சிந்திக்கவும் என்ற வலைப்பதிவு ஐயதராபாத்தில் குண்டுவைத்தது ஹிந்துத்துவா தீவிரவாதிகளாக கூட இருக்கலாம் என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.எனக்கும் அப்படி ஒரு சந்தேகம் எழுந்தது அதை பின்னூட்டமாக இட்டுள்ளேன்.
அந்த பின்னூட்டம் கீழே
///
மிகவும் சரியான பதிவு. குண்டு வைத்தது மோடியாக கூட இருக்கலாம். அஜ்மல் கசாபும், அப்சலும் ஒன்றும் அறியாதவர்கள். இவர்களை தூண்டிவிட்ட காவி தீவிரவாதிகளை உடனே அரசு கைது செய்யட்டும்.
வங்காள தேசத்தில் வலைப்பதிவரை கொன்றதும் இந்த காவித்தீவிரவாதமாக இருக்கலாம்.
பாகிஸ்தானில் கொத்து கொத்தாக ஷியா,சுபி முஸ்லிம்களை கொல்வதும், ஏன் தாலிபான் அமைப்பு கூட காவிதீவிரவாதிகளின் சதி செயலாக இருக்கலாமோ என்ற சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியவில்லை.
எனக்கு சில சமயம் ஒசாமா கூட காவி தீவிரவாதியோ என்ற சந்தேகம் எழுவதை தவிர்க்கமுடியவில்லை.
நான் இதுபற்றி எழுதவேண்டாம் என்று இருந்தேன்...என்னை எழுதவைத்து விட்டீர்கள்.///
உண்மையில் இந்த சம்பவம் பற்றி நான் எழுதவிரும்பவில்லை. ஆனால் சில கிறுக்குத்தனமான பதிவுகளை வாசித்தால் எழுதாமல் இருக்க முடியவில்லை.
மாலேகான்,சம்ஜோதா ரயில்,மக்கா மஸ்ஜித்,அஜ்மீர் தர்கா இந்த நான்கு இடங்களில் நடந்த குண்டு வெடிப்புகளுக்கு காரணம் சில ஹிந்துத்துவாவாதிகள் என்பது தெரியவந்துள்ளது.
இந்த குண்டுவெடிப்பு நடந்த சமயத்திலே எனக்கு இதில் இசுலாமிய அமைப்புகளுக்கு பங்கு இருக்க வாய்ப்பு இல்லை என்று பொறி தட்டியது. ஏன் எனில் இந்த நான்கு இடங்களுமே முஸ்லிம்களோடு தொடர்புடைய பகுதிகள்.
நல்லவேளையாக காவல்துறையும் உண்மையை கண்டறிந்து விட்டது.இந்த குண்டுவெடிப்புகளில் ஈடுபட்டவர்களுக்கு அதிகபட்சமாக மரணதண்டனை கூட தரலாம்.
இது ஒருபுறம் இருக்க இந்த சம்பவங்களை வைத்துக்கொண்டு அனைத்து குண்டுவெடிப்புகளுக்கும் காரணம் ஹிந்துத்துவாவாதிகள் என்று ஒருசாரார் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்துள்ளனர்.உண்மையில் உண்மை வேறுவிதமாக இருக்க.
ஐதராபாத் குண்டுவெடிப்பு என்பது அங்குள்ள சாய்பாபா கோயிலில் முதலில் வெடிக்க செய்வதாக திட்டமிடப்பட்டு இறுதியில் இடம் சற்று மாற்றுப்பட்டதாக செய்திகள் வெளியாகின்றன.
இந்த குண்டுவெடிப்பை பொருத்தவரை எந்த அமைப்பையும் குற்றம் சொல்ல நான் விரும்பவில்லை. காவல்துறை ஆராய்ந்து முடிவை சொல்லட்டும் அதுவரை கிறுக்குத்தனமாக யாரும் எழுத வேண்டாம் என்று கேட்டுகொள்கிறேன்.
குற்றம் செய்தவன் எந்த மதமாக இருந்தாலும் அவனுக்கு கடமையான தண்டனை கொடுக்கப்படவேண்டும்.
இந்த பதிவை எழுத காரணம் இந்து,இசுலாமிய வாதிகள் அல்ல. போலி பகுத்தறிவுவாதிகள் தான் இப்பதிவிற்கு காரணம்.
இதுபற்றி உணர்ச்சிவசப்பட்டு பதிவு எழுதாத இரண்டு மத மக்களுக்கும் எனது நன்றிகள்.
அடுத்த பதிவு பகுத்தறிவு குருடர்களை பற்றியதாக இருக்கலாம்...............