சமீபத்தில் ஒரு இசுலாமிய பெண்மணி சில மிரட்டல்களை விடுத்திருந்தார். அதற்கடுத்து பெண்களை அடிமைபடுத்தும் இசுலாம் என்ற தலைப்பில் இசுலாமில் பெண்கள் அடிமையில்லை என்ற அழகிய பதிவை தந்திருந்தார். அவர் பதிவில் கூறியிருந்தது யாவும் உண்மை என்பதை குரான் வசனங்கள் மூலமும் ஹதீஸ் ஆதாரங்கள் மூலமும் விளக்கியிருந்தார். இவையாவும் இசுலாமிய நூல்களில் இருக்கின்றது என்பதில் எந்த மாற்று கருத்தும் இருக்க முடியாது. அப்புறம் ஏன் இந்த பதிவு என்று நீங்கள் கேட்கலாம். இவையாவையும் 1400 ஆண்டுகளுக்கு முன்பே தந்தது இசுலாம் என்று அந்த பெண்மணி கூறுகிறார். ஆனால் இந்த உரிமைகளை முதலில் தந்தது இசுலாம் அல்ல இசுலாமிற்கு முன்பே இவை யாவும் அரேபியாவில் இருந்தது. இதை தந்தது இந்து மதம்,இந்திய சிந்தனை (சரிவிடுங்க இத பத்தி அப்புறம் பார்ப்போம்) அல்லது சிலையை வழிபட்டவர்கள் வழங்கியது என்ற உண்மையை கூறுவதே இப்பதிவின் நோக்கம்.
அந்த பதிவில் திருமண சம்மதம், மறுமண உரிமை ஆகியவற்றை இசுலாமே தந்ததாக கூறுகிறார். ஆனால் உண்மையில் பெண்களுக்கு விரும்பியவர்களுக்கு திருமணம் செய்யும் உரிமையும், மறுமண உரிமையும் இசுலாமுக்கு முன்பே அரேபியாவில் இருந்தது.
அதற்கு மறுக்க முடியாத உதரணமாக கதீஜா என்ற பெண்மணியை குறிப்பிடலாம். இந்த கதீஜா என்பவரின் மூன்றாவது கணவர் தான் முகமது நபி அவர்கள். இவர் தான் முகமது நபியை மணமுடிக்க முடிவு செய்கிறார். அவருக்கு ஏற்க்கனவே இரண்டாவது திருமணம் நடந்தது என்பதன் மூலம் மறுமண உரிமை இசுலாமிற்கு முன்பே அரேபியாவில் இருந்தது தெரியவருகிறது.
இந்த கதீஜா ஒரு மிகப்பெரிய செல்வந்தர். இவர் வியாபாரமும் செய்துவந்துள்ளார். இதன் மூலம் பெண்களுக்கு சொத்துரிமையும் மேலும் பல உரிமைகளும் இசுலாமிற்கு முன்பே அராபியாவில் இருந்தது என்பதை இது காட்டுகிறது. ஆனால் இன்று சவூதி அரேபியாவில் பெண்களுக்கு கார் ஓட்டும் உரிமை கூட கிடையாது என்பது வருத்தமான விடயம்.
அந்தபதிவில் பெண்கல்வியையும் இசுலாமே 1400 வருடங்களுக்கு முன்பு தந்தது என்று கூறுகிறார். இசுலாமுக்கு முன்பே அங்கு பெண் கல்வி இருந்ததாகத்தான் தெரிகிறது . கதிஜா கல்வி கற்றிருந்தார்களா என்று தெரியவில்லை. இருப்பினும் அவர் மிகப்பெரிய அளவில் வணிகம் செய்து வந்ததால் அவரும் கல்வி கற்றிருக்கலாம் என்றே தோன்றுகிறது.
இசுலாமின் வளர்ச்சிக்கு மிக முக்கியமானவராக கருத்தப்படுபவர் உமர்.இவர் முகமது நபியை கொல்ல நினைத்தவர். இவரின் சகோதரி இசுலாமிற்கு மாறியதை அறிந்து கோபம் கொள்ளும் அவர் சகோதரிய அடித்து விட்டு, குற்றத்தை உணர்ந்து பிறகு நீ ஓதி கொண்டிருப்பதை என்னிடம் காட்டு என்கிறார். அவரின் சகோதரி குரானின் ஒரு அத்தியாத்தின் வசனங்கள் அடங்கிய தாளை அவரிடம் தருகிறார். ("asked his sister to give him what she was reciting. She gave him the paper on which was written the verses of the chapter Ta-Ha.") அதை படித்து அதில் மயங்கும் உமர் இசுலாமிற்கு மாறினார் என்று வரலாறு கூறுகிறது.
இதில் கவனிக்க வேண்டியது என்னவெனில் அந்த பெண் ஓதிக்கொண்டிருந்தார் என்பது, அவர் தாளை படித்து கொண்டிருந்தார் என்ற பொருள் தருகிறது. அவர் கல்வி கற்றிருந்தாரா என்பது உறுதியாக தெரியவில்லை அதே நேரத்தில் அவர் கல்வி கற்றிருக்கவும் வாய்ப்புகள் உண்டு என்பதை மறுப்பதற்க்கில்லை.
