கள் கறுத்தை கூறுங்கள்....
  http://originalhome.blogspot.com/2011/12/sdviveki.html

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...