வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

Tuesday, November 20, 2012

இணையத்தை உபயோகிப்பவர்களே இந்த ஆப்பு போதுமா இன்னும் கொஞ்சம் வேண்டுமா?

நல்ல மாட்டுக்கு ஒரு சூடு நல்ல மனிதனுக்கு சொல். IT Act Sec 66(a) வை பயன்படுத்தி இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

முகநூலில் பால் தாக்கரே பற்றி எழுதியதற்காக ஒரு பெண்ணும் அதை  'லைக்' செய்ததற்காக ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டு பிறகு பெயிலில் விடப்பட்டுள்ளனர்.கடந்த ஒரு மாதத்தில் இந்த சட்டத்தை பயன்படுத்தி  இது எத்தனையாவது கைது என்பதை உங்கள் கணக்கிற்கே விட்டு விடுகின்றேன்.

நம்மில் சிலர் வழக்கம்போல  ஒரு பதிவு போட்டுவிட்டு அமைதியாக இருப்போம் சரியா? 

 IT Act Sec 66 a  க்கு  எதிராக சிலர் வழக்கு தொடர்ந்தததாக கேள்வி. அந்த வழக்கிற்கு  என்ன நடந்தது என்று தெரியவில்லை.

நம்முடைய எதிர்ப்பை ஆர்ப்பாட்டம், பேரணி மூலம் காட்டினால்தான் நம்முடைய குமுறல் சட்டத்தை இயற்றுபவர்களின் காதுகளுக்கு செல்லும் என நினைக்கின்றேன்.
விருப்பம் உள்ளவர்கள் சென்னையில் காந்தி சிலைக்கு அருகில் ஒன்று கூடி  IT ACT 66 (a) க்கு  எதிராக குரல் கொடுக்கலாம் என நினைக்கின்றேன்.

விருப்பம் உள்ளவர்கள் எந்த நாளில், எந்த நேரத்தில் இதை செய்யலாம், இதை எப்படி ஒருங்கிணைக்கலாம்  என்ற உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.அனுபவம்  உள்ளவர்கள் வழிகாட்டுங்கள்.

மின்னஞ்சல்:puratchimanidham@gmail.com

நீங்கள் யாரும் விருப்பம் தெரிவிக்கவில்லை, வரவில்லை என்றால் நான் மட்டும் சென்று  சுண்டல் சாப்பிட்டுவிட்டு வீட்டிற்கு வந்துவிடுவேன் :)


இந்த பதிவை வெளியிட்டதற்காக நான் கைது செய்யப்படலாம்!


7 comments:

 1. ब्लॉग पर बधाई
  से अभिवादन:
  http://el-blog-de-bruce-lee.blogspot.com/

  ReplyDelete
 2. இது 64A செக்ஷனா அல்லது 66A செக்ஷனா?
  எதுவானாலும் முகநூல் உபயோகப்படுத்துபவர்களுக்கு ஆப்புதான்.

  ReplyDelete
  Replies
  1. ஐயா மன்னிக்கவும் அது 66A தான்.
   http://www.rediff.com/news/report/police-arrest-girl-for-comment-on-thackerays-death-on-fb/20121119.htm
   இந்த கட்டுரையில் தவறாக இருந்ததால் நானும் அதையே எழுதிவிட்டேன்.சுட்டிக்காட்டியமைக்கு மிக்க நன்றி.முகநூலில் மட்டுமல்ல செல்லில் செய்தி அனுப்பினாலும் இதே கதிதான்.

   Delete
 3. இணையத்தில் சுதந்திரமாக எழுதிக் கொண்டிருப்பதாக நிணைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு ‘முதலாளித்துவ சனநாயகம்’ என்றால் எப்படிப்பட்டது என புரிய ஆரம்பித்திருக்கின்றது.

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் சொல்வது உண்மைதான். சமத்துவ மக்களாட்சி மலர நாம் போராட வேண்டிய அவசியம் வந்துள்ளது.
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   Delete
 4. தங்களின் முயற்சிகளுக்கு என் ஆதரவுகள் உண்டு. தனி மனித சுதந்திரத்தின் மீது அக்கறை கொண்டவர்கள் அனைவரும் ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கையும் உண்டு!

  ReplyDelete
  Replies
  1. வாங்க Vijayakumar,
   தங்கள் ஆதரவிற்கு நன்றி.
   அடுத்தகட்ட போராட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படும்.

   Delete

Related Posts Plugin for WordPress, Blogger...