வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

ஞாயிறு, 26 மே, 2013

ஜாதிப் பெருமை பேசக்கூடாது என்பவர்கள் சந்தேகம் தீர்ப்பார்களா ?


 ஜாதிப்  பெருமை பேசுவது தவறு என்று சமீபத்தில் பலர்  எழுதுவதை  பேசுவதை காண  நேர்ந்தது.  இதுல எனக்கு ஒரு சந்தேகம். ஜாதிப்  பெருமை பேசக்கூடாது என்பவர்கள்  என்னுடைய சந்தேகத்தை தீர்க்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.

ஜாதிப்  பெருமை பேசக்கூடாது சரி

மொழிப்  பெருமை பேசலாமா?
தமிழ் மொழியே சிறந்த மொழி என்று  மாநாடு நடத்துகிறோம்,   செம்மொழி மாநாடு நடத்தினோம், தமிழன்னைக்கு சிலை கூட வைக்கப் போகிறோம்.

இனப் பெருமை பேசலாமா?
தமிழன் வீரப்பரம்பரையை சேர்ந்தவன்  என்று சிலர் எழுதவதை பேசுவதை  கேட்டுள்ளேன்.

நாட்டுப்  பெருமை பேசலாமா?
பாரத நாடு பழம்பெரும் நாடு என்று கூறிக்கொள்கிறோம்.

மதப்பெருமை பேசலாமா?

குடும்பப்  பெருமை பேசலாமா?

தலைவர்கள் பெருமை பேசலாமா?

தாய்தந்தை  பெருமை பேசலாமா?

பிள்ளைகள் பெருமை பேசலாமா?


உங்களின் விளக்கத்தை நான் எதிர்பார்க்கிறேன். இப்பதிவின் நோக்கம் சிந்தனையை  தூண்டுவதும் அதற்க்கான விளக்கத்தை பெறுவதும் மட்டுமே.

24 கருத்துகள்:

  1. பெயரில்லா26 மே, 2013 அன்று 4:01 PM

    நானும் உங்களை வழிமொழிகிறேன்.. ஆனால் பதிவர்களுக்குள் சண்டை வேண்டாமே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க kaliaperumalpuducherry,
      சண்டையெல்லாம் ஒன்றும் இல்லை. கருத்துப்பரிமாற்றம் மட்டுமே.
      தங்கள் வருகைக்கு மிக்க நன்றி

      நீக்கு
  2. "எனக்கு சாதகமான பெருமைகளைப் பேசலாம் - என் எதிரிக்கு சாதகமான பெருமைகளைப் பேசக் கூடாது" என்பதுதான் தமிழ்நாட்டின் பொதுவான நியாயம் என்பது உங்களுக்கு தெரியாதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அருள்,

      பிறரை எதிரியாக பார்ப்பது என்பது மறைந்து போக வேண்டும்.
      எந்த நியாயமும் அநியாயமாக தெரியும் பொழுது மாற்றிக் கொள்ளப்படவேண்டும்
      தங்கள் வருகைக்கு மிக்க நன்றி

      நீக்கு
  3. சாதியை எதிர்த்து பதிவுகள் போட்டாலும் உண்மையிலேயே சாதிப் பற்றில்லாதவர்களைக் காண்பது அரிது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க Jayadev Das,
      அடையாளங்கள் இருக்கும் வரை அதையொட்டி விருப்பும் வெறுப்பும் இயற்கையே.
      இதனால் தான் தேவையற்ற அடையாளங்கள் அழிக்கப்படவேண்டும்.
      தங்கள் வருகைக்கு மிக்க நன்றி

      நீக்கு
  4. சாதி, ம‌த‌, த‌லைவ‌ர் குடும்ப‌ பெருமைக‌ளால் பிள‌வுப‌ட்டுக் கிட‌க்கும் த‌மிழின‌த்தை ஒன்றிணைக்க‌ மொழிப்பெருமை, இன‌ப்பெருமை பேசுவ‌தில் த‌வ‌றில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க viyasan,
      நல்லது. இதேபோல் மக்களை மனிதத்தால் ஒன்றிணைப்பது எப்போது?
      தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி

      நீக்கு
  5. பெயரில்லா27 மே, 2013 அன்று 7:21 AM

    மொழி, தேசம் என்பவை உண்மையில் இருப்பவை, தர்க்கப் பூராணமானவை, ஆனால் சாதிக்கு என்ன இருக்கு, சாதி என்பவை வெறும் மாயை, அர்த்தமற்றவை, லாஜிக்கற்றவை, ஆகையால் சாதிப் பெருமை தேவையற்றது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியா சொன்னிங்க.
      //சாதி என்பவை வெறும் மாயை//
      இந்த மாயைக்கு கூட பெருமையா :)

      நீக்கு
    2. வாங்க Niranjan Thampi,
      தவறாக எண்ணவேண்டாம். எங்கோ பின்னூட்டத்தில் படித்தது. நாய்களுக்கே ஜாதி இருக்கும் பொழுது மனிதனுக்கு இல்லாமலா போகும் என்பது ஒருசிலரின் கருத்து. மாடுகளில் ஜாதி உள்ளது. மாம்பழத்திலும் பல வகைகள் உள்ளன. இதுவும் மாயையா? இது போல மனிதர்களிலும் பல வகைகள் உள்ளனவா அல்லது மாயையா?
      தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி

      நீக்கு
  6. உங்கள் நாடு, இனம், ஜாதி, மொழி, குடும்பம், பிள்ளைகள் பற்றிய பெருமைகள மற்றவர் சொல்லி நீங்கள் கேட்கவேண்டும். நீங்களே சொல்லிக் கொள்வதில் உள்ள பிர்ச்சினைகள்:
    1. எவரும் தன்னையும் தன்னைச் சார்ந்தவைகளையும் குறைத்துச் சொல்ல மாட்டார்கள். அவை குறைகள் உள்ளனவாக இருந்தாலும். காக்கைக்குத் தன்குஞ்சு பொன்குஞ்சு. எனவே தற்பெருமை நீதிவழி வராது. உணர்ச்சியும் பொய்யும் கலந்தவையே.

    2. சமூகத்தில் பலர் சேர்ந்து வாழும் நிலையை இப்பெருமைகள் தடுக்கும். ஒருவர் பெருமை பேச மற்றவர் சும்மா இருப்பாரா? அவரும் பேசுவார். இறுதியில் கலவரம்தான். உலக் அளவிலேயே எப்போதும் நடந்துவருகிறதே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க குலசேகரன்,
      மிகவும் அருமையான கருத்து.
      தங்கள் வருகைக்கு மிக்க நன்றி

      நீக்கு
  7. //மதப்பெருமை பேசலாமா?

    குடும்பப் பெருமை பேசலாமா?

    தலைவர்கள் பெருமை பேசலாமா?

    தாய்தந்தை பெருமை பேசலாமா?

    பிள்ளைகள் பெருமை பேசலாமா?

    ////

    THirumbha Thirumbha Pesura Nee .... :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கிருஷ்ணா,
      நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.

      நீக்கு
  8. பதில்கள்
    1. வாங்க karuvachi aravind,

      பதில் வரும் ஆனா வராது

      தங்கள் வருகைக்கு மிக்க நன்றி

      நீக்கு
  9. சிந்திக்க வைக்கும் கேள்விகள் கேட்டுள்ளீர்கள் நண்பர் புரச்சிமணி.
    தேச பெருமை மட்டும் பேசலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வேகநரி,
      நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்.
      தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி

      நீக்கு
  10. மதப் பெருமை, இனப்பெருமை, மொழிப்பெருமை, நாட்டுப் பெருமை என்பவைகளுக்கும், ஜாதிப் பெருமைகளுக்கும் ஒரு பெரிய வேறுபாடு இருக்கிறது.

    நான் இந்து என்று சொல்வதால் ஹிந்துவை விட கிறிஸ்தவன் தாழ்ந்தது என்று பொருள் தராது.
    நான் தமிழன் என்றால் மற்ற இனத்தான் தமிழனை விடவும் தாழ்ந்தவன் என்றாகாது
    அது போலவே தமிழ் என்றால் கன்னடம் கீழாகாது,
    இந்தியா என்பதால் இலங்கை கீழாகாது. இதைச் சொல்லிப்பெருமிதப் படுவோர் சில நேரம் அப்படி நினைப்பர் ஆனால் உண்மையில் அப்படி எடுத்துக் கொள்ளத் தேவையில்லை.

