நம்மை வேறு யாரும் படைக்கவில்லை நாம்தான் படைத்துக்கொண்டோம் என்றால் உங்களில் எத்தனை பேர் நம்புவீர்கள் என தெரியவில்லை.
ஆனால் உண்மை இதுவாக இருக்க வாய்ப்புகள் மிக மிக அதிகம்.
என்னை நான் படைத்துக்கொண்டால்,அவ்வளவு சக்தி எனக்கு இருந்தால் நான் ஏன் இவ்வளவு துன்பங்களை அனுபவிக்கின்றேன்/அனுபவிக்கப்போகிறேன் என்று நீங்கள் கேட்கலாம்.
அதற்க்கான பதிலும் உங்களிடம்தான் உள்ளது.
பிறப்பு என்பது துன்பத்தை தரும் என்று உணர்ந்தே தான் நாம் பிறப்பெடுத்தோம். நான் அப்படி இல்லை என்று உங்களால் மறுக்க முடியாது.
உங்கள் வாழ்வின் துயரத்திற்கு நீங்கள் தான் காரணம் என்று ஏற்றுக்கொள்கிறீர்களா? ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இருந்தால் இந்த கருத்தியலோடு நீங்கள் ஒத்துப்போகலாம். இல்லையென்றால் மறுப்பீர்கள்.
நீங்கள் சற்று ஆழமாக,பொறுமையாக சிந்தித்து பாருங்கள். நீங்கள் எதை உங்களுக்கு பிடிக்கும் என்று செய்கிறீர்களோ/நினைக்கிறீர்களோ அதனாலாயே உங்களுக்கு பிரச்சனையும் வரும்.
உங்களுக்கு இனிப்பு பிடிக்கும் நிறைய உண்டால் பல வியாதிகள்.
வேலைக்கு சென்றால் உங்களது துன்பம் நீங்கிவிடும் என்று நினைக்கிறீர்கள்...ஆனால் அங்கேயும் துன்பம்.
பணம் நிறைய கிடைத்தால் இன்பம் என நினைக்கின்றீர்கள் ஆனால் உங்களின் பணத்தாலும் உங்களுக்கு துன்பம்.
காதலி கிடைத்தால், திருமணம் நடந்தால் இன்பம் என நினைக்கின்றீர்கள் ஆனால் அதனாலும் துன்பம்.
குழந்தை பிறந்தால் இன்பம் என நினைக்கின்றீர்கள் பிறகு அதனாலும் துன்பம்.
எந்த ஒரு விடயத்தை எடுத்தாலும் இது உங்களுக்கு பொருந்தும்.
சிறு வயதில் சீக்கிரம் வளரவேண்டும் என்று நினைப்பீர்கள் வளர்ந்து விட்டால் குழந்தையாகவே இருந்திருக்க கூடாதா என்று நினைப்பீர்கள்.
வாலிபத்தில் ஆணவத்தில் திரிந்துவிட்டு வயதானவுடன் தான் நடக்க,உபாதைகள் கழிக்க கூட பிறர் துணை தேவைப்படுகிறது....என்னே கொடுமை?
இன்பம் என்பது துன்பத்தில் தான் முடியும். இதனால் தான் புத்தன் ஆசையே அனைத்துக்கும் காரணம் என்றானோ?
ஆசைதான் நம் பிறப்புக்கு காரணம்.
உன் பிறப்புக்கு காரணம் உன் பெற்றோர்கள் ஆசை மட்டும் அல்ல உன் ஆசையும் தான். உன் குழந்தையின் பிறப்புக்கு காரணம் உன் ஆசை மட்டும் அல்ல அவன் ஆசையும் தான்.
நான்,நீ, நாம், அவன், அவள், அது என எல்லாவற்றின் மூலமும் ஒன்று என்று புரியும்பொழுது,உணரும்பொழுது நம்மை படைத்தது நாமே என்பதும் புரியலாம்,உணரலாம். எனக்கும்தான்.

தத்துவார்த்த சிந்தனை
பதிலளிநீக்குவணக்கம்
பதிலளிநீக்குமனிதனை சிந்திக்க வைக்கும் வரிகள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
இதைத் தான் புத்தர் சொல்லிட்டார்ல சகா..!
பதிலளிநீக்குபுரிஞ்ச மாதிரியும் இருக்கு கொஞ்சம் புரியாத மாதிரியும் இருக்கு.
பதிலளிநீக்கு//கலியபெருமாள் புதுச்சேரிSeptember 7, 2013 at 12:59 PM
பதிலளிநீக்குபுரிஞ்ச மாதிரியும் இருக்கு கொஞ்சம் புரியாத மாதிரியும் இருக்கு.//
எனது நிலையும் சரியா இது தான் :)
வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
பதிலளிநீக்கு@கரந்தை ஜெயக்குமார்
//தத்துவார்த்த சிந்தனை //
ஏதோ தோன்றியது
@2008ருபன்
//மனிதனை சிந்திக்க வைக்கும் வரிகள்//
சிந்தித்தால் நன்றே
@இக்பால் செல்வன்
//இதைத் தான் புத்தர் சொல்லிட்டார்ல சகா..!//
புத்தர் நம் பிறப்புக்கு நாம்தான் காரணம் என்று சொன்னாரா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் "நான் கடவுள்" "நீ அதுவாக இருக்கிறாய்"
என்பன இதையே குறிப்பதாக உணர்கிறேன்.
புத்தரின் அனைத்திற்கும் ஆசையே காரணம் என்பதையும் நான் இதனோடு தொடர்பு படுத்தினேன்.
@கலியபெருமாள் புதுச்சேரி
//புரிஞ்ச மாதிரியும் இருக்கு கொஞ்சம் புரியாத மாதிரியும் இருக்கு.//
:)
@வேகநரிSeptember 7, 2013 at 5:15 PM
()
//கலியபெருமாள் புதுச்சேரிSeptember 7, 2013 at 12:59 PM
புரிஞ்ச மாதிரியும் இருக்கு கொஞ்சம் புரியாத மாதிரியும் இருக்கு.//
எனது நிலையும் சரியா இது தான் :) )
:) அடுத்த பதிவில் சற்று புரிய வைக்க முயல்கிறேன்
பின்னூட்டம் இட்ட , படித்த , தேடல் உள்ள அனைவருக்கும் மிக்க நன்றி
கொஞ்சம் புரிகிறது கொஞ்சம் புரியவில்லை.
பதிலளிநீக்கு//உன் பிறப்புக்கு காரணம் உன் பெற்றோர்கள் ஆசை மட்டும் அல்ல உன் ஆசையும் தான்.//
பதிலளிநீக்குHow is it possible? Can you explain a bit more detail?