வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

வியாழன், 26 ஏப்ரல், 2012

இசுலாமிய பெண்மணியின் மிரட்டல்களுக்கு பதில் சொல்வோமா?சமீபத்தில் ஒரு இசுலாமிய பெண்மணி சில மிரட்டல்களை விடுத்திருந்தார். அதற்கடுத்து பெண்களை அடிமைபடுத்தும் இசுலாம் என்ற தலைப்பில் இசுலாமில் பெண்கள் அடிமையில்லை என்ற அழகிய பதிவை தந்திருந்தார். அவர் பதிவில் கூறியிருந்தது யாவும் உண்மை என்பதை குரான் வசனங்கள்  மூலமும் ஹதீஸ் ஆதாரங்கள் மூலமும் விளக்கியிருந்தார். இவையாவும் இசுலாமிய நூல்களில்  இருக்கின்றது என்பதில் எந்த மாற்று கருத்தும்  இருக்க முடியாது. அப்புறம் ஏன் இந்த பதிவு என்று நீங்கள் கேட்கலாம். இவையாவையும் 1400 ஆண்டுகளுக்கு முன்பே தந்தது இசுலாம் என்று அந்த பெண்மணி கூறுகிறார். ஆனால் இந்த உரிமைகளை  முதலில் தந்தது இசுலாம் அல்ல இசுலாமிற்கு முன்பே இவை யாவும் அரேபியாவில் இருந்தது. இதை தந்தது இந்து மதம்,இந்திய சிந்தனை  (சரிவிடுங்க இத பத்தி அப்புறம் பார்ப்போம்)  அல்லது சிலையை வழிபட்டவர்கள் வழங்கியது என்ற உண்மையை கூறுவதே இப்பதிவின் நோக்கம். 

அந்த பதிவில் திருமண சம்மதம், மறுமண உரிமை ஆகியவற்றை இசுலாமே தந்ததாக கூறுகிறார். ஆனால் உண்மையில் பெண்களுக்கு விரும்பியவர்களுக்கு திருமணம் செய்யும் உரிமையும், மறுமண உரிமையும் இசுலாமுக்கு முன்பே அரேபியாவில் இருந்தது. 

அதற்கு மறுக்க முடியாத உதரணமாக கதீஜா என்ற பெண்மணியை குறிப்பிடலாம். இந்த கதீஜா என்பவரின் மூன்றாவது கணவர் தான் முகமது நபி அவர்கள். இவர் தான் முகமது நபியை மணமுடிக்க முடிவு செய்கிறார். அவருக்கு ஏற்க்கனவே இரண்டாவது திருமணம் நடந்தது என்பதன் மூலம் மறுமண உரிமை இசுலாமிற்கு முன்பே அரேபியாவில் இருந்தது தெரியவருகிறது.   

இந்த கதீஜா ஒரு மிகப்பெரிய செல்வந்தர். இவர் வியாபாரமும் செய்துவந்துள்ளார். இதன் மூலம் பெண்களுக்கு சொத்துரிமையும் மேலும் பல உரிமைகளும் இசுலாமிற்கு முன்பே அராபியாவில் இருந்தது என்பதை  இது காட்டுகிறது. ஆனால் இன்று சவூதி அரேபியாவில் பெண்களுக்கு கார் ஓட்டும் உரிமை கூட கிடையாது என்பது வருத்தமான விடயம். 

அந்தபதிவில் பெண்கல்வியையும்  இசுலாமே 1400 வருடங்களுக்கு முன்பு தந்தது என்று கூறுகிறார். இசுலாமுக்கு முன்பே அங்கு பெண் கல்வி இருந்ததாகத்தான் தெரிகிறது . கதிஜா கல்வி கற்றிருந்தார்களா   என்று தெரியவில்லை. இருப்பினும் அவர் மிகப்பெரிய அளவில் வணிகம் செய்து வந்ததால்  அவரும் கல்வி கற்றிருக்கலாம் என்றே தோன்றுகிறது.


இசுலாமின் வளர்ச்சிக்கு மிக முக்கியமானவராக கருத்தப்படுபவர் உமர்.இவர் முகமது நபியை கொல்ல நினைத்தவர். இவரின் சகோதரி இசுலாமிற்கு மாறியதை அறிந்து கோபம் கொள்ளும் அவர் சகோதரிய அடித்து விட்டு, குற்றத்தை உணர்ந்து பிறகு நீ ஓதி கொண்டிருப்பதை என்னிடம் காட்டு என்கிறார். அவரின் சகோதரி குரானின் ஒரு அத்தியாத்தின் வசனங்கள்  அடங்கிய தாளை அவரிடம் தருகிறார்.  ("asked his sister to give him what she was reciting. She gave him the paper on which was written the verses of the chapter Ta-Ha." அதை படித்து அதில் மயங்கும் உமர் இசுலாமிற்கு மாறினார் என்று வரலாறு கூறுகிறது.

இதில் கவனிக்க வேண்டியது என்னவெனில் அந்த பெண் ஓதிக்கொண்டிருந்தார் என்பது, அவர் தாளை படித்து கொண்டிருந்தார் என்ற பொருள் தருகிறது. அவர் கல்வி கற்றிருந்தாரா என்பது உறுதியாக தெரியவில்லை அதே நேரத்தில் அவர் கல்வி கற்றிருக்கவும் வாய்ப்புகள் உண்டு என்பதை மறுப்பதற்க்கில்லை.

சில காலங்களுக்கு முன்புவரை இந்தியாவில் நிலவி வந்த உடன்கட்டை ஏறுதல், விதவை  திருமணத்தை எதிர்த்தல் போன்ற தீய விடயங்கள் பண்டைய அரேபியாவில் இருந்ததாக தெரியவில்லை. அராபிய இந்து மதத்தை, இந்திய சிந்தனையை ஏற்று கொண்ட நாடு என்பதை பிறகு பார்ப்போம். இந்தியாவில் இந்த தீய விடயங்கள் எப்பொழுது ஏன் வந்தது என்பதையும் நாம் ஆய்வு செய்யவேண்டும்.

 பண்டைய இந்தியாவில்  பல பெண்கள் அரசர்களை எதிர்த்து போர் புரிந்ததாகவும் வரலாறு உண்டு. 

அந்த காலத்தில் பெண்கள் சகல உரிமைகளோடுதான் இருந்துள்ளனர். தமிழகத்திலும் ஒளவையார் என்ற புலவர் செய்யுள்கள் பல  இயற்றி உள்ளார் என்பதை நாம் அறிவோம்.  பல பெண் பால் புலவர்கள் ஒளவையார் என்ற புனைப்பெயரில் இருந்ததாகவும் படித்த ஞாபகம். 

இன்றும் பெண்களை மையாமாக வைத்து திரைப்படங்கள் வருவதில்லை. ஆனால் அன்றே மணிமேகலை என்ற பெண்ணை மையமாக கொண்டு காப்பியம் படைத்தவன் தமிழன். அந்த பெண்ணிற்கு மதம் மாறும் உரிமையும், சந்நியாச வாழ்வை ஏற்கும் உரிமையும் இருந்தது.  இந்தியாவை, தமிழகத்தை பொறுத்த வரை பெண்கள் அடிமை பட காரணம் ஆணாதிக்கம் என்பதைவிட அந்நிய படை எடுப்புகள் தான் காரணம் என்று நினைக்கின்றேன். 

ஏற்க்கனவே இருந்த உரிமைகளைத்தான் இசுலாம் அங்கீகரிக்கின்றது என்பதன் மூலம் இசுலாமை நான் களங்கப்படுத்துவதாக சகோதரர்கள் என்ன வேண்டாம். உண்மையை நேர்மையான இசுலாமியர்கள்  ஏற்றுக்கொள்வார்கள் என்றே எண்ணுகிறேன். 
இசுலாம் பெண்களுக்கு வழங்கும் இந்த உரிமைகள் போற்றத்தகுந்தது என்பதில்  யாருக்கும் எந்த மாற்று கருத்தும் யாருக்கும் இருக்க முடியாது. 

இப்பதிவில் தவறு இருப்பின், இது இசுலாமியத்தை தவறாக விமர்சனம் செய்வது போல் இருந்ததாலும் சகோதரர்கள் சுட்டிகாட்டுங்கள்.  இப்பதிவில் இருக்கும் விடயங்கள் பெரும்பாலும் இசுலாமியர்கள் அறிந்திருப்பார்கள் என்பதால் தான் நிறைய ஆதாரங்கள் தரவில்லை. எதற்கு ஆதாரம் வேண்டும் என்று  கேட்டால் கண்டிப்பாக தருகிறேன். மீண்டும் கூற விரும்புகிறேன் இப்பதிவின் நோக்கம் நான் உண்மையாக நினைப்பவற்றை கூறுவதுதானே தவிர இசுலாமை விமர்சிப்பது அல்ல.

