பல பகுத்தறிவுப்புலிகள், பெண் விடுதலைக்கு பாடுபடுபவர்கள்,
சாதியை ஒழிப்பவர்கள், முற்ப்போக்குவாதிகள் என்று தங்களை கூறிக் கொள்பவர்கள் காதல் தவறு இல்லை என்று சமீபகாலமாக கூறி வருகிறார்கள்.
ஆணோ பெண்ணோ 18 வயதை அடைந்துவிட்டால் யாருடன் வேண்டுமானாலும் வாழலாம் அதை கேட்க யாருக்கும் உரிமை இல்லை என்கின்றனர்.
எனக்கு ஒரு சந்தேகம் இதை அந்த போராளிகள் தீர்த்து வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
ஒருவன் ஏற்க்கனவே திருமணமான பெண்ணை துரத்தி துரத்தி
காதலித்து அவள் சம்மதத்தையும் வாங்கி விடுகிறான்.
எனக்கு கணவனும் வேண்டாம் குழந்தையும் வேண்டாம் காதலன் தான் வேண்டும் என்கிறாள் அந்தப்பெண்.இப்பொழுது அந்த பெண்ணின் கணவன் மற்றும் குழந்தைகள் கதி என்ன.? சம்பீபத்தில் இப்படி ஒரு செய்தியை படித்ததாக ஞாபகம். (இப்படி காதல்,கள்ளக்காதல் பற்றி பல கேள்விகளை நீங்களே கேட்டுப்பார்க்கலாம்)
சமூகப்போராளிகளே உங்கள் தீர்ப்பு என்ன?
காதல் சரி என்று பிரச்சாரம் செய்பவர்கள் கள்ளக்காதலுக்கும் நாளைக்கு பிரச்சாரம் செய்வார்களா?
நேற்று காதல் ஏற்றுக்கொள்ளப்படவில்லை இன்று அதற்க்கு ஆதரவு தெரிவிக்கிறீர்கள் .
கள்ளக்காதல் இன்று ஏற்றுக்கொள்ளப் படவில்லை நாளை ஆதரவு தெரிவிப்பீர்களா?
ஆண்- ஆண் , பெண் - பெண் உறவு மக்களிடையே ஆதரவு இல்லாவிட்டாலும் அரசாங்கம் அங்கீகரித்து விட்டது. இதையும் நாளை ஆதரிப்பீர்களா?
மனிதர்கள் -மிருகங்கள் உறவையும் நீங்கள் நாளை ஆதரிப்பீர்களா?
நீங்கள் எந்த பாதையில் செல்கிறீர்கள் - மனித சமுதாயத்தை எப்படி வழி நடத்தி செல்கிறீர்கள் என்பதை நீங்களே உணர்ந்து கொள்ளுங்கள்.
நீங்கள் ஆதரித்தாலும் ஆதரிக்காவிட்டாலும் இது நடந்தே தீரும்.இவை எல்லாமே முன்னொரு காலத்தில் நடந்தவைதான்.இவை அனைத்திற்கும் தாங்கள் தயாரா?
என்னுடைய நிலைப்பாடு.............?