பலரும் இந்த முஸ்லீமை பாராட்டுகின்றனர். அவர் அப்படி என்ன சாதனை செய்துவிட்டார்?
சில முஸ்லிம்கள் அச்சத்திலும்,சில முஸ்லிம்கள் ஆதரித்தும்,பல முஸ்லிம்கள் ஒன்றும் அறியாமலும் இருக்கின்ற பொழுது பாகிஸ்தான் ராணுவத்தினர் இரண்டு இந்திய ராணுவ வீரர்களின் தலையை துண்டித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாகிஸ்தான் பிரதமர் அஜ்மீர் தர்காவிற்கு (இன்று) வரும் பொழுது வரவேற்ப்பு தரமாட்டேன் என்று தைரியமாக கூறியுள்ளார் அஜ்மீர் தர்காவின் தலைமை பொறுப்பில் உள்ள திவான் சையத் ஜைனுல் அபெதீன் அலி கான்.
இவருக்குத்தான் இப்பொழுது பலரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கின்றனர்.
ராணுவ வீரரின் தலையை இந்தியாவிடம் ஒப்படைத்திருக்க வேண்டும், இந்தியர்களிடமும்,சம்பந்தப்பட்ட குடும்பத்தினரிடமும் பாகிஸ்தான் பிரதம மந்திரி மன்னிப்பு கேட்டிருக்கவேண்டும், அதை செய்யாததால் அவரை நான் வரவேற்க போவதில்லை என்று சுபி வழியை பின்பற்றும் திவான் தெரிவித்துள்ளார்.
திவான் தான் பிற நாட்டு தலைவர்களை வரவேற்ப்பது வழக்கம். இவரின் இந்த முடிவு இசுலாம் என்று சொல்லி இந்திய முஸ்லிம்களை ஏமாற்ற முடியாது என்பதை பாக்கிஸ்தானிற்கு உணர்த்தும் என்று நம்புகிறேன்.
இவர் இப்படி பேசியது பொதுமக்கள் மத்தியில் இவருக்கு நற்பெயரை வாங்கிதந்துள்ளது. அமைதியாக இருக்கும் பல நல்ல முஸ்லிம்களின் குரலாகவே இதை பலரும் பார்க்கின்றனர்.
முஸ்லிம்கள் பலரும் தங்கள் மனிதநேய,மதச் சார்பற்ற கருத்துக்களை சுதந்திரமாக தெரிவிக்க வேண்டும்.மதத்தையே கட்டிக்கொண்டு அழாமல் மனித நேயத்திற்கு முக்கியத்துவம் தரவேண்டும்.
திவான் சையத் ஜைனுல் அபெதீன் அலி கான் அவர்களின் இந்த செயல் அவரின் தனிப்பட்ட எதிர்ப்பாக இருந்தாலும் இது பாரட்டுக்குரியது. நமது பாராட்டையும் அவருக்கு பதிவு செய்வோம்.
என்று மனிதத்துடன்
இராச.புரட்சிமணி
Hats off Thiwan..
பதிலளிநீக்குhe deserves....
நீக்குHats off Thiwan..
பதிலளிநீக்கு"சுபி வழியை பின்பற்றும் திவான் தெரிவித்துள்ளார்."
பதிலளிநீக்குமுதலில் படிக்க தொடங்க முன் இது நடக்க வாய்ப்பில்லை என்றே நினைத்தேன். ஆனால் "சுபி வழியை பின்பற்றும் திவான் தெரிவித்துள்ளார். " என்ற வசனம் வந்தவுடன் இது சாத்தியம் தான் என்பதை புரிந்து கொண்டேன்.
இதுவே வகாபிகளின் இடத்திற்க்கு பாக்கி பிரதமர் போயிருந்தால் சிவப்பு கம்பள வரவேற்ப்பு வழங்கப்பட்டிருக்கும்.
தாங்கள் கூறியதில் உண்மை இல்லாமல் இல்லை.....தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
நீக்குproud be a indian
பதிலளிநீக்குசகோ மணி,
பதிலளிநீக்குவணக்கம் நல்ல பதிவு,
அஜ்மீர் பெரியவரின் செயல் பாராட்டுக்கு உரியது.ஆனால் பாகிஸ்தானின் அரசியல் தலைவர்கள் இராணுவத்தின் அடிமைகள். என்ன் நடக்கிறது என அவர்களுக்கு தெரியாது.