அனைத்து பெண்களுக்கும் (ஆண்களுக்கும்)  நான் கூற விரும்புவது ஒன்றுதான் உங்கள் குழந்தைகளுக்கு மதத்தை ஊற்றி வளர்க்காமல் மனிதத்தை ஊற்றி வளருங்கள். நீங்கள் மதத்தை ஊட்டி வளர்த்தால்  உங்கள் குழந்தை மதவாதியாக, மனிதவெடிகுண்டாக மாறலாம். நீங்கள் மனிதத்தை ஊற்றி வளர்த்தால் உங்கள் குழந்தை மனிதநேயம் உள்ளவராக, மகாத்மாவாக வரலாம் .  முடிவு உங்கள் கையில். 

52 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. வாங்க உண்மைகளை பரப்பும் ---- ஐயா அவர்களே :),
   ஐயா என் பதிவை பற்றி ஒன்னும் சொல்லவில்லையே ....
   இசுலாமில் பெண்களுக்கு எதிரான, பெண்களை கேவலமாக, அடிமையாக பார்க்கும் வசனங்களை என்னால் மேற்கோள் காட்ட முடியும்.
   கண்ணியம் கருதி நான் மதங்களை விமர்சிப்பதில்லை.
   மதத்தை விமர்சிப்பது, வளர்ப்பது என் நோக்கம் அல்ல...மனித நேயத்தை விதைப்பது, வளர்ப்பது மட்டுமே என் நோக்கம்.
   தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

   நீக்கு
 2. அஸ்ஸலாமு அலைக்கும்,

  தனி மனித விசயங்களுக்கும், சமூக உரிமைகளுக்கும் தெளிவாக(?) வித்தியாசம் உணர்ந்து எழுதப்பட்டுள்ள கட்டுரை. இப்படியே தொடருங்கள். ரொம்ப கஷ்டம். :)

  இந்தியாவில் பெண்களுக்கு சொத்துரிமை 1950-க்களில் தான் கிடைத்தது என்றால், அதற்கு முன்னரே சிலர் தங்கள் பெண்களுக்கு சொத்துக்களை கொடுத்திருந்தார்கள் என்றால் சமூகம் அவர்களுக்கு அந்த உரிமையை வழங்கியதாக அர்த்தம். அப்படித்தானே? அந்த சட்டம் வந்த பிறகு தானே பெண்கள் தங்களுக்கு மறுக்கப்பட்ட உரிமையை அதிகாரமாக கேட்டு பெற முடிந்தது. இல்லை அப்படியான சட்டம் வரவில்லை என்றாலும் மறுக்கப்பட்ட தங்கள் உரிமைகளை பெண்கள் பெற்றிருக்க முடியுமா?

  இப்படித்தான் நீங்கள் இஸ்லாமிய பெண்மணி தளத்தில் கூறப்பட்டுள்ள அந்த விசயங்களை புரிந்து கொள்வீர்கள் என்றால் சொல்லுவதற்கு ஒன்றுமில்லை.

  நல்ல புரிதல் வாழ்த்துக்கள் பிரதர் :) :)

  நன்றி,

  உங்கள் சகோதரன்,
  ஆஷிக் அஹமத் அ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க சகோ Aashiq Ahamed :),
   இசுலாமியம் வந்ததால் தான் அனைத்து பெண்களுக்கும் இது சட்டமாக்க பட்டது என்கிறீர்களா சகோ.
   உண்மைதான் சகோ நான் மறுக்கவில்லை. எனக்கு புரியவைத்தமைக்கு நன்றி. இந்த பதிவின் மூலமும் உங்கள் பின்னூட்டம் மூலமும் இது பலரை சென்றடையும்.
   (நல்ல மனது இருந்தால் சட்டம் இல்லாவிட்டாலும் நல்லது நடக்கும், நல்ல மனம் இல்லையென்றால் சட்டம் இருந்தாலும் தீமையே நடக்கும் என்பதை தாங்கள் ஏற்ப்பீர்கள் என எண்ணுகிறேன். )
   அடிமைப்பெண்களை வைத்திருக்க கூடாது என்று இசுலாம் சட்டம் இயற்றி இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். ஆனால் ஏனோ அதை செய்யவில்லை.அப்புறம் சவுதியில் பெண்கள் கார் ஓட்டகூடாது என்று சொல்கிறார்கள். இவற்றை நீங்கள் ஏற்கிறீர்களா சகோ.
   முடிந்தால் எனக்கு இதையும் புரியவையுங்கள்.
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ :)

   நீக்கு
 3. புரட்சி மணி,

  நல்ல ஆய்வு,ஆனால் எல்லாம் இசுலாம் வந்த பிறகு தான் வந்துச்சுனு சொல்வாங்க.இன்றும் பெரும்பாலான மசூதிகளில் தொழுகைக்கு பெண்களுக்கு உரிமை இல்லை, மத குருவாக பெண்கள் வர முடியாது.மாதா அமிர்தானந்தமயி, அரபிந்தோ ஆசிரம அன்னைப்போல எல்லாம் இசுலாமில் பெண்கள் செயல்பட முடியாது ஆனால் பெண்களுக்கு எல்லா உரிமையும் இருக்குனு கூசாமல் புழுகுவார்கள் :-))

  அடிக்கிற ஆராய்ச்சிமணிய அடிச்சு வையுங்க!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நண்பா, :)
   ஏதோ நமது இசுலாமிய சகோதரர்களால் இசுலாமிய வரலாற்றை படிக்க நேர்ந்தது. அதன் மூலம் தெரிந்த உண்மையை சொல்வது மட்டுமே நமது கடமை.
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :)

   நீக்கு
 4. பிரதர்,

  உங்கள் மீது அமைதி நிலவுவதாக...

  உங்கள் இஸ்லாம் குறித்த பதிவுகள் தொடர்ந்து இப்படித்தான் இருக்கின்றது. முதலில் என்ன சொல்கின்றார்கள் என்பதை தெளிவாக உணர்ந்து கொள்ளுங்கள். புரியவில்லை என்றால் அவர்களிடம் கேளுங்கள். இந்த பதிவில் நீங்கள் சொல்லியுல்லவை எல்லாம் தெரியாதவர்களா அவர்கள்? எனக்கு தெரிந்து மார்க்க ஆசிரியராய் பணிபுரிந்த சகோதரிகள் கூட இஸ்லாமிய பெண்மணி தளத்தில் உண்டு. அவர்கள் கூறியதை சரியாக புரிந்துக்கொண்டிருந்தீர்கள் என்றால் இந்த பதிவிற்கே அவசியம் இருந்திருக்காது. பதிவு போட்டு விட்டு, இப்போது வந்து புரிகின்றது என்கின்றீர்கள். என்னத்த சொல்றது?

  //அடிமைப்பெண்களை வைத்திருக்க கூடாது என்று இசுலாம் சட்டம் இயற்றி இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.// - பலமுறை கேட்கப்பட்ட கேள்வி. அப்படியே இஸ்லாமிய பெண்மணி தளத்திற்கு சென்று இந்த கேள்வியை பின்னூட்டமாய் கேளுங்கள். இது இந்த பதிவில் மைய கருத்தாக இல்லாதது. வேண்டுமென்றால் இத்குறித்து பதிவாக போடுங்கள். அல்லது அவர்கள் போடுவார்கள். இன்ஷா அல்லாஹ்.

  //அப்புறம் சவுதியில் பெண்கள் கார் ஓட்டகூடாது என்று சொல்கிறார்கள். இவற்றை நீங்கள் ஏற்கிறீர்களா சகோ.// - இல்லை. எதிர்க்கின்றேன்.

  //நல்ல மனது இருந்தால் சட்டம் இல்லாவிட்டாலும் நல்லது நடக்கும், நல்ல மனம் இல்லையென்றால் சட்டம் இருந்தாலும் தீமையே நடக்கும் என்பதை தாங்கள் ஏற்ப்பீர்கள் என எண்ணுகிறேன்// - அறியாமை கருத்து. இதற்கு நான் பதில் சொல்ல போனால் இந்த பதிவை திசை திருப்பியதாய் அமையும். முடிந்தால் என் தளத்திற்கு வாருங்கள். அல்லது இதனை மைய கருத்தாய் வைத்து பதிவு போடுங்கள். இன்ஷா அல்லாஹ் வருகின்றேன்.

  இங்கே நீங்கள் உளறிக்கொட்டியத்தை அம்பலப்படுத்தவே வந்தேன். வேலை முடிந்தது. இனி இங்கே எனக்கு வேலை இல்லை.

