வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

செவ்வாய், 25 மார்ச், 2014

தமிழக ஜிகாதிகள் சிரியாவில்?

இன்றைய் இந்து நாளிதழில் வந்துள்ள செய்தி  மிகுந்த அதிர்ச்சி அளிக்கின்றது. தமிழத்தை சேர்ந்த இருவர் ஜிகாதிகளாக சிரியாவில் பயிற்சி பெறுகிறார்கள் என்பதுதான் அந்த செய்தி. அதுமட்டுமல்லாமல் ஜிகாதி அமைப்புகள் சென்னையில் உள்ள ஒரு கல்லூரியிலிருந்து ஆள் சேர்ப்பதாகவும் அது தெரிவிக்கின்றது.ஜிகாதிகளின்  தொடர்பு தலை நகரத்தோடு மட்டுமல்லாமல் கடலூர் வரை சென்றுள்ளது என்பது மேலும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

மதத்தின் பெயரால் மூளை சலவை செய்யப்பட்டு இவர்கள் பலிகடா ஆக்கப்படுகின்றனர். மதப்பிரச்சாரம் செய்வதாக கூறிக்கொண்டு ஜிகாதிகளுக்கு சிலர் ஆள் பிடிக்கின்றனர். வலையுலகிலும் சிலர் ஜிகாதிகளுக்கு ஆதரவாக குரல் கொடுப்பது நமக்கு தெரிந்ததே.


இதற்க்கு எதிராக ஏன் யாருமே குரல் கொடுப்பதில்லை? ஏன் யாரும் இதை தடுத்து  நிறுத்த முன்வரவில்லை?
ஏற்க்கனவே  சிலர் முஸ்லிம் தீவிரவாதிகள் என்கின்றனர் இதில் நாமும் குரல் எழுப்பினால் அவர்களை புண்படுத்தும் என்று நினைக்கிறார்களா? பயமா?அல்லது நமக்கு யாரும் ஒட்டு போட மாட்டார்கள் என்று நினைக்கிறார்களா என தெரியவில்லை.


எல்லா மதத்திலும் மத வெறியர்கள் உள்ளனர். இதை எல்லா மதத்தினரும் ஒத்து கொள்ள வேண்டும்.
இந்து மதத்தில் மத வெறியர்கள் தலை தூக்கும் பொழுது அவர்கள் கண்டிக்கப்படுகிறார்கள் தண்டிக்கப்படுகிறார்கள் . ஆனால் சில முஸ்லீம்கள் தண்டிக்கப்ப்படும்போழுது இது சதி என்று அவர்களுக்கு வக்காலத்து வாங்குகிறார்கள்.

முஸ்லீம்கள்  தங்கள் மதத்தில்  ஜிகாதிகள் உள்ளனர் என்பதை ஒத்துக்கொண்டு அவர்களை எப்படி நல்வழிப்படுத்துவது என்று சிந்திக்க வேண்டும். ஜிகாதிகள் தண்டிக்கப்படும்பொழுது அதை வரவேற்க முடியவில்லை என்றாலும் அது அது பார்ப்பன யூத சதி என்று உண்மையை மறைக்க முயல வேண்டாம்.

அந்த மதத்தில் இல்லையா? இதை அவர்கள் செய்யவில்லையா என்று பேசுவது உங்கள் மக்களின் தலையில் நீங்களே  மண் அள்ளிப்போடுவதாகத்தான் அர்த்தம்.

இப்பதிவின் நோக்கம் இதுபற்றி விளம்பரம் கொடுப்பதல்ல...முஸ்லிம்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்துவதே இப்பதிவின் நோக்கம். இப்பதிவு உங்கள் மனதை புண்படுத்தினால் என்னை மன்னிக்கவும்.நாளை உங்கள் மகன் ஜிகாதியாக மாறாமல் இருக்கவேண்டும் அதற்காக சிந்தியுங்கள்...செயல்படுங்கள்.

