வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

வெள்ளி, 22 பிப்ரவரி, 2013

ஐயதராபாத்தில் குண்டு வைத்தது ஹிந்துத்துவா தீவிரவாதிகளா?


சிந்திக்கவும் என்ற வலைப்பதிவு ஐயதராபாத்தில் குண்டுவைத்தது ஹிந்துத்துவா தீவிரவாதிகளாக கூட இருக்கலாம் என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.எனக்கும் அப்படி ஒரு சந்தேகம் எழுந்தது அதை பின்னூட்டமாக இட்டுள்ளேன்.
அந்த பின்னூட்டம் கீழே 

///
மிகவும் சரியான பதிவு. குண்டு வைத்தது மோடியாக கூட இருக்கலாம். அஜ்மல் கசாபும், அப்சலும் ஒன்றும் அறியாதவர்கள். இவர்களை தூண்டிவிட்ட காவி  தீவிரவாதிகளை உடனே அரசு கைது செய்யட்டும். 

வங்காள தேசத்தில் வலைப்பதிவரை கொன்றதும் இந்த காவித்தீவிரவாதமாக இருக்கலாம். 
பாகிஸ்தானில் கொத்து கொத்தாக ஷியா,சுபி முஸ்லிம்களை கொல்வதும், ஏன் தாலிபான் அமைப்பு கூட காவிதீவிரவாதிகளின் சதி செயலாக இருக்கலாமோ என்ற சந்தேகம் எழுவதை விர்க்க முடியவில்லை. 

எனக்கு சில சமயம் ஒசாமா கூட காவி தீவிரவாதியோ என்ற சந்தேகம் எழுவதை தவிர்க்கமுடியவில்லை. 

நான் இதுபற்றி எழுதவேண்டாம் என்று இருந்தேன்...என்னை எழுதவைத்து விட்டீர்கள்.///


உண்மையில் இந்த சம்பவம் பற்றி நான் எழுதவிரும்பவில்லை. ஆனால் சில கிறுக்குத்தனமான பதிவுகளை வாசித்தால் எழுதாமல் இருக்க முடியவில்லை.

மாலேகான்,சம்ஜோதா ரயில்,மக்கா மஸ்ஜித்,அஜ்மீர் தர்கா  இந்த நான்கு இடங்களில் நடந்த குண்டு வெடிப்புகளுக்கு காரணம் சில ஹிந்துத்துவாவாதிகள் என்பது தெரியவந்துள்ளது.

இந்த குண்டுவெடிப்பு நடந்த சமயத்திலே எனக்கு இதில் இசுலாமிய அமைப்புகளுக்கு  பங்கு இருக்க வாய்ப்பு இல்லை என்று பொறி தட்டியது.  ஏன் எனில் இந்த நான்கு இடங்களுமே முஸ்லிம்களோடு தொடர்புடைய பகுதிகள்.

நல்லவேளையாக காவல்துறையும் உண்மையை கண்டறிந்து விட்டது.இந்த குண்டுவெடிப்புகளில் ஈடுபட்டவர்களுக்கு அதிகபட்சமாக மரணதண்டனை கூட தரலாம்.

இது ஒருபுறம் இருக்க இந்த சம்பவங்களை வைத்துக்கொண்டு அனைத்து குண்டுவெடிப்புகளுக்கும் காரணம்  ஹிந்துத்துவாவாதிகள் என்று ஒருசாரார் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்துள்ளனர்.உண்மையில் உண்மை வேறுவிதமாக இருக்க.

ஐதராபாத் குண்டுவெடிப்பு என்பது அங்குள்ள சாய்பாபா கோயிலில் முதலில் வெடிக்க செய்வதாக திட்டமிடப்பட்டு இறுதியில் இடம் சற்று மாற்றுப்பட்டதாக செய்திகள் வெளியாகின்றன. 

இந்த குண்டுவெடிப்பை பொருத்தவரை எந்த அமைப்பையும் குற்றம் சொல்ல நான் விரும்பவில்லை. காவல்துறை ஆராய்ந்து முடிவை சொல்லட்டும் அதுவரை கிறுக்குத்தனமாக யாரும் எழுத வேண்டாம் என்று கேட்டுகொள்கிறேன்.

குற்றம் செய்தவன் எந்த மதமாக இருந்தாலும் அவனுக்கு கடமையான தண்டனை கொடுக்கப்படவேண்டும். 

இந்த பதிவை எழுத காரணம் இந்து,இசுலாமிய வாதிகள்  அல்ல. போலி பகுத்தறிவுவாதிகள் தான்  இப்பதிவிற்கு காரணம்.

இதுபற்றி உணர்ச்சிவசப்பட்டு பதிவு எழுதாத இரண்டு மத மக்களுக்கும் எனது நன்றிகள். 

அடுத்த பதிவு பகுத்தறிவு குருடர்களை பற்றியதாக இருக்கலாம்...............

57 கருத்துகள்:

 1. குண்டு வெடித்த பாவிகளுக்கு மத சாயம் பூசாதீர்கள்.

  எந்த மதமும் அப்பாவி மக்களை கொன்று குவிக்க போதிக்கவில்லை.

  குற்றம் செய்தவன் எந்த மதமாக இருந்தாலும் அவனுக்கு கடுமையான தண்டனை கொடுக்கப்படவேண்டும்.


  ==================

  மெக்கா மஜ்ஸித் போல ஹைதராபாத் குண்டுவெடிப்பில் 'இந்து' தீவிரவாத அமைப்புகளுக்கு தொடர்பா?

  Posted by: Mathi Published: Friday, February 22, 2013, 16:35 [IST]

  ஹைதராபாத்: ஹைதராபாத்தில் நிகழ்ந்திருக்கும் தற்போதைய இரட்டைக் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 'இந்து' தீவிரவாத அமைப்புகளுக்கும் தொடர்பிருக்கலாமா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

  2007-ம் ஆண்டு மே 18-ந் தேதியன்று ஹைதராபாத்தின் வரலாற்று சிறப்புமிக்க மெக்கா மஸ்ஜித் மசூதியில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது.
  இதில் 9 பேர் பலியாகினர்.

  பின்னர் இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை கண்டித்து நடத்தப்பட்ட போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மொத்தம் 5 பேர் பலியாகினர்.

  தற்போது போலவே முதலில் ஹூஜி தீவிரவாத இயக்கம் மீது சந்தேகம் தெரிவிக்கப்பட்டது. மேலும் 12 முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். ஆனால் இவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

  பின்னர் தேசியப் புலனாய்வு முகாமையகம் இந்து தீவிரவாத இயக்கத்தினர் 6 பேரை இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் கைது செய்தது.

  தற்போதும் ஹூஜி, இந்திய முஜாஹிதீன்கள் என்ற கோணத்தில் விசாரணை செல்கிறது.

  இருப்பினும் இந்த சம்பவத்தில் இந்து தீவிரவாத அமைப்புகளுக்கான தொடர்பு பற்றியுமான கோணமும் விசாரணைக்குள்ளாக்கப்பட்டிருக்கிறது.-
  THATSTAMIL

  SOURCE: http://tamil.oneindia.in/news/2013/02/22/india-hindu-groups-mystery-surrounds-hyderabad-blasts-170293.html

  =============
  ஹைதராபாத் குண்டுவெடிப்பு- ஒருவேளை தெலுங்கானா செம்புலிகள் வேலையாக இருக்குமோ?

  Posted by: Mathi Published: Friday, February 22, 2013, 11:37 [IST]

  ஹைதராபாத்: நாட்டை உலுக்கியிருக்கும் ஹைதராபாத் இரட்டை குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு இந்திய முஜாஹிதீன்கள் அல்லது ஹூஜி தீவிரவாத அமைப்புகளில் ஒன்று காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படும் நிலையில் ஏன் 'தெலுங்கானா செம்புலிகள்' இயக்கம் காரணமாக இருக்கக் கூடாது என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.

  தெலுங்கானா தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி பல்லாண்டுகாலமாக போராட்டம் நடைபெற்று வருகிறது.

  மத்திய அரசும் அவ்வப்போது உறுதிமொழிகளை கொடுப்பதும் பின்னர் பின்வாங்குவதுமாக இருந்து வருகிறது.

  இந்த நிலையில் கடந்த மாதம் 'தெலுங்கானா யுவசேனா' மற்றும் தெலுங்கானா செம்புலிகள் ஆகியவற்றின் பெயரால் தெலுங்கானா பிரதேசங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.

  அதில் இனியும் மத்திய அரசை நம்பி பயனில்லை.. ஆயுத வழிப் போராட்டம் மூலமே தெலுங்கானா தனி மாநிலக் கோரிக்கையை வென்றெடுப்போம் என்று எச்சரித்திருந்தனர்.

  மேலும் ஹைதராபாத் என்பது தெலுங்கானாவின் தலைநகராகத்தான் இருக்க வேண்டும். என்று தெலுங்கானா வலியுறுத்துவோர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

  இந்த நிலையில் ஹைதராபாத்தில் வாழும் இதர ஆந்திர பகுதியினரை அச்சுறுத்தக் கூடும் வகையில் அல்லது வெளியேற்ற வைக்கும் வகையில் தெலுங்கானா செம்புலிகள் இயக்கத்தினர் இப்படி ஒரு நாசவேலையில் ஈடுபட்டிருக்கலாமோ என்ற சந்தேகமும் ஆந்திர மாநில உளவுத்துறையிடம் இருக்கிறது. THATSTAMIL

  SOURCE: http://tamil.oneindia.in/news/2013/02/22/india-telangana-red-tigers-hand-hyd-blasts-170267.html


  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க சகோ உண்மைகள்,
   உங்களை நேரில் சந்திக்க விருப்பம். சென்னை வந்தால் தெரிவிக்கவும்.
   தங்கள் வருகைக்கும் மேலதிக தகவலுக்கும் மிக்க நன்றி

   நீக்கு
 2. // இந்த குண்டுவெடிப்பை பொருத்தவரை எந்த அமைப்பையும் குற்றம் சொல்ல நான் விரும்பவில்லை. காவல்துறை ஆராய்ந்து முடிவை சொல்லட்டும் அதுவரை கிறுக்குத்தனமாக யாரும் எழுத வேண்டாம் என்று கேட்டுகொள்கிறேன்.//

  குண்டு வைத்தது (வழக்கமாக சொல்லப்படும்) இஸ்லாமிய தீவிரவாத அமைப்பு என்று சொல்லிய போதெல்லாம் (வாயை) பொத்திக்கொண்டு வேடிக்கை பார்த்தது யார்? பிறகு வெளிவந்த உண்மை அதுவல்லவே! அப்போது எங்கே போயிற்று இந்த விவேகம்?? அதற்கு பிறகாயிலும் மறுப்பு செய்தி வெளியிட்ட ஊடகங்கள் எத்தனை?

  //குற்றம் செய்தவன் எந்த மதமாக இருந்தாலும் அவனுக்கு கடமையான தண்டனை கொடுக்கப்படவேண்டும். //

  தேசத்தின் "மனசாட்சி"யை திருப்தி படுத்த சுவாமி அசீமானந்தா, சாது பிரக்ய & co விற்கு தூக்கு எப்போது என்று கேட்டு சொல்லுங்கள், அவர்களை தூக்கில் போட்டால் மட்டும் "மனசாட்சி" ஏற்றுக்கொள்ளாதா? கேட்டு சொல்லுங்கள் அல்லது குறைந்த பட்சம் அது குறித்து விரிவான பதிவு இடுங்கள்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க சகா,
   //குண்டு வைத்தது (வழக்கமாக சொல்லப்படும்) இஸ்லாமிய தீவிரவாத அமைப்பு என்று சொல்லிய போதெல்லாம் (வாயை) பொத்திக்கொண்டு வேடிக்கை பார்த்தது யார்? பிறகு வெளிவந்த உண்மை அதுவல்லவே! அப்போது எங்கே போயிற்று இந்த விவேகம்?? அதற்கு பிறகாயிலும் மறுப்பு செய்தி வெளியிட்ட ஊடகங்கள் எத்தனை?//
   வாங்க சகோ சகா,
   ஒரு முஸ்லிமீன் மனநிலையில் உங்கள் கேள்வியை என்னால் புரிந்த கொள்ளமுடிகிறது.
   ஒரு சில குண்டுவெடிப்புகளை தவிர பெரும்பாலான குண்டுவெடிப்புகளில் இசுலாமிய தீவிரவாத அமைப்பினரின் ஈடுபாடு உள்ளதாகவே உண்மை (முன்பும் பின்பும்) வந்துள்ளது.கொஞ்சம் சிந்தித்து பார்க்கவும். இந்தியாவில் மட்டுமல்ல உலகளவிலும் இசுலாமிய தீவிரவாதிகளே அதிக அளவில் குற்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதற்க்கு என்ன காரணம் என சிந்தித்து பார்த்துள்ளீர்களா? அதை எப்படி தடுக்கப்போகிறோம் என்று சிந்தித்து பார்த்தீர்களா?
   இசுலாமிய தீவிரவாதிகளால் அதிக இன்னலுக்கு உள்ளாவது முஸ்லிம் சகோதரர்கள்தான் என்ற உண்மையாவது உங்களுக்கு தெரியுமா?

   இசுலாமில் உள்ள தீவிரவாதம் என்ற கறையை நம்மால் போக்க முடியும்.ஆனால் முஸ்லிம்கள் நீங்கள் என்ன செய்கிறீர்கள் கசாபிர்க்கும்,தாலிபானுக்கும் அல்லவா ஆதரவு தெரிவிக்கின்றீர்கள்?
   இசுலாமில் உள்ள தீவிரவாதத்தை போக்கி அதில் உள்ள ஆன்மீகத்தை உலக முஸ்லிம்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும். இசுலாமில் எப்படி அரசியல் பின்னப்பட்டுள்ளது என்பதையும் மக்களுக்கு புரியவைக்கவேண்டும். அதைவிடுத்து இசுலாமிய அரசியலுக்கு ஆதரவு என்பது மனிதகுலத்தை அழிக்கும் செயலாகும்.
   முஸ்லிம்களையும்,பிற மத மக்களையும் காப்பாற்ற முதல் படி இசுலாமின் பெயரால் நடக்கும் தீவிரவாதத்தை ஒப்புக்கொண்டு அதை நிவர்த்தி செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுத்தலே ஆகும்.

