சமீபத்தில் சகோ சார்வாகன் தளத்தில் ஆன்மா வேறு உயிர் வேறு என்ற பொருளில் விவாதம் நடந்தது. இது பற்றி என்னுடைய கருத்தை பதிவு செய்யவே இப்பதிவு.
உயிர் வேறு ஆன்மா வேறு என்று சிலர் நினைக்கின்றார்கள். எனக்கு அவ்வாறு தோன்றவில்லை. உயிர் என்பதும் ஆன்மா என்பதும் ஒன்றையே குறிப்பதாக நான் நினைக்கின்றேன்.
உயிர் என்பது இன்றைய மருத்துவ ,அறிவியல்,நடைமுறை சொல். ஆன்மா என்பது பண்டைய அறிவியல் சொல்.
ஆன்மிகம் என்பது ஆன்மாவை (உயிர்) பற்றிய படிப்பு,அறிவியல்,தேடல்.
ஆன்மிகம் என்பது தான் யார் (அதாவது உயிர் =ஆன்மா,இறைவன் என்பது என்ன) என்று அறிய முற்ப்படும் ஒரு தேடல். பக்தி வேறு..ஆன்மிகம் வேறு. பக்தி ஆன்மீகத்திற்கு வழி வகுக்கலாம்.
ஆன்மாவை சிலர் மனதோடும்,நினைவுகளோடும் தொடர்பு படுத்தி குழப்பிக்கொள்கின்றனர்.
ஆன்மா=உயிர் என்பதே பிரதானம். இதனோடு நெருங்கிய தொடர்பில் இருப்பது மனம்...பிறகு புத்திசாலித்தனம்.
உயிர் என்பதும் மனம் என்பதும் புத்திசாலித்தனம் என்பதும் வேறு வேறானாவை.
உயிர்=ஆன்மா இல்லாமல் மனம் இல்லை. மனம் இல்லாமல் அறிவுக்கூர்மை இல்லை.
ஆன்மா=உயிர் இல்லாமல் உடல் இயக்கம் பெறுவதில்லை.
பிணத்திற்கு இந்த மூன்றும்(ஆன்மா =உயிர்,மனம்,அறிவு) இருக்காது.எதுவும் இருக்காது...
உடல் இல்லாமல் இந்த மூன்றும் பிறருக்கு தெரிவதில்லை.
அறிவியலில் சூரியன் இல்லாமல் எந்த கோள்களும் இயங்க முடியாது,எந்த உயிரும் உயிர் வாழ முடியாது.
அதுபோலத்தான் ஆன்மா =உயிர் இல்லாமல் யாரும் எதுவும் உயிர் வாழ்வதில்லை.
சந்திரன் சூரியனை சார்ந்தே ஒளி அளிக்கின்றது. அதுபோலத்தான் மனமும் ஆன்மாவை சார்ந்தே உள்ளது.
புத்தி=அறிவுக்கூர்மை என்பது மனதோடும் ஆன்மாவோடும் தொடர்புடையது.
உயிர் வாழ் உயிரினங்களுக்கு உயிர் உள்ளது என்பதும், எல்லா உயிர்களுக்கும் ஆன்மா உள்ளது என்பதும் ஒருவகையில் ஒரே சொற்றொடரே.
====================================================
எந்த உயிர்களையும் துன்புறுத்தாமல் வாழவேண்டும் என்ற கருத்தியலைத்தான் வள்ளலார் ஆன்ம நேய ஒருமைப்பாடு என்றார். உலகில் இதை மிஞ்சிய சித்தாந்தம் ஏதும் இல்லை.
இந்திய மதங்களின் ஆணிவேரே இந்த கொள்கைதான்.
----------------------------------------------------------------------------------------------------------
உங்களின் கருத்துக்கள் வரவேற்க்கப்படுகின்றன.
புரட்சிமணி,
பதிலளிநீக்கு//உயிர்=ஆன்மா இல்லாமல் மனம் இல்லை. மனம் இல்லாமல் அறிவுக்கூர்மை இல்லை.
ஆன்மா=உயிர் இல்லாமல் உடல் இயக்கம் பெறுவதில்லை.
பிணத்திற்கு இந்த மூன்றும்(ஆன்மா =உயிர்,மனம்,அறிவு) இருக்காது.//
பேருல மட்டும் தான் நல்லா புரட்சி இருக்கு :-))
ஆன்மா அழிவற்றது என மத சித்தாந்தங்கள் சொல்வது ஏன்?
ஆன்மாவோடு அறிவு சம்பந்தப்பட்டது என்றால் டாக்டர் செத்தால் மீண்டும் டாக்டருக்கான் அறிவோடே பொறப்பாரா?