  நன்றி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க சகோ :),
   1400 ஆண்டுகளுக்கு முன்பே இசுலாம் இந்த உரிமைகளை தந்தது என்று பதிவு போட்ட பெண்கள் இந்த உரிமைகள் இசுலாமிற்கு முன்பே அங்கு இருந்தது என்பதை தெரிவித்திருந்தால் இந்த பதிவிற்கு அவசியமே இல்லை. ஏதோ இசுலாம் தான் இதை கண்டுபிடித்து முதன் முதலில் உலகத்திற்கு அறிமுகபடுத்தியது என்பது போல் இருந்தது அவர்கள் பதிவு.
   //இங்கே நீங்கள் உளறிக்கொட்டியத்தை அம்பலப்படுத்தவே வந்தேன். வேலை முடிந்தது.//
   மற்றவர்களின் கருத்தை நீங்கள் எப்படி மதிக்கிறீர்கள் எனபதை இது காட்டுகிறது. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ :)

   நீக்கு
 5. நீங்கள் என்னத்தை எழுதினாலும் முஸ்லிம்கள் திரும்ப திரும்ப சொன்னதையே தான் சொல்லிக்கொண்டிருப்பார்கள். போனசாக எங்க குரானை முழுவதுமாக படித்துவிட்டு பின்னர் எழுத்து என்று உபதேசம் வேறு செய்வார்கள்.மற்ற மதத்தினரை கண்டபடி அவமரியாதையாக பேசி எழுதி விட்டு உலகில் உள்ள அத்தனை அறிவியல் கண்டுபிடிப்புகளும் குர்ஆனில் இருக்கின்றன என்று வாய் கூசாமல் ஜல்லி அடிப்பார்கள். எத்தனை ஆதாரங்களை காட்டினாலும் அதை பற்றியே பேசாமல் எல்லாமே பொய் என்று பொய் சொல்வார்கள்.நீங்கள் குறிப்பிடும் நேர்மையான முஸ்லிம் என்பதே ஒரு அபத்தமான வார்த்தை. அப்படி இருப்பவர்கள் பின்னூட்டங்கள் எழுதவே வரமாட்டார்கள் என்பதே உண்மை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க காரிகன் :),
   இசுலாமில் உள்ள உண்மைகளை பற்றி எழுதுவது வீண் என்கிறீர்களா? நேர்மையானவர்கள் அங்கும் இருப்பார்கள் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை.
   சரி விடுங்கள் நாம் ஒற்றுமையில் மட்டும் இனி கவனம் செலுத்துவோம். நமக்கு ஏன் இந்த வீண் வேலை.
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்கக நன்றி :)

   நீக்கு
  2. காரிகன் நீங்க சொன்னது என்னத்தை எழுதினாலும் முஸ்லிம்கள் திரும்ப திரும்ப சொன்னதையே தான் சொல்லிக்கொண்டிருப்பார்கள் என்பது உண்மை.

   நீக்கு
 6. Osama என்றொரு படம். அதை பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். என்ன தான் இருந்தாலும் அந்த அளவு கொடுமை இந்து பெண்களுக்கு இல்லை என்பது நிதர்சனம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாருங்கள் மோகனா அவர்களே :),
   நீங்கள் கூறிய படத்தை கண்டிப்பாக பார்க்க முயற்சிக்கிறேன். இறைவனின் பெயரால் பெண்களுக்கு நடக்கும் அநீதியை இறைவன் ஒழிப்பானாக.
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :)

   நீக்கு
 7. தலைப்பே தவறு. என்ன பதிவெழுதுகிறீர்கள்? "இஸ்லாமிய பெண்மணியின் புரட்டல்களுக்கு பதில் சொல்வோமா?" என்று தானே இருக்க வேண்டும்?

  ஒரு வேளை இஸ்லாமும் நேர்மையும் ஆக்ஸிமோரான் என்பதால் அப்படி சொல்ல வில்லையோ?

  இஸ்லாமிய சட்டமே சிறந்தது என்று இந்தியர்கள் அனைவரும் ஒப்புக் கொண்டு, இவர்களுக்கெல்லாம் தனி சிவில் சட்டம் இருப்பது போல தனி இஸ்லாமிய கிரிமினல் சட்டமும் கொண்டு வந்து கல்லால் அடித்து தண்டனை கொடுத்தால் தெரியும் எது சிறந்தது என்று.

  ஒரு லூசு எழுதுகிறது, முல்லா ஓமர் இருக்கும் லிஸ்டில் மோதி இல்லாதது அவருக்கு மூக்குடைப்பாம். இவர்கள் எல்லாம் அறிவை பொச்சில் வைத்துக் கொண்டிருப்பவர்கள். நீங்கள் என்ன சொன்னாலும் பொச்சுக்கு என்ன எட்டுகிறதோ அதுவே அவர்கள் அறிவுக்கு எட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க Senthil Kumaran அவர்களே, :)
   // இவர்களுக்கெல்லாம் தனி சிவில் சட்டம் இருப்பது போல தனி இஸ்லாமிய கிரிமினல் சட்டமும் கொண்டு வந்து கல்லால் அடித்து தண்டனை கொடுத்தால் தெரியும் எது சிறந்தது என்று.//
   அய்யய்யோ வேண்டாம் ஐயா அவர்களுக்கு அந்த கொடுமை நடக்க கூடாது. இறைவா இசுலாமியர்களை காப்பாற்று. இறைவன் கைவிட்டாலும் இசுலாமியர்களை இந்திய சகோதரர்கள் காப்பாற்றிவிடுவார்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு.

   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :)

   நீக்கு
 8. சகோதரர் மணி,

  உங்கள் மீது அமைதி நிலவுவதாக..

  //ஏதோ இசுலாம் தான் இதை கண்டுபிடித்து முதன் முதலில் உலகத்திற்கு அறிமுகபடுத்தியது என்பது போல் இருந்தது அவர்கள் பதிவு//

  இதை தான் சகோ சொல்கின்றேன். உங்கள் புரிதல் தவறு. நீங்களாக ஒன்றை கற்பனை செய்துக்கொண்டு எழுதுவதில் என்ன நியாயம் இருக்கின்றது? அட்லீஸ்ட் இந்த பதிவு எழுதும் முன் இது குறித்து அவர்களிடம் கேட்டு தெளிவு பெற்றிருக்கலாமே?

  //மற்றவர்களின் கருத்தை நீங்கள் எப்படி மதிக்கிறீர்கள் எனபதை இது காட்டுகிறது.//

  சகோ உங்கள் பதிவை விமர்சிக்க அந்த வார்த்தைகளை தவிர வேறு வார்த்தைகள் நினைவிற்கு வரவில்லை. இருப்பினும் அது உங்களை புண்படுத்தி இருந்தால் இறைவனுக்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கின்றேன்.

  நன்றி, இறைவன் நாடினால் எதிர்காலத்தில் பார்ப்போம்..

  உங்கள் சகோதரன்,
  ஆஷிக் அஹமத் அ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க சகோ :),
   //உங்கள் புரிதல் தவறு.//
   என்ன தவறு என்று அனைவருக்கும் புரியவையுங்கள் சகோ.

   //சகோ உங்கள் பதிவை விமர்சிக்க அந்த வார்த்தைகளை தவிர வேறு வார்த்தைகள் நினைவிற்கு வரவில்லை. இருப்பினும் அது உங்களை புண்படுத்தி இருந்தால் இறைவனுக்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கின்றேன். //

   சில நேரங்களில் சில வார்த்தைகள் வருவது இயற்கை.அதற்காக வருந்துவது மனிதத்தன்மை. இருப்பினும் தவிர்க்கும் மனநிலையை அன்பை வளர்க்கும் நல்ல நூல்களை படிப்பதன் மூலமும், தியானம் மூலமும் பெற முடியும். உங்களை புண்படுத்துவதும் என் நோக்கமல் அல்ல. இருப்பினும் இது உங்களை புண்படுத்திருந்தால் என்னுடைய மன்னிப்பையும் ஏற்றுக்கொள்ளுங்கள்.

   //நன்றி, இறைவன் நாடினால் எதிர்காலத்தில் பார்ப்போம்..//
   கண்டிப்பாக சகோ, உங்களது எதிர்க்குரலை மனிதத்திற்கு ஆதரவு குரலாக மாற்ற முயலுங்கள்.
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ :)

   நீக்கு
 9. சகோ புரட்சி மணி!

  உங்கள் புரிதல் எந்த அளவு தவறானது என்பதை பின்வரும் ஆதாரபூர்வமான ஹதீதைப் பார்த்து தெளிவு பெறுங்கள்:

  இஸ்லாத்துக்கு முன்னர் ஜாஹிலிய்யாக் காலம் என்றழைக்கப்படும் மௌட்டீக கால அரேபியாவில் பெண்கள் மிகவும் இழிவானவர்களாகவே கருதப்பட்டனர். அவளது உரிமைகள் பறிக்கப்பட்டன; ஆண்களின் இச்சைகளைத் தீர்த்துக்கொள்ளும் ஒரு கேளிக்கைப் பொருளாகவே கருதப்பட்டு வந்தாள். ஒரே பெண்ணைப் பல ஆண்கள் திருமணம் முடிக்கக் கூடிய ஒரு கீழ்த்தரமான நிலையே காணப்பட்டது. இதனை நபி (ஸல்) அவர்களின் மனைவியான ஆயிஷா (ரலி) அவர்கள் பின்வருமாறு விபரிக்கிறார்கள்:


  “அறியாமைக் காலத்தில் நான்கு வகைத் திருமணங்கள் நடைபெற்றன.


