என் அருமை சகோதரர்களே,நண்பர்களே நாம் உலக நாடுகளை அழிக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது. இந்த நாடுகளை அழிக்க நாம் பரிந்துரைப்பது மனித வெடிகுண்டு அல்ல, மனிதம்.
ஜாதி,மதம்,இனம்,மொழி, நாடு என நாம் பல பிரிவுகளால் பிரிந்து நிற்கின்றோம். இவற்றை நாம் அழிக்காவிட்டால் இவற்றால் மனிதகுலம் அழிவதை நம்மால் தடுக்க இயலாது. இவைகள் வெறும் அடையாளங்களாக இருந்தால் பிரச்சனை இல்லை ஆனால் இந்த அடையாளங்களால் நமக்கு வெறி உண்டாகிறது . ஜாதி வெறி,மத வெறி,இன வெறி,தேச வெறி என்று பல வெறிகளை உண்டாக்க நாம் வழிவகுத்து தந்துள்ளோம்.
ஜாதி பிரச்சனை ஊருக்குள், இந்தியாவிற்குள் பிரச்சனையை உண்டாக்குகின்றது. மதம்,இனம்,நாடு போன்றவை உலக அளவில் பிரச்சனையை உண்டாக்குகின்றது.
வரலாற்றை புரட்டி பார்த்ததால் இனத்திற்காகவும், மதத்திற்காகவும், நாட்டிற்காகவும் தான் பல மனிதர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.என் இனம்,என் மதம், என் நாடு என்ற உணர்வு வெறியாக மாறியதே இதற்க்கு காரணம்.
நாம் அனைவரும் மனிதர்கள் எனும்பொழுது நமக்கு ஏன் இந்த இனம்,மதம், நாடு சார்ந்த வெறிகள்?நமக்கு ஏன் இந்த அடயாளங்கள்?
இனம்,மதம் என்ற அடையாளங்களை மனிதகுலத்தின் நலனுக்காக நாம் அழிக்கவேண்டும்.நாம் அனைவரும் மனிதர்களாக மட்டும் இருக்க வேண்டும் என்பதை மக்களுக்கு போதிக்க வேண்டும்.
இனம்,மதம் ஆகியவற்றை அழித்த பிறகு இன்றைய நிலையில் உள்ள நாடு என்பதையும் நாம் அழிக்க வேண்டும்.
அதாவது இந்தியா என்ற ஒரு நாடு பல மாநிலங்களால் ஆனவை அதுபோல இந்த பூமியும் பல நாடுகளால் ஆனவை. பல மாநிலங்களுக்கும் எவ்வாறு தனித்தனி அதிகாரமும், மத்திய அரசுக்கென்று தனி அதிகாரமும் உள்ளதோ அதைப்போல நாம் உலக அளவில் ஒரு நிர்வாகத்தை உருவாக்கவேண்டும் .
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் தங்களுடைய வருமானத்தை மத்திய அரசாங்கத்தோடு பகிர்ந்துகொள்கின்றது. அதுபோல இப்புவியில் உள்ள அனைத்து நாடுகளும் தங்களுடைய வருமானத்தை பகிர்ந்துகொள்ளவேண்டும். இப்படி பகிர்ந்துகொள்ளும்போழுது உலகில் ஒவ்வொரு வருடமும் பசியால் இறக்கும் ஆறு மில்லியன் குழந்தைகளின் உயிரை நம்மால் காப்பாற்ற முடியும்.
இந்தியாவில் பல மாநிலங்கள் இருந்தாலும் ஒரு மாநிலம் மற்றொரு மாநிலத்தோடு சண்டையிடுவதில்லை, அந்த மாநிலம் நம்மை தாக்குமோ என்ற அச்சம் கொள்வதில்லை . அதுபோல உலக நாடுகள் அனைத்தும் அச்ச உணர்வைவிடும்படி நாம் செய்ய வேண்டும். அவ்வாறு நாம் செய்யும் பொழுது $2,157,172,000,000 பணத்தை நாம் மனிதகுலத்தின் மேன்மைக்காக பயன்படுத்தலாம். நான் கூறிய அந்த தொகை சென்ற ஆண்டு உலக நாடுகளால் ராணுவத்திற்காக செலவிடப்பட்டதாகும்.
உலகத்தை ஒரு நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரும்போழுது எல்லை
பிரச்சனைகளையும் நம்மால் குறைக்க முடியும். ஒரு நாடு மற்றொரு
நாட்டினை தாக்குவதை நம்மால் கட்டுப்படுத்த முடியும்.
பிரச்சனைகளையும் நம்மால் குறைக்க முடியும். ஒரு நாடு மற்றொரு
நாட்டினை தாக்குவதை நம்மால் கட்டுப்படுத்த முடியும்.