   உங்களின் விருப்பத்திற்கு இணங்க அதுபற்றியும் பதிவிட முயல்கிறேன்.(என்னுடைய பதிவான விசுவரூபம் பற்றி ஒரு பதிவு எதிர்பார்த்தேன். நீங்கள்(முஸ்லிம்கள்
   ) ஏமாற்றி விட்டீர்கள்.)

   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகா,

   நீக்கு
  2. //உலகளவிலும் இசுலாமிய தீவிரவாதிகளே அதிக அளவில் குற்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதற்க்கு என்ன காரணம் என சிந்தித்து பார்த்துள்ளீர்களா?//

   உலகளவில் ஈரான், ஈராக், ஆப்கான், பாலஸ்தீன் என அதிகபட்ச நெருக்குதலுக்கு உள்ளாகப்படும் சமுதாயம் எதுவென்று உங்களுக்கு தெரியும் தானே? உலகளாவிய தீவிரவாதம் என்று கூறப்படுவது இந்த நாடுகளை சுற்றிதானே பின்னப்பட்டுள்ளது. நெருக்குவது யார், ஏன்?? பின்னுவது யார், ஏன்? அவர்களை பகடை காய்களாக பயன்படுத்துவது யார், ஏன் ??

   இந்த உலகில் இஸ்லாமிய சமுதாயம் அமைதியாக வாழ அனுமதிக்கப்பட்டுள்ளதா?? சிந்தியுங்கள் வேர் எங்கு உள்ளது என்று புரியும்.

   நீக்கு
  3. வாங்க Saha, ,
   சில இடங்களில் அமெரிக்கா அத்துமீறியுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் முஸ்லிம் தீவிரவாதிகளின் செயல் அனைத்திற்கும் அமெரிக்கா காரணம் என்று கூறுவது அறியாமை சகோ.

   ஷியா முஸ்லிம்களையும்,சூபி முஸ்லிம்களையும் கொல்வது யார்? இதற்க்கு அமெரிக்கா காரணமா?
   தனது கல்விக்காக குரல் கொடுத்த சிறிய சிறுமியை சுட்டது யார்? இதற்க்கு அமெரிக்கா காரணமா?
   நடனத்தில் ஈடுபட்ட 17 நபர்களை கொன்றது யார்?
   வங்காளத்தில் வலைப்பதிவரை கொன்றது யார்? இதற்க்கு அமெரிக்கா காரணமா?
   அமெரிக்காவா பிற மதத்தினரை கொன்றால் 72 பெண்கள் தருகிறேன் என்று கூறுகிறது?
   சிந்தித்து பாருங்கள் சகோ..குற்றங்களின் உண்மையான மூலத்தை நீங்கள் அறியாலாம்.
   இதை சொல்லும் நான் இசுலாமை முழுமையாக எதிர்ப்பதாக அர்த்தமல்ல . இசுலாமில் மறைக்கப்பட்டுள்ள ஆன்மீகத்தை நான் நன்கு அறிவேன். ஒருபுறம் இசுலாமில் உள்ள அரசியல் சூழ்ச்சியை எதிர்க்கும் நான் மறுபுறம் இசுலாமில் மறைந்துள்ள ஆன்மீகத்தை எடுத்துரைப்பேன்.
   நீங்கள் ஏன் என்று கேட்ட கேள்விகளுக்கான விடை உங்களுக்கு தெரிந்தால் எடுத்துரையுங்கள். அந்த கருத்து நியாயமாக இருப்பின் நானும் அதை பலருக்கு எடுத்துரைப்பேன்.
   தங்கள் கருத்துக்கு நன்றி சகோ சகா.

   நீக்கு
  4. //சில இடங்களில் அமெரிக்கா அத்துமீறியுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் முஸ்லிம் தீவிரவாதிகளின் செயல் அனைத்திற்கும் அமெரிக்கா காரணம் என்று கூறுவது அறியாமை சகோ. //

   சில இடங்களில் அந்த தீவிரவாதிகள் அத்துமீறியுள்ளார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அந்த தீவிரவாதிகளின் செயல் அனைத்திற்கும் இஸ்லாம்தான் காரணம் என்று கூறுவது அறியாமை சகோ.

   நீக்கு
  5. @Saha,
   //சில இடங்களில் அந்த தீவிரவாதிகள் அத்துமீறியுள்ளார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அந்த தீவிரவாதிகளின் செயல் அனைத்திற்கும் இஸ்லாம்தான் காரணம் என்று கூறுவது அறியாமை சகோ.//
   நல்லது சகா. குரான் அப்படி கூறுவதாலும்,குரான் கூறுவது போலவே தீவிரவாதிகள்
   பேசிக்கொள்வதாலும் அவ்வாறு எண்ணத்தோன்றுகிறது. சரி, அந்த தீவிரவாதிகளின் செயல்களுக்கு வேறு என்ன காரணம் சகோ சகா?

   நீக்கு
  6. // சரி, அந்த தீவிரவாதிகளின் செயல்களுக்கு வேறு என்ன காரணம் சகோ சகா?//

   சில இடங்களில் அமெரிக்கா அத்துமீறியுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. என்று நீங்களே கூறிவிட்டீர்கள்.. அத்துமீறினால் அதற்கு எதிர்வினை இருக்கும் தானே?

   நீக்கு

  7. //சில இடங்களில் அமெரிக்கா அத்துமீறியுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. என்று நீங்களே கூறிவிட்டீர்கள்.. அத்துமீறினால் அதற்கு எதிர்வினை இருக்கும் தானே?//
   முதலில் அத்துமீறியது யார் என்று பார்க்கவேண்டும்.
   அமெரிக்கர்கள் அத்துமீறினால் அவர்களுக்கு எதிராக இருக்கட்டும் ஏன் அல்லாவிற்கு,இசுலாமிற்கு ஆதரவாக இருக்கின்றனர்?
   இங்கு எங்கிருந்து மதம் அவர்களுக்கு வந்தது?
   எதிர்வினை நியாயம் என்றால் உலகமே அழியும்..அதைத்தான் நீங்களும் விரும்புகிறீர்களா? ஒருவேளை சீக்கிரம் சுவனம் கிடைக்கும் என்ற அறியாமையோ சகா...

   நீக்கு
 3. முகநூலில் நடைபெறும் பெரும்பாலான விவாதங்களில் கூறப்படும் ஒரு விஷயம், இந்து தீவிரவாதம். இந்து தீவிரவாதத்தில் ஈடுபட்ட கர்னல் புரோகித் மற்றும் பெண் சாமியாரிணி சாத்தி பிரக்ஞா சிங் ஆகியோர் தண்டிக்கப்பட வேண்டாம் என்று யாருமே கூறவில்லை. அவர்கள் செய்ததையும் யாரும் நியாயப்படுத்தவில்லை. ஆனால், தீவிரவாதச் செயல்களில் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த யாருமே ஈடுபட்டதில்லையா ? மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள்…!!!

  இந்தியாவில் நடந்த முக்கியமான தீவிரவாதத் தாக்குதல்களின் பட்டியல் இதோ…

  1993 மும்பை குண்டு வெடிப்பு மரணம் 257, 1993 சென்னை ஆர்எஸ்எஸ் அலுவலக குண்டு வெடிப்பு மரணம் 11, 1996 பிரம்மபுத்ரா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டு வெடிப்பு மரணம் 33, 1997 பாண்டியன் எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பு, மரணம் 3, செங்கோட்டை துப்பாக்கிச் சூடு மரணம் 3, காஷ்மீர் சட்டசபை தாக்குதல் மரணம் 38, பாராளுமன்றத் தாக்குதல் மரணம் 7, 2002 ஜான்பூர் ரயில் குண்டு வெடிப்பு மரணம் 12, 2002 மும்பை பஸ் வெடி குண்டு மரணம் 2, 2002 கர்னூல் ரயில் தகர்ப்பு மரணம் 20, 2002 அக்ஷர்தாம் கோயில் தாக்குதல் மரணம் 31, 2003 மும்பை குண்டு வெடிப்பு மரணம் 1, 2003 மும்பை ரயில் குண்டு வெடிப்பு மரணம் 11, 2003 மும்பை பஸ் வெடிகுண்டு மரணம் 4, 2003 மும்பை கார் குண்டு வெடிப்பு 52, 2005 ஜான்பூர் ரயில் குண்டு வெடிப்பு மரணம் 13, 2005 புதுதில்லி தீபாவளி குண்டு வெடிப்பு 70, 2006 வாரணாசி குண்டு வெடிப்பு மரணம் 21, 2006 மும்பை ரயில் குண்டு வெடிப்பு மரணம் 209, ஐதராபாத் லும்பினி பார்க் குண்டு வெடிப்பு மரணம் 42, 2007 லூதியானா தியேட்டர் குண்டு வெடிப்பு மரணம் 6, 2007 வாரணாசி, லக்கோ மற்றும் பைசாபாத் குண்டு வெடிப்பு மரணம் 16, 2008 ஜெய்ப்பூர் குண்டு வெடிப்பு மரணம் 63, 2008 பெங்களுரு சின்னசாமி விளையாட்டரங்க குண்டு வெடிப்பு மரணம் 2, 2008 அகமெதாபாத் தொடர் குண்டு வெடிப்பு மரணம் 29, 2008 டெல்லி மார்க்கெட் குண்டு வெடிப்பு மரணம் 21, 2008 இம்ப்பால் குண்டு வெடிப்பு மரணம் 17, 2008 தாஜ் ஓட்டல் தாக்குதல் மரணம் 171, 2010 பூனா பேக்கரி குண்டு வெடிப்பு மரணம் 17, 2011 மும்பை குண்டு வெடிப்பு மரணம் 18, 2011 டெல்லி நீதிமன்ற குண்டு வெடிப்பு மரணம் 10. இந்த அத்தனை குண்டு வெடிப்புகளிலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் / தண்டிக்கப்பட்டவர்கள் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

  அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பு, சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பு, மாலேகான் குண்டு வெடிப்பு மற்றும் மெக்கா மசூதி குண்டு வெடிப்பு ஆகிய இரண்டில் மட்டும்தான் இந்து தீவிரவாதிகள் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். இவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதில் யாருக்காவது மாற்றுக் கருத்து இருக்க முடியுமா ? இந்து தீவிரவாதம் இருக்கிறது என்பதை யாராவது மறுக்க முடியுமா ? யாரும் மறுக்கவுமில்லை… மறைக்கவுமில்லை. ஆனால், மீதம் உள்ள அத்தனை குண்டு வெடிப்புகளையும் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் யார் ? அத்தனை வழக்குகளும் பொய் வழக்குகளா ? பம்பாய் படத்தை இயக்கியதற்காக, இயக்குநர் மணிரத்னத்தின் வீட்டில் குண்டு வீசியது யார் ?

  இந்த குண்டு வெடிப்பு மற்றும் தீவிரவாத வழக்குகளில் கைது செய்யப்பட்ட இஸ்லாமியர்கள் அனைவரும் நாத்தீகர்களா? மார்க்சியம் பேசுபவர்களா ? அவர்களும் ஐந்து வேளை தொழுகிறார்களா இல்லையா ? குரான் படிக்கிறார்களா இல்லையா ?

  நன்றி;சவுக்கு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நந்தவனத்தான்,
   சரியாக கேட்ட கேள்வியை சரியான நேரத்தில் தந்துள்ளீர்கள். நமது சகோக்களுக்கு இதெல்லாம் கண்ணுக்கு தெரிவதே இல்லை.
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   நீக்கு
  2. நல்லது.. ஆக, தீவிரவாதத்தில் ஒரு சில இஸ்லாமியர்களும் ஈடுபடுகிறார்கள், ஒரு சில இந்துக்களும் ஈடுபடுகிறார்கள், ஒரு சில கிருத்துவர்களும் ஈடுபடுகிறார்கள்.. மற்ற மதத்தை சேர்ந்தோரும், மதமே இல்லையென்று சொல்லும் ஒரு சிலரும் ஈடுபடுகிறார்கள், அப்படித்தானே? எனில், மதத்திற்கும் தீவிரவாதத்திக்கும் என்ன சம்பந்தம்? மற்ற மத தீவிரவாதிகளை தீவிரவாதிகளாக மட்டும் அடையாளம் காட்டும் ஊடகங்கள், ஒரு முஸ்லிம் தீவிரவாத செயலில் ஈடுபட்டால், அவனை மட்டும் இஸ்லாமிய தீவிரவாதி என அடையாளப்படுத்துவதன் நோக்கம் என்ன? ஏன் பிற மதத்தை சார்ந்தவர்கள் மட்டும் தீவிரவாதத்தில் ஈடுபடுவதே இல்லையா, மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள்…!!!

   நீக்கு
  3. @சஹா,
   தீவிரவாதத்திற்கும் மதத்திற்கும் உள்ள சம்மந்தம் நாம் உருவாக்கியது அல்ல. இசுலாமியர்கள் மதத்தை முன்னி்றுத்தி குண்டு வைத்தால் இசுலாமிய தீவிரவாதி என்றுதான் அழைக்கப்படுவார்கள். இது இந்துக்களுக்கும் கிருத்துவர்களூக்கும் பொருந்தும். உதாரணமாக விடுதலைபுலிகளை இந்து தீவிரவாதிகள் என அழைக்க இயலாது. ஏனெனில் புலிகள் இயக்கத்தில் கிருத்தவர்களும் இருந்தார்கள். மேலும் அவர்கள் மதத்தை முன்னிறுத்தவில்லை. வேண்டுமானால் தமிழ் தீவிரவாதிகள் எனலாம். ஆனால் கர்னல் புரோகித் மற்றும் பெண் சாமியாரிணி சாத்தி பிரக்ஞா சிங் ஆகியோர் இந்து தீவிரவாதிகள் என்றுதானே அழைக்கப்படுகிறார்கள்?