  முதல் வகை, இன்று மக்களிடையே வழக்கிலுள்ள திருமணத்தைப் போன்றதாகும். ஒருவர் மற்றொருவரின் பொறுப்பிலுள்ள ஒரு பெண்ணையோ அல்லது அவருடைய மகளையோ பெண் பேசி ‘மஹர்’ (விவாகக் கொடை) கொடுத்து மணந்து கொள்வார்.


  இரண்டாம் வகைத் திருமணம், ஒருவர் தம் மனைவியிடம் நீ உன் மாதவிடாயிலிருந்து தூய்மையடைந்தவுடன் இன்ன பிரமுகருக்குத் தூதனுப்பி (அவர் மூலம் கருக் கொள்வதற்காக) அவருடன் உடலுறவு கொள்ளக் கேட்டுக் கொள் என்று கூறிவிட்டு அவளுடன் உடலுறவு கொள்ளாமல் அவளை விட்டும் அந்தக் கணவன் விலகியிருப்பான். அவள் உடலுறவு கொள்ளக் கேட்டுக் கொண்ட அந்த மனிதர் மூலம் அவள் கருவுற்றிருப்பது தெரிகின்ற வரை கணவன் அவளை ஒரு போதும் தீண்ட மாட்டான். அந்தப் பிரமுகர் மூலம் அவள் கருத்தரித்துவிட்டாள் எனத் தெரிய வந்தால், விரும்பும் போது அவளுடைய கணவன் அவளுடன் உடலுறவு கொள்வான். குலச் சிறப்பு மிக்க குழந்தை பிறக்க வேண்டுமென்ற அற்ப ஆர்வத்தினாலேயே இப்படிச் செய்துவந்தனர். இந்தத் திருமணத்திற்கு ‘நிகாஹுல் இஸ்திப்ளாஹ்’ (விரும்பிப் பெறும் உடலுறவுத் திருமணம்) என்று பெயர்.


  மூன்றாம் வகைத் திருமணம், பத்துப் பேருக்குக் குறைவான ஒரு குழுவினர் ஓரிடத்தில் ஒன்று கூடி அவர்கள் அனைவரும் ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்வார்கள். அவள் கருத்தரித்துப் பிரசவமாகிச் சில நாட்கள் கழியும்போது, அவர்கள் அனைவரையும் அவள் தம்மிடம் வரச் சொல்வாள். அவர்களில் எவரும் மறுக்க முடியாது. அனைவரும் அவளிடம் ஒன்று கூடுவார்கள். அப்போது அவர்களிடம் ‘நீங்கள் செய்தது உங்களுக்கே தெரியும். இப்போது எனக்குக் குழந்தை பிறந்து விட்டது’ என்று கூறிவிட்டு அவர்களில் ஒருவனை நோக்கி ‘இவன் உங்கள் மகன் இன்னாரே’ என்று தான் விரும்பிய ஒருவரின் பெயரை அவள் குறிப்பிடுவாள். அவ்வாறே குழந்தை அந்த நபருடன் இணையும். அவரால் அதனை மறுக்க முடியாது.


  நான்காம் வகைத் திருமணம், நிறைய மக்கள் ஓரிடத்தில் ஒன்று கூடி ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்வார்கள். தன்னிடம் வரும் யாரையும் அவள் தடுக்க மாட்டாள்.


  இந்தப் பெண்கள் விலை மாதர்களாவர். அவர்கள் தங்களது வீட்டு வாசலில் பல அடையாளக் கொடிகளை நட்டு வைத்திருந்தனர். எனவே அவர்களை விரும்பியவர்கள் அங்கே செல்வார்கள். இந்தப் பெண்களில் ஒருத்திக்குக் கருத்தரித்துக் குழந்தை பிறந்தால் அவளுடன் உடலுறவு கொண்ட அனைவரும் அவளுக்காக ஒன்று கூட்டப்படுவார்கள். அங்க அடையாளங்களை வைத்து தந்தை – பிள்ளையைக் கண்டறியும் நிபுணர்களை அழைத்து வருவார்கள். தாம் தந்தை எனக் கருதிய ஒருவருடன் அந்தக் குழந்தையை அந்த நிபுணர்கள் இணைத்துவிடுவார்கள். அந்தக் குழந்தை அந்தத் தந்தையிடம் சேர்க்கப்பட்டு ‘அவருடைய மகன்’ என்று பெயர் சொல்லி அழைக்கப்பட்டு வந்தது. (அவன் தன் குழந்தையல்ல என்று) அவனால் மறுக்க முடியாது.


  சத்திய மார்க்கத்துடன் முஹம்மத் (ஸல்) அவர்கள் அனுப்பி வைக்கப்பட்ட போது இன்று மக்களின் வழக்கிலுள்ள முதல் வகைத் திருமணத்தைத் தவிர அறியாமைக் காலத் திருமணங்கள் அனைத்தையும் தகர்த்துவிட்டார்கள்” [புகாரி: 5127].

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க சகோ சுவனப்பிரியன் :),
   //உங்கள் புரிதல் எந்த அளவு தவறானது என்பதை பின்வரும் ஆதாரபூர்வமான ஹதீதைப் பார்த்து தெளிவு பெறுங்கள்://
   என்னுடைய புரிதலுக்கு காரணம் நான் குறிப்பிட்டுள்ள ஆதாரங்கள். அதன் மூலம் என்னுடைய புரிதல் சரியானதே என்பது உங்களுக்கும் தெரியும்.தவறு என்றால் கூறுங்கள்.

   நீங்கள் மேற்கோள் காட்டிய ஹதீச்படியும். இருந்திருக்கலாம்.ஆனால் அவற்றில் எந்த திருமணங்கள் மேலோங்கி இருந்தது என்பதையும் விளக்கினால் நலம். இன்றும் கண்ட கண்ட திருமண வாழ்க்கை முறை உள்ளது.ஆதலால் அனைவரும் அப்படித்தான் என்று கூற முடியாது. அந்த காலத்தில் பெரும்பாலான மக்கள் எதை கடைபிடித்தார்கள் என்பதை கொண்டே நாம் முடிவுக்கு வர வேண்டும்.

   இருப்பினும் பெண்ணுக்கு விரும்பியவரை மணக்கும் உரிமையும், மறுமண உரிமையும் இசுலாமிற்கு முன்பே இருந்ததது என்பதை ஏற்ப்பீர்கள் என்றே எண்ணுகிறேன்.
   குரானின் பார்வையில் ஆண் பெண் ஏற்றத்தாழ்வு பற்றி இங்கே பல கேள்விகளை என்னால் கேட்க முடியும்... கண்ணியம் கருதி அவற்றை தவிர்க்கிறேன்.
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ :)

   நீக்கு
  2. @சுவனப்பிரியன், ஐய்யே... அப்போ முகமது பிறந்தது இந்த மாதிரியான உறவுனால் தானா? அந்த காலத்திலேயே (gang bang) இது எல்லாம் இருந்திருக்கிறது என்பது ஆச்சரியமான விஷயம் தான். - - அது சரி இது எல்லாத்தையும் இந்த மாதிரி படைத்தது அல்லா தானே? அவன் தானே இதையெல்லாம் முதலிலேயே தீர்மானித்து அவர்களைப்படைக்கிறான். அப்புறம் எப்படி அவர்களை குறை சொல்ல முடியும்.

   நீக்கு
  3. // ஐய்யே... அப்போ முகமது பிறந்தது இந்த மாதிரியான உறவுனால் தானா? //
   பிறப்பால் அனைவரும் சமம் என்பதை மனதில் வையுங்கள் தமிழன்.
   தங்கள் வருகைக்கு நன்றி :)