அறிவு,மனம், ஆன்மா எல்லாமே உயிர் இருந்தால் தான் வேலை செய்யும் ,ஆனால் உயிர் மட்டும் இருக்க அறிவு,ஆன்மா ,மனம் அழிந்து விடும் சூழல் உண்டு, உ.ம்: மூளைச்சாவு.
கற்றலின் வழியே எண்ணங்கள் செம்மையாகி, மூளையில் பதிந்து நாம் "மனிதன்" என்ற தன் உணர்வும், தான் இன்னார் என்ற அடையாளமும் பெறுகிறோம், அதுவே நமக்கான ஆன்மா ஆகிறது.
எவ்வித கற்றலும் இல்லாத மனிதன் தன்னை மனிதன் என்றே அறிய மாட்டான் ,உடை உடுத்தும் எண்ணம் கூட வராது.
டார்சான் படத்தில் காட்டுவதெல்லாம் இதான்.
ஆன்மா என்பதே மனிதன் வரையறுத்து உருவாக்கிக்கொண்ட சித்தாந்தம், அது கற்றலின் மூலமே உருவானது. இதெல்லாம் மூளையில் நியுரான்கள் உயிரோடு இருக்கும் வரையே இருக்கும்.
ஒன்னும் வேண்டாம் நம் மூளையில் ,"Cognitive response" வேலை செய்யும் மூளையின் இடப்பகுதி பாதிக்கப்பட்டு விட்டாலே , நீங்க சொல்லும் ஆன்மா, மனம் புத்திலாம் போயிடும் அப்புறம் ஞே ..ஞேனு சொல்லிட்டு தான் அலையனும் :-))
வாங்க வவ்வால்,
நீக்கு//ஆன்மா அழிவற்றது என மத சித்தாந்தங்கள் சொல்வது ஏன்?//
அதற்க்கு காரணம் இல்லாமல் இல்லை. பிரபஞ்சம் அழிவற்றது என்பதைப்போலத்தான் இதுவும்.
//ஆன்மாவோடு அறிவு சம்பந்தப்பட்டது என்றால் டாக்டர் செத்தால் மீண்டும் டாக்டருக்கான் அறிவோடே பொறப்பாரா?//
நிச்சயமாக. அதற்க்கு முற்ப் பிறவி ஞாபகம் வர வேண்டும். (முற்ப் பிறவி இருக்கு என்று வாதிடும் அளவு எனக்கு விவரம் தெரியாது :) )
நினைத்த நேரத்தில் டாக்டர் அறிவு மட்டும் அல்ல யாருடைய அறிவையும் பெற முடியும் என்று ஒரு சிலர் கூறி உள்ளனர். ஒரு சாதாரண கருவியின்(கணினியின்) மூலம் பல விடயங்களை அறிய முடியும் பொழுது நம்மால் பல விடயங்களை அறியமுடியாதா? முடியும் அதற்க்கான அலைவரிசையில் நாம் இருக்க வேண்டும்.
வானொலி ஒன்றுதான் அதன் மூலம் பல நிகழ்சிகளை கேட்க்க முடிகிறதே எப்படி.?அலைவரிசை. இது பற்றி ஓஷோ கூறியுள்ளார்.தேடிப்பார்த்தால் உங்களுக்கும் புரியும்.
//அறிவு,மனம், ஆன்மா எல்லாமே உயிர் இருந்தால் தான் வேலை செய்யும் ,ஆனால் உயிர் மட்டும் இருக்க அறிவு,ஆன்மா ,மனம் அழிந்து விடும் சூழல் உண்டு, உ.ம்: மூளைச்சாவு.//
ஆன்மா என்பதும் உயிர் என்பதும் ஒன்றையே குறிக்கின்றது என்பதே எனது புரிதல்.
ஆன்மாவும் உயிரும் வேறு வேறு என்று நீங்கள் நினைத்தால் எனக்கும் விளக்கலாமே.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
:-)
பதிலளிநீக்குரூஹும் (ஆன்மாவும்) உயிரும் வேறு பொருட்கள். விஞ்ஞான ரீதியாக விளக்கி உள்ளேன். இப்பதிவைப் பாருங்கள்.
பதிலளிநீக்குhttp://aliaalif.blogspot.com/2013/02/blog-post_11.html
ungalin kelvikku ennudaiya vilakkam inge nanbare...
பதிலளிநீக்குhttp://vazhipokkanpayanangal.blogspot.in/2013/10/blog-post.html
melum kelvikal irunthaalo allathu maatruk karuthukkal irunthaalo therivikkavum...:)
ungaludaiya kelvikalukku ennudaiya vilakkangal inge thozhare...
பதிலளிநீக்குhttp://vazhipokkanpayanangal.blogspot.in/2013/10/blog-post.html
melum kelvikalum maatruk karuthukkalum irunthaal therivikkavum...