வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

புதன், 30 மார்ச், 2011

லக்னத்தில் குரு இருப்பது ஏன் நல்லது?

குரு லக்னத்தில் இருப்பது நல்லது என்று பலரும் சொல்கிறார்கள் அதற்கு பல காரணங்களும் உண்டு.

குரு லக்னத்திலிருந்து 5,7,9 ம் இடங்களை பார்க்கிறான். குரு பார்வை கோடி நன்மை என்பார்களே அது லக்னத்தில் இருக்கும் பொழுது இன்னும் பொருந்தும். இந்த மூன்று வீடுகளும் ஒரு மனிதனுக்கு மிக மிக முக்கியமானவைகள். இவை பலம் பெறுவதால் இந்த உலக வாழ்கையை சிறப்பாக வாழ குரு வழி வகை செய்கிறான். இப்படி இருக்கும் குரு தனியாக இருப்பது இன்னும் சிறப்பு.

என்னைப்பொருத்த வரை குரு லக்னத்தில் இருப்பதால் மற்றும் ஒரு சிறப்பு உண்டு, அதுவே மிக முக்கியமானதும் கூட, அது என்ன?

லக்னத்தில் இருக்கும் குரு மறுபிறவி இல்லாமல் செய்வான் என எனக்கு தோன்றுகிறது.

காரகன் அதற்குரிய வீட்டில் இருப்பின் அந்த வீட்டின் பலன் பாதிக்கும் என்பது விதி.
குழந்தை காரகன் குரு ஐந்தில் இருந்தால் குழந்தை பிறப்பில் தாமதம், பிரச்னை ஏற்படும் என்று சிலர் சொல்வதுண்டு. அதேபோல் தந்தை காரகன் சூரியன் ஒன்பதில் இருந்தால் தந்தையுடன் உறவு சுமூகமின்மை, மற்றும் சில கெடு பலன்கள் உண்டாகும் . சிலருக்கு அந்த வீட்டுக்குரிய நபர்கள் இல்லாமல் போவதும் உண்டு.

இந்த விதியை நாம் குருவுக்கு எடுத்துக்கொண்டால் லக்னத்தில் இருக்கும் குரு மறுபிறவியை தர மாட்டான், தரக்கூடாது.

ஏன் எனில் குருவே லக்ன காரகன். லக்ன காரகனான குரு லக்னத்தில் இருந்தால் என்ன செய்ய வேண்டும் அடுத்தது லக்னமே இல்லாமல் செய்ய வேண்டும். அதாவது அடுத்த பிறவியே இல்லாமல் செய்யவேண்டும்.
(இது உண்மையோ பொய்யோ ஆண்டவனுக்கே வெளிச்சம்....)
எனவே குரு லக்னத்தில் இருப்பது நல்லது என்பதற்கு இதுவே மறைமுகமான முக்கிய காரணமாக இருக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து. உங்களுடைய கருத்து?


12 கருத்துகள்:

 1. லக்னம் அடுத்த பிறவியை அல்ல, இந்த் பிறவியில், உடன், தோற்றம் இவற்றை குறிக்கின்றது.. குரு நிற்கும் லக்னம் எது என்பதை பார்க்க வேண்டும் அல்லவா? மினம் லக்னம் ஆனால் கேந்திராதிபய தோஷத்தால் தொழில் பிரச்சனை , தோல்வி வரலாம். தனுசம் லக்னம்மானால் படிப்பு, தாய் , வீடு கிடைக்காமல் போகலாம். குரு இருக்கும் இடத்த்க்கு நன்மை செய்வார் என்கிறனர், வெர்டு வெரிபிகேஷனை எடுக்கவும்,

  பதிலளிநீக்கு
 2. leo lagana guru
  simma laganthil guru iruntha
  suyavarkkathil 7 total 35 astavargam romba sad
  guru should not stay in lagana

  பதிலளிநீக்கு
 3. வினோத் said...
  ''லக்னம் அடுத்த பிறவியை அல்ல, இந்த் பிறவியில், உடல் , தோற்றம் இவற்றை குறிக்கின்றது//..
  இது சரியாக கூட இருக்கலாம். காரகன் அதற்குரிய பாவத்தில் இருந்தால் அங்கே கெடு பலனை கொடுப்பான் என்பது விதி. (இதற்கு சில விதி விளக்குகளும் உண்டு).
  இந்த விதியில் உங்களுக்க நம்பிக்கை உண்டா?. குருவுக்கு லக்ன காரகன் என்ற பெயர் உண்டு அதன் பொருள் என்ன? அந்த விதியையும் இதையும் இணைத்து பார்க்கும் பொழுது எனக்கு இப்படி ஒரு சிந்தனை. இது முற்றிலும் தவறாக கூட இருக்காலாம், அதைப்போல் சரியாக இருக்க கூடாது என்றும் சொல்வதற்கில்லை.

  ///குரு நிற்கும் லக்னம் எது என்பதை பார்க்க வேண்டும் அல்லவா? மினம் லக்னம் ஆனால் கேந்திராதிபய தோஷத்தால் தொழில் பிரச்சனை , தோல்வி வரலாம். தனுசம் லக்னம்மானால் படிப்பு, தாய் , வீடு கிடைக்காமல் போகலாம்.////

  நீங்கள் சொல்லும் லக்னத்துக்கு அவன் கேந்த்ராதிபதி மட்டும் அல்ல திரிகோனாதிபதியும் கூட, ஏன் லக்னாதிபதியும் அவனே ஆதலால் அங்கே கேந்திராதிபத்திய தோஷம் இருக்காது என நினைக்கின்றேன்.அப்படியே இருந்தாலும் சொல்லிக்கொள்ளும் படி பிரச்னை செய்யக்கூடாது. தனுசு லக்ன குரு மீனத்தில் இருந்தால் கேந்திராதிபத்திய தோஷம் வரலாம் என்பது என்னுடய கருத்து.

