வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

புதன், 4 ஏப்ரல், 2012

சமணமே உன்னை என்னவென்று சொல்ல?


உலக உயிர்களுக்கு   துன்பம் விளைவிக்க கூடாது என்று கூறும் உன்னத மதம் சமணம். பல மனிதர்கள் ஆடு, மாடு,கோழி.பன்றி,மீன் என்று சாப்பிடும் பொழுது வெங்காயத்தையும், பூண்டையும் கூட சாப்பிடகூடாது என்று கூறும் மதம் சமணம். (வெங்காயம், பூண்டு போன்றவற்றை பிடுங்குவதன் மூலம் அது கொல்லப்படுகிறது ஆதலால் அதை உண்ணக்கூடாது என்று கூறுகிறார்கள். )

இன்றுவரை காட்டுமிராண்டியாக வாழும் மனிதனை கிருத்து பிறப்பதற்கு கிட்டத்தட்ட அறுநூறு முதல் தொள்ளாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றி மனிதனை  தெய்வமாக்க முயற்சி செய்த மதம் சமணம். 

ஒரு காலத்தில் மாட்டுகறியை உண்ட  பிராமணர்களை சைவம் பக்கம் திரும்ப வைத்தது சமணம். 

இன்றும் மதத்தின் பெயராலும், இனத்தின் பெயராலும் மக்கள் அடித்து கொண்டு சாகும் பொழுது பல ஆயிரம்  ஆண்டுகளுக்கு முன்பே அனைத்து உயிர்களையும்  தம்முயிர் போல் கருதி  துன்பம் விளைவிக்க கூடாது என்று கூறிய மதத்தை என்னவென்று புகழ்வது?

மனிதர்களை கொன்று மதத்தை வளர்த்த மதங்கள் இன்று நம்மிடையே இருக்க, மனிதனை இறைவனாக்க  முயன்ற மதம் செல்வாக்கு இழந்தது ஏனோ? 

ஒரு இறைவனா பல பல இறைவனா  என்று இன்றும்  அடித்து கொள்ளும் பொழுது இறைவனை பொருட்படுத்தாத மதத்தை என்னவென்று புகழ்வது?

நல்ல கொள்கைகள் பல தந்த சமண மத துறவி மகாவீர் அவர்களின் பிறந்த நாளை உயிர்கள் மீது அக்கறை கொண்ட ஒவ்வொருவரும் கொண்டாடவேண்டாமா? குறைந்த பட்சம் அவரை மனதில் வைத்து பிற உயிர்களுக்கு துன்பம் விளைவிக்காமல் வாழ முயற்சி செய்வோம். உயிர்களை நேசிக்க மதம் ஒரு தடை என்றால் நாம் மனிதர்களா மிருகங்களா?

குறிப்பு: இப்பதிவானது நான் ஏற்க்கனவே படித்த, கேள்வி பட்ட விடயங்களை  வைத்து எழுதியது. இதில் எதற்கு ஆதாரம் வேண்டும் என்றால் அதற்கு மட்டும் ஆதாரத்தை தேடி தருகிறேன்.
மேலும் படிக்க :http://en.wikipedia.org/wiki/Jainism

6 கருத்துகள்:

  1. நண்பர் பு.ம.

    நல்ல தலைப்பு கேள்வி. சமண மற்றும் புத்த மதமும் பழைய வேத பிராமண கோட்ப்பாடுகளை எதிர்த்து தோன்றியது. சாதியினால் ஓடுக்கப்பட்ட மக்கள் தங்கள் நிலைமையை மேம்படுத்த அந்த சித்தாந்தத்தில் பக்கம் சேர்ந்தார்கள். சமண மதத்தில் முக்கியமாக வைஸ்ய சாதியை சேர்ந்தவர்கள் அதிகமாக சேர்ந்தார்கள். இந்த இரு சித்தாந்தத்தையும் வேத சித்தாந்ததம் உள்வாங்கி தன்னை தயார் படுத்தியது. இம்மூன்றுகிடையே அதிகாரப் போட்டியில் கொலைகளும் செய்யப்பட்டன.

    ஆனால் அந்த கொலைகள் மதத்தின் பேரால், மதத்தின் அதிகாராத்தால் செய்யவில்லை. அரசியல் அதிகாரப் போட்டியினால் செய்யப்பட்டன. சங்க்கராச்சாரியார்கள் வந்து அந்த சித்தாந்தங்களை விவாதங்கள் மூலம் வெற்றி கொண்டார்கள் என கதையையும் இருக்கின்றது. ஏனோ அந்த இரு மதங்களும் இந்தியாவில் இறங்குமூகமாக இருந்து நோடிந்துபோயின. முக்கியமான கோட்பாடுகளை இந்து மதம் உள்வாங்கியது என்னவோ.