   ஆனால் மற்ற மதத்தினருக்கும் உங்களுக்கும் உள்ள வித்தயாசம், இந்துமத தீவிரவாதிகளை இந்து பொதுமக்கள் கண்டிக்கிறார்கள், தண்டிக்க வேண்டுகிறார்கள். ஆனால் தாலிபான் போன்ற இசுலாமிய தீவிரவாதிகளை நல்லவர்கள் என, உம்மைப் போன்ற முமின்கள் ஆதரவு அளிக்கின்றீர்கள். இதுதான் மற்றவர்களுக்கும் இசலாமியருக்கும் உள்ள வேறுபாடு. இதனால் இசுலாமை கண்டு காபிர் உலகம் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியதாகிறது.

   நீக்கு
  4. வாங்க சகா,
   //ஆக, தீவிரவாதத்தில் ஒரு சில இஸ்லாமியர்களும் ஈடுபடுகிறார்கள், ஒரு சில இந்துக்களும் ஈடுபடுகிறார்கள், ஒரு சில கிருத்துவர்களும் ஈடுபடுகிறார்கள்.. மற்ற மதத்தை சேர்ந்தோரும், மதமே இல்லையென்று சொல்லும் ஒரு சிலரும் ஈடுபடுகிறார்கள், அப்படித்தானே?//
   அது எப்படி ஒன்னுமே புரியாத மாதிரி நடிக்கிறீர்கள் அல்லது உங்களுக்கு உண்மையில் புரியவில்லையா? உலகில் நடக்கும் பெரும்பான்மையான தீவிரவாத செயல்களை செய்பவர்கள் யார் என்று தங்களுக்கு தெரியாதது வியப்பே.
   முஸ்லிம்கள் செய்யும் குற்ற்றத்தை நீங்கள் என்று ஒப்புக்கொண்டு அதை நிறுத்த முயற்சி செய்கிறீர்களோ அதுவரை பல முஸ்லிம்கள் தவறான வழியில் செல்வதை தடுக்க இயலாது.
   மீண்டும் சொல்கிறேன் இசுலாமிய தீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கபடுவது முஸ்லிம்களே.

   // மற்ற மத தீவிரவாதிகளை தீவிரவாதிகளாக மட்டும் அடையாளம் காட்டும் ஊடகங்கள், ஒரு முஸ்லிம் தீவிரவாத செயலில் ஈடுபட்டால், அவனை மட்டும் இஸ்லாமிய தீவிரவாதி என அடையாளப்படுத்துவதன் நோக்கம் என்ன? //

   இசுலாமிய தீவிரவாதம் என்று கூற காரணம் அல்லாவிற்கு இணைவைப்பவர்களை கொன்றால் சுவனம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவர்கள் அந்த செயல்களில் ஈடுபடுகின்றனர். இதன் மூலத்தை அவர்கள் குரானிலிருந்து எடுக்கின்றனர்.
   ஒரு சிறு உதாரணம்
   http://www.youtube.com/watch?feature=player_embedded&v=dGRTDt5w-dM
   மேலதிக தகவலுக்கு என்னுடைய முந்தைய பதிவை நேரம் கிடைக்கும் போதெல்லாம் மனசாட்சியோடு படித்து பார்க்கவும்.

   தங்கள் வருகைக்கு நன்றி சகா...

   நீக்கு
  5. //ஆனால் மற்ற மதத்தினருக்கும் உங்களுக்கும் உள்ள வித்தயாசம், இந்துமத தீவிரவாதிகளை இந்து பொதுமக்கள் கண்டிக்கிறார்கள், தண்டிக்க வேண்டுகிறார்கள். ஆனால் தாலிபான் போன்ற இசுலாமிய தீவிரவாதிகளை நல்லவர்கள் என, உம்மைப் போன்ற முமின்கள் ஆதரவு அளிக்கின்றீர்கள். //

   அவர்கள் தீவிரவாதியாக இருக்கும் பட்சத்தில், அவர்களை வளர்த்து விட்டது யார்? பயிற்சியளித்தது யார்? நிதி உதவி செய்தது யார்? கடாவை வளர்த்தவர்களுக்கு அது ஒரு நாள் மார்பில் பாயும் என தெரியாதோ?

   எந்த தீவிரவாதிக்கு இஸ்லாமியர் ஆதரவளித்தார்கள்? (கசாப், அப்சல் குரு பற்றி கேட்பீர்கள், அதற்க்கு மற்ற நடுநிலையாளர்கள் எடுத்து வைக்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்.) அதை விடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட்டில் ஜெயித்ததிற்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள் என்று வழமையான கேள்வியை கேட்காதீர், பிறகு கர்நாடகா தாசில்தார் அலுவலகத்தில் பாகிஸ்தான் கொடி ஏற்றியது யார் என்று வழமையான பதில் தரப்படும்.

   நீக்கு
  6. // உதாரணமாக விடுதலைபுலிகளை இந்து தீவிரவாதிகள் என அழைக்க இயலாது. ஏனெனில் புலிகள் இயக்கத்தில் கிருத்தவர்களும் இருந்தார்கள். மேலும் அவர்கள் மதத்தை முன்னிறுத்தவில்லை. வேண்டுமானால் தமிழ் தீவிரவாதிகள் எனலாம்.//

   எனில், சொந்த மண்ணிற்காக போராடும் ஹமாஸை எவ்வாறு அடையாளப்படுத்துகிறார்கள் என்று நீங்களே சொல்லிவிடுங்கள்..

   நீக்கு
  7. //உலகில் நடக்கும் பெரும்பான்மையான தீவிரவாத செயல்களை செய்பவர்கள் யார் என்று தங்களுக்கு தெரியாதது வியப்பே. //

   உலகளவில் ஈரான், ஈராக், ஆப்கான், பாலஸ்தீன் என அதிகபட்ச நெருக்குதலுக்கு உள்ளாகப்படும் சமுதாயம் எதுவென்று உங்களுக்கு தெரியும் தானே? உலகளாவிய தீவிரவாதம் என்று கூறப்படுவது இந்த நாடுகளை சுற்றிதானே பின்னப்பட்டுள்ளது. நெருக்குவது யார், ஏன்?? பின்னுவது யார், ஏன்? அவர்களை பகடை காய்களாக பயன்படுத்துவது யார், ஏன் ??

   இந்த உலகில் இஸ்லாமிய சமுதாயம் அமைதியாக வாழ அனுமதிக்கப்பட்டுள்ளதா?? சிந்தியுங்கள் வேர் எங்கு உள்ளது என்று புரியும்.

   //இசுலாமிய தீவிரவாதம் என்று கூற காரணம் அல்லாவிற்கு இணைவைப்பவர்களை கொன்றால் சுவனம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவர்கள் அந்த செயல்களில் ஈடுபடுகின்றனர். இதன் மூலத்தை அவர்கள் குரானிலிருந்து எடுக்கின்றனர்.//

   அப்படியா? அதற்காகத்தான் கொல்லுகிறார்களா?? வித்தியாசமான சிந்தனை.. எனில், வலிமை குறைந்த (இணைவைக்கும்) பழங்குடியினரை எளிதாக கொன்றிருக்க முடியுமே? எதற்காக பலமடங்கு வலிமை அதிகம் பெற்றவனுடன் போராட வேண்டும்? ஏதாகிலும் சிறப்பு காரணம் உண்டா, கண்டுபிடியுங்கள்.

   சரி, இணைவைப்பவர்களை மட்டும் தான் தேடிப்பிடித்து கொல்கிறார்களா? ஒரு முஸ்லிமை கூட அவர்கள் கொல்லவில்லையா? முஸ்லிம்களை கொன்றாலுமா அவர்களுக்கு சொர்க்கம் கிடைக்கும்? வணக்க வழிபாடெல்லாம் வீணா? ஒரு முஸ்லிம் சக முஸ்லிமை கொன்றால் சொர்க்கம் கிடைக்குமா?

   விந்தை....

   நீக்கு
  8. @ sahaa
   //அவர்கள் தீவிரவாதியாக இருக்கும் பட்சத்தில், அவர்களை வளர்த்து விட்டது யார்? பயிற்சியளித்தது யார்? நிதி உதவி செய்தது யார்? கடாவை வளர்த்தவர்களுக்கு அது ஒரு நாள் மார்பில் பாயும் என தெரியாதோ? //

   அப்பாவி ஷியா முஸ்லிம்களையும் சூபி முஸ்லிம்களையும்,இந்துக்களையும் ஏன் கொல்கிறார்கள் என்றால் என்ன கதை சொல்கிறீர்கள் சகா. நிறுத்தி நிதானமாக தாலிபான்கள் ஏன் இவர்களை கொல்கிறார்கள் என்று சொல்லவும்.இவர்களா அவர்களை வளர்த்து விட்டார்கள்?
   //எந்த தீவிரவாதிக்கு இஸ்லாமியர் ஆதரவளித்தார்கள்? //
   சகா நீங்கள் வலையுலகிற்கு புதிதா?
   ஒசமாவிற்காக சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது உங்களுக்கு தெரியாதா?
   தாலிபான்கள் சிறுமியை சுட்டதற்கும், நடனத்தில் ஈடுபட்ட 17 நபர்களை கொன்றதற்கும் கூட நம் பதிவுலக முஸ்லிம்களில் ஒரு சிலர் ஆதரவு தெரிவித்தனர்.

   //(கசாப், அப்சல் குரு பற்றி கேட்பீர்கள், அதற்க்கு மற்ற நடுநிலையாளர்கள் எடுத்து வைக்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்.)//
   ([இப்ப பாருங்க நீங்களே கசாபிர்க்கு ஆதரவாக பேசுகிறீர்கள்)
   கசாப் பற்றி என்ன நடுநிலையாளர்கள் கருத்து கொஞ்சம் கூறுங்கள் பார்ப்போம். காசபிர்க்காக வாதாடும் உங்களை நினைத்தால் எனக்கு இதைவிட ஒரு அறியாமை உலகில் இருக்குமா என்றா எண்ணம் தோன்றுகிறது.
   நன்றி சகா.

   நீக்கு
  9. @சகா,
   //ஒரு முஸ்லிமை கூட அவர்கள் கொல்லவில்லையா? முஸ்லிம்களை கொன்றாலுமா அவர்களுக்கு சொர்க்கம் கிடைக்கும்? வணக்க வழிபாடெல்லாம் வீணா? ஒரு முஸ்லிம் சக முஸ்லிமை கொன்றால் சொர்க்கம் கிடைக்குமா?//
   நான் சொன்ன பதிலை ஏன் திரும்ப கேள்வியாக கேட்கிறீர்கள் என தெரியவில்லை. நான்தான் முதலிலேயே சொல்லிவிட்டேனே இசுலாமிய மத வெறியால் அதிகம் பாதிக்கப்படுவது முஸ்லிம்கள்தான் என்று.

   இருப்பினும் உங்கள் கேள்விக்கு விடை என்னவெனில்....
   இணைவைப்பவர்களை கொன்றால் சொர்க்கம் என்று குர்ஆனில் உள்ளது. ஒரு வகையில் சூபிக்களின் தர்க்கா வழிபாடும் இணைவைத்தலே. இதை காரணமாக வைத்து கூட தீவிரவாதிகள் அவர்களை கொல்லலாம்.

   மற்றபடி ஷியா முஸ்லிம்களை கொத்து கொத்தாக கொல்ல என்ன காரணம் என்று பார்த்தால் அவர்கள் எங்கு சுன்னி முஸ்லிம்களை விட பலம் பெற்று விடுவார்களோ என்ற நினைப்பாக இருக்கலாம். சவுதியில் கூட ஷியா முஸ்லிம்களுக்கு சம உரிமைகள் வழங்கப்படவில்லை என்பதை உங்களுக்கு ஞாபக படுத்த விரும்புகிறேன்.

   நீக்கு
  10. // அப்பாவி ஷியா முஸ்லிம்களையும் சூபி முஸ்லிம்களையும்,இந்துக்களையும் ஏன் கொல்கிறார்கள் என்றால் என்ன கதை சொல்கிறீர்கள் சகா. நிறுத்தி நிதானமாக தாலிபான்கள் ஏன் இவர்களை கொல்கிறார்கள் என்று சொல்லவும்.இவர்களா அவர்களை வளர்த்து விட்டார்கள்?//

   ஒரு கட்சியை சேர்ந்த இந்து, மற்றொரு கட்சியை சேர்ந்த இந்துவை கொன்றால் அது இந்து தீவிரவாதமா , அல்லது மொத்த சமுதாயத்திற்கு எதிரான தீவிரவாதமா?

   அப்படியெனில் அவர்கள் இஸ்லாமிய தீவிரவாதிகளா, இஸ்லாத்திக்காகத்தான் கொல்லுகிறார்களா? அவர்களை தீவிரவாதிகள் என்று அடையாளப்படுத்துங்கள், ஏன் இஸ்லாத்தை இழுக்கவேண்டும்?


   //இப்ப பாருங்க நீங்களே கசாபிர்க்கு ஆதரவாக பேசுகிறீர்கள்//

   நிச்சயமாக இல்லை. அவன் தீவிரவாதி எனும் பட்சத்தில் கடும் தண்டனை கொடுக்கபட்டிருக்கவேண்டியவன் தான். நேரமிருப்பின் குலாம் முஹம்மது கீற்று இணையத்தில் எழுதியதை படித்து பாருங்கள்.
   http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=22309

   நீக்கு
  11. அதே கீற்று தளத்தில் சகோ.அபூ அஃப்ரஹ் கேட்ட 13 கேள்விகள், அப்படியே....

