வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

வெள்ளி, 17 மே, 2013

தாழ்த்தப்பட்டவர்கள் ஏன் ஒழிக்கப்படவேண்டும்?


தாழ்த்தப்பட்டவர்கள் நிச்சயம் ஒழிக்கப்படவேண்டும். இதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. தாழ்த்தப்பட்டவர்கள் என்று அழைக்கப்டுபவர்களை ஒழிக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. தாழத்த்தப்பட்டவர்கள் என்ற வார்த்தையை முதலில் நீக்க வேண்டும் பிறகு தாழ்த்தப்பட்டவர்கள் என்று யாரும் இல்லாதவாறு அனைவரும் உயர்த்தப்படவேண்டும்,சமமாக மதிக்கப்படவேண்டும் என்று கூறுகிறேன். 

தாழ்த்தப்பட்டவர்கள் என்ற வார்த்தையை தமிழ் அகராதியிலிருந்து நீக்க வேண்டும்.  தாழ்த்தப்பட்டவர்கள் என்ற வார்த்தை மக்கள் மனதில் எந்த மாதிரி விளைவுகளை ஏற்ப்படுத்துகிறது என்பதை நாம் உணரவில்லை என நினைக்கின்றேன்.

ஒரு சில மக்கள் தாழ்த்தப்பட்டார்களா இல்லையா என்ற விவாதத்திற்கு நான் வரவில்லை. ஆனால் ஒரு சில மக்களை நீங்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்பது அவர்கள் மனதில் எந்த மாதிரி எண்ணத்தை ஏற்ப்படுத்தும் என்பதை நாம் சிந்திக்காதது நம் மடமை என்றே நினைக்கின்றேன்.

ஒருவனை நீ தாழ்த்தப்பட்டவன் எனும்பொழுது அவனுக்கு இரண்டு விதமான எண்ணங்கள் உருவாகாலாம். 

ஒன்று: நம்மை இழிவானவர்கள் என்று பிறர் கருதுகின்றனர் என்ற எண்ணம் வரலாம்.
இரண்டு:நம்மை சிலர் தாழ்த்திவிட்டார்கள் என்று சிலர் மேல் அவர்களுக்கு கோபம் வரலாம்.

இது இரண்டுமே சமுதாய நலனிற்கும் தனிப்பட்ட முறையில் அவர்களின் நலனிற்கும் நல்லதல்ல என்றே நான் நினைக்கின்றேன்.

தாழ்த்தப்பட்டவர்கள் என்று ஒரு சமுதாயத்தை பிரித்து காட்டும்பொழுது பிற சமுதாயத்தை சார்ந்தவன் மனதில் இரண்டு விதமான எண்ணங்களை ஏற்ப்படுத்தலாம்.

ஒன்று: அச்சமுதாய மக்கள் நம்மை விட கீழானவர்கள். அவர்களை விட நாம் உயர்ந்தவர்கள்.

இரண்டு: அச்சமுதாய மக்களை சிலர் தாழ்த்திவிட்டார்கள் என்று சிலர் பரிதாபப்படலாம் 

முதலாம் நினைப்பு மிகவும் தவறானது. இரண்டாவது நினைப்பு சில நல்ல விளைவுகளையும் சில தீய விளைவுகளையும் ஏற்ப்படுத்தும்.

எப்படிப்  பார்த்தாலும் தாழ்த்தப்பட்டவர்கள் என்பது உளவியல் ரீதியாக தவறான என்னத்தை ஏற்ப்படுத்துவதாகவே நான் உணர்கிறேன்.

எனவே தாழ்த்தப்பட்டவர்கள் என்ற வார்த்தைக்கு பதிலாக   பட்டியல் வகுப்பினர் என்று மட்டுமே கூறுவது சரியாக இருக்கும்.இதுவும் சில காலத்திற்கு மட்டும்....சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு இருக்கும்வரை மட்டுமே. 

தலீத் என்ற வார்த்தையில் எனக்கு உடன்பாடில்லை. ஏன் எனில் இதுவும் தாழ்த்தப்பட்டவர்கள் என்ற பொருளையே தருகிறது.

தாழ்த்தப்பட்டவர்கள் என்பது உளவியல் ரீதியாக ஏற்ப்படுத்தும் பாதிப்புகளை மனதில் கொண்டு அனைவரும் தாழ்த்தப்பட்டவர்கள் என்ற வார்த்தையை கைவிடும்படி மிகவும்  பணிவன்புடன் கேட்டுகொள்கிறேன்.  மாற்றுக்கருத்து இருந்தால் தெரிவியுங்கள் 


என்றும் மனிதத்துடன் 
இராச.புரட்சிமணி 

2 கருத்துகள்:

  1. //தாழ்த்தப்பட்டவர்கள் என்று யாரும் இல்லாதவாறு அனைவரும் உயர்த்தப்படவேண்டும் சமமாக மதிக்கப்படவேண்டும் என்று கூறுகிறேன்.//
    தாழ்த்தப்பட்டவர்கள் இன்னென்னா ஜாதி என்று இல்லாம ஜாதி வேறுபாடுக எதுவுமில்லாம அனைவரும் சமமாக மதிக்கப்படவேண்டும்.
    நண்பர் சமீபத்தில இணையத்தில் பார்த்தேன் அதிக புள்ளிகளை பெற்ற மாணவி ஏழைக்குடும்பம் என்றபடியா மேற்படிப்பு படிக்க முடியா இருக்கிறார் என்று சில நல்லவர்கள் உதவி கேட்டிருந்தார்கள்.அதிக புள்ளிகளை பெற்ற மாணவி ஏழை என்ற ஒரு காரணத்திற்காக மேற்படிப்பு படிக்க முடியாத இழி நிலை இந்தியாவில் இருக்கும் போது யாருடைய நன்மைக்காக ஜாதிமுறையில் ஒதுக்கீட்டு உதவி திட்டங்கள் வைத்திருக்கிறார்.

    பதிலளிநீக்கு
  2. வாங்க வேகநரி ,
    பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு அளிக்கலாம் என்றால் அதை முதலில் அதை எதிர்ப்பது பட்டியல் வகுப்பினர்தான். எந்த ஜாதியிலும் ஏழைகள் முன்னேறலாம் ஆனால் பட்டியல் வகுப்பினரில் நாங்கள் மட்டும் தான் முன்னேறுவோம் என்று சொல்லாமல் சொல்லுவார்கள் சில பணக்காரர்கள்.
    இட ஒதுக்கீடு என்பது பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்டே கொடுக்கப்பட வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு.

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...