வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

புதன், 18 ஆகஸ்ட், 2010

யார் அழகு? ஆணா பெண்ணா?

உண்மையில் யார் அழகு?
ஆணா பெண்ணா?
அழகியத் தோகை உடையது எது?
அழகியத் தந்தங்களை உடையது எது ?
அழகியக் கொண்டையை உடையது எது?
இந்தப்பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.இவை எல்லாம் ஆண் இனத்திற்கே உடையது. உண்மையில் ஆணே அழகு. சிற்றின்ப ஆசையால் ஆண் இனம் பெண் இனத்திற்கு முக்கியத்துவம் தருகின்றது. மற்றபடி ஆணே அழகு.
ஆனால் என்னைப்பொருத்த வரை தாய்மையே என்றும் அழகு
ஆண் இனத்திற்கு பெண்ணினும் பெண் இனத்திக்கு ஆண் இனமும் அழகு (இங்கேயும் குளறுபடி நடக்குது)


புதன், 11 ஆகஸ்ட், 2010

உடம்பில் உள்ளது வாசலா ஓட்டையா ?

ஆன்மீகத்தில் சிலர் உடம்பிற்கு ஒன்பது வாசல்கள் என்று கூறி உள்ளனர். என்னைப் பொறுத்தவரை அவைகள் வாசல்கள் அல்ல ஓட்டைகள். உயிரானது இந்த ஓட்டைகளின் மூலம் வெளியேறினால் அவனுக்கு மறு பிறவி உண்டு . மறுபிறவி கிடைப்பதால் அது வாசல் அல்ல ஓட்டை.

அப்பொழுது எது வாசல்?
நாம் எந்த வழியாக வந்தோமோ அதே வழியில் உயிர் சென்றால் தான் அது வாசல். இந்த வாசலின் மூலம் உயிர் சென்றால் மறுபிறவி கிடையாது. மேலும் சித்தர்களுக்கே இது பெரும்பாலும் கைகூடும். இதுவே இறைநிலையை எய்த உதவும் வாசல். இந்த வாசல் கண்ணுக்கு தெரியாது.

ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2010

கடவுள் உண்மையிலேயே இருக்கின்றாரா?

கடவுள் என்ற வார்த்தைக்கு ஆழமான பொருள் உள்ளது.
கட + உள் என்பதே கடவுள். உன்னை நீ கடந்தால் அதவாது உன்னுள் சென்றால் நீ கடவுளை காணலாம், கடவுளை உணரலாம். இவ்வுலகம் எப்படி தோன்றியது, நீ யார், நான் யார் என்ற அனைத்து கேள்விகளுக்கும் விடை கிடைக்கும்.

நீ என்பது எந்த அளவு உண்மையோ அதே அளவு கடவுள் என்பதும் உண்மை.
நீ என்பது எந்த அளவு பொய்யோ அதே அளவு கடவுள் என்பதும் பொய்.

கடவுள் என்பது ஒரு தன்மை. அந்த தன்மையிலிருந்து வந்ததுதான் அனைத்தும். வந்த அனைத்தும் அந்தத் தன்மைக்கு திரும்பும். அது முடிவல்ல......................
தொடர்ச்சியாகவும் இருக்கலாம்.
Related Posts Plugin for WordPress, Blogger...