   நீக்கு
  4. முகம்மது அவர்களுக்கு 13 மனைவியர்கள் -ஒரு மனைவி ஆயிசாவிற்கு திருமணத்தின்போது 9 வயது ?????????.அல்லா ஒருவனே அவனது தூதர் முகம்மது என்ற கொள்கையை ஏற்றுக் கொளளாத சாதி மக்களை போருக்கு உடபடுத்தி பெரும் நாசம் செய்தவர் முகம்மது.அப்படி போர் நடக்கும் போது எதிர் அணியைச் சேர்ந்தவர்களின் பெண்களை முகம்மது கைப்பற்றினால் அதை படைவீரர்களுக்கு பங்கீட்டுக் கொடுப்பார். கொள்ளை பொருட் மற்றும் பெண்களில் 5% முகம்மது வின் பங்கு. குமுஸ் பெண்கள் என்று அழைக்கப்பட்ட இப்பெண்களோடு உடல் உறவு கொள்ளலாம்.வேலைககாரியாக வைத்துக் கொள்ளலாம். விற்பனை செய்யலாம். குரானில் ”உங்கள் மனைவிமார்களிடமும் யுத்தத்தில் வலது கரம் கைபற்றிய பெண்களிடமும் செக்ஸ் வைத்துக் கொள்ளலாம் என்று இறைவன் முகம்மதுவிடம் கூறுவதாக கதை கட்டியுள்ளார் முகம்மது. முகம்மதுவிற்கு 40 குமுஸ் பெண்கள் -வைப்பாட்டிகள் இருந்தனர்.இறையில்லா இஸ்லாம் என்ற வலைதளத்தில் நிறைய விபரங்கள் உள்ளன.முகம்மது தனது காலத்தில் சிலை வணத்த வழிபாட்டை மட்டும் நீக்கிவிட்டு, அரேபிய மக்களின் கலாச்சார நம்பிக்கைகளை அல்லாவின் கட்டளை- இஸ்லாம்- என்று தவறாக போதனை செய்துவிட்டு உலகில் பெரும் இரத்த களறிக்கு வழி வகுத்துவிட்டு செத்து விட்டார். ஒரு அரேபியனாக வாழ்வது அல்லது அரேபியன் போல் வாழ்வதுதான் சமய வாழ்வா ? ஆன்மீகமா ? இன்று முஸ்லீம்கள் கைகொள்ளும் அனைத்து வழக்கங்களும் அரேபிய மக்கள் கடைபிடித்த பழக்கங்கள்தாமே! வலுத்தவன் மெலிந்தவன் பெண்ணை கைபற்றலாம் என்ற அரேபிய கோத்திர பழக்கத்தை நயவஞசகமாக முகமம்து அல்லாவின் கட்டளை என்று குரானில் சேர்த்தது வரலாற்று மோசடி. பெரும் பாவம்.இந்தியாவில் எனபத்தினி விரம், பிரம்மச்சரியம் என்ற கருத்துக்கள் எல்லாம் இன்றைய அளவில் 7000 ஆண்டுகளுக்குமுன் தோன்றிவிட்டன. முறையாக சமயக்கல்வி இல்லாதது இந்தியாவிற்கு பெரும் தீமையை விளைவித்து வருகின்றது.www.alisena www.anwar sheik, www.faith freedom international ,www.isakoran ஆஅரேபிய கலாச்சாரம் எவ்வளது பிற்போக்கானது என்பதற்கு நிறைய உதாரணம்கிடைக்கும். மகம்மது காலத்து அரேபிய கலாச்சாரத்தை இந்தியாவில் உலகஅளவில் முஸ்லீம்கள் அனைவரும் கடைவிடிக்க வேண்டும் என்பதே வகாபிகளின் சித்தாந்தம். பொட்டுவைப்பது முகத்திற்கு அழகு. கத்தோலிக்க பெண்கள் பொட்டு வைக்கின்றனர். முஸ்லீம் பெண்கள் வைப்பதில்லையே ! ஏன் ? டீ அரேபியாவில் இல்லை எனவே இந்தியாவில் நாங்களும் வைக்க மாட்டோம் என்ற ........ வாதம்தான். வாகாபிகளை ஒழிக்க வேண்டும்.

   நீக்கு
 10. பாம்பே ரெட்லைட் ஏரியாயில் பெரும்பாலும் அவர்களெ..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ராவணன் :),
   கண்ணியமான கருத்துக்களை மட்டும் முன்வைப்போம்.
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :)

   நீக்கு
  2. அவர்களும் நமது சகோதரிகளே, இந்த இஸ்லாமை ஒழித்தால் எல்லாம் சரியாகிவிடும்.

   நீக்கு
  3. காலத்திற்கு ஏற்றார் போல், அனைத்து மதங்களையும் சீர்திருத்த வேண்டும் எனபதே என் கருத்து.
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தமிழன் :)

   நீக்கு
 11. வாங்க பிரதர் ( அப்போ நீங்க கிரிஸ்டியனா-:) ) பு.ம


  டிங்கு டாங்கு...டிங்கு டாங்கு...டிங்கு டாங்கு..............என்று அடிச்சீங்களே ஒரு மணி...
  மிரட்டல்களா?? அது என்ன மிரட்டல்கள்??

  சரி இனிமேல் இந்து மதத்தை பற்றி அது இது என்று எழுதுவதற்கு பதிலாக தமிழ் இந்து தளத்தில் போய் மறுமொழி இட்டு கேள்வி கேட்டு தெளிவுபடுத்திகொள்வார்களா? LOL.

  சரியான கேள்வி கேட்டுள்ளீர்கள். கோவம்தான் பதிலாக வரும். தெளிவான பதில் வந்தால் புரிதலுக்கு நன்றாக இருக்கும்

  பதிவிற்கு நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நண்பர் நரேன் :),

   //வாங்க பிரதர் ( அப்போ நீங்க கிரிஸ்டியனா-:) ) பு.ம//
   நான் மனிதன், son of god, இயற்கையின் அங்கம், இறைவன். நீங்களும் தான். எல்லா உயிர்களும் தான் :)

   //மிரட்டல்களா?? அது என்ன மிரட்டல்கள்??//
   அது சும்மா பாசு
   அவுங்க என்ன சொன்னாங்கனா
   http://www.kuttisuvarkkam.com/2012/04/blog-post.html
   //ஹி..ஹி..ஹி.. அன்பு மிரட்டல் தான் வேறொன்னும் இல்ல! கோச்சுக்காதீங்க... இதெல்லாம் நான் சொல்லமலேயே நீங்க செய்வீங்கன்னு தெரியும் ஹி..ஹி..ஹி... (பின்ன இப்படிலாம் தலைப்பு வைக்கலன்னா எப்பதான் நானும் பிரபல பதிவராவுறது அவ்வ்வ்வ்வ்வ்)//

   ஏதோ என்னால முடிஞ்சது நானும் அவங்கள பிரபல படுத்த சுட்டி கொடுத்து, பதிவு போட்ருக்கேன் :)

   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :)

   நீக்கு
 12. பு.ம. ராசா, தமிழ்மண ஓட்டுபட்டை இல்லாமல், எப்படிங்க டாப் டென்னில் இடம்பிடிச்சிங்க ராசா. You are really a danger boy.-:)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தேவ குமாரன் நரேன் :)
   அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல நண்பா.
   பதிவை மட்டுமே நான் இடுகிறேன் மற்றவை யாமறியேன் :)

   நீக்கு
 13. சகோதரர் நேரமிருந்தால் professor William Montgomery Watt கூறுவதாக விக்கிபீடியா சொல்வதையும் பாருங்கள்.

  At the time Islam began, the conditions of women were terrible - they had no right to own property, were supposed to be the property of the man, and if the man died everything went to his sons. Muhammad improved things quite a lot. By instituting rights of property ownership, inheritance, education and divorce, he gave women certain basic safeguards. Set in such historical context the Prophet can be seen as a figure who testified on behalf of women's rights.

  http://en.wikipedia.org/wiki/Women_in_Arab_societies

  இஸ்லாம் வருவதற்கு முன் பெண்களுக்கு உரிமைகள் இல்லையாம். பின்னர் இஸ்லாம் வந்து தான் பெண்களுக்கு உரிமைகளை தந்ததாம்... :)

  இப்போது மேலே உள்ள என் கமெண்ட்களை பார்த்துக்கொள்ளவும்.

  நன்றி..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க சகோ Aashiq Ahamed :),

   . இசுலாமுக்கு முன்பும் அரேபியாவில் பெண்களுக்கு விரும்பியவரை மணக்கும் உரிமையும், கல்வி உரிமையும் மறுமண உரிமையும் இருந்தது என்பதே என்னுடைய கருத்து. இதை நீங்கள் இல்லை என்று மறுக்க இயலுமா? . பெண்களுக்கு பாதகமான சில விடயங்கள் இருந்ததும் தெரியவருகிறது அதே நேரத்தில் இன்றும் பெண்களுக்கு பாதகமான சில விடயங்கள் தொடர்கிறது எனபதை நீங்கள் ஏற்ப்பீர்கள் என எண்ணுகிறேன்.

   பெண்களின் ஒட்டுமொத்த நிலையை பற்றி இருவேறு கருத்துக்களே நிலவுகின்றன .
   // Many people / writers have discussed the status of women in pre-Islamic Arabia, and their findings have been mixed//
   இசுலாமிற்கு முன்பு பெண்களின் நிலை நன்றாக இருந்தது என்றும்

   //Some writers have argued that women before Islam were more liberated drawing most often on the first marriage of Muhammad and that of Muhammad's parents, but also on other points such as worship of female idols at Mecca.//
   //There were instances where women held high positions of power and authority.//

   இசுலாமிற்கு பிறகு பெண்களின் நிலை சரியில்லை என்றும் தகவல் கிடைக்கின்றது .
   //Other writers, on the contrary, have argued that women's status in pre-Islamic Arabia was poor, citing practices of female infanticide, unlimited polygyny, patrilineal marriage and அதர்//

   இருப்பினும் இந்த தகவல்கள் இசுலாமுக்கு முன்பு அரேபியாவில் பெண்களுக்கு விரும்பியவரை மணக்கும் உரிமையும், கல்வி உரிமையும் மறுமண உரிமையும் இல்லை என்று கூறுவதாக இல்லை. அந்த உரிமைகள் இருந்தது என்றே தகவல்கள் கிடைக்கின்றன.