   --
   1) ஐ.பி என்ற மத்திய உளவுத்துறை எந்த தப்பும் செய்யவில்லை என்றால் மும்பை தாக்குதலுக்கு பிறகு கர்கரேவை கொலை செய்தது யார் என்ற புத்தகம் வந்த பிறகு தேசிய புலனாய்வு துறை (என்.ஐ.ஏ) புதிதாக ஏற்படுத்தப்பட்டது. ஏன்?
   2) ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் இந்தியாவெங்கும் பல குண்டு வெடிப்பு வழக்குகளில் கைது செய்யப்பட்ட பிறகும் நிற்காத குண்டு வெடிப்புகள் மாலேகான் குண்டு வெடிப்பு குற்றவாளிகளான புரோகித், பெண்சாமியார் சாத்வி, அசிமானந்தா, தயனந்த பாண்டே போன்றோர் கைது செய்யப்பட்டவுடன் நின்றது எப்படி?
   3) அசிமானந்தா அப்ரூவராக மாறி பக்கம் பக்கமாக ஒப்புதல் வாக்குமூலம் தந்தாரே அது பல பத்திரிக்கைகளில் குறிப்பாக டெகல்காவில் வெளிவந்ததே அது என்னவாயிற்று?
   4) 30க்கும் அதிகமான ஐ,பி உயர் அதிகாரிகள் குறிப்பாக ஐ.பி.எஸ் அதிகாரிகள் சமீபத்தில் மாற்றப்பட்டனரே அது ஏன்? 5) ஐ.பி என்ற மத்திய உளவுத்துறை யாருக்கு கீழ் இயங்குகிறது? அதன் நடவடிக்கைகளுக்கு யாருக்கு பதில் சொல்கிறது? என்றும் அதன் நடவடிக்கைகள் நாடாளுமன்ற குழுவால் கட்டுப்படுத்தப்படவேண்டும் என்ற துணை ஜனாதிபதியின் கோரிக்கை என்னவாயிற்று? இக்கோரிக்கை ஏன் வைக்கப்பட்டது?
   6) இதே கேள்வி உயர்நீதிமன்றத்திலும் கேட்கப்பட்டு ஐ.பி சில நாட்கள் இயங்கக்கூடாது என்று தடை ஏன் விதிக்கப்பட்டது?

   7) நீங்கள் தற்போது சுட்டிக்காட்டியுள்ளது போன்ற ஒன்றுக்கு உதவாத இணையதளங்கள் அல்லாமல் பல பிரபலமான ஊடகங்களிலும் பல இணையங்களிலும் பாகிஸ்தான் தீவிரவாதிகளால் நடத்தப்பட்டது என சுட்டிக்காட்டப்பட்ட சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் இரயில் குண்டு வெடிப்பு தற்போது இந்திய (இந்து) தீவிரவாதியால் நடத்தப்பட்டது என்பதை என்.ஐ.ஏ (நன்றாக கவனிக்கவும் ஐ.பி அல்ல என்.ஐ.ஏ) கண்டுபிடித்துள்ளதே. அதற்காக இந்து தீவிரவாதி ராஜேந்திர சவுத்ரி என்பவன் கைது செய்யப்பட்டுள்ளானே. 2007ல் நடந்த இதை ஏன் ஐ.பி. கண்டுபிடிக்கவில்லை.

   8) இவன் மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பிலும் தொடர்புடையவன் என தற்போது தெரிய வந்துள்ளதே? அப்படியானால் இதுவரை பாகிஸ்தான் தீவிரவாதிகளின் செயல் ஸ்லீப்பர் செல்கள் மூலம் நடந்த தாக்குதல் என உங்களை போன்ற ஆட்கள் கூறி வந்த பொய்கள் என்னவாயிற்று. இந்த குண்டுவெடிப்புகளுக்காக கைது செய்யப்பட்ட அப்பாவி முஸ்லிம்களின் நிலை என்ன? இந்த குற்ற செயல்களுக்கு உடந்தையாயிருந்த ஐ,பி மும்பைத்தாக்குதலை திட்டமிடவில்லை என்பதை எவ்வாறு நம்பமுடியும்?

   9) மும்பை ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தானிலிருந்து 384 கால்கள் வந்தன. ஆனால் அஜ்மல் கசாபிற்கு ஒரு போன் கூட வரவில்லையே அது ஏன்?

   10) மும்பை ஹோட்டல்களில் நடந்த தாக்குதல்களில் அப்பாவி மக்கள் இலக்கான போது கசாபும் அவனுடைய கூட்டாளி நடத்திய தாக்குதலில் மட்டும் (போலிஸ் அதிகாரிகள் வரும் வரை மறைந்திருந்து காத்திருந்து) கர்கரே, சலாஸ்கர், காம்தி போன்ற அதிகாரிகள் தாக்கப்பட்டது ஏன்? குறிப்பாக கர்கரே இலக்காக்கப்பட்டது எவ்வாறு? ஏன்?

   11) சி.எஸ்.டி காமா மருத்துவமனையில் தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் ( அதாவது அஜ்மல் கசாப்) மராத்தியில் சரளமாக பேசினான் என நேரில் பார்த்த சாட்சி அவனிடம் பேசிய சாட்சி கூறியுள்ளரே. அப்படியானால் மராத்தியில் பேசிய அந்த குற்றவாளி யார்?

   12) ஃபைபர் போட்டில் வந்திறங்கிய குற்றவாளிகளை நேரில் பார்த்த அனிதா உத்தய்யா என்பவர் அந்த நபர்களில் அஜ்மல் கசாப் கிடையாது என உறுதி செய்தாரே அது என்னவாயிற்று. அவருக்கு எதிராக வழக்கு போடப்பட்டதே அது ஏன்?

   13) குறிப்பாக சி.எஸ்.டி இரயில் நிலையத்தில் நிறுவப்பட்டிருந்த குற்றவாளிகளை படம் பிடித்த அந்த 16 சி.சி.டி.வி கேமராக்கள் அன்றுமட்டும் வேலை செய்யவில்லையே அது ஏன்?
   --

   நீக்கு
  12. @Saha,
   //அப்படியெனில் அவர்கள் இஸ்லாமிய தீவிரவாதிகளா, இஸ்லாத்திக்காகத்தான் கொல்லுகிறார்களா? அவர்களை தீவிரவாதிகள் என்று அடையாளப்படுத்துங்கள், ஏன் இஸ்லாத்தை இழுக்கவேண்டும்?//
   சந்தேகமே இல்லாமல் அவர்கள் இசுலாமை, இசுலாமிய சட்டத்தை பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் பலரை கொல்கின்றனர்.
   உதாரணம் கல்விக்காக பேசிய மாலாலா சுடப்பட்டது,
   நடனமாடிய குற்றத்திற்காக 17 பேர் கொல்லப்பட்டனர்.
   http://www.washingtonpost.com/world/another-afghan-soldier-attacks-kills-2-nato-troops/2012/08/27/02576fce-f026-11e1-892d-bc92fee603a7_story.html

   அப்புறம் அந்த கீற்று கட்டுரை...அதைபார்த்த பிறகு....எனக்கென்னவோ அமெரிக்க இரட்டை கோபுரத்தை தாக்கியது கூட இந்திய உளவுப்படையாக இருக்குமோ என்ற சந்தேகம் வருகிறது....உங்களுக்கு :)
   இப்பொழுதுதான் தெரிகிறது...தவறு உங்களுடையது அல்ல......
   நன்றி சகா

   நீக்கு
  13. @Saha,
   இருவருமே கீற்று தளத்தில் தங்கள் அறியாமையை காட்டியுள்ளார்கள்.
   நேபாளத்தில் கசாப் கைது செய்யப்பட்டதாக கூறுகின்றனர். ஆனால் நேபாளிய அரசாங்கம் அதை மறுத்துள்ளது.ஆதாரம் கீழே.....
   http://www.sify.com/news/nepal-denies-arrest-of-ajmal-kasab-in-2005-news-international-jeguOXfaegj.html

   எப்படி மூளை சலவை செய்யமுடியுமோ அப்படி செய்கிறார்கள்...இனியும் அது தொடர அனுமதிக்க இயலாது.
   நன்றி சகா

   நீக்கு
  14. //உதாரணம் கல்விக்காக பேசிய மாலாலா சுடப்பட்டது.//

   குர்ஆனில் எங்கு பெண்கள் கல்வி கற்க கூடாதென்று சொல்லப்பட்டிருக்கு என்று விளக்கினால் நலம். மாறாக குர்ஆனில் கூறப்பட்டிருக்கும் தகவல்களை பாருங்கள்.

   --
   "மறுமையில் நபிமார்களும், அறிஞர்களும் எவ்வித வேறுபாடும் காணப்படாது. நபிமார்களுக்குரிய நபித்துவம் என்று அந்தஸ்தை தவிர" உங்களில் நம்பிக்கை கொண்டோருக்கும், கல்வி வழங்கப்பட்டோருக்கும் அல்லாஹ் பல தகுதிகளை உயர்த்துவான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.அல்குர்ஆன் (58 : 11)

   அறிவுடை யோரைத் தவிர (யாரும்) சிந்திப்பதில்லை.அல்குர்ஆன் (2 : 269)

   அறிந்தோரும், அறியாதோரும் சமமாவார்களா? நல்லுபதேசம் பெறுவோரெல்லாம் அறிவுடையோரே (அல்குர்ஆன் 39:9)

   மேற்காணும் குர்ஆன் வசனங்கள். மற்றும் ஹதீஸ்கள் கல்வியின் சிறப்பையும் அது இரு பாலாருக்கும் பொதுவானது என்பதையும் எந்த சந்தேகத்திற்கும் இடம் இன்றி நிருபிக்கின்றன...!!! மேலும் பத்ரு போர்க்களத்திலே சிறைக்கைதியாகப் பிடிபட்ட ஒவ்வொரு கைதியும் விடுதலையாவதற்கான விலையாக மக்களில் பத்து பேருக்கு கல்வி கற்றுத் தர வேண்டும் என்பது வரலாற்றில் நாம் அறிந்த ஒன்றே!

   அக்காலத்திய இஸ்லாமிய பெண்கள் பற்றி சில :

   சஹாபிய பெண்களின் அறிவு திறன் பிரமிக்க வைக்கிறது .அவர்கள் கல்வி கற்பதில் மிகுந்த ஆர்வம் காட்டி வந்துள்ளார்கள் ..

   ஒருமுறை ஒரு சஹாபிய பெண் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து எப்போதும் உங்களை சுற்றி ஆண்களே இருக்கிறார்கள் அதனால் எங்களால் உங்களை நெருங்கி வந்து மார்க்கத்தில் எங்களுக்கு தோன்ற கூடிய சந்தேகத்தை கேட்க முடிய வில்லை என சொன்னதும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவர்களுக்கு என்று வாரத்தில் ஒரு நாளை ஒதுக்கினார்கள் என்பது இஸ்லாம் பெண் கல்வியை தடுக்கிறது என்று கூப்பாடு போடும்... ஒரு சிலருக்கு தெரிந்திருக்க நியாயம் இல்லை.. (எப்புடி தெரியும்? இந்த மாதிரி நல்ல விஷயம் எல்லாம் உங்க கண்ணுல படாது.. அப்புடியே பட்டாலும்,.. கண்டும் காணாம.. இஸ்லாதுல வேற எதைபத்திடா குறை சொல்லலாம்னு மட்டும்தானே யோசிப்பீங்க??)

   அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் கல்வி ஞானத்தின் காரணமாக அவர்கள் மார்க்கம் குறித்த அடிப்படை சட்டங்கள் ஷரியத் சட்டங்கள் ஆகியவற்றை நன்கு அறிந்தவர்களாகவும் ,நல்ல ஆலோசனை சொல்ல கூடியவர்களாகவும் ,நன்கு விவாதம் செய்ய கூடியவர்களாக விளங்கினார்கள்.அவர்கள் மூலமாக நமக்கு கிடைத்த நபி மொழிகளின் எண்ணிக்கை 2210 ஹதீஸ்கள் ஆகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தன் மனைவி கல்வி அறிவில் சிறந்து இருப்பதை தடை செய்யவில்லை.

   அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்களது சந்ததியில் வந்த நஃபீஸா எனும் பெண் ஹதீஸ் கலையில் தேர்ச்சி பெற்றிருந்தார். அவரின் போதனை வகுப்புகளில் இமாம் ஷாபிஈ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களும் கலந்து கொண்டு அறிவை பெற்றுள்ளார்.
   --

   இப்போது கூறுங்கள், அவர்கள் இசுலாமை, இசுலாமிய சட்டத்தை பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் பலரை கொல்கின்றனரா?

   நீக்கு
  15. // மற்றபடி ஷியா முஸ்லிம்களை கொத்து கொத்தாக கொல்ல என்ன காரணம் என்று பார்த்தால் அவர்கள் எங்கு சுன்னி முஸ்லிம்களை விட பலம் பெற்று விடுவார்களோ என்ற நினைப்பாக இருக்கலாம். சவுதியில் கூட ஷியா முஸ்லிம்களுக்கு சம உரிமைகள் வழங்கப்படவில்லை என்பதை உங்களுக்கு ஞாபக படுத்த விரும்புகிறேன். //

   ஏற்றுகொண்டதிற்கு நன்றி, அதைத்தான் நானும் சொல்கிறேன், அது அரசியல், அதிகார பகிர்வு தொடர்பான கொலைகள்.. இஸ்லாத்திக்காக செய்யப்படுபவை அல்ல.... இஸ்லாத்தில் அவ்வாறு கூறப்படவும் இல்லை.

