வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

திங்கள், 10 டிசம்பர், 2012

கமல் என்ன முட்டாளா?

திரைத்துறையில் புத்திசாலியாக கருதப்படும் கமலின் அடுத்த திட்டம் வீட்டுக்குள் திரைப்படம். கமலின் திரைப்படத்தை நேரடியாக தொலைக்காட்சியில் திரையிடும் திட்டம் சில பல   எதிர்ப்புகளையும்,ஆதரவையும் பெற்றுள்ளது.


திட்டம்: திரையரங்குகளில் படத்தை வெளியிடுவதற்கு எட்டு மணி நேரத்திற்கு முன்பு DTH (நேரடி தொலைகாட்சி?)  யில் படத்தை வெளியிடுவது.

நன்மைகள்:
1. ஒரே நேரத்தில் பலரையும் படம் பார்க்க வைக்கலாம்.
2. வெளிநாடுகளிலும் வெளி மாநிலங்களிலும் உள்ளவர்கள் தமிழ் படத்தை உடனடியாக பார்க்கலாம்.
3. பலரும் ஒரே நேரத்தில் படம் பார்ப்பதால் படம் நன்றாக இல்லையென்றாலும் லாபத்தை ஈட்டிவிடும். (எதிர்காலத்தில்) இதுதான் இந்தத்தொழில்நுட்ப்பத்தின் மிகச்சிறந்த  வரப்பிரசாதம்,குர்பானி,அப்பம் :)
4.முதல் காட்சியை பெரும்பாலும் பெண்களால் பார்க்கமுடிவதில்லை. இனி பெண்களும் முதல் காட்சியை பார்க்கலாம்.

தீமைகள்:
1.எதிர்காலத்தில் திரையரங்கத்தொழில் பாதிக்கப்படும். நேரடி தொலைக்காட்சியில் முதலில் படம் பார்க்கலாம் என்றால் நமது தீவிர ரசிகர்கள் இதைத்தான் விரும்புவார்கள்.
2.திருட்டு vcdக்கள் நிறைய உருவாகும். தொலைக்காட்சியில் படம் பார்க்கும் வசதி உள்ளவர்கள் இதை வாங்க மாட்டார்கள்.
3. சிலர்  படத்தை பதிவு செய்து youtube இல் ஏற்ற வாய்ப்புகள் உண்டு. (பதிவு செய்ய முடியாத மாதிரி படத்தை ஒளிபரப்பினால் திருட்டு vcd,youtube பிரச்சனைகளை தவிர்க்கலாம்)

நன்மையா தீமையா?
1. (எதிர்காலத்தில்)இனி நடிகர்களுக்கு பாலபிஷேகம்,பீரபிஷேகம் இருக்காது :)
2.ரசிகர் மன்றம் கலையிழக்கும்.


திரையரங்கு உரிமையாளர்கள் புரிந்து கொள்ளவேண்டியது:
எந்த ஒரு தொழில்நுட்பமும் ஒரு தொழிலை பாதிக்கவே செய்யும். தொழில்நுட்பத்திற்கு தகுந்த மாதிரி தொழிலை மேம்படுத்திக்கொள்வது அல்லது மாற்றிக்கொள்வதுதான் புத்திசாலித்தனம். இன்று தெருக்கூத்து என்பது அழிந்துவிட்டது. இதற்க்கு காரணம்  திரைப்படங்களும் திரையரங்குகளும் தான். அதுபோலத்தான் இதுவும். 
மாற்றம் ஒன்றே மாறாதது என்பதை மனதில் வையுங்கள்.