இந்தியாவில் உள்ளவர்கள் எப்படி பிற மாநிலங்களுக்கு நினைத்த நேரத்தில் செல்லமுடிகிறதோ அவ்வாறு உலகின் எந்த மூலைக்கும் கடவுச்சீட்டு இல்லாமல் செல்ல முடியும்.
இனம்,மதம் என்ற அடையாளங்களை அழித்து நாடுகளையும் ஒரு நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரும்பொழுது இவை இருப்பவைகளால் கொல்லப்படும் பல பில்லியன் உயிர்களை நம்மால் காப்பாற்ற முடியும்.
உலக நாடுகளை ஒன்றினைக்கும்போழுது சில சிறிய எதிர்ப்புகள் வரத்தான் செய்யும். எதிர்ப்புகளை தாண்டி அவ்வாறு ஒரு நிர்வாகத்தை நாம் அமைக்கும்பொழுது மனிதகுலம் பல பிரச்சனைகளை தவிர்க்க முடியும்,பல நன்மைகளை அடைய முடியும்.
இது நடக்குமா என்பது தெரியவில்லை...ஆனால் இது நடக்க வேண்டும். உலக மக்கள் அனைவரையும் நாம் மனிதம் என்ற ஒரு புள்ளியில் இணைக்க வேண்டும்.
இதெல்லாம் நடந்தா நல்லாத்தான் இருக்கும் ஆனா கனவிலும் இவற்றுக்கு சாத்தியமில்லை என்பதுஎன்னுடைய கணிப்பு. பிரிவுகள் ஏற்படுவதே சுயநலத்தால் தான். அமரிக்கா தன் நாடு நலமாக இருக்க மற்ற நாடுகளை அடிக்கிறது, மதங்கள் ஜாதிகளும் அதே அடிப்படையில் இயங்குகின்றன. இந்தியா ஒரே நாடுதான் அனால் மொழிவாரியாக மாநிலங்களுக்கிடையே பிரிவு இருக்கே? கன்னடர், ஆந்திரா, Kerala மூன்று மாநிலங்களும் தமிழகத்தை வந்சிக்கின்றனவே? அண்ணன் தம்பிகளுக்கு இடையே நாடு, மொழி, சாதி, சொந்தம் என பாகுபாடுகள் இல்லாத போதும் இந்த சுயநலம் இருப்பதால்தானே பங்காளிச் சண்டையே வருது. சுயநலம் ஒருபோதும் ஒழியபோவதில்லை இந்த பிரிவுகளும் ஒழியப் போவதுல்லை.
பதிலளிநீக்கு//இதெல்லாம் நடந்தா நல்லாத்தான் இருக்கும் ஆனா கனவிலும் இவற்றுக்கு சாத்தியமில்லை //
நீக்குஎன் கனவில் ஏற்க்கனவே சாத்தியமாகிவிட்டது :) உலகத்தலைவர்கள் அனைவரும் நினைத்தால் இது சாத்தியமே.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :)
வணக்கம் சகோ,
பதிலளிநீக்குநல்ல பதிவு. என் மனதிலும் இந்த எண்ணம் உண்டு.ஆயினும் இதனை நோக்கிய பயணத்தில் படிப்படியாக மாற்றம் கொண்டுவந்தால் மட்டுமே சாத்தியப் படும். உடனே எதையும் செய்ய முயல்வது எதிர்விளைவுகளையே ஏற்படுத்தும்.
முதலில் க்வனிக்க வேண்டிய விடயம்
1. பொருளாதார அமைப்பு.
உழைப்பின் மதிப்பு வேறுபடுகிறது. உழைத்து உணவு உருவாக்கும் விவசாயியை விட, அதை வாங்கி விற்பவர் பயன் அதிகம், அவ்விலையை ஊக முறையில் கணிப்பவன் அடையும் இலாபம் இன்னும் அதிகம். பணத்திற்கு மாற்றாக ஏதேனும் ஒரு முறை வந்தால் நலமாக் இருக்கும்.
விலங்குகளுக்கு இந்த இசமும் தெரியாது.வலியது எளியதை அடித்து உண்ணும். ஆனால் பசிக்கு அதிகமாக உண்ணாது. சிங்கம் அடித்துக் கொன்ற மானின் மிச்சத்தை பல உயிர்கள் சாப்பிடும்.மனிதனின் அதீத நுகர்வு என்பதை,இயற்கையை சுரண்டுவதை குறைத்து வாழும் முறையை படிப்படியாக மாற்ற வேண்டும்.
இதைத்தான் (உன்)ஆசையே (அனைவரின்) துன்பத்துக்கு காரணம் என்றார் புத்தர்.அனைத்துக்கும் ஆசைப்படு என்கிறான் _______________. ஹி ஹி
சிந்திக்க மாட்டீர்களா!!