அரசியல் தலைகளில் உயிருக்கு கூட உத்தரவாதம் கிடையாது.ஆட்சி இழந்தால் வெளிநாடே பாதுகாப்பு என ஓடுதலே சரி.
தினமும் வெடிக்கும் குண்டுகள், தொடரும் சிறுபான்மையினர் மீது தக்குதல். இன்று கிறித்த்வர்கள் மீது மத நிந்தனை புகார் கூறி தாக்குதல், 100க்கும் மேற்பட்ட வீடுகள் எரிப்பு...
ஆகவே எய்தவன் இராணுவம் இருக்க பிரதமரான அம்பை நோவது ஏன்?
**
அவர் இராணுவத்தின் மீதுள்ள பயம் போக தர்கா வரலாம். மந்திரித்து தாயத்து கட்டிவிட்டால் நிம்மதியாக தூங்குவார்!!
*
பாகிஸ்தான் ,வங்க தேசம்,இலங்கையை நினைத்தால் இந்து மக்களை பெரும்பானமை மத மக்களின் தயவில் வாழும் நிர்ப்பந்தத்தில் தள்ளிய அரசியல் தலைகள் மீதே கோபம் வருகிறது.
நன்றி!!
வாங்க சகோ,
நீக்குதாங்கள் கூறுவது யாவும் உண்மையே.
எனக்கும் பாக்கிஸ்தான் மீது ஒருபுறம் இரக்கமே உண்டாகிறது. இதுபற்றி ஒரு பதிவில் அலசுவோம்.
//அவர் இராணுவத்தின் மீதுள்ள பயம் போக தர்கா வரலாம். மந்திரித்து தாயத்து கட்டிவிட்டால் நிம்மதியாக தூங்குவார்!!
//
:) :)
//பாகிஸ்தான் ,வங்க தேசம்,இலங்கையை நினைத்தால் இந்து மக்களை பெரும்பானமை மத மக்களின் தயவில் வாழும் நிர்ப்பந்தத்தில் தள்ளிய அரசியல் தலைகள் மீதே கோபம் வருகிறது.//
ஏன் கிருத்துவ மக்கள் பாதிக்கப்படவில்லையா? ஏன் முஸ்லிம்கள் பாதிக்கப்படவில்லையா? பெரும்பான்மை எந்த மதம் என்பது முக்கியமில்லை அவர்கள் மதவெறி அற்றவர்களாக இருக்க வேண்டும் என்பதே முக்கியம்.
மதங்களற்ற சமுதாயத்தை உருவாக்குவோம் சகோ....இதுவே மக்களுக்கு நிரந்தர தீர்வை தரும்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
//பாகிஸ்தான் வங்க தேசம் இலங்கையை நினைத்தால் இந்து மக்களை பெரும்பானமை மத மக்களின் தயவில் வாழும்//
நீக்குசகோ, இந்து மக்கள் என்ற அடிபடையில் பாகிஸ்தான்,வங்கதேசம் இஸ்லாமிய நாடுகளில் வாழும் பரிதாபமான நிலையில் உள்ள இந்துக்களை இலங்கையில் வாழும் இந்துக்களுடன் ஒப்பிடவே முடியாது.பவுத்த மக்களின் ஊரில் உள்ள இந்து ஆலய விழாவுக்கு போய் இருந்தேன்.பெரிய அளவில் நடந்தது பௌத்தர்களையும் அங்கே காண தக்கதாக இருந்தது.
அந்த பெரியவருக்கு எனது பாராட்டுகள்.
பதிலளிநீக்குஉண்மையா ?
பதிலளிநீக்குபொய்யாகிப்போன முகம்மதுவின் போதனைகள்
//muslim/Book 041, Number 7050:அயீஷா கூறியதாவது: ஒரு முறை பாலைவனத்தில் இருக்கும் அரபியர்கள் அல்லாவின் தூதரிடம் வந்து எப்போது இறுதி தீர்ப்பு நாள் வரும் என்று கேட்டார்கள். அதற்கு அவர்களில் இருப்பவர்களிலேயே இளைய சிறுவனைப் பார்த்து “இறுதித் தீர்ப்பு நேரம் வரும்போது இந்த சிறுவன் உயிரோடு இருப்பானேயாகில், இந்த சிறுவன் முதியவனாகியிருக்க மாட்டான்.”