திரையரங்குகளும் பாதிக்காமல்,இம்முறையையும் செயல்படுத்த கமல் என்ன செய்யலாம்?
எட்டு மணி நேரத்திற்கு முன்பு தொலைக்கட்சியில் ஒளிபரப்புவதற்கு பதிலாக ஒரே நேரத்தில் திரையரங்கிலும் நேரடித்தொலைக்காட்சியிலும் ஒளிபரப்ப வேண்டும்.
 இதானால் இருதரப்பும் பயனடையும். இந்த நிலையில் நமது ரசிகர்கள் திரையரங்கிலும், பொது மக்கள் (பெண்கள்,குழந்தைகள்,வயதானவர்கள்) நேரடித் தொலைக்காட்சியிலும்  படம் பார்பார்கள். 
நேரடித்தொலைக்கட்சி கட்டணம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் பொதுமக்களும் திரையரங்கிற்கு வருவார்கள்.நேரடித்தொலைகாட்சி வசதியில்லாதவர்களும் திரையரங்கிற்கு வருவார்கள்.

இந்த முறையால் திரைத்துறை மேலும் வளர்ச்சியை சந்திக்கும்.

நேரடித் தொலைக்காட்சியின் மூலம் இனி நேரடித் திரைப்படம்  கண்டுமகிழுங்கள் :)

இது ஒரு சோதனை மறுபதிவு 

4 கருத்துகள்:

  1. வணக்கம் சகோ,
    நல்ல அலசல்!!!
    சாதக பாதகங்களை நீங்களே சொல்லி விட்ட்டிர்கள்.எனினும் விஸ்வரூபம் டி டி எச் ல் வெளியிடப் படுவது குறித்து நாம் அனைவரும் சொல்வது கணிப்பு மட்டுமே.எப்படியும் செயல் நடக்கப் போகிறது அதில் கணிப்புகள் எந்த அளவு உண்மையாகும்? நிச்சயம் திரு கமல்ஹாசன் இது குறித்தும்பல ஆய்வுக் கணிப்புகள் செய்த்து இருப்பார்.இது ஒரு புதிய முயற்சி!!.இது எதிர்கால பட வெளியீட்களை எப்படி மாற்றும் என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.

    கனவு மெப்படுமா??
    காரியம் கைகூடுமா?

    டி டி. எச் ல் காண்க!! ஹி ஹி

    காலம் பதில் சொல்லும்!!!

    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ,
      பொறுத்திருந்து பார்ப்போம் :)
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

      நீக்கு
  2. வவ்வால்,
    முதல் கேள்வி: நீங்கள் ஏன் தமிழ்மணத்தில் உங்கள் பதிவுகளை இணைப்பதில்லை. நான் அதைபார்த்து பல பதிவுகளுக்கு செல்வதால் உங்கள் பதிவிற்கு நேரத்திற்கு வர முடிவதில்லை.

    இது ஒரு நல்ல அலசல். இருந்தாலும் நீங்கள் ஒரு இடத்தில் மட்டும் கொஞ்சம் சறுக்கி விட்டீர்கள்.
    நீங்கள் தமிழ் நாடும் எனும் குண்டு சட்டியில் குதிரை ஒட்டுகிறீர்கள். கமல் தமிழ்நாட்டில் மட்டும் இப்படத்தை வெளியிடப்போவதில்லை,இந்தியா முழுவதிலும், உலகம் முழுவதிலும். எனவே நீங்கள் நினைப்பதை விட நிறைய பேர் படம் பார்க்க வாய்ப்பு உண்டு.
    மேலும் இப்படம் தமிழில் மட்டும் வெளியாகவில்லை இந்தி மற்றும் தெலுங்கிலும். எனவே நீங்கள் போட்ட கணக்கைவிட அவர் லாபம் அதிகம் ஈட்டுவர்.
    http://vovalpaarvai.blogspot.in/2012/12/4vishwaroopam-in-dth-release.html

    பதிலளிநீக்கு
  3. திரைப்படத்தைத் தேடி மக்கள் செல்லாமல் மக்களைத்தேடி திரைப்படத்தைக் கொண்டுவரும் அவரது முயற்சி பாராட்டுக்குரியது...மக்கள் பணம் செலவுசெய்யக் கூட தயாராயிருக்கிறார்கள்..ஆனால் தியேட்டருக்கு பிரச்சினையின்றி சென்று திரும்பிவருவதுதான் கேள்விக்குறியாக உள்ளது...அதனால்தான் மக்கள் தியேட்டருக்கு செல்வதில்லை...

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...