சில காலங்களுக்கு முன்புவரை இந்தியாவில் நிலவி வந்த உடன்கட்டை ஏறுதல், விதவை திருமணத்தை எதிர்த்தல் போன்ற தீய விடயங்கள் பண்டைய அரேபியாவில் இருந்ததாக தெரியவில்லை. அராபிய இந்து மதத்தை, இந்திய சிந்தனையை ஏற்று கொண்ட நாடு என்பதை பிறகு பார்ப்போம். இந்தியாவில் இந்த தீய விடயங்கள் எப்பொழுது ஏன் வந்தது என்பதையும் நாம் ஆய்வு செய்யவேண்டும்.
பண்டைய இந்தியாவில் பல பெண்கள் அரசர்களை எதிர்த்து போர் புரிந்ததாகவும் வரலாறு உண்டு.
அந்த காலத்தில் பெண்கள் சகல உரிமைகளோடுதான் இருந்துள்ளனர். தமிழகத்திலும் ஒளவையார் என்ற புலவர் செய்யுள்கள் பல இயற்றி உள்ளார் என்பதை நாம் அறிவோம். பல பெண் பால் புலவர்கள் ஒளவையார் என்ற புனைப்பெயரில் இருந்ததாகவும் படித்த ஞாபகம்.
இன்றும் பெண்களை மையாமாக வைத்து திரைப்படங்கள் வருவதில்லை. ஆனால் அன்றே மணிமேகலை என்ற பெண்ணை மையமாக கொண்டு காப்பியம் படைத்தவன் தமிழன். அந்த பெண்ணிற்கு மதம் மாறும் உரிமையும், சந்நியாச வாழ்வை ஏற்கும் உரிமையும் இருந்தது. இந்தியாவை, தமிழகத்தை பொறுத்த வரை பெண்கள் அடிமை பட காரணம் ஆணாதிக்கம் என்பதைவிட அந்நிய படை எடுப்புகள் தான் காரணம் என்று நினைக்கின்றேன்.
ஏற்க்கனவே இருந்த உரிமைகளைத்தான் இசுலாம் அங்கீகரிக்கின்றது என்பதன் மூலம் இசுலாமை நான் களங்கப்படுத்துவதாக சகோதரர்கள் என்ன வேண்டாம். உண்மையை நேர்மையான இசுலாமியர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்றே எண்ணுகிறேன்.
இசுலாம் பெண்களுக்கு வழங்கும் இந்த உரிமைகள் போற்றத்தகுந்தது என்பதில் யாருக்கும் எந்த மாற்று கருத்தும் யாருக்கும் இருக்க முடியாது.
இப்பதிவில் தவறு இருப்பின், இது இசுலாமியத்தை தவறாக விமர்சனம் செய்வது போல் இருந்ததாலும் சகோதரர்கள் சுட்டிகாட்டுங்கள். இப்பதிவில் இருக்கும் விடயங்கள் பெரும்பாலும் இசுலாமியர்கள் அறிந்திருப்பார்கள் என்பதால் தான் நிறைய ஆதாரங்கள் தரவில்லை. எதற்கு ஆதாரம் வேண்டும் என்று கேட்டால் கண்டிப்பாக தருகிறேன். மீண்டும் கூற விரும்புகிறேன் இப்பதிவின் நோக்கம் நான் உண்மையாக நினைப்பவற்றை கூறுவதுதானே தவிர இசுலாமை விமர்சிப்பது அல்ல.
அனைத்து பெண்களுக்கும் (ஆண்களுக்கும்) நான் கூற விரும்புவது ஒன்றுதான் உங்கள் குழந்தைகளுக்கு மதத்தை ஊற்றி வளர்க்காமல் மனிதத்தை ஊற்றி வளருங்கள். நீங்கள் மதத்தை ஊட்டி வளர்த்தால் உங்கள் குழந்தை மதவாதியாக, மனிதவெடிகுண்டாக மாறலாம். நீங்கள் மனிதத்தை ஊற்றி வளர்த்தால் உங்கள் குழந்தை மனிதநேயம் உள்ளவராக, மகாத்மாவாக வரலாம் . முடிவு உங்கள் கையில்.
அனைத்து பெண்களுக்கும் (ஆண்களுக்கும்) நான் கூற விரும்புவது ஒன்றுதான் உங்கள் குழந்தைகளுக்கு மதத்தை ஊற்றி வளர்க்காமல் மனிதத்தை ஊற்றி வளருங்கள். நீங்கள் மதத்தை ஊட்டி வளர்த்தால் உங்கள் குழந்தை மதவாதியாக, மனிதவெடிகுண்டாக மாறலாம். நீங்கள் மனிதத்தை ஊற்றி வளர்த்தால் உங்கள் குழந்தை மனிதநேயம் உள்ளவராக, மகாத்மாவாக வரலாம் . முடிவு உங்கள் கையில்.