    ஆனால் நான் இன்ன ஜாதிக்காரன் என்று சொல்லும்போது அது இன்னொருவனை விட மேல் அல்லது கீழ் என்றாகிறது அதுதான் பிரச்சனை. ஜாதியின் அடிப்படையே உயர்வு தாழ்வுதான்.

    //குடும்பப் பெருமை பேசலாமா?

    தலைவர்கள் பெருமை பேசலாமா?

    தாய்தந்தை பெருமை பேசலாமா?

    பிள்ளைகள் பெருமை பேசலாமா?// பேசலாம் கேட்கத்தான் யாருமிருக்க மாட்டார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க தமிழானவன்,
      தமிழ் மொழியே காலத்தால் பழைய மொழி, முதல் மொழி, மொழி,சிறந்த மொழி எனும்பொழுது பிற மொழிகள் தமிழுக்கு கீழ் என்று பொருள் தருகிறதா இல்லையா?
      சமஸ்கிருதத்தில் கோயில்களில் பூஜை செய்வது ஏன் தவறு எனப்பட்டது ....தமிழுக்கு அந்த தகுதி இல்லையா என்ற உயர்வு தாழ்வுதானே?

      நீங்கள் பல ஜாதியினர் மத்தியில் வாழ்வதால் இந்த ஜாதியினால் ஏற்ப்படும் பிரச்சனயை உங்களால் புரிந்து கொள்ள முடிகிறது. பல நாட்டினர் மத்தியில் வாழும்பொழுது பெருமை பேசும்பொழுதுதான் உங்களுக்கு இந்த நாட்டினன் என்று பெருமை படுவதால் வரும் பிரச்சனை புரியும். பல மொழியினருக்கு மத்தியில் வாழும்பொழுது மொழிப் பெருமை பேசும்போதுதான் உங்களுக்கு மொழியினால் வரும் பிரச்னையை புரிந்து கொள்ள முடியும்.

      நான் சீனக்காரன் என்று ஒருவன் கூறுவதால் என்ன பிரச்சனை என்று ஜப்பான் காரனிடம் கேட்டால் தான் உங்களுக்கு தெரியும். நான் ஆங்கிலேயன் என்று பெருமைப்படுவதால் என்ன பிரச்சனை என்று உண்மை தெரிந்த இந்தியனுக்கு மட்டுமே தெரியும்.
      இந்திய நாய்களுக்கு அனுமதியில்லை என்று லண்டனில் எழுதப்பட்டிருந்தது என்பதை தாங்கள் அறியவில்லை போலும். அமெரிக்கன் பிற நாட்டினரை எப்படி மதிக்கிறான் என்பதை அங்கு வாழும் பிற நாட்டினரை கேட்டால் தான் தெரியும். ஆப்ரிக்க கண்டத்தினரை பிறர் எப்படி நினைக்கின்றனர் என்பது பற்றியும் தாங்கள் அறியவில்லை என நினைக்கின்றேன்.

      //இதைச் சொல்லிப்பெருமிதப் படுவோர் சில நேரம் அப்படி நினைப்பர் ஆனால் உண்மையில் அப்படி எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. //
      ஜாதியிலும் நீங்கள் ஏன் இப்படி எடுத்துக்கொள்ளக்கூடாது.

      //ஜாதியின் அடிப்படையே உயர்வு தாழ்வுதான். //
      உங்களுக்கு இதை யார் சொன்னது? இந்த ஜாதி உயர்ந்த ஜாதி இந்த ஜாதி தாழ்ந்த ஜாதி என்று யார் சொன்னது?

      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

      நீக்கு
    2. தமிழானவன்,
      ஏக இறைவன் என்று கூறிக்கொள்ளும் மதங்களில் பிற மதத்தினர் பற்றி எவ்வளவு கேவலமாக எழுதப்பட்டுள்ளது, எவ்வாறு போதிக்கப்படுகிறது என்பதையும் தாங்கள் அறிய முயலுங்கள்.

      நீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...