இன்றைய நிலையில் உலகில் பேரழிவு ஏற்பட்டு பெரும்பாலான மக்களும் கண்டுபிடிப்புகளும் அழிந்துவிட்டால் என்னவாகும்? மிச்சம் மீதி இருப்பவர்கள் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை முறையை, பயன்படுத்திய பொருட்களை பற்றி எழுதியோ,சித்திரம் வடித்தோ,கதைகளாகவோ கூறி வைப்பார்கள்.
பல நூற்றாண்டுகள் கழித்து அவர்கள் சந்ததியினர் அந்த கதைகளை கேட்கும்பொழுது பாருடா கூகிள் என்ற ஒன்ற வைத்து இவர்கள் பல தகவல்களை நொடிகளில் பெற்றனராம், இடம் விட்டு இடம் செல்ல வானத்தில் பறந்து சென்றனராம், ஒரு இடத்தில் நடக்கும் நிகழ்வை மற்றொரு இடத்தில் இருந்து கண்டார்களாம்,செல் என்னும் ஒன்றை பயன்படுத்தி பல மைல் தொலைவில் உள்ளவர்களுடன் பேசினார்களாம் என்னமா கதை விடுகின்றனர் இவையெல்லாம் வெறும் கட்டுக்கதைகள் என்பார்கள்.
நமது மூதாதையர்கள் வாழ்ந்த வாழ்க்கையை நாம் இப்படித்தான் கூறுகின்றோம் என்றே நான் நினைக்கின்றேன்.
ஆன்மீக வாழ்வை விரும்பாமல் அறிவியலிலும் கண்டுபிடிப்புகளிலும், உலக இச்சைகளிலும் மட்டும் கவனம் செலுத்தியவர்களை மாயன்கள் என்று ஆன்மீக இந்தியர்கள் அழைத்திருப்பார்களோ?
மெய்ப்பொருள் காண்பதறிவு
ஆனால் இங்கே ஒரு பிரச்சினை என்னவென்றால் மாயன்களுக்கு அப்படி வித்தியாசமான பேரழிவு நிகழவில்லை. ஐரோப்பியர் அக்கண்டத்தைக் கைப்பற்றும் வரை அமெரிக்கப் பழங்குடிகளுக்குத் தொடர்ச்சியான வரலாறு இருந்தது. எனவே அவர்களைத் தமிழர்களுடன் தொடர்புபடுத்துதன் நியாயம் எனக்குப் பிடிபடவில்லை.
பதிலளிநீக்குவாங்க கருப்பு,
நீக்குநீங்கள் கூறுவது சரியே
// எனவே அவர்களைத் தமிழர்களுடன் தொடர்புபடுத்துதன் நியாயம் எனக்குப் பிடிபடவில்லை.//
நான் கொடுத்துள்ள கட்டுரைகள் அவர்கள் தமிழர்கள் என்று குறிப்பிடவில்லை. ஆனால் அவர்களுக்கு அறிவியலை கற்றுத்தந்தவர் கிழக்கிலிருந்து வந்த ஒருவர் என்று மாயன்களே கூறுகின்றனர். அந்த நபர் ஒரு தமிழனாகவோ சுமேரியனாகவோ இருக்கலாம் என்பதே ஆய்வின் முடிவு. இங்கே மற்றும் ஒரு ஆச்சர்யம் என்னவெனில் தமிழர்களுக்கும் சுமேரியர்களுக்குமே பல ஒற்றுமைகள் அல்லது தொடர்புகள் உள்ளனவாம்.
பின்வரும் கட்டுரை மாயன்கள் தமிழர்கள் என கூறுகின்றது.ஆனால் அது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. எனக்கு சந்தேகமாகத்தான் உள்ளது.
http://viewzone2.com/ancientturksx.html
Read the book "Chariots of god" you will get the answer.