   அவர் கூறுவதை படித்தேன். அவர் முதலில் என்ன கூறுகிறார் பாருங்கள். //It is true that Islam is still, in many ways, a man's religion.// "இன்றும் இசுலாம் பெரும்பாலான விடயங்களில் ஆண்களின் மதம் என்பது உண்மைதான்" என்று கூறுகிறார். ஏன் இசுலாமை அவர் ஆண்களின் மதம் என்று ஒப்புக்கொள்கிறார். இசுலாமில் பெண்கள் ஆண்களுக்கு அடிமை என்று கூறுகிறாரா அல்லது பெண்களுக்கு அதில் உரிமைகள் மறுக்கப்படுகிறது என்று கூறுகிறாரா அல்லது ஆண்களைவிட பெண்களுக்கு உரிமைகள் குறைவு என்று கூறுகிறாரா அல்லது இசுலாம் ஆண்களுக்கு மட்டுமே சாதகமான மதம் என்று கூறுகிறாரா என்பதை உங்களுது சிந்தனைக்கே விட்டுவிடுகிறேன்.

   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :)

   நீக்கு
  2. //இசுலாமிற்கு பிறகு பெண்களின் நிலை சரியில்லை என்றும் தகவல் கிடைக்கின்றது//
   மன்னிக்கவும் "இங்கே இசுலாமிற்கு முன்பு பெண்களின் நிலை சரியில்லை என்ற தகவலும் கிடைக்கின்றது என்று வரவேண்டும்.

   நீக்கு
 14. சகோ ஆஷிக்!

  //இஸ்லாம் வருவதற்கு முன் பெண்களுக்கு உரிமைகள் இல்லையாம். பின்னர் இஸ்லாம் வந்து தான் பெண்களுக்கு உரிமைகளை தந்ததாம்... :)

  இப்போது மேலே உள்ள என் கமெண்ட்களை பார்த்துக்கொள்ளவும்.

  நன்றி..//

  புரட்சி மணி என்ற இந்த பதிவருக்கு இஸ்லாம் வந்துதான் பெண்களுக்கு உரிமை கிடைத்தது என்ற உண்மை நன்றாகவே தெரியும். இப்படி ஒரு தலைப்பு வைத்தால்தான் இவர் பதிவை படிக்க ஆட்கள் வருகிறார்கள். எனவே புரட்சி மணி பதிவை எல்லாம் சீரியஸாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.

  :-)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க சகோ சுவனப்பிரியன் :),
   ///////சகோ ஆஷிக்!

   //இஸ்லாம் வருவதற்கு முன் பெண்களுக்கு உரிமைகள் இல்லையாம். பின்னர் இஸ்லாம் வந்து தான் பெண்களுக்கு உரிமைகளை தந்ததாம்... :)

   இப்போது மேலே உள்ள என் கமெண்ட்களை பார்த்துக்கொள்ளவும்.

   நன்றி..///////////

   இரண்டுபேருமே நகைச்சுவை மன்னர்கள் போல :)
   பெண்ணுக்கு விரும்பியவரை மணக்கும் உரிமையும், மறுமண உரிமையும் இசுலாமிற்கு முன்பு அராபியாவில் இல்லை என்பதை நீங்கள் நிரூபித்து விட்டு சிரிங்களேன் :)

   //புரட்சி மணி என்ற இந்த பதிவருக்கு இஸ்லாம் வந்துதான் பெண்களுக்கு உரிமை கிடைத்தது என்ற உண்மை நன்றாகவே தெரியும்.//
   இசுலாமிற்கு முன்பும் இந்த உரிமைகள் இருந்தது என்றுதான் நான் கூறுகிறேனே தவிர இந்த உரிமைகளை இசுலாம் தரவில்லை என்று நான் கூறவில்லை.

   சகோ சுவனப்பிரியனுக்கு இன்றும் பெண்களுக்கு எதிராக இருக்கும் இசுலாமிய விடயங்களை பற்றி நன்றாக தெரியும். இருப்பினும் அவர் ஏற்றுக்கொள்ளமாட்டார் ஏன்னா அதாங்க தொழில் தர்மம் :)

   //இப்படி ஒரு தலைப்பு வைத்தால்தான் இவர் பதிவை படிக்க ஆட்கள் வருகிறார்கள்.//

   இசுலாமிய பெண்மணி இப்படி தலைப்பு வைக்கலாம் புரட்சிமணி வைக்ககூடாதா என்ன சகோ :)

   //எனவே புரட்சி மணி பதிவை எல்லாம் சீரியஸாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.////
   என்பதிவின் நோக்கம் உங்களை சீரியஸா ஆக்க அல்ல பிறரை சிந்திக்க வைப்பதே சகோ :)

   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ :)

   நீக்கு
 15. பிரதர் பு.ம.

  ஒரே குழப்பம். நம்ம சகோக்கள் சொல்றத பார்த்தா முஹம்மது அரபிக்கு மட்டும்தான் சட்டம் போட்டிருக்கிறார் போல. இல்லை அல்லாவுக்கு மற்றவர்கள் இருப்பது தெரியவில்லை போலும்.

  வஹி வந்து இறைவன் வார்த்தை என்றால் அது பொதுவாகத்தான் எல்லோருக்கும் பொருந்துபடியாக இருக்கவேண்டும். அரபு பெண்களின் மேம்படுத்த அது என்றால் மற்றவர்களுக்கு அது எப்படி பொதுவாகும் பொருந்தும். மற்ற சமூகங்களில் வெவ்வேறாக இருக்கும் அல்லவா.

  அரபியர்களுக்காக சொல்லியிருந்தாலும் மற்றவர்களுக்கும் அது பொருந்தும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது சரியான பதிலா?

  இறைவன் சட்டம் என்றால் அதுதான் சிறந்தது உச்சம் அதை விட சிறந்தது ஒன்றும் இருக்க முடியாது இருக்கவும் கூடாது. இஸ்லாம் பெண்கள் சட்டத்தை விட மற்ற சட்டங்கள் சிறந்தது என்றும் உள்ளது.

  மேற்கோள் காட்டும் வெள்ளைக்கார காஃபிர் என்ன சொல்கிறார் improved quite a lot என்கிறார் அதனால் முழுமையாக improve ஆகவில்லை. testified to on behalf of woman rights என்கிறார். பெண்கள் உரிமைகளை முழுமையாக பெற்றுதந்தார் என்று கூறவில்லை ஒரு சாட்சியாக இருந்தார் என்கிறார்.

  அதனால் முஹம்மது ஒரு இறைதூதர் இல்லை ஒரு சாதாரண மனிதர் என்று விளங்கமுடியும். ஆனால் அவர் இறைதூதர் என்ற நம்புகிறோம் என்றால் அந்த நம்பிக்கைக்கு நாம் மரியாதை செய்வோம். அதுதான் உண்மை என்றால் கேள்விகள் கேட்டு உண்மையா இல்லையா என்று சோதிப்போம். உண்மையாக இருந்துவிட்டால்?????LOL

  குழப்பம் தான், மேலும் மணியடித்து ஆராய்ச்சி செய்யுங்கள். புரட்சி ஓங்குக.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க சகோ நரேன் :),
   // ஒரே குழப்பம்//.
   //குழப்பம் தான், மேலும் மணியடித்து ஆராய்ச்சி செய்யுங்கள்.//
   சகோ குழம்பாதீர்கள். உலகிற்கு இறைத்தூதர்கள் வரவேயில்லை. மனிதர்கள் இறைவனை உணர்ந்தார்கள் அல்லது அந்த பாதையில் சென்றார்கள்.சிலர் தான் உணர்ந்ததன் மூலம் சமுதாயத்தில் மாற்றத்தை ஏற்ப்படுத்தினார்கள் அல்லது ஏற்ப்படுத்த முயன்றார்கள் அவ்வளவே.
   ஆதாம் முதல் மனிதர்களை திருத்த பல இறைத்தூதர்களை அனுப்பி இறைவன் முயற்சிக்கிறார், அவர் அனுப்பிய புத்தகங்களை மக்கள் திருத்திவிட்டனர் என்பதை விட இறைவனின் வல்லமையை வேறு எப்படியும் கேள்விக்குறியாக்க முடியாது. (என்னுடைய வார்த்தைய யாராலும் திருத்த முடியாது என்று குர்ஆனில் வசனமே உண்டு )
   இது இறைவனை எந்த அளவிற்கு சிறுமை படுத்துகிறது என்பதை ஏனோ சிலர் உணர்வதில்லை , சிந்திப்பதில்லை .