   நீக்கு
  16. சரி அப்பொழுது யூதர்கள்,சிலை வணங்கிகளை இசுலாமில் கொல்ல சொல்லப்பட்டுள்ளது என்பதை ஏற்க்கிரீர்களா?
   மேலும் சூபிக்கள் இனைவைப்பதால் அவர்களையும் கொல்வது இசுலாமில் உள்ளதாக ஏற்றுக்கொள்ளலாமா?

   நீக்கு
  17. //////உதாரணம் கல்விக்காக பேசிய மாலாலா சுடப்பட்டது.//

   குர்ஆனில் எங்கு பெண்கள் கல்வி கற்க கூடாதென்று சொல்லப்பட்டிருக்கு என்று விளக்கினால் நலம். மாறாக குர்ஆனில் கூறப்பட்டிருக்கும் தகவல்களை பாருங்கள்.
   /////
   கல்வி என்று நான் கூறிய வார்த்தையை மட்டும் கணக்கில் கொள்ளகூடாது சகா...தாலிபான்கள் ஏன் அப்பெண்ணை சுட்டார்கள் என்ற முழு விவரத்தையும் தாங்கள் அறிய முற்ப்படவேண்டும்....
   அவள் கல்விக்காக மட்டும் போராடவில்லை...அவள் பெண் உரிமைக்காக குரல் கொடுத்தால், தாலிபன்களால் இடிக்கப்பட்ட பள்ளிகளுக்காக குரல் கொடுத்தால்,

   //"She was pro-west, she was speaking against Taliban and she was calling President Obama her ideal leader….
   She was young but she was promoting western culture in Pashtun areas,"//
   ஒபாமாவை தலைவராக ஏற்றால் அதில் என்ன தவறு? அதற்காக அவளை சுடுவதா?

   //“She considers President Obama as her ideal leader. Malala is the symbol of the infidels and obscenity,” Ihsan said, adding that if she survived, the Taliban would try again to kill her.//
   http://www.washingtonpost.com/world/asia_pacific/taliban-says-it-shot-infidel-pakistani-teen-for-advocating-girls-rights/2012/10/09/29715632-1214-11e2-9a39-1f5a7f6fe945_story_1.html

   இசுலாமிர்காகத்தான் அப்பெண்ணை சுட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.நிராகரிப்போரின் சின்னமாக அவளை பார்ப்பதாக தாலிபான்கள் கூறியுள்ளனர். இதற்க்கு என்ன பொருள் என்று தங்களுக்கு தெரியாதா சகா. இசுலாம் தான் அவளை சுட சொன்னது என்று நான் சொல்லவில்லை ஆனால் அவர்கள் அவ்வாறு நினைத்துத்தான் செய்கிறார்கள் என்று கூறுகிறேன். இதுபற்றி குறிப்பாக நமது வலைப்பதிவில் எத்தனை முஸ்லிம்கள் எழுதியுள்ளனர்? ஒருவருமில்லை. சரி இவர்களை ஆதரிக்காமளாவது இருக்கலாம் அல்லவா அதுவுமில்லை.
   நான் என்ன சொல்ல சகா....முஸ்லிம்களை காப்பது காபிர்களை கொள்வதன் மூலமல்ல ...இசுலாமில் உள்ள கருத்துக்களை மக்களுக்கு எதிராக பயன்படுத்தாதவாறு கற்ப்பித்தல் மூலமே.
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகா

   நீக்கு
  18. //சரி அப்பொழுது யூதர்கள்,சிலை வணங்கிகளை இசுலாமில் கொல்ல சொல்லப்பட்டுள்ளது என்பதை ஏற்க்கிரீர்களா?//

   ஆட்சித் தலைவராக, ஒரு மாபெரும் சாம்ரஜ்யத்தை ஆட்சி செய்பவராக இருந்த முஹம்மது நபி மரணிக்கும்போது அவர்களது கவச ஆடை சில படிக் கோதுமைகளுக்காக ஒரு யூதரிடம் (underline) யூதரிடம் அடகு வைத்திருந்தார். இதன் மூலம் உணர வேண்டியது என்ன? முஹம்மது நபி ஆட்சியிலே, அவரது நாட்டில் யூதர் உள்ளிட்ட மாற்று மதத்தினர் ஒரு அரசருக்கே கடன் கொடுக்குமளவுக்கு அந்தஸ்த்து பெற்று இருந்தார்கள். குர்ஆனில் யூதர்கள்,சிலை வணங்கிகளை கொல்ல சொல்லி இருந்தால் அந்த யூதர் முஹம்மது நபியின் நாட்டில் வசதியாக வாழ்ந்து இருக்க முடியுமா? முஹம்மது நபி ஏன் அந்த யூதரை கொல்லவில்லை, முஹம்மது நபியே இஸ்லாத்தின் கட்டளையை மீறிவிட்டாரா? அல்லது முஹம்மது நபியே சொல்லாத / செய்யாத ஒன்றை இஸ்லாத்தில் புகுத்த முயற்சி செய்கிறீர்களா?

   சிந்தியுங்கள். எது உண்மை என்று புரியும்.

   நீக்கு
  19. சகா, மிகவும் நல்ல உதாரணத்தை கூறியுள்ளீர்கள். (இதுபற்றி மேலும் அறிய விருப்பம்...சுட்டி இருந்தால் தாருங்கள்) இதனால் தான் கூறுகிறேன் யூதர்களை,சிலை வணங்கிகளை எதிரியாக பாருங்கள், அவர்களை கொல்லுங்கள் என்ற வசனங்களை இடைச்சொருகல் என்று கூற சொல்கிறேன். முகமது நபியே இப்படி கூறி இருக்க வாய்ப்பு இல்லாத போது இறைவன் மட்டும் கூறிஇருக்க வாய்புண்டா என்று சிந்திக்கவும்.

   // முஹம்மது நபியே இஸ்லாத்தின் கட்டளையை மீறிவிட்டாரா? அல்லது முஹம்மது நபியே சொல்லாத / செய்யாத ஒன்றை இஸ்லாத்தில் புகுத்த முயற்சி செய்கிறீர்களா?// முகமது நபியோ அல்லாவோ சொல்லாத சொல்லி இருக்க வாய்ப்பு இல்லாத ஒன்று எப்படி குர்ஆனில் வந்தது சிந்தித்து பாருங்கள் சகா....பலவற்றை இடைச்சொருகல் என்று ஒதுக்குவதே இசுலாமிற்கு நல்லது,முஸ்லிம்களுக்கும்,பொது மக்களுக்கும் நல்லது...புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள் சகா....

   நீக்கு
 4. இஸ்லாமியர்களுக்கு குண்டு என்றாலோ, தீவிரவாதம் என்றாலோ என்னவென்றே தெரியாதுங்க.. இந்தியாவில் குண்டு வெடிச்சா அது இந்து தீவிரவாத சதி, இலங்கையில் வெடிச்ச விடுதலைப்புலி அல்லது சிங்கள இயக்கம், வேறு எங்காவது வெடிச்ச அது யூத சதி , பழி போட ஆள் உள்ள வரையில் வாயில் விரல் வைத்தால் கடிக்கத் தெரியாத பாப்பா என்பார்கள். இந்துக்கள் இந்து தீவிரவாதிகளை கைது செய்ய சொல்றாங்க. ஆனால் எந்த முஸ்லிமாவது சொல்றாங்களா பாருங்க.. மாட்டாங்க மாட்டவே மாட்டாங்க. ஏன்னா அவுங்க செய்வது மதப்பணி, அதக் குறை சொன்னா அல்லா கண்ணைக் குத்திடுமில்ல..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அங்கிதா வர்மா,
   சில முஸ்லிம்கள் என்ன கூறுவார்களோ அதை சரியாக கூறியுள்ளீர்கள்.
   // ஏன்னா அவுங்க செய்வது மதப்பணி, அதக் குறை சொன்னா அல்லா கண்ணைக் குத்திடுமில்ல..//
   இந்த அறியாமைதான் உலகில் நடக்கும் பல இசுலாம் சம்பந்தப்பட்ட குற்றங்களுக்கு காரணம். இதை போக்க நாம் முயற்சிக்க வேண்டும்.
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   நீக்கு
 5. பார்த்தீர்களா அந்த இஸ்லாமியரின் தந்திரத்தை.
  ஒரு சில இந்துக்களும் ஈடுபடுகிறார்கள்,
  ஒரு சில கிருத்துவர்களும் ஈடுபடுகிறார்கள் என்று ஒரு பயங்கரவாதத்தையே மதரீதியாக போதிக்கபட்டு வளர்க்கபட்ட இஸ்லாமியர்களை கொண்டுவந்து சமப்படுத்துகிறாராம். உலக புகழ் பெற்ற காட்டுமிராண்டிகள் தலிபான்களை கமலஹாசன் தனது படத்தில் ஒரு துளி காட்டிவிட்டார் என்பதிற்காக தமிழகத்தின் கருத்துரிமையை மறுத்து பயங்கரவாதம் செய்த மதவெறி கூட்டம். அமெரிக்காவில் இஸ்லாமியன் குண்டு வைத்தாலும் சரி, ஆப்கானிஸ்தானில் இஸ்லாமியன் குண்டு வைத்தாலும் சரி, இலங்கையில் இஸ்லாமியன் குண்டு வைத்தாலும் சரி, ஐதராபாத்தில் இஸ்லாமியன் குண்டு வைத்தாலும் சரி கண்டிகவே மாட்டார்கள் வேறு யார் தலையிலாவது பழி போடுவது என்ற மத கடமையை செய்து வருகிறார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @ வேகநரி
   உங்களிடமிருந்து பதில் வராது, இருந்தாலும் கேட்கிறேன்..

   அப்படியெனில் அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பு, சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பு, மாலேகான் குண்டு வெடிப்பு மற்றும் மெக்கா மசூதி குண்டு வெடிப்பு ஆகியவற்றில் ஈடுபட்ட புரோகித், பெண்சாமியார் சாத்வி, அசிமானந்தா, தயனந்த பாண்டே போன்ற ஆர்.எஸ்.எஸ் காரர்கள் பயங்கரவாதத்தையே மதரீதியாக போதிக்கபட்டு வளர்க்கபட்டவர்களா?

   நீக்கு
  2. வாங்க வேகநரி,
   சில முஸ்லிம்கள் எல்லா மதத்தினருக்கும் தீவிரவாதத்தில் இட ஒதுக்கீடு கேட்கின்றனர். இங்கே என்ன ஒரு உண்மையை நாம் புரிந்துகொள்ள வேண்டும் எனில் முஸ்லிம்கள் யாரும் தாங்கள் செய்வதை குற்றம் என்று ஏற்ப்பதில்லை. தங்கள் மதத்திற்காக செய்யும் புனித செயலாகவே கருதுகின்றனர். மேலும் சுவனத்தில் பெண்கள் கிடைக்கும் என்றும் நம்புகின்றனர். இதுபற்றி உங்களுக்கு தெரியாதது அல்ல.
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   நீக்கு
  3. @ Saha,
   //போன்ற ஆர்.எஸ்.எஸ் காரர்கள் பயங்கரவாதத்தையே மதரீதியாக போதிக்கபட்டு வளர்க்கபட்டவர்களா?///

   உங்களை நீங்களே ஏமாற்றி கொள்ளாதீர்கள் சகா.... இவர்கள் யாரும் பயங்கரவாதிகள் இல்லை என்று யாரும் வாதிடவில்லை. மேலும் இவர்கள் யாரும் முஸ்லிம்களை கொன்றால் சொர்க்கம் கிடைக்கும், பெண் கிடைக்கும் என்று குண்டு வைக்கவில்லை.

   குர்ஆனில் என்ன போதிக்கப்பட்டுள்ளது என்பதை தெள்ளத்தெளிவாக விளக்கியுள்ளேன்... இவர்களை தூக்கில் போட்டால் கூட இந்துக்கள் யாரும் இவர்களுக்கு வக்காலத்து வாங்க மாட்டார்கள்.ஆனால் நீங்கள் தான் உலகில் உள்ள எல்லா இசுலாமிய தீவிரவாதிகளுக்கும் வக்காலத்து வாங்குகிறீர்கள். வித்தியாசத்தை புரிந்துகொள்ளுங்கள்.
   நன்றி சகோ சகா....

   நீக்கு
  4. //இவர்கள் யாரும் முஸ்லிம்களை கொன்றால் சொர்க்கம் கிடைக்கும், பெண் கிடைக்கும் என்று குண்டு வைக்கவில்லை.

   குர்ஆனில் என்ன போதிக்கப்பட்டுள்ளது என்பதை தெள்ளத்தெளிவாக விளக்கியுள்ளேன்...//

   நேரடியாக கேட்கிறேன், குர்ஆனில் மாற்று மதத்தினரை கொன்றால் சொர்க்கம் கிடைக்கும், பெண் கிடைக்கும் என்று எங்கு கூறப்பட்டுள்ளது? விபரம் தர இயலுமா? மழுப்பாமல் பதில் சொல்லுங்கள்..

   நீக்கு
  5. சகோ சஹா,
   இப்போது குரான் பற்றிய விவாதம் தேவையா?? குரானில் இருந்து எதை வேண்டுமென்றாலும் காட்ட முடியும் என்றாலும் அது தேவையில்லை!!
   அதைத்தானே போன பதிவில் சொல்லி அந்த வ்சனங்கள் தேவையில்லாதது என நீக்க சொன்னோம். அது அப்போ, இப்போ இல்லை என மழுப்பி சென்றவர்தானே நீங்கள்!!!.


   ஒரு வன்முறை நடந்துள்ளது. அது சார் விசாரணம் காவல்துறை,நீதிம்னறம் ஆகியவற்றின் செயல்களை ஏற்பதே முக்கியம். என் மத ஆள் என்றால் சதிக் கோட்பாடு என்னும் கூக்குரலை தவிர்ப்பது நலம்!!