***
2. இன, மத முரண்பாடுகள்.
பொருளாதாரம் மட்டும் அமைதி கொண்டு வராது என்பதும், மதம் ,இனம் சார் முரண்களும் ,போட்டிகளும் வன்முறைக்கே இட்டுச் செல்லும்.
மத நம்பிக்கையாளர்களே உலகில் அதிகம் என்பதால் எப்படி முரண்களைத் தவிர்ப்பது என்பதுதான் முக்கிய கேள்வி.
நாத்திகனான என்னைக் கேட்டால் மதபுத்தகங்களைத் தடை செய்து யாருக்கு எப்படி இஷ்டமோ வண்ங்கி கொள் என்றால் போதும் என்பேன்.மத அரசியல் கலப்பு கூடாது,அனைவருக்கும் ஒரே பாரபட்சமற்ற சட்டம் எனலாம்.இது வலுக்கட்டாயமாக் செய்யக் கூடாது.
எனினும் ஆத்திகர்களுக்கும் உரிமை,சுதந்திரம் உண்டு. என்ன செய்யலாம்?
அனைவருக்கும் ஒரே மதபுத்த்கமும் சாத்தியம் இல்லை!!!!
சிந்திக்க மாட்டீர்களா!!!
டிஸ்கி;
நான்காம் உலகப் போருக்கு பின் யாராவது மிஞ்சினால் இது நிச்சயம் அமலுக்கு வரும்.
நன்றி
// என் மனதிலும் இந்த எண்ணம் உண்டு.ஆயினும் இதனை நோக்கிய பயணத்தில் படிப்படியாக மாற்றம் கொண்டுவந்தால் மட்டுமே சாத்தியப் படும்.//
நீக்குஇந்த எண்ணத்தை நாம் ஒவ்வொரு மக்களின் மனதிலும்,உலக தலைவர்களின் மனதிலும் தூவ வேண்டும். இவ்வாறு நாம் செய்யும் பொழுது ஒவ்வொரு நாடும்,நாட்டு மக்களும் இதற்காக குரல் கொடுப்பார்கள். ஒரு நாள் நமது எண்ணம் கண்டிப்பாக ஈடேறும். .
//எனினும் ஆத்திகர்களுக்கும் உரிமை,சுதந்திரம் உண்டு. என்ன செய்யலாம்?//
ஆத்திகர்களுக்கு வணங்கத்தான் உரிமை உண்டு. கடவுளின் பெயரால் அடுத்தவன் கழுத்தை வெட்ட அல்ல.
மனிதர்கள் நாம் தான் காலத்திற்கு தகுந்தவாறு சட்டங்களை வகுத்துக்கொள்ள வேண்டும்.
//அனைவருக்கும் ஒரே மதபுத்த்கமும் சாத்தியம் இல்லை!!!!//
இந்தியர் அனைவருக்கும் ஒரே புத்தகம் இந்திய அரசியல் சாசனம்.
அதுபோல மனிதர்கள் அனைவருக்கும் ஒரே சட்டத்தை வகுக்க வேண்டும்.அதில் காலத்திற்கு தகுந்தாற்போல மாற்றத்தை ஏற்ப்படுத்த வேண்டும். (இல்லாவிடில் அது மனுதர்மம் போல ஆகிவிடும்.)
இப்பொழுது சொல்லுங்கள் ஒரே சட்டம் சாத்தியம் தானே?
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார்வாகன் :)
நண்பரே, நல்ல ஒரு நோக்கத்தில் எழுதியிருக்கிறீர்கள்.இனமாவது உண்மையில் உள்ள ஒன்று இல்லாத ஒன்று மதம் மத வெறி தான் இனங்களுக்கிடையிலும் நாடுகளுக்கிடையிலும் பிரச்சனைகளை உருவாக்கிறது.இஸ்ரேலை அழிக்க வேண்டும் என்பதும் இந்த மதவெறிதான்.முதலில் மதத்தை ஒழிக்க தொடங்கலாம்.
பதிலளிநீக்கு//முதலில் மதத்தை ஒழிக்க தொடங்கலாம்.//
நீக்குநிச்சயமாக நாம் அதை செய்யவேண்டும். அதற்க்கு முதலில் நாம் ஒன்றிணைய வேண்டும்.பதிவு போடுவதும் பின்னூட்டம் போடுவதும் மட்டும் போதாது. puratchimanidham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்ளுங்கள்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா :)
வணக்கம் சகோ.
பதிலளிநீக்குநல்ல பதிவு. மனிதநேய சிந்தனையை வரவேற்கிறேன்
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :)
நீக்கு