இதைபடிப்பவர்களில் ஒரு சிலர் என் மகன் ஜிகாதி ஆனால் எனக்கு பெருமைதான் என்று கூட நினைக்கலாம் உங்கள்  இனத்தை நீங்களே  அழிக்க நினைத்தால் அதற்க்கு பிறர் என்ன செய்ய இயலும்? ஜிகாதிகளுக்கு சுவனம் என்பது வெறும் கட்டு கதை என்பதை குரானையும் ஹதீசுகளையும்  நன்றாக படித்து பார்த்தலே புரியும். படித்து புரியவில்லை என்றால் ஜிகாத் பற்றிய உண்மையை  உணர்ந்த ஒருசில முஸ்லிம்கள் எழுதியவை இணையத்தில் உள்ளன அதை தேடிப் படிக்கவும். சுவனப்பிரியர்கள் ஜிகாத் ஒழிப்பாளர்களாக மாறவேண்டும். சிந்திப்பார்களா?

சுட்டி 1
சுட்டி 2

6 கருத்துகள்:

  1. அவர்கள் சிரியாவில் போராடுவதில் என்ன குற்றம் கண்டீர்கள் ... சொந்த மக்கள் இரண்டு லட்சம் பேரை கொன்ற ஒருத்தனுக்கு எதிராக ஆயுதம் ஏந்துவது எப்படி தப்பாகும் ..உலக நாடுகள் என்ன செய்கின்றன...இதுவரை சண்டையை நிறுத்த என்ன முயற்சி செய்தன ... அநியாயத்திற்கு எதிராக போராடுவதில் தப்பொன்றும் இல்லை எங்கோ நடக்கும் அநியாயத்திற்கு நம் சகோதரன் கொதித்தேளுகிறான் என்றால் அவனது மனசாட்சியை பாராட்ட வேண்டும்....அவன் சே குவேராவின் இனத்தை சேர்ந்தவன் ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பரே,

      இப்படி ஒரு பின்னூட்டத்தை நான் எதிர்பார்த்தேன்.


      //சே குவேராவின் இனத்தை சேர்ந்தவன்//
      சே குவேரா மதம் சார்ந்து இனம் சார்ந்து போராடவில்லை...அடிமை படுத்தப்பட்ட மக்களுக்கு ஆதரவாக போராடினான். ஜிகாதிகள் என்போர் இசுலாமுக்காக போராடுபவர்கள். வித்தியாசம் புரிகிறதா நண்பரே?
      ஜிகாதிகளை சே குவேராவின் இனம் என்று சொல்லி அம்மாவீரனுக்கு இனியும் அசிங்கத்தை ஏற்ப்படுத்த மாட்டீர்கள் என நினைக்கின்றேன்.

      சிரியாவில் என்ன நடக்கிறது? உள்நாட்டு பிரச்சனை இன்று ஷியாவின் ஒரு பிரிவான் அலாவிக்கும் இசுலாமின் ஒரு பிரிவான் சுன்னிக்கும் நடக்கும் பிரச்சனையாகவும் உருவெடுத்துள்ளது. உள் நாட்டுப்பிரச்சனையில் சுன்னிகளுக்கு உதவுவதுபோல ஷரியா சட்டத்தை நிறுவ ஜிகாதிகள் முயல்கின்றனர். இதை அந்த நாட்டினரும் கண்டித்துள்ளனர். ஜிகாதிகளின் நோக்கம் ஷரியா சட்டத்தை நிறுவுவது. ஜிகாதிகளின் தலையீடு தேவையற்றது.

      அமைதியை கொண்டுவருவதற்கு பதிலாக...உலக நாடுகள் சண்டையில் இரு தரப்பினருக்கும் உதவுகின்றனர். தவறு இருவர் பக்கமும் உள்ளது.

      இந்த சண்டையில் தமிழக முஸ்லிம்களை இன்னும் குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் தமிழக சுன்னிகளை பலிகடா ஆக்குவது சரி என்று நீங்கள் சொன்னால் அது உங்களின் அறியாமையைத்தான் காட்டுகிறது.
      வேண்டாம் அன்பரே மக்கள் மனதில் தயவு செய்து மத வெறியையும் வெறுப்பையும் விதைக்காதீர்கள்.