    மேலே சொன்னது படுசுருக்கம்தான்.

    இப்போது சமண மதம் நமது அடகு சேட்டு கடையில் தான் இருக்கின்றது. அவர்களும் ஆர்.எசு.எசு.(?)க்கு காசும் குடுத்து திட்டும் வாங்குகிறார்கள். நல்ல விடயம் மஹாவீர் ஜெயந்தியில் டாஸ்மாக் கடைகள் மூடியே இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ நரேன், :)
      பதிவிற்கு ஊட்டத்தை உங்கள் பின்னூட்டம் மூலம் தந்திருக்கிறீர்கள். நேரம் கிடைக்கும் பொழுது இது பற்றியும் எழுதுங்கள்.
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி:)

      நீக்கு
  2. புரட்சிமணி சார்,

    என்ன திடீர்னு சமண கோயிலில் மணி அடிக்க ஆரம்ம்பிச்சுட்டிங்க. எனி ஷேட் பிகர் லுக்கிங்?

    சமண மத விதிகள் ரொம்ப கட்டுப்பாடானவை என்பதாலேயே பின்ப்பற்ற முடியாமல் மங்கி(நாட் குரங்கு) விட்டதுனு படிச்சேன்.மேலும் புத்தர் பின்னாளில் போட்டிக்கடை(நாட் குடல் கறி) போட்டதால் இன்னும் பலவீனமா போய்டுச்சாம்.

    அதுவும் சாமியார் ஆகனும்னா முற்றும் துறக்கணும் ஆடை உட்பட.

    வெங்காயம்,பூண்டு மட்டுமா புடுங்கி சாப்பிடுறாங்க ? ஏழைங்க கிட்ட இருந்து எல்லாம் புடுங்கி தான் சாப்பிடுறாங்க :-))

    வெங்காயம், பூண்டு உணர்வுகளை தூண்டி விடுமாம், கட்டுப்பாடா இருக்க அதை தவிர்க்கிறாங்கனு ஒரு கேள்வி ஞானம்.

    ***
    நரேன்,

    சரக்கு அசைவமா அப்போ? என்னிக்கு மஹாவீர் ஜயந்தி(ஜயந்தி பொண்ணா?) சீக்கிரமா போய் சரக்க ஸ்டாக் வாங்கி வைக்கணும் :-))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க பாஸ் வாங்க, :)

      // என்ன திடீர்னு சமண கோயிலில் மணி அடிக்க ஆரம்ம்பிச்சுட்டிங்க//
      எனக்கு மாதா கோயில மணி அடிக்கவும், மசுதில ஓதனும்னு கூட ஆசைதான் பார்ப்போம்

      .// எனி ஷேட் பிகர் லுக்கிங்? //
      :)) எங்க ஏரியாவுல சேட்டுகளே இல்ல :))

      //சமண மத விதிகள் ரொம்ப கட்டுப்பாடானவை என்பதாலேயே பின்ப்பற்ற முடியாமல் மங்கி(நாட் குரங்கு) விட்டதுனு படிச்சேன்.மேலும் புத்தர் பின்னாளில் போட்டிக்கடை(நாட் குடல் கறி) போட்டதால் இன்னும் பலவீனமா போய்டுச்சாம்.//
      செம செம நகைச்சுவை மற்றும் கருத்து

      //சரக்கு அசைவமா அப்போ? என்னிக்கு மஹாவீர் ஜயந்தி(ஜயந்தி பொண்ணா?) சீக்கிரமா போய் சரக்க ஸ்டாக் வாங்கி வைக்கணும் :-))

      //
      இன்னைக்குதான் சோ, நாளை பாத்துக்குங்க :)
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி பாஸ் :)

      நீக்கு
  3. சோலைவனங்களை பாலைவனங்களாக்கி தன்மதத்தை வளர்க துடிக்குகும் மத வெறியர்கள் உள்ள நிலையில் நல்ல கொள்கைகள் கொண்ட சமண மதத்தை பற்றிய அறிமுகத்திற்கு பாரட்டுகள் நண்பரே.

    //சமண மத விதிகள் ரொம்ப கட்டுப்பாடானவை என்பதாலேயே பின்ப்பற்ற முடியாமல் மங்கி(நாட் குரங்கு) விட்டதுனு படிச்சேன்.//
    தலையெடுத்து கை கால் வாங்கி அடித்துதைத்து பயமுறுத்தாமல் உண்மையா நல்ல மதமா சமணம் இருந்திச்சு என்று விளங்குகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அருமை நண்பா thequickfox, :)
      மக்கள் மனதில் மதத்தை விதைப்பதை விட மனிதத்தை விதைப்பதே உலகத்திற்கு நல்லது என்று உண்மையை உலகறியச்செய்யவேண்டும்.
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே :)

      நீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...