   இதுவரை விசுவரூபத்துக்கு சவுண்டு விட்ட அண்ணான் பீ.சே, ஜவிகருல்லா இதுவரை தீவிரவாதிகளாக குற்றம் சாட்டப்பட்ட மூமின்க்ளுக்கு என்ன் வழக்கு இதுவரை நடத்தி ருக்கின்றனர்? இதிலாவது ஏதேனும் செய்யட்டும்!!

   கைது செய்யப்படுபவர்களுக்கு குற்றத்தை மறுக்க இந்தியாவில் அனைத்து வாய்ப்புகளும் கிட்டுகிறது. அந்தவழியில் உத்வலாமே!!

   நன்றி!!

   நீக்கு
  6. //குரான் முந்தைய வேதங்களின் நினைவூட்டி மட்டுமே என 15.6, 15.9 கூறுகிறது இன்னும் ஒரு வசனம். இது மெதினாவில் ஹிஜ்ரா தொடக்கத்தில் கூறப்பட்டது.

   2:41. இன்னும் நான் இறக்கிய(வேதத்)தை நம்புங்கள்; இது உங்களிடம் உள்ள (வேதத்)தை மெய்ப்பிக்கின்றது; நீங்கள் அதை (ஏற்க) மறுப்பவர்களில் முதன்மையானவர்களாக வேண்டாம். மேலும் என் திரு வசனங்களைச் சொற்ப விலைக்கு விற்று விடாதீர்கள்; இன்னும் எனக்கே நீங்கள் அஞ்சி(ஒழுகி) வருவீர்களாக.

   அப்புறம் பைபிள் ஒரு ஆபாச புத்த்கம் என பி.ஜே அல்லாஹ் வை கேவலப் படுத்தலாமா??

   இல்லை இந்த வசனம் இறக்கிய போது அல்லாஹ் க்கு பைபிள் தெரியாது அப்புறம் யூதர்கள் (ஏ)மாத்திப் புட்டான் என்றால் அல்லாஹ் க்கு ஞாபக மறதியா!!

   இதைப் பாருங்க அப்படித்தான் தெரியுது!!

   2:106. ஏதேனும் ஒரு வசனத்தை நாம் மாற்றினால் அல்லது அதனை மறக்கச் செய்தால் அதைவிட சிறந்ததையோ அல்லது அது போன்றதையோ நாம் கொண்டுவருவோம். நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப்பொருட்களின் மீதும் சக்தியுள்ளவன் என்பதை நீர் அறியவில்லையா?

   இங்கே மறக்க மாட்டார் முக்மது(சல்) என்கிறது ம்ம்ம்ம்ம்ம்

   87:6. (நபியே!) நாம் உமக்கு ஓதக்கற்றுக் கொடுப்போம்; அதனால் நீர் அதை மறக்கமாட்டீர்-

   என்னங்க இது!!!
   //

   இவை தானே உங்கள் கேள்வி?

   முஹம்மது நபி மட்டுமே இவ்வுலகத்திற்கு தூதராக, இறைவனது வேதத்தை கொண்டுவரவில்லை, அவர் இறுதி தூதர், அவ்வளவே. அவருக்கு முன் பல தூதர்கள் இறைவனது வேதத்தை கொண்டுவந்தார்கள். ஆனால், அவைகளில் பல மனிதர்களால் மாற்றம் செய்யப்பட்டன. (சமீபத்திய உதாரணம் பைபிள், இன்றளவும் மாற்றப்பட்டுக்கொண்டு இருக்கிறது.) குரானே முழுமையான இறுதியான வேதம் என்று இறைவன் கூறுகிறான், அது மாற்றம் செய்யப்பட முடியாதது என்றும், உலக இறுதிவரை பாதுகாப்பு அளிப்பதாக கூறுகிறான்.

   இது ஒரு சந்தேகமா?

   நீக்கு
  7. சகோ சஹா,

   உங்களுக்கு தாக்கியா பண்ணியே காலம் ஓடுது. எதையாவது சொன்னால்,வெறு எதையாவது காட்டுவது. சென்ற பதிவில் சகோ மணி குரானில் இத்ர மதத்த்வரை வெறுக்க, ஆக்கிரமிக்க சொல்லும் வசனக்களைக் காட்டி இது இப்ப்போது தேவை இல்லை என்பதால் நீக்கிவிடலாமே என்றார்.

   அது குறித்த விவாதத்தில் குரான் பாதுகாக்கப்பட்டதா என்பதற்கு நான் கூறிய விடயங்களை வெட்டி ஒட்டி திசை திருப்புகிறீர்.

   குரானில் 109 வசனங்கள் பிற மதத்தவரை வெறுக்க,ஆக்கிரமிக்க சொல்கின்றன. பல ஹதிதுகளில் தெளிவாக கூறப்பட்டும் உள்ளது.

   இந்த சுட்டி பாருங்கள்!!!!!!!

   http://www.thereligionofpeace.com/quran/023-violence.htm

   http://wikiislam.net/wiki/Qur'an,_Hadith_and_Scholars:Friendship_with_Non-Muslims

   இவையெல்லாம் அப்போது மட்டும் என்றால், தேவை திருத்தம். இல்லை எனில் அப்படி குரானில் இருந்தாலும் அறிவு கொண்டு யோசித்து பின்பற்ற மாட்டோம் என பிற மதத்த்வர் போல் கூறலாமே!!!

   நன்றி!!

   நீக்கு
  8. //குரானில் 109 வசனங்கள் பிற மதத்தவரை வெறுக்க,ஆக்கிரமிக்க சொல்கின்றன. பல ஹதிதுகளில் தெளிவாக கூறப்பட்டும் உள்ளது.//   நீங்கள் குறிப்பிடும் வசனம் உங்கள் மீண்டும் பார்வைக்கு.

   --
   2:190. உங்களை எதிர்த்துப் போர் புரிபவர்களுடன் நீங்களும், அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள்; ஆனால் வரம்பு மீறாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை.
   2:191. (உங்களை வெட்டிய) அவர்கள் எங்கே காணக்கிடைப்பினும், அவர்களைக் கொல்லுங்கள்; இன்னும், அவர்கள் உங்களை எங்கிருந்து வெளியேற்றினார்களோ, அங்கிருந்து அவர்களை வெளியேற்றுங்கள்; ஏனெனில் ஃபித்னா (குழப்பமும், கலகமும் உண்டாக்குதல்) கொலை செய்வதை விடக் கொடியதாகும். இருப்பினும், மஸ்ஜிதுல் ஹராமில் அவர்கள் (முதலில்) உங்களிடம் சண்டையிடாத வரையில், நீங்கள் அவர்களுடன் சண்டையிடாதீர்கள்; ஆனால் (அங்கும்) அவர்கள் உங்களுடன் சண்டையிட்டால் நீங்கள் அவர்களைக் கொல்லுங்கள் - இதுதான் நிராகரிப்போருக்கு உரிய கூலியாகும்.
   2:192. எனினும், அவர்கள் (அவ்வாறு செய்வதில் நின்றும்) ஒதுங்கி விடுவார்களாயின் (நீங்கள் அவர்களைக் கொல்லாதீர்கள்); நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்போனாகவும், கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.
   2:193. ஃபித்னா(குழப்பமும், கலகமும்) நீங்கி அல்லாஹ்வுக்கே மார்க்கம் என்பது உறுதியாகும் வரை, நீங்கள் அவர்களுடன் போரிடுங்கள்; ஆனால் அவர்கள் ஒதுங்கி விடுவார்களானால் - அக்கிரமக்காரர்கள் தவிர(வேறு எவருடனும்) பகை (கொண்டு போர் செய்தல்) கூடாது.
   --

   இதிலென்ன சந்தேகம்? அடிக்க வருகிறவனை திருப்பி அடியுங்கள் என்று சொல்வது தவறா?

   --
   2:216. போர் செய்தல் - அது உங்களுக்கு வெறுப்பாக இருப்பினும் - (உங்கள் நலன் கருதி) உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது; நீங்கள் ஒரு பொருளை வெறுக்கலாம்; ஆனால் அது உங்களுக்கு நன்மை பயப்பதாக இருக்கும்; ஒரு பொருளை நீங்கள் விரும்பலாம், ஆனால் அது உங்களுக்குத் தீமை பயப்பதாக இருக்கும். (இவற்றையெல்லாம்) அல்லாஹ் அறிவான், நீங்கள் அறியமாட்டீர்கள்.
   2:217. (நபியே!) புனிதமான (விலக்கப்பட்ட) மாதங்களில் போர் புரிவது பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்; நீர் கூறும்: “அக்காலத்தில் போர் செய்வது பெருங் குற்றமாகும்; ஆனால், அல்லாஹ்வின் பாதையை விட்டுத் தடுப்பதும், அவனை நிராகரிப்பதும், மஸ்ஜிதுல் ஹராமுக்குள் (வரவிடாது) தடுப்பதும், அங்குள்ளவர்களை அதிலிருந்து வெளியேற்றுவதும் (-ஆகியவையெல்லாம்) அதைவிடப் பெருங் குற்றங்களாகும்; ஃபித்னா (குழப்பம்) செய்வது, கொலையைவிடக் கொடியது; அவர்களுக்கு இயன்றால் உங்கள் மார்க்கத்திலிருந்து உங்களைத் திருப்பிவிடும் வரை உங்களுடன் போர் செய்வதை நிறுத்த மாட்டார்கள்; உங்களில் எவரேனும் ஒருவர் தம்முடைய மார்க்கத்திலிருந்து திரும்பி, காஃபிராக (நிராகரிப்பவராக) இறந்துவிட்டால் அவர்களின் நற்கருமங்கள் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் (பலன் தராமல்) அழிந்துவிடும்; இன்னும் அவர்கள் நரகவாசிகளாக அந்நெருப்பில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்.”
   2:218. நம்பிக்கை கொண்டோரும், (காஃபிர்களின் கொடுமைகளால் நாட்டை விட்டு) துறந்தவர்களும், அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் செய்தோரும் அல்லாஹ்வின் (கருணையை) - ரஹ்மத்தை - நிச்சயமாக எதிர்பார்க்கிறார்கள்; மேலும், அல்லாஹ் மிகவும் மன்னிப்போனாகவும், பேரன்புடையோனாகவும் இருக்கின்றான்.
   --

   எதையுமே முழுதாக படிக்க மாட்டீர்களா? இது எப்படி என்றால் உதாரணமாக நான் , 'நீங்கள் ஒரு திருடனுக்கு உதவி செய்வதை வெறுப்பவர்' என்று சொல்லிய வாக்கியத்தில் 'நீங்கள் ஒரு திருடன்' என்று நான் சொன்னதாக திரிப்பது போன்றது.

   மேலும், அந்த வசனங்கள் யாருக்கு, எந்த சூழ்நிலையில் சொல்லப்பட்டது என்பதை அறிவுப்பூர்வமாக மறந்துவிடுவீர்களா? முஹம்மது நபி பங்குபெற்ற போர்களை பற்றி சொல்லும்போது அவருக்கு அந்த சூழ்நிலையில் இடப்பட்ட கட்டளைகளை, மொத்த சமுதாயத்திற்கும் சொல்லப்பட்டதாக நீங்கள் எண்ணுவது அறியாமை.

   தெரிந்துகொண்டே திரித்து கூறும் உங்களை என்னவென்று சொல்வது?

   நீக்கு
  9. சகோ சஹா,

   அல்பக்ராவில் இருந்து சில வசனங்களை சொல்லிவிட்டு உங்களுக்கு தோன்றிய விளக்கம் அளிக்கிறீர்கள். இந்த வசனம் சொன்ன சூழல் என்ன ஹதிதுகள் அடிப்படையிலோ அல்லது தஃப்சீர் அடிப்படையிலோ சொல்லுங்கள்.


   . இந்த வசனங்கள அப்போது மட்டும் என்றால் இப்போது குரானில் தேவையில்லை என ஆகி விடும். இப்போதும் பயன்படும் என்றால் எப்பூடி என் விளக்கினால் காஃபிர்கள் அறிந்து கொள்வோம்!!

   9 ஆம் சூராவை அப்பாலிக்கா பார்ப்போமா?

   9:19. (ஈமான் கொள்ளாத நிலையில்) ஹாஜிகளுக்குத் தண்ணீர் புகட்டுவோரையும் கஃபத்துல்லாஹ்வை (புனிதப்பள்ளியை) நிர்வாகம் செய்வோரையும் அல்லாஹ்வின் மீதும் இறுதிநாள் மீதும் ஈமான் கொண்டு, அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிந்தோருக்குச் சமமாக ஆக்கிவிட்டீர்களா? அல்லாஹ்வின் சமூகத்தில் (இவ்விருவரும்) சமமாக மாட்டார்கள் - அநியாயக்காரர்களை அல்லாஹ் நேர்வழியில் செலுத்தமாட்டான்.

   9:20. எவர்கள் ஈமான் கொண்டு, தம் நாட்டை விட்டும் வெளியேறித் தம் செல்வங்களையும் உயிர்களையும் தியாகம் செய்து அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் செய்தார்களோ, அவர்கள் அல்லாஹ்விடம் பதவியால் மகத்தானவர்கள் மேலும் அவர்கள்தாம் வெற்றியாளர்கள்.

   9:21. அவர்களுக்கு அவர்களுடைய இறைவன் தன்னுடைய கிருபையையும், திருப்பொருத்தத்தையும் (அளித்து) சுவனபதிகளையும் (தருவதாக) நன்மாராயம் கூறுகிறான்; அங்கு அவர்களுக்கு நிரந்தரமான பாக்கியங்களுண்டு.

   9:22. அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்குவார்கள், நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் (அவர்களுக்கு) மகத்தான (நற்) கூலி உண்டு.

   ஆகவே அல்லாஹ்வின் பாதையில் அறப்போர்(ஜிகாத்) செய்தால் சுவனம் கிட்டும்

   அறப்போர் செய்வது எப்பூடீ???

