யானைக்கு பிடிக்கும் மதத்தைவிட மனிதனுக்கு பிடிக்கும் மதமே மிகவும் அபாயமானது என்று சொல்வதுதான் கும்கி.
காட்டு யானையை விரட்ட தயார்படுத்தப்படும் சிறப்பு யானைக்கு பெயர் தான் கும்கி. காடுகளை நாம் அழித்து கொண்டிருந்தாள் காட்டு யானைகள் வீட்டிற்கு வரமால் எங்கு போகும்?
ஒரு யானை (கொம்பன்) அப்படித்தான் அடிக்கடி ஊர் வயல்வெளிகளில் வந்து மக்களை துவம்சம் செய்து காட்டுக்கு சென்று விடும். அதை விரட்ட கும்கி யானை தேவைப்படுகிறது. கும்கி யானை நேரத்திற்கு கிடைக்காததால் சாதா யானையுடன் நாயகன் சும்மா அந்த ஊருக்கு வருகிறார். அந்த ஊரே இவரை தெய்வமாக பார்க்கிறது. இவருக்கு வேறு மதம் பிடிக்கிறது. கடைசியில் யானை மதம் வென்றதா? நாயகன் மதம் வென்றதா? கொம்பன் அழிக்கப்பட்டானா? என்பதை திரையில் பார்க்கவும்.
படம் எனக்கு பிடித்திருந்தது. படம் முழுக்க இயற்க்கை காட்சிகள். தம்பி ராமையா பாதி படத்தை தாங்கி நிற்கிறார்.நல்ல நடிப்பு. அவருக்கு கொடுக்கப்பட்ட நகைச்சுவை வசனங்களும் அருமை.
நாயகன் பிரபுவின் மகன். பாத்திரத்திற்கு பொருத்தமாக உள்ளார். தந்தங்களை பிடித்து அந்தரத்தில் நின்று யானையின் நெற்றியில் முத்தமிடும் காட்சி அருமையானது. அதில் உடற்பயற்சி கூட செய்யாலாமா? :)
நாயகி கருப்பா இருந்தாலும் கலையா இருக்கா என்று சொல்ற மாதிரி. யானையை பார்த்து அவர் மிரளும் காட்சிகள் அருமை.
பாடல்கள் படத்தோடு பொருத்தமாக உள்ளது.அதனால் தம் அடிக்க யாரும் போகவில்லை.
பிரபு சாலமன் இயக்கம் நன்று. நாயகனை யானையில் அமர்த்தி பின்புறத்திலிருந்து வரும் சூரிய ஒளிக்கதிர்களுடன் தன்னுடைய பெயரை போட்டுக்கொண்டுள்ளார். சினிமாத்தனம் என்றாலும் இயற்கையாக அது நன்றாகவே உள்ளது.யானை சண்டை நல்ல முயற்சி. இன்னும் சிறப்பாக எடுத்திருந்திருக்கலாம்.
இயல்பான,அருமையான படத்தை கொடுத்ததற்காக அவரை நிச்சயம் பாராட்ட வேண்டும்.
மனிதனுக்கு எந்த மதம் பிடித்திருந்தாலும் அது பெரும்பாலும் அனைவருக்கும் தீமையையே தருகிறது.
பிற்சேர்க்கை: ஒரு தலைவனின் மனதில் ஏற்படுகின்ற மாற்றமே சமுதாய மாற்றத்திற்கு வித்திடுகிறது.அதற்க்கு ஒரு வலுவான காரணமும் தேவைப்படுகிறது. இந்தப்படத்தில் சமுதாயத் தலைவனுக்கு அதற்க்கான காரணம் இருக்கின்றது. எனவே அவர் மனதில் மாற்றம் ஏற்ப்படுகிறது என்பதுபோல காட்சியை அமைத்திருக்கலாம். அது காலத்திற்கு ஏற்றார்போல இருந்திருக்கும்.
பிற்சேர்க்கை: ஒரு தலைவனின் மனதில் ஏற்படுகின்ற மாற்றமே சமுதாய மாற்றத்திற்கு வித்திடுகிறது.அதற்க்கு ஒரு வலுவான காரணமும் தேவைப்படுகிறது. இந்தப்படத்தில் சமுதாயத் தலைவனுக்கு அதற்க்கான காரணம் இருக்கின்றது. எனவே அவர் மனதில் மாற்றம் ஏற்ப்படுகிறது என்பதுபோல காட்சியை அமைத்திருக்கலாம். அது காலத்திற்கு ஏற்றார்போல இருந்திருக்கும்.