  ///குரு இருக்கும் இடத்த்க்கு நன்மை செய்வார் என்கிறனர், வெர்டு வெரிபிகேஷனை எடுக்கவும்,///

  குரு பூரண சுப கோள் என்று சொல்வதற்கில்லை எனபது அகத்தியர் வாகு.(ஏறக்குறைய இந்த மாதிரி) குரு எட்டில் இருப்பின் குழந்தையை இழக்க நேரிடும்.

  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வினோத்.

  பதிலளிநீக்கு
 4. //sundari said...
  leo lagana guru
  simma laganthil guru iruntha
  suyavarkkathil 7 total 35 astavargam romba sad
  guru should not stay in lagana//

  அப்படி எல்லாம் சொல்லாதிங்க, நீங்கள் அல்லது உங்கள் மூதாதையர் செய்த புண்ணியத்தால் தான் அவன் லக்னத்தில் இருக்கிறான். என்ன அவனே எட்டாம் அதிபதியாக இருப்பதனால் கொஞ்சம் கெடு பலனும் இருக்கும்.
  லக்னத்தில் அதிக பரல்கள் இருப்பதனால் நீங்கள் பெரிய தலைவியாக கூட வரலாம். வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 5. சார், எனக்கு தனுசு லக்னம். மீனராசி. லக்னத்தில் குரு மற்றும் சனி உள்ளனர். பலன் எப்படியிருக்கும்.
  - சங்கர்

  பதிலளிநீக்கு
 6. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 7. //வாங்க சங்கர் ....உண்மைய சொல்லனும்னா எனக்கு அந்த அளவுக்கு பலன் சொல்ல தெரியாது..(அதே நேரத்துல சில கோள் நிலைகள வச்சு பலன் சொல்றது தப்பா கூட போகலாம் )...ஒன்னு பத்து, பதினொன்று, பன்னிரெண்டாம் அதிபதிகள் லக்னத்தில் இருக்கிறதனால தீய பலன்களை விட நல்ல பலன்களே அதிகம் கிடைக்கும். நீங்க நல்லவர் தான் ஆனா கொஞ்சம் சோம்பேறித்தனமும் இருக்கும். அதிலும் ஒன்று பத்துக்குரியவர் ஆட்சி. தொழிலதிபரா(அ) பெரிய நிர்வாகியா வரலாம். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும் அவபோது சறுக்கல் இருக்கலாம். உங்களுக்கு நெருங்கிய நண்பர்கள் உயர்த்த பட்ட ஜாதியிலும் தாழ்த்தப்பட்ட ஜாதியிலும் இருக்க வாய்ப்புகள் உண்டு. அப்படி இருந்தால் தெரிய படுத்தவும். (ஜாதிய பத்தி பெசர்றேனு தப்பா நினைக்காதிங்க ஒரு ஆய்வுக்காகத்தான் ).

  பதிலளிநீக்கு
 8. சார், மிக்க நன்றி. அதுவும் மிக விரைவில் பதில். ரொம்ப நன்றி. தாங்கள் கூறுவது சரியே. எனக்கு உயர்ந்த, தாழ்த்தப்பட்ட, வேறு மதத்திலும் நெருங்கிய நண்பர்கள் உண்டு.

  ஆனால் சொந்த தொழில் செய்யாமல் உத்தியோகத்திற்கு வந்து விட்டேன். வரவு,செலவு சரியாகவும் மிச்சமில்லாமல்(கடனுடன்) உள்ளேன். 9ம் இடத்து அதிபதியின் சூரிய திசை நடக்குதாம். சூரியனும் புதனும் 2ல் உள்ளனர்.

  தங்கள் பதிலை ஆர்வமுடன் எதிர்பார்க்கிறேன். நன்றி.

  - சங்கர்

  பதிலளிநீக்கு
 9. //
  Guru Selvam said...
  சார், மிக்க நன்றி. அதுவும் மிக விரைவில் பதில். ரொம்ப நன்றி. தாங்கள் கூறுவது சரியே. எனக்கு உயர்ந்த, தாழ்த்தப்பட்ட, வேறு மதத்திலும் நெருங்கிய நண்பர்கள் உண்டு.

  ஆனால் சொந்த தொழில் செய்யாமல் உத்தியோகத்திற்கு வந்து விட்டேன். வரவு,செலவு சரியாகவும் மிச்சமில்லாமல்(கடனுடன்) உள்ளேன். 9ம் இடத்து அதிபதியின் சூரிய திசை நடக்குதாம். சூரியனும் புதனும் 2ல் உள்ளனர்.

  தங்கள் பதிலை ஆர்வமுடன் எதிர்பார்க்கிறேன். நன்றி.

  - சங்கர் //

  அடடா, தப்பு பண்ணிட்டேனே....உங்களுக்கு மீன லஞம்னு தவறா புரிந்து கொண்டு தொழில் பத்தி சொல்லிட்டேன். உங்களுக்கு ஒன்று, இரண்டு, மூன்று மற்றும் நான்காம் அதிபதிகள் லஞத்துள் இருக்காங்க.

  ஒன்பதாம் அதிபதி திசை நல்ல திசைதான் என்ன அவர் சூரியனா இருக்கிறதால கொஞ்சம் வருமைய காட்டுகிறார். சூரிய திசையின் பின் பகுதி நல்ல இருக்கும்னு நினைக்கிறேன். வாய், வலது கண் பகுதியில ஏதும் பிரச்னை வராம பாத்துக்குங்க. ஆண்டவன் மேல பாரத்த போட்டுவிட்டு முடிந்த வரை சிக்கனமாய், சேமித்து வாழுங்கள்.

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...