   நன்றி!!

   நீக்கு
  10. 2785. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
   இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, 'ஜிஹாத் என்னும் (இறைவழியில் புரியும்) அறப்போருக்குச் சமமான ஒரு நற்செயலை எனக்கு அறிவியுங்கள்" என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள் 'அப்படி எதையும் நான் காணவில்லை" என்று கூறிவிட்டு, 'அறப்போர் வீரன் (போருக்காகப்) புறப்பட்டுச் சென்றுவிட்டால் (அவனுக்கு) இணையான நற்செயல் புரிந்திட வேண்டி) நீ உன் வணக்கத் தலத்திற்குச் சென்று இடைவிடாமல் தொழுது கொண்டும் தொடர்ந்து நோன்பு நோற்றுக் கொண்டும் இருக்க உன்னால் முடியுமா?' என்று கேட்டார்கள். அதற்கு அம்மனிதர், 'அது யாரால் முடியும்?' என்று பதிலளித்தார்.
   "அறப்போர் வீரனின் குதிரை, அதைக்கட்டி வைத்துள்ள மேய்ச்சல் கயிற்றுக்கிடையே (கால்களை உதைத்துக் கொண்டு) சில குதிகள் குதித்துச் சென்றால் அதுவும் அவனுக்கு நற்பலனாக எழுதப்படும்" என்று அபூ ஹுரைரா(ரலி) கூறினார்.
   Volume :3 Book :56

   *
   1400. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் இறந்து அபூபக்ர் (ரலி) அவர்கள் (ஆட்சிக்கு) வந்ததும் அரபிகளில் சிலர் (ஸகாத்தை மறுத்தன் மூலம்) காஃபிர்களாகிவிட்டனர். (அவர்களுடன் போர்தெடுக்க அபூபக்ர் ளரலின தயாரானார்கள்.) உமர் (ரலி) அவர்கள் லா இலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை) கூறியவர் தமது உயிரையும் உடைமையையும் என்னிடமிருந்து காத்துக்கொண்டார் -தண்டனைக்குரிய குற்றம் புரிந்தவரைத் தவிர- அவரது விசாரணை அல்லாஹ்விடமே உள்ளது, என நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கும்போது, நீஙகள் எவ்வாறு இந்த மக்களுடன் போர் செய்ய முடியும் என்று கேட்டார்கள். அதற்_க அபூபக்ர் (ரலி) அவர்கள் உமரை நோக்கி அல்லாஹ்வின் மீது ஆணையாக தெழுகையையும் ஸகாத்தையும் பிரித்துப் பார்ப்போருடன் நிச்சயமாக நான் போர் செய்வேன். ஸகாத் செல்வத்திற்குரிய கடமையாகும் அல்லாஹ்வின் மீது ஆணையாக! நபி (ஸல்) அவர்களிடம் வழஙகி வந்த ஓர் ஒட்டகக் குட்டியை இவர்கள் வழஙக மறுத்தால்கூட அதை மறுத்ததற்காக நான் இவர்களுடன் போர் செய்வேன் என்றார்கள். இது பற்றி உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் மீது ஆணையாக! அபூபக்ரின் இதயத்தை (தீர்க்கமான தெளிவைப் பெறும் விதத்தில்) அல்லாஹ் விசாலமாக்கியிருந்தாலேயே இவ்வாறு கூறினார்கள். அவர்கள் கூறியதே சரியானது என நான் விளஙகிக்கொண்டேன் என்றார்கள்.
   Volume :2 Book :24
   *
   6550. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது
   இளைஞராயிருந்த ஹாரிஸா பின் சுராக்கா அல் அன்சாரி (ரலி) அவர்கள் பத்ருப் போரில் கொல்லப்பட்டார்கள். அப்பால் அவர்களின் தாயார் நபி (ஸலர்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே* (என் மகன்) ஹாரிஸாவுக்கு என்னிடமுள்ள அந்தஸ்தைத் தாங்கள் அறிந்துள்ளீர்கள். (இப்போது) ஹாரிஸாவுக்கு என்னிடமுள்ள அந்தஸ்தைத் தாங்கள் அறிந்துள்ளீர்கள். (இப்போது) ஹாரிஸா சொர்க்கத்தில் இருந்தால் நான் நன்மையை நாடி பொறுமை காப்பேன். இதுவன்றி நிலைமை வேறாக இருப்பின், நான் என்ன செய்வேன் என்பதைத் தாங்களே ஊகிக்கலாம் என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அடப்பாவமே* இழப்பால் துடிக்கிறாயோ* அதுவென்ன, சொர்க்கம் ஒன்றுதான் உள்ளதா? சொர்க்கங்க(ளின் படித்தரங்க)ள் நிறைய உள்ளன. (உன் மகன்) ஹாரிஸா (உயர்ந்த சொர்க்கமான) ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் சொர்க்கத்தில் இருக்கிறார் என்று கூறினார்கள்.
   Volume :7 Book :81

   நீக்கு
  11. //அல்பக்ராவில் இருந்து சில வசனங்களை சொல்லிவிட்டு உங்களுக்கு தோன்றிய விளக்கம் அளிக்கிறீர்கள்.//

   மேலே சகோ புரட்சிமணி மலலா சுடப்பட்டது குறித்து சொன்னதை பாருங்கள்.

   --
   கல்வி என்று நான் கூறிய வார்த்தையை மட்டும் கணக்கில் கொள்ளகூடாது சகா...தாலிபான்கள் ஏன் அப்பெண்ணை சுட்டார்கள் என்ற முழு விவரத்தையும் தாங்கள் அறிய முற்ப்படவேண்டும்....
   --

   இதுக்கு மட்டும் முற்ப்படவேண்டும், குரான் தொடர்பாக என்றால் முற்ப்பட கூடாதோ?

   //இந்த வசனம் சொன்ன சூழல் என்ன ஹதிதுகள் அடிப்படையிலோ அல்லது தஃப்சீர் அடிப்படையிலோ சொல்லுங்கள்.//

   இந்த வசனத்திற்கு நீங்கள் மிகவும் விரும்பும் தஃப்சீர், ஹதீது விளக்கமெல்லாம் தேவையில்லை, அந்த வசனங்களை முழுமையாக படித்தாலே போதும்.

   நீக்கு
  12. //இந்த வசனங்கள அப்போது மட்டும் என்றால் இப்போது குரானில் தேவையில்லை என ஆகி விடும். இப்போதும் பயன்படும் என்றால் எப்பூடி என் விளக்கினால் காஃபிர்கள் அறிந்து கொள்வோம்!!//

   குர்ஆன் வெறும் அறிவுரைகள் மட்டும் கொண்ட புத்தகம் அன்று, அதில் வரலாறுகள், அறிவியல் உண்மைகள், மனிதர்களுக்கு வழிகாட்டும் வாழ்வியல் நெறிமுறைகள், சட்ட திட்டங்கள், இஸ்லாமியர்கள் செய்ய வேண்டிய கடமைகள் என அனைத்தும் உள்ளது. உங்களுக்கு வரலாறு வேண்டாம் என்றால், பள்ளிக்கூடத்தில் வரலாறு பாடத்தை நீக்கிவிட சொல்வீர்களா?

   வரலாறை வரலாறாக பாருங்கள், அறிவியல் உண்மையை ஆய்வுக்கு உட்படுத்துங்கள், அறிவுரையை அறிவுரையாக பாருங்கள், அதை விடுத்து வரலாறை அறிவுரையாகவும், அறிவியல் உண்மையை வரலாறாகவும், அறிவுரையை அறிவியல் ஆய்வுக்கும் உட்படுத்தி உங்கள் "அறிவை(!?)" உலகிற்கு பறைசாட்டாதீர்கள்.

   நீக்கு
  13. சகோ சஹா,
   ஹி ஹி
   //இந்த வசனத்திற்கு நீங்கள் மிகவும் விரும்பும் தஃப்சீர், ஹதீது விளக்கமெல்லாம் தேவையில்லை, அந்த வசனங்களை முழுமையாக படித்தாலே போதும்.//
   ஏங்க??? குட்டு வெளிப்படும் என்றா?.

   குரானின் படி உலகின் ஒரே சரியான மதம் இஸ்லாம் மட்டுமே!!. இத்னைப் பரப்ப அறப்ப்போரும்(ஜிகாத்) செய்யலாம். இதுவே அல்லாஹ்விடம் உயர்ந்த செயல். இவருக்கு ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் என்னும் உயர்ந்த சுவனம் கிட்டும்!!!

   இதில் அறப்போர் என்பதை எப்படி வரையறுப்பது என குழப்ப முடியும்!!
   நீங்கள் ஹதித் ,தஃப்சீர் அடிப்படையில் பார்த்தால் குட்டு வெளிவந்து விடும் என்பதால்

   அல்லாஹ் சொல்லாத விளக்கங்களை சொல்ல வேண்டியதுதான்!!!
   அப்புறம் என்ன வரலாறு, முகமது(சல்) அவர்களின் செயல்களை ஹதிதில் இருந்துதானே காட்டி இருக்கிறோம்!!.

   ஆகவே குரானில் இக்காலத்துக்கு தேவையற்ற வன்முறை வசனங்கள் உண்டு. அதை அல்லாஹ் சொன்னாலும், சிந்தித்து நாகரிக காஃபிர் நாட்டில் வாழும் மூமின்கள் பின்பற்ற மாட்டோம் என்றால் பிரசினை தீர்ந்தது!!

   விள்க்குங்கள்!!
   **

   அப்புறம் பார்ப்பானையும் பாம்பையும் கண்டால் பார்ப்பானை அடி என பெரியார் சொன்னது திராவிட தீவிரவாதம்[நன்றி சகோ முஹம்மத் ஆஸிட் மன்னிக்கவும் ஆஸிக்] என்றால், காஃபிரைக் கண்ட இடத்தில் வெட்டுங்கள்[குரான் 9.5] என சொல்வது இஸ்லாமிய தீவிரவாதமே!!

   இஸ்லாமையும் நல்ல மதம் என் சொன்ன தந்தை பெரியாருக்கு இதுவும் வெணும்!!

   நன்றி!!!

   நீக்கு
  14. சகா, உங்கள் மதத்திற்காக இவ்வளவு வாதாடுகிறீர்கள்...உங்கள் மீது எனக்கு மதிப்பே வருகிறது.
   என்னுடைய வேண்டுகோள் எல்லாம் இதே வேகத்தை நீங்கள் மனிதத்தை வளர்ப்பதில் காட்டினால் உலகம் அமைதி பெரும்....ஆனால் இசுலாமினால் அமைதி எனபது இன்றைய நிலையில் துளியும் சாத்தியம் இல்லை. என்னுடைய பின்வரும் பதிவை படியுங்கள்....
   http://kelviyumnaaneypathilumnaaney.blogspot.in/2013_01_01_archive.html

   என்னுடைய கேள்வி மிகவும் சிறியது...
   .திரைப்படங்களில் இசுலாமியர்களை தீவிரவாதியாக காட்டினால் சமூக நல்லிணக்கம் கெடும், பிற மதத்தவர்கள் எங்களை தவறாக் பார்ப்பார்கள் என்கிறீர்களே ஆனால் குர்ஆனில் யூதர்களுக்கும்,கிருத்துவர்களுக்கும், சிலை வணங்கிகளுக்கும் எதிரான வசனங்கள் உள்ளதே அதனால் சமூக நல்லிணக்கம் கெடாதா? கெட்டு விட்டது என்றே நான் கூறுகிறேன்.

   சிந்தித்து குர்ஆனில் போதிய திருத்தத்தை கொண்டு வர முயலுங்கள்....மக்கள் மனதில் மாற்றத்தை ஏற்ப்படுத்துவோம் ...உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
   என்றும் மனிதத்துடன்
   இராச.புரட்சிமணி

   நீக்கு
 6. சகோ மணி,
  நல்ல பதிவு. கத்தி மீது நடப்பதுபோல் சொல்வதை தெளிவாக சொல்லிவிட்டீர்கள்.

  முதலில் உயிர் இழந்த சகோதரர்களுக்கு அஞ்சலியும், கொலைகாரர்களுக்கு கடும் கண்டனமும்.

  நாம் நம் செயலுக்கு மட்டுமே பொறுப்பு ஆக முடியும்.என் மதம்,இனம்,மொழி சார்ந்த்வன் செயலை நான் நேரடியாக அறியாத பட்சத்தில், ஊடகம், நீதிமன்றம் சொல்வதை ஏற்கிறோம்.சதிக் கோட்பாடுகளைத் தவிர்த்து பார்ப்பதே நலம்.

  குண்டு வைத்தவன் யாராக இருந்தாலும்,பிடிபட்டு நீதிமன்றத்தில் வழக்காகி குற்றவாளி ஆனால் ஏற்க வேண்டும் அவ்வள்வுதான்.


  வேறு மத ஆள் குற்றவாளி என்றால், மரண தண்டனை கொடு,ஆசிட் ஊத்து என்பதும், தங்கள் ஆள் என்றால் சதிக் கோட்பாடு என்பதும் தவிர்ப்பது நல்லது!!

  குற்றம் சாட்டப்பட்ட தங்கள் மதத்த‌வர் அப்பாவி எனக் கருதுவோர், அவர்களின் தலைவர்கள் மூலம் நீதிமன்றத்தில் போராட வேண்டுகிறோம்.அதை விட்டு புரளி கிளப்பாமல் இருக்க வேண்டுகிறோம்.

  இந்திய முஜாகிதீனை சேர்ந்த இருவர் ஹைதராபாத் தில்சுக் நகரை நோட்டம் விட்டதாக காவல்துறை கூறுகிறது.

  http://www.ndtv.com/article/india/the-pune-link-to-the-hyderabad-bomb-blasts-334252?pfrom=home-otherstories

  Two men, allegedly Indian Mujahideen or IM terrorists, arrested last year by the Delhi Police for the serial blasts in the heart of Pune in August 2012, had reportedly recced Dilsukhnagar on a motorcycle in July 2012 as a location for a possible terror strike, allegedly on the instructions of Riyaz Bhatkal, one of founders of the IM, according to the Delhi Police.

  பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று!!.

  இது இல்லாமல் சாமான்ய மக்கள் தங்களைப் பாதுகாக்க ஒற்றுமையாகவும்,விழிப்போடும் இருக்க வேண்டிய அவசியம் வந்து விட்டது.
  நாட்டின் பாதுகாப்பில் ஒவ்வொருவரும் பங்கு எடுக்க வேண்டும்.

  நன்றி!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க சகோ சார்வாகன்,
   தாங்கள் கூறிய கருத்தை நான் முழுவதும் ஏற்கிறேன்.
   தங்கள் கருத்தை சகாவிற்கு புரியவைக்க முயன்றமைக்கும் நன்றி
   ஒவ்வொரு முஸ்லிம்களுக்கும் நாம் விழிப்புணர்வு ஏற்ப்படுத்த வேண்டும் .
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ

   நீக்கு
 7. மிக சரியாக சொன்னீர்கள் நண்பர் புரச்சிமணி.
  //கொன்றால் சொர்க்கம் கிடைக்கும் பெண் கிடைக்கும் என்று குண்டு வைக்கவில்லை//
  இஸ்லாம் தவிர்ந்த வேறு எந்த மதமும் இப்படி சொல்லி ஆசை காட்டி பயங்கரவாதம் வளர்க்கவில்லை. வேற்று மதத்தவர்கள் தீவிரவாதம் செய்வது அரிதிலும் அரிது. அப்படி செய்தால் அந்த மதத்தை சேர்ந்தவர்களே கண்டிப்பபார்கள். புலி தமிழர்களை கொண்ட தீவிரவாத இயக்கம்.இந்து மத இயக்கம் இல்லை. புலியை போட்டு தாக்கி தமிழர்கள் பலர் கட்டுரை எழுதி இருக்கின்றனர்.ஆனால் இஸ்லாமிய பயங்கரவாதி இஸ்லாமிய மத பணிக்காக குண்டு வைத்து அப்பாவிகளை கொலை செய்தால் அதை லேசாக கண்டித்து கூட கட்டுரை எழுதவே மாட்டார்கள். ஒரு கண்டனம் என்ற சொல்லு கூட வராது. ஆனால் அந்த பயங்கரத்தை வேறு யார் தலையிலாவது போட்டு தங்கள் மத கடமையை நிறைவேற்ற அலைந்து கொண்டிருப்பார்கள். தலிபான்களுக்கு எதிராக போராடிய போராளி மாலாலாவை தமிழ் பேசும் இஸ்லாமியர்கள் ஆதரிக்கவில்லை பதிலாக தலிபான்களை ஆதரித்தார்கள். பாகிஸ்தானில் மாலாலாவுக்கு ஆதரவு இருந்தது. மாலாலா தமிழகத்தில் இருந்திருந்தால் தமிழ் பேசும் இஸ்லாமியர்கள் அவரை ஆபாசமாக இழிவுபடுத்தி இஸ்லாமிய பெயர் தாங்கியே உனக்கெல்லாம் கல்வி, பெண் உரிமை எல்லாம் தேவைபடுகிறதோ என்று திட்டி தீர்த்திருப்பார்கள்.

  பதிலளிநீக்கு
 8. இஸ்லாமியர்கள் அனைவரும் தீவிரவாதிகள் கிடையாது. அவர்களில் சில நல்லவர்களும் உண்டு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சகோ தமிழன்,
   என்ன சொல்ல வருகிறீர்கள்?. முஸ்லீம்களில் பலர்[99%] அப்பாவிகள்.சிலர்[1%] மத்வாதிகளால் த்வறாக மூளைச்சலவை செய்யப்பட்டு பயன்படுத்தப்படுகிறார்கள்.
   இதற்கு மதப்புத்த்க வசனம் துணை போகிறது!!
   ஆண்டவனின் பேச்சுக்கு எதிர்பேச்சு கிடையாது!!

   இதனைத் தவிர்க்க வன்முறை மதபுத்த்க வசனம்& விளக்கம் இப்போது தேவையில்லை என புரிதல் ஏற்பட்டால் பிரச்சினை தீர்ந்து விடும்.

   நன்றி!!

   நீக்கு
  2. வாங்க தமிழன்,
   சில நல்லவர்கள் அல்ல பல நல்லவர்கள் உள்ளனர். ஆனால் அந்த நல்லவர்களையும் கெடுக்க பிரச்சாரம் நடக்கின்றது. இதை நாம் தடுத்தே ஆகவேண்டும்.....அதாவது விழிப்புணர்வு ஏற்ப்படுத்துவதன் மூலம். நாம் இதை செய்யாவிடில் மதவெறியர்கள் எல்லா முஸ்லிம்களையும் பிற மத மக்களுக்கு எதிராக செயல்பட வைத்துவிடுவார்கள்.
   நாம் கவலைப்படுவது முஸ்லிம்களுக்கும் சேர்த்துத்தான்....
   தங்கள் வருகைக்கு மிக்க நன்றி

   நீக்கு
 9. இந்த சகா என்பவன் ஆந்திராவில் குண்டு வைத்த கும்பலுடன் தொடர்பில் உள்ளவன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க சகோ ராவணா,
   நமது சகோ சகா அறியாமையில் உள்ளார்....மேலும் அவர் மனதும் புண்பட்டுள்ளது. அவருக்கு போதிய விழிப்புணர்வை ஏற்ப்படுத்துவதே நமது கடமை ராவணா....இந்த மாதிரி கருத்துக்களை தவிர்க்க முயலுங்கள்.
   தங்கள் வருகைக்கு மிக்க நன்றி

   நீக்கு
 10. அன்புள்ள புரட்சி மணிக்கு வணக்கம், \

  இதுவரை இந்தியாவில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளின் பின்னணியில் ஹிந்துத்துவா இயக்கங்கள்தான் இருந்துள்ளது என்கிற சம்பவம் நிரூபிக்கப்பட்ட உண்மை.

  ஹிந்துத்துவா இயக்கங்களின் சுவாமி அஸிமானந்தா, கர்னல் ஸ்ரீகாந்த் புரோகித், பெண் சாமியார் பிரக்யா சிங் தாக்கூர் மற்றும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் முக்கிய தலைவர் சுனில் ஜோஷி, சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டை வைத்த ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் ராஜேந்திர சவுத்ரி மற்றும் தொடர் குண்டு வெடிப்பிற்கு தேவையான ஆட்கள், பணம் போன்றவற்றை கொடுத்து உதவிய அபினவ் பாரத் என்கிற இந்து அமைப்பு இதுவெல்லாம் நிரூபிக்கப்பட்ட உண்மை.

  இந்த குண்டு வெடிப்புகளை நடத்தாத ஒரு சமூகம் குற்ற பரம்பரையா சித்தரிக்கபட்டு அந்த சமூகத்தின் அப்பாவி இளஞ்சர்கள் சிறையில் வாடியதும், அவர்களை தீவிரவாதிகள் என்று பக்கம் பக்கமாக எழுதி தினமணி, இந்தியா டுடே, தினமலர், மற்றும் ஹிந்துத்துவா இயக்கங்கங்கள், ஹிந்துத்துவா ப்ளாகர்ஸ் எல்லோரும் எழுதி சந்தோசப்படும் பொழுது எங்கே போனீர்கள் புரட்சி மணி.

  உண்மையான குற்றவாளிகளை கண்டு பிடிக்க வேண்டும் என்கிற நோக்கிலும், எடுத்த உடன் பழியை சிறுபான்மை மக்கள் தலையில் போட்டு தப்பிக்கும் வேலை இந்த முறை வேண்டாம் என்கிற ரீதியில் எழுதப்பட்டதே இந்த பதிவு. குண்டு வெடித்த உடனேயே இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் ஐயருக்கு இது காசாபின் தூக்கு பதில்தான் என்று ஆருடம் கூற உரிமை இருக்கும் பொழுது இதில் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என்று நடுநிலையாக எழுதுவதற்கு உரிமை இல்லையா?

  சிந்திக்கவும் என்றும் நடுநிலை தவறாது. உங்களது வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க சிந்திக்கவும் தோழர்களே,
   //இதுவரை இந்தியாவில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளின் பின்னணியில் ஹிந்துத்துவா இயக்கங்கள்தான் இருந்துள்ளது என்கிற சம்பவம் நிரூபிக்கப்பட்ட உண்மை.//
   ஒரு சில சம்பங்களை வைத்துகொண்டு உண்மை என ஏன் பொய் உரைக்கிறீர்கள்.
   அனைத்து சம்பவங்களையும் பட்டியல் போட்டு யார் காரணம் என பாருங்கள் உண்மை உங்களுக்கு உண்மையில் புரியும்.

   ஹிந்துத்துவா இயக்கங்கள் ஒருசில குண்டுவெடிப்புகளுக்கு காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. சம்பந்தப்பட்டவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்பதே என் நிலைப்பாடு.

   நான் எங்கே போனேன் என்ற கேள்விக்கு நான் எழுத்துலகிற்கு புதிது என்பதே பதிலாக இருக்கும். அதேநேரத்தில் பெரும்பாலான தீவிரவாத செயல்களை யார் புரிந்தார்கள் என்ற உண்மையும் உலகிற்கு நன்கு தெரியும்.

   //இந்த குண்டு வெடிப்புகளை நடத்தாத ஒரு சமூகம் குற்ற பரம்பரையா சித்தரிக்கபட்டு//
   ஒரு சிலர் குற்றம் செய்ததற்காக ஒட்டுமொத்த சமூகத்தின் மீதும் பழி போடுதல் மடமை. அதே நேரத்தில் இசுலாமிய சிந்தனைகளை அடிப்படையாக கொண்டு சிலர் அப்பாவி மக்களை கொல்லும்பொழுது அவர்களை இசுலாமிய தீவிரவாதிகள் என்று ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. இது பல நல்ல முஸ்லிம்களின் மனதையும் புண்படுத்தியுள்ளது என்பதை அறிகிறேன். இதற்க்கு மாற்றாக அவர்களை எப்படி அழைக்கலாம் என்று தாங்கள் பரிந்துரைத்தால் நலம்.

   //குண்டு வெடித்த உடனேயே இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் ஐயருக்கு இது காசாபின் தூக்கு பதில்தான் என்று ஆருடம் கூற உரிமை இருக்கும் பொழுது இதில் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என்று நடுநிலையாக எழுதுவதற்கு உரிமை இல்லையா//
   நிச்சயம் உங்களுக்கு உண்டு. அதே நேரத்தில் நீங்கள் கசாப்,அப்சல் ஆகியோரின் தூக்கினால் கூட இது நடந்திருக்க வாய்ப்பு உள்ளது என்று ஏன் நீங்கள் சிந்தித்து எழுதவில்லை?. அவ்வாறு நீங்கள் சிந்தித்து எழுதியிருந்தால் இப்பதிவை,பின்னூட்டத்தை நான் எழுதி இருக்க மாட்டேன்.

   //சிந்திக்கவும் என்றும் நடுநிலை தவறாது.//
   நான் மேற்சொன்ன விதத்தில் நீங்கள் சிந்திக்கவில்லை,சிந்தித்திருக்க வேண்டும் என்று மறுபடியும் எனது அன்பு நண்பர்களுக்கு கூற எனக்கு உரிமை உண்டு என நினைக்கிறேன்.

   நண்பர்களே இசுலாமில் ஓட்டியுள்ள தீவிரவாதம் என்ற கரையை துடைக்க நாம் விரும்புகிறேம். என்னுடைய எழுத்தின் நோக்கம் அதுவே. இருப்பினும் இசுலாமில் உள்ள சில விடயங்களை திருத்தாமல் இதை செய்ய முடியாது என்பதால் தான் இசுலாமின் சில கருத்துக்களை விமர்சிக்கிறேன். மேலும் விமர்சிப்பேன் முஸ்லிம்களின் நலனுக்காக.

   இசுலாமிய தீவிரவாதம் என்ற வார்த்தை ஒட்டுமொத்த முஸ்லிம்கள் மனதையும் புண்படுத்தக் கூடியது. இதை நீக்க வேண்டும். இதை நீக்க மிகவும் அறிவார்ந்த முறையில் சிந்தித்து செயல் பட வேண்டும். இந்த முயற்சியை யாரும் முன்னெடுத்த மாதிரி தெரியவில்லை. இந்த நிலையில் ஒவ்வொரு மதத்தையும் தீவிரவாதத்தால் அடையாளப்படுத்த சிலர் அறியாமையில் விரும்புகின்றனர். அந்த அறியாமைக்கு நாம் துணை போக கூடாது என்பதால் தான் இந்த பதிவு.

   சிந்திக்கவும் நடுநிலை தவறாமல் இருக்க பல தரப்பின் நியாய அநியாங்களை பற்றியும் அலசுங்கள். முஸ்லிம்களுக்கு நமது ஆறுதல்,அரவணைப்பு தேவைதான் அதே நேரத்தில் அவர்களுக்கு அதீத செல்லம் கொடுத்து இசுலாமில் உள்ளவைகள் யாவும் சரி, முஸ்லிம்கள் செய்வதெல்லாம் சரி என்ற எண்ணத்தை ஏற்ப்படுத்தி விடக் கூடாது. நம்முடைய நோக்கம் முஸ்லிம்களின் நலனாக இருக்கவேண்டுமே ஒழிய இசுலாமின் நலமாக இருக்க வேண்டியதில்லை எனதை புரிந்துகொள்ளுங்கள்.
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
   என்றும் மனிதத்துடன்
   இராச.புரட்சிமணி

   நீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...