   தனிப்பட்ட மதத்தை பற்றி விமர்சனம் செய்ய எனக்கு விருப்பம் இல்லை. பொதுவான விடயங்களை மட்டும் கண்டறிந்து மக்களுக்கு மத்தியில் ஒரு ஒற்றுமையை,அனைவரும் ஒன்றே அனைத்தும் ஒன்றே என்ற புரிதலை உருவாக்குவதே எனது நோக்கம்
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :).

   நீக்கு
 16. அருமையான ஆய்வு கட்டுரை. மறுக்க முடியாத உண்மைகள். நன்றி நண்பரே.பிற மத பெண்கள் போல சாதனைகள் படைக்க வேண்டியவர்கள் பர்தாவுக்குள் முடக்கி வைக்கபட்டுள்ளார்கள்.

  //சமீபத்தில் ஒரு இசுலாமிய பெண்மணி சில மிரட்டல்களை விடுத்திருந்தார்//
  பெண்மணி!! ஹி! ஹி! ஹி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நண்பா thequickfox :),
   //.பிற மத பெண்கள் போல சாதனைகள் படைக்க வேண்டியவர்கள் பர்தாவுக்குள் முடக்கி வைக்கபட்டுள்ளார்கள்//
   அராபிய நாடுகளில் வேண்டுமானால் இந்த நிலை தொடரலாம். (காலம் செல்ல செல் அங்கும் மாற்றம் வரும். வாகபிசம் தொடர்ந்தாள் சந்தேகம்தான்). இந்திய திருநாட்டிலும் மற்ற பிற நாடுகளிலும் இசுலாமிய பெண்களும் சுதந்திரமாக வலம் வருவர் சாதனை பல புரிவர். ஏற்க்கனவே அது ஆரம்பித்துவிட்டது என்றே நினைக்கின்றேன். சானிய மிர்சா, தமிழகத்தில் பாத்திமா பீவி, பர்வீன் சுல்தானா (மிக அருமையான பேச்சளார்) இன்னும் பலர் இருப்பர்.

   ////சமீபத்தில் ஒரு இசுலாமிய பெண்மணி சில மிரட்டல்களை விடுத்திருந்தார்//
   பெண்மணி!! ஹி! ஹி! ஹி//

   ஏன் சிரிக்கிறீர்கள் அவர் ஆணா?

   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :)

   நீக்கு
 17. சகோ புரட்சி மணி,

  அருமையான் பதிவு.எனினும் இஸ்லாமுக்கு முந்தைய அரேபியா & மனிதர்களின் நாகரிகம பற்றி ஒழுங்கான தக்வல்கள் நம்மிடம் இல்லை.இருப்பது எல்லாம் அவர்களை வெற்றி கொண்ட திரு முகமது கால்த்து தகவல்களே.அதிலேயே உங்களால் அவர்கள் சொல்லும் விடயங்களுக்கு எதிராக காட்ட முடிவதை அவர்கள் தவிர அனைவரும் அறிய முடிகிறது.

  வர்லாறு வெற்றி பெற்றவ்ர்களால் எழுதப்படுகிற‌து.பாகிஸ்தான் நாட்டு வரலாற்று புத்தகங்களில் அங்கு இசுலாம வருவதற்கு முன் காட்டுமிராண்டிகள் போல் வாழ்ந்தனர் என்றே சித்தரிக்கிறார்கள்.
  http://en.wikipedia.org/wiki/Pakistani_textbooks_controversy

  அப்போது அவர்களின் எதிரிகளை எப்படி சித்தரிப்பார்கள் என்பதை புரிவது கடினம் அல்ல.

  நாம் நாகரிகம் கருதி பல விடயங்களை ஆதாரம் காட்ட முடியும் என்றாலும் தவிர்க்கிறோம்.ஆனால் அவர்கள் பிற மதங்களை ,இறை மறுப்பாளர்களை விமர்சிக்கும் போது காட்டுவது இல்லை.

  இந்த வஹாபிகளின் விள்க்கம் இப்படித்தான் இருக்கும்

  1.மதத்தில் இருக்கு கெட்ட விடயங்கள் எல்லாம் காட்டரபி செய்த விடயம்.
  [எ.கா அடிமை விடய்ம்,பல் தரமணம்........]

  2.நல்ல விடயம் எல்லாம் இஸ்லாம் மட்டும் கொண்டு வந்தது.

  தமிழ் பதிவுலகில் இஸ்லாம விமர்சிக்கப்படுவதற்கு காரணம் இந்த வாஹாபிய கொள்கையாக்க பிரச்சாரம் மட்டுமே என்பதில் நமக்கு ஐயமில்லை.ஆகவே வாஹாபியியம் என்பது இஸ்லாமியக் கடலின் ஒரு பகுதி. .சூஃபிக்களுடனோ ,ஷியா,அகம்தியா பிரிவினர் இப்படி பிற மதங்களை& நாத்திகர்களை விமர்சிக்காமல் நாகரிகம் காப்பதால் வஹாபிகளின் வினைகளுக்கு மட்டுமே எதிர்வினை ஆற்றுகிறோம் என்பதை வலியுறுத்துவது நல்லது.

  வஹாபிகளின் தந்திரமே அவர்கள் மட்டுமே இஸ்லாம் என்ற போர்வையில் ஒளிவது.இவர்களின் வினைகளுக்கு எதிர்வினைகளை அனைத்து இஸ்லாமியர்களுக்கும் எதிராக காட்டுவது.

  எனினும் பதிவு அருமை.

  நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க சகோ சார்வாகன் :)
   //மதத்தில் இருக்கு கெட்ட விடயங்கள் எல்லாம் காட்டரபி செய்த விடயம்.
   [எ.கா அடிமை விடய்ம்,பல் தரமணம்........]//
   குர்ஆனில் அடிமை விடயம் உள்ளதே அதையும் அவர் தான் செய்தாரா :), பாவம் இவர்கள் இறைவன் எத்தன புத்தகத்த அனுப்பினாலும் இவர்கள் திருத்திவிடுகிறார்கள் :)

   //சூஃபிக்களுடனோ ,ஷியா,அகம்தியா பிரிவினர் இப்படி பிற மதங்களை& நாத்திகர்களை விமர்சிக்காமல் நாகரிகம் காப்பதால் வஹாபிகளின் வினைகளுக்கு மட்டுமே எதிர்வினை ஆற்றுகிறோம் என்பதை வலியுறுத்துவது நல்லது.///

   சகோ நீங்கள் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை.

   //வஹாபிகளின் தந்திரமே அவர்கள் மட்டுமே இஸ்லாம் என்ற போர்வையில் ஒளிவது.இவர்களின் வினைகளுக்கு எதிர்வினைகளை அனைத்து இஸ்லாமியர்களுக்கும் எதிராக காட்டுவது.//

   இதை இசுலாமியர்களே விமர்சிக்க வேண்டும் ஏனோ அவர்கள் (ஒரு சிலரை தவிர) இதை செய்வதில்லை.

   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ :)

   நீக்கு
 18. பதில்கள்
  1. வாங்க சுந்தரி :),
   எனக்கு பயன்படும் என்று இந்த சுட்டி தருகிறீர்களா அல்லது இதை சரியா என பார்க்க வேண்டுமா :)

   தங்கள் வருகைக்கு நன்றி :)

   நீக்கு
 19. நண்பரே , இது என்ன ஒரு அரைகுறை கேள்வி பதில்.?

  பிரபஞ்சம் கடவுளால் படைக்கப்பட்டதா?”
  இதில் ”பிரபஞ்சம் வேறு கடவுள் வேறு அல்ல இரண்டும் ஒன்று தான்” என்ற ஒரு பதிலையும் சேர்த்திருக்கலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க தமிழன் :),
   நல்ல கேள்வி கேட்டுள்ளீர்கள்.
   //இதில் ”பிரபஞ்சம் வேறு கடவுள் வேறு அல்ல இரண்டும் ஒன்று தான்” என்ற ஒரு பதிலையும் சேர்த்திருக்கலாம்.//
   ஆன்மிகம் சொல்வதே சரி என்பதில் அந்த கருத்து அடங்கும் என்று விட்டுவிட்டேன் :) இருப்பினும் நீங்கள் சொன்னபடியும் சேர்த்து இருந்திருக்கலாம் :)
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :)

   நீக்கு
 20. எனக்கு இந்த துலுக்கனுகள நினைக்கும் போது “Aashiq Ahamed” தான் நினைவுக்கு வருவார். எப்படி இந்த மாதிரி ஒரு மூளையை அல்லா அவருக்கு குடுத்திருக்கிறார் என்ற ஆச்சரியம் எப்பவும் வரும். இதில் வேறே அவர் வேதத்தை படித்துவிட்டு அதைப்பிடிக்காமல் முஸ்லீமாக மாறினாராம். அவர் எந்த வேதத்தைப்படித்தார் என்று தெரியவில்லை. ஒருவேளை காமசூத்ரா வேதத்தை சொல்கிறாரா என்று தெரியவில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. /// இதில் வேறே அவர் வேதத்தை படித்துவிட்டு அதைப்பிடிக்காமல் முஸ்லீமாக மாறினாராம். //
   அப்ப அவர் முன்னாள் இந்துவா? அவர யாரு அதெல்லாம் படிக்க சொன்னங்க தியானம் செய்தால் அவரே பல வேதங்களை தரமுடியும் என்பதை ஏன் அவர் உணரவில்லை. தவறு அவருடையது எனபதைவிட பல குடும்பங்களில் ஆன்மீகத்திற்கு முக்கியத்துவம் தருவதில்லை. ஆன்மீக விடயம் தெரியும்பொழுது மதங்களை பற்றிய புரிதல் கிடைக்கும்.