பதிலளிநீக்குSurely will read. Thanks :)
நீக்கு@Naan Avan Illai Chariots of the Gods என்ற அந்நூலில் பல பிழைகள் இருப்பதை விக்கிபீடியாவில் இருக்கும் சாதாரண கட்டுரையே உணர்த்துகிறது. நீங்கள் அந்த புத்தகத்தைப் படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். அப்படியானால் விக்கிபீடியா கட்டுரையில் Response என்று குறிப்பிடப்பட்டிருக்கும் பகுதிக்கு நீங்கள் அளிக்கும் பதிலை நான் அறிந்து கொள்ளலாமா?
பதிலளிநீக்குசகோ புரட்சிமணி,
பதிலளிநீக்குநல்ல பதிவு. அதுவும் இணைப்பில் பகிர்ந்த பதிவு பல் விடயங்களைக் கூறுகிறது.
மாயன்கள் அறிவியல் முன்னேற்றம் அடைந்து இருக்க்லாம்.மனிதன் ஒரு இடத்தில் வசிக்க ஆரபித்தது 20,000 வருடம் முன்பு என்றாலும், அதிவேக அற்வியல் முன்னேற்றம் இந்த கடந்த 500 ஆண்டுகளில்தான் .
ஆகவே மாயன்களும் அற்வியலில் சில துறைகளாலாவது சாத்னை புரிந்து இருக்க வாய்ப்பு உண்டு.
எனினும் அது எந்த அளவு என்பதற்கான சான்றுகள் அப்பதிவில் உள்ளவை போதாது எனவே கூறலாம்.மாயன்கள் தமிழர்கள் என்பதும் சந்தேகமே!!!
தமிழர்கள் என்பதன் வரையறுப்பாக ஆதிமுதல் காலரீதியாக எதை கொள்ளலாம் சகோ!!!
இனம் சாதி சரியாக அறிவியல் ரீதியாக வரையறுக்க முடியாது என்பதே நமது வாதம்.
உலகம் அழிகிறது,அதற்கு மாற்று ஏற்பாடுகள் என்பதை நான் ஏற்கவில்லை!!
எனினும் இதில் கொஞ்சம் ஆர்வம் வந்து விட்டது. வழக்கம் போல் கொஞ்சம் தேடி முடிந்தால் ஒரு பதிவு இடுகிறேன்.
பகிர்வுக்கு நன்றி!!
வாங்க சார்வாகன்,
நீக்கு//மாயன்கள் தமிழர்கள் என்பதும் சந்தேகமே!!!//
நான் கருப்புக்கு கொடுத்த பதிலை பார்க்கவும்
//தமிழர்கள் என்பதன் வரையறுப்பாக ஆதிமுதல் காலரீதியாக எதை கொள்ளலாம் சகோ!!!//
முதலில் தமிழ் மொழியை பயன்படுத்தியவர்களை கூறலாமா? :) உலகில் முதலில் தோன்றிய மொழி எது? :)
தமிழோ ....இது பற்றி மேலும் ஆராய வேண்டி உள்ளது.
//எனினும் இதில் கொஞ்சம் ஆர்வம் வந்து விட்டது. வழக்கம் போல் கொஞ்சம் தேடி முடிந்தால் ஒரு பதிவு இடுகிறேன்.//
இந்த பதிவின் நோக்கமே இதுதான் சகோ. நிச்சயம் செய்யுங்கள்.பலரும் ஆய்வு செய்யும் பொழுதுதான் உண்மை வெளிவரும்
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :)
எனக்கு தெரிந்து மாயாண்டி தமிழர்தான்:)
பதிலளிநீக்குவாங்க குடுகுடுப்பை
நீக்குமாயாண்டியும் சரி முனியாண்டியும் சரி தமிழர்களே :)
முனி என்றால் முனிவன்,முனிவர்,யோகி.
முனீஸ்வரன் சிவனின் பெயர்.
புத்தருக்கு சாக்கிய முனி என்ற பெயர்.
யூத மதத்திலும் முனி என்ற பெயர் உண்டு.