      நீக்கு
    2. அங்கே நடப்பது சுன்னி - ஷியா பிரச்சனை இல்லை . பக்கத்து அரபு நாடுகளை போல் அங்கும் மக்கள் புரட்சி செய்தனர் .எகிப்திலோ லிபியாவிலோ புரட்சி நடந்த போது யாரும் அதை இரு பிரிவினருக்கு இடையேயான சண்டை என்று சொல்லவில்லை .ஏன் என்றால் மக்களும் தலைவனும் ஒரே பிரிவை சேர்ந்தவர்களாக இருந்தார்கள் .அதே போன்றுதான் ஒரு கொடுங்கோல் தலைவனுக்கு எதிராக மக்கள் இங்கும் போராடுகிறார்கள்.தலைவன் இன்னொரு பிரிவை செந்தவனாக இருப்பதால் இதை மட்டும் புரட்சி என்று சொல்ல மறுப்பது தவறு ஆனால் அவன் வீழ்த்தப்பட்டால் தங்களுடைய ஷியா ஆதிக்கம் போய்விடும் என ஈரானும் ஷியாவை வீழ்த்த சவூதி உண்மைதான் .ஆனால் இது பன்னாட்டு அரசியல் விளையாட்டு .உள்ளே போராடுபவர்கள் ஒரு கொடுங்கோலனை அழிக்க வேண்டும் என்று தான் போராடுகிறார்கள் . வெளி அரசியலையும் மக்களின் உண்மையான் நோக்கத்தையும் பிரித்தறிய வேண்டியது உங்கள் அறிவை பொறுத்தது.அங்கு தமிழர்கள் போராடுகிறார்கள் என்றால் அவர்கள் பணம் காசுக்காக போராட வில்லை. தங்கள் கொள்கைகளுக்காக போராடுகிறார்கள் . உங்கள் கொள்கையும் அவர்கள் கொள்கையும் வேறு வேறாக இருப்பதால் மட்டுமே அவர்கள் செய்வது தவறு என்று ஆகி விடாது. அவர்கள் அப்பாவி மக்க்களை கொல்ல செல்ல வில்லை .ஒரு கொடுங்கோல் தலைவனை அழிக்க சென்றிருக்கிறார்கள். அதில் அவர்களின் சுய உரிமையின் பாற்பட்டது. யாரும் கட்டாயப் படுத்தவில்லை.மூளை சலவை என்று சிலர் சொல்லலாம். அப்படி என்றால் தேசபக்தி ஊட்டி ஒருவனை ராணுவத்தில் சேர்ப்பதும் மூளை சலவையே. இன்னொரு முக்கியமான விஷயம் ஷரியா சட்டம் அமல்படுத்தபடுவதை யாரும் எதிர்க்கவில்லை . என்று பொதுவாக மீடியாக்களால் சரியா சட்டம் என்பது ஒரு கொள்கை போல் அரப்ப பட்டு இருக்கிறது .எகிப்த்திலும் அரபுலகில் முதலில் புரட்சி வந்த துனிஷியாவிலும் ஜனநாயக முறையில் நடந்த தேர்தலில் மக்கள் ஷரியா சட்டம் கொண்டு வருபவர்களை தான் முழுக்க முழுக்க ஆதரித்தார்கள். விரோதிகளால் அந்த அரசுகள் சின்னாபின்னமாக்கப்பட்டன . 99% முஸ்லிம்கள் வாழும் துருக்கியில் ஷரியா படிபடியாக கொண்டு வரப்பட்ட போதும் மக்கள் அதை வரவேர்க்கதன் செய்தார்கள்.எனவே எனக்கு உங்களிடம் உள்ள ஒரு வேண்டுகோள் .நீங்கள் தாராளம் இஸ்லாத்தை விமர்சனம் செய்யுங்கள் . முன் இஸ்லாத்தை தெளிவாக அறிந்து கொள்ளுங்கள் .இஸ்லாம் என்றால் என்ன ஷரியா என்றால் என்ன நபி என்றால் யார் அவரின் வல்ல்கை எப்படி இருந்தது என படித்து விட்டு பின்பு விமர்சனம் செய்யுங்கள் நன்றி.......

      நீக்கு
    3. //அங்கு தமிழர்கள் போராடுகிறார்கள் என்றால் அவர்கள் பணம் காசுக்காக போராட வில்லை. தங்கள் கொள்கைகளுக்காக போராடுகிறார்கள் . உங்கள் கொள்கையும் அவர்கள் கொள்கையும் வேறு வேறாக இருப்பதால் மட்டுமே அவர்கள் செய்வது தவறு என்று ஆகி விடாது. //


      அவர்களின் கொள்கை என்னவென்று தெரிந்து கொள்ளலாமா?

      நீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...