   நீக்கு
 21. இதையும் இந்த பதிவில் சேர்த்திருக்கவேண்டும். எந்த மதம் பெண்களுக்கு இந்த மாதிரியான சுதந்திரம் குடுத்திருக்கிறது?
  1. தனது கணவனை மற்ற மூன்று பெண்களுடன் பகிர்ந்துக்கொள்ளும் உரிமை!!!!!!
  2. தனது கணவன், வேண்டுமானால் சுதந்திரமாக அடிமைப்பெண்களுடன் உறவுகொள்ளும் உரிமை!!!!!!!!!!!!
  3.முழுமையக தனது உடலை/தன்னை ஒளித்துக்கொள்ளும் உரிமை( நிகாப்).
  4.தான் விரும்பியபடி கணவன் தன்னை அடிக்கும் உரிமை.!!!!!!
  5.விவாகரத்து சமயத்தில் தனது குழந்தைக்கு பால் ஊட்ட பணம் பெரும் உரிமை.!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
  ........................
  இது எல்லாம் இஸ்லாம் கொடுத்துள்ள பெண் சுதந்திரம்........
  இனிமேல் இந்த மாதிரியான அரைகுறை பதிவுகளைப்போடவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க தமிழன் :),
   // இனிமேல் இந்த மாதிரியான அரைகுறை பதிவுகளைப்போடவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.//
   விமர்சனம் செய்வதோ குறை கூறுவதோ என் நோக்கம் அல்ல.
   இனிமேல் அரைகுறை பதிவுகள் இடுவதை தவிர்க்க முயல்கிறேன்.
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :)

   நீக்கு
 22. // இந்த உரிமைகளை முதலில் தந்தது இசுலாம் அல்ல இசுலாமிற்கு முன்பே இவை யாவும் அரேபியாவில் இருந்தது. இதை தந்தது இந்து மதம்,இந்திய சிந்தனை (சரிவிடுங்க இத பத்தி அப்புறம் பார்ப்போம்) //

  என்ன சகோ மீண்டும் முருங்க மரம் ஏறியாச்சு போல!!??

  அதெப்படி சகோ, இஸ்லாத்தைப் பற்றி எழுதும் போது சம்பந்தமின்றி சைக்கிள் கேப்பில் இந்து மதத்தை நுலைத்து விடுகின்றீர்கள்?

  நான் எந்த மதத்திற்கும் ஆதரவில்லை, ஆதரவில்லை என எழுதிக் கொண்டே, இந்து மதத்துக்கு ஆதரவாக எவ்வளவு மெனக்கெட்டு முயற்ச்சி செய்கிறீர்கள்.... அதை வெளிப்படையாக செய்யுங்களேன், இதில் தவறேதும் இல்லையே

  குறிப்பு : வாருங்கள் சொந்தங்களே வணக்கம், இறைவனின் /இயற்கையின் படைப்பிலேயே குறைகள் இருக்கும் பொழுது நான் " மாட்டும் "
  " மட்டும் "
  என்று இருக்கவேண்டும்,கவனக் குறைவாக துணைக்கால் இட்டுள்ளீர்கள், தவறை களையுங்கள் சகோ.

  என்றும் அன்புடன்,
  அ. ஹாஜாமைதீன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க சகோ அ. ஹாஜாமைதீன் :),
   //என்ன சகோ மீண்டும் முருங்க மரம் ஏறியாச்சு போல!!??

   அதெப்படி சகோ, இஸ்லாத்தைப் பற்றி எழுதும் போது சம்பந்தமின்றி சைக்கிள் கேப்பில் இந்து மதத்தை நுலைத்து விடுகின்றீர்கள்? //

   :) :) சகோ இசுலாமுக்கு முன்பு இருந்த விடயங்களை பற்றி இந்த பதிவு என்பதால். இசுலாமிற்கு முன்பு அங்கே என்ன மதம் இருந்தது என்ற சந்தேகம் படிப்பவர்களுக்கு வரலாம். அதற்க்காகவே அங்கு அதற்க்கு முன்பு இந்து மதம் அல்லது இந்திய சிந்தனைகளின் தாக்கம் இருந்தது என்று கூற விரும்பினேன். நான் செய்தது சரிதானே சகோ :). நேரம் கிடைக்கும்பொழுது இதுபற்றி ஒரு பதிவு இடுகிறேன்.

   // நான் எந்த மதத்திற்கும் ஆதரவில்லை, ஆதரவில்லை என எழுதிக் கொண்டே, இந்து மதத்துக்கு ஆதரவாக எவ்வளவு மெனக்கெட்டு முயற்ச்சி செய்கிறீர்கள்.... அதை வெளிப்படையாக செய்யுங்களேன், இதில் தவறேதும் இல்லையே //

   சகோ இந்து மதத்தின் தாக்கம், இந்திய சிந்தனைகளின் தாக்கம் உலக மதங்களில் இருந்தது, இருக்கின்றது என்பதையே நான் பதிவு செய்கிறேன்.
   இந்து மதத்திற்கு ஆதரவு என்பதை விட ஆன்மீகத்திற்கு ஆதரவு என்று வேண்டுமானால் என்னைப்பற்றி கூறலாம். இன்று நம்மிடையே இருக்கும் இந்து, கிருத்துவ , இசுலாமிய மதங்களில் இந்து மதத்தில் ஆன்மீகம் இருப்பதால் உங்களுக்கு அவ்வாறு தோன்றலாம். மேலும் உலக மதங்களுக்கு மூலம் இந்து மதம் அல்லது இந்திய சிந்தனைகள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அதை பதிவு செய்வதால் உங்களுக்கு அவ்வாறு தோன்றலாம்.

   கிருத்துவ, இசுலாமிய மதங்களிலும் ஆன்மீகம் மறைத்து வைக்கப்பட்டுள்ளது அதைப்பற்றியும் எதிர்காலத்தில் எழுதுவதாக எண்ணம். இருப்பினும் அதையும் சிலர் அந்த மதத்திற்கு எதிரான பதிவாக எண்ணலாம். அப்படிப்பட்ட எண்ணம் வராதவாறு எழுதவேண்டும் என்பதே என் நோக்கம்.

   //குறிப்பு : வாருங்கள் சொந்தங்களே வணக்கம், இறைவனின் /இயற்கையின் படைப்பிலேயே குறைகள் இருக்கும் பொழுது நான் " மாட்டும் "
   " மட்டும் "
   என்று இருக்கவேண்டும்,கவனக் குறைவாக துணைக்கால் இட்டுள்ளீர்கள், தவறை களையுங்கள் சகோ.//
   திருத்த்திவிட்டேன் சகோ.

   மீண்டும் ஒருமுறை கூற விரும்புகிறேன் வெளிப்படையாக நான் ஆன்மீகத்திற்கு,மனிதத்திற்கு ஆதரவாளன் :) இங்கே ஆன்மீகம் என்பது யோக வழியை குறிக்கும்
   தொடர்ந்து தவறுகளை சுட்டிகாட்டுங்கள்
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ:)
   என்றும் அன்புடன் உங்கள் அன்பு சகோதரன்
   இராச.புரட்சிமணி

   நீக்கு
 23. நபிகளின் முதல் மனைவி கதீஜா!! கிறிஸ்தவள் என்று நினைக்கிறேன். அப்போது இஸ்லாம் இல்லை. நபிகளை கட்டுவதற்கு முன்பு இரண்டு கல்யாணம் செய்து குழந்தையும் பெற்றிருந்தாள். நபிகளை மூன்றாவதாக கட்டியது கிறிஸ்தவ மதத்தின் அடிப்படையில் இருக்கலாம் அல்லது அரபு நாட்டு உரிமையாக இருக்கலாம். அவளுக்கு சொத்துக்கள் ஏராளமாக இருந்தது. அவள் நல்ல அலங்கார உடை அணிந்திருந்தாள். (மூடவில்லை) அவள் வாணிபம் செய்திருந்தாள். இஸ்லாமிற்க்கு முன்பு பெண்களுக்கு அதிக உரிமைகள், சுதந்திரம் இருந்தது. ஆனால் இன்றைய இஸ்லாமிய பெண்களின் நிலை பரிதாபம். பர்தா மற்றும் புர்கா பற்றி ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளவும். thilludurai@gmail.com

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...